Advertisement

இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீண்டிறாத சேகர் வண்டியை ஓட்டியபடி இடதுபுறம் திரும்பி கீர்தன்யாவை பார்த்தவன் வண்டியை சட்டென்று நிறுத்தினான். வண்டி நின்றதும் கண் திறந்த கீர்தன்யா குறையாத எரிச்சலும் கோபமுமாக, “என்ன?” என்றாள்.

சேகர் சிறு பதற்றத்துடன், “உன் கழுத்துல இருந்து ரத்தம் வருது கீர்த்தி.. ஹாஸ்பிடல் போக……………………”


“ஒரு இழவும் வேணாம்.. வண்டியை முதல்ல கிளப்பு”

அவளது கத்தலில் சிறு தயக்கத்துடன், “கீர்த்தி ப்ளீஸ்.. செப்டிக் ஆகிற போகுது.. ப்ளீஸ்”


“இன்னொருதடவ இந்த ப்ளீஸ் சொன்ன! நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. ஒழுங்கா வண்டியை எடு”

இப்பொழுது சேகர் தயக்கம் நீங்கி உறுதியுடன், “உன் காயத்தை கவனிக்காம நான் கிளம்ப மாட்டேன்.. ஹாஸ்பிடல் கண்டிப்பா போகணும்”

“வண்டில பஸ்ட் ஏட் பாக்ஸ் இருக்குதா?”


“ஹ்ம்ம்.. பட்………………”

கீர்தன்யா கையை உயர்த்தி அவனது பேச்சை நிறுத்தி, “அதை எடுத்து குடுத்துட்டு நீ வண்டியை கிளப்பு” என்றாள்.


“அது எப்படி போதும்.. ஹாஸ்………………….”


“டாம்மிட் நான் ஒன்னும் செத்து போய்ட மாட்டேன்.. இப்போ நீ வண்டியை எடுக்கலை நான் கண்டிப்பா பஸ்ல போய்டுவேன்” என்று அவள் கிட்டதிட்ட கர்ஜிக்க, இந்த புதிய கீர்தன்யாவை பார்த்து அவன் மனம் அதிர்ந்ததை விட அவள் கூறிய வார்த்தைகளால் ஏற்பட்ட வலியில் மறுபேச்சின்றி மருந்தை எடுத்து கொடுத்துவிட்டு அமைதியாக வண்டியை கிளப்பினான். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

————————————————————————————————————————————–

தினேஷ் கொடுத்த முகவரிக்கு தியாகேஷ்வர் சென்ற போது,
“என்ன ணா நீ.. இன்னைக்கு காலைல தான் வந்த, அதுக்குள்ள ஊருக்கு கிளம்பனும்னு சொல்ற? நீ வெளிய போயிட்டு வந்ததில் இருந்தே சரியில்லை.. என்னாச்சு ணா?” என்று ஒரு பெண் குரல் கேட்டது.

அவன், “ஒன்னும் இல்லைமா.. ஒரு முக்கியமான போன் வந்துது.. அதான் உடனே கிளம்பனும்னு சொல்றேன்.. மச்சான் கிட்ட சொல்லிடு.. நான் கிளம்புறேன்” என்று கூறி வெளியே வந்தவன் தியாகேஷ்வரை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றான்.

தியாகேஷ்வர் கோபத்தை அடக்கிக் கொண்டு தீர்க்கமாக அவனையே பார்க்க, அந்த பெண், “யாரு சார் நீங்க?” என்று வினவினாள்.

தியாகேஷ்வர் அவன் மீதிருந்து பார்வையை விளக்காமல், “உன் அண்ணனையே கேள்” என்றான்.

அவன் தன்னை சுதாரித்துக் கொண்டு குரலை சற்று உயர்த்தி, “யாரு சார் நீங்க? என்ன வேணும்?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர் கைகளை கட்டிக் கொண்டு, “என்னை உனக்கு தெரியாது?”

