Advertisement

தியாகேஷ்வர் அழைப்பை எடுத்ததும் மறுமுனையில், அண்ணா சேகர் பேசுறேன்.. கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டான்.

இல்லை சேகர்.. நான் இப்போ வரமுடியாது

ஏன் ணா? அந்த கேஸை முடிச்சாச்சு, இனி கீர்த்தியை சரி பண்ண வேண்டியது தான்னு சொன்னீங்க?”

இலஞ்சிக்கு கிளம்பிட்டு இருந்தப்ப சின்ன அக்சிடென்ட்

என்னாச்சுணா? எப்படி இருக்கீங்க? அடி பட்டிருக்கா?” என்று அவன் பதற,

தியாகேஷ்வர், சின்ன அக்சிடென்ட் தான்.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. எப்போ வரேன்னு நானே போன் பண்றேன்

துணைக்கு யாரு இருக்கா?”

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ தயாவைப் பார்த்துக்கோ

அத்தை மாமா வேற U.Sல இருக்கிறதா சொன்னீங்களே! துணைக்கு யாருமில்லையா?”

டேய் பெரிய மனிஷா! என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும்.. நீ போனை வை

என்னணா!!! என்ற சிணுங்கலுடன் அழைப்பைத் துண்டிக்க போக,

தியாகேஷ்வர் ஆழ்ந்த குரலில்,சேகர்.. தயாவை பத்திரமா பார்த்துக்கோஎன்றான்.

இத்தனை நாள் பார்த்தவனுக்கு இப்போ மட்டும் பார்த்துக்க தெரியாதா! உங்க உருகல் தாங்கலை  என்று அவன் கிண்டல் செய்ய,

தியாகேஷ்வர் மென்னகையுடன், சரி சரி போனை வை” என்றான்.

“நாளைக்கு உங்களைப் பார்க்க வரேன்-ணா”  

இல்லை வேண்டாம்” என்று அவசரமாக கூறியவன்  மீண்டும் ஆழ்ந்த குரலில், நீ எப்போதும் தயா கூடவே இரு.. தனியா வெளிய அனுப்பாதஎன்றான்.

என்ன பிரச்சனை அண்ணா?”

சிறு மௌனத்திற்கு பின்  தியாகேஷ்வர், எனக்கு நடந்த அக்சிடென்ட் கொலை முயற்சி.. செய்தது கைலாசபாண்டியன்” என்றான்.

மறுபக்கம் சத்தமின்றி இருக்கவும்,

தியாகேஷ்வர், ஹலோ.. சேகர்.. லைன்-ல இருக்கியா?”

அவன்களை அரெஸ்ட் பண்ண வேண்டியதானே அண்ணா!” என்று சேகர் ஆவேசமாக பேச,

தியாகேஷ்வர், அவசரப்பட முடியாது.. கைலாசபாண்டியன் அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு தெரியலை.. எதுக்கும் தயாவை பத்திரமா பார்த்துக்கோ..”

ஹ்ம்ம்”

தயா பரென்ட்ஸ் கிட்ட விஷயத்தைப் பார்த்து சொல்லு”

அதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்களே! இன்னும் என்ன பரென்ட்ஸ்னு சொல்லிட்டு? ஒழுங்கா அத்தை மாமா-னு சொல்ல வேண்டியதானே!” என்று அவன் மிரட்ட,

தியாகேஷ்வர் புன்னகையுடன்,சரிங்க சார்” என்றான்.

நான் இங்கே பார்த்துக்கிறேன்.. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க”

ஹ்ம்ம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் கண்களை மூடிக்கொள்ள, கீர்தன்யா அவனது மனக்கண்ணில் அவன் முன் தோன்றினாள்.

 

 

சார்”  என்று லாவண்யா மூன்று முறை அழைத்த பிறகு  கண்களைத்  திறந்தவன் ‘என்ன‘ என்பது போல் பார்த்தான்.

அவள்,இப்போ நீங்க பேசினவர் நாம இலஞ்சியில் பார்த்தவரா?” என்று கேட்டாள்.

அவன் ‘ஆம்‘ என்று தலையை ஆட்டவும்,

அவள்,அவரை தானே சுபாஷினி காலேஜ்ஜில் கூட பார்த்தோம்?”

