Advertisement

அடுத்த நாள்  காலையே பரீத்தியை அழைத்து கொண்டு ஸ்கை டைவிங் செய்வதற்கு வந்திருந்தான் விஷ்வதேவ் .

ஆங்காங்கே வானில் மனிதர்கள் பறப்பதை  கண்டவளின் முகத்தில் அத்தனை குதுகலம் ‘தேவ்’ என்று அவனை நெருங்கி அவன் கைகளை பிடித்து கொண்டவள் மீண்டும் ஆகாயத்தை பார்க்க,

‘டூ யு லைக் திஸ்’

ப்ரீத்திக்கு துணிச்சலான சாகசங்களை மேற்கொள்வதில் விருப்பம் அதிகம் என்பதால் அவன் கேட்கவும் உடனே, “எஸ் அப்கோர்ஸ்..!! எனக்கு adventurous ரொம்ப பிடிக்கும் ஆனா ட்ரை பண்ணினது இல்லை என்.. எனக்கு பெருசா அப்போ டைம்..” என்று பிரகாசத்தால் அவள் சிறு ஆசைகள் கூட நிறைவேறாது போனதை கூற விரும்பாமல்  அவள் நிறுத்த..,

‘புரிகிறது’ என்பதாக அவளை அணைத்து கொண்டவன், ‘ஆர் யு ரெடி பார் தி எக்ஸ்பீரியன்ஸ்’ என்றான்.

‘ஆம்’ என்று தலை அசைத்தவள், ‘நீங்க இதுக்கு முன்ன டைவ்  பண்ணி இருக்கீங்களா..??’ என்றிட,

“எஸ் எனக்கும் adventurous பிடிக்கும் சில் அவுட் பண்ண அடிக்கடி இங்க பிரெண்ட்ஸ் உடன் வருவேன் எவ்ளோ வொர்க் இருந்தாலும் டூ மந்த்ஸ் ஒன்ஸ் வந்துடுவேன்”

‘மத்த இடங்களை விட இங்க லேக் மேல பறக்கிறது  வேற பீல் முதல்ல உயரத்துல இருந்து பார்க்கிறப்போ சின்னதா நம்ம பார்வைக்குள் அடங்கிடும் அளவு இருக்கும் ஆனா நாம கீழ இறங்க இறங்க அதனுடைய அழகு பினாமினல்லா இருக்கும் நான் சொல்றதை விட நீயே எக்ஸ்பீரியன்ஸ் பண்ணு அது அன்பர்கெட்டபில் மொமென்ட்டா இருக்கும்’ என்றான்.

‘சூர் தேவ்’ என்றவள், “நாம யார் கூட போக போறோம் இங்க அதுக்குன்னு தனி ஆட்கள் இருப்பாங்க தானே அவங்களோட கைடன்ஸ்ல அவங்க கூட தானே பறக்க முடியும்” என்று கேட்க, 

‘நாம ரெண்டு பேர் மட்டும் தான்’ என்று அவன் அதிர்ச்சி அளிக்க,

“எப்.. எப்படி..??’

“உனக்கு தெரியுமா..?? ஐ ஆம் எ லைசெண்ஸ்ட் டைவர்” என்று கூற ப்ரீத்தியிடம் ஆச்சர்யம்.

“நிஜமா தான்டி, ஏன் அப்படி பார்க்கிற..?? பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு  அதுவும் உன்னோட சேர்ந்து பறக்கவே  வாங்கி இருக்கேன்” என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்று அங்கிருந்த க்ளாராவிடம்  ஒப்படைத்து வெளியில் வந்து தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

அங்கு கிளாரா ப்ரீத்திக்கு  பறக்கும் முன்பு எப்படி மனதளைவில் தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விளக்கம் கொடுத்து மற்ற சம்பிரதாயங்களை முடிக்க அங்கு வந்தான் விஷ்வதேவ்.