“என..க்கு தெரியாது”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை பார்த்து ஏன் பேயை கண்ட மாதிரி பயந்து ஓடின?”

“அது.. அது.. அக்சிடென்ட் ஆகாம தப்பிச்ச பயம்”

“அப்போ உனக்கு என்னை தெரியாது”

“தெரியா………………………..” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் அடி இடியென விழ, அவன் தடுமாறி கீழே விழுந்தான்.

அவனது தங்கை பதறி அவனை தாங்கி பிடித்தபடி கோபமாக, “யார் சார் நீங்க? முதல வெளிய போங்க” என்றாள்.

தியகேஷ்வர் இடது கையால் அவனது சட்டையை கொத்தாக பிடித்து தூக்க, அவனது தங்கை தியாகேஷ்வரின் கையை விடுவிக்க முயற்சி செய்து தோற்றுப் போனவளாய், “ஐயோ.. யாராது உதவிக்கு வாங்களேன்” என்று கத்த தொடங்கினாள்.

அக்கம் பக்கத்தில் இருந்த சில ஆண்கள் கூடிவர, அதில் ஒருத்தன், “யார் சார் நீங்க? முதல கையை எடுங்க” என்று கறாராக கூறினான்.

தியாகேஷ்வர் அவனது சட்டையில் இருந்து கையை எடுக்காமல் வலது கையால் தனது பணப்பையை(Purse) எடுத்து நிட்டினான்.

குரல் கொடுத்த ஆள் அதை பிரித்து பார்த்து சிறு அதிர்ச்சியுடன், “அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ்” என்று கூறியபடி பின் வாங்க, கூட்டம் கலைந்தது.

அவன் தங்கை அதிர்ச்சியுடன், “என்ன ணா இது?” என்று கண்ணீர் குரலில் வினவினாள்.

அவன், “விடுங்க சார்.. நான் இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததும் இல்லை.. எந்த தப்பும் பண்ணலை” என்று கூறியபடி விடுபட முயற்சித்தான்.

தியாகேஷ்வர் கோபத்துடன் பலமாக அவன் கன்னத்தில் அரைய, அவன்,
“இந்த அடிக்குற வேலை எல்லாம் வேண்டாம்..” என்றான்.

“பின்ன கொலை செஞ்சவனை கொஞ்ச சொல்றியா?”

அவன் தங்கை “கொலையா!” என்று பெரும் அதிர்ச்சியுடன் தரையில் அமர,

அவன், “கொலை..யா! நான்.. நான் எந்த தப்பும் செய்யலை.. சும்மா ஏதோ ஒரு கேஸை க்ளோஸ் பண்ண என்னை மிரட்டாதீங்க சார்” என்றான்.

“நீ கொலை செய்தியா இல்லையா என்பது நான் விசாரிக்குற விதத்தில் தெரியும்” என்று கூறியபடி அவனை இழுத்துக் கொண்டு நடக்க தொடங்க, அவன் அவசரமாக,
“முடிஞ்சு போன கேஸுக்கு இப்போ என்ன சார் விசாரணை? வாரன்ட் இருக்கா?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர் புன்னகையுடன் அவனை திரும்பி பார்த்து, “முடிஞ்சு போன கேஸ்னு நான் சொல்லவே இல்லையே” என்றான்.

“அது அது.. நான்……………..”

“ஒழுங்கா உண்மையை சொல்லி அப்ரூவல்லா மாறினா தண்டனை குறையும்”

“நான் தான் எந்த தப்பும் செய்யலைனு சொல்றேனே சார்”

“உன் தங்கை ஏற்கனவே பயந்து போய் இருக்கா.. இப்போ உண்மையை சொல்றியா இல்லை கொலையில் உன் தங்கைக்கும் பங்கு இருக்குனு சொல்லி அவளை ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போகவா?”

அவள் கலவரத்துடன் நிமிர்ந்து பார்க்க, அவன், “நான் தான்……………..”

