Advertisement

லாவண்யாவும் மற்றவர்களும் வந்த போது செருப்பு தைப்பவன், என் தொழில் மேல் சத்தியமா வேற ஏதும் எனக்கு தெரியாது சார்.. என்னை நம்புங்க” என்று கெஞ்சிக் கொண்டிருக்க, தினேஷ் அவனை அடிக்க கை ஓங்க,

தியாகேஷ்வர்,விடு தினேஷ்.. அவன் உண்மையை தான் சொல்றான்”

லாவண்யா,என்ன சார் சொல்றான்? யார் கடத்தினதாம்?” 

யாரு கடத்தினாங்கன்னு இவனுக்கு தெரியலை.. இவன் அவங்க கூட்டத்தை சேர்ந்தவன் இல்லை.. காசுக்கு இந்த வேலை செய்திருக்கான்”

லாவண்யா,ச்ச்.. கடத்தி வச்சுருக்குற இடம் கூடவா தெரியலை?” 

இல்லைஎன்பது போல் தலையசைத்து உதட்டை சுளித்த தியாகேஷ்வர், பட் அவங்க காண்டக்ட் நம்பர் கிடைச்சுருக்கு” என்றவன் மற்ற காவலர்களை நோக்கி, இவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போங்க.. இவன் செல்லுக்கு எந்த போன் வந்தாலும் ஸ்பீக்கரில் பேச வைங்க.. பேசுறதை ரெக்கார்ட் பண்ணுங்க” என்றான். 

எஸ் சார்” என்று கூறி அவனை இழுத்துக் கொண்டு மற்ற இரு காவலர்கள் கிளம்பவும் தியாகேஷ்வர் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

தியாகேஷ்வர், சொல்லுங்க திலீப்.. லொகேட் பண்ணீங்களா?” என்று கேட்டான். 

தட்சநல்லூர் தாண்டி கரையிருப்பு-னு தெரிஞ்சுது பட் எக்ஸக்ட் லொகேஷன் தெரியலை சார்” 

சரி.. ********** இந்த நம்பர் ட்ரேஸ் பண்ணுங்க, எக்ஸக்ட் லொகேஷன் கிடைக்கும்.. நான், தினேஷ், லாவண்யா கரையிருப்பு நோக்கி கிளம்புறோம்.. நீங்க சீக்கிரம் லொகேஷன் கண்டுபிடிச்சு சொல்லுங்க”

எஸ் சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

 

மருத்துவரிடம் விவரத்தை கூறி ரேஷ்மாவின் புகைப்படத்தை பெற்றுக்கொண்டு, தியாகேஷ்வரும் தினேஷும் சாதாரண உடைக்கு மாறிய பின், மூவரும் வேகமாக கரையிருப்பு நோக்கி பயணித்தனர்.

—————————————————————————————————————————————

அதிர்ச்சியுடன் தன்னை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை நோக்கிய சண்முகம் சங்கடத்துடன், உன்னிடம் மறைக்கணும்னு நான் நினைக்கலை அமுதா.. நம்ம சந்துரு இறந்ததுக்கு ஒரு வாரம் முன்னாடி ஒரு சம்பந்தம் வந்தது.. ஆனா எனக்கு அதில் விருப்பம் இல்லை.. அதான் உன்னிடம் சொல்லலை..

அப்புறம் ரெண்டு மூணு நாள் கழிச்சு அந்த பையனே நேர்ல வந்து பேசினான்.. அவன் நம்ம கீர்த்தியை உயிருக்கு உயிராய் விரும்புறதாகவும், கீர்த்திக்கு அவனை நல்லா தெரியும், கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பானும் சொன்னான். நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லி அனுப்பிட்டேன்..

அப்புறம் அவங்க வீட்டுல இருந்து மறுபடியும் போன் பண்ணி கேட்டாங்க.. சரி கீர்த்தி கிட்ட கேட்டு பார்ப்போம்னு கேட்டேன்.. அவ(ள்) கல்யாணத்தில் இப்போ இஷ்டம் இல்லை, மேல படிக்க போறேன்னு சொல்லிட்டா.. அப்புறம்………. நம்..ம சந்துரு…….” என்று அவர் கண்கலங்க நிறுத்தினார்.

சேகர், அந்த பையன் யாரு மாமா?” 

அது எதுக்குபா இப்போ?” 

காரணமா தான் கேட்கிறேன்.. சொல்லுங்க மாமா”

அவர் புரியாமல் விழிக்க, கணேசன், எதுவா இருந்தாலும் குழப்பாம நேரடியா சொல்லு சேகர்” என்றார்.