கிளாரா அவளுக்கு பாதுகாப்பு கவசம் போட முற்ப்பட அவளை தடுத்த விஷ்வதேவ் அவனே வாங்கி ப்ரீத்திக்கு அணிவித்து பெல்ட்டின் உறுதி தன்மை முதற்கொண்டு ஒரு முறைக்கு இருமுறை சோதித்தவன் அவளிடம்,

‘பயமா இல்லையாடி’ என்று கேட்க,

‘எதுக்கு..??’

‘முதல் முறை  பல ஆயிரம் அடிக்கு மேல பறக்க போற அந்த  பயம்’ என்றிட

“முதல் முறை பிளைட் ஏறினப்போ இருந்த குட்டி பயம் கூட நீங்க இருந்ததுல காணாம போயிடுச்சி இப்போ ஐ ஆம் சோ எக்சைட்டட் இப்பவும் நீங்க என் கூட அப்புறம் எனக்கென்ன பயம்” என்றாள் அவனை கட்டிக்கொண்டு, மேலும் சில நிமிடங்களுக்கு அவளுடன் பேசிக்கொண்டு இருந்தவன் அவளை மனதளவில் தயாராக இருப்பதை அறிந்து கொண்டான்.

கிளம்புவதற்கான அழைப்பு வரவும் அவளோடு சேர்ந்து ஹெலிகாப்ட்டரில் ஏறியவன் உள்ளே அமர்ந்ததும் அவளை தன் மீது அமர்த்தி இருவரையும் ஒன்றாக சேர்த்து இணைக்கும் பட்டியை கொண்டு அவர்களை இணைத்தவன், மீண்டும் அவள் இடையில் தோளில் அணிந்திருந்த பெல்ட்டை சோதித்து உறுதி செய்து அவள் தலை கவசத்தையும் சரி செய்திட அவன் புறம் திரும்பிய ப்ரீத்தி ,

‘நீங்க நெர்வஸா இருக்கீங்களா..??’ என்றாள்.

“இதுவரை இருந்தது இல்லை இப்போ நீ கூட.., உன்னை பத்திரமா..” என்று அவன் முடிக்கும் முன்னமே வேகமாக அவன் இதழ்களை சேர்ந்து அழுத்தமாக முத்தமிட தொடங்கிவிட்டாள் ப்ரீத்தி.

அதை எதிர்பாராத விஷ்வா திகைப்புடன் அவளை பார்க்க அவ்ளோ அவன் பதற்றம் குறைக்கும் வகையில் இன்னும் ஆழமாக முத்தமிட, உடன் இருந்தவர்களின் கூச்சலில் தான் மீண்டவள் அவன் மார்பிலே முகம் புதைத்திருந்தாள்.

என்னதான் அவர்கள் கலாச்சரத்தில் பொது வெளியில் முத்தமிடுவது சகஜம் என்றாலும் இவர்களுக்கு அப்படி கிடையாதே..!!

ஆனால் முதல் முறை அவளையும் அறியாமல் அவன் அன்பில் நெகிழ்ந்து போனவளுக்கு தன் நேசத்தை வெளிபடுத்த அவன் பதற்றத்தை குறைக்க வேறு வழி தெரியவில்லை.

‘ப்ரீத்தி’ என்று அவன் முகம் நிமிர்த்த,

அவனை பார்த்தவளின் முகத்தில் வெட்கப்புன்னகை..!!

“இப்போ ஐ ஆம் ஓகே” என்று அவள் நெற்றி முட்டினான்.

‘இன்னும் பைவ் மினிட்ஸ்’ என்று அவன் கூற அடுத்த சில நிமிடங்களில் வானில் இருந்து விஷ்வாவுடன் குதித்திருந்தாள்.

வேகமாக காற்று முகத்தில் மோத பாதுகாப்பு கண்ணாடி வழியே கீழே பார்த்தவளுக்கு டஹோ ஏரியின்  அழகு கண்ணை பறிக்க கூச்சலுடன் ஆர்பரித்து அனுபவித்து கொண்டிருந்தாள்.

இருகைகளையும் விரித்து கொண்டு இருந்தவளுக்கு கீழே விழுவது போலல்லாமல் சிறகை விரித்து பறப்பது போல இருக்க மகிழ்ச்சியில் கூச்சல் இன்னுமே அதிகரித்திருந்தது.

