Advertisement

அத்தியாயம் 7

 

“கசப்பான வார்த்தைகள் விஷத்தை பாய்ச்சலாம்….

கடுமையான வார்த்தைகள் மனமுடைய செய்யலாம்…..

காரமான வார்த்தைகள் பகை வளரச் செய்யலாம்…..”

        சிங்கப்பூர் சென்று சேரும் வரை அவளது நினைவுகளை யோசித்தபடி அவளோடு பேசிய விஷயங்களை யோசித்துக் கொண்டே சென்றான்….

     “நான் லவ் பண்ணா உங்களுக்கு என்ன என்று கேட்டாளே”…. ஒருவேளை உண்மையாக இருக்குமா இல்லை வார்த்தைக்காக சொல்லியிருப்பாளோ… என்று யோசித்து  கொண்டான் …..

         பயணத்தை தொடங்கிய  பிறகு மனதில் இருந்த பாரம் எதுவும் அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை….. அப்போதுதான் நண்பர்கள் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது… ஒருவேளை அவளிடம் தனியாக பேசிவிட்டு வந்து இருந்தால்., வீட்டில் இருந்து ஏர்போர்ட் வரும் வரை இருந்த அந்த கஷ்டமான மனநிலை இருந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான்….

         சிங்கப்பூரில் வந்து அடுத்த விமானத்திற்கு காத்திருந்த நேரம்….  திருமணத்திற்கு முன் அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக இவன் செய்த வேலைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்….

      ஆறு மாதத்திற்கு முன் தற்செயலாக நந்தினியின் அப்பா எந்த உறவுக்காரரிடம் இவனை திட்டி பேசினாரோ அந்த உறவுக்காரரை தொடர்பு கொள்ள வேண்டியது இருந்தது…. அவர் இவனுக்கு சித்தப்பா முறையாக வேண்டும் …

      நர்மதாவின் திருமண விஷயமாக அவருக்கு சில தகவல்கள் சொல்வதற்காக அழைத்திருந்தான்…. வெளிநாட்டில் இருப்பதால் உறவுக்காரர்கள் யாருக்கும் அவன் போன் செய்வது கிடையாது முதல் முறையாக  திருமண விஷயமாக ஒரு ஏற்பாடு செய்வதற்காக பேசியிருந்தான்…

     இவன் போன் செய்தது தெரிந்தவுடன் சித்தப்பாவிற்கு மிகவும் சந்தோஷம் வெளிநாட்டில் இருப்பவன் தன்னை தேடி போன் செய்திருப்பது மிகவும் பெருமையாக எண்ணினர்…. அப்பொழுதுதான் சொன்னான்….

      சித்தப்பா நர்மதாவிற்கு நல்ல மாப்பிள்ளையாக பாருங்கள்…. அவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தான்…..

    ஊரில் மட்டுமின்றி சொந்த பந்தங்களுடனும் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது அதனால் இளமாறன் அவரிடம் மாப்பிள்ளை தேடும் விஷயமாக கூப்பிட்டு பேசினான்….

     அப்பொழுதுதான் ஒரு முறை பேசும் போது நந்தினி வீட்டைப் பற்றி பேச்சு வந்தது இவனுக்கு ஏதோ கேட்க பிடிக்காவிட்டாலும் அவர் சொல்வதற்கு உம் கொட்டிக் கொண்டிருந்தான்….

    அப்பொழுதுதான் இரண்டு மூன்று ஒரு நல்ல மாப்பிள்ளை களைப் பற்றி சொல்லியிருந்ததாகவும்…..  இப்படிப்பட்ட மாப்பிள்ளை களையே வேண்டாம் ன்னு சொல்லி  அந்த பொண்ணு வீட்டுல பிறகு பார்க்கலாம் ன்னு சொல்றாங்க ப்பா என்று கூறினார்……

     இவனோ ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக…. ஏன் சித்தப்பா என்று ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்டான்….அவர் உடனே கதை கதையாகச் சொல்ல தொடங்கிவிட்டார்…..

