Advertisement

“I would like to be your soulmate ..!! Will you  be..??” என்ற அவள் வார்த்தைகளில் விஷ்வா முற்றிலுமாக ஸ்தம்பித்து போயிருந்தான்..,

எத்தனை வருடங்களாக அவன் கேட்க காத்திருந்த வார்த்தைகள் இப்போது அவள் வாய் மொழியாக கேட்டபிறகு அதற்கு மறுமொழி கூற வார்த்தை எழவில்லை கணவனுக்கு..!!

‘Dev will you be mine forever..??’  நீ என்னுடையவனாக எப்போதும் இருப்பாயா..?? என்று கேட்டவளின் கண்ணீர் அவன் நெற்றியில் தெறித்து விழ,

“இது என்னடி கேள்வி I am always yours..!! and wanna be yours only..!!  புரியுதா..?? “என்று நெகிழ்ச்சியோடு அவள் நெற்றியில் இதழ் பதித்தவனின் உதடுகள் அவள் கண்ணீரையும் சேர்த்து துடைத்தது.

‘என்னடா இது எதுக்கு இப்போ இந்த அழுகை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லி இருக்கேன்ல’ என்று அவளை கடிய, 

“எஸ் ஐ க்நொவ்..!! பட் என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை இது ஹாப்பி டியர்ஸ்…  சந்தோஷத்துல அழுகை வரும்ன்னு உங்களால தான் தெரிஞ்சிகிட்டேன்” என்று நெஞ்சம் விம்ம அவனை தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு இருந்த ப்ரீத்தி மனதில் சொல்லில் வடிக்க முடியா அளவிலான மகிழ்ச்சி..!!

“தனக்கே தனக்கான ஆண்மகன் அவன்..!! வேறு என்ன வேண்டும்..??”

 இருவருக்கும் மோன நிலையை விட்டு வெளிவர மனமில்லை… வார்த்தைகள் அற்ற மௌனம் அறையை நிறைத்திருந்தது.

*********************************

‘உன் காலை கொஞ்சம் கொடுடி’ என்றான் எழுந்தமர்ந்து, 

“எதுக்கு கேட்குறீங்க..?? ஒருவேளை அதுக்கும் தேங்க்ஸ் சொல்லனுமா..??” என்று கேட்டவள் தன் இருகால்களையும் கைகளால் சேர்த்து பிடித்து கொண்டு, 

“உங்ககிட்ட எதையும் கொடுக்க பயமா இருக்கு..” என்று கூறவும் விஷ்வாவிடம் அட்டகாசமான சிரிப்பு.

அவன் சிரிப்பில் சட்டென ப்ரீத்தியும் சிரித்துவிட்டாள்,

“சொல்லுங்க எதுக்கு காலை கொடுக்க சொல்றீங்க அது என்ன பண்ணுச்சி”

“இதுவரை ஒன்னும் பண்ணலை இதுக்கு மேல..” என்று ஆரம்பித்தவன்,

“என்னடி நீ எப்பபாரு கேள்வியா கேட்டுட்டு இருக்க..?? அதுக்கு மட்டும் முன்னாடியே தேங்க்ஸ் சொல்லிக்கிறேனே” என்றவனின் கண்களில் குறும்பு கூத்தாடியது.

‘அதான் ஏன்..??’

‘பதில் சொல்லியே ஆகணுமா..??’ என்று ஒற்றை புருவம் உயர்த்தியவன் அவளை மேலும் நெருங்கி அமர்ந்து,

‘கேட்க உன் காது ரெடியா..??’ என்று அவன் கேட்டவிதத்திலேயே ப்ரீத்தியின் வாய் அன்னிச்சையாக மூடிக்கொள்ள அவள் பார்வையும்  தழைந்தது.

அதை கண்டவனின் இதழ்களில் மீண்டும் புன்னகை உதயமாக, ‘முதல்ல தேங்க்ஸ் சொல்ல விடுடி’ என்று அவள் பாதங்களை பிடித்து தன் மீது வைத்தவன் சிறு சங்கிலி வைத்த மெல்லிய கால் கொலுசை எடுத்து அவளுக்கு அணிவித்து கொண்டிருந்தான்.