மீண்டும் ‘ஆம்‘ என்று தலையை ஆட்டியவன், ஏதோ கூற வர,

அதற்குள், தயா-ங்கிறது காலேஜ்ஜில் அவர் கூட வந்த பொண்ணா? கைலாசபாண்டியனுக்கும் உங்களுக்கும் பெர்சனலா லிங்க் இருக்குதா?” என்று வினவியவள், சொல்லணும்-னு கட்டாயமில்லை சார்.. என்னை உங்க தோழியா நினைச்சு சொல்லலாம்-னு தோனுச்சுனா சொல்லுங்க” என்றாள்.

அவளது ‘தோழி’ என்ற வார்த்தையில் தினேஷ் மனம் குளிர அவளைப் பார்க்க, அவனைப் பார்த்த தியாகேஷ்வர் புன்னகைத்தான்.

அவள்,நான் ஏதும் தப்பா கேடுட்டேனா சார்?”

அவன் இல்லை‘ என்று தலையை ஆட்டி, நீ தோழி-னு சொன்னதும்  இவன் முகம் பிரகாசமானதை நீ பார்க்கலையே!” என்று கூற, அவள் சட்டென்று திரும்பி பார்க்க, தினேஷ் செய்வதறியாது அவளைப் பார்த்து திருதிருவென்று விழித்தான்.

தினேஷ் முழித்ததைப் பார்த்து எழுந்த சிரிப்பை தன்னுள் அடக்கிக்கொண்டு அலட்சியத்துடன், இவன் கிடக்கிறான்.. நான் கேட்டதை நீங்க சொல்லுங்க சார்” என்று கூற, தினேஷ் அவளை மனதினுள் திட்டினான்.

தியாகேஷ்வர்,சொல்ல தோனுச்சுனா சொல்லுங்கனு தானே சொன்ன”

அது..”

சரி சொல்றேன்.. உன்னுடைய ரெண்டு கேள்விக்கும் பதில் எஸ்‘ “

அவள் ஏதோ கேட்க வர,

அவன், அன்னைக்கு அவங்க ஏன் அப்படி ரியாக்ட் பண்ணாங்க? கைலாசபாண்டியனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அதானே உன் டவுட்!”

ஹ்ம்ம்.. இன்னும் சில கேள்விகள் கேட்கணும்”

உன் கேள்விகளை மொத்தமா கேட்டு முடி.. தினேஷ் அதுக்குள்ள நீ ரூம் டோர் லாக் பண்ணிட்டு வா”

நீங்க அவங்களை லவ் பண்றீங்களா?

லவ் பண்றீங்கனா என்னை கல்யாணம் பண்ணிக்கிறது பற்றி யோசிச்சு சொல்றேன்னு ஏன் சொன்னீங்க?

மாமா கிட்ட கல்யாணத்தைப் பற்றி என்ன சொன்னீங்க?”

தியாகேஷ்வர் வாய்விட்டு சிரிக்க,

அவள் தயக்கத்துடன்,என்ன சார்?”

உங்க ரெண்டு பேர் மனசுல இருக்கிற லவ்வை வெளி கொண்டுவர தான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்..

கமிஷ்னர் சார் கிட்ட என் கல்யாணம் கீர்தன்யா என்ற தயா கூட மட்டுமே நடக்கும்.. கவலைப் படாதீங்க, உங்க மருமகள் கண்டிப்பா ஒரு போலீஸை தான் கல்யாணம் பண்ணுவா‘-னு சொன்னேன்”

இருவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன் புன்னகையுடன் தினேஷைப் பார்த்து, இவ(ள்) தான் காதலை உணரலை, நீ உணர்ந்தது போல் இருந்துதே!” என்றான்.

அது வந்து சார்.. இவ(ள்)  மனசுல என்ன இருக்குதுனு தெரியலை.. அதே சமயம் நீங்க………….” என்று அவன் தயங்க,

தியாகேஷ்வர் புன்னகையுடன், நான் இவளை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னு நினைச்சியாக்கும்?” என்றான்.

