Advertisement

அத்தியாயம் 9

 

   “புறம் கூறும் வார்த்தைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம்…..

     வன்மையான வார்த்தைகள் கோபத்தை விதைக்கலாம்….

     வஞ்சனை வார்த்தைகள் வாழ்வையே கெடுக்கலாம்….”

       காலையில் எழுந்ததில் இருந்து நந்தினியின் மனது ஒருவித சலனதிலேயே இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல்தான் இருந்தாள் அண்ணி சொன்னதை நம்பி சொல்லியாச்சு எப்படி இருந்தாலும் பிரச்சினை வரும் என்று அவளுக்குள் ஒரு பயம் வந்தது.

         தன்னை மாறன் திட்டுவது ஒன்றும் புதிதல்ல சண்டை போடுவது ஒன்றும் பழக்கமற்றது அல்ல திட்டினால் திட்டி கொள்ளட்டும்.. நர்மதா விற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

         அவள் கல்லூரிக்கு சென்று சற்று நேரம் கழித்து நந்தினிக்கு இளமாறன் போன் செய்தான்… எப்போதும் பகல் நேரங்களில் ஒரு வார்த்தை பேசுவதோடு சரி ஆனால் அன்று கொஞ்சம் தள்ளி வா என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசத்தொடங்கினான்…

உனக்கு எப்போ விஷயம் தெரியும்…

நேத்து ஈவினிங் தான் தெரியும்…

யார் சொன்னா….

அது வந்து…. எப்படி சொல்ல…

   நான் யார் கிட்டேயும் சண்டை போட மாட்டேன். யார் சொன்னா ன்னு மட்டும் சொல்லு….

  அண்ணி சொன்னாங்க… நேத்து கோயிலில் இருந்து வண்டில ஏறி போனதை பார்த்த தா…  தான் சொன்னாங்க….

    சற்று நேரம் அவனிடம் எந்த பேச்சும் இல்லை அமைதியாக இருந்து விட்டு பின்பு பேச தொடங்கினான்…

   உங்க வீட்ல யார்ட்டையும் சொல்லிடுவாங்க ளா…

   இல்ல… இல்ல… கண்டிப்பா சொல்ல மாட்டாங்க… எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்திருக்காங்க..  பேச்சை மீற மாட்டாங்க.. நம்பிக்கை இருக்கு…

   பார்த்துக்கோ….

   நீங்க ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க….

  அதெல்லாம் ஒண்ணும் இல்லையே…

   ம்ஹூம்…  நீங்க பொய் சொல்றீங்க உங்க குரல் ரொம்ப டல்லா இருக்கு…

  நான் அப்பா ட்ட பேசிட்டு அப்புறமா கூப்பிடுறேன்….

 என்ன ஆச்சு ஏதும் பிரச்சனையா  மாமா கிட்ட சொல்லப் போறீங்களா….

   நான் உன்கிட்ட கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் அதுவரைக்கும் வெளியே விஷயம் தெரியக்கூடாது….  அம்மாகிட்ட எதுவும் சொல்லக்கூடாது உன் முகத்திலும் தெரியக்கூடாது புரிஞ்சிச்சா….

  விசாரிக்காமல் அவசரப்பட்டு எதுவும் சொல்லாதீங்க…. எனக்கு என்ன பண்ணனு தெரியாம தான் உங்க கிட்ட சொன்னேன்….

   விச்சு விசாரிச்சிட்டான்…  நேர்லயும் பார்த்துட்டான் போதுமா… வெளியே தெரியக்கூடாது நான் அப்பா ட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்…. என்றான் சற்றே கோபத்தோடு….

   ம்ம்ம்… சரி…. என்ற படி போனை வைத்தாள்….

    வீட்டில் வேலை அனைத்தும் முடிந்திருந்ததால் வேறு வழி இன்றி ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த தேவகியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்….

   என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியாததால்  இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தாகவே அவள் உணர்ந்தாள்….

    அதேநேரம் இளமாறன் இடம் இருந்து அழைப்பு வரவும்… போனை எடுத்துக் கொண்டு மெதுவாக அறைக்குள் சென்று விட்டாள்…

     தினமும்  மீட் பண்ணி பேசுறாங்க போல… அப்பா ட்ட விஷயத்தை சொல்லி இருக்கேன்.  அப்பா நேரம் பார்த்து  அம்மாட்ட சொல்லுவாங்க… வீட்டில் ஏதும் பிரச்சினை வந்துடிச்சின்னா உடனே எனக்கு மெசேஜ் பண்ணு நானும்  சித்தப்பா ஒருத்தர் இருக்காரு இல்ல என்று சொல்லி அவரைப் பற்றிய விவரங்களை சொல்லவும் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… அவர் கிட்ட தான் பேசப்போறேன் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு உனக்கு நான் போன் பண்ணி மறுபடியும் சொல்றேன்….

