Advertisement

இரவு  நேர உணவகம். இவன் காருக்கு பக்கத்தில் வேறு ஒரு கார்  நின்றது. சிவனேஷ்வரன், பிரபாகரன், பாண்டி வந்தனர். ஜனகன் மூவரையும் அணைத்து கொண்டான். அடுத்து மற்றொரு கார் வந்து நின்றது. அதில் இருந்து சரித்திரன் இறங்கினான்.

நால்வர் கூட்டணி டேபிளில் அமர்ந்தனர். “இவ்வளவு தானா..? இன்னும் ஆள் சேர்ப்பியா..?” பிரபாகரன் கடுப்பாக சிவனேஷ்வரனை பார்த்தான். “உன் ரவுடி சகவாசத்தையே போனா போகுதுன்னு விட்டு வைச்சுட்டு  இருக்கேன், இதுல கலெக்டர், அரசியல்வாதின்னு கூடிட்டே போகுதே.. ஏண்டா உங்களுக்கெல்லாம் பொண்டாட்டி பிள்ளை இல்லையா.. எப்போ பாரு கூட்டம் போட்டுக்கிட்டு..” என்றான்.

“அது ஒன்னுமில்லை.. சாருக்கு பொண்டாட்டியோட இருக்க முடியலன்னு காண்டு.. நாங்க மீட் பண்றப்போ எல்லாம் பசங்களை கழட்டி விட்டுட்டு வந்திடுவான், இப்போ நாம அதை ஆக்குபை பண்ணிட்டோம் இல்லை..” சிவனேஷ்வரன் சிரித்தான்.

“தெரியுது இல்லை.. என்னை ஏண்டா தூக்கி போட்டுட்டு வர..” பிரபாகரன் அவஸ்தையுடன் தலை கோதி கொண்டான். நடுராத்திரி வீடு திரும்பினால் இந்திரஜா “உங்க ப்ரண்டோட இருக்க வேண்டியது தானே..?” என்று கிட்டவே சேர்க்க மாட்டாள். அவன் கவலை அவனுக்கு.

“சரி கவலைய விடு டியர்கிட்ட நான் தான் கூட்டிட்டு வந்தேன் சொல்றேன்..” சிவனேஷ்வரன் குறும்பாக சொல்ல,

“நீ ஒன்னும் கிழிக்கவே வேணாம். ஒரு நாள் சண்டையை ஒரு மாசமா மாத்திவிடுவ..” பிரபாகரன் உஷாராக சொன்னான்.

“அப்போ நான் அப்படியா..?” சிவனேஷ்வரன் முறைப்பாக பார்க்க,

“நீ அப்படி தான்.. போடா..” என்றான் நண்பன்.

ஜனகன், சரித்திரன் சிரிக்க காபி, டீ வந்தது. குடித்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு நால்வரும் கிளம்பினர்.

ஜனகன் வீடு வர, தேவேந்திரன் வீட்டில் இருந்தார். ‘வந்தாச்சா..?’ ஜனகன் உள்ளுக்குள் சிரித்தவன், வெளியே விறைப்பாய் அமர்ந்தான். “வீடு வந்த மாமனாருக்கு டீ, காபி கேட்கிற பழக்கம் இருக்கா பாரு..” அவர் சொல்ல,

“இது எங்க வீடு இல்லைங்க.. நானே கெஸ்ட் தான்..” என்றான் அவரை சீண்டி

“என்னடா பேச்சு இது, கெஸ்ட் அது இதுன்னு.. காபி, டீ வாங்கி கொடுக்க கஞ்சம் பண்ணிக்கிட்டு பேச்சை பாரு..”

“பின்ன நான் என்ன உங்களை மாதிரி தொழிலதிபரா.. சாதாரண கவர்மெண்ட் எம்பிளாயி. குடும்பம் நடத்தவே  சம்பளம் பத்த மாட்டேங்கிது..” என்றான் பாவமாக.

“இதுக்கு தான் சொல்றேன். போதும் வேலையை விட்டிட்டு ஊருக்கே வந்துடுன்னு..” என்றார் உடனே.

“ஆரம்பிச்சிட்டீங்களா..?” ஜனகன் தலை ஆட்டி கொண்டான்.

“நான் முதல்ல நீ பேங்க் வேலைக்கு போற சொன்னபோவே என் பொண்ணு உனக்கு கொடுக்க நினைச்சு தான் சரி சொன்னேன், நீ என்னடான்னா இப்போ ஸ்டேட் ஸ்டேட்டா சுத்துற.. எனக்கு பிடிக்கவே இல்லை..” என்று முகம் சுருக்கினார்.

“மாமா.. வேலை விட எல்லாம்  வாய்ப்பே இல்லை..” மருமகன் உறுதியதாக சொல்லிவிட்டான்.