அவன் அசடுவழிய, தியாகேஷ்வர் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த லாவண்யாவைப் பார்த்து, என்ன மேடம்! சத்தத்தையே காணும்? இவனையா நாம லவ் பண்றோம்னு உன்னாலயே நம்ப முடியலையா?” என்று கிண்டலாக கேட்டான்.

தினேஷ்,சார் குட்டையைக் குழப்பி விட்டுறாதீங்க” என்று கூற மூவரும் சிரித்தனர். லாவண்யா சிரிப்பின் நடுவே லேசாக தினேஷைப் பார்க்க, அவனும் அவளை பார்க்கவும் சட்டென்று பார்வையைத் திருப்பினாள்.

தியாகேஷ்வர், நான் வேணும்னா கண்ணை மூடிக்குறேன் பா” என்று கூறி கண்களை மூட,

லாவண்யா சிறு வெட்கத்தை மறைத்து, தினேஷை பார்க்காமல், பேச்சை மாத்தாதீங்க சார்.. நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்லுங்க” என்றாள்.

தியாகேஷ்வர் சுருக்கமாக தன் கதையை கூறினான். தினேஷ் மனதினுள், நம்ம சாருக்குள் இப்படி ஒரு ரொமண்டிக் ஹீரோ-வா! கூடவே இருந்தும் நமக்கு எதுவும் தெரியலையே!‘ என்று வியந்துக் கொண்டான்.

 

கிளம்ப மறுத்த இருவரையும் இரவு 8 மணிக்கு  கிளம்ப வைத்தவன் கண்களை மூடியபடி தன்னவளைப் பற்றி சிந்திக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து கண் திறந்தவன் முன் காதலும் வருத்தமும் ஏக்கமுமாக கீர்தன்யா நின்று கொண்டிருந்தாள்.

அப்பாபா.. இப்பவாது கண்ணை திறந்தீங்களே! இவளும் எழுப்பாம, எங்களையும் எழுப்ப விடாம அரை மணி நேரமாக இப்படியே  நிக்க(நிற்க) வச்சுட்டா” என்ற சேகரின் குரலில் நம்ப முடியாமல் தியாகேஷ்வர் கண்களை மூடி திறக்க,

சேகர் சிரிப்புடன்,கனவில்லை நிஜம்” என்றான்.

அப்பொழுது தான் அறையைச் சுத்திப் பார்த்தவன், சண்முகத்தை பார்த்து,வாங்க சா…………” என்று கூறியபடி அவசரமாக  எழு முயற்சி செய்தவன் கை வலியில் முகம் சுளிக்க,  கீர்தன்யா அவசரமாக நகர்ந்து அவன் சாய்ந்தமர உதவி செய்தாள்.

சண்முகம்,எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?” என்று வினவ, அவன் கீர்தன்யா முகத்தைப் பார்க்க, அவள் பார்வையைத் தாழ்த்தினாள்.

அவன்,சின்ன காயம் தான்.. ஒன்னும் பிரச்சனை இல்லை..”

சேகர், லேசா பிளேட் வெட்டினாலே கத்தி ஊரையே கூட்டுவியே  கீரிபிள்ளை! அண்ணாவை பார்.. இதுவே சின்ன காயம் தானாம்” என்று கிண்டல் செய்ய, அவள் அவனை முறைக்க, சண்முகமும் தியாகேஷ்வரும் புன்னகைத்தனர்.

அவள் தியாகேஷ்வரைப் பார்த்து முறைக்க,

சண்முகம், பேசிட்டு இருங்க மாப்பிள்ளை.. நாங்க வெளிய இருக்கிறோம்” என்று கூறி சேகரை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, அடுத்த நொடியே வந்த சேகர் புன்னகையுடன் அறைக்கதவை மூடிவிட்டு சென்றான்.

மௌன கண்ணீருடன் அவனது உடல் முழுவதும் ஆராய்ந்தவளின் பார்வை இறுதியாக அவன் முகத்தில் நிலைத்தது.  சிலநொடிகள்  மௌனம் அவர்களை ஆட்சி செய்ய, தியாகேஷ்வர்  மெல்ல இடதுகையை நீட்டிய நொடியே அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

அவள் கையை இழுந்து தன் அருகில் அமர செய்தவன், பேசமாட்டியா?” என்று ஏக்கத்துடன் வினவ, அவனது நெஞ்சின் மேல் விழுந்தவள் கதறி அழத் தொடங்கினாள்.