தியாகேஷ்வர் கையை உயர்த்தி அவனது பேச்சை நிறுத்தி, “நீ உண்மையை சொல்லலை, உன்னுடன் சேர்த்து உன் குடும்பத்தையே அழிச்சுடுவேன்.. என்ன பார்க்குற! உன் மச்சான் வேலை பார்க்கிற இடத்தில் லஞ்சம் வாங்கியதா சொல்லி அவனை உள்ள தள்ள முடியும்.. உன் தங்கை மேல் என்னென்னவோ(ஓர் அழுத்தத்துடன் கூறினான்) கேஸ் பைல் பண்ண முடியும்” என்றவன் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு புருவம் உயர்த்தியபடி, “என்ன எப்படி வசதி?” என்று வினவினான்.

தியாகேஷ்வரின் இந்த மிரட்டலில் அவன் ஆடித்தான் போனான். சோர்வுடன் தியகேஷ்வரை நிமிர்ந்து பார்த்தவன், “நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார்.. என் தங்கை குடுபத்தை ஒன்னும் பண்ணிடாதீங்க” என்றான்.

அவன் தங்கை வாய்விட்டு அழ தொடங்கினாள்.

அவன் மெல்லிய குரலில், “சார் உள்ள போய் பேசலாமா?” என்று கெஞ்சுவது போல் கேட்கவும் அவன் தங்கையை பார்த்த தியாகேஷ்வர், “ஹ்ம்ம்” என்று கூறி உள்ளே சென்றான்.

தியாகேஷ்வர், “நீ யார்? கூலிப்படையை சேர்ந்தவனா?” என்று கேட்டான்.

அவன் இல்லை என்று தலையை ஆட்டினான்.

“சக்கரபாணியை எப்படி தெரியும்? அவனிடம் வேலை பார்த்தியா?”

அவன் மீண்டும் இல்லை என்று தலையை ஆட்டி, “சக்கரபாணியை எனக்கு தெரியாது.. அவனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை” என்றான்.

தியாகேஷ்வர் சிறு  குழப்பத்துடன், “அப்போ யாருக்காக கொலை செய்த?” என்று கேட்டான்.

அவன் மெல்ல உண்மையை கூறத் தொடங்கினான். அவன் கூறியதை தன் கைபேசியில் பதிவு செய்த தியாகேஷ்வர், அவன் கூறி முடித்ததும் இருக்கையை விட்டு எழுந்தபடி, “எப்போ கூப்பிட்டாலும் வந்து இந்த உண்மையை சொல்லணும்..
நீ என்னிடம் உண்மையைச் சொன்ன விஷயம் உன் முதலாளிக்கு தெரியக் கூடாது.. என்னிடம் இருந்து தப்பிச்சு போய்டலாம்னு கனவு காணாதே..
உன் தங்கை குடும்பத்தை என் ஆட்கள் கவனித்துக் கொண்டே இருப்பாங்க..
உன் தங்கை குடும்பம் இந்த விட்டை விட்டோ, ஊரை விட்டோ போனாலும் என் ஆட்கள் பின் தொடர்வாங்க.. நீ தப்பிக்க நினைத்தால் அது அவர்களுக்கு தான் ஆபத்து”
என்று மிரட்டினான்.

“நான் இப்போ அவர் கிட்ட வேலை பார்க்கலை சார்”

“எனிவே இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது.. தெரிஞ்சா……”

“தெரியாது சார்” என்று அவன் உறுதி கொடுத்த பின் தியாகேஷ்வர் தன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

————————————————————————————————————————————–

மருத்துவமனைக்கு சென்ற தினேஷ் லாவண்யாவிடம் நடந்ததை கேட்டு தெரிந்துக் கொண்டான். லாவண்யா யோசனையுடன், “அந்த பொண்ணு எதுக்கு சாரை அப்படி முறைச்சானு தெரியலையே!” என்று கூற,

தினேஷ் நக்கலாக, “அந்த பொண்ணு உன்னை பார்த்து முறைத்திருக்கும், நீ சாரை பார்த்து முறைச்சானு தப்பா புரிஞ்சுருப்ப” என்றான்.

