Advertisement

ஜனகன் சென்று குளித்து தயாராகி வர, சடங்குகள் ஆரம்பமாகின. கீர்த்தனா வந்தவள், இறுகி போய் நின்ற  மாமாவை புருவம் சுருக்கி பார்த்து சென்றாள். அப்பாவும் சரியில்லையே.. எதாவது சண்டையா இருக்குமா..?

அவர்கள் வழக்கபடி திருமணத்திற்கு முன்பான முறைகள் முடிய, கோயில் கிளம்பினர். இரு வீட்டின் முக்கிய உறவுகளுக்கே பஸ் தேவைப்பட்டது.

முகூர்த்த நாள் என்பதால் நல்ல கூட்டம். முன்பே பதிந்து வைத்தபடி முதலில் ரெஜிஸ்டர் முடித்தனர். அடுத்து தாலி கட்டு.

அலங்காரத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் முன் தம்பதி சகிதமாக நின்றனர் ஜனகனும், அவனின் பொம்மியும். அதுவரை தகித்த மனம் குளிர ஆரம்பித்தது. கை கூப்பி முழு மனதுடன் தங்கள் நல் வாழ்க்கைக்காக வேண்டினர். குடும்பத்தினருக்கு அந்த நொடி, நிமிடங்கள் பெருந்தவமே.

ஜனகன் கைக்கு தாலி வர, பொம்மியை பார்த்தான். அவளின் பார்வையும் அவனை சந்திக்க, மூன்று முடிச்சிட்டு இருவரும் ஒருவர் தான் என்று உறுதி செய்தான்.

பரவசத்தில் குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அந்த இடமே அவ்வளவு வேண்டுதல், நன்றி நிறைந்திருந்தது.

தொடர்ந்த நிமிடங்கள் முழுக்க கோர்த்திருந்த தம்பதிகளின் விரல்கள் விலகவில்லை. நேரே ஜனகன் வீடு சென்று அவர்களுக்குண்டான சடங்குகளை முடித்தனர். கோவிலில் தாலி கட்டு என்பதால் வீட்டில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.

இருபக்க வீட்டின் மூத்த தலைக்கட்டிடம்  ஆசீ வாங்கி கொண்டு வேலய்யன், ராஜலக்ஷ்மி முன்பு நின்றனர். தங்கள் மகன் மணக்கோலத்தில். கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் பெற்றவர்களிடம். நிறைந்த ஆனந்த கண்ணீருடன் மணமக்களுக்கு  ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கி இருவரையும் அணைத்து கொண்டனர்.

ஜனகன் அப்பா அணைப்பில் தளர்ந்துவிட்டான். தன் கோவம் எல்லாம் எங்கு சென்றதோ எனுமளவு அவரை கெட்டியாக கட்டி கொண்டான். வேலய்யனும் மகன் அணைப்பில் நெகிழ்ந்து அவனை வருடி கொடுத்தார்

ராஜலக்ஷ்மி மகன் தோளை தடவ, குனிந்து அவரையும் அணைத்து கொண்டவனின் கண்களில் வைர துளி. வைரம் அம்மாவிற்கு தானே.. அவனின் ஏக்கத்தை அந்த துளியிலே பெருவெள்ளமாய் கொட்டி நிமிடங்களே அம்மாவை தன்னிடம் பிடித்து வைத்து கொண்டான்.

கீர்த்தனா அவனை புரிந்து நிற்க, வேலய்யன் பேத்தி தலையை வருடி, கை கோர்த்து தட்டி கொடுத்தார். அடுத்து தேவேந்திரன், பானுமதி முன் நின்றனர்.

இளகியிருந்த ஜனகன் உடல் அப்படியே இறுகி போனது. மூக்கு விடைக்க அக்கா பக்கம் வந்து அவர் காலில் விழுந்து அவரை மட்டும் அணைத்து கொண்டான். கீர்த்தனா அப்பாவிடம் ஆசீ வாங்கி கொண்டாள். தேவேந்திரன் பார்வை ஜனகனை தொட, அவன் இன்னமும் அவரை பார்க்கவில்லை.

