அத்தியாயம் – 50

அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும் அதற்கு உண்மையான பதிலைக் கொடுக்க முடியாமல் அமைதி காத்தாள் சினேகா. ‘தாலி’ என்ற வஸ்த்துவைப் பற்றி தனிப்பட்ட கருத்தை உருவாக்கக் கூடிய சூழ்நிலை அவளுக்கு அமையவில்லை. அவளுடைய அப்பா போன பின் தான் அவளுடைய அம்மாவின் கழுத்திலிருந்த தாலி கழட்டப்பட்டது. ஷிக்காவின் கழுத்தில் மனோ கட்டிய தாலி அவன் வீட்டு ஸ்டீல் அலமாரியில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் கட்டிய தாலிக்காக காலம் முழுவதும் சரி, தப்பைத் தட்டிக் கேட்காமல், அடிமையாக அடங்கிப் போக முடியுமா என்ற கேள்வி வர, முடியவே முடியாதென்ற பதில் தான் அவளுக்குக் கிடைத்தது.

அது தேவையில்லை என்று தூக்கிப் போட்டு விட்டு அதைக் கட்டியவனை புருஷனாக ஏற்று அவனுடன் இணைந்து வாழ முடியுமா என்ற கேள்விக்கு விடையே கிடைக்கவில்லை. இன்று காலையில் கழுத்தில் கட்டியது ஒரு பழக்கமான பொருளாக, உடல் உருபாக மாற எத்தனை நாள்கள், வருடங்களாகுமென்று அவளுக்குத் தெரியவில்லை. அந்தப் பொருள் பழக்கமான, புனிதமான, பிடித்தமான பொருளாக மாறுவது அவளிடம் இல்லை அதைக் கட்டியவனின் கையில் தான் இருக்கிறது என்ற தெளிவு கிடைத்தது. அதே சமயம் தாலி கட்டிய கணவன் கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய கயிற்றைப் புனிதமாக கருதி கடைசிவரை அதற்கு மரியாதை தரும் மனைவியால் தான் இன்றும் நம் கலாச்சாரத்தில் உயிரற்ற மஞ்சள் கயிற் உயிரோடு இருக்கிறது என்ற புரிதல் வந்தது சினேகாவிற்கு. 

அன்றைக்கு, இந்தக் கயிற் கழுத்தில் இல்லாத போதும் அவனைக் கணவனாக உணர்ந்ததால் தான் அவனுக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையில் இருந்தவள் அவனைக் கண்டதும் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டாள். அவன் மீது காதலுக்கும் கவலைக்கும் கயிற் காரணமில்லை. ஆனாலும் கழுத்தில் இருக்கும் இந்தக் கயிற் தானே அவர்களின் உறவிற்கான அங்கீகாரத்தை அளிக்கறது. ‘இப்போவே இதை கழட்ட முடியுமா?’ என்ற கேள்வி அவளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பின்னும் அதற்குப் பதில் கிடைக்கவில்லை.

அவளாக ஆராய்ந்து, அலசி ஒரு முடிவுக்கு வர அளுக்குப் போதிய அவகாசம் கொடுத்தவன் அவளது அமைதியைப் பார்த்து,”சரி..நீ சொல்ல வேணாம்.” என்று சொல்ல,

என்ன சொல்லப் போகிறானென்று கேள்வியாய் அவனை அவள் நோக்க,”எனக்கு” என்று ஆரம்பித்தவன் அதற்கு மேல் எப்படி சொல்வது என்று தெரியாமல் சில நொடிகளுக்கு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்க, ஒருவிதமான அச்சத்துடன் அவனை அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவளை நேராகப் பார்த்த வேலின்

”இட் டிஃபனெட்லி வாஸிண்ட் அன் இட்ச் (It definitely wasn’t an itch)” என்ற வார்த்தைகள் வேல் போல் அவள் மீது பாய, பாய்ந்து சென்று அவனை இறுக அணைத்தாள். அவளை அவனிடமிருந்து விலக்கி நிறுத்தியவன்,”ஆமாம், நானும் அப்படித் தான் உணர்ந்தேன்..இல்லை எனக்கு வேற மாதிரி இருந்திச்சுன்னு ஒபன் யுவர் மவுத் அண்ட் சே சம்திங்.” என்று அவனது உள்ளத்தில் இருந்ததைக் கடுமையாக வெளியிட்டான் ஷண்முகவேல்.

