Advertisement

திருமணத்திற்கு அவன் பெண் கேட்க வேண்டும், என் பெண்ணை சகல மரியாதையுடன், கௌரவத்துடன்  அனுப்ப வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை அவன் நிறைவேற்றி வைத்திருந்தானே..!

ஆம்.. திருமண நாள் அன்று சரியாக கோவில் கிளம்பும் முன் மண்படத்தில் வைத்து என்னிடம், என் அண்ணாக்களிடம் “உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க..” என்று மிகவும் மரியாதையுடன் கேட்டானே.

“மாப்பிள்ளை வந்து எங்ககிட்ட முறையா ஒரு வார்த்தை கூட பேசாம நாங்க பொண்ணை கட்டி கொடுக்க போறோம்..” என்ற  அவரின்  அண்ணாக்களின் மாபெரும் குறை நிவர்த்தி ஆகிவிட, அவர்கள் அவன் கை பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தேவேந்திரன் மட்டும் தான் திகைத்து  நின்றிருந்தது. அவன் கேட்டதை விட அவர் அடித்த சிறிது நேரத்திலே கேட்டது தான் அவர் வாயை அடைக்க வைத்திருந்தது. பதில் சொல்ல கூட முடியாமல் நின்றுவிட்டவரை, “என்ன தேவா..” என்று அண்ணா தான் தோள் தட்டி தலையாட்ட வைத்திருந்தார்.

நாள் குறித்த நொடியில் இருந்து எதிர்பார்த்திருந்த விஷயம் நடந்த போது அவரால் மகிழ முடியவில்லை. ஆனால் ‘என் ஜனா’ என்ற கர்வம் நிச்சயம் உண்டு. அவனால் யாருக்கும் எந்த குறையும் வைக்க முடியாது என்பதில் அளவற்ற பெருமை உண்டு.

‘நானும் தவறு தானே.. அவனை அப்படி சட்டென அடித்திருக்க கூடாது..’ என்ற உறுத்தல், வருத்தம் அவரை அமைதி காக்க வைக்க, காரில் கீர்த்தனா மட்டும் இருவரிடம் பொதுவாக பேசி கொண்டிருந்தாள்.

தேவேந்திரன் வீடு வரவும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தனர். அங்கும் தேவேந்திரன் உடன் பிறந்தோர்  வீடு முழுக்க நிறைந்திருந்தனர். சத்தத்திற்கு சிறிதும் குறைவில்லை. மறுவீடு வந்த பெண்ணை தனியே தள்ளி கொண்டு சென்றுவிட்டனர். மாப்பிள்ளையுடன் மொத்த ஆண்களும் அமர்ந்து கொண்டனர். உபசாரம் நடந்து கொண்டே இருந்தது.

‘பிறந்ததில் இருந்து இப்படி கூட்டத்திலே வளர்ந்தவனை தனியே போ என்று துரத்திவிட்டால் அவனுக்கு கோவம் வராதா..? எப்படி ஆறு வருஷம் நாங்க எல்லாம் இல்லாம இவன் இருந்திருப்பான்..?’ தேவேந்திரன் அவனையே பார்த்திருந்தார்.

ஜனகனுக்கு அவர் பார்வை உணர, உடல் தானே இறுக்கம் கண்டது. அந்த பக்கமே அவன் திரும்பவில்லை. அடிக்கடி மனைவியை பார்த்து தன்னை நிதான படுத்தி கொண்டான்.

மதிய விருந்து தடபுடலாக நடைபெற, ஜனகன் ஓய்வெடுக்க பொம்மி அறைக்கு சென்றுவிட்டான். வீட்டினரும் ஹாலிலே அங்கங்கு படுத்திருக்க, தேவேந்திரன் போன் ஒலித்தது. எடுத்து பேசி வைத்தவர் முகம் சுருங்கி போனது. தங்கள் அறையில் உள்ள டிவி ஆன் செய்து பார்க்க, அதில் முக்கிய செய்தியாக தீனதயாளன் இருந்தார்.

அவர் கட்சியை குறிப்பிட்டு புது தலைவர் இன்று தேர்ந்தெடுக்க பட்டதாக செய்தி. அக்கட்சியிலே இருக்கும் மூத்த உறுப்பினர் அண்ணாச்சி தான் அடுத்த தலைவர். தேவேந்திரனுக்கு அதிர்ச்சி.