அடுத்தடுத்து மற்ற அக்காக்கள், பெரியவர்கள் காலில் விழுந்து எழுந்தனர். தொடர்ந்த பால், பழம் சடங்கு எல்லாம் இளையவர்களின் கலாட்டாவில் நன்றாகவே முடிந்தது. காலை உணவு மணமக்களுக்கு மட்டும் வீட்டிற்கே வந்தது.

மற்ற உறவுகள் மண்டபம் கிளம்பி சென்றனர். மதிய விருந்து அங்கு தானே. ஜனகன், கீர்த்தனாவின் காலை உணவு முடிய, “இங்கேயே ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா மண்டபம் வந்தா போதும்..” என்றுவிட்டார் தேவேந்திரன் அண்ணா.

அதன்படி கீர்த்தனா கீழே உள்ள அறையில் தங்கவைக்க பட, ஜனகன் தன் அறைக்கு ஏறிவிட்டான். பாண்டி தாலி கட்டு முடியவும் சென்னை கிளம்பியிருக்க, போன் செய்து பேசி வைத்தான் ஜனகன்.

ரூம் கதவை தட்டி வேறொரு புது உடை அதிதி மூலம் அவனுக்கு வந்தது. “அக்கா கொடுத்தா.. விருந்துக்கு இதை போட்டுப்பீங்களாம்..” என்று கொடுத்து சென்றாள்.

சிறு புன்னகையுடன் ஓய்வறை சென்று வந்தவன், அடுத்து வேறெதையும் யோசிக்காமல் தூக்கத்திற்கு சென்றான். இரவெல்லாம் தூக்கம் இல்லையே. வீட்டினர் வந்து கதவு தட்டும் வரை நல்ல தூக்கம். அதன் பின்னே குளித்து பொம்மி கொடுத்த உடையில் கிளம்பி  வந்தான்.

கீர்த்தனாவும் தயாராக இருக்க, தானே சென்று அவள் விரல் பற்றி கொண்டு காருக்கு சென்றான். விருந்து அங்கு நடந்து கொண்டிருக்க, உறவுகளிடம் சென்று பேசினர் மணமக்கள். பெரியவர்களிடம் ஆசீயும் வாங்கி கொண்டு, சாப்பிட அமர்ந்தனர்.

போட்டோ கிராபர் ஒரு பக்கம் போட்டோ எடுத்து கொண்டிருக்க, மணமக்கள் மிக இயல்பாகவே இருந்தனர். நிறைய கேண்டிட் போட்டோ தான். இவர்களுக்கு உணவு வைக்க தேவேந்திரன் வர, “க்கா..” என்றான் சத்தமாக ஜனகன்.

பானுமதி வந்தவர் கேள்வியாக பார்த்து தம்பிக்கு பரிமாற, “ப்பா.. எனக்கு வைங்க..” என்றாள் மகள். தேவேந்திரன் அவளுக்கு பரிமாற விருந்து முடிந்தது.

அதன்பின் உறவுகளோடு நேரம் செல்ல, இரவு உணவும் அங்கேயே எல்லோருக்கும். நாளை காலை வரை மண்டபம் எடுத்திருந்தனர். மணமக்களுக்கு  இரவு உணவு கையில் எடுத்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

கீர்த்தனா குளித்து தயாராக, ஜனகனும் குளித்து  வந்தான். பெரியவர்கள் திருநீறு பூசி இரவு உணவு கொடுத்தனர். சாந்தி தம்பதி மட்டும் வீட்டில் இருக்க மற்றவர்கள் மண்டபம் திரும்பினர்.

மணமக்கள் தங்கள் அறைக்கு சென்றனர். கதவு திறந்ததும் மதுரை மல்லி வாசம்  அவர்களை நிறைத்தது. மிதமான அலங்காரம். கீர்த்தனா உள்ளே செல்ல, ஜனகன் கதவை மூடி வந்தான்.

பால், பழம் ஸ்வீட் எல்லாம் அங்கேயே இருக்க, பொம்மி மாமனை பாராமல் பார்த்தாள்.  தயக்கம், வெட்கம் இல்லாமல் இல்லை. மறைத்து சாதாரணமாக நிற்க, ஜனகன் அவள் முன் நின்று அவளை குறுகுறுவென பார்த்தான். “என்ன மாமா..?” பெண் சிணுங்கினாள்.

