Advertisement

கணநேரத்தில் சுதாரித்து, “நீ என்னை தொலைச்சு கட்டிடுவியா..? முடியுமா உன்னால..?” என்று நக்கலாக கேட்டார்.

“என்னால என்ன பண்ண முடியும் எனக்கு தெரியும்.. அப்போ இருந்த தேவேந்திரன் இல்லை நான் உன் மிரட்டலுக்கு பயந்து என் மாப்பிள்ளையை ஊரை விட்டு அனுப்ப. சாய்ஸ் கொடுக்கிறானாம் சாய்ஸ், நீ என்னடா எனக்கு சாய்ஸ் கொடுக்கிறது..? உனக்கு அப்படி ஒன்னு கிடையவே கிடையாது. ஒழுங்கா நீயே என் மருமகன் வழில இருந்து விலகி போயிடு.. இல்லை அவன் உன்னை எதாவது செய்றானோ இல்லையோ நான் உன்னை இறங்கி செய்ய ஆரம்பிச்சிடுவேன்.. என் உயிரை பத்தி எனக்கு அநாவசியம், என் குடும்பத்தை பத்தி கவலையே இல்லை. ஜனா இருக்கான்டா அவங்களுக்கு. இப்போ இங்க வரியா ஒத்தைக்கு ஒத்தை பார்த்துடலாம்..” என்று சவாலாக அழைக்க,

“அதுக்கு அவசியமே இல்லை..” என்ற குரலை தொடர்ந்து ஜனகன் உள்ளே வந்தான். உடன் அவரின் இரு அண்ணாக்கள், வேறு சில ஆட்கள், இறுதியாக பாண்டியுடன் அண்ணாச்சி.

இவங்க எல்லாம்.. என்று தீனதயாளன் பார்க்க, “என்ன தீனா இது..?” என்று அண்ணாச்சி அதிகாரமாக கேட்டார்.

“அண்ணாச்சி.. நீங்க இதுல தலையிடாதீங்க..” தீனதயாளன் சொல்ல,

“இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கணும், அப்போ என்னை வைச்சு இவரை ஊரை விட்டு துரத்திட்டு இப்போ வந்து சொல்ற..?” அண்ணாச்சியும் கேட்டு வைத்தார்.

“அன்னைக்கும்  நான் உங்களை கூப்பிடல, இன்னைக்கும் நான் உங்களை கூப்பிடல..” தீனதயாளன் திமிராக சொல்ல,

“சரிதான்.. அன்னைக்கு கூப்பிட்டதும் இவங்க தான், இன்னைக்கும் கூப்பிட்டதும் இவங்க தான்.. ஆனா அடுத்து நடக்க போறதுக்கு நான் பொறுப்பில்லை, பார்த்துக்கோ..” என்றார் அவர் இகழ்ச்சியாக.

“அப்படி என்ன பண்ண போறாங்க..?” தீனதயாளன் பார்வை ஜனகனை கோவமாக தொட்டது.

அவன் இரு பேண்ட் பேக்கெட்டில் கை விட்டு நிமிர்ந்து நின்றவன், “இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் இவர் அடங்காம என் மாமாவை டார்கெட் பண்ணியிருக்கார்ன்னா நானும் இனி அமைதியா இருக்கிறதுல அர்த்தமில்லை..” என்றவன் பார்வை தீனதயாளன் போன் மேல் பட, அது சரியாக ஒலித்தது.

தீனதயாளன் சந்தேகத்துடன் எடுத்து காதில் வைக்க, அவர் பதுக்கி வைத்திருந்த சட்டத்திற்கு புறம்பான கிரானைட் கற்களை அதிகாரிகள் சீஸ் செய்துவிட்டனர் என்றனர். அதன் உரிமையாளர் தர்ஷன் என்பதால் அவனையும் கைது செய்ய போகின்றனர் என்றனர்.

“இதை அதிகாரிகளுக்கு சொன்னது யார் தெரியுமா என் கடைசி மாமாங்க..” என்றான் ஜனகன். தீனதயாளன் கோவமாக, “என்னை மாட்டிவிட என் ரூம்ல  லஞ்சம் பணம் வைக்க சொன்ன, அவங்க உன்னை மாட்டிவிட்டுட்டாங்க. என் மாமாங்களுக்கு பணம், சொத்து ஆசை இருக்கலாம், ஆனா துரோகம் பண்ண மாட்டாங்க, அப்படிப்பட்டவங்களுக்கு எங்க அக்காவை நாங்க கொடுக்கவும் மாட்டோம்..” என்றான் கர்வமாக.

