Advertisement

இரவு உணவின் போதும் ஜனாவை சீண்டியே முடித்தெழுந்தவர், பாண்டி காட்டிய அறையில் தங்கி கொண்டார். மறுநாள் ஜனகன் சீக்கிரமே கிளம்பிவிட, தேவேந்திரனும் அங்கிருந்து அவர் தொழிலை பார்க்க சென்றார்.

மதியம் போல ஜனகன் காரில் வந்து கொண்டிருக்க, கீர்த்தனா அவனை கிராஸ் செய்தாள். உடன் வேலய்யன் இருந்தார். இந்த நேரத்துக்கு அப்பாவை  எங்க கூட்டிட்டு போறா..? ஜனகன் அவள் வீடு சென்று சேரும் நேரம் பார்த்து அழைத்தான்.

“சொல்லுங்க மாமா..” அவள் எடுக்க,

“அப்பாவோட எங்க போன..?” என்று கேட்டான்.

“அது.. மாமா கீழே விழுந்துட்டார், கால் சுளுக்கிடுச்சு.. ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம்..” என்றாள் மெல்ல.

“எங்க எப்படி விழுந்தார்..?” ஜனகன் அப்போது தான் உணவுண்ண சென்றவன், பாதுகாவலர்களிடம், ‘பெர்சனல்’ என்று தன் கார் எடுத்து உடனே கிளம்பிவிட்டான்.

“தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச போனப்போ..” கீர்த்தனா அச்சத்துடன் ஒற்றை கண் மூடி சொல்ல,

“தோப்புக்கா.. நமக்கு எந்த தோப்பு இருக்கு..?” ஜனகன் புளுடூத்தில் கனெக்ட் செய்து கேட்க,

“கடைசி சித்திங்க தோப்பு..” என்றாள் கீர்த்தனா.

“இப்போ மட்டுமா..? இல்லை எப்போவுமா..?” ஜனகன் தீர்க்கமாக கேட்க,

“எப்போவும் தான் மாமா..” என்றுவிட்டாள் மறையாமல்.

“அப்பாவுக்கு அதிகம் அடியா..?” ஜனகன் கேட்க,

“வலது கால்ல லேசான சுளுக்கு தான் மாமா. ஒரு வாரத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க..” என்றாள்.

ஜனகன் வைத்துவிட்டவன், உடனே வேறொருவருக்கு அழைத்தார். சில நிமிடங்கள் கடக்க, ஜனகன் கார் அவர்கள் தோப்பில் நின்றது. முன்னமே தேவேந்திரன் தவிர்த்து மூன்று மாப்பிள்ளைகள் அங்கிருந்தனர்.

ஜனகன் வரவும் அவனை நலம் விசாரித்தார்கள். இவனும் பதிலுக்கு விசாரித்துவிட்டு, “தோப்பு எல்லாம் எப்படி போகுது மாமா..?” என்று கேட்டான்.

“கொஞ்சம் டல் தான் ஜனா.. தேங்காய் விலை குறைஞ்சிடுச்சு.. கஷ்டமான பொழைப்பு தான்..” என்றனர் கடைசி இருவரும் ஒற்றுமையாக. கலெக்டர் மச்சானிடம் எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

புரிந்து கொண்டவன், “உங்க நஷ்டத்தை ஈடுகட்ட தான் என் அப்பாவை வேலைக்கு வைச்சு சமாளிக்கிறீங்களோ..?” என்று கேட்டான்.

“மாமாவையா.. நாங்களா..  இல்லை ஜனா.. மாமாக்கு அவர் வைச்ச தோப்புன்னு பாசம், தானே செய்வார், வேணா சொன்னாலும் கேட்டுக்க மாட்டார், பாவம் வயசான காலத்துல அவருக்கு எதுக்கு கஷ்டம்னு தான் வேலைக்கு கூட ஆள் வைச்சிருக்கோம் ஜனா..” என்றனர்.

“அந்த ஆளுக்கு சம்பளம் கீர்த்தனா தான் கொடுக்குது ஜனா..” சுதாகர் சொல்லிவிட,

ஜனகனின் தாடைகள் இறுகியது. “எங்க அப்பா உங்களுக்கு பொண்ணு கொடுத்து, சொத்தும் கொடுத்ததும்  நீங்க நல்லமுறையில வாழ தானே தவிர அவர் உங்களுக்கு வேலை செய்ய இல்லை..” என்றான்.