ஏய்.. தயா.. என்னதிது!
எனக்கு தான் ஒன்னும் இல்லையே.. அழாத..
தயா ப்ளீஸ் அழுகையை நிறுத்து” என்று வித விதமாக கெஞ்சியவன், அவள் சிறிதும் நிமிராமல் அழுது கொண்டே இருக்கவும், குரலை உயர்த்தி, தயா” என்று அதட்டினான்.

மெல்ல அவள் நிமிர, கண்ணீரை துடைத்தபடி கரைகாணாத ஆழ்ந்த காதலுடன், என்ன டா?” என்றான்.

அவள் கலங்கிய விழிகளுடன், உங்களுக்கு அக்சிடென்ட், உயிருக்கு போராடிட்டு இருக்கீங்கனு அந்த குரங்கு சொன்னதும் என் உயிரே போயிருச்சு தெரியுமா! எப்படி தவிச்சேன், அழுதேன் தெரியுமா!” என்று மீண்டும் அழத்தொடங்க,

அவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தபடி, அதான் ஒன்னும் இல்லையே டா” என்று சமாதானப்படுத்த முயற்சிக்க,

கோபத்துடன் நிமிர்ந்தவள், அந்த குரங்கு,  நீங்க  பொழைக்குறதே கஷ்டம்னு சொல்லிருச்சு.. அவனை” என்று பல்லைக் கடிக்க,

தியாகேஷ்வர் மென்னகையுடன், இன்னமும் நீ என்னை காதலிக்கிறனு உனக்கு உணர்த்த அப்படி செய்திருப்பான்”

“..”

என்ன சரிதானே!”

அமைதியாக இருந்தவள் மீண்டும் கோபத்துடன்,வர வழியிலாவது உண்மையை சொல்லி இருக்கலாம்ல”

அப்புறம் நீ பாதி வழில இறங்கி போய்ட்டனா!”

உண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி செல்ல கோபத்துடன், அந்த குரங்குக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்றீங்க” என்றபடி முகத்தை திருப்பினாள்.

அவன் புன்னகையுடன் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி கண்சிமிட்டியபடி அவளை வளைத்து நெற்றியில் லேசாக முட்டி, என் செல்லத்துக்கு கோபத்தை பார்” என்று கூறி அவள் மூக்கில் லேசாக முத்தமிட்டான்.

வெட்கத்துடன் அவள் எழுந்துக்கொள்ள, அவள் கையைப் பற்றி அமர செய்தவன், அவள் முகத்தை காதலுடன்  பார்த்து, சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லு” என்றான்.

அவள் வெட்கப்படுவாள் என்று நினைக்க, அவளோ உணர்ச்சியற்ற முகபாவத்துடன் கைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

என்ன தயா?”

“..”

தயா!”

அவன் முகத்தைப் பார்க்காமல், உங்களை என் உயிருக்கு மேலா நேசிக்கிறேன் தான் ஆனா என் தம்பி சாவுக்கு மறைமுகமா காரணமான உங்களை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள்.

சேகர் எதுவும் சொல்லலையா? உண்மை தெரியாமலேயே என்னைப் பார்க்க வந்தியா?”

அவள் குழப்பத்துடன் பார்க்க, அவன் தனது கைபேசியில் பதிவு செய்திருந்த செல்வராஜின் வாக்குமூலத்தை காட்டினான்.

 

என் பெயர் செல்வராஜ்.. சொந்த ஊர் கோயம்புத்தூர்..

எந்த நிலையான வேலையிலும் இல்லாத நான் அப்பப்போ சின்ன சண்டை கலாட்டாவுக்கு போவேன்..

ஒரு நாள் மில் ஓனர் கைலாசபாண்டியன் என்னை கூப்பிட்டுவிட்டார்.. 

அந்த சின்ன  பையன்  போட்டோவைக் காட்டி கொலை செய்யணும் ஆனா அக்சிடென்ட் மாதிரி இருக்கணும்னு சொன்னார்.. முதலில் மறுத்த நான் அவர் தந்த பணத்துக்காக ஒத்துகிட்டேன்.. அந்த நேரத்தில் என் தங்கை கல்யாணம், அம்மா ஆப்ரேஷன்னு எனக்கு நிறைய பணத்தேவை இருந்தது..

