Advertisement

காவல் துறை துணை ஆணையர் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் 

காலை 11.30மணி அளவில்  ACP தியாகேஷ்வர் மற்றும் ஆய்வாளர்(Inspector) சந்தீப் இடையே தீவிரமான வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

தியாகேஷ்வர், மிஸ்டர் ஜெயப்ரகாஷ் அக்சிடென்டில் இறந்த ஒரு மாசத்தில் அவரோட பஸ்ட் டாட்டர் சுபாஷினி இறந்துருக்கா.. எப்படி சுபாஷினியின் மரணத்தை சூசைட்னு இவ்ளோ சீக்கிரம் பைல் க்ளோஸ் பண்ண சந்தீப்?”

சார் அந்த பொண்ணு தூக்கு போட்டு தான் இறந்துருக்குனு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் தெளிவா இருக்கு.. ரூமும் உள்ளுக்குள்ள தான் தாழ்பாள் போட்டிருந்தது” 

நீ போகும் போது கதவு பூட்டியா இருந்தது?” 

அது.. இல்லை தான் பட் சர்வன்ட்ஸ் கிட்ட விஷாரிச்சதில்…………..” 

அவங்க பொய் கூட சொல்லி இருக்கலாமே?” 

JP வைப் கூட அப்படித் தான் சொன்னாங்க சார் அண்ட் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்…….” 

தூக்கு போட்டு சாகப் போறவ ஏன் தூக்க மாத்திரை சாப்பிடனும்?”

கடந்த ஒரு மாசமா அது அந்த பொண்ணோட டெய்லி ரோடின் சார்”  

தியாகேஷ்வர் யோசனையில் இருந்தான்.

சந்தீப், சார்.. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், சுபாஷினி கைப்பட எழுதிய லெட்டெர், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாமே சுபாஷினி மரணம் தற்கொலைனு தான் சொல்லுது.. அந்த வக்கீல் சும்மா கிளப்பி விடுறார்”

தியாகேஷ்வர் சிறிது கண்ணை சுருக்கி, ஹ்ம்ம்.. மேலோட்டமா பார்த்தா நீ சொன்னது கரெக்ட்.. பட்  பீல் சம்திங் பிஸ்ஸி.. லெட் மீ பைண்ட் அவுட்..” 

சார்.. என்னை சந்தேகப் படுறீங்களா?”

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், எனக்கு உன்னை தெரியும் சந்தீப்.. பட் தி கேஸ் இஸ் ரி-ஓபெண்டு” என்றான். 

ஓகே சார்” என்று கூறியபடி சந்தீப் எழுந்துக் கொள்ள, அவனது கையைக் குலுக்கியபடி தியாகேஷ்வர் விடை கொடுத்தான்.

தியாகேஷ்வர் அந்த கோப்பியத்தை இரண்டாவது முறையாக எடுத்துப் பார்த்தான்.

வழக்கு – திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற “Today’s Trend” ஆடை மற்றும் நகை கடையின் உரிமையாளர் ஜெயப்ரகாஷின் முதல் மகள் சுபாஷினியின்(17 வயது) மரணத்தை பற்றிய வழக்கு.

சுபாஷினி இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தான் ஜெயப்ரகாஷ் கார் விபத்தில் இறந்திருந்தார். இறப்பதற்கு முன்  சொத்துகள் அனைத்தையும் சுபாஷினி பெயரில் எழுதி, காப்பாளராக(guardian) தனது தம்பி(சித்தப்பா மகன்) பிரதாப்பை நியமித்திருந்தார்.

முதலில் சுபாஷினியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை படித்தான். அந்த அறிக்கையில், அந்த பெண் கழுத்து இறுகி கழுத்து எலும்பு நொறுங்கி இறந்ததாக கூறப் பட்டிருந்தது. மேலும் அவள் இருந்துப் போன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாக அவள் ஒரு தூக்க  மாத்திரையை உட்கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

அடுத்து மருத்துவ பதிவேடை எடுத்து படித்தான். அதில் அந்த பெண் ஒரு மாத காலமாக மனசோர்வு காரணமாக தினமும் இரவு ஒரு தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும், அவளுக்கு மூன்று ஆண்டுகளாக ‘சைனஸ்’ பிரச்சனை இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

அடுத்து ஒரு கடிதத்தை படித்தான். அதில் அந்த பெண் ‘தன் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனது மன உளைச்சல் மற்றும் தீராத தலைவலி காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுப்பதாக’ கூறி இருந்தாள்.

