Advertisement

சந்துரு,அப்போ ஏன் நைட்ல அழுதுட்டு இருந்தா?” என்று யோசனையுடன் கூற,

தியாகேஷ்வர் முகத்திலிருந்த புன்னகை மறைய,அக்கா ஏன் அழுதா?” என்று கேட்டான்.

அதானே எனுக்கும் தெரியலை.. சரி நான் அதை பார்த்துக்கிறேன்.. சொன்னதை மறந்துறாதீங்க”  என்ற மிரட்டலுடன் நகர்ந்தவன், எதிர் திசையில் கீர்தன்யா வருவதைப் பார்த்து, உற்சாகத்துடன், அக்கா”  என்று கத்தியபடி சாலையைக் கடக்கத் தொடங்கினான்.

சட்டென்று திரும்பி பார்த்த தியாகேஷ்வர் சாலையில் வேகமாக ஒரு வண்டி வருவதைப் பார்த்து, சந்துரு”  என்று கத்தியபடி அவன் பின்னால் ஓட,

கீர்தன்யாவும், சந்துரு நில்லு”  என்று கத்தியபடி அவசரமாக வர,

அந்த வண்டி சந்துருவை இடித்து தள்ளிவிட்டு சென்றிருந்தது.

இடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்ட சந்துரு கீர்தன்யாவின் கையில் விழுந்து, அ..க்..கா”  என்று திணறலாக கூறியபடி இறந்தான்.

வண்டியின் ஓட்டுனரை கவனித்த தியாகேஷ்வர் அவசரமாக வண்டி எண்னை குறித்துக் கொண்டு கீர்தன்யா அருகே சென்றான்.

————————————————————————————————————————————

தியாகேஷ்வரிடம் இருந்து  தப்பியவன் சக்கரபாணியை அழைத்து, அய்யா அந்த பையன் ஸ்பாட் அவுட் ஆனா நாம செய்யலை.. வண்டி வரதை பார்க்காம அந்த பையன் ரோடு கிராஸ் பண்ணும் போது…………..”

சரி சரி.. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்த சக்கரபாணி தியாகேஷ்வரை அழைத்தான்.

———————————————————————————————————————————–

கையில் இரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்த உயிரற்ற தம்பியின் உடலை பார்த்தபடி சிலை போல் கீர்தன்யா அமர்ந்திருக்க, அவள் தோளை தியாகேஷ்வர் தொட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓட பேச்சின்றி உதடுகள் துடிக்க மெளனமாக கதறினாள்.

தியாகேஷ்வர் ஆறுதலாக அவள் தோள்களை பற்றி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அப்பொழுது அவன் கைபேசி அலறியது. அவன் இடதுகையால் கைபேசியை எடுத்து இயக்கவும், அது கைத்தவறி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் ஒலிபெருக்கி பொத்தான் அழுத்தப்பட்டுவிட, சக்கரபாணியின் வெற்றிக்குரல் சத்தமாக வெளியே கேட்டது.

நான் சொன்னதை கேட்டிருந்தா சின்ன பையன் உயிர் வீணா போயிருக்காதே.. இப்பவாது பார்த்து நடந்துக்கோங்க தம்பி”

தியாகேஷ்வர் அவசரமாக கைபேசியை எடுத்து, டேய் சக்கரபாணி.. உன் முடிவு நெருங்கிருச்சு” என்றான்.

அவனோ, ஹ.. ஹா.. ஹா.. பார்க்கலாம் தம்பி” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

தியாகேஷ்வர் கீர்தன்யா பக்கம் திரும்ப, அவளோ வெறுப்பும் கோபமுமாக அவனது கையை தட்டிவிட்டபடி அவனை முறைத்தாள்.

அவன் பேச முயற்சிக்க, கையை  உயர்த்தி  அவனது பேச்சை நிறுத்தியவள் சிரமத்துடன் தனது கைபேசியை எடுத்து தந்தையை அழைத்து, அப்பா.. கீர்த்தி.. பேசுறேன்.. சந்துரு.. சந்துரு டென்னிஸ் கிளாஸ்க்கு.. சீக்கிரம் வாங்க” என்று நடுங்கிய குரலில் பேசினாள்.

அவர்,என்னாச்சு கீர்த்தி?” என்று பதறினார்.

சந்..து..ரு..க்கு அக்..சிடென்ட்.. சீக்கிரம் வாங்க..ப்பா” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அதன் பிறகு சந்துருவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தவள் சண்முகம் வந்ததும் இவனை திரும்பி பார்க்காமல் சென்றாள்.

 

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து அவளைப் பார்க்க முயற்சித்த தியாகேஷ்வர் சண்முகம் கூறிய, இப்போ தான் மகனை இழந்திருக்கேன்.. உங்க வேலையால் என் மகளையும்……….” என்ற வார்த்தைகளில் பெரிதும்  அடிபட்ட வலியுடன் அவளை பார்க்காமல் வீடு திரும்பினான்.

இருபினும் மனம் கேட்காமல் மகேந்திரன் வீட்டிற்கு சென்று மறைவில் இருந்து அவளைப் பார்த்தான்.  சித்தபிரம்பை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தவளைப் பார்க்க முடியாமல் வேதனையுடன்  திரும்பியவன், வெறியுடன் செயல்பட்டு சக்கரபாணியை சிறையில் தள்ளினான். சந்துருவின் இறப்பு விபத்தல்ல கொலை என்று நிருபிக்க முடியாவிட்டாலும், பழைய கொலை வழக்கு மற்றும் கள்ளக்கடத்தல் வழக்கிலும் சக்கரபாணிக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டி அவன் வெளிய வரமுடியாதபடி செய்தான்.