இதே அண்ணாச்சி தான் அன்று போலீஸ் ஸ்டேஷனில் தீனதயாளனுக்கு ஆதரவாக  ஜனகனை ஊரை விட்டு போக சொன்னது. இன்று இவரே தீனதயாளனை கீழே தள்ளி தலைவர் பதவியில் அமர்ந்திருக்கிறார்.

‘அப்போ இங்க யாரும் யாருக்கும் இல்லை. பணம், பதவி தான் ராஜாவான்னு ஜனகன் கேட்டது எவ்வளவு சரியா போயிடுச்சு..’

இந்த வயசுக்கும் அவர் பார்க்கும் உலகம் அவரை மிரட்டியது. ‘எவ்வளவு உஷாரா நீ பொழைக்கிறியோ அவ்வளவு உனக்கு தான் நல்லது.. எங்க எவன் முதுகுல குத்துவான்னு தெரியல.. இதோ தீனதயாளனுக்கே அது சர்வசாதாரணமா நடக்குது..’ நெற்றியை தேய்த்துவிட்டு கொண்டார் தேவேந்திரன்.

அங்கு ஜனகன் வீட்டில் கடைசி இரு மாப்பிள்ளைகள் தனியே ஒதுங்கி இருந்தனர். “அந்த தீனதயாளன் மேனேஜர் போன் பண்ணிட்டே இருக்கார்.. என்ன சொல்றது..?” என்று மூர்த்தி கேட்க,

“டைம் பார்த்து தான் பண்ண முடியும்ன்னு சொல்லுங்க ண்ணா..” என்றான் கணேசன்.

“நீ இன்னமும் அவனை நம்புறியா சகல.. நியூஸ் பார்த்தியா அவரோட தலைவர் பதவி காலி..” மூர்த்தி சொல்ல,

“தொழில், பணம் இருக்கு இல்லைண்ணே.. அவ்வளவு சீக்கிரம் அந்தாள் விழ மாட்டார்.. பாருங்க..” என்று சென்றுவிட்டான் கணேசன்.

பாண்டி போன் செய்து ஜனகனிடம் பேசினான். அங்கு நடப்பதை சொல்லி வைக்க, ஜனகன் முகத்தில் திருப்தி. “சும்மாவா ஆறு வருஷ ஸ்கெட்ச்.. பெயிலியர் ஆகாது..” என்றவன், போன் எடுத்து வேறு சில வேலைகள் செய்து நிம்மதியாக தூங்க சென்றான்.

அங்கு தீனதயாளன் தூக்கம் பறிபோனது. அவரின் கோவம் இருவர் மேல் பயங்கரமாக திரும்பியது. ‘ஜனகன்.. சரித்திரன்.. சின்ன பசங்க என்னை ஆட்டிவைக்கிறாங்க.. விட மாட்டேன்..’ என்று அவரும் சில வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.

ஜனகன் நன்றாக ஓய்வு எடுத்து மாலை டீ’க்கு தான் ஹால் வந்தான். இடையில் பொம்மி வந்தவள், அவனின் அசந்த உறக்கத்தில் சிரித்து வெளியே சென்றிருந்தாள்.

பானுமதி தம்பி வரவும் பலகாரம் கொடுத்தார். பொம்மி மொட்டு மதுரை மல்லியுடன் மணக்க மணக்க வந்தாள். ஜனகன் பார்வை கணவனாக அவளை மேய, பொம்மி கண்களால் அவனை கண்டித்து டீ கொடுத்து சென்றாள்.

தேவேந்திரன் அண்ணாக்கள் அவனிடம் அமர்ந்து பேச,  ஜனகனும் நல்ல விதமாகவே பேசினான். ‘என்கிட்ட மட்டும் தான் இவன் கோவம் போல..’ தேவேந்திரன் அவனை தனியே பிடிக்க காத்திருந்தார்.

ஜனகனுக்கும் போன் வர தவிர்க்க முடியாத கால் என்று எழுந்து பேச சென்றான். தேவேந்திரன் அவன் போன் வைக்கவும் அவன் முன் நின்றார். ஜனகன் படக்கென தன் பார்வையை திருப்பி உள்ளே செல்ல போக, “ஜனா..” என்று அவனை நிறுத்தினார்.