        நல்ல நல்ல மாப்பிள்ளையா சொன்னாலும் அவங்க அப்பா வாயே திறக்க மாட்டேக்காருப்பா…..  வீட்ல உள்ளவங்க யாரும் அதை பத்தி பேசவே மாட்டேங்கிறாங்க…. சரி அந்த பொண்ணு நல்லா இருக்கு அப்படின்னு தான் நல்ல சமந்தமா   சொன்னேன்…. ஆனா அந்த மனுசன் ஏன் இப்படி இருக்கான்னு தெரியல….  அந்த பொண்ணு இந்த ஊர்ல இல்ல…. ஏதோ பிரச்சினை இருக்குப்பா வீட்டில….

நமக்கு எதுக்கு சித்தப்பா தேவையில்லாத வேலை…..  நம்ம நர்மதாவுக்கு நல்ல மாப்பிள்ளை பாருங்க…. நம்ம அதை மட்டும் பார்ப்போம்.,..  அடுத்த வீட்டு விஷயம் நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்…. அதனால விட்ருவோம் அது தான் அவர் குணம்  தெரியும் தானே…. அந்த ஆளு என்ன எதிர்பாக்காறோ யாருக்கு தெரியும்….

        அது என்னவோ உண்மைதான் தம்பி நம்ம அதிலெல்லாம் தலையிடக்கூடாது…. ஆனால் கஷ்டமா இருக்கு.,. புள்ள வயசு ஏறிட்டே போகுது….  வீட்ல உள்ளவங்க யாரும் கல்யாண பேச்சை பேச மாட்டாங்காங்க….  சொன்னா கூட பதில் பேச மாட்டிங்கறாங்க….  இல்ல அவ கிட்ட பேச முடியாதுன்னு சொல்லிடாங்க…  என்ன நடக்கும் தெரியல பார்ப்போம். அதிலே சொன்ன நல்ல மாப்பிள்ளைகள் இருக்குப்பா நம்ம நர்மதாவிற்கு பார்க்கலாமா…..

இல்ல சித்தப்பா அதெல்லாம் சரி வராது…. அந்த பொண்ணுக்கு 24 அல்லது 25வயசு இருக்கும்….. ஆனால் நர்மதா இப்பதானே சித்தப்பா 20 முடியுது 21 தான் ஆரம்பிக்கிறது அவளோ வயசு வித்தியாசத்தில் எல்லாம் பார்க்காதீங்க…. நல்ல இடமா பாருங்க அவ வயசுக்கு தகுந்தப்புல மாப்பிள்ளை பாருங்க….

அதுவும் சரிதான்…. நீ சொல்ற மாதிரி நான் பார்க்குறேன்…. கிடைச்சா உனக்கு மெசேஜ் பண்ணுறேன்பா….

அவரிடம்  பேசிவிட்டு அதன் பிறகு வந்த  நாட்களில் அவனுக்கு அவள் நினைப்பு அடிக்கடி வந்தது…. எதற்காக கல்யாணம் பண்ணி வைக்காமல் இருக்கிறார்கள் வர்ற மாப்பிள்ளை எல்லாம் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காங்க என்று யோசித்துக் கொண்டே இருந்தான்….

   அவனுக்கு ஏனோ அவளுடைய அப்பா பேசிய வார்த்தைகள் அதன் பிறகு தான் அதிகமாக நினைவுக்கு வந்தது…. எப்படி எல்லாம் நம்மள மட்டம் தட்டினார்…. இப்ப பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க முடியாமல் இருக்கிறார் என்று தோன்றியது.

      நந்தினிக்கு முன் இவனுடைய தங்கை நர்மதாவுக்கு நல்லபடியாக மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…… அவர் தந்தை நோகும் அளவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் மனதில் தோன்றியது….. ஆனால் ஒரு புறம் பழிவாங்குவது தப்பு என்று தோன்றினாலும் ஏனோ மனதிற்குள் சிறு வன்மம்  இருந்து கொண்டே இருந்தது…..