      ம்ம்ம்….சரி நான் பார்த்துக்கிறேன்… நீங்க ரெஸ்ட் எடுங்க..  எதையும் போட்டு குழப்பிக்காதீங்க… எல்லாம் நல்லபடியா நடக்கும் நம்புங்க….

   நீ அவளை கொஞ்சம் கவனி… அப்பா அம்மாகிட்ட இதை பேசிய பிறகு.,  அவளை கூப்பிட்டு தனியாக பேசி பார் என்ன சொல்றான்னு எனக்கு போன் பண்ணு….

 சரி பார்த்துக்குறேன்… நீங்க ரெஸ்ட் எடுங்க.. டென்ஷனா இருக்கீங்களா என்ன..

குரல் சரியில்ல அதனால தான் கேட்டேன்..

   ஒன்னு இல்ல…. இன்னொரு நாள் சொல்றேன் சரியா… நர்மதா இப்படி பண்ணுவா ன்னு யோசிக்கக் கூட இல்லை அதுதான் ஒரு மாதிரி இருக்கு மற்றபடி ஒன்னும் இல்ல நீ குழப்பிக்காதே சரியா…..

என்றபடி போனை வைத்து விட்டு யோசனையில் மூழ்கிப் போனான் மாறன்..

    எங்கே அவன் கவலைப்படுவானோ…  அவன் மனநிலையை என்ன வென்ற நினைப்பிலேயே அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி…

     அன்று மாலை இளமாறனின் அப்பா சீக்கிரமே பேங்கிலிருந்து வந்து விட்டார்…

வந்தவர் நேராக தேவகியிடம் சென்று உன்னுடன் பேச வேண்டும் என்று பின்புறம் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.. அவர்கள் நர்மதா  பற்றித்தான் பேசப் போகிறார்கள் என்று தெரிந்த பின்பு அவர்களுக்கான மாலை வேளை தேநீர் தயாரிப்பதற்காக நந்தினியும் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்… மாறனின் அப்பா வந்தவுடன் யாரையும் பார்க்காமல் நேராக தேவகியை அழைத்துச் சென்றதால் நந்தினி அங்கு இருந்ததை அவர் கவனிக்கவில்லை..

அங்கு தோட்டத்தில்…

நர்மதாவின் கவனிக்கிறாயா… இல்லையா தேவகி…

அவளுக்கு என்ன நல்லாத்தான் இருக்கா….

நான் அவளுடைய நடவடிக்கையும்., பழக்கவழக்கங்களையும் கேட்டேன்….

      என்னங்க நீங்க இப்படி கேட்டீங்க நான் அவளைப் பார்க்காமலா இருக்கேன்… அவளுண்டு அவள் வேலையுண்டுன்னு இருக்கா காலேஜ்  விட்டா கோவிலுக்கு போவா…. வேற எங்க போறா…. வேற எங்கேயும் போகல ஏன் இப்படி கேக்குறீங்க….

     அறிவு கெட்டவளே வீட்ல எப்பவும் சீரியல் பார்த்துகிட்டு இருந்த விளங்குமா…. அதுவும்  மருமக பொண்ணு வந்ததுக்கு அப்புறம் அவ எல்லாத்தையும் பார்த்துகிறா ன்னு…. நீ சீரியலே கதி ன்னு மூழ்கிக் கிடக்க…

       ஏன்ங்க…. என்ன ஆச்சு என்று பதட்டத்துடன்…. கேட்கவும்…

       அவர் மேலும் தேவகியை சிறிது நேரம் திட்டி விட்டு பிறகு  விஷயம் அனைத்தையும் சொன்னார்…. பொய்யோ என்ற சந்தேகத்தில் மாறன் விச்சுவை அனுப்பி பார்த்து உறுதி செய்ததையும் சொன்னார்…

     என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி விட்டு மாறனிடம் இரவு பேசும்போது இதைப் பற்றி பேசலாம் என்ற முடிவுடன் இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்…. நர்மதாவிடம் எப்படி விஷயத்தை கேட்பது அவள் பிடிவாதமாக நின்று விட்டால் என்ன செய்வது என்று இருவரும் குழம்பிபோய் இருந்தனர்… அவர்கள் உள்ளே வந்து அமர்ந்ததை பார்த்தவுடன் நந்தினி இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்…

      தேவகிக்கு சற்று வருத்தம்தான் நந்தினி தன்னிடம் சொல்லாமல் மாறனுக்கு சொல்லியிருக்கிறாள் என்பது தெரிந்த பின்பு…… அதையே இப்போது கேட்கவும் செய்தார்….