சேகர், சரி.. நான் கேட்கிற ரெண்டு கேள்விக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க மாமா..”

அவர் என்னஎன்பது போல் பார்க்க,

உங்களுக்கு அந்த சம்பந்தம் ஏன் பிடிக்கலை?” என்று கேட்டான். 

அது.. வந்து.. அந்த பையன் ஒரு போலீஸ்”

கல்யாண பேச்சை கீர்த்தி கிட்ட எடுத்த போது மாப்பிள்ளை யாருனு சொல்லி கேட்டீங்களா?”

அவர் இல்லை என்பது போல் தலையை ஆட்ட, சேகர், நினைத்தேன்” என்றான்.

கணேசன்,”என்ன நினைச்ச? ஒழுங்கா சொல்லுடா” என்றார். 

சரி மாமா கடைசி கேள்வி………..”

கணேசன், சேகர் என் கிட்ட அடி வாங்க போற” 

ச்ச்.. இருங்கபா.. மாமா நீங்க சொல்லுங்க.. கீர்த்தி ஏன் ஒரு முறை என் கல்யாண பேச்சை எடுத்து நாம இழந்தது போதாதா பா?’-னு சொன்னா?” 

அந்த பேச்சை எடுத்த அன்னைக்கு தான் சந்துரு இறந்தான்.. அதான் அவ(ள்) அவளுடைய கல்யாணத்தையே அபசகுனமா எடுத்……..……”

சேகர் இல்லை என்று தலையை ஆட்டவும் அவர் பேச்சை நிறுத்தினார்.

சேகர், நீங்க நினைப்பது போல் இல்லை மாமா.. இன்னைக்கு கீர்த்தி நடந்துகிட்டதில் பல முகங்களை பார்த்தேன்.. அவ(ள்) நம்ம கிட்ட எதையோ மறைக்குறா.. 

காலேஜ்-ல ஒருத்தரை பார்த்து அப்செட் ஆகிட்டா-னு மட்டும் தான் சொன்னேன், அவ(ள்) நடந்துகிட்ட முறையை பற்றி சொல்லலை..” என்று கூறி கல்லூரியில் நடந்ததை கூறினான்.

அப்போ அவ(ள்) முகத்தை பார்க்கணுமே! அப்படி ஒரு கோபம்.. சிவன் நெற்றி கண்ணை திறந்த மாதிரி இருந்துது.. அங்க நடந்த பேச்சு வார்த்தையை வச்சு பார்க்கிறப்ப அந்த ஆளும் லேடியும் போலீஸ்-ஆ தான் இருக்கணும்.. கீர்த்தி கோபமெல்லாம் அந்த ஆள் மேல் தான்.. அவரை தவிர வேற யாரும் அவ(ள்) கண்ணுக்கு தெரியவே இல்லை.. ஏன்! தான் கத்தி முனையில் இருப்பது கூட அவளுக்கு தெரியலை.. எனக்கு என்னவோ அவர் மேல் உள்ள கோபத்தை தான் அந்த ஸ்டுடென்ட் மேல் அவ(ள்) காட்டினானு டவுட்..

ஒரு போலீஸா இருந்துட்டு கீர்த்தி பண்ணதை எல்லாம் அமைதியா பார்த்துட்டு இருந்தாரே தவிர வேற எதுவும் செய்யலை.. ஒரு வார்த்தை கூட பேசலை.. அந்த போலீஸை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது ஆனா ஞாபகம் வரலை.. அப்புறம்..

இங்க வீட்டுல வச்சு அவ(ள்) என் சட்டையை பிடிச்சு உலுக்கினப்ப அவ(ள்) கண்ணுல கோபம் மட்டும் இல்லை.. வேற ஏதோ ஒன்றும் இருந்துது.. அவ(ள்) யாரையும் லவ் பண்றாளோ என்ற டவுட்-ல தான் உங்க கிட்ட சில கேள்விகளை கேட்டேன் பட் இப்ப கூட குழப்பமா தான் இருக்குது”

சண்முகம் அதிர்ச்சியுடன்,கீர்த்தி லவ் பண்றானு சொல்றியாபா?” என்றார். 

