Advertisement

தியாகேஷ்வரும் லாவண்யாவும் கீழே வந்த போது, தினேஷ் நிர்வாகியுடன் பேசிக்கொண்டிருக்க, சோர்ந்த முகத்துடனும்  தளர்ந்த நடையுடனும்  ஜெயப்ரகாஷின் மனைவி கல்யாணி ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வந்தார்.

ஹாலை சுற்றிப் பார்த்தப்படி சோபாவில் அமர்ந்த  தியாகேஷ்வர், அங்கங்கே நின்றுக் கொண்டிருந்த வேலையாட்கள் வேலை செய்யும் பாவனையுடன் இருந்தாலும் அவர்கள் கவனம் இங்கே இருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

கல்யாணி சிறுவனுடன் அமர்ந்ததும், தியாகேஷ்வர் புன்னகையுடன், செய்கையில் வா என்று சிறுவனை அழைத்தான். சிறுவன் கல்யாணியைப் பார்த்து சம்மதம் பெற்றுக் கொண்டு தியாகேஷ்வரிடம் சென்றான்.

தியாகேஷ்வர் சிறுவனை அருகில் அமரவைத்து, தோளை சுற்றி கைபோட்டு, உன் பெயரென்ன?” என்று கேட்டான். 

சுரேந்தர்” 

என்ன படிக்கிற?” 

செகண்ட் A” 

உனக்கு வெளிய விளையாடுறது பிடிக்குமா, வீட்டுக்குள்ள விளையாடுறது பிடிக்குமா?” 

எப்போதும் நானும் அக்காவும் தோட்டத்துல  தான்  விளையாடுவோம்..” என்று உற்சாகத்துடன் கூறியவன் சோர்வுடன், ஆனா கொஞ்ச நாளா விளையாடுறதே இல்லை.. அக்கா ஊர்ல இருந்து வந்ததும் விளையாடலாம்னு அம்மா சொன்னாங்க” என்றான். 

ஓ.. இப்போ சோமு அங்கிள் கூட போய் விளையாடுறியா?” 

அங்கிள்ஆ.. சோமு தாத்தா” 

ஓகே.. சோமு தாத்தா கூட போய் விளையாடுறியா?” 

ஓ.. விளையாடுறேனே”

தியாகேஷ்வர் நிர்வாகியை பார்க்க, அவர் கல்யாணியிடம் கண்ணசைவில் அனுமதி பெற்று சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

தியாகேஷ்வர், கண்ணசைவில் எல்லோரையும் செயல்  படுத்துறீங்களே!” 

எனக்கு இதுலாம் புதுசுங்க.. அவர் இருந்தவரை அவர் பார்த்துக்கிட்டார், அப்புறம் சுபா.. இப்ப…” என்று கூறி கண்கலங்க தலை குனிந்தார்.

தியாகேஷ்வர் லாவண்யாவை பார்க்க, அவள் கல்யாணி அருகே அமர்ந்து அவர் கைகளை ஆதரவாக தட்டி, கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் மேடம்” என்றாள்.

சில நொடிகளில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்ட கல்யாணி, எனக்கு இங்கலிஷ் தெரியாதுங்க.. நீங்க தமிழ்லேயே பேசுங்க” என்றார்.

தியாகேஷ்வர், நாம கொஞ்சம் தனியா பேசலாம் மேடம்” 

இங்க தனியா தானே இருக்கோம்” 

வேலையாட்கள் கவனம் இங்கே தான் இருக்கிறது” 

அவங்க எல்லோரும் நல்லவங்க தான்.. நீங்……………” 

எல்லோரையும் எளிதாக நம்பிறாதீங்க மேடம்” 

எல்லோரும் விசுவாசமானவங்க”

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், அவர்கள் நல்லவர்களாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான் ஆனா உங்கள் மகளின் மரணம் தற்கொலை அல்லாமல் கொலையாக இருந்தால் கண்டிப்பாக  வீட்டிற்குள் இருக்கும் யாரோ தான் உதவியிருக்க வேண்டும்” என்றான்.

கல்யாணி ஆச்சரியம் கலந்த சிறு அச்சத்துடன் கண்களை விரித்துப் பார்த்தார். பிறகு,அவருடைய அலுவலக அறைக்கு போய் பேசலாமா?” என்று கேட்டார். 

ஹ்ம்ம்..” 

நால்வரும் ஜெயப்ரகாஷின் அலுவலக அறைக்கு சென்றனர்.