லாவண்யா அவனை முறைக்கவும், அவன், “என்ன உண்மையை சொன்னா கோபம் வருதா?” என்றான்.

“உன் புத்தி தெரிந்தும் உன்னிடம் பேசினேன் பாரு” என்று அவள் இழுக்க,

அவன் குறுநகையுடன், “என்ன பண்ணலாம்! உன்னை செரு.. இல்லை பூட்ஸ்-ஸாலயே அடிக்கலாமா?”

லாவண்யா கோபத்துடன் கை முஷ்டியை இறுக்கமாக மூட, அவன் ஒன்றும் அறியாதவன் போல், “என்ன லாவ்ஸ்?” என்றான்.

“என்னை அப்படி கூப்பிடாதே”

“லாவ்ஸ்-னு தானே சொன்னேன் லவ்ஸ்-னா சொன்னேன்”

லாவண்யா பல்லை கடித்துக் கொண்டு, “எனக்கு ஹெல்ப் பண்ண வந்தியா டார்ச்சர் பண்ண வந்தியா?”

“ஐயோ இந்த நெனப்பு வேறயா! நான் ஒன்னும் உனக்கு ஹெல்ப் பண்ண வரலை.. உன் கிட்ட தனியா மாட்டிட்டு அந்த பையன் என்ன கஷ்டப்படுறானோ என்ற கவலைல தான் வந்தேன்”

“ஒரு அக்கியுஸ்ட்க்கு போய் சப்போர்ட் பண்றியே நீ எல்லாம்………..”

“வெயிட் வெயிட்.. அவன் அக்கியுஸ்ட் இல்லைனு எனக்கு தெரியும்”

அவள் குழப்புத்துடன் பார்க்கவும், அவன் அலட்டிக் கொள்ளாமல்,
“அவன் அக்கியுஸ்ட்டா இருந்து இருந்தா சார் லாவண்யாவுக்கு ஹெல்ப் பண்ணுனு மட்டும் சொல்லியிருக்க மாட்டார், அவன் தப்பிச்சுராம கவனமா இருங்கனும் சேர்த்து சொல்லியிருப்பார்” என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் பார்க்கவும், அவன் ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.

அவள், “ஹ்ம்ம்.. அவன் அக்கியுஸ்ட் இல்லை தான்.. அவன் மருந்தின் வேகத்தில் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டேன்..
அவன் சுபாஷினியை மிரட்ட போயிருக்கான் பட் அவன் போனப்பவே அவ தூக்கில் தொங்குறதை பார்த்துட்டு பயந்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.. பாதி தூரம் வந்த பிறகு தான் ப்ரெஸ்லெட் காணும்னு பார்த்திருக்கான், எப்படியும் சுபாஷினி வீட்டில் தான் மிஸ் ஆகியிருக்கும்னு கேஸ் க்ளோஸ் பண்றவரை வெளியூர் போயிருக்கான்”
என்றவள் சிறு யோசனையில் ஆழ்ந்தாள்.

வழக்கை பற்றி பேசியதும் சொந்த வெறுப்பை மறந்து இருவரும் வழக்கை பற்றி யோசித்தனர். அவளது யோசனையைப் பார்த்து அவன், “என்ன யோசிக்குற? வேற ஏதும் சொன்னானா?” என்று கேட்டான்.

“இல்ல.. அவன் அக்கியுஸ்ட் இல்லைனு சாருக்கு தெரியும்னு நிச்சயமா சொல்றியா?”