அவன் காட்டிய கடுமையில் அவளது வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் தகராறு செய்ய, கண்களிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட, புறங்கையால் அதை துடைத்தவள், ஒரு நொடி கூட யோசிக்காமல் கழுத்திலிருந்த கயிறை கழற்றி அவளது பெட்டியில் வைத்து விட்டு அவனது கைகளைப் பற்றி கட்டிலுக்கு அழைத்து வந்து அமர வைத்து அப்படியே அவனது மடியில் அமர்ந்தாள். அவனது முகத்தைக் கைகளில் ஏந்தி, நெற்றி, கண்கள், கன்னங்கள், நாசி, நாடி என்று மிக மென்மையாக லைட், பட்டாம்பூச்சி, எஸ்கிமோ என்று பலவகையான ‘இச்சு’ க்களை அவனுக்கு பரிசளித்தவள், இறுதியில், இதழ்களால் அவனது செவியை நிமிண்ட, ஆறுமுகங்கள் இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்குமென்ற கற்பனையில் அமைதியாக அமர்ந்திருந்த ஆறுமுகசாமி மதம் பிடித்த மன்மத சாமியாகப் மாறிப் போனான்.

மனைவியை தூக்கி படுக்கையில் போட்டு, அவளது யாக்கையில் ‘இச்சு, இச்சு’ என்று விரகக்காவியம் வடிக்க, மனைவியும் சரிசமமாக கணவனுக்குத் திருப்பிக் கொடுக்க, ஒலி, எதிரொலி என்று இருவரும் புது வகையான சத்தப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்தினர். தேகங்கள் எழுப்பிய தாகங்கள், தாபங்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு விடைகளை, அர்த்தங்களைத் தேடும் செயலை செம்மையாக செய்து, வலிமையும் மென்மையும் கூடும் சிருஷ்டி சூத்திரத்தைக் கற்று, களித்து, வெளிச்சம் தேவைப்படாத புதுப் பிரபஞ்சத்தில் காலடி எடுத்து வைத்து அவர்களின் உல்லாசப்பயணத்தை ஆரம்பித்தனர் தம்பதியர்.

காரிருளின் பின்னணியில் ஓயாமல் அலையோசை கேட்டுக் கொண்டிருக்க, இரண்டாவது தளத்தின் ஒரு புறத்தில், சிறிது தொலைவில் தெரிந்த கடலையும் வெகு தூரத்தில் தெரிந்த வானத்தையும் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது அந்த இன்ஃபினிடி நீச்சல் குளம். மறுபுறத்தில், தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்திருந்தனர் வேலும் கொடியும். இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு, அகிலம்.  கார் பார்க்கிங், பெரிய சுற்றுசுவர் அதையொட்டி மலர்செடிகள், சிட் அவுட், வரவேற்பறை, சமையலறை, மூன்று படுக்கையறை என்று கீழ் தளம் முழுவதும் சின்ன குடும்பத்திற்கு தகுந்தார் போல் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய வரவேற்பறை, அதை விட பெரிய, கடலை பார்த்தபடி டெரஸ், இரண்டு சிறிய படுக்கையறைகள் என்று இயற்கையை இரசிக்க, சுவாசிக்க, அனுபவிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது முதல் தளம். இரண்டாவது தளத்தின் முக்கால்வாசி பகுதியில் பெரிய நீச்சல் குளம். மீதியிருந்த இடத்தில் பாத்ரூமுடன் கூடிய சிறிய அறை. இரண்டுக்குமிடேயே இருந்த வெற்று இடத்தில் நீச்சலுக்கு பிறகு இளைப்பாற மேஜை, நாற்காலிகள். அந்த மேஜை நாற்காலிகளை அறையினுள்ளே போட்டு விட்டு அந்த வெற்று இடத்தில் பெட்ஷீட்டை விரித்துப் படுத்திருந்தனர் இருவரும்.

ஆறு நாள்களாக அந்த வீடு தான் அவர்களின் வீடு. அகிலம் என்ற பெயர் அந்த வீட்டிற்கு மிகவும் பொருத்தமான பெயர் என்று பலமுறை தோன்றி விட்டது சினேகாவிற்கு. கடல், வானம், பூமி சேருமிடத்தில் இருக்கும் வீட்டிற்கு இதைவிட பொருத்தமான பெயரை வைத்திருக்க முடியாதென்பது அவளது கருத்து. அவளருகே படுத்திருந்தவன் அவனது கைப்பேசி வழியாக வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டிருந்தான். திடீரென்று அவன் புறம் திரும்பியவள், “இன்னுமொரு நாள் இங்கே இருந்திட்டு போகலாமா?” என்று கேட்டாள்.