—————————————————————————————————————————————-

சேகரும் கீர்தன்யாவும் பஜனை மண்டபம் வாசலருகே செல்லவும், மாணவர்கள் வரிசையாக வெளியே சென்ற பின் இறுதியாக  வெளியே வந்த வைஷ்ணவி புன்னகையுடன், குட் மார்னிங் சார்” என்றாள்.

சேகர் மென்னகையுடன், குட் அப்ட்டர் நூன்” என்றான்.

மணியை பார்த்த வைஷ்ணவி மணி 12.10 என்றதும்,ஓ சாரி.. குட் அப்ட்டர் நூன் சார்” என்றாள்.

சேகர், இவங்க கீர்தன்யா.. என் க்ளோஸ் பிரெண்ட்.. உங்க வாய்ஸ் கேட்டுட்டு உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க” என்றதும்

கீர்தன்யா அவனை பார்த்து கண்களால், அட பாவிஎன்று கூற, அதை கண்டுக் கொள்ளாத சேகர், கீர்த்தி.. இவங்க வைஷ்ணவி.. மியூசிக் டீச்சர்.. கொஞ்ச நேரத்துக்கு முன் இவங்க பாட்டை தான் கேட்டோம்.. ரொம்ப அருமையா சூப்பரா பாடுவாங்க”  என்றான்.

வைஷ்ணவி, சார் சொல்ற அளவுக்கெல்லாம் இல்லை மேடம்” என்று சிறு கூச்சத்துடன் கூற,

கீர்தன்யா புன்னகையுடன், உங்க சார் அதிகமா எதுவும் சொல்லலை.. ரியல்லி ரொம்ப நல்லா பாடுறீங்க அண்ட் யுவர் வாய்ஸ் இஸ் ஸோ நைஸ்” என்றாள்.

வைஷ்ணவி மீண்டும் சிறு கூச்சத்துடன், தன்க் யூ மேடம்” என்று கூற,

சார்” என்று அழைத்தபடி வந்த PT  மாஸ்டர், ஸ்போர்ட்ஸ்  மெடிரியல்ஸ் வந்துருக்கு.. நான் சரி பார்த்துட்டேன்.. நீங்களும் ஒரு முறை செக் பண்ணிட்டா பில் செட்டில் பண்ணிடலாம்” என்றார்.

இதோ வரேன்” என்றவன் கீர்தன்யா பக்கம் திரும்பி, பேசிட்டு இருங்க.. நான் வந்திடுறேன்” என்று கூறி சென்றான்.

வைஷ்ணவியிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு  மீண்டும் பள்ளியை சுற்றிப் பார்க்க தொடங்கிய கீர்தன்யா விளையாட்டு மைதானத்தில் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கே சென்றாள்.

அவள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறுமி, ஏய் சந்துரு.. ஓடாத.. நில்லுடா” என்று கூறிக் கொண்டு அந்த சிறுவனை துரத்த, கீர்தன்யாவின் விழிகள் சந்துரு என்ற அந்த சிறுவனை ஆசையுடன் தழுவின.

அந்த சிறுவன் கல் தடுக்கி, அம்மா என்ற சத்தத்துடன் கீழே விழ, கீர்தன்யா அவசரமாக ஓடிச் சென்று அந்த சிறுவனை தூக்கினாள்.

கீர்தன்யாவை ஆசிரியர் என்று நினைத்த அந்த சிறுமி அவசரமாக, நான் எதுவும் பண்ணலை மிஸ்.. அவன் தான் விழுந்தான்” என்றாள்.

சிறுவன், இல்ல மிஸ்.. அவ துரத்துனதுல தான் விழுந்தேன்.. ஸ்ஸ்.. ஆ.. வலிக்குது மிஸ்” என்று கண்ணீருடன் கூறவும், கீர்தன்யாவின் கண்கள் சிறிது கலங்க, சிரமத்துடன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, சரி வா.. மருந்து போடலாம்” என்று கூறி அலுவலக அறையை நோக்கி சிறுவனுடன் சென்றாள். தானே சிறுவனின் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு அனுப்பினாள்.

—————————————————————————————————————————————-

தியாகேஷ்வர், சுபாஷினி மரணம் தற்கொலை தான்னு நீங்க நினைக்கிறீங்களா?” 

என்ன நினைக்குறதுனே தெரியலை.. அவ இல்லைனு இன்னமும் என்னால் நம்ப முடியலை.. பாவி மக.. இப்படி பண்ணிட்டாளே.. அவர் போனதையே என்னால் தாங்க முடியலை.. இதுல..” என்றபடி அழத்தொடங்கினார்.

