Advertisement

மாலை விரைவாக வீடு திரும்பிய சேகர் உள்ளே நுழைந்ததும், என்னமா! அந்த கீரிபிள்ளை இன்னும் வரலையா? நீ சொன்னனு சீக்கரம் வந்தேன்..” என்று சிறு ஏமாற்றத்துடன் அலுத்துக்கொள்ள,

சாந்தி, யாரோ சீக்கரம் வரமாட்டேன்னு சொன்னாங்க!” என்றார்.

நான் அப்படி சொல்லலையே! 

அப்படி சொல்லலை தான், ஆனா அவ வந்தா எனகென்னனு அக்கறை இல்லாதது போல தானே போன?”

ஹி..ஹி.. அது சும்மா.. கீர்த்தி இன்னும் வரலையா?”

சாந்தி இடது கையை நெற்றியில் தட்டி, அச்சோ அப்பா குடை எடுத்துட்டு போகலையே” என்று கூற, சேகர் சம்பந்தமே இல்லாம பேசுறாங்கஎன்று மனதினுள் நினைத்து அன்னையைப் பார்த்து புருவம் உயர்த்த,

சாந்தி, நீ கீர்த்தினு சொல்லிட்டியே! மழை வருமே..” என்றார். 

அம்மா இது டூ மச்” 

டு மச் ஓ.. த்ரீ மச் ஓ.. நீ கீர்த்திக்கு வாங்கின மன்ச்அ நான் கேட்கலை” 

அம்மா!!!!!!” 

என்னடா?”

வீட்டுக்குள்ளயே இருந்துட்டு கலக்குறியே! யாரு உனக்கு ஸ்பை வேலைப் பார்க்கிறது?”

ஆமா இது பெரிய ஊரு.. உன்னை வேவு வேற பார்க்கணுமா! தெருமுனைல வாங்கிட்டு.. போடா”

சேகர்  புன்னகையுடன்,அது சரி.. பட் நான் வரதுக்கு முன்னாடியே விஷயம் எப்படி வந்தது?”

மாரியம்மா(வீட்டு-வேலையாள்) சொன்னா” 

மாரியம்மா கால்ல ஸ்கேட்டிங் கட்டியிருக்கா?”

சாந்தி சிறு புன்னகையுடன், “நீ பைசா குடுத்துட்டு, காரை கிளப்பி வந்து, போர்டிகோ நிறுத்திட்டு வரதுக்குள்ள அவ வந்துட்டா.. விஷயமும் வந்துருச்சு.. போதுமா!”

போதாதே!” 

இன்னும் என்ன?” 

நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே!”

சாந்தி அறியாதவர் போல், என்ன கண்ணா கேட்ட?”

இன்னைக்கு நீ ரொம்ப பண்றமா.. போ.. நீ ஒன்னும் சொல்ல வேணாம்” என்று செல்ல கோபத்துடன் தன் அறை பக்கம் செல்லத் தொடங்கினான்.

மகனின் ஆர்வத்தில் மனம் குளிர்ந்த சாந்தி விளையாடினது போதும் என்றெண்ணி, கீர்த்தி 3.30 மணிக்குலாம் வந்தாச்சு” என்றார்.

சட்டென்று திரும்பிய சேகர் ஆச்சரியத்துடன், அப்புறம் எப்படி வீடு அமைதியா இருக்குது?” 

அப்பாமாமா, அத்தைலாம் தென்காசி கோயிலுக்கு போயிருக்காங்க..” 

கீர்த்தி? 

அவ போகலை” என்று சாந்தியின் பதில் சுருக்கமாக வந்தது.

என்னமா?”

சாந்தி வருத்ததுடன், அவ அப்செட்டா இருக்கா டா.. வரலைனு சொல்லிட்டா” 

இப்போ எங்க……………..” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அறையை விட்டு வெளியே கீர்தன்யா வரவும், சேகர் புன்னகையுடன் கையசைத்தபடி அவளருகே சென்று, ஹாய் கீரிபிள்ளை!” என்றான்.

கீர்தன்யா வரவழைத்த சிறு புன்னகையுடன், ஹாய்” என்றாள்.

என்ன தான் வருத்தமான நிலையில் இருந்தாலும் குறைந்த பட்சம் ‘ஸ்னேக் ஸ்னேகா’ என்ற வார்த்தைகளையாது கீர்தன்யா கூறுவாள் என்று நினைத்த சேகர்  இந்த அமைதியை  சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

சேகர் அதிர்ச்சியுடன் அன்னையைப் பார்க்க, சாந்தி தன் வருத்தத்தை மறைத்து கீர்தன்யாவிடம்,பால் குடிக்குறியா கீர்த்தி?” என்று கேட்டார்.

