மாறனின் மனநிலையில் அவளிடம் தனியாக விடைபெறும் எண்ணம் வரவில்லை…. எனவே எல்லோரிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு மாறன் கிளம்பிவிட்டான்….
அவளுக்கு ஏனோ வருத்தமாக இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாத வளாக அமைதியாக இருந்தாள்…. ஆனால் மனதிற்குள் ஒரு வலி அழுத்திக் கொண்டே இருந்தது…. மாலை காபி கொண்டு கொடுக்கப் போகும்போது அவன் வாயிலிருந்து கேட்ட வார்த்தை உயிரை வேரோடு பிடுங்கி எடுத்தது போல இருந்தது….
ஏற்கனவே முதல் நாள் மாடியில் வைத்துப் பேசும்போது சொன்ன வார்த்தை இன்னும் அழுத்திக்கொண்டிருந்தது…. கல்யாணத்திற்கு சம்மதித்தது தவறு என்ற அவனது எண்ணம் மற்றும் இன்று கூறிய டைவஸ் பற்றிய அவன் எண்ணம்…. ஏன் அவன் மனதில் இப்படி யோசனை என்று யோசித்துக்கொண்டிருந்தாள்…. பிடிக்கலையா…. பிடிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பண்ண ன்னு தெரியாமல் யோசிக்கிறார்களா என்று தன் மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டாள்…
திருச்சிக்கு அருகே உள்ள ஊர்… எனவே திருச்சியில் இருந்து சிங்கப்பூர் விமானத்திற்கு கிளம்புகிறான்… சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா என்று அவனது திட்டம் இப்போது நண்பர்களோடு திருச்சி விமான நிலையத்திற்கு தான் சென்று கொண்டிருந்தான்… அவனை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு உள் வந்தவள் கைப்பாட்டிலும் வேலை செய்து கொண்டிருந்தாலும் …. மனதிற்குள் எண்ணங்களும் குழப்பங்களும் அவளை ஆக்கிரமித்தே இருந்தது…. அவளது முக வாட்டத்தை தேவகி அவன் கிளம்பிய வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்…….
திருமணமான முதல் நாளில் இருந்து அவனுடைய நடவடிக்கைகளை மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தாள்… அவனது கோபம் அவனது சிரிப்பு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது… அவனிடம் எதிர்த்துப் பேசிய அன்று…. சகஜமாக பேசிய போது அவன் மிகவும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன் இருந்தான்…. மறுநாள் அவனே தேடி வந்து அவளிடம் பேசினேன்….
அதன் பிறகு என்ன நடந்தது என்று யோசித்தால் ஹோட்டலில் வைத்து அமெரிக்க நண்பனுடன் பேசிய அன்று அவனது முகத்தின் மாறுபாடுகள் எப்படி இருந்தது என்று யோசித்தாள் சிரித்த முகமாகவே இருந்தான்…. அவர்கள் நண்பர்களுடன் அந்தப் பெண்ணை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட அவளது முகத்தை மட்டுமே அவன் பார்த்தது….. அவளுக்கு நினைவு வந்தது., என்ன எதிர்பார்க்கிறான் என்று புரியாமல் சற்று குழம்பினாள்…. ஒருவேளை தான் அவனிடம் அதை வைத்து என்ன என்று கேட்டிருந்தால் சகஜமாக பேசி இருப்பானோ., என்று இப்போது நினைத்தாள்… காலம் கடந்த யோசனையால் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டாள்….