லாவண்யா வெளியே சென்று வேலையாளிடம் தண்ணீர் வாங்கி வந்து கல்யாணியை பருக செய்தாள்.

கல்யாணி நிதானத்திற்கு வந்ததும் தியாகேஷ்வர் கேள்விகளை தொடர்ந்தான்.

உங்க மகளுக்கு கவிதை எழுதும் பழக்கம் இருந்ததா?” 

ஹ்ம்ம்..”

இலச்சினையிடப்பட்ட வெளிப்படையான உரையில் இருந்த காகிதத்தைக் காட்டி, இது சுபாஷினி கையெழுத்து தானா?” என்று கேட்டான்.

கல்யாணி கண்களை விரித்து பார்த்து, அவசரமாக அதை வாங்கவும்,

தியாகேஷ்வர், வெளியே எடுக்காம பாருங்க” என்றான். 

இது.. எப்படி உங்களுக்கு கிடைச்சது?” 

அவங்க ரூமில் இருந்தது” 

ஓ” 

இது சுபாஷினி கையெழுத்து தானே!”

கல்யாணி ஆம்என்பது போல் தலையை ஆட்டினார். பிறகு, இதை நான் வச்சுக்கலாமா?” என்று கேட்டார். 

சாரி மேடம்.. இது எவிடன்ஸ்.. ஸோ தர முடியாது.. “ 

கல்யாணி சோகமாக தாழ்ந்த குரலில், “ஓ” என்றார்.

மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ப்ரேஸ்லட் போட்டதுண்டா?” 

ப்ரேஸ்லட்னா கைல போடுறது தானே!” 

ஹ்ம்ம்..” 

இல்ல” 

சுரேந்தர்?” 

மறுப்பாக தலையை ஆட்டி, ஹுஹும்..” என்றவர், எதுக்கு கேட்குறீங்க?” என்று கேட்டார். 

சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.. அதை விடுங்க.. மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஏன் சொத்துக்களை சுபாஷினி பெயரில் எழுதினார்?” 

புரியல” 

நீங்க இருக்கீங்க, சுரேந்தர் இருக்கான்.. அப்படி இருக்கும் போது, சொத்துக்கள் அனைத்தையும் சுபாஷினி பெயரில் மட்டும் ஏன் எழுதினார்?” 

எனக்கு எப்படிங்க தெரியும்?”

தியாகேஷ்வர் கல்யாணியை கூர்ந்துப் பார்த்தான்.

கல்யாணி, அவர் எப்போதும் என்னை வெகுளி.. வெளுத்ததெல்லாம் பால்னு எல்லோரையும் நம்பாத னு சொல்லிட்டே இருப்பார்.. என் மகள் அவரை மாதிரி புத்திசாலிதைரியசாலி.. அதனால் அப்படி எழுதி இருக்கலாம்” என்றார். 

அதாவது.. உங்க பெயரில் இருந்தா உங்களை சுலபமா ஏமாத்தி வாங்கிடலாம்னு சொல்றீங்க” 

ம்.. அவர் அப்படி நினைச்சு இருக்கலாம்” 

“அப்போ உண்மையில் நீங்க அப்படி இல்லைன்னு சொல்றீங்களா?” 

“என்ன!” 

“அவர் நினைத்து இருக்கலாம்னா என்ன சொல்ல வரீங்கனு கேட்டேன்.. அதாவது உண்மையிலே உங்களை யாரும் ஏமாற்ற முடியாதுனு சொல்றீங்களா?” 

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை” 

“பின்ன!” 

“நான் சாதாரணமா தான் சொன்னேன்” 

சரி.. நீங்க சொன்ன மாதிரியே உங்க கணவர் அப்படி யோசிச்சதாவே வச்சுப்போம்.. சுரேந்தர் இருக்கிறானே! சுபாஷினி  மற்றும்  சுரேந்தர்  பெயரில் சேர்த்து எழுதி இருக்கலாமே!”

 அது எனக்கு தெரியாது..” 

சரி.. விஜயன் சார் தான் உங்களுக்கு நெருக்கமா(கல்யாணி நிமிர்ந்து பார்க்கவும்) ஐ மீன்  உங்க குடுபத்திற்கு நெருக்கமா உதவியா இருந்திருக்கார்.. அப்படி இருக்கும் போது, அவரை கார்டியனா.. காப்பாளரா சொல்லாம ஏன் ப்ரதாப் சாரை நியமித்தார்?”

