Advertisement

இங்கு விஷ்வாவோ தன் அருகே வந்து நின்ற ப்ரீத்தியிடம் ‘என்ன பண்றே..??’ என்றான்.

“பார்த்தா தெரியலை உங்களுக்கு சாப்பாடு வைக்கிறேன்” என்றவாறே தட்டை அவன் முன் வைக்க, 

“சாப்பாடு வைப்ப ஆனா ஊட்டி விடுவியா..?” என்று கேட்க அவளோ சுற்றிலும் ஆட்களை பார்த்தவள்,

‘இங்க எப்படி..??’

“பார்த்தியா எனக்கு ஊட்டிவிட  நீ யோசிக்கிற ஆனா என் மாமா எனக்கு மறுவார்த்தை பேசாம செய்வாரு அதனால  நீ கிளம்பு நாங்க பார்த்துக்குறோம்” என்றவன்,

கை கழுவி பேத்திகளின் முகத்தை துடைத்து கொண்டிருந்த நாதனை ‘மாமா’ என்று அழைக்கவும்,

“ஹான் என்ன மாப்ப…ள்ளை” என்று திரும்பினார்.

“என்ன மாமா தீபாவளிக்கு நான் வந்தே ஆகணும்ன்னு சொல்லி  என்னை வரவச்சிட்டு என்னை கவனிக்காம உங்க சொந்த மாப்பிள்ளைக்கு மட்டும் அத்தனை கவனிப்பு” என்றவன் அருகே இருந்த சரணிடம், 

‘ஏன் ப்ரோ நீங்க கூட இதெல்லாம் கேட்கமாட்டீங்களா..??’ என்றிட அவனோ புன்னகையுடன் நாதனை பார்த்தவன்,

“மாமா டைம் ஆச்சு நீங்க இன்னும் சாப்பிடலை எப்போ சாப்பிட்டு எப்போ மாத்திரை போடுவீங்க” என்றான்.

“என்ன ப்ரோ இது மாமா இன்னுமா சாப்பிடலை” என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்து நாதன் அருகே சென்றவன் அவர் தோள்களை பற்றி நாற்காலியில் அமர்த்தி அவருக்கு தானே பரிமாரியவன், “ஆஅ சொல்லுங்க மாமா..!!” என்றவாறு உணவை நீட்ட

‘மா.. மாப்.. என்ன மாப்பிள்ளை இது..?? நீங்க கொடுங்க நானே..’

‘ஏன் மாமா நான் ஊட்ட கூடாதா..??’ என்றவன் அவர் மறுப்புகளை பொருட்படுத்தாமல் ஊட்டி முடித்த பின்பே சென்று அமர்ந்தான். 

அங்கே வந்த கீர்த்தி சரணுக்கு சாப்பாடு எடுத்து வைக்க, “பசங்க தூங்கிட்டாங்களாடி” என்றான் சரண்.

“அத்வைத் இப்பதான் மாமா தூங்கினான்”

‘மத்த ரெண்டு பேர்’

‘அவங்க முன்னமே தூங்கிட்டாங்க’

‘அப்படியா..??’ என்று கேட்டவனின் கண்கள் மின்ன,

‘ஆமா மாமா’

‘சரி நீ உனக்கும் சேர்த்து சாப்பாடு போட்டு எடுத்துட்டு மாடிக்கு வா..!!’ என்றவன் எழுந்து மற்றவர்களிடம்,

“ஒரு முக்கியமான கால் பேசிட்டு வரேன்” என்றிட,

சரண் நீ பேச போனா ரொம்ப நேரம் ஆகிடும் முதல்ல சாப்பிடு அப்புறம் பேசுவ என்று நாதன் தடுக்க,

‘இல்ல மாமா இது கான்பிரன்ஸ் கால் எல்லாரும் எனக்காக காத்துட்டு இருப்பாங்க’

சரி அப்போ நீ பேசு நான் ஊட்டி விடுறேன் என்று அவன் அருகே வர,

“இல்ல மாமா இது வீடியோ கால் நான் முடிச்சிட்டு வரேன்” என்றவன் ஓட்டமும் நடையுமாக  அங்கிருந்து செல்ல, 

கீர்த்தியோ  புன்னகையோடு செல்லும் அவனை பார்த்தவள் இருவருக்கும் போட்டு எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள்.