கொலுசை கண்டவள் ‘தேவ் நான் கொலுசு போடமாட்டேன் அது ஹாஸ்ப்பிட்டல்’ என்று ஆரம்பிக்கவும்,

“எனக்கும் தெரியும் ஆனா உனக்கு கொலுசு அழகா இருக்குடி” என்றான் அன்று காரடையான் நோன்பின் போது கொலுசுகள் சப்தமிட அவள் கால்கள் நகர்ந்து கொண்டிருந்த அழகை நினைவு கூர்ந்தவனாக.

“உங்களுக்கு எப்படி தெரியும்..?? நான் இதுவரை போட்டது இல்லையே..” என்று அவனை பார்க்க, 

‘ஒருமுறை போட்டிருக்க அழகா இருந்தது அதான் அதிகம் சத்தம் வராத மாதிரி மெல்லிசா வாங்கி இருக்கேன் இதை கழட்ட கூடாது என்று அவள் கொலுசில் முத்தம் வைத்தவன் அடுத்த சில நிமிடங்களுக்கு உடன் சேர்த்து அவள் கால்களுக்கும் நன்றி கூறி பாதங்களை சிவக்க வைத்து கொண்டிருந்தான்.

‘தேவ்’ என்று அவள் கால்களை குறுக்கிட முயல, அவள் பாதங்களை தழுவி இருந்த அவன் கரங்களின் அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரித்து பெண்ணவளின் தவிப்புகளை  கூட்டிட கணவனின் சிறு சிறு தொடுகையிலும் ஆர்பரித்த அவள் வெட்கத்தை முத்தமிட்டே கொன்று தின்று கொண்டிருந்தான் அந்த காதல் ராட்சசன்.

அறையில் ஒளிர்ந்து உருகி கொண்டிருந்த மெழுகுவர்த்தியை விட வேகமாக பெண்ணவளை உருக்கி கொண்டிருந்தான் விஷ்வா.

அவன் விரல்களின் நர்த்தனத்தில் கண்மூடி கிறங்கியிருந்த பெண்ணவளிடம்  சில நேரம் சுருதி கூட்டி சில நேரம் குறைத்து என்று புது புது சந்தங்களை தோற்றுவித்தவன் அதில் காதல் சங்கீதம் இசைக்க தொடங்கி இருந்தான்.

அவன் முத்தங்கள் அவள் மேனி எங்கும் சிந்தி சிதற அழகாய் அவனை தன்னோடு கோர்த்து கொண்டாள் அவன் மனையாள்..!! 

இருவரின் மனதிலும் காதல் ததும்பி நிறைந்திருக்க அதை போட்டிபோட்டு கொண்டு வெளிபடுத்த தொடங்கி இருந்தனர்.

காதல் போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி அவர்கள் காதலை வெற்றி பெற வைக்க போராட தொடங்கி இருந்தனர். தங்கள் காதலை இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்ட தொடங்கியதில் அவர்கள் காதலின் வேகத்தை தாளாது கட்டில் ஆட்டம் கண்டது.

ஆனால் பல வருட காதலின் முன் சில மாத காதல் தாக்கு பிடிக்க முடியாமல் போக ஒரு கட்டத்தில் ஆலிங்கனம் மொத்தமும் தேவ்வின் வசம் சென்றிருந்தது.

தேக்கி வைத்திருந்த விஷ்வாவின் காதல் இன்று அணை உடைத்து ஆர்பரித்து அவளை ஆட்கொண்டதில்  மருத்துவரான ப்ரீத்தியே அரண்டு போயிருந்தாள். 

ஆய்வுகூடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இளம் ஆராய்ச்சியாளன் இன்று தன் காதல் ஆராய்ச்சியை தீவிரமாக மனைவியிடம் மேற்கொள்ள  தொடங்கிட கண்களை மூடி கணவனிடம் தன்னை முழுதாக ஒப்பு கொடுத்து இருந்தவளுக்கு அவனது ஒவ்வொரு தொடுகையிலும் இது வரை அவள் காணாத புது உலகை காட்டி இருந்தான்.

வியர்வை ஆறாக பெருகியபோதும் குறையாத அவர்களின் சங்கமத்தில் திண்டாடி போன பெண்ணவளுக்கு  அவனை கட்டுபடுத்தும் வழி அறியாமல் ஒரு கட்டத்தில் விழி பிதுங்கி போனாள்.

வேக  மூச்சுக்களை எடுத்தவாறே அவன் முகம் நிமிர்த்தி ‘தே..வ்வ்வ்வ்.. பாடுங்க’ என்றாள்.  