அவன் நண்பர்களுடன் பேசியது ., சாதாரணமாக கிண்டலுக்காக பேசியது இதை பெரிய விஷயமாக எடுக்கக் கூடாது என்று நினைத்துதான் அவள் பேசாமல் விட்டது… ஆனால் அவன் எதிர்பார்த்திருப்பானோ என்று இப்போது அவளுக்கு தோன்றியது……
அன்றொருநாள் சொல்லிய வார்த்தை அவளுக்கு நினைவு வந்தது…. என்னை சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அப்போ எல்லாம் உனக்கு இஷ்டம் இருந்தது இல்லை…. இப்ப என்ன சொல்லுவ சொல்லு நீ …. ஏன் இப்படி கேட்டாங்க… அப்போ நான் அவங்களை உரிமை கொண்டாணும் எதிர்பார்க்கிறாங்களா என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்….
உரிமை கொண்டாடி பார்ப்போமா என்று யோசித்தாள்…. மனதிற்குள் இருந்த ஈகோ நீயா நானா என்ற போட்டியிட இவனிடம் தோற்று போவதா என்ற எண்ணம் ஒரு ஓரமாய் இருந்தது…. இந்த எண்ணம் இவளை குழப்பி விட்டாலும் அதன் தலையில் தட்டி அடக்கி விட்டு பேசுவது என்ற முடிவோடு தூங்க போவதாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்….
மாறனும் காரில் சென்று கொண்டிருக்கும் போதே மிக அமைதியாக யோசனையோடு வந்தான்…. அவனது முகம் வாடி போய் இருப்பதை நண்பர்கள் பார்த்தனர்….
ஏண்டா இவ்வளவு யோசனையோட வர்ற…. இப்படி யோசிச்சு மனசைபோட்டு குழப்பிக்கிறதுக்கு பதிலா., அந்த பொண்ணு ட்ட டைரக்டா நீ பேசிட்டே வந்து இருக்கலாம்…. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கத்தில் மூஞ்சி திருப்பிட்டு என்னடா இது…..
அதெல்லாம் ஒன்னும் இல்லடா மனசு ஒரு மாதிரி இருக்கு…..
இதுவரைக்கு ரெண்டு தடவ வந்துட்டு போயிருக்க எப்பவாது இப்படி இருந்து இருக்கா….
நானும் அந்த தாண்டா யோசித்தேன் ஏன் இப்படி என்று…..
அதுவா அது இந்த தடவை உன் வைஃப் இருக்கிறது ன்னால தான் வேற ஒன்னும் இல்ல…. அந்த பொண்ண விட்டுட்டு போற இல்ல…. அதுதான் உனக்கு இப்படி இருக்கு…
அதெல்லாம் ஒன்னும் இல்லை….
டேய் மச்சான் உனக்கு வாய் தான் இப்படி சொல்லுது…. எங்க உன் மனசை சொல்ல சொல்லு பாப்போம்…. உடனே இல்லன்னு சொல்லாத நல்ல யோசி…. இதை தான் நாங்க திரும்ப திரும்ப சொல்லுறோம் எல்லாத்தையும் யோசி ன்னு…
அவனுக்கும் கிளம்பியதிலிருந்து மனதிற்குள் இந்த எண்ணம் இருக்கத்தான் செய்தது…. அவளை எங்கேயும் போகக் கூடாது என்று சொல்லி விட்டோம்… ஒரு வார்த்தை பேசிவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது…. அவன் நடந்து கொண்ட விதம் அவனையே வருத்தப்படும் படி வைத்தது… முதல் நாளிலிருந்து தான் அவளிடம் நடந்துகொண்ட விஷயங்களை நினைத்துக் கொண்டு வந்தான்…. தப்பா நடந்துக் கிட்டேனா என்ற எண்ணம் அவனிடம் இருந்து கொண்டே இருந்தது….
அவனது மனசாட்சியோ அவனைக் குத்திக் காட்டி சிரித்தது…..
உன்ன மாதிரி ஒரு மோசமான ஒருத்தனை பார்த்ததே கிடையாது டா…. இப்படிப்பட்ட நீ கல்யாணம் பண்ணி இருக்க கூடாது அந்த பொண்ண…. என்று கூறிய மனசாட்சி இடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்…. அவனுக்கே அது தவறு என்று தெரியும் போது என்ன செய்வது….
அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றினாலும் பேச அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை…. வலிய போய் அவளிடம் பேசி தன்னை அவள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற எண்ணத்தில் போன் செய்ய யோசித்துக் கொண்டிருந்தான்…..
ஏர்போர்ட் வந்தவுடன் நண்பர்களிடம் விடைபெற்று செக் இன் செய்ய உள்ளே சென்றவுடன் அவனுடைய நண்பர்கள்., மாறா நல்லா யோசிச்சி முடிவு பண்ணு…. அவசரப்படவேண்டாம் மனசுவிட்டுப் பேசி முடிவு பண்ணுங்க…. தயவு செய்து தப்பா எந்த முடிவுக்கும் போகாத…. அந்த பொண்ணு கிட்ட பேசு என்று சொல்லி வழியனுப்பி வைத்தனர்…. மனசை போட்டு குழப்பிக்காத… நாங்க எல்லாரும் பார்த்துக்கிறோம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு போன் பேச சொல்லு…. என்றபடி நண்பர்களுக்கு உண்டான ஆறுதல் அணைப்புடன் கிளம்பினர்….
அவனுடைய ஃப்ளைட் காக காத்திருந்த நேரத்தில் பேசவா…. வேண்டாமா… என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே….
அவளிடம் இருந்து வாட்ஸ் அப் மெஸேஜ் வந்தது…. மனதிற்குள் ஒரு விதமான மகிழ்ச்சியை உணர்ந்தான்…. கோபமாக இருப்பது போல் ஸ்மைலி மட்டும் அனுப்பினாள்…. அவன் ஆன்லைன் ல் இருப்பது தெரிந்தது…. மெஸேஜ் பார்த்து விட்டான் என்பதற்கு அடையாளமாக நீல நிற குறியீடு வந்தது…. ஆனால் அவனிடம் பதில் இல்லை என்ற போது வருத்தமாக இருந்தாலும் …. அவனிடம் பேச வேண்டும் என்ற நினைப்பு அதிகமாக இருந்தது…..
அவளது மனசாட்சியோ…. சோறுல உப்பு போட்டு தானே சாப்பிடுற கொஞ்சம் கூட மானம் , ரோஷம் , சூடு , சொரணை என்று உனக்கு எதுவுமே இல்லையா….. என்று கேள்வி கேட்ட மனசாட்சியிடம் சண்டை போட்டுவிட்டு அவனிடம் பேசுவதற்கு தயாராக இருந்தாள்…..
பொண்ணா பொறந்த எல்லாரும்… மானம் , ரோஷம் , சூடு , சொரணை , என்று பேசத் தொடங்கினால் அத்தனை குடும்பத்துப் பெண்களும் கோர்ட் வாசலில் விவாகரத்துக்காக காத்திருக்க தான் வேண்டும்….. விட்டுக்கொடுத்துப் போகும் வாழ்க்கை மட்டுமே பெண்களை குடும்பத்தோடு வாழவைக்கும்…… இன்று நிறைய பெண்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…..
மனசாட்சியின் மண்டையை தட்டி வைத்துவிட்டு…. அவனுக்கு பேசணும் என்று மட்டும் மெசேஜ் அனுப்பினாள்…. அதற்கும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை…. பார்த்தற்கான அடையாளம் மட்டுமே தெரிந்தது…. சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவனை அலைபேசியில் அழைத்து விட்டாள்…..
அவளது மெசேஜ் பார்த்தவுடன் பதில் அனுப்ப தோன்றினாலும்…. ஏனோ அவனிடமிருந்த ஈகோ என்ற வீம்பு பிடித்த குணம் அவனை மெசேஜ் அனுப்ப விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தது….. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த மெசேஜ் வந்துவிட அதையும் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்….. என்ன செய்வது எப்படி அவளிடம் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவளிடமிருந்து போன் வந்தது…..