அவள் பின்னே இருந்த விஷ்வா ஏரியின் தகவல்களை அதை சுற்றி உள்ள இடங்களை சுட்டி காண்பிக்க அவளும் ஆவலுடன் பார்த்து கொண்டு வர அவள்  மனதில் அத்தனை பூரிப்பு..

பல நிமிடங்கள் வானில் மிதந்து கொண்டிருந்தது  காதல் ஜோடி..!! சில நூறு அடி தொலைவில் பறந்து கொண்டிருக்கையில் ‘ஆர் யு ஹாப்பி’ என்று கேட்டவனிடம் தலை திருப்பி ‘ரொம்பவே’ என்று முகம் கொள்ளா புன்னகையுடன் கூற பாரஷுட்டை இயக்கிய விஷ்வாவோ அவள் புன்னகையில் மிளிர்ந்த அவள் இதழ்களை சேர்ந்து ஆழமாக முத்தமிட்டிருந்தான்.

கீழே நெருங்கும் சமயத்தில் விஷ்வா  சமதளத்தை நோக்கி பார்ஷுட்டை இயக்கி மெல்ல தரை இறக்க தொடங்கியவன் ப்ரீத்தியை அவள் கால்களை உயர்த்த சொல்லி அவன் தன் கால்களை தரையில் ஊன்றி பாதுகாப்பாக அவளை பூமிக்கு கொண்டு வந்திருந்தான்.

ப்ரீதிக்கு இன்னுமே நம்ப முடியவில்லை எத்தனை அடி ஆயிர உயரம் என்று வியந்து நின்றவள் விஷ்வா ‘நீ ஓகே வாடி’  என்று கேட்கவும் பாய்ந்து சென்று அவனை கட்டிக்கொண்டாள். அவள் தலை கோதி கொடுத்து உச்சியில் முத்தமிட்டவன்.., 

“வேறென்ன வேறென்ன வேண்டும் ஒருமுறை சொன்னால் போதும்

நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே..!! சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகள் இன்றி உயிரையும் நான் தருவேனே”

என்று பாடிக்கொண்டே அவளுடன் அறைக்கு திரும்பி இருந்தான்.

***********************************

அடுத்த நாள் அவளை அழைத்து கொண்டு ஈகிள் பால்ஸ் சென்றிருந்தான்.

அங்கு பைக்கை எடுத்து அவளிடம் கொடுத்தவன் நீயே ஒட்டு நான் வழி சொல்றேன் என்று ப்ரீத்தி பைக்கை ஸ்ட்ராட் செய்யவும் அவள் பின்னே அமர்ந்து வழி நெடுக அவ்விடத்தின் சிறப்பை கூடிக்கொண்டு வந்தான். 

ஓடையில் கால் நனைத்து அவளோடு அங்கேயே அமர்ந்தவன் ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐஸ் அண்ட் லிசன் என்றான்.

ப்ரீத்தியும் அப்படியே செய்ய தண்ணீரின் சலசலப்பு, பறவைகளின் ஒலி, மரங்களின் அசைவு, தூரத்தே விழும் அருவியின் இரைச்சல் என்று ரம்மியமான சூழலில் கேட்ட புது ஒலிகளில் மனதில் இதம் சூழ்ந்தது.

கண்களை திறந்தவள் “எப்படி தேவ் இந்த மாதிரி ஒரு இடம் செலெக்ட் பண்ணீங்க..?? அமேசிங் யூ க்நொவ் எனக்கு நேச்சர் ரொம்ப பிடிக்கும்.., அதுவும் இந்த மாதிரி  தனியா இயற்கையை ரசிக்கனும்ன்னு ஆசை உங்களுக்கு எப்படி..??”

“எனக்கும் தான்..!! ஆனா தனியா இல்ல உன்கூட இப்படி கைகோர்த்து ரசிக்கணும் தான் ஆசை இப்போ அது நிறைவேறிடுச்சி” என்றவனின் கைகளை இறுக்கமாக தன்னோடு கோர்த்து கொண்டு, 

‘தேவ் பாடுங்க’ என்றாள்

‘இப்பவா..??’