   அடுத்த முறை  உறவினரான அந்த சித்தப்பாவிடம் பேசும்போது வேண்டுமென்றே இவனே நந்தினியின் பேச்சை எடுத்தான்….. அப்போது அவர் தந்தை பேசியது….  பற்றி எல்லாம் அவருக்கு ஞாபகப்படுத்தி விட்டு அப்படியெல்லாம் பேசினாரு இப்ப ஏன்  பொண்ணுக்கு  ஒரு மாப்பிள்ளை பார்க்க முடியாமல் இருக்கிறார் என்று கேலியாக கிண்டலாக சொல்வது போல அவனுடைய கோபத்தை தெரிவித்தான் அதே நேரம் அந்த சித்தப்பா தான்….

     அந்த பொண்ணோட அப்பா இப்ப நொந்து போயிருக்கிறார் ….. ஒரு வாரத்திற்கு முன் ஒரு கல்யாண வீட்டில் சந்திக்கும் போது கூட சொல்லிக் கொண்டிருந்தார்….. அவளுக்கு இங்கு உள்ள மாப்பிள்ளை சரிப்பட்டுவராது….. எங்காவது வெளியூரில் உள்ள மாப்பிள்ளை தான் பார்க்க வேண்டும் என்று  சொன்னார்….

        முதலில் கேட்டுவிட்டு சாதாரணமாக உம்  கொட்டியவன்…. அவங்க எல்லாம் பெரிய இடமா பார்ப்பாங்க சித்தப்பா நல்ல பாரின் மாப்பிள்ளை வேற எவனும் இருந்தா என்ன சொல்லுங்க….  வேண்டும் என்றே சொல்லி விட்டு அமைதியாகி விட்டான்….

          சித்தப்பா தான் ஏண்டா உனக்கு பார்ப்போமா….. என்று கேட்டார்

           ஏன் சித்தப்பா திருப்பி திட்டவா என்று இவன் கேட்கவும்…..

           இல்லடா அன்னைக்கு அவ்வளவு பேசினார் இல்ல….. இன்னிக்கு உனக்கு  பொண்ணு கொடுக்கட்டும்…..

            அவர் எதிர்பார்க்கிற மாதிரி வெளிநாட்டு மாப்பிள்ளை அவருக்கு…. அவரு அன்னைக்கு பேசிய பேச்சுக்கு அவர் இன்னைக்கு உனக்கு மரியாதை கொடுக்குற மாதிரி ஆச்சு…..

          நான் முன்னாடி  உன்னோட காலேஜ் படிக்கிற வயசுல சும்மாதான் கேட்டேன்….. அவர்கிட்ட ஆனா அப்போ ஓவரா பேசினார்…

        இருந்தாலும் இப்ப வேணாம் சித்தப்பா…

         நான்  பேசி பார்க்கிறேன் மெதுவா…. அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று சொன்னவுடன்…..

          இவனும் இல்ல சித்தப்பா அசிங்கப்பட வேண்டாம் அந்த ஆள் திருப்பி ஏதாவது அசிங்கமா பேசிட்டாருன்னா….. எனக்கு தான்  மானம்  போகும் என்று சொல்லவும்…..

           இல்லடா உனக்கும் உங்க வீட்டில் உள்ளவர்களுக்கும் இதுல சம்பந்தமே இல்லாத படி நான் பேசுறேன் அவர் ஒருவேளை சரின்னு சொன்னார் என்றால் நம்ம மேற்கொண்டு பேசுவோம்……

    பார்க்கலாம் சித்தப்பா முதல்ல நர்மதா க்கு  பாருங்க என்று அந்த பேச்சோடு நிறுத்திக் கொண்டான்…… ஆனால் மனதிற்குள் ஏனோ பேசினால் என்ன என்று தோன்றியது….. இவனுக்கு பேச வேண்டும் என்ற எண்ணம் இருக்க போய் தான் முதலில் சித்தப்பாவிடம் நந்தினியின் தந்தை பேசியதை ஞாபகப்படுத்தி வேண்டுமென்றே பேசினான்…… தற்செயலாக அவரும் இதைப் பிடித்துக் கொள்ளவும் இவனுக்கும் வேண்டாம் என்று வெளியே சொன்னாலும் மனதிற்குள் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது……

