Advertisement

அத்தியாயம் 8

 

   “கூரிய வார்த்தைகள் நெஞ்சை பிளக்கலாம்….

    கேலியான வார்த்தைகள் தற்கொலையைத்  தூண்டலாம்….

     சுடுகின்ற வார்த்தைகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்…..”

     அவளுடைய வேலைகளை அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்…. “தேவகி தான் நீ எதற்காக இதெல்லாம் செய்யுற”….”அது தான் இப்ப ஆள் இருக்காங்க இல்ல அவங்க பார்த்துப்பாங்க” என்று சொன்னதற்கு…..

       இருக்கட்டும் அத்தை “நான் செய்றேன் எனக்கும் கொஞ்ச நேரம் போகும் இல்லை” என்று சொல்லிவிட்டாள்….. சமையலில் ஆசையோடு சேர்ந்து செய்தாலும் நிறைய சமையல் கற்றுக் கொண்டால் “அவனுக்கு பிடித்தது என்ன என்று பார்த்து பார்த்து சமையலை செய்ய தொடங்கினாள்” . அவருடைய சமையல் முறைகளை தெளிவாக கற்றுக் கொள்ளத் தொடங்கினாள்…..

         அவன் போனில் பேசும்போது என்றாவது என்று இல்லை அடிக்கடி வார்த்தைகளால் அவளை சாடினாலும் அவள் அதை கண்டு கொள்ளவே இல்லை… “மனதிற்குள்ளோ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்…. நான் நீ என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று நினைத்துக் கொண்டாள்….. உன்னுடைய வலி வேதனைகளை என்னிடம் வார்த்தைகளாய் சாடுகிறாய் அந்த வார்த்தைகள் என்னை பாதிக்கும் என்று நினைப்பதே இல்லை….. ஆனால் உனக்காக நான் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன்….உனக்கு வேண்டுமானால் என்மேல் காதல் இல்லாமல் இருக்கலாம்…. ஆனால் நான் உன்னை காதலிக்கிறேன்”… என்று தினமும் உரு போட்டுக் கொண்டே இருக்கத் தொடங்கினாள்…..

         பகல் நேரங்களில் தேவகி யுடன் சேர்ந்து பழைய படங்கள் மட்டும் பார்ப்பாள்…  மற்றபடி தொடர்களோ வேறு எந்த நிகழ்ச்சிகளையோ பார்க்க மாட்டாள்… ஏதாவது புத்தகங்கள் கிடைத்தால் படிக்க உட்காருவாள்….. எனவே அவள் புத்தகம் படிப்பதை அறிந்து கொண்ட மாறனின் அப்பா அவளுக்காக நல்ல நல்ல புத்தகங்களையும் சரித்திர நாவல்களையும் வாங்கி கொண்டு வந்து வீட்டில் வைத்தார்…. மருமகளுக்கு நேரம் போக வேண்டுமென்று…

       நாட்களும் மாதங்களும் கடந்து கொண்டே தான் இருக்க அவனுடன் போனில் பேசுவதை தன் தலையாய கடமையாக வைத்துக் கொண்டாள் அவன் என்ன திட்டினாலும் அதையெல்லாம் ஒதுக்கி அடுத்த நிமிடமே அவனிடம் சாதாரணமாக பேசுவது எப்படி என்ற நிலைக்கு வந்து விட்டாள். அவளுக்கே சந்தேகம் வந்தது. நாம ஜென் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறோமா என்று…

        மூன்று மாதங்கள் ஆன நிலையில் ஒருநாள் நர்மதா மாலை நேரம் கோவிலுக்கு கிளம்பினாள்..

         அண்ணி கோயிலுக்கு வரீங்களா….

         இல்ல நீ போய்ட்டு வா….

          அதேநேரம் நர்மதாவின் அம்மாவும் வந்து நந்தினி கோயிலுக்கு வர முடியாது. நீ போயிட்டு சீக்கிரம் வந்துரு சரி என்றார்கள். யாருக்கோ போன் பேசிக் கொண்டே வெளியே கிளம்பி சென்றாள்…

         நந்தினி அடிக்கடி வெளியே செல்வதில்லை வாரத்துக்கு ஒரு முறையோ இல்லை என்றாவது ஒரு நாள் தேவகியோடு இல்லை நர்மதாவுடன் கோயிலுக்கு கடைக்கு சென்று வருவாள் மற்றபடி வீட்டிலேயே தன்னை இருக்க பழகிக் கொண்டாள்…..