‘அடிக்கிறதையும் அடிச்சிட்டு ஜனாவாம் ஜனா..’ உள்ளுக்குள் கருவி கொண்டான்.

“ஜனா.. என்னை பாரு..” தேவேந்திரன் சொல்ல, அவன் திரும்பவே இல்லை. “வீட்ல எல்லாம் இங்க தான் பார்த்துட்டு இருக்காங்க.. கொஞ்சம் சாதாரணமா இரேன்டா..” என்றார்  மாமா. ஜனகனோ முறுக்கியே நின்றான்.

“நான் உன் மாமனார்டா.. பொண்ணை கொடுத்திருக்கேன்.. அதுக்காகவாவது என்னை பார்த்து பேசு..”  அவர் வாய்விட்டே கேட்க,

‘எந்த ஊர்ல மாமனார் மருமகனை அடிக்கிறாராம்..’ ஜனகன் கடுப்பானான்.

“என்னடா.. இப்போ என்ன நான் உன்னை அடிச்சிருக்க கூடாது தான். மன்னிப்பு கேட்டா என்கிட்ட சாதாரணமா இருப்பியா..” என்று கேட்டும் பலன் இல்லை.

“என்னடா எனக்கு உன்னை அடிக்க உரிமை இல்லையா.. ரொம்ப தான் முறுக்கிற..” தேவேந்திரனுக்கு கோவம் வந்துவிட்டது.

‘கோவம் வருதா நல்லா வரட்டும்..’ ஜனகன் வீட்டுக்குள் செல்ல போக,

“டேய்.. உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. ஒழுங்கா நின்னுடு..” அடுத்ததாய் மிரட்டல். ஜனகன் வீட்டுக்குள் சென்றேவிட்டான். ‘கொஞ்சமாவது எனக்கு பயப்படுறானா பாரு..’ தேவேந்திரன் நொந்து கொள்ள,

“ப்பா..” என்று வந்தாள் மகள்.

“கண்ணு.. சொல்லுமா..” அப்பா கேட்க,

“நீங்க தான் சொல்லணும்ப்பா.. என்ன பிரச்சனை உங்களுக்கும், மாமாக்கும்..?” என்று  கேட்டாள்.

“எங்களுக்குள்ள பிரச்சனை எல்லாம் எப்போவும் வாய்ப்பில்லை கண்ணு.. இது ஏதோ சின்ன மனஸ்தாபம்..” என்றவரின் அடிமனதே அடிச்சது சின்ன மனஸ்தாபமா என்று கேட்டது.

“சரி.. அது தான் என்ன சொல்லுங்க.. மாமா  உங்களை பார்க்க கூட மாட்டேங்கிறாரே..?”

“கண்ணு.. அது.. க்கும்.. அன்னைக்கு ஸ்டேஷன் போய்ட்டு வரும் போது கொஞ்சம் பேச்சு ஆகிடுச்சு.. அதுல நான்.. நான் அவனை அடிச்சுட்டேன்..” என்றுவிட்டார்.

“ப்பா..” பொம்மி அதிர்ந்துவிட்டாள். ஒப்பவும் இல்லை. உடன் அப்பாவின் பக்கம் ஏதாவது காரணம் இருக்கும் என்றும் தோன்ற, “என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்கப்பா..” என்று கேட்டாள்.

தேவேந்திரன் சுருக்கமாக சொல்ல, “மாமாவை போய் தீனதயாளனோட கம்பேர் பண்ணியிருக்கீங்கப்பா..” கேட்ட மகளிடம் கோவமே.

“இல்லை கண்ணு.. அப்பறம் அவருக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் இருக்க போகுது சொல்லு..”

“ப்பா.. இங்க ஒன்னும் யாரும் யாருக்காகவும் சர்டிபிகேட் கேட்கலை.. அன்னைக்கு தீனதயாளன் நமக்கு  கொடுத்ததை தான் இன்னைக்கு திரும்ப வாங்கிட்டு இருக்கார்..”

“புரியுது கண்ணு.. நாம இப்படி இல்லையே.. இவன் புதுசா இறங்கி அடிக்கும் போது பயமா இருக்கு..”