சரண் செல்லவும் விஷ்வா புறம் திரும்பியவர் ‘மாப்பிள்ளை நீங்க சாப்பிடுங்க..’ 

‘உங்க மாப்பிள்ளைக்கு மட்டும் தான் ஊட்டுவீங்களா..??’ என்று அவன் திருப்பி கேட்க, 

“அகன் பசி தாங்க மாட்டான் மாப்பிள்ளை”

“நானும் தான் மாமா உங்க கையாள சாப்பிட வந்தேன் சரி விடுங்க எனக்கு அந்த கொடுப்பனை இல்ல” என்று அவன் எழுந்து கொள்ள நாதனோ ப்ரீதியிடம்..,

“என்ன பார்த்துட்டு நிக்கிற மாப்பிள்ளைக்கு சாப்பாடு வை ப்ரீத்தி இது கூட உனக்கு சொல்லனுமா..??” என்று நாதன் மகளை கடிய, 

“ப்பா அவர் தான் வேண்டாம் சொல்றார்” 

நாதன் விஷ்வாவை பார்க்க அவனோ, “உங்க சொந்த மாப்பிள்ளைக்கு  மட்டும் ஊட்டி விடுறீங்க, இன்னொரு மாப்பிள்ளைக்கு ஊட்டி விடட்டான்னு கேட்குறீங்க அப்போ நான் என்ன தக்காளி தொக்கா எனக்கெல்லாம் ஊட்ட மாட்டீங்களா…??” என்று பார்க்க, 

இது ஏதுடா வம்பு என்று அவனை பார்த்தவர்,  “இல்ல மாப்பிள்ளை அது  குழந்தைங்க ரெண்டு பேருக்கும் அகன் ஊட்டி முடிக்க நேரமெடுக்கும்..” என்று நிறுத்தி அவனை பார்க்க,

‘குழந்தைங்கன்னா புரியலை’ என்றவன் “இப்போ என்ன மாமா சொல்ல வரீங்க..??  உங்க மாப்பிள்ளைக்கு மட்டும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க எனக்கு ஒன்னு கூட இல்லைன்னு சொல்லாம சொல்றீங்களா..??” என்று கேட்க திகைத்து போய் அவனை பார்த்தார் நாதன்.

அதாவது “எனக்கு பொண்ணு இல்லன்னு என்னை நீங்க குத்தி காட்டுறீங்க அப்படி தானே..??”

“குத்தி காட்டினேனா..?? இது எப்போ..?? ” என்ற குழப்ப மேகம் நாதனை சூழ்ந்து கொண்டது.

ஆம் நாதனுக்கும் எழிலுக்கும் நடந்த நிகழ்விற்கு பிறகு அவர் முதலில் கற்றுகொண்டதே பேசுவதற்கு தான்..!! அதாவது தன் வார்த்தை அடுத்தவரை காயபடுத்தி விடகூடாது என்று யோசித்து பேச கற்று கொண்டிருந்தார் அவரிடம் விஷ்வா இப்படி கேட்கவும் அவருக்கு திகைப்பு..!! 

அவர் முகத்தை கண்டவன், “அப்படி தானே..??  இப்போ எனக்கு ஒரு பொண்ணு கூட இல்லை அதானே உங்க பிரச்சனை..??” என்று அவரை பார்க்க அவரோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பரிதவித்து அவனை பார்த்திருந்தார். 