“சட்டம் என்ன சொல்லுதோ அதைவிட அதிகமாவே உங்களுக்கு சொத்து கொடுக்க தெரிஞ்ச எங்களுக்கு  அதை திருப்பி வாங்கவும் தெரியும்.. பார்த்துக்கோங்க..” என்றுவிட்டான்.

“என்ன ஜனா இப்படி சொல்லிட்ட, நாங்க அப்படி எல்லாம் நினைக்கலை, மாமாவை இனி தோப்பு பக்கமே போகாம நாங்க பார்த்துகிறோம்..”

“அவர் போவார்.. அது அவர் ஆளாக்கின தோப்பு.. தினமும் போய் பார்க்க அவருக்கு உரிமை இருக்கு..”

“ஆமா.. ஆமா நீ சொல்றது சரி தான்.. போகட்டும்.. தாராளமா போகட்டும் ஜனா..”

“அக்காங்க எப்படி இருக்காங்க..? பசங்க கொஞ்சம் திங்க்ஸ் கேட்டிருந்தாங்க, நாளைக்கு வீட்டுக்கு வந்திடும்ன்னு சொல்லிடுங்க மாமா..” என்றான்.

“ஆஹ்.. சொல்லிடுறோம் ஜனா..”

“சாப்பிட்டீங்களா..? மாமா வீட்டுக்கு  அழைச்சுட்டு போங்க, சாப்பிட்டுட்டு போங்க.. உங்களுக்கு அசைவம் ஆர்டர் போடுறேன்..” என்று அனுப்பி வைக்க, இருவரும் மற்றவரை பார்த்து சென்றனர்.

சுதாகர் அவர்களை வீட்டுக்குள் அமர வைக்க, கடைசி மாப்பிள்ளையின் போன் ஒலித்தது. யாருங்க.. என்று எடுக்க, “தீனதயாளன் சார் உங்களை மீட் பண்ணனும்.. நைட் சார் கட்சி ஆபிசுக்கு உங்க மூணாவது சகலையோட வந்திடுங்க..” என்று வைத்தனர்.

ஜனா உடனே கிளம்பாமல் கீர்த்தனாவிற்கு அழைத்து, அவளை தோப்பிற்கு வர சொன்னான். “மாமா இங்க வந்திருக்கீங்களா..?” அவள் உற்சாகமாக கேட்க,

“கத்தாம வாடி..” என்று வைத்தவன், மெல்ல தோப்புக்குள் சென்றான்.

கீர்த்தனா வீட்டின் பின் வாசல் வழியே அங்கு வர, ஜனகன் மரத்தை  வருடி கொண்டிருந்தான். “நான் வைச்ச மரம் இந்த லைன் புல்லா..” என்றான் பொம்மியிடம்.

“இங்க வரை வந்தவர் வீட்டுக்கு வரலாம் இல்லை மாமா.. தாத்தா, பாட்டி ரொம்ப பாவம்..” கீர்த்தனா வருத்தத்துடன் சொல்ல,

“நான் பாவம் இல்லையாடி..?” என்றான் அவன்.

“மாமா இப்படி கேட்டா எப்படி..? உங்களை விட அவங்களுக்கு தான் இப்போ நீங்க ரொம்ப தேவை. சுத்தி நாங்க இத்தனை பேர் இருந்தாலும் நீங்க வேற தான் இல்லையா..?”

“நான் வேற’ன்னு தானே என்னை துரத்தி விட்டீங்க.. இப்போ என்ன..?”

“அப்போ சூழ்நிலை எப்படின்னு உங்களுக்கு நல்லா தெரியும். திரும்ப திரும்ப அதையே பேசி ஏன் நீங்களும் நொந்து எங்களையும் நோகடிக்கிறீங்க..?”

“ஓஹ்.. அப்போ நீங்க செஞ்சதை நான் சொல்ல கூட கூடாதா..?”

“மாமா.. இது விதண்டாவாதம்..”

“அப்பா இப்போ எப்படி இருக்கார்..? வலி பரவாயில்லையா..?”

“ஓகே.. தூங்குறார்..” அவள் எங்கோ பார்த்து சொன்னாள்.

“என்னை பார்க்க பிடிக்காதவ எதுக்குடி இங்க வந்த..”

“நான் பார்க்க ஆரம்பிச்சேன் நீங்க தாங்க மாட்டீங்க மாமா..”

“அடேங்கப்பா மிரட்டல் எல்லாம் பயங்கரமா இருக்கு. அப்படி என்ன பார்க்க போற..? பாரு பார்ப்போம்..”

“இப்போ மூட் இல்லை..” அவள் தோள் குலுக்கினாள்.

