Advertisement

கணேசனும் சேகரும் பேசி முடித்துவிட்டு வரவும் கீர்த்தன்யா வெளியே வந்து கிளம்புவதாக அறிவிக்கவும் சரியாக இருந்தது.

சண்முகம் பதில் சொல்லும் முன் கணேசன், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கிளம்பு கீர்த்தி” என்றார்.

சண்முகம் நண்பரை பார்க்க, அவர் கண்ணசைவில் தைரியமூட்டினார். சாந்தியும் அமுதாவும் சிறு கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, சேகர் அமைதியாக இருந்தான்.

அவள், சாரி மாமா.. இனி என்னால் இங்க இருக்க முடியாது” என்றாள். 

ஏன் மா! அஞ்சு நாளுக்கு மேல் எங்க முகத்தையெல்லாம் பார்க்க முடியலையா?”என்று சிறு புன்னகையுடன் வினவ,

அவள், அப்படி இல்லை மாமா..” என்று தயங்கினாள்.

அப்புறம்?”

அவள் சொல்வதறியாது அமைதியாக இருக்க, சேகர் கீர்த்தி பெட்டியை வாங்கி உள்ள வை” என்றார்.

சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தவள், இல்லை மாமா.. என் முடிவில் மாற்றமில்லை” என்றாள்.

சில வினாடிகள் மௌனத்தில் கழிய,

கணேசன், சரி.. கிளம்பு ஆனா நிச்சயதார்த்தத்தை  முடிச்சுட்டு கிளம்பு” என்றதும் சேகர் சிறு பதற்றத்துடன் அவளைப் பார்க்க, மற்றவர்கள் மகிழ்ச்சியும் பயமும் எதிர்பார்ப்பும் கலந்த பதற்றத்துடன் பார்த்தனர்.

என்ன நிச்சயதார்த்தம்?” என்று வினவியவள் அடுத்த நொடியே முகமலர்ச்சியுடன், சேகருக்கா?”என்று கேட்டு மகிழ்ச்சியுடன் அவன் கையை குலுக்கி,
கன்க்ராட்ஸ்.. சொல்லவே இல்லை!” என்றாள்.

அவளது உற்சாகத்தில் சிறிதும் கலந்துக் கொள்ளாமல் அவன் அவளையே பார்க்கவும்,

அவள், ஒஹ்ஓ! கார்ல பேசியதையே நினைச்சுட்டு இருக்கியா! சாரி டா.. அப்போ இருந்த மனநிலையில்.. ச்ச்.. நீயும் என்னை கடுப்பேத்தாம இருந்திருக்கலாம்” என்றாள். 

“…” 

என்ன! இன்னும் கோபம் போகலையா?” 

“….” 

ரொம்ப சீன் போடாத.. ஏதோ கல்யாண மாப்பிள்ளைனு இவ்வளவு இறங்கி வந்து சாரி கேட்கிறேன்.. ரொம்ப பண்ண! போடானு போயிட்டே இருப்பேன்” 

சேகர் தீவிரமான குரலில்,பொண்ணு யாருனு தெரியுமா?” என்று கேட்டான். 

வைஷ்ணவி தானே!” 

அவன் இல்லை என்று தலையை ஆட்டவும், அவள், பெரியவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு அவனிடம் ரகசிய குரலில், பெருசுங்க ஏதும் சதி ப்ளான்னிங்? கவலைப் படாத.. நான் பேசி சரி பண்ணி உன்னை வைஷு கூட சேர்த்து வைக்கிறேன்” என்று கூறி கண் சிமிட்டினாள்.

அவன் மெல்லிய புன்னகையுடன், தேவை இல்லை.. நான் அவளை விரும்பலை.. எனக்கு பிடிச்ச பொண்ணு கூட தான் மரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க” என்றான்.

அவள் புருவம் உயர்த்தி மெல்லிய விசிலுடன்,ஸ் இட்! யாருடா அந்த துரதிர்ஷ்டசாலி?” என்று கேட்டாள்.

அவனது முறைப்பை அவள் எதிர்பார்க்க அவனோ தீவிரமான முகபாவனையுடன் அவளை நோக்கினான்.

அனைவரின் முகத்தையும் ஒரு நொடி பார்த்தவள் அவனிடம், என்ன விஷயம்?” என்று சிறு குழப்பத்துடன் வினவினாள்.

அவன் நிதானமாக, அந்த துரதிர்ஷ்டசாலி நீ தான்” என்றான்.