        நந்தினி உனக்கு எப்படி தெரியும் என்று நேரடியாக விஷயத்தை தொடங்கினார்… என் ட்ட ஏன் சொல்லல என்று கேட்டார்…

       அத்தை நேத்து ஈவினிங் நர்மதா கோயிலுக்கு போயிருந்தா இல்ல… அப்ப தான் எனக்கு தெரியும் அது வரைக்கும் எனக்கு தெரியாது… விஷயம் என்னன்னு கரெக்டா தெரியாம உன்கிட்ட சொல்லவும் பயமா இருந்துச்சு அதனால தான் அவங்க கிட்ட சொன்னேன்….

       சரிம்மா நீ செஞ்சது  சரிதான்…. இப்ப நர்மதா ட்ட  எப்படி பேசுறது அதை சொல்லு முதல்ல…. ஆனா இப்போ உள்ள பிள்ளைகள் கிட்ட பேசுறதுக்கு முன்பு பல தடவை யோசிக்க வேண்டி இருக்கு அதனாலதான் இவ்ளோ யோசிக்கிறேன் என்றார் மாறனின் அப்பா….

     நான் பேசவா மாமா… எப்படி பேசணும் ன்னு சொல்லுங்க…. நான் பேசிப் பார்க்கிறேன்…..

       அது தானமா…. புரியல மாறன் எந்திரிக்கிற டைம் ஆகட்டும்…. அவங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு அதுக்கப்புறம் இவளோட பேசலாம்.. அது வரைக்கும் உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத… நாங்களும் எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டோம்…

       சரி….. என்ற படி பின் பக்க வாசலில் புத்தகம் படிப்பது போல் அமர்ந்து கொண்டு இருந்தாள்….

    அதன்படி மாறன் எழுந்த உடன் அவனே அழைத்து விடவும் மாறனின் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்…. சற்று நேரம் கழித்து நந்தினியின் செல்லிற்கு அவனே அழைத்தான் …..

       நர்மதா வந்துட்டாளா….

       வந்துட்டா இப்பதான் மொபைல் எடுத்துக் கொண்டு மாடிக்கு போனாள்…

       பின்னாடியே நீ போ…. போய் அவகிட்ட பேசு., பேசி அவங்க நேர்ல வந்து பொண்ணு கேட்டா மட்டும் தான் பேச முடியும் ன்னு சொல்லு வேற எதுவும் சொல்ல வேண்டாம்…   அவங்க பொண்ணு கேட்டு வந்தாங்கன்னா வீட்ல சம்மதிக்க வைக்க வேண்டிய வேலையை உங்க அண்ணன் ட்ட சொல்லி செய்ய சொல்லுறேன்…. நீயே பேசுறது போல பேசு….  என்ன பேசினா என்ன சொல்றா ன்னு எனக்கு நீ உடனே அப்டேட் பண்ணனும் சரியா…. அம்மா., அப்பா ட்டையும் சொல்லு…. நான் வொர்க் க்கு  கிளம்ப ஆரம்பிக்கிறேன்.. நீ எனக்கு போன் பண்ணு என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்…

      அவன் சொன்னது போலவே இவள் நர்மதா வின் பின் சென்று நின்றாள்….

      நந்தினி பார்த்தவுடன் நர்மதா அவசரமாக போனை கட் செய்தாள்….

     என்ன நர்மதா போன வெச்சிட்ட… டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல…. என்னடா என்று சாதாரணமாகவே பேசத் தொடங்கினாள்….

      அவள் சாதாரணமாக பேச தொடங்கவும் நர்மதா அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி விட்டு அப்படி எல்லாம் இல்ல அண்ணி என்று சமாளிக்க முயன்றாள்…..