“பார்க்க கூட மூட் வேணுமாடி..?

“கண்டிப்பா.. சும்மா எல்லாம் அப்படி பார்க்க முடியாது..”

“மேடத்துக்கு மூட் வர என்ன பண்ணனும்..?”

“நீங்க நம்ம வீட்டுக்கு வரணும்..”

“உனக்கு மூட் வந்து கிழிக்கவே வேண்டாம்..”

“ஏன் உங்களுக்கு மூட் வந்து கிழிக்க போறீங்களா மாமா..?”

“கொழுப்பு.. உன் அப்பன் பேச்சு அப்படியே உன்கிட்ட தாண்டி இருக்கு..”

“என் அப்பாவை ரொம்ப பேசுறீங்க..? அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்..” அவள் மிரட்ட,

“என்ன பண்ணிடுவ.. அப்படி தான் பேசுவேன்.. இன்னும் கூட பேசுவேன்..”

“எங்களை எல்லாம் விட உங்களை ரொம்ப பார்க்கிறார் இல்லை, அந்த திமிர் தான் உங்களுக்கு..?”

“ஆமா தான்..  ஏன் உனக்கு நான் அப்டி இல்லையா..?”

“இல்லை.. எனக்கு என்னமோ தோண வைக்கிறேன் சொல்லிட்டு இன்னும் நீங்க ஒன்னும் செய்யலை..?” அவள் உதடு சுளித்தாள்.

“தோண வைக்காம தான் மேடம் இத்தனை வருஷம் எனக்காக காத்திட்டு இருக்கீங்களோ..”

“அப்பறம் உங்களுக்கு யார் வாழ்க்கை கொடுக்க..? என் இருந்தாலும் என் மாமா இல்லையா..?”

“பெரிய மனசு தான்.. அப்பறம் வாழ்க்கை கொடுப்பியாம், இப்போ கொஞ்சம் கிட்ட வா..” என்றான் அவள் கை பிடித்து.

“ஏன்.. ஏன் கிட்ட..? இப்படியே பேசுங்க மாமா..” பெண் தள்ளியே நின்றாள்.

“பார்த்தா தாங்க மாட்டன்னு டைலாக் அடிச்சுட்டு இந்த பதறு பதறுற..?” பிடித்திருந்த கையை இழுத்து அவளை தன்னருகில் கொண்டு வந்தான்.

“என்ன மாமா பண்றீங்க..?” அவள் சுற்றும் முற்றும் பார்க்க,

“இங்க யாரும் வர மாட்டாங்கன்னு தெரியாதா.. அமைதியா நில்லுடி..” என்றான். பொம்மி அவனை எதுக்கு என்று பார்க்க, “இன்னைக்கு நான் கட்டிக்கவா..?” என்று கேட்டான்.

பொம்மி கண்களை விரித்து பார்க்க, “ரொம்ப தேவைப்படுதுடி..” என்றவன் அவளை மென்மையாக தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

என் ஊர், என் வீடு.. நீண்ட வருடங்கள் கழித்து  என் மண்ணில் நான்.. அவன் சீரற்ற இதய துடிப்பு அவன் நிலையை சொன்னது. “என்னாச்சு மாமா..?” பொம்மி அவனை அண்ணாந்து பார்க்க, அவனோ குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

கைகளின் இறுக்கம் கூடி கொண்டே செல்ல, பொம்மி அவன் இறுக்கத்தில் பெண்ணாக திணறி தான் போனாள். “மா.. மாமா.. ப்ளீஸ்..” என்றாள் அவன் முதுகு தடவி கொடுத்து.

அதில் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தவன், “நேத்து மாதிரி காயம் பண்ணிடாதடி..” என்றான்.

“நான் எங்க காயம் பண்ணேன்..?” பொம்மி வேகமாக கேட்க,

“கட்டிபிடிக்கிறேன் சொல்லி நீ பண்ணது என்னவாம்..? காலையில குளிக்கும் போது எப்படி எரிஞ்சது தெரியுமா..? முதல்ல உன் நகத்தை கொஞ்சம் கட் பண்ணு.. அப்புறம் அந்த நேரத்துல எனக்கு தான் எசக்கு பிசக்கா காயம் ஆகிடும்..” என்றான்.

“மாமா..” பெண் சிணுங்க, சிரித்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

முதல் முத்தம்.. ம்ம்ஹ்ம்.. இனிக்கத்தான் செய்தது. திரும்ப அங்கேயே சில பல முத்தங்கள் வைத்தவன், அதற்கு கீழ் இறங்கவில்லை.

Advertisement