Advertisement

குறிப்பு:- தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழமைகளே. இனி இந்த கதையின் பதிவுகளை காலை 10.30மணிக்கு போடுறேன்..

தியாகேஷ்வர் மின்வெளிக் குற்றபிரிவியல்(Cyber crime)  அலுவலகம் சென்று கொண்டிருந்த போது அவனது சிந்தனை பின் நோக்கி சென்றது. நித்தமும் தன் சிந்தனையில் குடியிருப்பவளை இரண்டாவது முறை சந்தித்ததைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.

தியாகேஷ்வரின் நண்பன் அவனது தமயனுடன் சேர்ந்து வீடு ஒன்று வாங்கியிருந்தான். வேலை பழு காரணமாக நண்பன் வீட்டு கிரகப்ரவேஷ விழாவிற்கு செல்ல முடியாத தியாகேஷ்வர் நண்பனின் புது வீட்டிற்கு ஒரு நாள் சென்றான்.

அவன் சென்ற சில நிமிடங்களில் மழை வலுவாக பெய்தது.

பேச்சின் நடுவே நண்பன், உன் வருகைக்கும் மழைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு டா.. அடிக்கடி வீட்டுக்கு வா.. அப்படியாவது மழை பெய்யட்டும்”  என்றான். 

எப்பவாவது வந்தா தான் மழை பெய்யும்” என்று கூறியபடி தியாகேஷ்வர் ஜன்னல் வழியாக மழை நின்றுவிட்டதா என்று பார்த்தான்.

வெளியே பார்த்தவன் இதழில் சிறு புன்னகை அரும்பவும்,

நண்பன், என்ன டா?” என்று வினவியபடி ஜன்னல் அருகே வந்தான்.

வெளியே தூரலில் நனைந்தபடி அவள்(தியாகேஷ்வர் மனதை கவர்ந்தவள்) ஒரு சிறுவனுடன் ரோட்டோரம் சிறு ஓடை போன்று ஓடிய மழை நீரில் காகிக்த கப்பல் விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த காட்சியை புன்னகையுடன் பார்த்தபடி தியாகேஷ்வர், எனக்கும் மழைக்கும் சம்பந்தம் இருக்குதோ இல்லையோ உன் பக்கத்து வீட்டுக்கும் மதர் தெரசாவிற்கும் சம்பந்தம் இருக்குது” என்றான்.

நண்பன் சிறு அதிர்ச்சியுடன் அவளையும் தியாகேஷ்வரையும் பார்த்தான். அப்பொழுது  சிறுவன் அவள் காதில் ஏதோ கூற, அவள் மெதுவாக நிமிர்ந்து ஜன்னலை பார்த்தாள். ஆனால் அதற்குள் சுதாரித்து நண்பனை இழுத்துக்கொண்டு உள்ளே சற்று நகர்ந்த தியாகேஷ்வர், நண்பனின் முகத்தை பார்த்து,”எதுக்கு இப்படி பார்க்கிற?” என்று கேட்டான். 

இங்க வந்ததில் இருந்து அந்த பொண்ண எங்கேயோ பார்த்திருக்கோமே! எங்கனு யோசிச்சுட்டே இருந்தேன்.. நீ பார்த்ததும் சொல்லிட்ட!” 

அது தான் போலீஸ் மூளை”

அது மட்டும் தானா?” என்று சிறு சந்தேகத்துடன் நண்பன் வினவ,

சிறு ஆச்சரியத்துடன் பார்த்த தியாகேஷ்வர், வேற என்ன?” என்றான்.

சரி.. இப்போ எதுக்கு உள்ள வந்த?” 

அது..” 

பயமா?” 

பயமா!” என்று புன்னகைத்தவன், எனக்கென்ன பயம்?” என்று கூறியபடி உப்பரிகை சென்று சுவற்றில் சற்று சரிவாக சாய்ந்தபடி, கைகளை முன்பக்கம் கட்டிக் கொண்டு அவளை பார்க்கத் தொடங்கினான்.

சில நொடிகளில் அந்த சிறுவன் மீண்டும் அவள் காதில் ஏதோ கூற, அவள் நிமிர்ந்து உப்பரிகையைப் பார்த்தாள். இந்த முறை விலகாமல் தியாகேஷ்வர் புன்னகையுடன் அவளது பார்வையை எதிர்கொள்ள, அவள் அவனை முறைத்துவிட்டு சிறுவனின் கையை பற்றிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள்.