கைப்பேசியை பத்திரப்படுத்தி விட்டு அவள் புறம் திரும்பியவன், அவளது கன்னத்தில் இச்யென்று அவனது அடையாளத்தைப் பதித்து,“ஐ விஷ் வீ கூட்..அடுத்த வருஷம் நம்மளோட முதல் ஆனிவர்ஸரிக்கு இங்கே வரலாம்..பூல், கடல் இரண்டும் உனக்கு மட்டும்..இந்தமுறை போல பங்கு போட மாட்டேன்.” என்றான்.

உடைகள் எடுத்து வர அவசியமில்லை என்று அவன் சொன்னது இங்கே வந்த பின் தான் அவளுக்குப் புரிந்தது. எனவே,“இப்போவே இத்தனை திட்டம் போட்டு அழைச்சிட்டு வந்திருக்கீங்க..அடுத்த வருஷம் இதை விட போடுவீங்க..உங்களை நம்ப மாட்டேன்.” என்றாள்.

“என்னை நம்பு லட்டு..நான் எதையும் பிளான் செய்யலை..ஹனிமூனுக்கு எங்கே போறேன்னு மதன் ஸர் கேட்டார்..உன்னோட டிஸ்கஸ் செய்யணும்னு சொன்னேன்..ஆனா அதை செய்ய சூழ் நிலை அமையலை..அதான் அவர் என்ன ஐடியாலே கேட்டார்னு அவர்கிட்டே கேட்டேன்.” என்றவனை இடைமறித்து,

“அவரோட ஹனிமூனுக்கு இங்கே தான் வந்தாரா?” என்று கேட்க,

“நோஓஓஒ..அவருக்கு இன்னும் கல்யாணமாகலை..பெங்களூர்லே ஃபேமிலி இருக்குன்னு தெரியும்..விவரமெல்லாம் தெரியாது..இப்போ தான் அவரோட க்ளோஸா வேலை பார்க்கறேன்..இது அவங்க குடும்பத்துக்கு சொந்தமானது..இந்த வீட்டை தவிர ஃபார்ம் இருக்குன்னு நினைக்கறேன்…உன்னோட இண்ட் ரஸ்ட் என்னென்னு என்கிட்டே கேட்டார்..நீ பப்ளிஷிங்க்லே வேலை பார்க்கற அதனாலே புக்ஸ்ன்னு சொல்லி விட்டேன்..அதுக்கு’அமைதியை விரும்பற டைப்புன்னா நீ காட்டுக்குள்ளே இருக்கற ரிஸார்ட்டுக்குப் போனா கூட கூட்டமும் சத்தமும் தான் கிடைக்கும்..எங்களோட ப்ராபர்ட்டி குந்தாபூர்லே இருக்கு உன்னோட ஹனிமூனுக்கு ஏற்ற இடம்…கேர்டேக்கர்ஸ் பக்கத்திலே இருந்தாலும் தொந்தரவா இருக்க மாட்டாங்க..பிரைவெட் பீச், ரூஃப்டாப் பூல்ன்னு சொன்னவுடனேயே நமக்கான இடம்னு தோணிச்சு..சரின்னு சொல்லிட்டேன்.” என்றான்.

அவர்களை அழைத்து வர மங்களூர் விமான நிலையத்திற்கு வண்டி வந்திருந்தது. மதன் ஸரின் பிரைவெட் வண்டி என்பதால் அவர்களை வீட்டில் இறக்கி விட்டவுடன் ஷண்முகத்திடம் வண்டி சாவியைக் கொடுத்து விட்டான் ஓட்டுநர். முதல் இரண்டு நாள்களுக்கு வண்டிக்கு வேலை இருக்கவில்லை. விடியலில் கடல், மாலையில் நீச்சல் குளம் என்று ஜலக்கிரீடை தான் நடந்தது. கூடி களித்தும் பேசிக் களைத்தும் பொழுதுகளைக் கடத்தினர். வீட்டு பராமரிப்பு, சமையல் வேலை, வெளி வேலை என்று அனைத்து வேலைகளுக்கும் தனித் தனி ஆள்கள் இருந்தனர். வீட்டின் பின்புறத்தில் அவர்களுக்கான இருப்பிடம் இருந்தது. வேலைக்கு வரும் நேரத்தில் தான் இந்தப் பக்கம் வந்தனர் மற்றபடி அவர்களுக்கு தனி வழி, கேட், குடிநீர், மின்சார இணைப்பு என்று தனியாக அமைத்துக் கொடுத்திருந்தனர் மதன் குடும்பத்தினர். வீட்டில் அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் தினசரி வேலைகள் யாரையும் பாதிக்காத விதத்தில் நடந்தேறின. விடுமுறைகளைக் கழிக்க அருமையான இடம் அந்த வீடு.