இந்த தகவல்களைப் பார்க்கும் போது அந்த பெண் சுபாஷினியின் மரணம் தற்கொலை போல் தான் தெரிந்தது, ஆனால் சுபாஷினியின் குடும்ப வக்கீலும், அந்த பெண்ணின் தந்தை ஜெயப்ரகாஷின் நண்பருமான வழக்கறிஞர் கார்த்திகேயன் ‘சுபாஷினியின் மரணம் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால், மறுவிசாரணை செய்யுமார்’ AC தியகேஷ்வரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

பலவிதமாக யோசித்த தியாகேஷ்வருக்கும் இது கொலையாக இருக்குமோ என்று தான்  தோன்றியது.

மே ஐ கம் இன் சார்?” 

எஸ்” என்று தியாகேஷ்வர் தனது கம்பீரமான குரலில் கூறியதும், உள்ளே நுழைந்த ஆய்வாளர் தினேஷ் தியாகேஷ்வர் முன் வந்து நின்று விறைப்பாக வணக்கம் வைத்து, குட் அப்ட்டர்-நூன் சார்” என்றான்.

தியாகேஷ்வர் சிறு தலையசைப்பில் அவனது வணக்கத்தை பெற்றுக் கொண்டு, குட் அப்ட்டர்-நூன் தினேஷ்.. உன்னைத்  தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. இப்போ நீ வந்த காரணம் தெரியும்னு நினைக்கிறேன்” 

எஸ் சார்.. JP டாட்டர் டெத் கேஸ் ரி-இன்வெஸ்டிகேட் பண்ணப் போறோம்.. சந்தீப்க்கு பதில் யாரையும் நம்ம டீம்ல சேர்த்து இருக்கீங்கலா சார்?” 

எஸ்.. மார்க்கெட் ஏரியாக்கு புதுசா ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கும் இன்ஸ்பெக்டர்”

தினேஷ் சிறிது ஆச்சரியம் கலந்த குரலில், சார்.. புதுசா வரது லேடி இன்ஸ்பெக்டர் தானே!” 

எஸ்.. ஏன்! லேடி இன்ஸ்பெக்டர் நம்ம டீம்ல இருந்தா உனக்கு என்ன பிரச்சனை? (சிறு புன்னகையுடன்) சந்தோஷப் படுவனு நினைத்தேன்!”?”

தினேஷ் புன்னகையுடன், எனகென்ன பிரச்சனை? சந்தோஷம் தான்.. நான் உங்களை நினைத்து தான் கேட்டேன்..” 

ஏன் எனகென்ன?” 

அது வந்து……………”

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், நான் பொண்ணுங்க கூட அவ்வளவா பழக மாட்டேன் தான்.. அதுக்காக பழகவே மாட்டேன்னு யாரு சொன்னா?”

தினேஷ் சிறிது அசடுவழிந்தபடி, யாரும் சொல்லலை சார்.. நானா தான்.. அது.. இந்த ரெண்டு வருஷமா நான் உங்களைப் பார்த்து பழகியவரை நீங்க….”

தியாகேஷ்வர் புன்னகையுடன், ஸோ என்னை சாமியார்னே முடிவு பண்ணிட்ட”

அப்படி இல்லை சார்” 

ஓகே லீவ் இட்.. நான் இந்த முடிவெடுக்க இரண்டு காரணங்கள்.. முதல் காரணம், இறந்திருப்பது ஒரு பெண் அதுவும் மைனர்.. இரண்டாவது காரணம், கமிஷ்னர் சார் ரெக்வெஸ்ட்.. மிஸ் லாவண்யா கமிஷ்னர் சார் தங்கை மகள்.. அது மட்டும் இல்லை அவங்க திறமைசாலியும் கூட

தினேஷ் அவசரமாக, “என்ன நேம் சார் சொன்னேங்க?” 

லாவண்யா.. ஏன்?”

தினேஷ் பதில் கூறும் முன், மே ஐ கம் இன் சார்?” என்ற பெண் குரல் கேட்கவும், தியாகேச்வர், எஸ்” என்றான்.

உள்ளே நுழைந்த ஆய்வாளர் லாவண்யாவைப் பார்த்ததும் தினேஷ் முகத்தில் எரிச்சல் கலந்த சிறு வெறுப்பு பிறக்க, மனதினுள், சை.. அவளே தான்என்று நினைக்க,

தியாகேஷ்வருக்கு வணக்கம் வைத்து, குட் அப்ட்டர்-நூன் சார்” சொல்லிவிட்டு, தினேஷைப் பார்த்த லாவண்யா முகத்திலும் அதே உணர்ச்சிகள், மனதினுள் அதே எண்ணம், சை.. அவனே தான். 