தியாகேஷ்வர் மென்னகையுடன் நின்று கொண்டிருக்க அவனது தோளில் கை வைத்து அழைத்த நண்பன் சிறு புன்னகையுடன் புருவம் உயர்த்தி என்ன?’ என்று வினவ, தியாகேஷ்வர் மாறாத மென்னகையுடன் “நத்திங்” என்று கூறியபடி கிளம்பினான்.

நண்பன் புன்னகையுடன்,ஸோ.. இனி அடிகடி மழை பெய்யும்” என்றான். 

நண்பனை திரும்பிப் பார்த்தவன் பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்துவிட்டு சென்றான்.

வீட்டிற்கு சென்ற அவனது மனதை முழுவதும் அவளே ஆக்கிரமிக்கவும், சுய ஆராய்ச்சியின் முடிவில் தன் மனம் அவளை விரும்புவதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.

இதுவரை எந்த பெண்ணையும் ஆர்வத்துடன் கூட பார்க்காத நானா பெயர் அறியாத ஒரு பெண்ணை முதல் சந்திப்பிலேயே விரும்புறேன்?

அதுவும் அவளிடம் பேசியது கூட இல்லை!

அவள் எப்படி பட்டவளோ! அவள் வயதென்ன

அவள் வேறு யாரையும் விரும்புறாளாஅல்லது,  அவளுக்கு திருமணம் ஏதும் நிச்சயம் ஆகியிருந்தா

இப்படி எதுவுமே தெரியாதே!

ச்ச்.. மகி கிட்ட அட்லீஸ்ட்  பெயரையாவது கேட்டுட்டு வந்திருக்கலாம்!என்று தனக்குத் தானே பேசியவன் புன்னகையுடன்,

ஹ்ம்ம்.. எங்க போய்ட போறா! பார்த்துக்கலாம் என்று சமாதானம் செய்து அவள் நினைவுகளுடன் புன்னகையுடன் உறங்கினான்.

‘எங்கே போய்ட போறா!’ என்று அலட்சியமாக தனக்குத் தானே கூறியவனால் அவளை பற்றி அறிந்துக் கொள்ளாமல், அவளைப் பார்க்காமல் ஒரு வாரம் கடத்துவதே பெரும் பாடாக இருக்க, அடுத்த வார இறுதியில் நண்பன் வீட்டிற்கு சென்றான்.

அவனை விரிந்த புன்னகையுடன் வரவேற்ற நண்பன், இப்போ தான் உன் ஆள் மொட்டை மாடிக்கு போறதை பார்த்தேன்” என்றான்.

என்ன தான் தியாகேஷ்வரின் மனதை அறிந்திருந்தாலும் தன் கூற்றிற்கு சிறு  எதிர்ப்பு  தெரிவிப்பான் என்று நண்பன் நினைக்க, அவனோ பதில் ஏதும் கூறாமல்  மொட்டை மாடிக்கு விரைந்தான். நண்பன் சிறு அதிர்ச்சியுடன் இவனது வேகத்தை பார்த்துவிட்டு, பின் புன்னகையுடன் உள்ளே சென்றான்.

தியாகேஷ்வர் படிகளில் ஏறிக் கொண்டிருந்த போது,

ஏன் லேட்? உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா?

அதுவும் அம்மாக்கு தெரியாம ஸ்னக்ஸ் எடுத்துட்டு, ஜண்டு பாமுக்கு தெரியாம வரதுக்குள்ள.. ஊப்ஸ்.. 

ஆனா நீ என்னடானா இவ்வளவு மெதுவா வர..” என்று அவளது குரல் செல்ல கோபத்துடன் கேட்க, தியாகேஷ்வர் பெரிதும் அதிர்ந்தான்.

மேலே செல்ல இன்னும் மூன்று படிகட்டுகளே இருக்க மேலே செல்லலாமா வேண்டாமா என்று தயங்கியவன், ஒரு முடிவுடன் மனதை திடபடுத்திக் கொண்டு படிகளில் மெதுவாக ஏறினான்.