கீர்தன்யா அமைதியாக, வேணாம் அத்தை.. தண்ணி தான் வேணும்.. நானே எடுத்துக்கிறேன்” என்று கூறி சமயலறைக்கு சென்று நீரை பருகினாள்.

அவளை பின்தொடர்ந்த சேகர் உற்சாக குரலில்,ஹே கீரிபிள்ளை.. நீ மூட்அவுட்ல இருக்கனு அம்மா சொன்னாங்க, உன்னை வரவேற்க நான் இல்லைனதும் மூட்அவுட் ஆகிட்டியா!”

கீர்தன்யா வெறுமையாக புன்னகைக்க,

சேகர் தீவிரமான குரலில், என்னாச்சு கீர்த்தி?” என்று கேட்டான்.

கீர்தன்யா மிக சிறிய மென்னகையுடன், “நத்திங்.. ட்ரவல்னால கொஞ்சம் தலை வலியா இருக்கு.. தட்ஸ் ஆல்” என்றாள்.

சேகர் இடதுகை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை மட்டும் நீட்டி, கொஞ்சம்னா எவ்ளோ? இவளோ.. இவ்ளோ.. இவ்ளோளோ” என்று கூறி விரல்களின் இடைவெளியை குறைத்துக் கொண்டே போனான்.

கீர்தன்யா வரவழைத்த இயல்பான குரலில், டேய் பிளேட்.. இருக்குற தலைவலியை கூட்டிறாத..” என்றாள். 

நான் உனக்கு தலைவலியா?” 

ப்ளீஸ் சேகர்..”

கீர்தன்யாவின் மனநிலையை புரிந்தும் புரியாதவன் போல் சேகர், ஐய்யோ.. உலகம் அழிய போது.. நீ என்னை சேகர்னு கூப்டுட்ட” என்றான். 

நீ கூட தான் என்னை கீர்த்தினு கூப்பிட்ட என்று கூற நினைத்தவள், எங்கே அதை கூறினால் அவன் பேச்சை வளர்ப்பானோ என்ற எண்ணத்தில் ஒன்றும் கூறாமல் சிறிது புன்னகைத்தாள்.

கீர்தன்யா,ஓகே.. நான் போய் படுக்கிறேன்..” என்று கூறி அறை பக்கம் செல்ல,

சேகர், ஹே கீரிபிள்ளை.. மறந்தே போய்டேன்.. இந்தா” என்று கூறி அவளுக்கென்று வாங்கி வந்த மன்சை(munch) நீட்ட,

அதை பார்த்ததும், கீர்தன்யாவின் மனம் வலித்தது.

சந்துருக்கு மன்ச் ரொம்ப பிடிக்குமே என்று நினைத்த பொழுது, பழைய நினைவுகள் மனதை அரிக்க, கண்கள் லேசாக கலங்க, அவசரமாக,எனக்கு மன்ச் பிடிக்காது” என்று கூறி சேகரின் பதிலை எதிர்பாராமல் அறையினுள் புகுந்துக் கொண்டாள்.

சேகர் மூடிய கதவையே பார்த்தபடி அதிர்ச்சியுடன், என்னமா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்னு தானே வாங்கிட்டு வந்தேன்.. என்னாச்சு?”என்று கூறி திரும்பியவன் பெரிதும் அதிர்ந்தான்.

சாந்தி கலங்கிய விழிகளுடன் நிற்க, அவசரமாக அவர் அருகே சென்று, என்னமா என்னாச்சு?” என்று கேட்டான்.

சாந்தி வருத்தம் நிறைந்த குரலில், நம்ம பழைய கீர்த்தி திரும்பவே மாட்டாளா கண்ணா?” 

என்னமா சொல்றீங்க?” 

அண்ணா நம்ம கிட்ட கீர்த்தி பத்தி எதுவுமே சொல்லலை கண்ணா.. 

சேகர் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்க்க,

சாந்தி, இப்ப தான் பரவா இல்லைனு சொல்றார்.. அண்ணா வந்ததும் அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோ கண்ணா” 

ஹ்ம்ம்.. எப்போ கிளம்பி போனாங்க?” 