      நர்மதா உன்கூட பேசலாமா…. தனியா பேசுவதற்காகத்தான் வந்திருக்கேன் பேசுவோமா என்று நந்தினி நேராக விஷயத்திற்கு வர தொடங்கினாள்….

     என்ன அண்ணி என் கிட்ட பேசுறதுக்கு போய் கேட்டுட்டு என்ன பேசணும் அண்ணி என்றாள்….

     நேத்து கோயிலிலிருந்து யார் கூடவோ வண்டியில் போய் இருக்க…. எங்க போன உன்ன வண்டியில கூட்டிட்டு போனது யாரு.. சொல்லு நர்மதா நீ சொன்னதுக்கு அப்புறம் தான் நான் எதுவா இருந்தாலும் பேச முடியும்….

     நந்தினி முகத்துக்கு நேராக கேட்டதும் நர்மதாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டே நின்றாள்… அண்ணி உங்களுக்கு எப்படி… என்ற வார்த்தையோடு திணறிக் கொண்டு இருந்தாள்…..

      அமைதியாக நர்மதாவை பார்த்தபடியே நின்றாள் நந்தினி பதில் ஏதும் சொல்லவில்லை…. நர்மதா சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்து நின்றாள்….  அதை புரிந்து கொண்ட நர்மதா நந்தினியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு சொல்லத் தொடங்கினாள்…..

     அண்ணி அவங்க எங்க அத்தை பையன்…

அப்பாக்கு ஒரே தங்கச்சி தான் வேற கூட பிறந்தவங்க கிடையாது… அப்பாக்கு அவங்க தங்கச்சி மேல அபக்க்ஷன் ஜாஸ்தி…. அத்தையும் அப்பா மேல பயங்கர பாசம்…. அவங்க வீட்ல இவங்க பேரு சரத்… அவங்க தங்கச்சி சரண்யா  இருக்கா…. அவள தான் அண்ணன் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு அத்தை ஆசைப்பட்டாங்க….. அண்ணன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க அந்த கோபத்தில் அப்பா கிட்ட அத்தை பேச மாட்டாங்க…..

       நந்தினி ஏதாவது பதில் சொல்வாளா என்று எதிர்பார்த்து நர்மதா  நிறுத்தவும் நந்தினி எந்த பதிலும் சொல்லவில்லை என்ற உடன் மீண்டும் சொல்லத் தொடங்கினாள்…..

       சரண்யாவிற்கு அத்தை சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தாங்க… அவங்க நல்லா தான் இருக்காங்க…. அவங்களுக்கு ஒரு குழந்தை கூட இருக்கு…..

        எனக்கு சின்ன வயசுல இருந்தே சரத்தை   ரொம்ப பிடிக்கும்…. ஆனா இந்த விஷயத்துக்கு அப்புறம் ரெண்டு வீட்டிலும் பேச்சு வார்த்தை இல்லை அப்படின்னு எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சி உங்க மேரேஜ் வரைக்கும் கூட நான் பேசினது இல்ல… உங்க கல்யாணத்துக்கு  அவங்க வீட்டிலிருந்து யாரும் வரல அப்படின்னு  அப்பாக்கு கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு… இதுக்கு இடையில ஒரு நாள் சரத் என்னை கோயிலில் பார்த்து பேசினாங்க… அவங்க எக்ஸாம் எழுதி வேலைக்கு போயிட்டாங்க.. என்ன கல்யாணம் பண்ணிக்க விரும்புவதாக சொன்னாங்க…  ரெண்டு ஃபேமிலிக்கு உள்ள பிரச்சினையும் இதனால தீரும் ன்னு நினைக்கிறாங்க…. எனக்கும் அது சரி அப்படின்னு தோணுச்சு எனக்கும்  பிடிக்கும் அதனால என்னால மறுத்துச் சொல்ல முடியல நானும் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன் ஆனா அதுக்கப்புறம் எனக்கு பிடிச்சு இருந்துச்சு அதனால தான் சம்மதிச்சேன் அண்ணி….

     நான் அந்த அண்ணா கிட்ட பேசலாமா…

     அண்ணி அது வந்து…..