இந்த சொத்து விவகாரம்லாம் எனக்கு தெரியாதுங்க.. நீங்க கார்த்திகேயன் அண்ணாவை கேட்டுக்கோங்க” 

நீங்களே உங்க மகள் புத்திசாலிதைரியசாலினு சொல்றீங்க.. அப்படிப் பட்டவங்க தலை வலி, மனச்சோர்வுனு தற்கொலை செய்து இருப்பாங்களா?”

கல்யாணி கண்கலங்க, தெரிலைங்க.. எனக்கு தெரியலை.. என்னை  கொஞ்சம் தனியா நிம்மதியா இருக்க விடுங்க.. அவர் இறந்தப்ப இப்படி தான் என்னையும் என் மகளையும் கேள்வி மேல கேள்வியா கேட்டு படுத்துனீங்க, இப்போ என் மக போய்ட்டா.. கொஞ்ச நாள் முன்னாடி தான் என் மக மரணத்தை பத்தி ஒரு போலீஸ்காரர் கேட்டுட்டு போனார்.. இப்போ திரும்பவும்..

ஐயோ எங்களை விட்டுருங்க.. 

இந்த சொத்து தான் காரணம்னா அதை அனாதை ஆசரமத்துக்கு கொடுக்க சொல்லிடுங்க.. நானும் என் மகனும் எங்க சொந்த ஊருக்கே போய்டுறோம்” என்று ஆவேசமாக பேசி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினார்.

உங்க நிலைமையும் கஷ்டமும்  எங்களுக்கு புரிது.. பட் இது எங்க கடமை.. உங்க மனநிலை கொஞ்சம் திடமான பிறகு மீண்டும் வரோம்” என்று கூறி வெளியே சென்றவன் நிர்வாகியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

தியாகேஷ்வர் பின்னே சென்ற லாவண்யா தினேஷிற்கு மட்டும் கேட்கும் குரலில், சிலர் என்குவரி பண்றதா வெட்டி சீன் போடுவாங்க பட் நாங்கலாம் சைலென்ட்டா இருந்தாலும் பக்காவா எவிடன்ஸ் கொண்டு வருவோம்” என்றாள்.

தினேஷ் அலட்டிக் கொள்ளாமல் நக்கலாக, யார் கண்டா! நீயே அதை செட் பண்ணி கொண்டு வந்துருக்கலாம்” என்றான்.

லாவண்யா முறைக்கவும், தினேஷ், ஆமா நாங்கலாம்னு சொன்னியே! அப்போ நீ தனியா இன்வெஸ்டிகேட் பண்ணலையா? உன் கூட யார் இருக்கா? எங்க………………..” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே  போகவும்,  லாவண்யா  அவனை முறைத்துவிட்டு முன்னே சென்றுவிட, அவளது  முறைப்பை  ரசித்தபடி புன்னகையுடன் தினேஷ் சென்றான்.

—————————————————————————————————————————————-

கீர்தன்யா சந்துருவை பற்றி நினைக்கக் கூடாது என்று தன் மனதிற்கு கடிவாலமிட்டாலும் அவளையும் மீறி அவளது சிந்தனை பின்னோக்கி சென்றது…….

பரவசத்துடன் பஞ்சு போன்ற பிறந்த  குழந்தையை கீர்தன்யா கையில் ஏந்தியதும், சில நொடிகள் குழந்தை தன் குட்டி கண்களை திறந்து திறந்து மூடியது, பிறகு மெல்ல திறந்து அவளது முகத்தை பார்த்து அழகாக  சிரித்ததும், கீர்தன்யா, என்ன ஒரு குளுமையான சிரிப்பு.. இவனுக்கு சந்திரன்னு பேர் வைக்க போறேன் ப்பா” என்றதும் குழந்தைக்கு என்ன புரிந்ததோ, தனது போக்கை வாய் விரிய சிரித்தது.

கீர்தன்யா பெரும் மகிழ்ச்சியுடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள். குழந்தை மீண்டும் சிரித்தது.

இப்பொழுது நினைக்கும் போது கூட தன் இதழில் அந்த முத்தத்தின் ஈரத்தை  உணர்தவளின் கண்கள் கலங்கியது. அவள்  கண்களை இறுக மூட, கண்ணீர் வடிந்தது.

கீர்தன்யாவின் தோளில் சேகர் கைவைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள், அவனை பார்த்ததும்  அவசரமாக கண்களை துடைத்தாள்.