அவள் திணறலை  உணர்ந்து உடனே அவள் இதழ் சேர்ந்து தன் சுவாசத்தை அவளுக்கு கடத்தி அவளை மீட்டவன்   மீண்டும் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள முயல அவனை தடுத்து அணைத்தவள் ‘பா.. பா…பாடுங்க’ என்றாள்.

‘வாட்’

‘பா..டுங்கன்னு சொன்னேன் தேவ்’

‘இப்பவா’..

‘எஸ்’

“என்னடி பேசுற..? நோ ஐ கான்ட்” என்றவனின் இதழ்கள் அவள் கழுத்தில்  புதைந்து அவளை கொள்ளை கொள்ள,

‘ப்ளீஸ் தேவ் பாடுங்க’ என்றாள் அவன் முகம் நிமிர்த்தி,

‘ எந்த நேரத்துல என்ன கேக்கிற நீ..?? ஏன்டி பாட்டு பாடற நேரமா இது..?? விட்டா கச்சேரி பண்ண சொல்லுவ போல”

‘ஏன் அன்னைக்கு மட்டும் பாடுனீங்க’

‘என்னைக்குடி..??’  என்றவனுக்கு கற்ற சுவரங்களே மறந்திருக்கும் நிலை இப்போது  இதில் எங்கிருந்து என்றோ பாடியது நினைவில் இருக்கும்..!!

‘ப்ரீத்தி இப்பதான் கச்சேரி களைகட்டி இருக்கு இப்ப போய் பாடுன்னு சொல்லிட்டு’ என்றவாறே அவன் அவள் இதழ்களை சிறை பிடிக்க 

‘ஒருநிமிஷம் தேவ்’ என்றவள்,

‘அதுதான் அன்னைக்கு நீங்க காரடையான் நோன்பு அப்போ நைட் பாடுனீங்களே செல்லமே சொல்லிட்டு அதே போல இப்பவும் பாடுங்க’ என்று அவன் மனைவி கிடுக்கி பிடி போட

‘ஐயோ அன்னைக்கு நிலைமை வேற இன்னைக்கு நிலைமை வேறடி புரியாம சோதிக்காத’ என்று மீண்டும் அவளில் மூழ்க தொடங்க ப்ரீத்தியோ விடாப்பிடியாக, 

‘நீங்க பாடியே ஆகணும் இப்போ’ என்று கூற, 

அவனும் அவள் மார்பில் இளைப்பாறியவன் ‘சொல்லு என்ன பாட்டு’ என்றான் சுரத்தே இல்லாத குரலில் 

‘அதான் சொன்னேனே செல்லம்ன்னு ஆரம்பிக்கும் அந்த சாங்’, 

அவள் மேனியில் அலைபாய்ந்து கொண்டிருந்த கரங்களில் நடுக்கம் கூட “ச்சே… செல்ல..” என்று ஆரம்பித்தவனுக்கு வார்த்தைக்கு பதில் காற்று தான் வந்தது.

ப்ரீத்தியோ இத்தனை நேரம் அவன் வேகத்தில் காற்றுக்கும் தவித்தவள் இப்போதும் நிதானமாக மூச்சை எடுத்து விட்டு ஆசுவாசம் கொண்டவள், ‘என்ன நீங்க பாட சொன்னா புசுபுசுன்னு மூச்சு விடுறீங்க நீங்க பாடிட்டே என்னானாலும் செய்ங்க நான் ஒன்னும் உங்களை ஸ்டாப் பண்ணலை’ என்று பெருந்தன்மையாக கூற, 

‘கிராதகி’ என்று அவளை பார்த்தவன்,

‘ப்ரீத்தி விளையாடாத..’ என்று மோகத்தின் பிடியில் அவள் இதழ்களை கடித்து வைக்க, 

‘எப்பவுமே எல்லா சிச்சுவேஷனுக்கும் சாங் வச்சி இருப்பீங்க இப்போ மட்டும் என்ன…?? எனக்கு ஆசையா இருக்கு அந்த பாட்டு நியாபகம்  வராட்டி  என்ன வேற பாடுங்க’ என்றிட, 

‘உன் ஆசையில தீயை வைக்க’ என்று மனதினுள் கருவியவன்,

‘செல்லம் ப்ளீஸ்டி நான் அப்புறம் பாடறேனே இப்போ எனக்கு வரலை..’