அவன் சிறு புன்னகையுடன், “சார் ஒருத்தரோட எக்ஸ்ப்ரஷன் அண்ட் பாடி லங்குவேஜ் வைத்தே கண்டுபிடிச்சிருவார்.. நாம அக்கியுஸ்ட்டை டவுட் பண்றப்ப அவர் கேஸையே முடிச்சிருப்பார்.. இந்த கேஸ் முடியும் போது, சாரோட திறமை உனக்கே புரியும்” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவன் கைபேசியில் அழைப்பு வந்தது.

அழைப்பை எடுத்து பேசியவன், பேசி முடித்ததும் தியாகேஷ்வரனை அழைத்தபடி அவளிடம், “டாக்டர் பத்தி ஒரு நியூஸ் கிடைத்திருக்கிறது” என்று கூறியபோது அவனது அழைப்பை எடுத்த தியாகேஷ்வர்,

“சொல்லு தினேஷ்”

“சார் சைபர்-க்ரைம் ப்ரான்ச்சில் இருந்து போன் பண்ணாங்க.. டாக்டர் பத்தி ஒரு முக்கியமான நியூஸ்”

“என்ன?”

“அவர் மகள் ரேஷ்மாவை யாரோ கடத்தியிருக்காங்க”

“வாட்?”

“எஸ் சார்.. அவர் செல் போனுக்கு வந்த காள் வைத்து கிடைத்த இன்பார்மேஷன்”

“ஓகே.. நீங்க சைபர்-க்ரைம் ப்ரான்ச் வாங்க.. நான் நேர அங்க வந்துறேன்”

“ஓகே சார்” 

————————————————————————————————————————————-

வீட்டிற்கு சென்றதும் கீர்தன்யா யாருடனும் பேசாமல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள். நடந்ததை சேகரிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட பெரியவர்கள்  மீண்டும் கவலையில் தவிக்க, கணேசன் சேகரை தனியாக அழைத்துச் சென்று, “என்ன முடிவு பண்ணியிருக்க சேகர்?” என்று கேட்டார்.

சேகர் பதில் சொல்ல முடியாமல் தவிக்க,

அவர், “நீ கேட்ட டைம் முடிஞ்சிருச்சுனு நினைக்குறேன்” என்றார்.

அவன் தயக்கத்துடன், “அப்பா..” என்று ஆரம்பிக்க,

அவர், “இப்படி சட்டு சட்டுனு மௌன கூட்டுக்குள் புகுந்துக்கும் கீர்த்தி வேற வீட்டுக்கு போனா, அவளோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்குறியா?”

“..”

“அதை பார்த்து சண்முகம் தான் நிம்மதியா இருப்பானா? அவன் கஷ்டத்தை பார்த்து நான் குற்ற உணர்வில் தவிக்கனுமா? என்ன பார்க்குற! நம்ம பையன் கீர்த்தியை கல்யாணம் பண்ணியிருந்தா அவளுக்கு இந்த நிலைமை வருமா-னு நான் குற்ற உணர்வில் தவிக்கனுமா?

என்னை விட அவள் மேல் அதிக அக்கறை உனக்கு இருக்குதுனு சொன்னியே! உன்னால் தான் அவளது நிலைமையை பார்த்து சந்தோஷமா வாழ முடியுமா?”

“அப்பா ப்ளீஸ்..”

சில நொடிகள் மௌனத்தில் கழிய, சேகர் ஒரு முடிவிற்கு வந்தவனாய் கண்களை மூடி திறந்து, “கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா” என்றான்.

கணேசன் ஆனந்த கண்ணீருடன் மகனை தழுவிக்கொண்டு, “எனக்கு தெரியும்டா நீ இந்த முடிவை தான் எடுப்பனு” என்றார்.

அவர்கள் இருவரும் கீழே சென்ற போது அறையை விட்டு பையுடன் வெளியே வந்த கீர்தன்யா, “அப்பா நான் சென்னை கிளம்புறேன்” என்றாள். 

சிந்தனை தொடரும்…

Advertisement