“நாம அப்படி இல்லாததால் தான் இவ்வளவு அனுபவிச்சோம்.. அவரை அவரோட வழியில விட்டுடுங்கப்பா.. அந்த மூணு ஏக்கரை திரும்ப வாங்கிட்டு மாமாவே அமைதியாகிடுவார்..” என்றாள் மாமனை சரியாக புரிந்து.

தேவேந்திரனுக்கும் மகள் சொல்வதில் இருந்த உண்மை அப்போது தான் புரிந்தது. எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே முடிக்க பார்க்கிறான்..

பொம்மி திரும்பி உள்ளே வர, ஜனகன் கை கட்டி அவளை பார்த்திருந்தான். அப்பா, மகள் பேச்சையும் கேட்டிருந்தான். “நான் ஒன்னும் உங்க மாமாகிட்ட சண்டை போடல மாமா..” என்றாள் மனைவி. ஜனகன் உண்மைக்கும் அப்படியே அசந்து போனான்.

இவள் எதாவது பேசிடுவாள் என்று தான் வந்திருந்தான். அதையே மனைவி சரியாக சொல்ல, பரபரத்த கைகளை இறுக்கமாக பிணைந்து கொண்டான். அந்த கட்டுப்பாடு மனைவி இரவு அறைக்கு வரவும் உடைந்து அவளை பாய்ந்து கட்டி கொண்டான்.

“மாமா.. என்ன இது..?” அவள் பயந்து அவன் தோள் பிடித்தாள்.

“உன்னை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்குடி..” என்றான் பொங்கி வரும் ஆசையுடன்.

“மாமா..” பெண்ணுக்கு புன்னகை தான்.

“என்னடி சிரிக்கிற.. கொஞ்சம் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டா கூட இந்த ஆயுசுக்குள்ள உன் மேல இருக்கிற ஆசையை தீர்த்துடுவேன்..” என்றான்.

“ஆசையை தீர்த்திடுறதா..” மனைவி முறைக்க,

“நீ  தீர விடுவன்னு எனக்கு தோணலடி..” என்றான் அவளின் நெஞ்சில் முகம் புதைத்து. பொம்மி அவனை தன்னோடு பிணைத்து கொள்ள,  மனைவியின் வெம்மையை அனுபவித்தவன்,  “மாமா மாமா சொல்லுதுடி..” என்றான்.

“எனக்கு பொம்மி பொம்மி கேட்கிறதை போலவா..?” அவள் சிரிக்க,

“இல்லை.. இங்க உண்மையாவே சொல்லுது..” என்றான் அவள் துடிப்பில் கரைந்து.

“சொல்லும் சொல்லும்..” என்ற மனைவியின் சிரிப்பை தனக்குள் மென்று திங்க ஆரம்பித்தான்.

பிரியாத உதடுகளை போராடி பிரித்து “மாமா..” என்று அலறி தவித்தாள். அவனோ உதடு போனால் என்ன எனக்கான இடத்துக்கா பஞ்சம் என்று அவளின் கழுத்துக்கடிக்கு செல்ல, அதுக்கு உதடே பரவாயில்லை என்று தானே அவன் உதடுகளை கவ்வி கொண்டாள் மனைவி.

ஜனகன் அப்போதும் கைக்கு வேலை கொடுத்து அவளை திணற வைத்து உதடுகளை பிரித்தவன் மச்சத்தில் நிலைத்தான்.

“மாமா இப்படியே ஈரம் பண்ணா கண்டிப்பா கரைஞ்சிடும்..” பொம்மி சொல்லியே விட,

“புது மச்சம் உருவாக்குவேன்டி..” என்று கடித்து காயம் செய்தவன் அவளை அடுத்தடுத்து சொக்க வைத்து மிதக்க வைத்தான். வெட்கத்தில் துடித்து போனவளின் தொண்டை வறண்டு போக தான் அவளுக்கு ஜீவ ஊற்றாக மாறி போனான்.

ஒரு கட்டத்தில் தன்னையே மறந்து மனைவி முழுதும் அவனுள் கரைந்து கலந்துவிட்டாள். கணவன் அவளுள் தன்னை இன்னும் இன்னும்  புதைத்து கொண்டான்.

இறுதியில் “நேத்து நைட் விட இன்னைக்கு டாப்பு டக்கர்டி..” என்று மனைவியை சிவக்க வைத்து அடி வாங்கிதான் படுத்தான்.

Advertisement