லேட்டா வந்தல.. ஸோ உனக்கு ஸ்னக்ஸ் கட்” என்று அவளது செல்ல கோபம் தொடர்ந்தது.

மேலே சென்று, அந்த காட்சியை பார்த்தவன் சத்தமாக வாய்விட்டு சிரித்தான். அவனது சிரிப்பு சத்தத்தில் சட்டென்று அவன் பக்கம் திரும்பியவள் கோபமாக முறைத்தாள்.

அவனது சிரிப்பு நிற்காமல் நீடிக்கவும், அவள் கோபத்துடன், ஹலோ மிஸ்டர்! இப்போ எதுக்கு பேய் மாதிரி சிரிக்குறீங்க?” என்று கேட்டாள்.

அவள் பேசிவிட்ட மகிழ்ச்சியில், சிரிப்பை சிறிது அடக்கிக் கொண்டு, பேய் சிரிப்பதை பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டான்.

அவள் முறைப்புடன், அதான் இப்ப பார்க்கிறேனே!”

ஸோ.. இதுக்கு முன்னாடி பேய் சிரிப்பதை பார்த்தது இல்லை”

அவள் கோபத்துடன், “பேய் சிரிப்பு பற்றிய ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு எதுக்கு சிரிச்சீங்கனு சொல்லுங்க” என்றாள்.

அவன் மென்னகையுடன், சிரிப்பது குற்றமா?” 

பே.. ஹ்ம்ம்.. அடுத்தவங்களை பயமுறுத்துற மாதிரி சிரிப்பது குற்றம்” 

என் சிரிப்பில் நீங்க பயந்துட்டீங்களா? அச்சச்சோ!” என்று அவன் போலியாக பரிதாபப் படுவது போல் கூற,

அவள் தலையை சிலுப்பிக் கொண்டு, நான் ஒன்னும் பயப்படலை” என்றாள். 

அப்புறம் என்ன?” 

என் பிரெண்ட் பயந்திருச்சு”

அவன் மீண்டும் சிரிக்க, அவள் கடுப்புடன், ஏன்! காக்கா பிரெண்ட்டா இருக்கக் கூடாதா? உங்க பே.. ஹ்ம்.. உங்க வெடி சிரிப்புக்கு பயந்து என் பிரெண்ட் சாப்பிடாம போய்டுச்சு.. பாவம் அது..” என்று சுருதி இறக்கி வருத்தப்பட்டவள் மீண்டும் சுருதியை சற்று ஏத்தி, நீங்க ஏன் அப்படி சிரிச்சீங்க?”என்று வினவினாள்.

[இப்பொழுது புரிந்ததா தியாகேஷ்வர் ஏன் அப்படி சிரித்தான் என்று!  அவன் படிகளில் ஏறிக் கொண்டிருந்த பொழுது அவள் பேசியது, கோபம் கொண்டது அனைத்தும் ஒரு காகத்திடம்]

எப்படி சிரிச்சேன்?”

அவள் மீண்டும் கோபத்துடன் முறைக்கவும், அவன் கைகளை நீட்டி, சரி.. சரி.. தெரியாம சிரிச்சுட்டேன்.. சாரி..” என்றான்.

அவள் உதட்டை இடதுபுறம்  சற்று மேலே தூக்கி  தோளை குலுக்க, அவன் அதை ரசித்தபடி, “உங்க நேம் என்னனு தெரிஞ்சுக்கலாமா?” என்று வினவினான்.

அவள் மீண்டும் கோபமாக முறைக்க தொடங்க, அப்பொழுது, இங்க என்ன பண்ணிட்டு இருக்……………” என்று கேட்டபடியே வந்த அந்த சிறுவன் தியகேஷ்வரை பார்த்ததும் பேச்சை நிறுத்தி அவனை முறைத்துவிட்டு அவளை இழுத்துக்கொண்டு கீழே சென்றான்.

கீழே செல்வதற்கு முன் திரும்பி பார்த்தவள் தியாகேஷ்வருக்கு அழகு காட்டிவிட்டு செல்ல, அந்த காட்சி அவன் மனதினுள் பசுமரத்தாணி போல் பதிந்தது.

புன்னகையுடன் தலையை கோதியபடி சுற்றிப் பார்த்தவன் முதல் முறையாக இயற்கை அழகை ரசித்தான்.