கடைசி நேரத்தில் போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தான்….
சற்றே அமைதிக்கு பின்னே….. ம்ம்ம் சொல்லு என்றான்…..
பேசணும் என்று மட்டுமே சொன்னாள்….
ம்ம்ம்…. என்ன பேசணும் சொல்லு என்றான்.
அவளுக்கும் எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் உங்களுக்கு டைம் ஆயிடுச்சா…. கொஞ்சம் டைம் கிடைக்குமா என்று கேட்டாள்…
அவளுடைய தயக்கம் புரிந்தாலும் வேறு எதுவும் சொல்லாமல் சொல்லு இன்னும் டைம் இருக்கு என்று மட்டும் பதில் அளித்தான்…..
உங்க கிட்ட சண்டை போடணும்னு நினைச்சேன் ஆனா நீங்கதான் பேசவே இல்லை…
ஏன் இதுவரைக்கும் நாம சண்டை போட்டதே இல்லையா…. இப்பதான் புதுசா போடப் போறியா….
நான் எப்ப உங்ககிட்ட சண்டை போட்டேன் சொல்லுங்க….
காலேஜ் படிக்கும்போது….
அப்ப எப்ப சண்டை போட்டேன்….
அப்ப நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்…
அது சண்டையில்லை கோபத்தில் திட்டுறது நீங்க சொன்னிங்களே உங்கள பாத்து வார்த்தையை விட்டேனு…அது
ஓ அப்ப இப்ப சண்டை போடப் போற….
ஃப்ரீயா இருக்கீங்களா…..
ம்ம்ம்… ரொம்ப பிஸியா இருக்கேன்…
ஏன் கிளம்பாத ஃப்ளைட் எல்லாம் தள்ளிவிட்டுட்டு இருக்கீங்களா…..
அவள் சொன்னதைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு…. அவள் பேசுவதை கேட்க தயாராக இருந்தான்….
ஏதோ சண்டை போடனும்னு சொன்ன…
ம்ஹா… ஞாபகப்படுத்திட்டீங்க தேங்க்ஸ்…..
இப்பவும் நான்தான் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டேனா…. என்றான் இலகுவான குரலோடு….
அன்னைக்கே உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்….
எதுனாலும் அப்பப்ப கேட்கணும்…. லேட்டா வந்து அன்னைக்கே ன்னு சொன்னா என்னைக்கு ன்னு எனக்கு எப்படி தெரியும்….
ம்ம்ம்…. உங்க ஃபிரண்ட்சோட ஹோட்டலுக்கு போயிட்டு வந்த அன்னைக்கு….
ஓ ஓ சரி கேளு என்ன… என்று அவன் சொன்னாலும்., அவள் ஏதோ கேட்க போகிறாள் என்று மட்டும் அவனுக்கு தெரிந்தது.,
அங்க வச்சு நீங்க வீடியோ சாட்டில் உங்க பிரண்டு கிட்ட பேசும் போது….. என்று அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் குறுக்கிட்டான்….
வேண்டும் என்றே கேட்டான்… எந்த ப்ர்ண்ட் கிட்ட… தெளிவா சொல்லு…. அவனுக்கு அவளிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றவே பேச்சை வளர்த்துக் கொண்டே இருந்தான்….
குறுக்க குறுக்க பேசக்கூடாது…. அப்புறம் எனக்கு பேச வந்த விஷயமே மறந்து போகும்…. சொல்லுறேன்….
என் புருஷன எவளாவது தள்ளிட்டு போயிட்டானா…. நான் என்ன பண்றது…
சற்று நேரம் அமைதியாக அவளது உரிமைக் குரலை கேட்டுவிட்டு…. இத சொல்றதுக்கு தான் கூப்பிட்டியா என்றான்…
அது மட்டும் இல்ல போற வழியில ஜப்பான் காரிய பார்த்தேன் .. சைனாகாரிய பார்த்தேன்… அவளை பார்த்தேன் இவளை பார்த்தேன் ன்னு எவளையாவது பார்த்தீங்க…
பார்த்தா என்னடி பண்ணுவ….