அவளைச் சமாதானம் செய்யும் விதமாய்,“நாளைக்குக் ஷிரூர் வரை டிரைவ் போகலாம்.” என்றான்.

“அவ்வளவு தூரம் வேணாம்..மரவந்தெ  (maravanthe beach) போகலாம்..அடுத்த வருஷம் வரை தாங்கணுமில்லே.” என்றாள். 

எத்தனை முறை அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தாலும் அலுக்கவே அலுக்காத பயணம் அது. ஒரு புறம் சௌபர்ணிக்கா நதி மறுபுறம் அரபிக் கடல். கடற்கரையில் காலாற நடக்கலாம். நதிக் கரையில் காலை நனைக்கலாம். காணக் காண தெவிட்டாத காட்சி. அள்ள அள்ளக் குறையாத புத்துணர்வை அள்ளி அள்ளித் தரக் கூடிய சக்தி இயற்கையிடம் மட்டும் தான் இருக்கிறது.

அவளது கன்னத்தை வருடியபடி“லட்டு, அப்படி ஒண்ணும் நீ கஷ்டப்பட வேணாம்..அடுத்த மாசம் இங்கே வரலாம்..இல்லை நீ அலுத்துப் போகற வரை வந்திட்டே இருக்கலாம்..என்ன சொல்ற?” என்று கேட்டான்.

அவனது கையைத் தட்டி விட்டு,”ஆமாம்..ஆமாம்..மாசா மாசம் வர்றத்துக்கு மதன் சர் என்ன உங்களுக்கு மச்சானா?” என்று வெடுக்கென்று கேட்க, வாய்விட்டு சிரித்த வேலன் அறியவில்லை மதன் அவனின் மாமனாகப் போகிறானென்று.

அவளை நெருங்கி படுத்தவன்,”இங்கேன்னா இங்கேயா..இந்த ஏரியாவுலே நிறைய பீச ரிஸார்ட்ஸ் இருக்கு..ஒவ்வொண்ணா டிரை பண்ணுவோம்.” என்றான்.

“டிரை பண்ற ஆளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கேன்..அதிகாரியோட உழைப்பெல்லாம் அரசாங்கத்துக்கு தான்..வீட்டுக்காரிக்கு இல்லை.” என்று மனைவி நொடிக்க,

“மை காட்..ஒரு வாரமா எத்தனை உழைப்பு போட்டிருக்கேன்.” என்று அதிகாரி அவனது அதிர்ச்சியை வெளியிட,

“நாங்க மட்டும் சும்மா இருந்தோமா?” என்று கேட்டவள், கைகளை நீட்டி,”இங்கே, அங்கே, அந்தத் தொட்டி பக்கத்திலே” என்று பல இடங்களைச் சுட்டிக்காட்டி,”அறைக்குள்ளே நீங்க போடற உழைப்பை வெளியே நானும் போட்டிட்டு இருக்கேன்..நீட்டி படுத்திட்டு பொண்டாட்டி உழைப்புலே நல்லா சுகம் கண்டிட்டு இப்போ இப்படி மாத்திப் பேசறீங்க..இந்த நொடிலேர்ந்து நான் வேலை நிறுத்தத்திலே இருக்கேன்..எப்போதும் நடக்கறது நடக்காது..கீழே, மேல எதுவும் கிடையாது..கண்ட கண்ட இடத்திலே, கண்ட கண்ட வேளைலே இச்சு, இச்சுன்னு அச்சு பதிக்கறதும் தடை போடறேன்.” என்று அறிக்கை விட்டாள் கணவனை சோதனை எலியாக்கி உபரிகையில் (terrace) அவனோடு உபரிசுரதப் பயிற்சிகளை மேற்கொண்டு அவளது உச்சக்கட்டத்தைத் தொட்டவள். 

“லட்டு, இது ரொம்ப அநியாயம்..ஓர் இச்சுக்கு கூட தடையா?” என்று ஆதங்கப்பட்டான் கணவன்.