சேகர் கண்ணசைவில் ‘என்னவென்று’ கேட்க,  கீர்தன்யா ‘ஒன்றுமில்லை’ என்று சிறு தலையசைவில் பதில் கூற, சேகர் அவளது கண்களையே பார்க்கவும், கீர்தன்யா, சந்துருனு ஒரு சின்ன பையனை பார்த்தேன்” என்று கூறி தரையை பார்த்தாள்.

சேகர் அவளின் தோளை ஆதரவாக தட்டிக் கொண்டுத்தான்.

கீர்தன்யா, நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று தாழ்ந்த குரலில் கூற,

சேகர், ட்ராயிங் க்ளாஸ் எடுக்குறியா?” என்று கேட்டான்.

கீர்தன்யா இயலாமையுடன் சேகரை பார்க்க,

உன்னால் முடியும் கீர்த்தி.. உனக்கு பிடிச்ச விஷயத்தில் மைண்ட் டைவர்ட் பண்ணி சந்துரு நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர முயற்சி பண்ணு” என்றான். 

இந்த ரெண்டு வருஷமா அதை தானே செஞ்சுட்டு இருக்கிறேன்”

சில நொடிகள் மௌனத்தில் கழிய,

கீர்தன்யாவே, ஓகே.. கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடு.. லன்ச்-க்கு அப்புறம் க்ளாஸ் எடுக்கிறேன்” என்றாள்.

சேகர் முகம் மலர, குட்.. எந்த ஸ்டாண்டர்ட் எடுக்கிற?” 

நீயே டிசைட் பண்ணு” 

ஓகே.. இப்ப  எனக்கு கொஞ்ச வேலை இருக்குது.. நீ அவசரமா வரதை பார்த்துட்டு வந்தேன்” 

ஓகே.. நீ போயிட்டு வா”  

கீர்த்தி நீயும் என் கூட வாயேன்.. ஸ்போர்ட்ஸ் மெடிரியல்ஸ் தான் செக் பண்ணிட்டு இருக்கிறேன்.. கர்ள்ஸ்(girls) குள்ள ஐடெம்ஸ் நீ செக் பண்ணா வேலை சீக்கிரம் முடியுமே!”

கீர்தன்யா சிறு புன்னகையுடன், அம் பைன்.. யூ கரீ ஆன் யுவர் வொர்க்”

அதுக்கில்லை.. நிஜமாவே வேலை சீக்கிரம் முடியும்” 

ஓகே.. நானும் வரேன்.. அங்க போய் நீ நிம்மதியா வேலையை பார்க்க மாட்ட” என்று கூறியபடி கீர்தன்யா எழவும், சேகர் புன்னகைத்தான்.

—————————————————————————————————————————————-

தியாகேஷ்வர், லெட்டர் அண்ட் கவிதை பேப்பரில் இருக்கிற கையெழுத்து பார்க்க ஒன்னு போல இருந்தாலும் ஒன்னு தான் ஒரிஜினல்”

தினேஷ்,கவிதை பேப்பர் தான் ஒரிஜினல்” 

ஸோ இது தற்கொலை இல்லை கொலைனு ஒத்துக்கிற? 

இப்போ அப்படி தான் சார் தோணுது.. சுபாஷினி இறந்த டைம் 9.55

முதல் கவிதை எழுதியிருக்க டைம் 9.10 ரெண்டாவது கவிதை 9.20

நம்பிக்கை பற்றி எழுதி உயர்ந்திடுவேன்.. வீழ்த்த நினைக்கும் துரோகியை  வீழ்த்தி வென்றிடுவேன்னு  எழுதினவ அரைமணி நேரத்தில் சாகனும்னு முடிவெடுக்க வாய்ப்பில்லை” 

லாவண்யா, சார்.. ஒருவேளை அந்த லெட்டர் உண்மையா இருந்து கவிதை போலியா கூட இருக்கலாமே..”

தியாகேஷ்வர், வாய்ப்பிருக்குது.. பட் மை இண்டியுஷன்(intuition) சேய்ஸ்(says), கவிதை தான் ஒரிஜினல்”

தினேஷ், பட் சார்.. ஃபொரென்சிக்  ரிப்போர்ட் வச்சு ரெண்டும் வேற வேறனு தானே ப்ரூவ் பண்ண முடியும்.. எது சுபாஷினி கையெழுத்துனு ப்ரூவ் பண்ண முடியாதே!” 