       அதுபோல் என்றாவது வெளியே சென்றால்.., செல்லும் போது தன் வீட்டில் உள்ளவர்களைப் பார்த்தால் மட்டுமே பேசிக் கொள்வாள்.. அடிக்கடி போன் செய்து பேசுவது கிடையாது அவர்கள் தான் இவளை  வந்து பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர்….

       அன்று கோயிலுக்கு சென்றவள் எப்போதும் வரும் நேரத்தை விட அதிக நேரம் ஆகியும் வரவில்லை… நந்தினி தேவகியிடம் சொல்லி அவர்கள் போன் செய்து கேட்கும் போது தன் தோழியோடு பேசிக்கொண்டிருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னாள் நர்மதா….

      சற்று நேரத்தில் நந்தினியின் அலைபேசிக்கு அழைப்பு வர தேவகி தான் “நந்தினி உங்க வீட்ல இருந்து போன் வருது என்னன்னு பாரு “என்று சொல்லி விட்டு விலகி தன் டிவி பார்க்கும் வேலையில் மூழ்கி விடவும் போனை எடுத்துக் கொண்டு அண்ணியின் அழைப்பு எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடு அழைப்பு முடியப் போகும் நேரம் போனை எடுத்து காதில் வைத்தவள்  என்ன அண்ணி என்று கேட்ட படி இருந்தாள்….

        என்ன அண்ணி சொல்லுங்க போன் பண்ணிட்டு பேசாம இருந்தா எப்படி….

       நந்தினி இத எப்படி சொல்றதுன்னு தெரியல… ஆனா வேற வழி இல்ல உன் கிட்ட சொல்லித்தான் ஆகணும், அதனால தான் சொல்றேன்..

           என்ன விஷயம் அண்ணி….

          ஒரு வாரத்துக்கு முன்னாடி நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தேன்…. அப்ப அம்மா வீட்டு ஆளுங்களோட படத்துக்கு போய் இருக்கும்போது  நர்மதா அவ  அத்த பையனோட வண்டில போறதை பார்த்தேன்…  அது அவங்க சொந்தக்காரங்க எதுவும் சொல்லக்கூடாது அந்த பொண்ணு எதனால வந்திருக்குன்னு தெரியாது அதனால தான் உன் கிட்ட சொல்லல…. ஆனா இன்னைக்கு கோயிலுக்கு வெளியே கோயில் பக்கம் வண்டிய நிப்பாட்டிட்டு அந்த பையன் கூட வண்டியில் ஏறி போனா…..  என்னன்னு கொஞ்சம் பாரு உன் வீட்டுக்காரர் வேற ஊர்ல இல்லை விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா உன்ன கொஸ்டின் கேட்பாரு அதனால யோசிச்சிக்கோ…. எனக்கு  என்னன்னு தெரியல ஆனா அந்த பொண்ணு அவங்க வண்டியில் போச்சு அன்னைக்கும் வண்டியில்தான் போச்சு அதையும் பார்த்தேன் அதனால பாத்துக்கோ

என்று ஒரு வழியாக திக்கி திக்கி சொல்லி முடித்தாள்…..

     சரிஅண்ணி ” நான் பாத்துக்குறேன் ஆனா இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது”….

   சொல்ல மாட்டேன் டா நீ பாத்துக்கோ “உன்னை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது “அது ஒன்னு தான் எனக்கு….

அண்ணி அங்கே வீட்டில் உள்ளங்களுக்கு கூட தெரிய கூடாது….

கண்டிப்பா மூச்சு கூட விட மாட்டேன் பயப்படாத…..

       அவர்கள் அத்தை வீட்டோடு பேச்சு கிடையாது என்பது சில நாட்களுக்கு முன்பு தேவகி சொல்லித்தான் அவளுக்கே தெரியும்… இப்போது அந்த வீட்டு பையனோடு நர்மதா வெளியே போய்க் கொண்டிருப்பது எப்படி பிரச்சினைகளை உருவாக்கும் என்று தெரியாமல் என்ன செய்வது இதை எப்படி வீட்டில் தெரிவிப்பது என்ற யோசனையோடு இருந்தாள்… ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்..எப்படி இத்தனை நாள் நர்மதாவை கவனிக்காமல் விட்டோம் என்று யோசித்துக் கொண்டு அவளிடம் ஏதும் மாற்றங்கள் இருக்கிறதா இல்லை முன்பே இந்த பழக்க வழக்கம் உண்டா என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்…