‘அது எப்படி வராம போகும் அன்னைக்கு மட்டும்…’ என்று அவள் ஆரம்பிக்கவும், 

‘அய்யோ நிறுத்துடி அன்னைக்கு வேற இன்னைக்கு வேற’ 

‘அது எப்படி வேற..??’ என்று ப்ரீத்தி புரியாமல் அவனை பார்க்க இனியும் அவளை பேச விட்டால் அவனே உண்மையை உடைத்து விடும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடக்கூடும் என்பதால் பேச்சை மாற்றினான்.

‘கார்ல வரும்போது என்கிட்டே ஒரு டவுட் கேட்டியே’ என்று அவளை பார்க்க, 

‘நோ’ என்று ப்ரீத்தி அவனை தடுக்கும் முன்  

‘எஸ் என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவன், முதல்ல உன் டவுட்டை கிளியர் பண்றேன் அப்புறம் பாடறேன்’ என்று அவள் சந்தேகத்தை தீர்க்க தொடங்கி இருந்தான்.

******************************* 

‘இப்பவாவது பாடுங்க’ என்று ஜன்னல் வழியே ஊடுருவிய காலை கதிரவனின் ஒளியில் அவன் முகம் பார்த்து ப்ரீத்தி கேட்கவும் விஷ்வாவும் குரலை செருமி பாட தொடங்கினான். 

“என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்

என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன் இதுதான்

காதலின் ஐந்து நிலை நான் உன் கையில் நீா்த்திவலை”

என்று அவன் பாடவும் ப்ரீத்தி முகத்தில் சிறு அதிர்வு.. ஆம் இன்றைய நாளில் அவன் அவளுக்கு பாடக்கூடிய பாடல் என்னவாக இருக்கும் என்று அவள் சிறு கணிப்பு வைத்திருந்தாள் ஆனால் அதை எல்லாம் ஒதுக்கி அவன் முற்றிலும் சம்பந்தம் இல்லாமல் பாடுவதை வியப்புடன் பார்த்துகொண்டிருந்தாள்.

ஆனால் பாடிக்கொண்டு இருந்த விஷ்வாவோ அவள் இடையில் கோர்த்திருந்த கரங்களில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் அழுத்தம் கூட்டி கொண்டே சென்றான்.

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இதுமோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இதுமோசமில்லை ஒரு முக்தி நிலை

நம் காதலிலே இது ஆறு நிலை

‘தேவ்’ என்று அவன் கரத்தை பரீத்தி அகற்ற முற்ப்பட அவன் பிடியோ உடும்பாக இருக்க அசைக்க முடியவில்லை பெண்னவளால்..

என்னுயிரே என்னுயிரே
என் ஆருயிரேயே என்னுயிரே
என்னுயிரே என் ஓருயிரே

பாடி முடித்த பின் தான் அவன் கரங்கள் தளர்ந்து அவன் முகம் இயில்பிற்க்கு திரும்பியது.. 

இது நாள் வரை அவன் முகத்தில் அவள் கண்டிராத உறுதி, அப்படி என்ன இந்த பாடலில் அவளுக்கான செய்தி வைத்துள்ளான் அதை எதற்காக இன்று இப்போது பாட வேண்டும்..?? என்ற கேள்வி பிறக்க அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தவன் அவள் புறம் திரும்பி சுழிந்த அவள் புருவங்களை நீவியவாறே.., என்னடா..?? என்றான்.

‘தேவ் அப்போ இந்த பாட்டுல வர மாதிரி ஏழாம் நிலை மரணமா..??’ என்று விளையாட்டாக கேட்க, 

‘ஆம்’ என்ற உறுதி அவனிடம்

‘தேவ்’ என்று அதிர்ந்து அவள் பார்க்க, 

அவனோ விஷமபுன்னகையுடன் ‘ஆமாடி இப்போ உனக்குள்ள ஒவ்வொருமுறையும் செத்து பிழைக்கிறேனே அப்போ நான் ஏழாம் நிலைக்கு வந்துட்டேன் தானே அர்த்தம் அதை சொன்னேன்’ என்று அவன் கண் சிமிட்ட,

‘யூஊஉ’  என்று சிணுங்கலுடன் அவன் மார்பில் சாய்ந்த ப்ரீத்தியிடம் இன்னுமே குழப்பம்.. எதற்கு சம்பந்தமே இல்லாமல் இந்த பாடல் அதிலும்  பாடியவனின் முகத்தில் இருந்த தீவிரம் குரலில் இருந்த அழுத்தம் வரிகளில் இருந்த ஆழம் உணர்ந்து ப்ரீத்தி நெற்றி யோசனையில் சுருங்கி விரிந்தது.