தீனதயாளன் அதிர்ந்தாலும் சமாளித்து கொண்டார். ‘கிரானைட் போனா போகட்டும், என் மகனை நான் காப்பாத்திடுவேன்..” என்று தைரியமாக நிற்க, ஜனகன் பார்வை அண்ணாச்சியை தொட்டது. அவர் அங்கிருந்த வெளி ஆட்களை வெளியே போக சொன்னார்.

கதவை மூடி, பாண்டி கையோடு எடுத்து வந்திருந்த லேப்’பில் ஒரு வீடியோவை ஓடவிட்டான். அதில் தீனதயாளனின் முன்னால் ட்ரைவர்,  கட்சி தலைவர் பதவிக்காக தீனதயாளன் எடுத்த ஓர் உயிரை பற்றி வாக்குமூலம் கொடுத்து கொண்டிருந்தான். இந்த அதிர்ச்சியை அவரால் சமாளிக்க முடியவில்லை. நடுங்கி போனார் மனிதர்.

“அவர் உங்க கட்சியோட முக்கியமான ஆளு தான்.. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.. தலைவர் பதவிக்காக இவருக்கு சப்போர்ட் பண்ணாம சரித்திரன் சார் அப்பாக்கு சப்போர்ட் பண்ணார்ன்னு அந்த மனுஷனையே கொன்னிருக்கார்.. இந்த வீடியோ மட்டும் வெளியே வந்துச்சு சொந்த கட்சி ஆளுங்களே இவரை பதம் பார்த்துடுவாங்க, லட்சம் பேர் இருக்கான், போற போக்குல எவனாவது எதாவது பண்ணிட்டு போயிட்டா அப்பறம் ஐயோன்னா வருமா, அம்மான்னா வருமா..?” என்று கடைசி வார்த்தைகளை அழுத்தமாக கோர்த்து சொன்னவன் பார்வை அண்ணாச்சியை துளைத்தது.

 அவர் துண்டை எடுத்து முகத்தை துடைத்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் ஜனகன் அம்மாவை மிரட்டி சொன்ன வார்த்தைகள் அது. இப்போதும் அதை நினைவு வைத்து சொல்லும் ஜனகனை அவரால் பார்க்க முடியவில்லை.

கட்சி ஆட்கள் இடையே இந்த விஷயம்  கசிந்தால்.. தீனதயாளன் வெலவெலத்து போய் டேபிள் பிடித்து விட்டார். அந்த முக்கிய உறுப்பினர் மேல் அபிமானம் கொண்ட தொண்டர்கள் இன்றும் கட்சியில் ஏராளம். அவரை நான் தான் கொன்னேன் என்று தெரிந்தால் நினைக்கவே நெஞ்சு அதிர்ந்தது. “இப்.. இப்போ.. நான் என்ன பண்ணனும்..?” என்று தானே  கேட்டார்.

“எடுத்ததை திருப்பி கொடுக்கணும்..” என்றான் ஜனகன்.

“அந்த மூணு ஏக்கருக்கா இவ்வளுவும்..” தீனதயாளன் அதிர்ச்சியுடன் கேட்க,

“நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன்..” என்றான் ஜனகன்.

ஒரு மூன்று ஏக்கருக்கு ஆசைப்பட்டு என் இரு தலைவர் பதவியும் போனதோடு தலைக்கு மேல் கத்தியும் தொங்குதே..

ஜனகன் அவரை புரிந்து சிரித்தவன், “அந்த இருபது ஏக்கரை நீங்க உங்க பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணதோடு விட்டிருக்கணும்.. அதுக்கு மெயின் ரோடு வழிக்காக கோவில் நிலத்துல கை வச்சிருக்க கூடாது.. பாருங்க இப்போ சாதாரண வழிக்கு ஆசைப்பட்டு நீங்க ரப்பர் பேக்டரிங்கிற பேர்ல பதுக்கி வைக்க நினைச்ச கிரானைட் எல்லாம் போச்சு, உங்க மகனும் ஜெயில் போக போறான், போதாக்குறைக்கு இந்த வீடியோ வேற..” என்றான் அவரை வெறுப்புடன் பார்த்து.

“இந்த.. இந்த வீடியோ.. நான் மூணு ஏக்கரை கொடுத்துட்டா இந்த வீடியோ வெளியே போகாது இல்லை..” என்று தீனதயாளன் கேட்க,

“கண்டிப்பா.. எனக்கு இது தேவையும் இல்லை. என் வேலையும் இது இல்லை..” என்றான்.