“உனக்கு என்னடா நான் அடிக்கடி வந்துட்டு போறேன், வயசிருக்கு. அப்பறம் என்னால இப்படி அலைய முடியுமா..”

“அப்புறம் கதையை அப்பறம் பார்ப்போம்.. என்னை பார்க்க வரதை விட உங்களுக்கு பெரிய வேலை ஒன்னுமில்லை.. தூங்க போங்க, காலையில கிளம்பணும்..” என்றான்.

“நான் இப்படியே ஊருக்கு..”

“உங்களுக்கும் சேர்த்து தான் பிளைட் டிக்கெட் எடுத்திருக்கு.. இரண்டு நாள் இருந்துட்டு வரலாம். நான் அக்காகிட்ட பேசிட்டேன், அதிதி மாப்பிள்ளையோட அங்க தானே இருக்கா..” என்றுவிட்டவன், அவருக்கு சூடாக பால் வரவைத்து கொடுத்து வந்தான்.

” நினைச்சா பிடிவாதம் தான்..”

“அப்படி தான்.. தூங்குங்க..” என்றான் மாப்பிள்ளை. தேவேந்திரன் முறைத்தாலும் ஜனாவுடன் அடுத்த இரண்டு நாள் என்பதில் தூக்கத்திற்கு சென்றார்.

ஜனகன் அப்பாம்மா அறைக்கு சென்று தன் அறைக்கு வந்தான். பொம்மி நல்ல தூக்கத்தில். பிரபாகரன் புலம்பல் நினைத்து சிரித்தவன், வழக்கம் போல மனைவி மேலே விழுந்து வைத்தான்.

“மாமா..” பெண் வலிக்கு அலறி எழுந்தாள். இன்னைக்கு தூக்கம் போச்சு. புரிந்து போனது.

அதற்கேற்றது போல் கணவன் அவன் இடம் சென்றிருந்தான். பொம்மி அவன் உச்சி முடி பிடித்து தூக்கியவள், “செம டையார்ட்.. நாம கண்டிப்பா  தூங்க தான் போறோம்..” என்றாள்.

“தூங்க மாட்டோம்ன்னு நான் எப்போடி சொன்னேன்..? கொஞ்சம் லேட்டா அவ்வளவு தான்..” என்றான் மூக்கை உரசி.

  “மாமா..” என்ற பெண்ணின் மறுப்பு சில நொடிகளிலே சிணுங்கலாக, வெட்கமாக, தவிப்பாக, முனைகலாக மாறி போனது.

தன்னோடு சேர்த்து பிடித்திருந்த கணவன் நெஞ்சில் அடித்தவள், “வலிக்குது மாமா.. போங்க..” என்றாள் கழுத்தை தடவியபடி.

“நான் என்ன பண்ணட்டும்.. அப்போ நல்ல வாட்டமா சிக்குது.. கடிச்சு வச்சிடுறேன்..” என்றான் கண்ணடித்து.

“எனக்கும் நிறைய இடம் வாட்டமா தான் இருக்கு, இருங்க நானும் கடிச்சு வைக்கிறேன்..”  என்றாள் மனைவி மிரட்டலாக.

“அப்போ இது எல்லாம் யார் கடிச்சு வைச்சுதாம்.. என்னமோ கடிக்காத மாதிரியே..” என்றவனை இன்னும் கடித்து வைத்தாள் மனைவி.

“அஹ்ஹா.. ஏய்.. போதும்டி..” என்றவனின் மெல்லிய அலறலில், அந்த பயம் இருக்கட்டும்.. என்று மனைவி விட்டாள்.

“பொம்மி.. ஊதி விடுடி..” என்றான் காயம் காட்டி.

“என்னை பொம்மி கூப்பிடாம எத்தனை நாள் காக்க வைச்சுட்டீங்க.. ஊத மாட்டேன் போங்க..” என்றாள் மனைவி.

“அதான் பெரியவன் உண்டானப்போ கூப்பிட்டேன் இல்லை..” என்றவன் அவள் உதடுகளை வருடினான்.

பொம்மி அவன் விரலை தட்டிவிட, ஜனகன் இது தான் வாய்ப்பென்று தட்டிவிட முடியாதபடி தன் உதடுகளால் பிடித்து கொண்டான். மென்மையும், வன்மையும் கலந்து பிரிக்கவே முடியாதபடி ஒரு ஆழ்ந்த முத்தம்.

பொம்மி மூச்சு வாங்கி பிரித்தெடுத்தவள், “சேர்ந்தா விடவே மாட்டேங்கிறீங்க மாமா..” என்றாள்.

“அது என்னை விட மாட்டேங்குதுடி.. உன்னை போல தான் உன் உதடும்..” என்றான் ரசனையாய்.

“நான் என்ன பண்ணேனாம்..?”