           அவளிடமிருந்து முதலில் சாரி மெசேஜ் அதன் பிறகு இரண்டு முறை மெயில் வந்ததோடு சரி அதன் பிறகு அவள் இவனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் அவளுடைய அலைபேசி எண் அவனுக்கு தெரியும்….  மெயில் ஐடியும் தெரியும் இருந்தும்…..  இவன் அவளிடம் பேசவோ தொடர்பு கொள்ளவோ இல்லை….

       நண்பர்களுக்கும் தெரியும் ஆனால் யாரிடமும் எதைப்பற்றியும் சொல்லவில்லை

       அடுத்த முறை சித்தப்பா அவசரமாக மெசேஜ் அனுப்பினார் நீ போன் பண்ணு என்று இவன் எதற்கு என்று தெரியாமல் போன் செய்யவும் விஷயத்தை சொன்னார்…..

       அவர் சம்மதித்து விட்டதாகவும் அதாவது நந்தினி அப்பா சம்மதித்து விட்டதாகவும் நந்தினியை சம்மதிக்க வைப்பது அவர்கள் பாடு என்றும் முறைப்படி மற்றவற்றை பேசலாம் என்றும் சொன்னதாக சொன்னார்.  அதை கேட்டதும் அவனுக்கும் மனதிற்குள் ஒரு சந்தோஷம் வந்து போனது ஏனோ எதற்கு என்று அன்று புரியவில்லை…

இப்போதும்  எதற்கு அன்று சந்தோஷப் பட்டோம் என்று இப்போதும் குழம்பிக் கொண்டு தான் இருந்தான்….

அதன் பிறகே அந்த சித்தப்பாவின் மூலமாகவே வீட்டில் பெரியவர்களிடம் பேசி அவர்களும் முறைப்படி பேசுவது பேசி எல்லாம் செய்தனர்….

அதன் பிறகே பெற்றோர்கள்  இவனிடம் சம்மதம்  கேட்கும்போது சரி என்று சொன்னான்…..  மேற்கொண்டு இவனும் வேறு எதுவும் பேசவில்லை…..

        ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் கல்யாண நேரத்தில் இவன் அவளை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும்  இருந்தால் அதை ஒரளவு நிறைவேற்றினான்……. அதை இப்போது நினைத்துக் கொண்டிருந்தான்…..

       சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் முன் அவளது வாட்ஸப் நம்பர் க்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டு கிளம்பினான்….

        ஒரு வழியாக அவன்  இருப்பிடத்தை அடையும் போது இவர்களுக்கு மறுநாள் இரவாகியிருந்தது…. அங்கு பகல் நேரம் என்பதால் மாறன் போய் இறங்கியவுடன் அவர்களிடம் போன் செய்து பேசினான்….

      அவளிடமும் சாதாரணமாகப் பேசிவிட்டு வைக்கும் முன் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு உனக்கு கூப்பிடுறேன் என்று மட்டுமே சொன்னான்….

     அவளுக்கோ அவன் கிளம்பி இரவில் இருந்து அவளை சுற்றி வெறுமை படர்ந்து இருப்பதாக  தோன்றினாலும்…. ஏனோ அவனிடம் பேசிய நினைவுகள் மட்டும் அவளை சுவாசிக்க வைத்துக் கொண்டிருப்பதாக அவள் எண்ணினாள்….

“உன் குரலோசை இன்னும்

என் காதில் ரீங்காரம்

இட்டுக் கொண்டு இருக்கிறது

என்னை வாழ வைக்கும்

என் மூச்சுக் காற்றின்

ஓசை ஆகவே

உன் குரல் ஓசையை

காதல் சொல்ல வேண்டாம்

என் காதில் உன் குரல்

ஓசையை மட்டும் கொடுத்து விடு

அதையே என் சுவாசமாக்கி

வாழ்ந்து கொள்கிறேன்…..”