பாயாசம் டம்ளரில் தரமாட்டேன்…. அண்டா நிறைய வச்சு உங்களை அதில் முக்கி வைத்துடுவேன் பார்த்துக்கோங்க….
கேட்டுக் கொண்டிருந்த அவனோ வாய்விட்டு சிரித்து விட்டான்…. பின் இருக்கும் இடமறிந்து ஏய் சும்மா சிரிப்பு காட்டாத பக்கத்துல இருக்குறவங்க… ஒரு மாதிரி திரும்பிப் பார்க்கிறாங்க…. என்று அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்….
நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன்….. சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்…..
எந்த அளவுமா சீரியஸா இருக்க….
இப்ப மட்டும் பக்கத்துல இருந்தீங்கனா அடிக்கிற அளவுக்கு…..
அப்ப தப்பிச்சுட்டேன் சொல்லு…..
கைல மாட்டாமளா போயிடுவீங்க…. அன்னைக்கு இருக்கு…. இப்ப நான் சொல்றதைக் கேளுங்க…..
கேக்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவ…..
ஒன்னும் பண்ண முடியாது…. ஆனா நான் சொல்லுறதை சொல்லிடுவேன்… பதிலுக்கு அவன் வேறு எதுவும் பேசவில்லை என்றாலும் அவள் சொல்லத் தொடங்கினாள் வேற எந்த பொண்ணையும் திரும்பி பார்த்தீங்க என்று கேள்விபட்டேன்.. அப்புறம் நான் சொன்ன பாயாசம் தான் ….. நீங்க எனக்கு மட்டும் தான் அதை எப்பவும் எந்த நேரத்திலேயும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்னால விட்டுக்கொடுக்க முடியாது…. சோ நல்ல புள்ளையா போயிட்டு நல்ல புள்ளையா திரும்பி வர்றீங்க…..
நான் நல்ல பிள்ளையாக தான் இருக்கேன் ன்னு…. உனக்கு எப்படி டி தெரியும்…..
எனக்கு தெரியாது ஆனா உங்க மனசாட்சிக்கு தெரியும் இல்ல…. \
ஆம்பளைங்களுக்கும் பொம்பளைங்களுக்கும் கற்புங்கிறது ஒன்றுதான் அதன் ஞாபகம் வச்சுக்கோங்க…..
ம்ஹூம்….. அப்புறம்….
உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட நான் இந்த வீட்ல உங்க ஒய்ஃப் ஆ தான் இருப்பேன்…. இன்னைக்கு நீங்க உங்க பிரண்டு கிட்ட சொன்னீங்க இல்ல டைவர்ஸ் அப்படி இப்படின்னு…. அது கண்டிப்பா இந்த ஜென்மத்துல உங்களுக்கு கிடைக்காது…. நான் கையெழுத்து போட மாட்டேன்… போடுவேன் ன்னு கனவிலேயும் நினைக்காதீங்க…. இன்னொரு தடவ உங்க வாயில இருந்து இந்த வார்த்தை வந்துச்சுனா அப்புறம் இருக்கு பார்த்துக்கோங்க…. நேரா அத்தை கிட்ட போய் சொல்லி கொடுத்துடுவேன்…. இன்னைக்கு எதுவும் நான் சொல்லல ஆனா எப்பவும் இப்படியே இருப்பேன் ன்னு நினைக்காதீங்க….
அவள் கேட்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும்…. ஏனோ அவள் பேசிய பிறகு மனது கொஞ்சம் பாரம் குறைந்தது போல் இருந்தது….
சாரி…. நானும் அப்படி சொல்லியிருக்க கூடாது ஏதோ டென்ஷனில் இருந்தால அப்படி சொல்லிட்டேன்….