        அது  “நர்மதாவின் அப்பாவுடைய தங்கை வீடு”…. “அவர்கள் வீட்டுப் பெண்ணை இளமாறன் திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று சொல்லிவிட்டான் அதை முன்னிட்டு இருவருக்கும் பேச்சு வார்த்தை கிடையாது… ஆனால் இப்போது இந்த விஷயம் எந்த அளவு பிரச்சினையை உருவாக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்… எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டால் பிரச்சினை எதுவும் இல்லை…, இல்லை எதுவும் பிரச்சனை கிளம்பி விட்டால் என்ன செய்வது மாறன் இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்…

       “நர்மதா கோவில் சென்று வந்த பிறகு நந்தினி கண்டும்காணாமல் அவளைக் கொஞ்சம் கண்காணித்தாள்… அவளிடம் மாற்றங்கள் ஏதாவது இருக்கிறதா என்று”., சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போது மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும் அளவிற்கு அவள் எப்போதும் போலவே இருந்தாள்…. ஆனால் “அவ்வப்போது போனில் பேசுவதும் மெசேஜ் செய்வதுமாகவே இருந்தாள்., கையில் புத்தகம் இருந்தாலும் கவனமெல்லாம் அவளது போனிலே இருந்தது”…

      நந்தினி தவித்துப் போனாள் இதை எப்படி தெரியப்படுத்துவது வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லவில்லை என்றால் தன் மீது தவறு வந்துவிடுமோ என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்.

       மனதில் இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு  காண வேலையை அவள் செய்து கொண்டுதான் இருந்தாள்.. மழை வரும் போல் வெளியில் இடியும் மின்னலும் இருந்த போது மாடியில் காய போட்டிருக்கும் துணியை எடுக்கப் போவதாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்று சற்று நேரம் இருட்டை வெறித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்…  என்ன செய்வது என்று தெரியாமல் பின்பு லேசாக மழை தூரல் விழவும்துணியை அள்ளிக் கொண்டு கீழே வந்தவளுக்கு அதே நேரம் மாறன் வீடியோ சேட்டிங்கில் அழைக்கவும் நர்மதா தான் நந்தினியின் போனை எடுத்து பேச தொடங்கினாள்….

        நந்தினி வந்ததை கவனிக்காமல் நர்மதா போனில் அண்ணி மாடிக்கு துணி எடுக்க போய் இருக்காங்க வந்தவுடனே கூப்பிட சொல்லவா என்று கேட்ட அவள் பேச தொடங்கவும் அதே நேரம் நந்தினி வரவும் இதோ வந்துட்டாங்க என்று சொல்லி போனை கொடுக்க வரவும்….

          நீ பேசு நர்மதா நான் இப்ப வந்துடுறேன் என்று சொல்லி துணியை கொண்டு போய் அறையில் போட்டு விட்டு வந்தாள்.. மாறன் அடிக்கடி வீடியோ சேட்டிங்கில் பேசுவது கிடையாது எப்போதாவது தான் பேசுவான் அவனை பார்க்க வேண்டும் போலிருந்தால் வீட்டிலுள்ளவர்கள் அழைப்பார்கள்… அவனுக்கு நந்தினியை பார்க்கும்போதெல்லாம் எப்ப கூட்டிட்டு போவோம் என்ற எண்ணம் வர தொடங்கி இருந்ததால் அவனாக அழைப்பது கிடையாது…. அன்று ஏனோ அவனாகவே அழைத்திருந்தான் அதுவும் நந்தினியின் மொபைலுக்கு…,

        அவள் முகம் வாட்டமாக இருப்பதை  முதல் பார்வையிலேயே கண்டுகொண்டான் அவள் துணியை வைத்து விட்டு வருவதற்குள் தேவகியும் பாக்கியநாதனும் வரவே அனைவரும் பேசி விட்டு அவள் கைக்கு வந்து சேர்ந்தது….

        ஏன் ஒரு மாதிரி இருக்க…..

        எப்போவும் போலதான் இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க ஒர்க் எப்படி போகுது….

       எனக்கென நான் நல்லாத்தான் இருக்கேன்….. உன்கிட்ட ஒரு வித்தியாசம் தெரியுது  என்ன விஷயம்….

      ஒன்னு இல்ல….

          மறைக்காத உண்மைய சொல்லு இல்லாட்டி இப்ப மறுபடி தனியா அம்மா க்கு கூப்பிடுவேன்….

         அதெல்லாம் லேடிஸ் ப்ராப்ளம் உடனே  கேட்காதீங்க… இதெல்லாமா சொல்லுவாங்க…..

     ஏய் அதையும் தாண்டி உன் முகத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்கிட்ட ஏதோ சொல்ல நினைக்கிற…… என்ன சொல்லு என்று விடாப்பிடியாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே…..