“காயம் ஆறிடுச்சா..?” என்று கேட்டவன் அவள் கன்னத்தை பிடித்து தூக்க போக, அவளோ வேகமாக தள்ளி நின்றாள்.

“இந்த கதை தான் வேண்டாம்ங்கிறது.. ஆறு வருஷத்துக்கு முன்னமே முடிஞ்சிருக்க வேண்டியது இப்போ தான் ஆரம்பிக்கவே போகுது, இதுல தள்ளி வேற போறீங்க மேடம்.. ம்ம்..” என்றவன் அவள் இடையை வளைத்து தனக்குள் கொண்டு வந்தான்.

பொம்மி அவன் நெஞ்சில் கை வைத்து நிற்க, குனிந்து அவளின் நெற்றி முட்டியவன், “இந்த செகண்ட் எனக்குள்ள எதுவும் இல்லை.. ரொம்ப அமைதியா பிளசண்ட்டா பீல் பண்றேன்..” என்றான் ஆத்மார்த்தமாக.

அவளின் நிலையும் அது தானே. தயக்கம் விட்டு மாமாவின் இடையில் கை கோர்த்து கொண்டவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து தனக்கு பிடித்த வெம்மையை அனுபவித்தாள்.

சீரான அவன் இதய துடிப்பு பொம்மி என்ற அவளின் பேரையே சொன்னது. பிரம்மை என்றே தெரிந்தாலும் அந்த கிறுக்கும் அவளுக்கு ஆறு வருடத்திற்கு முன்பே பிடித்தது தானே.

“இப்போவும் என் பேரை தான் மாமா சொல்லுது..” என்று அவனின் நெஞ்சில் செல்லமாக முட்டி இதழ்கள் பட  சொன்னாள்.

ஜனகனின் புன்னகையில் மோகனம். அணைப்பு மென்மையில் இருந்து சற்று வன்மைக்கு மாறியது. பொம்மி கன்னமும் சிவந்தது.

ஜனகன் அவளை மெல்ல தூக்கி தன் முகத்துக்கருகில் கொண்டு வந்தான். புதிதான நெற்றி குங்குமத்தின் அழகில் தன்னை தொலைத்தவன் ஆழ்ந்த முத்தத்தை அங்கு பதித்தான். பொம்மி அவன் பின் தலை முடியை கோதி பற்றி கொள்ள, மூக்கால் மூக்கை உரசியவன் ஈர்ப்பு விசை இதழ்களின் சங்கமத்தில் முடிந்தது.

அவள் இடை இவனிடம் கசக்கப்பட, அவனின் பின் தலை முடி இவளால் இழுக்கபட்டது. ரோஜாவின் முட்கள் குத்த குத்த ஒரு முத்தம். காயம் ஆனாலும் பிரியாத உதடுகளை கடித்து பிரித்து, அவன் இஷ்டமான இடத்திற்கு வந்தவன், மச்சத்தின் உறுதியை அளவுக்கு அதிகமாகவே பரிசோதித்தான்.

பொம்மி தாங்காமல் அவனிடம் இருந்து திமிற, அப்படியே கட்டிலுக்கு சென்றவன், அவளுக்கு உடையாக மாற ஆரம்பித்தான். இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் சிணுங்கிய மனைவி அவனுக்கு தீரா தேடலை கொடுத்தாள்.

காது கடிக்கும் ரகசிய பேச்சுக்கள், உதடுக்குள் கரையும் வெட்கம், போதாத அணைப்பின் நெருக்கம் என்று மற்றவரை திணற வைத்தனர்.

பொம்மியின்  மச்சத்தின் காயங்கள் நீண்டு மற்ற இடங்களுக்கும் பரவ, தாங்காத மனையாள் அவனுக்கும் காயம் கொடுத்து சொக்க வைத்தாள்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றரியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு.. இந்த பெண்ணில் இருக்கு என்பதை ஜனகன் உணர்ந்து, அனுபவித்த நேரங்கள் அவன் இந்த உலகத்திலே இல்லை.

அவன் பொம்மியினுள் கரைந்து அவளையும் தனக்குள் தொலைய வைத்தான். தொலைந்தவளை தேடுகிறேன் என்று அவளை சோர்வுற வைத்து இவனும் சோர்ந்து போனான்.

Advertisement