******************************

காலை ஒன்பது மணியளவில் விஷ்வாவின் கைபேசி ஒலிக்கவும் அதன் சத்தத்தில் விஷ்வாவின் மார்பில் இருந்து சற்று விலகி  புரண்டு படுத்த ப்ரீத்தியின் தூக்கம் கலைவதற்குள் கைபேசியை அணைத்து அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து தட்டிக்கொடுத்து உறக்கத்தை தொடர செய்தவன் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்பே மெல்ல எழுந்து அமர்ந்தான்.

சிவந்திருந்த விழிகளுடன் கைகளை நெட்டி முறித்தவனுக்கு அப்போது தான் அலைபேசி நினைவு வர எடுத்து பார்த்தான். அவன் தந்தை தான் உடனே அவருக்கு அழைத்தவன் சத்தமின்றி பால்கனி கதவை திறந்து செல்ல,

‘தேவ் ப்ரேக்பாஸ்ட் ரெடி இன்னும் வரலை நீங்க..??’ என்று கேட்க,

‘ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ்பா வந்துடுறேன்’ என்றவன் குளியலறை சென்று திரும்பி அவசரமாக உடை மாற்றி தலையை கோதிகொண்டே கீழே இறங்கினான்.

ப்ரீத்தி எங்க..?? என்ற வித்யாவின் கேள்விக்கு

‘ஸ்டொமக் அப்செட்ம்மா’ என்றவாறே அவர் கையில் இருந்த ஆதியை தூக்கி கொண்டவன்  வெளியில் சென்று தோட்டத்தில் அவனோடு விளையாடி கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு தேவ் என்று அங்கு வந்த சிவசங்கரன் ‘நானும் அம்மாவும் வெளியே கிளம்பறோம் ஆதியை கூட்டிட்டு போறோம் நீ ப்ரீத்தியை பார்த்துக்கோ’ என்று கிளம்ப,

இருவருக்கமான பழச்சாரோடு  தங்கள் அறைக்கு திரும்பியவன் மீண்டும் அழைப்பு வர அவள் தூக்கம் கெடாத வகையில் கணினியை எடுத்துகொண்டு வெளியில் வந்தவனை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு வேலை  இழுத்து கொள்ள ஹாலில் அமர்ந்து அதை செய்து கொண்டிருந்தான்.

பதினொரு மணி வாக்கில் வேலையை முடித்தவன் மீண்டும் அறைக்கு திரும்ப ப்ரீத்தி ஆழ்ந்த உறக்கத்தில்.

இரவு முழுக்க உறங்காது போனவளின் அயர்ச்சி உணர்ந்தே அவளை தொந்தரவு செய்யாமல் இத்தனை நேரம் அமைதி காத்தான் ஆனால் இப்போது அவளருகே அமர்ந்து அவள் முகத்தை பார்த்தவனுக்கு தன்னை கட்டுபடுத்தும் எண்ணம் இல்லை… பின்னே உறக்கத்திலும் அவள் இதழ்கள் ஒன்றோடு ஒன்று பட்டும் படால் ஒட்டி கொண்டிருக்க அதில் மிச்சமிருந்த புன்னகை அது படர்ந்திருந்த  அழகில் தன்னை தொலைத்தவன் அவளை நோக்கி குனியவும் ப்ரீத்தி கண் விழித்தாள்…

‘குட் மார்னிங்டி பொண்டாட்டி’ என்று விஷ்வா அவள் நெற்றியில் முத்தமிட்டு ‘ஆர் யூ ஓகே’ என்று கேட்க,

‘ஹ்ம்ம்’ என்று மெல்ல தலை அசைத்தவளின் இமைகள் தானாக அவன் முகத்தில்  இருந்து விலகி அவன் மார்பில் படிய,

‘எப்போ எந்திரிச்சீங்க’ என்றவாறே நேரத்தை பார்க்க அது பதினொன்றரை,

‘கடவுளே இவ்ளோ நேரமா தூங்கினேன் என்னை எழுப்பி இருக்கலாம்ல நீங்க’ என்று பதட்டத்தோடு  தன் எதிரே குளித்து உடை மாற்றி இருப்பவனை  பார்க்க

விஷ்வாவோ ‘ஈசி ஈசிடி’ என்றவாறே  அவள் போர்வைக்குள் நுழைய..,

அவளோ அதை இறுக்கி பிடித்து கொண்டு என்ன பண்றீங்க..?? 