வாட்!!!!!!!!!!!!!!!!!!!!!” என்று பெரும் அதிர்ச்சியுடன் கேட்டபடி இரண்டடிகள் பின்னால் சென்றவள் மறுப்பாக தலையை ஆட்டியபடி அனைவரையும் பார்த்தாள்.

—————————————————————————————————————————————–

மருத்துவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்டு தியாகேஷ்வர் குழுவினர் அவனது திட்டப்படி கிளம்பினர்.

மருத்துவரின் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்த வீட்டிற்கு லாவண்யா சென்ற பத்து நிமிடங்களில் தியாகேஷ்வர் மருத்துவர் வீட்டிற்கு சென்றான்.

தன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு மருத்துவர், என்ன சார்?” என்று கேட்டார்.

தியாகேஷ்வர்,”மொட்டை மாடிக்கு போய் பேசலாமே!” என்றான். 

வெயிலா இருக்குமே” 

பரவாயில்லை.. எந்த வழி?”

மருத்துவர் குழப்பத்துடன் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஏற அவன் அவரை பின் தொடர்ந்தான்.

மேலே சென்றதும்,”சுபாஷினி மரணத்தை ரீ-இன்வெஸ்டிகேட் பண்ற ACP தியாகேஷ்வர் நான் தான்.. இப்ப பயப்படாம உண்மையை சொல்லுங்க.. எப்போ.. எங்க.. யாரு.. உங்க பொண்ணு ரேஷ்மாவை கடத்தினாங்க?” என்று கேட்டான்.

அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவன் சிறு புன்னகையுடன், சொல்லுங்க சார்.. அம் ஹியர் டு ஹெல்ப் யூ” என்று கூறியபடி கைப்பிடி சுவற்றோரம் சென்று வேம்பு மரத்தின் மறைவில் நின்று சாலையை நோட்டமிட்டான்.

அவர் சிறு பதற்றத்துடன், என் பொண்ண யாரும் கடத்தலை.. அவ டூர் போயிருக்கா” என்றார்.

சாலையிலிருந்து கவனத்தை அகற்றி சற்று நகர்ந்து மருத்துவரை பார்த்து, ஜஸ்ட் ரிலாக்ஸ் டாக்டர்.. நீங்க என்னிடம் இப்போ பேசுறது அவங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. மைக்ரோ-போன், கேமரா ஏதும் உங்க வீட்டுல செட் பண்ணி இருப்பாங்களோ என்ற சந்தேகத்தில் தான் உங்களை இந்த வெயில்ல மொட்டை மாடிக்கு கூட்டிட்டு வந்திருக்கிறேன்.. பயப்படாம தைரியமா சொல்லுங்க.. ரேஷ்மாவை நான் காப்பாத்துறேன்” என்று நீளமாக பேசினான்.

“….” 

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க டாக்டர்.. நான் கிளம்பியதும் அவங்க போன்ல ரொம்ப நேரமா என்ன பேசுனீங்கனு கேட்டா சமாளிக்குறது கஷ்டம்.. ஸோ சீக்கிரம் சொல்லுங்க” 

ரேஷ்மா கடத்தப்பட்டு இன்னியோட ஐந்து நாட்கள் ஆகுது.. டூருக்கு கிளம்புறதுக்கு அவ காலேஜ் போயிட்டு இருந்தப்ப தான் கடத்தியிருக்கணும்.. அவளையே அவளுடைய மேடமுக்கு போன் பண்ண சொல்லி உடம்பு சரியில்லைனு டூர் வரலைனு சொல்ல சொல்லி இருக்காங்க.. 

கடத்தினது யாருன்னு தெரியாது பட் சுபாஷினியை கொலை செஞ்சவங்களா தான் இருக்கணும்.. அவங்க………….” 

வெயிட்.. வெயிட்.. சுபாஷினி மரணம் கொலைனு சொல்றீங்க?” 

அதை யாரு செஞ்சாங்கனு கண்டு பிடிக்க தானே நீங்க வந்துருக்கீங்க!” 

கொலைனு சந்தேகம் இருக்கிறதே தவிர  ஊர்ஜிதம்  ஆகலை.. நீங்க எப்படி கொலைனு சொல்றீங்க?” 