      அவன் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பழைய நினைவுகளை யோசித்துக் கொண்டிருந்தாள்…… வீட்டிற்கு எப்போதும் அழைக்கவே மாட்டாள்….. அவள் அம்மா புவனேஸ்வரி இல்லை அண்ணனோ அண்ணியோ., அழைத்தால் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விடுவாள்….  அண்ணனிடமும் அப்பாவிடமும் அதிகமான பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள்…..

            அப்படி ஒரு முறை தான் திருமணம் பற்றி பேசும் போது அதிக அளவு கோபப்பட்டு விட்டு போனை வைத்து விட்டாள்…… அதன் பிறகு வீட்டில் இருந்து போன் வந்தாலும் இவள் எடுப்பதில்லை திருப்பி அழைப்பதும் இல்லை…. அதன் பிறகு ஒருமுறை அவளது அண்ணி ஏன் என்று கேட்டதற்கு தயவு செய்து திருமணம் பற்றி பேசாதீர்கள் என்று கூறிவிட்டாள்…

     அதனால் தான் நந்தினியின் அப்பா அவளை பொய் சொல்லி வரவழைத்தது திருமணத்திற்கு பேசி வைத்துக் கொண்டு அழைத்து விட்டால் அவளால் மறுக்க முடியாது என்ற எண்ணத்தோடு தான் அழைத்தார்…..  நிச்சயமாக அது இளமாறனாக  இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக மறுத்திருப்பாள்… திருமணத்தை நிறுத்தி இருப்பாள்…..அதை தான்  இப்போது யோசித்துக் கொண்டிருந்தாள்……

     அப்போது அவன் மீது காதல் இருந்ததா என்று ஆராய்ச்சியில் இறங்கினாள்….. அதற்குப் பெயர் காதல் என்று சொல்ல முடியாது அவன் மேல் வந்த மரியாதை வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மேல் குறையை வைத்துக் கொண்டு அவனை குறை சொன்னதால் வந்த ஒரு பரிதாபம் இப்படித்தான் அது வரை நினைத்துக் கொண்டிருந்தாள்…… ஆனால் இப்போது மாறனை விரும்புவதை அவள் உணர்ந்து கொண்டாலும் அப்போது இருந்ததற்கு பெயர் என்ன என்று யோசித்துக் கொண்டாள்…..  எது எப்படி இருந்தாலும் மாறன் என்னுடைய கணவன் எனக்கு மட்டுமே உரிமையானவன் என்று நினைத்து விட்டு….. தன்னை  நினைத்து சிரித்துக் கொண்டாள்…..

“கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் காதலைகொண்டேன்    

கொண்டேன் கொண்டேன்

கொண்டேன் ஆவலை

பிள்ளை மொழி சொல்லை விட

ஒற்றை பனை கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன்”      

       என்று பாடலை முனுமுனுத்துக் கொண்டிருக்கும் போதே…. அவனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வரவும் அவனிடம் சற்று நேரம் பேசி விட்டு அவனை ஓய்வெடுக்கும்படி சொல்லி விட்டு போனை வைத்தாள்….. அவனிடம் பேசியது மட்டுமே அவளுக்கு அமைதியை தந்தது…

       அதே நேரம் அவன் ஓய்வு எடுக்கப் போவதாக சொல்லிவிட்டு அத்தனை அலைச்சலுக்குப் பிறகும்  தூக்கம் வராமல் அவள் நினைவுகளோடு யோசித்துக் கொண்டே இருந்தான்…… வாழ்க்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல் இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்……

     “வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக் கொள்பவன்….. தானே விட்டுக் கொடுக்கவும் கற்றுக் கொள்கிறான்….. எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை மட்டுமல்ல… வார்த்தைகளில் எரிச்சலையும் சேர்த்து கொட்டுகிறது…. எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையின் நிதர்சனம் எளிதாக மனிதனுக்கு புரிந்துவிடும்.”

 

 

 

Advertisement