“அது தான் எனக்கும் புரியல.. இப்போவரை நான் உனக்கு ஒண்ணுமே செஞ்சதில்லை. ஆனா நீ எனக்கு எப்போவும் இருந்திருக்க, இனியும் சைலென்ட்டா என்னோட இருப்ப, எனக்கு தெரியும். ஆர்ப்பாட்டமே இல்லாம ரொம்ப அமைதியா என்னை தாங்கி பிடிச்சிட்டிருக்கடி..” என்றான் உணர்ந்து.

பொம்மி அமைதியாக சிரிக்க, “உன்னை நினைச்சாலே இங்க என்னமோ பொங்கி வருது.. அது.. அந்த பீலிங்.. அது என்னன்னு எனக்கு சரியா சொல்ல தெரியல, பட் ஏதோ கண்டிப்பா பண்ணுது.. நாளுக்கு நாள் அது கூடிட்டும் போகுதுடி..” என்று நெஞ்சை தொட்டு காட்டி சொன்னான்.

பொம்மிக்கு அவன் வார்த்தைகளை விட, அவன் முகம். அதில் தெரிந்த அந்த அழகான புன்னகை, ரசித்து சொன்ன விதம்.. இடையில் சிக்கி தவிக்கும் மெல்லிய தவிப்பு எல்லாம் அவளை அவனிடம் கட்டி இழுத்து சென்றது. அமைதியாக கணவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“முன்னமே உன்னை பிடிச்சு தான் கட்டினேன்டி.. ஆனா நம்ம கல்யாணம் முடிச்சு வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நீ ஏதோ எனக்குன்னே பிறந்து வந்த மாதிரி. உன்னை சேரத்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்ட மாதிரி.. என்னாலே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாம அப்போ தினமும் உன்ன அந்த பாடு படுத்திட்டேன்..”

“இப்போ மட்டும் படுத்துறதில்லையா மாமா நீங்க..” மனைவி கழுத்தை பார்த்து கேட்க,

“இன்னும் கூட படுத்துவேன்.. நீ உன் இடத்துல இருந்துட்டே என்னை உன்கிட்ட இழுத்துகிற இல்லை, அப்போ அனுபவி..” என்றான்.

“இனிமே நான் இழுத்தாலும் நீங்க வராதீங்க மாமா, என்னால முடியல..” மனைவி சொல்ல,

“அது முடியாது.. எனக்கு இது பிடிச்சிருக்கு, இன்னும் கூட என்னை உன்கிட்ட இழுத்துக்கோடின்னு கேட்க தான்  தோணுது..” என்றவன் ஆழ்ந்த கன்னத்து முத்தம் வைத்தான்.

“என்னை சுத்தி  எத்தனை பேர் எனக்கு இருந்தாலும் நீ சத்தமே இல்லாம எனக்கு கொடுக்கிற அந்த பீல். அது வேறடி. டிவைன்.. என்னோட பொம்மிடி நீ..” என்றவன் பொங்கி வந்த உணர்வோடு அவளை தன் நெஞ்சில் போட்டு அழுத்தி கொண்டான்.

“என் இதய துடிப்பு அவளுக்கு சொல்லட்டும் என் உணர்வை..” சொல்லியது போல. மனைவி சிரித்தாள்.

“கண்ணு.. மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறியா..?” அப்பா கேட்ட கேள்வி.

“நானா..?” அதிர்ந்து நின்ற மகள்.

“நீ தான் கண்ணு.. உன்னை ஏன் அவன் பொம்மி சொல்லி கூப்பிட ஆரம்பிச்சான் எனக்கு தெரியாது. ஆனா அவன் முதல் பேர் என்ன தெரியுமா மதுரை வீரன். அவனோட குலசாமி. அவனோட பொம்மி நீ தான் கண்ணு..” என்றார் தந்தை.

“என் மாமாவோட பொம்மி நான் தான்..” துடிக்கும் அவன் துடிப்பு அவளை தான் சொன்னது. கணவனை போல இவளும் ஆழ்ந்த முத்தம் பதித்தாள். இவள் மனதை சொல்லாமலே. இவளின் அந்த முத்தமே கணவனுக்கு மனைவியை சொன்னது.

‘வாய் திறந்து சொல்லாமலே என்னை சாய்ச்சிடுறா..’ ஜனகன் அணைப்பு இறுகியது. அவள் ஸ்பரிசம்.. அது தரும் அமைதி..  அபரிமிதமானது.

வேறு எங்கும், யாரிடமும் இது கிடைக்காது.. கண்டுகொண்டான் கணவன். அவள் மேல் காதலும் கொண்டான். இது தான் காதல் என்று தெரியாமலே..!  ஹாஹா.. தெரிய வேண்டியவளுக்கு அது தெரிந்து தான் இருந்தது. அனுபவித்தாள் கணவன் காதலை. அவனிடம் ஈர்த்து வாழ்ந்தாள் அவனின் பொம்மி. இந்த மதுரை வீரனின் பொம்மி.

Advertisement