 

 

சார்.. நீங்க சொன்ன இடம் வந்திருச்சு” என்ற தானி ஓட்டுநரின் குரலில் சுயஉணர்வு பெற்றவன் தலையை சிறிது உலுக்கிக்கொண்டு கட்டணத்தை கட்டிவிட்டு இறங்கவும், தினேஷ் மற்றும் லாவண்யா வரவும் சரியாக இருந்தது.

தினேஷ் ஒரு வணக்கம் வைத்து, அந்த அட்ரெஸ்க்கு ரெண்டு கான்ச்டபில்ஸ் அனுப்பிட்டேன் சார்” என்றான். 

ஹ்ம்ம்.. தெரியும்.. அவங்க வந்த பிறகு தான் கிளம்பினேன்” 

சார்………..” என்று தினேஷ் ஏதோ கேட்க வர,

தியாகேஷ்வர், முதல்ல சுபாஷினி கேஸை பார்ப்போம் தினேஷ்” என்று கூறியபடி வேகமாக உள்ளே செல்ல, இருவரும் அவனை தொடர்ந்தனர்.

மின்வெளிக் குற்றபிரிவியல் அலுவலகத்தின் உள்ளே ஒருவர் விரைப்புடன் வணக்கம் வைத்து, குட் அஃப்டர்நூன் சார்.. லொகேஷன் ட்ரெஸ் பண்ண முடியலை.. ஒரே ஒரு முறை காள் பண்ணி 37 செகண்ட்ஸ் பேசினாங்க.. பேசியதும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க” என்றார்.

தியாகேஷ்வர், அந்த காள் ப்ளே பண்ணுங்க” என்றான். 

எஸ் சார்” என்று கூறி அவர் பதிவு செய்திருந்ததை ஓட்டினார்.

 

 

மருத்துவர், ஹலோ”

ஒரு கனத்த ஆண் குரல், போலீஸ் கிட்ட எங்களை பற்றி சொன்னியா?” 

இல்லை” 

ஹ்ம்.. சொன்னபடி நடந்தா உன் பொண்ணு உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காது” 

என் பொண்ண எப்ப விடுவீங்க?”

கேள்விகள் நாங்க தான் கேட்போம்.. அந்த போலீஸ் என்ன கேட்டான்?” 

ரேஷ்மாக்கும் சுபாஷினிக்கும் பழக்கம் எப்படி? சுபாஷினி இங்க வருவாளா? இப்படி தான் கேட்டார்.. ரேஷ்மா டூர் போயிருக்கானு சொன்னதும் அவ மொபைல் நம்பர் வாங்கிட்டு கிளம்பிட்டார்”  

எதுக்கு திரும்பி வந்தான்?” 

அது.. அவர் செல்லை மறந்து வச்சுட்டு போய்ட்டார்.. அதை எடுக்……………….” 

சரி.. தேவைனா நாங்களே திரும்ப காள் பண்றோம்” என்று கூறி அழைப்பை துண்டித்திருந்தான்.

டேப் நின்றதும் தினேஷ், சார்.. டாக்டர் வீட்டுக்கு பக்கத்துலேயே அவங்க ஆள் ஒருத்தன் இருக்கணும்.. அதான் நான் வந்ததை துல்லியமா சொல்றான்.. பட் நான் நோட்டீஸ் பண்ணதுல சந்தேகப் படுற மாதிரி யாரும் இல்லை” என்றான்.

தியாகேஷ்வர், ஹ்ம்ம்..” என்று யோசனையுடன் கூற,

லாவண்யா, நீ எதுக்கு மறுபடியும் போன?” 

அதான் டாக்டர் சொன்னாரே!”

லாவண்யா சிறு முறைப்புடன், அவர் அவருக்கு தெரிந்ததை சொன்னார். நான் கேட்டது, நீ எதுக்கு மறந்த மாதிரி மொபைலை வச்சுட்டு திரும்ப உள்ள போன?”

தினேஷ் சிறிது புருவம் உயர்த்த, அவள், “என்ன? உனக்கு மட்டும் தான் மூளை இருக்குதுனு நினைப்பா?” என்றாள்.