      அவள் மெதுவாக பேசிக் கொண்டே நகர்ந்து சென்று விட்டாள்…. மெசேஜ் பண்றேன் என்று மட்டுமே சொன்னாள்… அவன் கேட்டதற்கு நார்மல் போன்ல கூப்பிடுங்க அப்படின்னு மட்டும் மெதுவா சொன்னாள்….

     அவன் யோசனையோடு நார்மலாக நலம் விசாரித்து விட்டு போனை வைத்து விட்டான்… எப்படியும் இவள் தூங்க செல்வதற்கு பத்து மணி ஆகும் என்று நேரத்தை கணக்கிட்டு கொண்டு அதற்கு தகுந்தாற் போல் அவளை கூப்பிட்டுக் கொள்ளலாம்  என்று நினைத்து போனை வைத்து விட்டான்….

     பிறகு சொல்கிறேன் என்று சொல்லி விட்டோம் ஆனால் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள்…

 “எப்படி மாறினேன் இப்படி

உன் பார்வையின் தவிப்பு

என் மனதின்  பாரத்தை

கூட்டுகிறது….

உன்னை அணைத்துக் கொள்ள

மனது பரபரத்தாலும்

தொலைவு கட்டிப்போடுகிறது….

பார்வையின் தவிப்பு பறந்து

வந்து தாக்குகிறது….

எனக்கும் காதல் உள்ளதா

என்ன…. கட்டுக்கடங்காமல்

கேள்விகள் பிறக்கிறது….”

சரியாக தூங்க செல்லும் நேரத்தை கணக்கிட்டு அவளிடம் பேசினான் மாறன்..

சொல்லு நந்தினி என்ன விஷயம் ஏன் ஒரு மாதிரி இருக்க….

உங்க கிட்ட பேசணும்… ஆனா அதை எப்படி சொல்றதுன்னு…. தெரியலை…

       முதலில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு  கேட்க தொடங்கினாள்…

         நீங்க ஏன் உங்க அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணாம போயிட்டீங்க….

       ஏய் லூசு என்னடி பேசறே…..

        நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க என் பண்ணல…..

       ஏய் யாரும் ஏதும் சொன்னாங்களா ஏன் திடீர்னு கேக்குற….

     சேச்சே  யாரும் எதுவும் சொல்லல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க……

     ஏய் அவள பாத்தா பண்ணனும்னு தோணல டி….  லூசு பெண்டாட்டி…

    ஏன் பண்ணனும் தோணல….

    நீ அடி தான்டி வாங்க போற…. இப்ப நீ என்னோட வைஃப் அது மட்டும்தான் நிஜம்  யாராவது ஏதாவது சொன்னாங்கன்னா…  அதை வச்சு உன்னை நீ குழப்பிக்காத… யார் சொன்னா சொல்லு….

      யாரும் சொல்லல…. இது வேற ஒரு விஷயம்… ஆனா எனக்கு சரியா தெரியல நான் நேர்ல பார்க்க ல வேற ஒரு ஆள்  சொன்னதைதான் நான் இப்போ உங்ககிட்ட சொல்றேன்… நீங்க கோபப்படமாட்டேன் ன்னு பிராமிஸ் பண்ணுங்க…..

       சரி சொல்லு என்றான்… அதே நேரம் அவன் குரலில் ஒரு யோசனை கலந்த நிதானம் வந்திருந்தது…..

        மறுபடியும் சொல்றேன் எனக்கு இத பத்தி முழுசா எதுவும் தெரியாது…. நான் மத்தவங்க சொன்னத தான் உன் கிட்ட சொல்றேன்…. எனக்கு உங்ககிட்ட மறைக்க இஷ்டம் இல்லை….  ஒருவேளை நான் உன்கிட்ட சொல்லாம இருந்து நாளைக்கு ஏதும் பெரிய பிரச்சினை ஆயிடுச்சுன்னா நீங்க நாளைக்கு என்ன கொஸ்டின் கேட்கக் கூடாது…. அதனால இப்பவே சொல்லிடுறேன்…. அது உண்மையா பொய்யான்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்…..

      ம்ம்ம்…. சொல்லு… என்றான் யோசனையுடன்….

      தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவனிடம் ஒன்றுவிடாமல் சொன்னால் வீட்டில் இருக்கும்போது போனில் எப்போதும் மெசேஜ் செய்து கொண்டிருப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தாள்….

      அடுத்தவங்க சொன்னா அப்படியே நம்பிடுவியா…. அது உண்மையா பொய்யா யோசிக்காம என் ட்ட  சொல்லுவியா நீ….