அவங்க போய் அஞ்சு நிமிஷத்துல தான் நீ வந்த” 

அப்போ வர எப்படியும் 7 மணியாகும்”

ஹ்ம்ம்” 

சரி மா.. அவங்க வரதுக்குள்ள நான் கொஞ்சம் வேலையைப் பார்க்குறேன்” 

சரிடா கண்ணா.. நான் உனக்கு காபி கலந்துட்டு வாரேன்” 

ஹ்ம்ம்” என்று கூறி அறை பக்கம் சென்றவன் அறை வாயிலில் நின்று, அம்மா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கீர்த்திய போய் பாரு”

சாந்தி மெல்லிய புன்னகையுன் தலையசைத்தார்.

—————————————————————————————————————————————–

லாவண்யா, இந்த டிடேல்ஸ் எல்லாம் பார்த்தா.. சூசைட் மாதிரி தான் சார் தோணுது..”

தினேஷ், எனக்கும் அப்படி தான் சார் தோணுது”

லாவண்யா ஆச்சரியமாக தினேஷைப் பார்க்க,  தியாகேஷ்வர்,என்ன லாவண்யா?”

தியாகேஷ்வர் தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்த லாவண்யா தாழ்ந்த குரலில், அது.. வாழ்க்கையிலேயே முதல் முறையா நான் சொன்னதை ஒத்துக்கிட்டான்” என்றாள்.

தியாகேஷ்வர் சிறிது புன்னகைக்க, தினேஷ், சார் யாரோ பர்சனல் விஷயத்தை பிசியல் விஷயத்தில் கலப்பதில்லைனு சொன்னாங்க” என்றான்.

லாவண்யா முறைக்க, தினேஷ் அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், உங்க ரெண்டு பேரையும் வச்சுட்டு எப்படி இந்த கேஸ முடிக்க போறேனோ!”

தினேஷ், என்ன சார் உங்க திறமையை நீங்களே குறைத்து எடை போடுறீங்க!” 

ஓகே கயிஸ்(guys) பன்ஸ் அப்பார்ட்.. கம்மிங் டு தி கேஸ்..

நீங்க சொல்வது போல் மேலோட்டமா பார்த்தா சூசைட்னு தான் தோணும் பட் இதில் சில சிக்கல்கள் இருக்குது..

நம்பர் 1 – வைப் அண்ட் சன்  இருக்காங்க, பட் சொத்துக்கள் அனைத்தையும் ஏன் மகள் பெயரில் மட்டும் எழுதி வைத்தார்?

நம்பர்2 – சுபாஷினி மரணமே குழப்பம் தான்.. தூக்கு போட்டு இறக்க முடிவெடுத்தவ ஏன் தூக்க மாத்திரை சாப்பிடனும்இல்லை.. சாக முடிவெடுத்தவ தூக்க மாத்திரை சாப்பிட்டே உயிரை போக்கி இருக்கலாமே?

நம்பர் 3 – மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஒரு மாதம் முன்னாடி தான் இறந்து இருக்கார், அதுவும் அக்சிடென்டில்.. ஜெயப்ரகாஷ் மரணம் கூட கொலையா இருக்க வாய்ப்பு இருக்குது” 

தினேஷ், ஒருவேளை அவ டைலமால இருந்தப்ப, யாராச்சும் வழக்கம் போல் மாத்திரை குடுத்து இருக்கலாம் சார்.. அண்ட்.. JP மரணம் உண்மையாவே ஆக்சிடென்ட்டா இருக்க கூட வாய்ப்பு இருக்கே!”

ஓகே.. உயில் விஷயம்?” 

அது யோசிக்க வேண்டிய விஷயம் தான் பட்  அந்த லெட்டர்?” 

போலியா இருக்கலாம்” 

பட் அது சுபாஷினி கையெழுத்துனு மிஸ்ஸஸ் JP தானே சொல்லி இருக்காங்க” 

ஹ்ம்ம்.. லெட்ஸ் பைண்ட் அவுட்”

லாவண்யா, எங்கிருந்து ஆரம்பிக்க போறோம் சார்?”

தியாகேஷ்வர், “JP ஹோம்” 

தினேஷ், எப்போ போறோம் சார்?” 

நாளைக்கு காலை பத்து மணிக்கு 

ஓகே சார்” என்று கூறி தினேஷும் லாவண்யாவும் வணக்கம் வைத்து கிளம்பி சென்றனர்.

—————————————————————————————————————————————–

இரவு 7.30 மணி.. மொட்டை மாடியில் சேகரும் சண்முகமும் பேசிக் கொண்டிருந்தனர்.

சேகர், சந்துருவை மறக்குறது என்பது கீர்த்தியால் முடியாதது தான் மாமா பட் இந்த அளவிற்கு ஒடுங்கி போவானு நான் நினைக்கலை..