“அதுக்கு பிறகு அவங்க வழிக்கும் நீ போக கூடாது தீனா.. இனி உனக்கும், இவங்களுக்கும் சம்மந்தமே கிடையாது.. நீ உன் வழியை பாரு, அவங்க அவங்க வழிய பார்க்கட்டும்.. இதோட எல்லாம் முடிஞ்சு.. புரிஞ்சுதா. வாக்கு கொடுங்க இரண்டு பேரும்..” என்று அண்ணாச்சி கேட்டார்.

தீனதயாளனுக்கோ ஜனகன் மேல் இன்னும் கோவம் கூடிப்போனாலும் அவருக்கு வேறு வழியும் இல்லை. இருக்கும் பேரையாவது காப்பாற்ற வேண்டுமே. கொலை குற்றம் என்றால் சாதாரணமா..? வெளியே தெரிந்தால் அவர் கௌவரம், தொழில் எல்லாம் என்னவாவது..?

தலை நிமிர்ந்து நடந்து விட்டு தலை குனிந்து நடப்பதற்கு ஜனகனை கண்டுகொள்ளாமல் விடுவது எவ்வளுவோ மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர், அண்ணாச்சிக்கு வாக்கு கொடுத்தார். ஜனகனும் எந்தவொரு மறுப்பும்  இல்லாமல் சட்டென வாக்கு கொடுத்துவிட்டான். அதில் தீனதயாளனுக்கு லேசான சந்தேகம் தான்.

 அவனை தொடர்ந்து தேவேந்திரன் அண்ணாக்கள் கொடுக்க, தேவேந்திரன் மறுத்தார். “எனக்கு இந்தாள் மேல நம்பிக்கை இல்லை..” என்றுவிட்டார். அதெப்படி என்று அண்ணாச்சி கேட்க, “அவர் மகனும் தானே வாக்கு கொடுக்கலை.. அதே போல எங்க பக்கம் நான் இருந்துட்டு போறேன்..” என்று முடித்துவிட்டார். ஜனகன் அவரை வற்புறுத்தவில்லை.

“நாளைக்கு பத்து மணிக்கு ரெஜிஸ்ட்ரேஷன்..” ஜனகன் அறிவுறுத்தி தன் ஆட்களுடன் கிளம்பிவிட்டான்.

இன்று வாங்கி நாளை திருப்பி கொடுக்க போகிறார்.. ம்ஹ்ம்..

பாண்டி அங்கிருந்து கிளம்பியிருக்க, கார் நேரே தேவேந்திரன் வீடு சென்றது. பானுமதி அம்மா வீட்டிலே இருந்தார். அண்ணாக்கள் சிறிது நேரம் இன்று நடந்ததை பேசி கொண்டிருந்துவிட்டு செல்ல, கிளம்ப போன ஜனகன் கையை பிடித்து கொண்டார் தேவேந்திரன்.

அவன் மரம் போல் நிற்க, “எனக்காகவாடா.. நான் சொன்னதுக்காகவாடா..” என்றார் வைரமாய் தேங்கி விட்ட துளியுடன்.

 “உன் பதவிக்கு இந்த வேலை எல்லாம் அழகில்லை, அது தான் சொன்னேன். நீயும் புரிஞ்சுகிட்டு அந்த தீனதயாளனை கணக்கு கழிச்சு விட்டுட்ட.. ரொம்ப சந்தோசம். இது போதும். என் ஜனா பழையபடி இருக்கனும். செய்ற வேலையில தனிப்பட்ட ஆதாயம் இல்லாமல் நேர்மையா உழைக்கணும், அதுவும் நீ இருக்கிற பதவி.. உயர்ந்த பதவி, இன்னும் நாணயமா இருக்கணும்டா. நீ இருப்ப. எனக்கு தெரியும்.. சந்தோசம்.. ரொம்ப சாந்தோஷம். என் ஜனா இப்படி தான்..” என்று அவன் தோளில் தட்டி திரும்ப அணைத்து கொண்டார்.

ஜனகன் அவரை திமிறியவன், “யாருக்காகவும் நான் இதை செய்யல.. ஓவரா கிரடிட் எடுத்துக்க வேணாம்..” என்றான் எங்கோ பார்த்து.

“நான் அப்படி தான் எடுத்துப்பேன்.. எனக்கு க்ரெடிட் கிடைக்காம வேற யாருக்காம்..” தேவேந்திரன் கேட்க,

“ஏன் எனக்கு அப்பாம்மா இல்லையா, அக்காங்க இல்லையா, பொண்டாடி தான் இல்லையா.. அவங்க எடுத்துப்பாங்க..” என்றான் வீம்பாக.