அப்படி தான் நினைக்கிறன் மாமா.. ஆனா என்னால் உறுதியா சொல்ல முடியலை” 

சண்முகம் அதிர்ச்சியுடன் இருக்கையில் அமர, அமுதா மீளா அதிர்ச்சியுடன் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தார். கணேசன் மனைவியிடம் கண்ஜாடை காட்டிவிட்டு  நண்பனின் தோளை ஆதரவாக பற்றிக்கொள்ள, சாந்தி அமுதாவை அழைத்துக்கொண்டு அறையினுள் சென்றார்.

கணேசன், நீ கவலை படாதடா.. இவன் ஏதோ உளறுறான்”

சேகர்,இல்லபா.. கீர்த்தி கண்டிப்பா எதையோ மறைக்குறா.. அவ(ள்) கோபம்………..” 

கணேசன் குரலை உயர்த்தி,நீ முதல்ல உள்ள போ” என்றார்.

சண்முகத்தின் முகத்தை பார்த்தவன் கீர்தன்யா பற்றிய பல குழப்பத்துடன் தன் அறையினுள் சென்றான்.

—————————————————————————————————————————————

தியாகேஷ்வர், தினேஷ் மற்றும் லாவண்யா சென்று கொண்டிருந்த பொழுதே மின்வெளிக் குற்றபிரிவியல் பிரிவை சேர்ந்தவர் சரியான முகவரியை கூறிவிட, அவர்கள் வண்டியை முள்-புத்தரின் மறைவில் நிறுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி சற்று தூரம் நடந்து சென்றனர். முள் செடிகள் காடு போல் வளர்ந்திருக்க ஆங்காங்கே வீடுகள் இருந்தன.

அவர்கள் அந்த வீட்டை நெருங்கிய போது இருட்ட துவங்கியிருக்க, ஆந்தையின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் அவர்கள் கவனமாக சத்தமின்றி சென்ற போதும், உணவு வாங்க வெளியே சென்று வீடு திரும்பிய கடத்தல் கூட்டத்தை சேர்ந்த ஒருவன்  கண்ணில் இவர்கள் பட்டுவிட துப்பாக்கி சுடுதல் துவங்கியது.

மூவரும் பிரிந்து, வீட்டை சுற்றி இருந்த முள் புத்தரின் மறைவில் இருந்துக்கொண்டு சுட தொடங்க, கடத்தல் கூட்டத்தை சேர்ந்த ஒருவன் வீட்டினுள் இருந்தும், மற்ற இருவர் முள் செடிகளின் மறைவில் இருந்தும் சுட தொடங்கினர்.

இரண்டு நிமிடங்கள் நீடித்த துப்பாக்கி சுடுதல், யார் எங்கே இருக்கிறார்கள் என்பது அறியாமல் நின்றது. அந்த சுடுதலில் கடத்தல் கூட்டத்தை சேர்ந்த ஒருவன் பலமாக தாக்கபட்டிருக்க அவன் பின் வாசல் வழியாக வீட்டின் உள்ளே சென்று மறைந்தான்.

ஆந்தையின் சத்தம் கூட நின்றிருக்க சுற்று சூழல் நிஷப்த்தமாக இருந்தது. மிக மென்மையாக அடி மேல் அடி எடுத்து வைத்து நகர்ந்த தியாகேஷ்வர் கண்ணில் தினேஷ் தென்பட, தியாகேஷ்வர் தினேஷிடம் செய்கையின் மூலம் தான் முன்னே செல்வதாகவும் அவன் தனக்குபின்னால் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி முன்னால் நகர தொடங்க, தினேஷ் இருந்த இடத்திற்கு அருகே கைபேசியின் சத்தம் கேட்டது. தியாகேஷ்வர் மீண்டும் செய்கையில் தான் அதே இடத்தில நிற்பதாகவும் தினேஷை சென்று பார்க்குமாறு கூறினான்.