சண்முகம் பெருமூச்சொன்றை வெளியிட்டு,  நாங்களும் நினைக்கலை பா.. சந்துருவோட இறப்பு அவளை இந்தளவிற்கு பாதிக்கும்னு எதிர் பார்க்கவே இல்லை.. போராடி மீட்டுருக்கோம்..” என்று கூறி கண்களை இறுக்கமாக மூடித் திறந்தார்.

என்ன சொல்றீங்க மாமா?”

சண்முகம் வேதனையுடன் கூறத் தொடங்கினார்,

அவ கண் முன்னாடியே அந்த அக்சிடென்ட் நடந்துது பா.. சந்துரு இவளை பார்த்துட்டு அவசரமா ரோட் க்ராஸ் பண்ணப்ப, வேகமா வந்த கார் அவனை அடிச்சு…. தூக்கி போட்டதுல.. ஸ்பாட் லேயே…. இவ மடியிலேயே….” என்று கண்கலங்க, தொண்டை கரகரக்க  நிறுத்தினார்.

சண்முகத்தின் தோளை ஆதரவாக பற்றிய சேகர், சிறு வயதில் கீர்தன்யா கூறியதை நினைத்துப் பார்த்தான்.

 

கீர்தன்யா சிரிப்பும் சுட்டித்தனும் நிறைந்தவளாக இருந்தாலும், மென்மையான மனம் கொண்டவள். சிறு வயதில், ஒரு முறை சேகர் தனது காலால் ‘ரயில் பூச்சி’யை லேசாக தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தான். இவனது கால் லேசாக பட்டதும் பூச்சி சுருண்டுக் கொள்ளும்.. சில நொடிகள் கழித்து அது செல்ல தொடங்கவும், மீண்டும் காலால் சிறிது உரசுவான், அது மீண்டும் சுருண்டுக் கொள்ளும். இப்படி விளையாடிக் கொண்டிருந்த போது, கீர்தன்யா, டேய் குரங்கு ஏன்டா அந்த பூச்சியை படுத்துற?” என்றாள். 

போடி குரங்கு”

கீர்தன்யா சேகரின் முதுகில் ஒரு அடி வைத்து கோபமாக, தைரியம் இருந்தா பூரான் கூட இப்படி விளையாட வேண்டுயதானே! ஏன் இந்த வாயில்லா பூச்சியை கஷ்டப்படுத்துற?” என்றாள்.

இப்படி மென்மையான மனம் கொண்ட கீர்தன்யா விபத்து நடந்த நேரத்தில்  எப்படி துடித்திருப்பாள் என்று பெரிதும் வருந்தினான், கண்களை இறுக மூடித் திறந்தான்.

 

ண்முகம் தொடர்ந்தார்.

சந்துரு இறந்த கொஞ்ச நாளுக்கு பிரம்மை பிடிச்சது போல் இருந்தா.. யார் கூடயும் பேசவே இல்லை.. அந்த அக்சிடென்ட் பத்தி நினைச்சுதூக்கத்துல திடீர்னு வீரிட்டு கத்திட்டு எழுந்திறிப்பா.. சந்துரு போன துக்கம் ஒரு பக்கம் இருக்க, இவளை எப்படி சமாதானம் செய்றதுனே தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டோம்..  அத்தையோட மாமா பையன் சைக்கட்ரிஸ்ட்டா இருக்கார்..”

தெரியும் மாமா..” என்ற சேகர் அதிர்ச்சியுடன், ட்ரீட்மென்ட்க்கா அத்தையும் கீர்த்தியும் லண்டன் போனாங்க?”  என்று கேட்டான்.

சண்முகம் ஆம்என்பது போல் தலையை ஆட்டினார்.

சேகர் வேதனையும் வருத்தமுமாக, சொல்லவே இல்லையே மாமா”

சந்துரு இறந்த சமயத்தில் தான் சாந்திக்கு அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷன் பண்ணி ஒரு வாரம் இருக்கும்நீ டெங்கு அண்ட் டைஃபாய்ட் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்த.. அதான் அப்பா கிட்ட கூட எதுவும் சொல்லலை.. மெதுவா சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. அப்புறம்  கீர்த்தி லண்டன் போனப்ப தான் லைட்டா சொன்னேன்.. 

அகிலன்(லண்டனில் இருக்கும் அமுதாவின் மாமன் மகன், மனநல மருத்துவர்) ரொம்ப வருஷமா கூப்டுட்டு இருக்கான்.. கீர்த்திக்கும்  மைண்ட் டைவர்ஷன்ஆ இருக்கும்னு போறாங்கனு சொன்னேன்.. 