தினேஷின் மனம் சில அவருடங்கள் பின்னோக்கி பள்ளி பருவத்திற்கு சென்றது………..

தினேஷ் 11வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவன் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தாள் லாவண்யா.

‘யார் முதல் மதிப்பெண் எடுப்பது?’ என்று படிப்பு விஷயத்தில் அவர்கள் இடையே தொடங்கிய போட்டி, சின்ன சின்ன விஷயத்திலும் தொடர, எப்பொழுதும் இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர்.

12ஆம் வகுப்பின் இறுதி நாள், அதாவது கல்வி விடுப்பு(ஸ்டடி லீவ்) தொடங்குவதற்கு முன்தினம் – இடைவேளையில் மரத்தடியில் தினேஷ் தனது நண்பர்களிடம்,

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை லா.வ.ண்.யா” என்று கூற,

அதை கேட்ட லாவண்யா கோபமாக தன் தோழியிடம், தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை தி.னே.ஷ்” என்றாள்.

தினேஷ் தன் நண்பனிடம், நான் சொல்லலை.. இவளுக்குலாம் அறிவே கிடையாது.. சரியான மக்கப் கேஸ்டா

லாவண்யா கோபமாக, டேய்.. யாரைப் பார்த்து அறிவு கிடையாதுனு சொல்ற?

தினேஷ் அலட்டிக் கொள்ளாமல், உன்னைப் பார்த்து தான்” 

உனக்கு தான்டா அறிவு கிடையாது”

சொந்தமாவே பேச தெரியாதா? எப்போ பார்த்தாலும் நான் பேசுறதையே காபி அடிச்சு பேசு” என்று கூறி நக்கலாக சிரிக்க,

டேய் வேண்டாம்” 

என்ன வேண்டாம்?” 

என்னிடம் வச்சுக்காத” 

ஆமா இவ பெரிய மகாராணி.. போடி..” என்று கூறிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றான். செல்லும் வழியில், எப்பா இன்னையோட விட்டது சனி.. இனி என் வாழ்வில் இந்த முகத்தை பார்க்கவே மாட்டேன்..” என்று கூறியது லாவண்யா காதில் விழுந்தது.

தினேஷை ஒன்றும் செய்ய முடியாத கோபத்துடன் லாவண்யாவும் வகுப்பறைக்கு சென்றாள்.

சிறிது நேரம் கழித்து தினேஷின் நண்பன் லாவண்யா அருகே இருந்த மாணவி மீது சிறு சுன்னத்துண்டை  எறிய, அது லாவண்யா மீது விழுந்தது.

தினேஷின் நண்பன் தலையின் இரண்டு கைகளையும் வைத்து, ஐயோஎன்று கூற, தினேஷ் சிரித்தான்.

யார் எறிந்ததுஎன்றறிய லாவண்யா திரும்பி பார்த்த போது தினேஷ் சிரித்துக் கொண்டிருக்கவும் அவளுக்கு கோபம் கூடியது.

லாவண்யா கோபமாக எழுந்து வந்து தினேஷ் கன்னத்தில் அரைந்து, கண்ணில் மித மிஞ்சிய கோபத்துடன்  ஜாக்கிரதை என்பது போல் சுட்டிவிரலை ஆட்டிவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு வகுப்பறையில் நிசப்தம் நிலவியது.

இரண்டு நொடிகளில் தினேஷ் சுய-உணர்வு பெற்று எழவும், ஆசிரியர் வகுப்பறையினுள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

தினேஷ் கோபத்துடன் கை முஷ்டியை இறுக மூடி மேஜையை ஓங்கி அடித்தான்.

என்ன தான் அவனது நண்பர்கள் சமாதானம் கூறினாலும், அவனுக்கு கோபம் குறையவே இல்லை.

மதியம் 3மணிக்கு மேல் கிளம்பலாம் என்று ஆசிரியர் அறிவித்துவிட, மாணவர்கள் தங்களுக்குள் நினைவொப்பம்(autograph) வாங்கிக் கொண்டிருந்தனர்.

மாலை கிளம்பும் நேரத்தில் லாவண்யாவைத் தேடிய தினேஷ், அவள் விளையாட்டுத் திடலில் தோழிகளுடன் இருப்பதைப் பார்த்ததும் வேகமாக சென்றான்.

தினேஷின் கோபம் அறிந்த தோழர்கள் வேகமாக அவனை பின் தொடர்ந்தனர்.