அது” என்று அவர் தயங்க,

பொறுமையிழந்த தியாகேஷ்வர், ஆல்ரைட் அதை பற்றி அப்புறம் கேட்டுக்கிறேன்.. கடத்தினவங்க பற்றி வேற என்ன தெரியும்? அவங்க டிமான்ட் என்ன?” என்று கேட்டான். 

அவங்க நோக்கம் பணம் இல்லை.. சுபாஷினி மெடிகல் ரிப்போர்ட்ஸ்-ல ஒன்னு அவங்களா தயாரித்தது, அது போலினு நான் வெளிய சொல்லாம இருக்க தான் இந்த கடத்தல்” 

எந்த ரிப்போர்ட்?” 

சுபாஷினி டிப்ரெஷன்-ல இருப்பதால் தினமும் நைட் தூக்க மாத்திரை எடுத்துக்கிறதா இருக்கிற ரிப்போர்ட் போலி” 

ஹ்ம்ம்.. முதலில் இருந்தே இந்த தூக்க மாத்திரை விஷயம் எனக்கு சந்தேகம் தான்.. சரி.. அதை பற்றி அப்புறம் விவரமா பேசலாம்..

நான் கிளம்பியதும் அவங்க போன் பண்ணுவாங்க.. ரேஷ்மா நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் மீண்டும் விசாரிக்க வந்தேன்னு சொல்லுங்க.. வேற என்ன கேட்டேன்னு கேட்டா பஸ்ட் வந்த போலீஸ் கேட்டதை தான் நானும் கேட்டேன்னு சொல்லி சமாளிங்க..

அப்புறம் முக்கியமான விஷயம்.. எப்படியாவது ஏதாவது பேசி அவனை கட் பண்ண விடாம  ஒரு நிமிஷத்துக்கு மேல் பேசுங்க” என்று வேக வேகமாக பேசியவன் கைபேசியை எடுத்து லாவண்யாவை அழைத்தான்.

எஸ் சார்” 

லாவண்யா நீங்க உடனே மொட்டை மாடிக்கு வாங்க.. ஏதோ வேலை இருப்பது போல் வீட்டுக்காரம்மாவுடன் வாங்க.. நான் இப்போ கிளம்பப் போறேன்.. நான் கிளம்பியதும் தெருவில் இருக்கிற யாரு போன் பண்றானு  கவனமா வாட்ச் பண்ணி உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க” 

எஸ் சார்” என்று கூறி கைபேசியை அணைத்தாள்.

தியாகேஷ்வர் அவசரமாக கீழே இறங்க போக, மருத்துவர் அவசரமாக, சார் அவங்க ஆள், வண்டியில பழம் விற்கிற ஆளோனு எனக்கு டவுட்” 

எதை வைத்து சொல்றீங்க?” 

என்னை அவங்க ஆள் கண்காணிச்சுட்டே இருக்கிறதா சொன்னாங்க.. ரேஷ்மா கடத்தபட்டதுக்கு ரெண்டு நாள் முன்னாடி இருந்து தான் அந்த ஆள் இந்த தெருவில் இருக்கிறான்” 

ஆல்ரைட்.. பார்க்கலாம்.. நானும் எங்க ஆட்களும் அடுத்த தெருவில் தான் இருப்போம்” என்றவன் லாவண்யா இருந்த வீட்டின் மொட்டை மாடியை சுட்டிக்காட்டி, அங்க இருக்குறது எங்க ஆள் தான்.. இன்ஸ்பெக்டர் லாவண்யா.. பதட்டபடாம பேசுங்க.. முக்கியமான விஷயம் ஒரு நிமிஷத்திற்கு மேல் பேசணும் அப்போ தான் அவங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க முடியும்.. ஆல் தி பெஸ்ட்” என்று கூறி அவர் கையை குலுக்கி தோளை தட்டி கொடுத்துவிட்டு கீழே இறங்கி வேகமாக வெளியேறி காரில் கிளம்பினான்.

துணிகளை காய போடுவது போல் மொட்டை மாடிக்கு அந்த வீட்டுக்காரம்மாவுடன் வந்திருந்த லாவண்யா வேலை செய்யும் பாவனையுடன் தெருவில் இருந்த பலசரக்கு கடைக்காரன், தள்ளு வண்டியில் பழம் விற்பவன், இளநீர் விற்பவள் மற்றும் செருப்பு தைப்பவனையும் கவனிக்க தொடங்கினாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து தியகேஷ்வரை அழைத்தவள், சார்.. சின்ன குழப்பம்.. நீங்க கிளம்பியதும் ரெண்டு பேர் போன் பேசினாங்க” என்றாள். 