அவன் சிறு புன்னகையுடன், தேங்க்ஸ்” என்று கூற, அவள் எதற்கு என்பது போல் பார்க்கவும்,  எனக்கு மூளை இருக்குனு ஒத்துகிட்டதுக்கு.. பட் உனக்கு?” என்று கேட்டு நிறுத்தினான்.

அவள் முறைக்க அவன் புன்னகைத்தான்.

மின்வெளிக் குற்றபிரிவியல் பிரிவை சேர்ந்தவர் தியாகேஷ்வரிடம், எப்படி சார் இவங்களை சமாளிக்குறீங்க? இவங்க சண்டையை நீக்கவே நேரம் சரியா இருக்கும் போல.. பின்ன எப்படி கேஸ் சால்வ் பண்றது?” என்று கேட்டார்.

தியாகேஷ்வர் சிறிது புன்னகைத்துவிட்டு, தீவிரமான முகபாவனையுடன்  தினேஷை பார்க்க, அவன் தீவிரமான குரலில்,எனக்கு டாக்டர் மேல் டவுட் இருந்ததால் நான் போனதும் யாருக்காவது போன் பண்ணுறாரானு தெரிஞ்சுக்க என் மொபைலை ரெக்கார்டிங் மோடில் வைச்சுட்டு வெளியே போயிட்டு, த்ரீ மினிட்ஸ் கழிச்சு உள்ள போனேன் சார்” என்று சொல்லி முடிக்கவும்,

லாவண்யா, “நல்ல ஐடியா தான் பட் அவங்க தான் டாக்டரை காண்டக்ட் பண்றாங்க அண்ட் நீ தெருவைவிட்டு வெளியே போனதுக்கு அப்புறம் தான் அந்த ஆள் இன்பார்ம் பண்ணியிருப்பான்” என்றாள். 

எக்ஸக்ட்லி” என்று தினேஷ் கூற, தியாகேஷ்வர் மின்வெளிக் குற்றபிரிவியல் பிரிவை சேர்ந்தவரை பார்க்க, அவர் கண்களால் ஆச்சரியம் கலந்த பாராட்டை தெரிவித்தார்.

லாவண்யா, இப்ப என்ன சார் பண்ண போறோம்?” என்று வினவ,

தினேஷ் சந்தேகத்துடன், சார்! டாக்டர் ப்ளே கூட பண்ணலாமே!” என்றான். 

லாவண்யா, என்ன?”

தினேஷ், “அவர் தப்பிக்கிறதுக்காக அவரே ப்ளே பண்ணலாமே! மகளை மறைச்சு வச்சு விளையாடலாமே!”

லாவண்யா, எதில் இருந்து தப்பிக்க அவர் இப்படி பண்ணனும்?”

தியாகேஷ்வர், தினேஷ் சொல்றது போல் நடக்க வாய்ப்பு இருக்குது பட் அவர் குரலை வைத்து பார்க்கிறப்ப அது நடிப்பா தெரியலை”

தினேஷ் சிறு புன்னகையுடன், இப்பலாம் கிரிமினல்ஸ் நடிகர்களை விட சூப்பரா நடிக்கிறான்களே சார்”

தியாகேஷ்வர், ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்றான் மென்னகையுடன்.

லாவண்யா, அடுத்து என்ன ப்ளான் சார்?” 

நான் போலீஸ் டிரஸ்-லயும் நீ மஃப்ட்டிலயும் தனி தனியா கிளம்புறோம்.. நீ டாக்டர் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருக்குற வீட்டுக்கு போற.. நீ கிளம்பின கொஞ்ச நேரத்தில் நான் கிளம்பி…………. என்ன சந்தேகம்?” 

நீங்க மட்டும் போலீஸ் டிரஸ்?” 

போலீஸ் வந்துட்டு போறது அவங்களுக்கு தெரியனும்.. அப்போ தான் திரும்ப போன் வரும்.. நீ அங்க போன பிறகு போன்ல இன்ஸ்ட்ரக்சன்ஸ் சொல்றேன்.. தினேஷ் நீ சரவணன், லாரன்ஸ் கூட்டிட்டு டாக்டர் வீட்டு தெருவுக்கு அடுத்த தெருவில் வெயிட் பண்ணு”

எஸ் சார்” என்று இருவரும் கூறினர்.

Advertisement