தினேஷ் லாவண்யா முன் நின்றதும், லாவண்யா எரிச்சல், வெறுப்பு மற்றும் இகழ்ச்சி கலந்த பார்வையை பார்த்தாள்.

தினேஷ், எதை மறந்தாலும் இதை மறந்துறாத” என்று கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது இரண்டு கன்னங்களிலும் அரைந்து, அவளை திரும்பி பார்க்காமல் வேகமாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினான்.

அதன் பிறகு இருவரும் இன்று தான் சந்திக்கின்றனர்.

தினேஷ் வெறுப்பும் எரிச்சலுமாக அவளை முறைக்க, பழசை நினைத்தப் பார்த்த லாவண்யாவும் அவனை வெறுப்பும் எரிச்சலுமாக முறைத்தாள்.

இருவரும் ஒருங்கே, அதே திமிர்.. அதே ஆணவம்.. மாறவே இல்லைஎன்று மனதினுள் நினைத்துக் கொண்டனர்.

தியாகேஷ்வர் லேசாக தொண்டையை செரும, இருவரும் சட்டென்று முகத்தை சீர் செய்து தியாகேஷ்வரை பார்த்தனர்.

தியாகேஷ்வர், ஹோப்.. அப்பார்ட் ப்ரம் யுவர் பர்சனல் வெஞ்சன்ஸ் யூ போத் வில் கோ-ஆபிரெட் மீ இன் சால்விங் திஸ் கேஸ்” என்றான். (‘சொந்த பழியுணர்வை தவிர்த்து வழக்கிற்கு தீர்வு காண ஒத்துழைப்பீங்க நினைக்கிறேன்’ என்று கூறினான்)

லாவண்யா ஆச்சரியமாக பார்க்க, தியாகேஸ்வரின் கணிப்புத் தன்மையை நன்றாக அறிந்த தினேஷ் ஆச்சரியமடையவில்லை, ஆனால் அவசரமாக, சார் நீங்க நினைப்பது போல் இல்லை” என்றான்.

தியாகேஷ்வர், நான் என்ன நினைக்கிறன்னு உனக்கு எப்படி தெரியும்?” 

எனக்கு கொஞ்சம் மைண்டு ரீடிங் தெரியும் சார், பட் உங்க மைண்ட ரீட் பண்ணுவது கஷ்டம் தான்.. நான் என்ன சொல்ல வந்தேன்னா..” என்று கூறி லாவண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தியாகேஷ்வரை பார்க்க, அவனோ நீயே சொல்லி முடிஎன்பது போல் தினேஷை பார்த்துக் கொண்டிருந்தான்.

தினேஷ், நாங்க 11த் 12த் ஒன்னா படிச்சோம்.. எங்களுக்குள் ஒத்துதே போகாது.. எப்போதும் சண்டைத் தான்.. 12த் லாஸ்ட் டே.. நான் பண்ணாத தப்புக்கு இவ என்னை அடிச்சுட்டா(இதை சொல்லும் போது லாவண்யாவை பார்த்து முறைத்துவிட்டு திரும்பினான்) பதிலுக்கு நானும் அவளை அடிச்சேன்.. அப்புறம் இன்னைக்குத் தான் பார்க்கிறேன்” என்றான். 

முதல் நாள் என்பதால் எதுவும் கூறாமல் கோபத்தை அடக்கியபடி லாவண்யா அமைதியாக இருந்தாள்.

தியாகேஷ்வர் லாவண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தினேஷிடம், இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்ற?” என்று கேட்டான். 

அது நீங்க வேற ஏதும் தப்பா நினைச்சுற கூடாதேனு”

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், நான் அப்படி என்ன நினைச்சுற போறேன்னு நீ நினைச்ச?”

தினேஷ், சார்” என்று கண்களால் சிறிது கெஞ்ச,

தியாகேஷ்வர் புன்னகையுடன், ஓகே” என்றவன் லாவண்யாவைப் பார்த்து, நீங்க ஏதும் சொல்ல விரும்புறீங்களா லாவண்யா?” என்று கேட்டான்.

தினேஷை முறைத்துவிட்டு தியாகேஷ்வர் பக்கம் திரும்பி, தீர்க்கமான குரலில், பழசை பற்றி பேச விரும்பலை சார்.. நான் பர்சனல் விஷயத்தை ஆபீசியல் விஷயத்தில் கலப்பதில்லை.. ஐ வில் கோ-ஆபிரெட் யூ சார்” என்றாள்.