‘ஆமா, எனக்காகவே ஸ்பெஷலா ஒரு பாட்டு உங்க மனசுல இருக்குமே அதை எனக்கு இப்போ கேட்கணும் பாடுங்க’ என்று கேட்ட மனைவியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன் அவள் விழியோடு தன் விழிகளை நிலைக்க விட்டு பாட தொடங்கினான்.

“நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்

நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்

நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம், நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்”

அதன் பின்பான தேனிலவு நாட்களை மனைவியோடு சேர்ந்து அத்தனை அழகாக மறக்கமுடியாததாக மாற்றி இருந்தான்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் நாளும் வர ப்ரீத்தி அனைத்தையும் பேக் செய்து முடித்து விட்டு அப்போதுதான் உணவை எடுத்து கொண்டு அமர்ந்தாள் அதற்குள்,

கம்பளியை தலை முழுக்க போர்த்தி கொண்டு படுத்திருந்த விஷ்வதேவ், 

‘புருஷனுக்கு டெம்பரேச்சர் அதிகமா இருக்கே என்னன்னு ஒரு வார்த்தை கேட்காம உன் பாட்டுக்கு சாப்ட்டுட்டு  இருக்கியேடி உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா..??’ என்று கேட்க,

‘யாருக்கு..?? உங்களுக்கு டெம்ப்ரேச்சர்..?? இதை நான் நம்பனும் அமைதியா இருங்க” என்று சாப்பிட தொடங்க..,

“அவனவனுக்கு ஜுரம் வந்தா பொண்டாட்டி எப்படி எல்லாம் பார்த்துப்பான்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனா உன்னை மாதிரி ஒருத்தியை இப்பதான்டி பார்க்கிறேன் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம சாப்பிடற நீ”

‘தேவ் மதியம் எங்க சாப்பிட விட்டீங்க..??’ என்று அவள் கேட்கவும்,

“இப்பகூட சாப்பிடறதுல தான் குறியா இருக்கியே தவிர புருஷனை தொட்டு பார்க்க தோணுதா உனக்கு..?? அதவும் ஒரு டாக்டரா இருந்துட்டு சா…” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல,

‘முன்ன தான் உங்களை எனக்கு தெரியாம குழம்பி இருந்தேன் ஆனா இப்போ உங்களை எனக்கு நல்லா புரியும்’ என்றவாறே  சாப்பிட்டு முடித்து  கைகளை கழுவிக்கொண்டு அவனை நெருங்கி,

‘உங்களுக்கு ஏன் டெம்ப்ரேச்சர் அதிகமாகும்ன்னு எனக்கு தான் தெரியுமே ஆனாலும் நீங்க சொன்ன வார்த்தைக்காக இந்தாங்க  டேப்லெட் போட்டுட்டு  அமைதியா படுத்து தூங்குங்க’ என்று நகர போக,

‘யாருக்குடி வேணும் உன் டேப்லெட்..??’ என்று மாத்திரையை தூக்கி  ஒருபக்கம் போட்டவன் அவளை தூக்கி தன் மறுப்பக்கம் போட்டு கொண்டு, 

‘யு ஆர் மை மெடிசின் உன்னை விட அது பெஸ்ட் ரிசல்ட் தராது’ என்று கம்பளியை அவளுக்கும் சேர்த்து போர்த்தியிருந்தான்.

***************************

காலிபோர்னியாவில் இருந்த இருவாரங்களும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த தம்பதிகள் இரு நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கள் வழக்கத்திற்கு திரும்பி இருந்தனர்.

புத்தகத்தோடு அமர்ந்திருந்த ப்ரீத்தி முகத்தில் தீவிர யோசனை .. !!

வேறு என்ன..?? அன்று விஷ்வா பாடிய பாடலை குறித்து தான் தேனிலவில் அவனை தவிர வேறு நினைவில்லாமல் இருந்தவளுக்கு ஏனோ மனதின் ஓரம் அப்பாடல் நெருஞ்சி முள்ளாக குத்தி கொண்டிருக்க மீண்டும் அதை அலச தொடங்கி விட்டாள்.