தினேஷ் சத்தமின்றி சற்று வேகமாக நடந்து செல்ல தொடங்க கைபேசியின் ஒலி நின்றது. இருபினும் அந்த ஒலி வந்த இடத்தை நோக்கி யூகத்தில் அவன் செல்ல, அவன் கண்ணில் கடத்தல் கூடத்தை சேர்ந்த ஒருவன் தென்பட்டான். தினேஷ் அவனை சுட குறி பார்க்க, அவனோ தினேஷை கவனிக்காமல் வேறெங்கோ குறி பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனதுகுறி எங்கே இருக்கிறது என்று பார்த்த தினேஷ் சற்று திகைத்தான், ஏன்னெனில் அவனது குறி லாவண்யாவை நோக்கி இருந்தது. தினேஷின் வலது புறம் இரண்டடி தூரத்தில் இருந்த அவளோ இவனை கவனிக்காமல் வீட்டின் பின் புற வழியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடத்தல் கூட்டத்தை சேர்ந்தவன் சுட தயாராக, நொடி பொழுதில் யோசித்த தினேஷ் லாவண்யா பக்கம் தாவி இருந்தான். குண்டு துப்பாக்கியை விட்டு வெளியே பறக்க, தினேஷ் பறந்து  தாவியதில் லாவண்யா கீழே விழ, அவள் மேல் தினேஷ் விழுந்தான். ஆனால் அவன் விழுவதற்கு முன் அவனது இடது கை தோள்பட்டையை குண்டு உரசி சென்றிருந்தது. கீழே விழுந்த தினேஷ் நொடி பொழுதில் திரும்பி தரையில் இருந்தபடியே கடத்தல் கூட்டத்தை சேர்ந்தவனை குறி பார்த்து சுட்டான். அவனது நெஞ்சிற்கு சற்று மேலே பலமாக அந்த குண்டு தாக்கியது.

லாவண்யா அதிர்ச்சியுடன், தினேஷ்” என்று அழைத்தபடி அவன் காயத்தை ஆராய முற்பட, அவனோ,முதல்ல அவனை பிடி.. போ” என்று விரட்டினான்.

லாவண்யா வேகமாக சென்று அவனை பிடித்து, அவன் கையை பின்னால் இழுத்து விலங்கை மாட்டினாள். இவர்கள் இருந்த இடத்திற்கு வந்த தியாகேஷ்வர் தரையில் இருந்து தினேஷ் எழ உதவி செய்தவாறு, தினேஷ் ஆர் யூ ஓகே?”என்று கேட்டான்.

அம் ஓகே சார்

லாவண்யா பிடிபட்டவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, யாரு கடத்த சொன்னது? நீங்க மொத்தம் எத்தனை பேர்?” என்று மிரட்டலாக கேட்டாள்.

அவன் நக்கலாக சிரித்தபடி, உன்னால் என்னை சுட முடியாது போலீஸ்” என்று சிரமத்துடன் பேசினான்.

தியாகேஷ்வர், ஏன் முடியாது? நீ ஒரு போலீஸை சுட்டுருக்க, தற்காப்புக்காக உன்னை சுட்டோம்னு உன் கதையை சுலபமா முடிக்க முடியும்” என்று கூறியபடி தினேஷ் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி அவனை சுட தயாராக, அவன் அரண்டான்.

அதே நேரத்தில் ஒரு கனத்த ஆண் குரல்(கூட்டத்தின் தலைவன்), “ACP எங்க ஆள் உன் கைல இருக்கான்னு எனக்கு தெரியும்.. இப்ப அவனை நீ விடலை டாக்டர் பொண்ணு க்ளோஸ்” என்று மிரட்டியது.

லாவண்யா பிடியில் இருந்தவன் பயம் நீங்கி  ஏகத்தாளமாக  சிரிக்க, தியாகேஷ்வர் சற்று நகர்ந்து மறைவில் இருந்து பார்த்தான். தலைவன் மட்டும் ரேஷ்மாவின்  நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி வீட்டின் முன்னால் நின்றுக் கொண்டிருந்தான்.

தியாகேஷ்வர், நானும் தினேஷும் இவனை கூட்டிட்டு முன்னாடி போறோம் நீ பின்பக்கமா போய் அவனை சுடு” என்று கூற,

லாவண்யா, எஸ் சார்” என்று கூறி கிளம்ப, அவனை தினேஷ் கையில் ஒப்படைத்த தியாகேஷ்வர் பிடிபட்டவன் அறியாமல் லாவண்யா கையை பற்றி நிறுத்தி, கண் ஜாடையில் அவளை வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லுமாறு கூறினான்.

“ACP நான் பத்து என்றதுக்குள் நீ வரலை இவ(ள்) காலி என்று தலைவன் கத்தினான்.

இரண்டு நொடிகள் பொறுத்திருந்து லாவண்யா செல்வதை உறுதி செய்து கொண்டு பிடிபட்டவனை இழுத்துக்கொண்டு தியாகேஷ்வரும் தினேஷும் வெளியே வந்தனர்.

மூன்று வரை எண்ணியிருந்த தலைவன் இவர்களை பார்த்ததும் வெற்றி புன்னகையுடன், ஒழுங்கா எங்க ஆளை விட்டுரு ACP” என்று மிரட்டினான்.