       இல்லங்க சத்தியமா எனக்கு தெரியாது ஆனால் சொன்னவங்க கண்ணால பார்த்து தான் சொல்றேன் ன்னு சொன்னாங்க… இப்படிச் சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும்…  அத்த., மாமா ட்ட  நேரில் சொல்ல முடியாது… உங்க கிட்ட சொன்னா நீங்க ஏதாவது பண்ணுவிங்க இல்ல அதுக்கு தான் உங்ககிட்ட சொல்றேன்….

    சரி நான் எதாவது பண்றேன் ஆனா எதுவும் வெளியே தெரியக்கூடாது….

   கண்டிப்பா சொல்ல மாட்டேன் அத்தை மாமா ட்ட கூட சொல்லமாட்டேன்…. நீங்களே சொல்லுங்க….

         நீ அவ போன் ன கொஞ்சம் செக் பண்றியா……

     அய்யய்யோ… அது தப்பா படும் ங்க அவ பாத்துட்டா போச்சு…. அந்த ஐடியா வேண்டாம் வேற ஏதாவது சொல்லுங்க….

     நான் எதாவது பண்றேன்….  அது வரைக்கும் நீ கொஞ்சம் கவனிச்சுக்கோ….

    ம்ம்ம்…. நீங்க கிளம்பிட்டீங்களா…

   இப்ப டைம் என்ன….

   10.30 ஆகுது……

   அங்க நைட் 10.30 ன்னா… கலிபோர்னியா ல  காலையில 10…. இது என்ன உங்க  அய்யாவோட கம்பெனியா நெனச்ச நேரத்துக்கு வருவதற்கு…. அப்பவே  வந்தாச்சு….

      ம்ம்ம்…

     ஆனா ஆபீஸ் டைம்ல போன் பேச பெர்மிஷன் கிடையாது… அதனால வெளியே வந்து பேசிட்டு இருக்கேன்….

    ம்ம்ம்….

   ஏய் என்ன வெறும் சத்தம் மட்டும் தான் வருது…

    எனக்கு சீக்கிரம் கேட்டு சொல்லுங்க… இல்லாட்டி டென்ஷனா இருக்கு…. நாளைக்கு வேணா ஏதாவது சொல்லி காலேஜ் போறத  நிப்பாட்டி வைக்கவா….

    அவ போகட்டும் நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத நான் பார்த்துக்கிறேன்..

    சரி… என்றாள் சற்று யோசனையோடு….

    அவளது யோசனையான குரலிலே போனை வைக்க மனமின்றி வேற என்ன சொல்லு என்றான்.

     நீங்க டென்ஷன் ஆகாதீங்க…. என்ன பண்ணலாம்னு யோசிங்க…. நீங்க சரின்னு சொன்னா நான் வேணா கண்காணிக்க வா…

     வேண்டாம் நீ எதுவும் பண்ணாத…. நான்  விச்சு கிட்ட பேசுறேன்….. அவன் பார்த்துப்பான்….

     அந்த அண்ணா யார்டயும் சொல்ல மாட்டாங்க இல்ல….

      சொல்ல மாட்டான்…. உனக்கு  அவங்க வீட்டில் உள்ள யாரையும் தெரியாது…. அவனுக்கு தான் தெரியும் அவன் பார்த்துப்பான் விடு….

      சரி…. வைக்கட்டுமா….

      ம்ம்ம்…. என்றவன்…. உனக்கு என்னை தேடுதா…. இல்லையா….

     முதல்ல அந்த பிராப்ளம் சால்வ் ஆகட்டும் அதுக்கப்புறம் நான் சொல்றேன்…. என்று அவனிடம் பொறுப்பை ஒப்படைத்த நிம்மதியுடன் போனை வைத்தாள்….

    போனை வைத்துவிட்டு அவனும் ஸ்கிரீன் சேவரில் வைத்திருந்த அவளது போட்டோவையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்…..

    அவளும் வீட்டில் வைத்து தனியாக எடுத்த போட்டோவை ஸ்கிரீன் சேவரில் வைத்திருந்தால் அதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்……

    “புரிந்துகொள்ளுதல் கைவரப் பெறும் போது உறவுகள் மேம்படும், வாழ்க்கையை பற்றிய நமது பார்வை மேம்படும், உலகைப் பற்றிய நம்பிக்கை வளரும், நமது திறமைகள் அதிகமாகும், புதிய பழக்கவழக்கங்கள் பண்புகள் தோன்றும், எதிர்மறை பழக்கங்கள் விலகும், லட்சியத்தை எளிதில் அடைய முடியும்…”

“புரிந்து கொள்ள முயற்சியுங்கள்… வாழ்க்கை வசப்படட்டும்…”

Advertisement