“யாரோ ‘இட் டெஃபனட்ட்லி வாஸிண்ட் அன் இட்ச்ன்னு சொன்னாங்க..அப்புறம் ஒரே இச்சு, இச்சுன்னு இச்சுவைக்கு அடிமையாகிட்டாங்க.” என்று உச்சுக் கொட்டினாள் மனைவி.

“லட்டு, நீ ஆங்கில இலக்கியம் படிச்சிருக்க..அந்த இட்ச் வேற நம்ம இச்சு வேறன்னு உனக்குத் தெரியும்..ப்ளீஸ்..ரீ கன்ஸிடர்” என்று மறுபரிசீலனைக்கு உயர் அதிகாரியிடம் மனு போட்டான் அதிகாரி . 

அதற்கு மனைவியிடம் எதிரோலி இல்லை. வார்த்தைகளுக்கு இனி வேலை கிடையாது என்று உணர்ந்தவன் அவளை மேலும் நெருங்க, “கிட்டே வராதீங்க” என்று அவள் அவனைத் தள்ள, அந்தக் கரத்தைப் பற்றி மென்மையாக வருடியபடி”எத்தனை நாள் காப்பி எடிட்டரா மற்றவங்க எழுத்துக்கு மெருகு சேர்த்திட்டு இருப்ப லட்டு..சொந்தமா எழுத மேட்டர் வேணுமில்லே..கூப்பிடற தூரத்திலே கடல், கார் போகற தொலைவுலே மலை, காலடிலே  கணவன்னு உனக்கு பயங்கர இன்ஸ்பிரஷெனா இருக்கும்னு தான் இந்த இடத்துக்கு உன்னை அழைச்சிட்டு வந்தேன்.” என்று மனைவியிடம் குழைந்தான் கணவன்.

”இதெல்லாம் எனக்கு இன்ஸ்பிரேஷனா? நான் என்ன மேட்டர் புஸ்தகமா எழுதப் போறேன்.” என்று அவளை வருடிக் கொண்டிருந்த விரல்களை இறுக்கமாக பிடித்து அவனது கையில் வலிக்க கிள்ளினாள் மனைவி.

கண்களில் சிரிப்போடு, வாயில் புன்னகையோடு,“ஸாரி..ஸாரி..எனக்கு ஆங்கிலப் புலமை கிடையாது..அதான் கரெக்ட்டா வார்த்தை தெரியலை.” என்று வெளி வந்தது அவனது மன்னிப்பு.

அந்தச் சிரிப்பு அவளது சபதத்தை சிதற வைக்க, அவனை நெருங்கி,”அதுக்கு பெயர் மேட்டர் இல்லை கண்டண்ட்..நிறைவான, மகிழ்வான மனநிலை தான் தரமான கண்டண்ட்டை உருவாக்க முடியும்.” என்று லதாவேஷ்டித ஆலிங்கனத்தில் ஷண்முகவேலனை கட்டிப் போட்டாள் சினேகலதா.

மனைவியிடம் கட்டுண்டு கிடந்த கணவன்,“லட்டு, இப்போ நாம செய்யப் போறத்துக்கு பெயர் சத்தியமா கண்டண்ட் இல்லை மேட்டர் தான்.” என்று கிசுகிசுக்க, அவனது செவிகளை நிமிண்டிக் கொண்டிருந்த மனைவி அதைக் கேட்டு வயல்ண்ட்டாக மாற, வலியில்”ஆ” என்று ஆடவன் கத்த,”அய்யாசாமி, அசம்பாவிதம் நடக்கற முன்னாடி சம்பவத்தை நடத்தி முடிங்க.” என்று ஆளும்வேலுக்கு அவளை ஆள ஆர்டர் போட்டாள் மல்லிக்கொடி. 

***********

உபரிசுரதம் – ஒருவகைப்புணர்ச்சி, அது நாயகன் செய்த கலவித்தொழில் யாவையும் நாயகியும் செய்து புணர்தல்.

லதாவேஷ்டிதம் latā-vēṣṭitam , n. latā + vēṣṭita. A mode of sexual embrace, likened to a creeper clinging round a tree; கொடிபோலச் சுற்றித் தழுவும் ஆலிங்கனவகை.

*******************

மரவந்தெ கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊரின் சிறப்பு NH-66 தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் அலையோடும் அரபிக்கடலும் மறுபுறம் எழிலாய்ப் பாயும் சுபர்ணிகா நதியும் காணக்கிடைக்கும் அரிய காட்சி ஆகும். (Source-wikipedia)