அகிலன் கொடுத்த கவுன்ஸிலிங்ல கொஞ்சம் கொஞ்சமா தேரினா.. புது இடத்துக்கு போக சொல்லி அகிலன் தான் சொன்னான்.. லண்டன்ல இருந்து கீர்த்தி வரதுக்குள்ள நான் சென்னைக்கு போய் செட்டில் ஆகிட்டேன்..  

சந்துரு பற்றிய நினைவுகளை மறக்கணும்னு  புது இடம் புது ஆட்கள்னு சூழ்நிலையையே மாற்றினேன்.. இருந்தும் அவ முக்கால்வாசி நேரம் ரூம்க்குள்ளயே அடைந்து இருக்கவும், அகிலன் கிட்ட திரும்ப கன்சல்ட் பண்ணி, பெயிண்டிங் அண்ட் க்ரப்ட் க்ளாஸ் எடுக்க வச்சேன்..  

இப்ப தான் தெளிவா இருக்கா.. இப்பவும் சந்துருவ மறக்கலை.. பட் அவன் நினைவுகளுடன் இருக்க பழகிட்டா.. பட் பழைய கீர்த்தி இன்னும் திரும்பவே இல்லை.. உன் பெயரை சொன்னப்ப ஸ்லைட்டா பழைய கீர்த்தி எட்டிப் பார்த்தா.. அதான் சமாதானம் செய்து கூட்டிட்டு வந்துருக்கிறேன்”

சேகர் ஆச்சரியமாக பார்க்கவும்,

சண்முகம், இங்க வர அவ ஒத்துக்கலை பா.. திருநெல்வேலி பக்கமே வேண்டாம்னு சொன்னவளை அது இதுனு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கிறேன்.. வர வழில திருச்சில சந்துரு பிரெண்ட்டை பார்த்துட்டு திரும்பவும்….” என்றவர் சேகரின் கைகளை பற்றி,

உன்னை நம்பி தான் பா வந்துருக்கிறேன்.. எப்படியாது என் பழைய கீர்த்தியை கொஞ்சமாவது மீட்டு தா” என்று கெஞ்சலாக கூற,

சேகர் அவசரமாக, என்ன மாமா நீங்க.. எனக்கு உங்களிடம் பிடிச்சதே உங்க தைரியம் தான்” என்றான். 

என்ன பண்றது பா.. சந்துரு இழப்பு! பெத்த பொண்ணுனு வரும் போது தைரியம் ஆடித்தான் போகுது” 

கவலையே படாதீங்க மாமா.. இங்கிருந்து கிளம்பும் போது பழைய கீர்த்தியை தான் நீங்க கூட்டிட்டு போவீங்க” 

மூணு நாள் தான் இருப்பேன்னு சொல்லிட்டு கிளம்புனா.. ஆனா நான் பார்த்துக்கலாம் எதுக்கும்  க்ளாஸ்க்கு பத்து நாள் லீவ் சொல்லுனு சொல்லி கூட்டிட்டு வந்துருக்கிறேன்..” 

டோன்ட் வொர்ரி மாமா.. பத்து நாள் இருப்பா.. கண்டிப்பா பழைய கீர்த்தி திரும்புவா.. அவ வால்த் தனத்தை பார்த்து நீங்களே ஐயோனு அலற தான் போறீங்க” என்று கூறி புன்னகைக்க, சண்முகமும் புன்னகைத்தார்.

—————————————————————————————————————————————–

தியாகேஷ்வர் உறங்கும் முன், வழக்கம் போல்  நித்தமும் தன் சிந்தனையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தான். அவளை மறக்க முடியாமல் தவித்தவனின் மனம் அவனை கேட்காமலேயே கடந்த காலத்திற்கு சென்றது.

அவளுடன் கழித்த பொண்ணான தருணங்களைப் பற்றி எண்ணத் தொடங்கியவனின் சிந்தனை,  தன் எதிரி ஒருவன்  நிகழ்த்திய  அந்த கோர சம்பவத்தில் வந்து நின்றது. கண்களை இறுக மூடித் திறந்தான்.

நித்ராதேவியை  தழுவ முயற்சித்து தோற்றான். தினமும் மனதை சூழும் வேதனையை ஒருவாறு   வென்று  சிறிதேனும்  உறங்குபவனால் இன்று ஏனோ அது முடியாமல் போனது.

Advertisement