யாருலாம்?” 

பழ கடைக்காரனும், செருப்பு தைக்கிறவனும்” 

ஹ்ம்ம்.. செருப்பு தைக்கிறவனை விசாரிக்கலாம்” 

பட் சார்.. பழக்கடைக்காரன் ஒரு வாரமா தான் இங்க இருக்கிறதா சொல்றாங்க” 

தெரியும்” 

சார்.. நாம தப்பா மூவ் பண்ணா ரேஷ்மா உயிருக்கே ஆபத்தா முடியலாம்” 

தெரியும்.. நீங்க பழக்கடைக்காரனை விசாரிங்க, உங்களை லாரன்ஸ் சரவணன் ஜாயின் பண்ணிப்பாக.. நானும் தினேஷும் செருப்பு தைக்கிறவனை விசாரிக்கிறோம்” 

சார்… நீங்க……………….”

லாவண்யா” 

ஓகே சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் அந்த பழக்கடைக்கு சென்றாள்.

பழங்களை ஆராய்ந்தபடி, கடை புதுசா இருக்குதே! இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே!” என்றாள். 

ஆமா மா.. வந்து ஒரு வாரம் தான் ஆகுது” 

ஓ! உங்களுக்கு எந்த ஊரு அண்ணா?” 

இதே ஊரு தான் மா” 

இதே ஊருனா எங்க ணா?” என்று கேட்டபடி கைபேசியை எடுத்தவள் அதை பார்த்து, சை! சார்ஜ் சுத்தமா இல்லை! அண்ணா உங்க போன் கொஞ்சம் தரீங்களா? ஒரு முக்கியமான போன் பண்ணனும்” என்றாள். 

ஏன் மா! வீடு பக்கத்துல தானே இருக்குது.. வீட்டுக்கு போயே பேசிக்கலாமே!” 

என் வீடு பக்கத்துல தான் இருக்குதுனு உங்களுக்கு எப்படி தெரியும்?”

அவன் சிறு புன்னகையுடன், என்ன மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அந்த பச்சை கலர் வீட்டுக்கு வந்த” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போது தியாகேஷ்வர் கூறிய இரண்டு காவலர்கள் வந்தனர்.

 

அதே நேரத்தில் தியாகேஷ்வரும்  தினேஷும் செருப்பு தைப்பவனிடம் சென்றனர். அவன் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு,”என்னா சார் வேணும்?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர், டாக்டர் பொண்ண கடத்தியது யாரு?” 

கடத்தலா? எந்த டாக்டர்? என்ன.. என்ன சார் கேட்கிறீங்க?”

தியாகேஷ்வர் கைகளை காள் சட்டை பையினுள் வைத்துக்கொண்டு தினேஷை பார்க்க, தினேஷ் செருப்பு தைப்பவன் சட்டையை கொத்தாக பற்றி எழுப்பி சுவற்றுடன் அவனை சாய்த்து தூக்கி கன்னத்தில் கடுமையாக ஒரு அறை விட்டான்.

அவன் வலியில் துடிக்க, தியாகேஷ்வர் அவனை தீர்க்கமாக பார்த்தான். தினேஷ் மீண்டும் அடிக்க கையை ஓங்க, அவன், சொல்லிடுறேன் சார்.. சொல்லிடுறேன்” என்று அலறினான்.

தினேஷ் அவனது சட்டையிலிருந்து கையை எடுக்க, அவன் பொத்தென்று கீழே விழுந்தான்.

உன் மொபைல் கொடு” என்று அதட்டிய தியாகேஷ்வர், கைபேசியை வாங்கியபடி, அவனை பார்த்துக் கொண்டே, தினேஷிடம், லாவண்யாக்கு இன்பார்ம் பண்ணு” என்றான்.

————————————————————————————————————————————–

பெரும் அதிர்ச்சியுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தன்யா சேகர் ஏதோ கூற வரவும் தன் கையை உயர்த்தி அவனை தடுத்து கோபத்துடன் தந்தையை பார்த்து, இதுக்காக தான் என்னை வலுகட்டாயமா கூட்டிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள்.

சண்முகம் பதில் கூற திணற, கணேசன், நான் தான் மா சொன்னேன்” என்றார்.

கீர்த்தன்யா கண்களை மூடி திறந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, சாரி மாமா.. எனக்கு இஷ்டமில்லை” என்றாள்.