பிடிபட்டவன், அண்ணே.. ஜாக்கிரதை.. உன் பின்னால் இருந்து சுட ஆளை ஏற்பாடு செய்திருக்கான் இந்த ___” என்று கெட்டு வார்த்தையில் திட்டினான்.

தலைவன் சட்டென்று திரும்பி பார்க்க, அந்த நொடியில் தியாகேஷ்வர், ரேஷ்மா சிட்-டௌன் என்று கூறியபடி தலைவனின் கையை சுட்டபடி அவசரமாக முன்னேறினான். ரேஷ்மா சட்டென்று காதை பொத்திக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடியபடி கீழே அமர, குண்டு தலைவனின் கையில் பாய்ந்தது.

தலைவன் என்ற சத்தத்துடன் கையை உதறியபடி துப்பாக்கியை தவறவிட, தியாகேஷ்வர் ரேஷ்மாவை பற்றி, தனக்கு பின்னால் அவளை மறைத்துக் கொண்டு தலைவனை குறி பார்த்து நிற்க, வீட்டின் உள்ளே இருந்து ஒருவன் வெளியே வந்து தியாகேஷ்வர் மீது கத்தியை வீச முயற்சிக்க, அவனை லாவண்யா சுட்டாள்.

வீட்டின் உள்ளே இருந்து வந்தவன் முன்பே பலமாக காயமடைதிருந்ததால் லாவண்யாவின் சுடுதலில் உயிர் இழக்க, தலைவனின் கையில் தியாகேஷ்வர் விலங்கை மாட்டினான்.  அதிர்ச்சி மற்றும் பயத்தின் விளைவாக ரேஷ்மா மயங்கி இருந்தாள்.

சில நிமிடங்களில் மற்ற காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர, தலைவனையும், தினேஷிடம் பிடிபட்டிருந்தவனையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு,  மயங்கிய  ரேஷ்மாவை அழைத்துக்கொண்டு மூவரும் கிளம்பினர்.

வண்டியில் செல்லும் போது லாவண்யா தினேஷிற்கு முதலுதவி செய்ய, அவன் வலியை மீறி கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை ஓரப்பார்வையில் கவனித்த தியாகேஷ்வர் மென்னகையுடன் தன் கைபேசியில் மருத்துவரை அழைத்து பேசிய பிறகு ஆணையரை அழைத்து பேசி முடித்தவன் தினேஷை பார்த்தான்.

லாவண்யா பார்க்காத போது தினேஷ் அவளைப் பார்ப்பதும், அவன் பார்க்காத போது அவள் அவனைப் பார்ப்பதும் என்று இருவரும் ஆடியகண்ணாமூச்சி ஆட்டத்தை சில நொடிகள் ரசித்தவன், தொண்டையை செருமிக் கொண்டு, லாவண்யா.. கமிஷனர் சார் ஏதோ முக்கியமான விஷயம் நீ பேசினியானு கேட்டார்? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

சட்டென்று கனவுலோகத்தில் இருந்து மீண்டவள் போல் அவள் மிரள விழிக்கவும்,

தியாகேஷ்வர், என்ன லாவண்யா?”

அது... வந்து… சார்…” என்று முதலில் திணறியவள் சட்டென்று கண்கள் பிரகாசிக்க ரேஷ்மா மயக்கத்தில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு,  தினேஷை ஓரப்பார்வை பார்த்தபடி, மாமா.. உங்களை பற்றி அபிப்பிராயம் கேட்டாங்க” என்றாள்.

தியாகேஷ்வர் சிறு குழப்பத்துடன், என்னைப் பற்றி ஏன் உங்களிடம் கேட்டார்?” என்று கேட்டான்.

தினேஷ் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருக்க,

லாவண்யா, அது.. உங்க வீட்டில் என்னை பெண் கேட்டாங்களாம்” என்றாள்.

அதிர்ச்சியுடன் தினேஷ் நிமிர்ந்து அமர, தியாகேஷ்வர், வாட்?” என்றான்.

தினேஷைப் பார்த்தபடி மென்னகையுடன் அவள், நீங்க என்ன சொல்றீங்க சார்?” என்று கேட்டாள்.

அவளது முகபாவத்தை பார்த்த தியாகேஷ்வர், நான் ஓகே சொன்னா நீ என்ன சொல்லுவ?” என்று மறுகேள்வி கேட்டான்.

அதிர்ச்சியுடன் தியாகேஷ்வரை பார்த்தவள், சார்!!!!!!” என்றாள்.

சிந்தனை தொடரும்…

Advertisement