     இங்கே பாரு நர்மதா குடும்பத்துக்காக அப்பா வருத்தப்பட்டாங்க அத்தை வருத்தப்பட்டாங்க அப்படின்னு நினைச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காத…. இது காதல் தானா உனக்கு கண்டிப்பா தெரியுமா உனக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா… அவங்களுக்கு உண்மையிலே உன்னை பிடிச்சிருக்கா…. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்காம சும்மா குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணேன் அப்படி ன்னு சொல்லக் கூடாது…. நாளைக்கு எதுவும் பிரச்சனை ன்னா நான் எங்க அப்பாகாக  தான் சம்மதிச்சேன்…  அத்தையும் அப்பாவும் பிரிஞ்சி இருக்காங்க.,  இந்த குடும்பம் சேருவதற்காக சம்மதிச்சேன் ன்னு சொல்லி உன் வாழ்க்கையை கெடுத்துக்க கூடாது… அதுக்காகத்தான் கேட்கிறேன் குடு நான் பேசுறேன்….

     அப்போதும் மிகுந்த தயக்கத்தோடு அவனுக்கு போன் செய்து கையில் கொடுத்தால் அண்ணி உங்க கிட்ட பேசணுமாம் என்று சொல்லி…

      சரத்தின் பேச்சுவார்த்தை மிகுந்த மரியாதை ஆகவே இருந்தது…. இவளும் மரியாதையாகவே பேசினால் அண்ணா என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லவில்லை நர்மதாவிடம் சொல்லிய அதே காரணங்களை இவனிடமும் கேட்டால் அவன் இல்லை எனக்கு நர்மதாவை மிகவும் பிடிக்கும் அதனால் தான் நர்மதாவிடம் நேரடியாக பேசினேன் என்று சொன்னான்….

      அண்ணா அப்ப நீங்க தான் ஸ்டெப் எடுக்கணும்… நீங்க உங்க வீட்ல பேசி பொண்ணு கேட்டு வரதுக்கு ரெடி பண்ணுங்க… இல்ல அப்படின்னா என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க அதற்கு தகுந்தாற்போல பேசுவோம்… ஆனா கண்டிப்பா இது நல்ல படியா நடக்கனும்னு நினைச்சீங்கன்னா கொஞ்சம் பேசிப் பாருங்க வீட்டில என்று சொல்லியபடி  சாதாரணமாகப் பேசிவிட்டு வைத்தாள்…

    நர்மதா விற்கும் சந்தோஷமாகவே இருந்தது…

      அதன் பிறகு அரைமணி நேரத்திற்குள்ளாகவே சரத் மறு படியும் நர்மதாவிடம் பேசி நந்தினியிடம் பேச விரும்புவதாக சொன்னான்…

     இந்த முறை சரத் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அவன் அம்மாவிடம் போனை கொடுத்தான் நந்தினி தான் முதலில் பேசினாள்….

              நல்லா இருக்கீங்களா சித்தி என்ற வார்த்தையுடன் பேசத் தொடங்கினாள்…

           சரத் சொன்னான் மா நேரில் வந்து பேசுவதற்கு சின்ன தயக்கம் என் மேல தான் தப்பு அண்ணன்கிட்ட கோபப்பட்டது என் தப்பு தான்…. நேர்ல வரதுக்கு என்னவோ மாதிரி இருக்கு நீ கோயிலுக்கு கூட்டிட்டு வா கோயில்ல வச்சு முதல்ல பேசுவோம்…. அதுக்கு அப்புறம் நாங்க வீட்டிற்கு முறைப்படி கேட்டு வருகிறோம் என்று சரத்தின் அம்மா சொன்னார்…..

       சரிங்க சித்தி நான் மாமாட்ட பேசிட்டு சொல்றேன் முடிஞ்சா நைட் மாமாவை உங்களுக்கு பேச வைக்கிறேன்… என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்…..

      நடந்த அனைத்து விஷயத்தையும் மாறன் இடமும் அவனுடைய அம்மா அப்பாவிடமும் சொல்லத் தவறவில்லை…. பின்பு திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாகவே நடந்தது….. சரண்யா அவளுக்கு மட்டும் இந்த ஏற்பாடுகளில் அவ்வளவாக விருப்பமில்லை பட்டும் படாமலும் இருந்து கொண்டாள். திருமணத்திற்கு வருவதாக சொல்லி விட்டாள்….

    “விட்டுக்கொடுத்து செல்லும் உறவுகள் கெட்டுப்போவதில்லை விட்டுக்கொடுக்க கற்றுக் கொண்டால் உறவுகள் சிதைவதும் இல்லை…  முகமூடி அற்ற உறவுகள் சில மட்டுமே நமக்கு கிடைக்கிறது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ள விட்டுக் கொடுப்பது தப்பில்லை”

Advertisement