 

 

கைபேசியின் அலறலில் நிகழ் காலத்திற்கு திரும்பியவன் அழைப்பை எடுத்தான். 

சொல்லுங்க திலீப்” 

சார் ரேஷ்மா கேஸ் தவிர இன்னொரு நம்பர் குடுத்தீங்களே.. அந்த நம்பர்ல இருந்து ஒரு போன் பண்ணாங்க.. ரெண்டு நிமிஷம் பேசினாங்க.. கோட் வெர்ட்ல பேசிகிட்டாங்க.. கடைசியா ஒரு மணி நேரம் பொறுத்துக்கோனு சொன்னதை வச்சு பார்த்தா, தப்பிக்கிறதுக்கு பிளான் பண்றது போல் இருக்குது சார்”

தன்க் யூ திலீப்”

இட்ஸ் மை டியூட்டி சார்”  என்று கூறி அவர் அழைப்பைத் துண்டித்ததும், தியாகேஷ்வர் தினேஷை அழைத்தான்.

எஸ் சார்”

தூங்கிடிருந்தியா.. டிஸ்டர்….……”

நோ சார்.. நானே உங்களுக்கு காள் பண்ணனும்னு இருந்தேன்.. லாரென்ஸ் போன் பண்ணார்.. ரேஷ்மாவை கடத்தினவன் தப்பிச்சுட்டான்.. தேடிட்டு இருக்காங்க.. அடிபட்டவனை G.Hல அட்மிட் பண்ணியிருக்காங்க.. ஆபத்தான நிலையில் தான் இருக்கிறான்”

ஷிட்.. எப்படி?”

ரயில்வே கிராஸிங்-ல தப்பிச்சிருக்கான்”

டாக்டரை எச்சரி…………”

சொல்லிட்டேன் சார்.. லாரென்ஸ், சரவணனை டாக்டர் வீட்டுக்கு போக சொல்லியிருக்கிறேன்”

குட்”

நீங்க எதுக்கு சார் காள் பண்ணீங்க?”

இப்போ பெயின் எப்படி இருக்குது?”

அம் பெட்டர் நவ்.. என்ன விஷயம் சார்?”

ஒரு சின்ன ஹெல்ப்”

சொல்லுங்க சார்”

காலைல ஒரு அட்ரெஸ் தந்தியே.. அவன் தப்பிக்க முயற்சி பண்றான்……..”

நம்ம இடத்தில் வைக்கணுமா சார்”

தர்ட்டி மினிட்ஸ்-ல”

அந்த ஏரியா எனக்கு ரொம்ப பக்கம் ஆட்டோ டென் மினிட்ஸ்-ல போய்டுவேன்.. வேலையை முடிச்சுட்டு போன் பண்றேன் சார்”

கான்ஸ்டபிள்ஸ்க்கு அடையாளம் தெரியும்.. நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்”

ஓகே சார்”  என்று கூறி கிளம்பிய தினேஷ் 15 நிமிடங்களில் ஆன் தி வே டு அவர் பிளேஸ்‘  என்ற குறுஞ்செய்தியை அனுப்பினான். பிறகு 45 நிமிடங்களில் தியாகேஷ்வரை அழைத்தவன், டன் சார்” என்றான்.

தேங்க்ஸ் தினேஷ்”

என்ன சார்.. எனக்கு போய்” என்று அவன் பதற,

தியாகேஷ்வர், இது ப்ராபரான அஃபிசியல் வொர்க் இல்லை.. அதுவும் இந்த நிலைமையில் உன்னை……….”

அவன் யாரு சார்?” என்று அவன் பேச்சை மாற்ற,

தியாகேஷ்வர் புன்னகைத்துவிட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நாம சக்கரபாணி கேஸை டீல் பண்ணிட்டு இருந்தப்ப ஒரு அக்சிடென்ட் நடந்துதே, ஞாபகம் இருக்கா?”

ஒரு சின்ன பையனை கார் இடிச்சதில் ஸ்பாட் அவுட்.. நீங்க கூட அதை சக்கரபாணி தான் செய்தான்னு சொன்னீங்க பட் ப்ரூவ் பண்ண முடியலை.. அதையா சார் சொல்றீங்க?”

கண்களை இறுக மூடித்திறந்தவன், எஸ்” என்றான்.

தினேஷ் குழப்பத்துடன், எனக்கு புரியலை சார்” 

நான் சொன்ன மாதிரி அது கொலை தான் பட் அதுக்கும் சக்கரபாணிக்கும் சம்பந்தம் இல்லை.. இன்னொரு நாள் டிடேல்ஸ் சொல்றேன்” என்று சிறிது கரகரத்த குரலில்  பேசியவன், நாளைக்கு நீயும் லாவண்யாவும் மிஸ்டர் கௌரிநாதனை விசாரிச்சுட்டு ஆபீஸ் வாங்க” என்று முடித்தபோது குரல் இயல்பிற்கு திரும்பி இருந்தது.

தியாகேஷ்வர்  குரலில் வித்யாசத்தை உணர்ந்தாலும் எதுவும் கேட்காமல், “ஓகே சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை யோசித்துப் பார்த்த தினேஷ் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் உறங்கினான்.

Advertisement