தியாகேஷ்வர் புன்னகையுடன், குட்” என்று கூறி தினேஷை பார்க்க, அவன், யூ நொ மீ வெல் சார்” என்றான்.

ஓகே.. லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் தி கேஸ்.. லாவண்யா இது என்ன கேஸ்? என்னன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

தினேஷ் லாவண்யாவை நக்கலாக பார்த்துவிட்டு தியாகேஷ்வரிடம், இன்னைக்கு தானே சார் வந்துருக்காங்க.. என்ன…………..”

லாவண்யா தினேஷின் பேச்சை மதிக்காது தியாகேஷ்வரிடம், மிஸ்டர் ஜெயப்ரகாஷ் டாட்டர் டெத் சூசைட்னு இன்ஸ்பெக்டர் சந்தீப் க்ளோஸ் பண்ண கேஸ, அட்வோகேட் கார்த்திகேயன் கொடுத்த பெட்டிஷன் அடிப்படையா வச்சு ரி-இன்வெஸ்டிகேட் பண்ணப் போறோம் சார்..  

மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஒரு மாசம் முன்னாடி தான் அக்சிடென்டில் இறந்திருக்கார்..

மிஸ்டர் கார்த்திகேயன் மிஸ்டர் ஜெயப்ரகாஷ் பிரெண்ட் கம் லீகல் அட்வைசர்” என்று கூறி முடித்துவிட்டு தினேஷை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள்.

தினேஷ் கஷ்டப்பட்டு தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மறைத்தான்.

தியாகேஷ்வர் கண்ணில் பாராட்டுதலுடன், ஸ்மார்ட்” என்றான்.

லாவண்யா புன்னகையுடன், தன்க் யூ சார்.. மாமா.. ஒ சாரி.. கமிஷ்னர் சார் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்” என்றாள். 

தியாகேஷ்வர்,குட்” என்று கூறி தினேஷிடம், சந்தீப் போன் கால்ஸ் ட்ரக் பண்ண ஏற்பாடு பண்ணு.. ஆல்சோ புது இன்பார்மர வச்சு சந்தீபை பாலோ பண்ண சொல்லு” என்றான்.

தினேஷ் சிறு அதிர்ச்சியுடன், சார்” 

நீ, நான், சந்தீப் சேர்ந்து கேஸஸ் சால்வ் பண்ணிருக்கோம் தான்.. சந்தீப் சின்சியர் தான்.. பட்.. எந்த சூழ்நிலையும் யாரை வேணும்னாலும் மாற்றலாம்.. ஸோ நான் சொன்னதுக்கு ஏற்பாடு பண்ணு” 

ஓகே சார்.. பட்.. இது மர்டர்னே முடிவு பண்ணிட்டீங்களா?” 

மர்டர் ஆர் சூசைட்? லெட்ஸ் இன்வெஸ்டிகேட்.. ஒருவேளை மர்டரா இருந்து, பை எனி சான்ஸ் சந்தீப் குற்றவாளியுடன் துணை போயிருந்தா? அதுக்குத் தான் இதை செய்ய சொல்றேன்” 

ஹ்ம்ம்.. ஓகே சார்” 

அண்ட் இன்னொரு விஷயம்…………” 

கேஸ் முடியும் வரை கேஸ்  பற்றிய விவரங்கள் எதையும் சந்தீப் கிட்ட சொல்ல மாட்டேன் சார்”

தியகேஷ்வர் புன்னகையுடன், குட்” என்று கூறி சுபாஷினி மரணம் சம்பந்தப்பட்ட கோப்பியத்தை நீட்டி, ரெண்டு பேரும் படிச்சு பாருங்க” என்றான்.

இருவரும் கோப்பியத்தை வாங்காமல் ஒருவரை ஒருவர் பார்க்க, தியாகேஷ்வர், கம் ஆன்.. சிட் அண்ட் ரீட்” என்றான்.

அவனது குரலில் இருவரும் அவன் எதிரே அமர்ந்தனர். தினேஷ் கோப்பியத்தை வாங்கி இருவருக்கும் பொதுவாக பிரித்து வைக்க, இருவரும் படிக்கத் தொடங்கினர்.

வேலை  என்று வந்ததும் இருவரும் சொந்த விருப்பு வெறுப்பை மறந்து கோப்பியத்தில் முழுமனதுடன் கவனத்தை செலுத்தினர். இதை கவனித்த தியாகேஷ்வர் இருவரையும் சேர்த்துக் கொண்டு இந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட முடியும் என்று நம்பிக்கைக் கொண்டான். 

சிந்தனை தொடரும்…

Advertisement