“எல்லாம் எனக்கு அடுத்து தான், மூணு வயசுலே  என் முன்னாடி ஜட்டியோட  நின்னவனை மருமகனேன்னு  தூக்கி கொஞ்சினவன்டா நான், எனக்கு உன்கிட்ட இல்லாத உரிமையா..”

“அதான் அடிச்சிட்டியே அப்பறம் என்ன..?” அவரை கடுப்பாக விலகிவிட்டான்.

“அவச்சொல்லா பேசினா கோவம் வரத்தான் செய்யும், ஏற்கனவே எப்போ என்ன நடக்கும்ன்னு தெரியாம இருக்கும் போது அப்படி பேசினா விடுவாங்களா..?”

“உனக்கு என்னைக்கு தான் என்மேல நம்பிக்கை இருந்துச்சு..”

“எப்போவும் இருந்துச்சு.. ஆனா உன்னோட பாதுகாப்பு முன்னாடி எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லை, ஏன் என் பொண்ணையே ஆறு வருஷம் உனக்காக வச்சிட்டிருக்கலை நான்..?”

“நீ சொல்லலைனாலும் என் பொம்மி எனக்காக காத்திருந்திருப்பா.. அவ வேற, நாங்க வேற, இதுக்கு நீ கிரெடிட் எடுக்க நான் விடவே மாட்டேன்..” மனைவியின் விஷயத்தில் அவன் விட்டு கொடுப்பதாக இல்லை.

“சரிடா அப்டியே இருக்கட்டும்.. இப்போ என்ன.. அவ என் பொண்ணு தானே..”

“நோ.. என்னோட பொம்மி மட்டும் தான், நான் போகணும். என் பொண்டாட்டி எனக்காக காத்திருப்பா உங்களோட பேசிட்டிருக்க எனக்கு நேரமில்லை..”

“அவளை பெத்து கட்டி கொடுத்த என்கிட்ட பேச நேரமில்லையா..”

“நீங்க செஞ்ச ஒரே நல்லது என் பொம்மியை எனக்காக பெத்து கொடுத்தது தான்.. அதுக்காக உங்களை விடுறேன்..” என்றான் இவன்.

“அப்படி ஒன்னும் என் மகளுக்காக என்னை விடணும்னு இல்லை, நான் உனக்கு முன்னாடியா, அவ உனக்கு முன்னாடியா..?”

“நீங்க முன்னாடியே இருந்துட்டு போங்க.. ஏன்னா அவளும் நானும் வேற இல்லை..” என்றவன் கிளம்பிவிட்டான்.

தேவேந்திரன் சிரித்து கொண்டார். ஜனகன் கண்ணாடி வழியே அவரை பார்த்து சிரித்து செல்ல, ராஸ்கல்.. திட்டி வீட்டுக்குள் சென்றார் இவர்.

ஜனகன் வெளிபடிக்கட்டு வழியே ரூம் வர, பொம்மி ஆழ்ந்த தூக்கத்தில். “க்கும்.. ஜம்பமா சொல்லிட்டு வந்தா தூக்கத்தை பாரு, அதுசரி அந்த மனுஷன் மக தானே..” காண்டாகி அவள் மேலே விழுந்து எழுப்பிவிட்டான்.

“மாமா..” அவள் வலிக்கு கத்தி எழ,

“நான் வரதுக்குள்ள என்னடி தூக்கம் உனக்கு..?” என்றான் அதிகாரமாக.

“அர்த்த ராத்திரில வந்திட்டு ரொம்பத்தான் அதிகாரம்.. முதல்ல தள்ளி படுங்க மாமா.. மூச்சு விட முடியல..” என்றாள் மனைவி.

“இனி எங்க தள்ளி படுக்க..? வாய்ப்பே இல்லை..” என்றவன் உதடுகள் அவளுள் புதைந்து போனது.

“இன்னைக்கு ரெஸ்ட் மாமா.. பெண் சொல்ல,

“முடிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்..” என்றான் இவன்.

“மாமா.. போதும்.. வெளியே கழுத்தை தூக்கவே முடிய மாட்டேங்குது, யாராவது பார்த்தா மானம் போகும்..”

“தூக்காத.. நான் பார்த்து ஈரம் பண்ண மட்டும் தான் இது..?” என்று கடித்து வைத்தான்.

“மாமா..” என்ற அவளின் கெஞ்சல், கொஞ்சல், சிணுங்கல் மட்டும் ஓயவே விடவில்லை அவன்.

ஒவ்வொரு நாளும் மனைவி மேல் புதிதாக பாயும் பித்ததிலிருந்து கணவன்  தெளியவே போவதில்லை. அமைதியாக அவள் இடத்தில் இருந்து கொண்டு அவனை ஈர்க்கிறாள்.

Advertisement