“நீங்க கவலையே படாதீங்க மாமா உங்களுக்காகவே இன்னும் பத்து மாசத்துல  நானும் இப்படி ரெண்டு பெண் குழந்தைகளோட  இல்லல டபுளா நாலு குழந்தைகளோட வரேன் இப்ப ஓகேவா மாமா..!! ஊட்டுவீங்களா..??” என்று அவர் முன் வாய் திறக்க, 

அவரோ முகம் வெளிறி போய் அவனை பார்த்திருந்தார்,

“நைனா சீக்கிரம் அவனுக்கு ஊட்டிடுங்க இல்ல டபுள் ட்ரிபிள்ன்னு கணக்கை ஏத்திட்டே போக போறான்” என்று வெற்றி கூறவும், அங்கே சிரிப்பொலி எழுந்தது.

ப்ரீத்தி அவனிடம், ‘இப்போ எதுக்கு அப்பா கிட்ட இப்படி வம்பு பண்ணிட்டு இருக்கீங்க..?? உங்களுக்கு  நான் ஊட்டனும் அதுதானே’ என்று தட்டை கையில் எடுத்தவள்.

‘வாங்க ரூம்ல ஊட்டி விடுறேன்’ என்றிட,

“உன்னோட டைம் முடிஞ்சது இனி எனக்கு என் மாமா மட்டும் போதும் போடி” என்றவன் தட்டை அவளிடம் இருந்து வாங்கி நாதனிடம் கொடுத்து,

“என்ன மாமா இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலையா..?? வேணும்ன்னா உங்க பொண்ணையே கேட்டு பாருங்க” என்றவன்,

‘ஆமா தானே ப்ரீத்தி..??’ என்று அவளை இழுத்து விட,

அவளோ என்னது..?? என்பதாக விழி விரித்து அவனை பார்க்க,

“ப்ச் உங்க அப்பாக்கிட்ட சொல்லுமா  அடுத்த வருஷ தீபாவளிக்கு நாம நாலு பொண்ணுகளோட நம்ம வீட்டுக்கு வருவோம்ன்னு” என்று நமட்டு சிரிப்புடன் சொல்ல, 

‘ஏதே நாலா..??’ என்று அவளும் திகைத்து நிற்க, 

“சொல்லு ப்ரீத்தி உங்கப்பா நம்ப மாட்டேங்கிறாங்க பாரு” என்றவன் அவள் அதிர்ச்சியை கண்டு, 

“அவளும் உங்களை மாதிரியே நம்பல போல ஆனா ப்ரீத்திக்கு நான் கேரண்ட்டி மாமா இப்ப பசிக்குது ஊட்டுங்க ” என்றவனை ப்ரீத்தியால் முறைத்து கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது.

ஆனால் விஷ்வாவோ நாதன் அவனுக்கு ஊட்டிவிட்ட பிறகே அவரை அங்கிருந்து நகர விட்டான். 

***************************************

அடுத்த நாள் அதிகாலை பொழுது புலறாத வேளையில் நாதன் வீட்டு பின் பகுதியில் ‘அகனா’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க,

‘இதோ வந்துட்டேன் மாமா’ என்று அவருக்கு குரல் கொடுத்தவன் மாடி வளைவில் அவனை சுவரில் சாய்த்து தன் கைவளைவில் நிறுத்தி இருந்த மனைவியிடம், ‘விடுடி பட்டு’ என்று கெஞ்சியவாறே அவளிடையில் கிள்ளி வைக்க 

“டேய் கையை வச்சிட்டு அமைதியா இருக்கணும் கொஞ்சம் அசைஞ்சனாலும் வேட்டி இருக்க வேண்டிய இடத்துல இருக்காது உருவி விட்டுருவேன்” என்று அலர் அவனை மிரட்ட,

“பட்டு, செல்லம், குள்ளச்சி மாமா பாவம்டி எவ்ளோ நேரமா தேடிட்டு இருக்கார் நான் போகணும் வழி விடு” என்று எழில் அவள் கையை அகற்ற முற்ப்பட,

‘டேய் நான் சொல்லிட்டே இருக்கேன்’ என்ற அலர் அவன் வேட்டியை சிறிது இழுக்க,

‘அடியேய் பெல்ட் போடலடி அவசரமா சுத்திட்டு வந்திருக்கேன்’ என்று பதறி கொண்டு வேட்டியை எழில் ஒரு கையில் பிடிக்கவும் மீண்டும் ‘அகனா’ என்ற நாதனின் குரல்..!!