‘அதுவா..??’ என்று அவளிதழ்களை வருடியவன் ‘இன்னும் நிறைய பேருக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டி இருக்குடா அதான்’

‘வாட் தேங்க்ஸ்சா என்ன தேங்க்ஸ்..??’ என்று புரியாமல் அவள் பார்க்க,

விஷ்வா விஷமபுன்னகையுடன் அவளை நெருங்கியவன்  “நேத்து எத்தனை பேர் என் பேச்சை கேட்டாங்க அவங்களுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா..??” என்று கேட்க,

ப்ரீத்திக்கு சுத்தமாக அவன் சொல்ல வருவது புரியாமல் அவனையே பார்த்திருக்க..,

‘அதாண்டா’ என்று அவள் காதில் தன் அதரங்களை பொருத்தியவன்..,

‘என் பேச்சை கேட்ட காதுக்கு, கைக்கு, காலுக்கு  தான் இதுவரை தேங்க்ஸ் சொல்ல வாய்ப்பு கிடைச்சது மத்தவங்களுக்கும் சொல்லணுமே இல்லனா அவங்க’ என்று ஆரம்பிக்கவும் அவசரமாக அவன் வாயை மூடியவள் அவனை முறைத்து பார்க்க,

“நான் எல்லாம்  உடனே தேங்க்ஸ் சொல்லிடுவேன் கடன் வைக்கமாட்டேன்…” என்றவாறே அவள் போர்வையினுள் நுழைய,

அவனை நுழையவிடாமல் அதை சுருட்டி பிடித்தவள், ‘தேவ் விளையாடாதீங்க  நான் இன்னும் குளிக்கலை.. ஆதி , அத்தை, பாட்டி, எல்லாரும் காத்திருப்பாங்க’ என்று அவஸ்த்தையாக அவனை பார்க்க,

“சோ வாட்..?? நான் தேங்க்ஸ் சொல்லி முடிச்ச பிறகு மொத்தமா குளிச்சிக்கோ” என்று சிரிக்க, 

‘நோ’ என்று உடனே கட்டிலில் இருந்து இறங்கியவள் போர்வையோடு குளியலறையினுள் நுழைந்து கதவை தாளிட முயல அதற்குள் விஷ்வா கதவை சாற்ற விடாமல் செய்திருந்தான்.

“தேவ் ரொம்ப அக்கிரமம் பண்றீங்க விடுங்க” என்று அவள் சிணுங்கிட,

“நான் என்னடி பண்ணேன்..?? உனக்கு குளிக்கணும்ன்னா நீ குளி நான் வேண்டாம் சொல்லலையே ஆனா நான் எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்” என்றவன் ஒரு கையால் தன் சட்டை பட்டனை கழற்றிட,

“தேவ் ப்ளீஸ் நான் குளிச்சிட்டு வந்துடறேனே..,” என்ற அவள் வார்த்தைகள் எதுவும் அவனிடம் எடுபடாமல் போக அவளோடு குளியலறைக்குள் நுழைந்தவன் நன்றி சொல்லியே அவளை சிவக்க வைத்து, சிலிர்க்க வைத்து, குளிக்க வைத்து, தானும் குளித்து வெளியில் வந்தான். 

நேரம் மதிய உணவு வேளையை கடந்திருப்பதை கண்டவள்.., “போங்க நீங்க  இவ்ளோ நேரமாகியும் நான் கீழ் போகலைன்னா அத்தை பாட்டி எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க…, ஆதி வேற என்னை தேடி இருப்பானே” என்று ப்ரீத்தி வெளியே செல்ல முற்ப்பட, 

‘உட்காருடி’ என்று அவளை பிடித்து அமர்த்தியவன்,  ‘கீழ யாரும் இல்ல அம்மா அப்பா ஆதியோட வெளியே கிளம்பியாச்சு, பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க, வர்ஷு காலேஜ் போயாச்சு’ என்று கூறவும் தான் மனதில் நிம்மதி எழ, ஒரு நொடி கண்மூடி அமர்ந்தாள்.

Advertisement