சேகர், ஏன்?” என்று வினவ,

கோபமாக திரும்பியவள் பல்லை கடித்துக்கொண்டு, நீ என்னை லவ் பண்றியா? உண்மையை சொல்” என்றாள். 

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கீர்த்தி” 

நான் கேட்டதுக்கு பதில்” என்று அவள் உறுதியுடன் கூற,

அவன், அது….” என்று திணறினான். 

நீ இரக்கப்படுற அளவுக்கு என் நிலைமை மோசமில்லை” 

சேகர் அவசரமாக, அப்படி இல்லை கீர்த்தி.. நான் விருப்பத்துடன் தான்……………” 

விருப்பத்துடன் தான் தியாகம் செய்றியா?”

கணேசன், இது லவ் மரேஜ் இல்லை மா.. அரேஞ்டு மரேஜ்.. இந்த கல்யாணம் நடந்தா எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம்” என்றார்.

கல்யாணம் பண்ணிக்க போற எங்க ரெண்டு பேரை தவிர” என்றாள்.

சேகர், அப்படி ஏன்………………….” என்று ஆரம்பிக்க,

அதே நேரத்தில் சண்முகம், ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?” என்று கேட்டார். 

நான் சேகரை நண்பனா தான் பார்க்கிறேன்”

நண்பனாக தானே, சகோதரனா இல்லையே!” என்று கூறிய தந்தையை முறைத்தாள்.

அமுதா, அவரை ஏன்டி  முறைக்குற? நாங்க எல்லோரும் முடிவு பண்ணிட்டோம்.. இதில்……..” 

நீங்க முடிவு பண்ணா?” என்று அவள் அலட்சியத்துடன் கூற, அவர் சற்று குரலை உயர்த்தி, கீர்த்தி” என்றார்.

சாந்தி மெல்லிய குரலில், உன் நல்லதிற்கு தானே சொல்றோம்.. ஏன்டாமா வேண்டாம்னு சொல்ற?” என்று வினவ,

அதே நேரத்தில், கணேசன், சேகர் உன்னை நல்லா பார்த்துப்பான் மா” என்றும்,

சண்முகம், இதுவரை அப்பா உன்னிடம் எதையும் கேட்டதில்லை கீர்த்தி.. இப்போ கேட்கிறேன்.. இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கோ” என்றும் கூற,

அய்யோ!” என்றபடி தலையை பிடித்துக் கொண்டவள் அடுத்த நொடியே கோபத்துடன் சேகர் அருகே சென்று அவனது சட்டை காலரை பிடித்து உலுக்கி, எல்லாம் உன்னால் தான்.. உன்னால் தான்.. ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச?”என்று கத்தினாள்.

அவள் கத்தி ஓய்ந்ததும் அவளது கையை பற்றி விலக்கிய சேகர் மென்மையாக, உனக்கு என்னாச்சு கீர்த்தி?” என்று வினவினான்.

அவன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டு அவள் அமைதியாக தலை குனிந்தபடி நிற்க, அவள் தலையை மென்மையாக சண்முகம் வருட, கலங்கிய விழிகளுடன் தந்தையை நிமிர்ந்துப் பார்த்தாள்.

என்னடா! அப்பா உன் நல்லதுக்கு தானே பண்ணுவேன்” 

ப்ளீஸ் பா.. இந்த கல்யாணம் வேண்டாம்” என்று அவள் கெஞ்சும் குரலில் கூறினாள்.

அப்போ வேற மாப்பிள்ளை பார்க்கவா?” 

எனக்கு கல்யாணமே வேண்டாம் பா ப்ளீஸ்” 

இப்படி சொன்னா எப்படிடா? நீ எங்களுக்கு ஒரே………………….” 

ஒரு முறை என் கல்யாண பேச்சை எடுத்து நாம இழந்தது போதாதா ப்பா? என்னை இப்படியே விட்டுருங்க பா ப்ளீஸ்” என்று கண்ணீருடன் பேசியவள் வேதனையுடன் அறையினுள் சென்றாள்.

அவளது இறுதி கூற்றில் அனைவரும் அதிர்ச்சியுடன் சண்முகத்தை பார்க்க, அவர் மனைவியை பார்த்தார். அமுதா நம்ப முடியாத அதிர்ச்சியுடன் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார். 

சிந்தனை தொடரும்…

Advertisement