விசாரிச்சதில், கைலாசபாண்டியனோட அண்ணன் சங்கரபாண்டியன் உடம்பு சரியில்லாம போனதும் ஒரே பேரன், அதான் அவரது ஒரே மகளான வசந்தியின் மகன் பெயரில் சொத்தெல்லாம் எழுதி வைக்க முடிவெடுத்திருக்கார்னு தெரிய வந்தது.. அதை பொறுக்காத கைலாசபாண்டியனும் அவரது மகன்களும் அந்த பையனை கொல்ல திட்டம் போட்டாங்க” 

அவள் பெரும் அதிர்ச்சியுடன் தியாகேஷ்வரை பார்க்கவும், அவன் அமைதியாக, எனக்கு நடந்த அக்சிடென்ட் கூட அவங்க ஏற்பாடு தான்” என்றான்.

அவள் கோபமாக,அவன்களை சும்மா விடக் கூடாது” என்றாள்.

அவன் அவள் தலையை வருடியபடி, நிச்சயம் தண்டனை வாங்கித் தருவேன்” என்று உறுதியுடன் கூற,

அவள் முகத்தில் மெல்ல மெல்ல கோபம் குறைந்து காதலும் ஏக்கமும் படர, இறுதியாக மன்னிப்பை யாசிக்கும் பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.

அவன் மறுப்பாக தலையை ஆட்டியபடி,மன்னிப்பா! உன்னை விதவிதமா தண்டிக்க யோசித்து வைத்திருக்கிறேனே” என்று  குறுநகையுடன் கூற, அவள் வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

சில நொடிகள் அவள் அணைப்பை ரசித்தவன்,ஆனா நீ ஏன் முதல்ல இருந்தே காதலை ஒத்துக்கலை?” என்று கேட்டான்.

மெல்ல நிமிர்ந்தவள்,அது.. நீங்க போலீஸ்-னு தெரிஞ்சதும் விலக நினைத்தேன்.. போலீஸ் வாழ்க்கை ரொம்ப ஆபத்தானது, எதிரிகளால் ஆபத்து ஏற்பட்டு  இந்த மாதிரி நிலையில் உங்களை பார்க்கிற சக்தி இருக்காதுன்னு தான் விலக நினைச்சேன் ஆனா..”

ஆனா..”

அவன் முகத்தை வருடியபடி,நீங்க ஆழமா என் மனதில் பதிஞ்சுட்டீங்க.. உங்க காதலை ஏற்கவும் முடியாம மறக்கவும் முடியாம தவிச்சிட்டு இருந்தப்ப தான் சந்துரு…………” என்று கண்கலங்கியவள், அவன் எனக்கு தம்பி மட்டுமில்லை.. மகன் மாதிரி” என்றாள்.

அவள் பழைய நினைவுகளில் தவிக்க, அவள் முதுகை வருடி கொடுத்தான்.

நீங்க காரணமா இருந்ததை என்னால் ஏத்துக்கவே முடியலை.. உங்க வேலையை வெறுத்தேன்.. உங்களை அதிகமா வெறுத்துட்டதா நினைச்சேன் ஆனா சில நேரங்களில்  நீங்க  மட்டும் போலீஸ்-ஆ இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேனு நினைப்பேன்.. ஆனா உடனே சந்துருவோட இறப்பை நினைத்து வெறுப்பை வளர்த்தேன்..

உங்களுக்கு அக்சிடென்ட்-னு சொன்னதும் தான் உங்களை எந்தளவிற்கு நேசிக்கிறேன்-னு புரிஞ்சுக்கிட்டேன்” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து, ஐ லவ் யூ ஸோ மச்” என்றாள்.

அவனும் காதலுடன், மீ டூ” என்று கூறி அவள் இதழில் இதழ் பதித்தான்.

அதன் பிறகு சில நிமிடங்கள் சிறு சிறு காதல் லீலைகள் புரிந்தவன், கதவு தட்டப்படும் ஓசையில் அவளை விடுவிக்க, அவள் செல்ல சிணுங்கலுடன், நீங்க ரொம்ப மோசம்” என்றாள்.