ஹ்ம்ம்.. பார்க்கலாம்..  ரெண்டையும் ஃபொரென்சிக்  லேப்-க்கு அனுப்பு, அந்த ப்ரேஸ்லட்-டையும் அனுப்பி எல்லாத்துலையும் கைரேகை இருக்குதானு பார்க்க சொல்லு” 

தினேஷ்,ஓகே சார்” என்று கூறி தடையங்களுடன் வெளியே சென்றான்.

லாவண்யா,நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன சார்?”

கவிதை சுபாஷினி எழுதினதுனா அதில் மென்ஷன் பண்ண துரோகி  யாரா இருக்கலாம்?” 

பிரெண்ட், லவர், ரிலேடிவ்னு யாரா வேணும்னாலும் இருக்கலாமே சார்” 

யா.. அதே மாதிரி, அந்த துரோகி தான் கொலை செஞ்சுருக்கணும்னு அவசியம் இல்லை.. வேற யாராவது செஞ்சிருக்க கூட வாய்ப்பு இருக்குது”  

ஒரே குழப்பமா இருக்குது சார்” 

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், இன்னும் கேஸ் ஆரம்பிக்கவே இல்லை.. இதுக்கே இப்படி சொன்னா எப்படி?” 

உங்க அளவுக்கு எக்ஸ்பிரியன்ஸ் இல்லையே சார்” 

இது எத்தனாவது கேஸ்?” 

நிறைய மர்டர் கேஸஸ் ஹன்டில் பண்ணியிருக்கிறேன் சார் பட் இந்தளவிற்கு மர்மமான மர்டர் கேஸ் ஹன்டில் பண்ணது இல்லை”

தியாகேஷ்வர் இதழோரம் லேசாக புன்னகை அரும்பியது.

சில நொடிகள் கழித்து, தியாகேஷ்வர், கேட்க நினைக்கிறதை கேட்டுருங்க லாவண்யா” 

சார்!! நீங்க செம ஷார்ப்” 

என்ன கேட்க நினைச்சீங்க?” 

அது..கேஸ் விஷயமா இல்லை சார்” 

நீங்க தயங்குறதில் இருந்தே அது கேஸ் சம்பந்தப்பட்டது இல்லைனு தெரிது.. கேளுங்க” 

என் பிரெண்டோட அண்ணன் உங்க கூட ஒன்னா தான் ட்ரெயினிங் பிரியட்ல இருந்தாங்கலாம்.. நீங்க சிரிக்கவே மாட்டீங்கனு சொன்னாங்க…. பட் நீங்க…. அப்படி இல்லை”  

தியாகேஷ்வர் மனதினுள், அவளை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தா  இப்பவும் அப்படி தான் இருந்திருப்பேன்.. மென்மையை என்னுள் புகுத்தினாள்.. இயற்கையை ரசிக்க கற்று தந்தாள்.. காதலை விதைத்தாள், விதை முளைத்து மரமாகி எல்லாம் கூடிவந்த நேரம்……………………….‘ 

லாவண்யாவின் சார்” என்ற அழைப்பில் தன் சிந்தனையை விட்டு வெளியேறியவன்,

சாரி.. உங்க பிரெண்டோட அண்ணன் நேம் என்ன?” என்று கேட்டான். 

செந்தில்குமார்” 

ஹ்ம்ம்……… தூத்துக்குடில இருக்கிறவரா?” 

எஸ் சார்” 

பெர்சனலி ரொம்ப பழக்கம் கிடையாது பட் நைஸ் மேன்.. ஓகே கமிங் பாக் டு தி கேஸ்…………..” 

மே ஐ கம் இன் சார்” 

எஸ்” 

உள்ளே வந்த தினேஷ், எவிடன்ஸ் சீல் பண்ணி ஹெட் கான்ஸ்டபில் கிட்ட கொடுத்து விட்டுருகிறேன் சார்.. டாரிக்(தடயவியல்(forensic) நிபுணர்)  கிட்ட போன்ல டிடேல்ஸ் சொல்லிட்டேன் அண்ட் நானே நேர்ல வந்து ரிப்போர்ட்ஸ் வாங்கிக்கிறேன்னும் சொல்லி இருக்கிறேன் சார்”  

பைன்.. சுபாஷினியோட காலேஜ் அண்ட் ஸ்கூல் பிரெண்ட்ஸ் விசாரிக்கிறது தான் நெக்ஸ்ட் ஸ்டெப்..” 

சிந்தனை தொடரும்…

Advertisement