“டேய் ஒழுங்கா உன் மாமா கிட்ட போய் என் பொண்டாட்டி தான் எனக்கு எண்ணெய் தேய்ச்சு விடுவான்னு  சொல்லு இல்ல..” என்று அவள் விழிகள் சிவக்க அவனை பார்க்கவும், 

“பட்டு என்னடி இது..??” என்று எழில் அவள் கன்னத்தை வருட,

‘என்னது..??’ என்றவாறு அவளும் கன்னத்தில் கை வைக்க,

“அங்க இல்லடி இங்க.., கிட்ட வா நானே பார்க்கிறேன்” என்று அவளிடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து மெல்ல வருட அதில் அலரின் கவனம் ஒரு கணம் சிதற , 

“அதற்குள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பற்கள் பட கடித்தவன் அவளிடம் இருந்து விடுபட்டு  ‘போடி குள்ளச்சி’ என்று  வேட்டியை பிடித்து கொண்டு ஓடியிருந்தான்.

“டேய் பிராடு மாமா நில்லுடா..” என்று கன்னத்தை தேய்த்து விட்டு பல்லை கடித்து கொண்டு அவன் பின்னே ஓட அதற்குள் ‘அம்மா’ என்று அழைத்து அவிரன் அவளை  தேடி வரவும் அவனை அழைத்து கொண்டு சென்றவள் அவனுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு எழிலை தேடி சென்றாள்.

எழில், சரண், விஷ்வா, வெற்றி , கதிர் என்று அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்திருக்க அவர்கள் மனைவிகள் எண்ணெய் கிண்ணத்தோடு அருகே நின்றிருந்தனர்.

எழிலின் ஒரு புறம் அலர் மறுபுறம் நாதன் இருவரும் எண்ணெய் கிண்ணத்தோடு நின்றிருக்க எழிலோ மனதினுள் “ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு கூட என் அளவு மோசமான நிலைமை வராது.. ஆனா இங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தினம் தினம் கத்தி மேல நடக்கிற அளவு ஆகிப்போச்சே என் பொழப்பு” என்று

‘நான் தான் எண்ணெய் தேய்ப்பேன்’ என்று பிடிவாதமாக நின்று கொண்டிருக்கும் மாமனாரையும் மனைவியையும் பார்த்தவன்,  

” மாமா நீங்க பின்னாடி பூசுங்க அவ முன்னாடி பூசட்டும்” என்று தன்னை  பாகபிரிவினை செய்து இருவர் மனமும் கோணாமல் தீர்வை கண்டு பிடிக்க அவன் முன் நின்றிருந்த அலரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.

நாதன் மகிழ்ச்சியோடு அவன் தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய தொடங்கி விட்டார் ஆனால் அலர் அமைதியாக அவனை பார்க்க,

‘முன்னாடி உன் போர்ஷன் அவர் இங்க வரமாட்டார் நீ தேய்ச்சு விடுடி செல்லம்’ கூற, 

‘டேய் ஏதாவது பேசின யார் இருக்கான்னு பார்க்க மாட்டேன் கண்டிப்பா வேட்டியை உருவிடுவேன் முதல்ல அவரை போக சொல்லு’ என்றவளின் கையில் இப்போது அவன் வேட்டி அழுத்தமாக சிறை பட்டிருந்தது.’

‘எண்ணெய் தேய்க்கிறேன் என்ற பெயரில் இருவரும் நேருக்கு நேர் நிற்க மனைவியின் சுணங்கிய முகம் கண்டவன் யாரை அழைக்கலாம் என்று சுற்றும் பார்க்க அவன் விழிகளில் முதலில் விழுந்தது வெற்றி தான்.

எழிலின் அவஸ்த்தையை கண்டு வாய் விட்டு அவன் சிரித்து கொண்டிருக்க அதை கண்ட எழிலின் முகத்தில் சீற்றம் அதிகரித்தது.