விமானத்தில் வரும்போதே அவனிடமே கேட்டிருந்தாள் ‘வேறு பாடல்களா இல்லை, ஏன் இந்த பாடல்..??’ என்று ஆனால் அவன் அதற்க்கு சரியான பதிலை கொடுக்காமல் மழுப்பியவன் அதன் பின்பும் இதை பற்றி ப்ரீத்தி பேசாத வகையில் பார்த்துகொண்டான்.

ஆனால் ப்ரீத்தி வீட்டிற்கு வந்ததுமே முதலில்  அப்படத்தை போட்டு பார்த்திருந்தாள். 

அவளை மீண்டும் மீண்டும் சிந்திக்க  வைத்தது அக்கதையின் பெண் கதாபாத்திரம் தான்..!! ஏனெனில் வழக்கமான வகையில் இல்லாமல்  அது  எதிர்மறையாக மிகவும் பிடிவத குணம் கொண்டதாக வடிவமைக்க பட்டிருக்கும் இருக்கும்.

ஆனால் ஆண் கதாபாத்திரம் அப்படி இல்லை.

ஆம் அவள் யாரென்று தெரியாத போதே அவள் மீது காதல் வயப்பட்ட நாயகன் அவள் யார் என்று தெரிந்த பின்பும் அவளை காதலிப்பான்.., அவளை காதலித்த காரணத்திற்காக அவள் கொள்கையை விட்டு விலகாமல் போக அவன் தன்  காதலுக்காக உயிர் தியாகம் செய்திருப்பான்…

அத்தனை உணர்வுப்பூர்வமான படம்…!!

அதிலும் அன்று விஷ்வா பாடிய பாடல் நாயகனின் உயிர் காதலின் ஒவ்வொரு நிலையையும் எடுத்து காட்ட கூடியது. காதலின்  ஏழு நிலைகளை கொண்டு தான் திரைப்படத்தின் காட்சிகள் நகரும் இறுதியில் பாடலில் கூறுவதை போல இறுதி நிலையான மரணத்தை நாயகன் நாயகி இருவருமே அடைந்திருப்பர். 

படத்தை பார்த்த பிறகு ப்ரீத்தி மீண்டும் அவனை சந்தித்த நாளில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக புரட்டி பார்க்க முதலில் அவன் குணம் புரிபட அப்போது ஏன் தன்னிடம் அப்படி நடந்து கொண்டான் ஒருவேளை நடித்தானா..?? என்ற கேள்வி எழுந்தது.

இது நாள் வரை அவளுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டது இல்லை ஆனால் அவனுடன் ஈருடல் ஓருயிராய் கலந்த பிறகு  நிச்சயம் அது நடிப்பாக தான் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.

ஆனால் ஏன்..?? எதற்காக நடிக்க வேண்டும்..?? யார் சொல்லி நடித்தான்..?? என்ற கேள்விகள் படையெடுக்க தொடங்கிவிட்டது.

இப்போது தன்னை அந்த பிடிவாத  நாயகியின்  இடத்திலும் விஷ்வாவை கொண்ட காதலுக்காக உயிரை துறந்த அந்த  பிடிவாத நாயகன் இடத்திலும்  பொருத்தி பார்த்தவளுக்கு புதிருக்கான விடை கிடைத்தது.

அதே நேரம் இத்தனை நாட்கள் அவன் ஏன்  மருத்துவம் பார்க்காமல் பாடம் எடுக்க வந்தான் என்பதும் இப்போது புரிபட  இறுதியில் பெண்ணவளின் கண்களில் நீர் நிறைந்து வழிந்து கொண்டே இருந்தது.

தன் வாழ்வை மீண்டும் ஒவ்வொரு அத்தியாயமாக நிதானமாக புரட்டி பார்க்க தொடங்கியவளுக்கு தனக்காக அவன் செய்திருக்கும் தியாகங்கள் புரிய தொடங்கியது.

Advertisement