அவன் குறுநகையுடன், உடம்பு சரியாகட்டும்”  என்றபடி கண்ணடிக்க, ஏய்” என்று வெட்கப்பட்டாள்.

சேகர் கண்களை மூடியபடி,உள்ளே வரலாமா?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர் புன்னகையுடன்,வந்த பிறகு என்ன கேள்வி?”

கீரிபிள்ளையவே வெக்கப்பட வச்சுட்டீங்களே அண்ணா! உங்களுக்கு அவார்ட் தான் குடுக்கணும்” என்று கிண்டலை ஆரம்பிக்க,

அவள் யோசனையில் ஆளவும், தியாகேஷ்வர்,என்ன யோசனை தயா?” என்று கேட்டான்.

இல்ல வைஷு கிட்ட இந்த ஸ்னேக்-ஸ்னேகா பத்தி என்னலாம் வத்தி வைக்கிறதுனு யோசிச்சிட்டு இருக்கிறேன்”

தியாகேஷ்வர், அது யாரு?” என்று வினவ,

சேகர் கைகளை மேலே  தூக்கி கும்பிட்டபடி,அம்மா தாயே உன்னை எதுவும் சொல்லலை.. நான் ஆரம்பிக்கும் முன் மங்களம் பாடிராத” என்றாள்.

அந்த பயம் இருக்கட்டும்” என்றவள், தியாகேஷ்வரிடம்,இவன் ஸ்கூல் மியூசிக் டீச்சர் பாட ஆரம்ச்சதும் இவர் உருகறது இருக்கே! வெண்ணை கூட அப்படி உருகாது” என்றாள்.

ஸ்கூல் ஆரம்ச்சு டீச்சரம்மாவை பிடிச்சுட்டாராக்கும்” என்று தியாகேஷ்வரும் கிண்டலில் இறங்க, அறையினுள் சிரிப்பலை கிளம்பியது.

பழைய கீர்தன்யாவை பார்த்த மகிழ்ச்சியில் வெகு நாட்களுக்கு பிறகு மன-நிறைவோடு சிரித்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தியாகேஷ்வரைப் பார்த்தார்.

மருத்துவர் வந்து அறையில்  ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும் என்று கூற, தியாகேஷ்வர் சேகரை இருக்க சொன்னான். கீர்தன்யா மனமின்றி தந்தையுடன் கிளம்பினாள்.

 

சில நாட்களுக்கு பிறகு-

தியாகேஷ்வரின் பெற்றோரும் அண்ணன் குடும்பமும் இந்தியா வந்தனர். அவனது உடல் நலம் தேறியதும் முதல் முகுர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

தியாகேஷ்வரின் அன்னையைப் பார்த்தும், அறிவுரைகளைப் பெற்றும் கீர்தன்யா மனதைரியம் பெற்றாள்.

 

தியாகேஷ்வரும் கீர்தன்யாவும் காதலுடன் இல்லறத்தை இனிதாக தொடங்க,
தினேஷும் லாவண்யாவும் சண்டைகளுக்கு நடுவில் காதல் புரிய,
சேகர் வைஷ்ணவி மனதில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கினான்.

****************************முற்றும்****************************

தோழமைகளே!

கொலையாளி யார் என்று காரணங்களுடன் மிக சரியாக சொன்னது ‘மைதிலி மணிவண்ணன்’ சிஸ்.. நீங்க மட்டும் தான் சுரேந்தர் கல்யாணி-விஜயன் மகன், சொத்துக்காக கல்யாணி-விஜயன் தான் கொலை செய்தாங்க அண்ட் சந்துருவை கொலை செய்தது அவனது தாய்வழி சொந்தம்னு எல்லா காரணங்களையும் ரொம்ப சரியா சொன்னீங்க.. சூப்பர் சிஸ்..

அடுத்து ‘பரமேஸ்வரி’ அக்கா.. நீங்க கல்யாணி இரண்டாவது மனைவினும், கல்யாணி-விஜயன் தான் கொலை செய்ததுன்னு சரியா சொன்னீங்க க்கா.. சூப்பர்.

-கோம்ஸ்.

 

Advertisement