அடுத்து சரணை பார்க்க அவனோ கீர்த்தி எப்போது வருவாள் என்று அவள் வரும் வழி பார்த்து விழிகள் பூத்து இருந்தவனுக்கு எழில் கண்ணில் படவே இல்லை.

அடுத்து இருந்த விஷ்வாவை பார்க்க அவனும் எதேச்சையாக எழிலை பார்க்க ‘உடனே காப்பாற்று’ என்பதாக விஷ்வாவிற்கு கண்ஜாடை காட்ட அவனும் அவன் பின்னே இருந்த ப்ரீத்தியை தவிர்த்து அங்கு வந்துவிட்டான்.

அவர்கள் அருகே வந்தவன் எடுத்ததும்,

“என்ன மாமா கூப்பிட்டு வச்சு கேவல படுத்துறீங்களா..??” என்றிட

பதறி போன நாதன் எண்ணெய் வைப்பதை நிறுத்தி , ‘ஏன் மாப்பிள்ளை என்ன ஆச்சு’

“என்ன மாமா இது..?? தலை தீபாவளிக்கே உங்க கையால எண்ணெய் தேய்க்கணும் நெனச்சேன் ஆனா முடியல இப்பவாவது செய்வீங்கன்னு பார்த்தா நீங்க உங்க சொந்த மாப்பிள்ளையை மட்டும் செல்லமா  வெல்லமா  விழுந்து விழுந்து கவனிக்கிறீங்க கொஞ்சமும் சரி இல்ல மாமா..”

“இல்ல மாப்பிள்ளை அவனுக்கு சின்ன வயசுல இருந்தே நான்..” என்று ஆராம்பிக்கவும்,

‘நீங்க ரொம்ப ஓர வஞ்சனை பார்க்குறீங்க மாமா உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை’

‘என்ன.. என்ன மா..ப்பி..ள்ளை..?’

“மூணு மருமகன்களையும் ஒரே மாதிரி பார்க்கிறது தான் ஒரு நல்ல மாமனாருக்கு அழகு ஆனா நீங்க மத்த ரெண்டு பேரையும் ஒரு  மாதிரி என்னை வேற மாதிரி பார்க்குறீங்க.., ஏன் மாமா..?? நான் என்ன தப்பு பண்ணேன் எதுக்கு என்னை ஒதுக்குறீங்க ..?? “என்று கேட்க..

“அப்படி எல்லாம் இல்ல மாப்பிள்ளை… எனக்கு எல்லாரும் ஒன்னு தான், அகனா நீயே சொல்லுப்பா” என்று எழிலை பார்க்க,

‘அவன் கேட்கிறதும் நியாயம் தானே மாமா..?? சின்ன பையன் ஆசைப்படறான் அவனுக்கும் எண்ணை தேய்ச்சு விடுங்க’ என்று வேட்டியை ஒரு கையில் பிடித்து கொண்டு அலரை பார்த்தவாறே கூற,

‘அப்போ உனக்கு யார்…??’ என்று அவர் ஆரம்பிக்கவுமே விஷ்வா அவர் கையை பிடித்து தன்னோடு கோர்த்து கொண்டு,

“அண்ணாவை அண்ணி பார்த்துப்பாங்க எனக்கு நீங்க தான் வைக்கணும் வாங்க” என்று கையோடு  இழுத்து செல்ல,

நாதன் எழிலை திரும்பி திரும்பி பார்த்தவாறு செல்ல எழிலோ ஆசுவாச மூச்சுடன் மனைவியை பார்த்தவன் ‘இப்பவாவது வேட்டியை விடுடி’ என்று அவள் கையை  அகற்ற அவள் முகத்தில் இப்போது புன்னகை.

‘சிரிச்சது போதும் கண்ணு எரியுது சீக்கிரம் தேய்டி’ என்றான்.

‘இதை முதல்ல செஞ்சிருக்கலாம்டா மாமா’ என்றவள் எழிலை நெட்டி முறித்து அவனுக்கு எண்ணை தேய்க்க தொடங்கி இருந்தாள்.

Advertisement