நேற்று எதுவும் டென்ஷன்ல இருந்தீங்களா என்ன …. நேற்றும் இப்படி தான் சொன்னீங்க மொட்டை மாடில வச்சு….
என்ன சொன்னேன்…..
கல்யாணம் பண்ணினது தப்புன்னு சொன்னீங்க இல்ல….
அது வேற ஒரு விஷயம்…. இன்னொரு தடவ உனக்கு அதை சொல்றேன் இப்ப இத பத்தி கேக்காதே…..
ம்ம்ம்…. என்றபடியே அமைதியாக இருக்கவும்…..
என்ன ஆச்சு….. அவ்வளவு தானா உன் சண்டை……
நீங்க ஏர்போர்ட்ல….. நான் வீட்ல….. அப்புறம் எப்படி சண்டை போட்டுறது…. உங்களுக்கு கிளம்பும் போது கூட என் கிட்ட சொல்லிட்டு பேசிட்டு போகணும் தோணலை இல்லை…. என்று சொல்லும்போதே குரல் அழுகைக்கு மாறியது…..
அவளின் அழுகை குரலை கேட்கும் போது அவனுக்கு மனது கஷ்டமாக இருந்தாலும்…. ஒரு புறம் தன்னிடம் பேச தேடி இருக்கிறாள் என்று நினைக்கும் போது மனதிற்கு ஏனோ அவனுக்கு ஆறுதலாக தோன்றியது…..
ஷ்ஷ்…. நந்தினி…. ப்ளீஸ் கிளம்புற நேரத்தில் அழாதே….. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு… டெய்லி போன் பண்றேன்… கண்டிப்பா பேசுவோம்…. புரிஞ்சுக்க….
மெசேஜ் பண்றேன்…. போன் பண்ண முடியாது…. உங்களோட நாளைக்கு நைட் இந்த டைம் வரைக்கும் எனக்கு ட்ராவல் தான் இருக்கும் நான் போய் இறங்கிட்டு வீட்டுக்கு போயிட்டு உனக்கு போன் பண்றேன் அதுவரைக்கும் மெசேஜ் மட்டும் போட்டு விடுறேன்…..
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என் மேல என்ன கோபம் இருந்தாலும் திட்டிருங்க …. நீங்க பேசாமல் மட்டும் இருக்காதேங்க ….. நீங்க பேசாம இருந்தா எனக்கு ரொம்ப ஒரு மாதிரி கில்டியா இருக்கு ப்ளீஸ்…..
அவளே வந்து பேசியது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இப்போது அவள் சொல்லிய வார்த்தை அவனுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான மனநிலைக்கு இழுத்து சென்றது….. அது என்ன என்பதை அவனுக்குக் குழப்பமாக இருந்தது அவளைப் பற்றி யோசிக்க தூண்டியது….. என்னடி என்னையதான் பிடிக்காத திடீர்னு என்ன கரிசனம்…. என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்று கிண்டலாக கேட்டான்…..
அவளிடம் சற்று நேரம் பதில் இல்லாமல் போனாலும்….. பின்பு ஏன் நான் லவ் பண்ணா உங்களுக்கு என்ன….. நீங்க திட்டவாவது போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டாள்…. அவள் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனாலும் வார்த்தை வந்து விட்டது….. சொல்லிவிட்டது ஒரு வகையில் அவளுக்கு மனது நிம்மதியாகவே தோன்றியது அவன் என்ன நினைப்பான் என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை……
அவள் சொன்னதைக் கேட்டவுடன் அவனுக்கு இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல தோன்றியது….. இருந்தும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இந்த கிண்டல் பண்ற வேலையெல்லாம் வைக்காத டெய்லி போன் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொள் என்று சொல்லி போனை கட் பண்ணு…. என்றான்…..
சரி…. என்றவள்…. டேக் கேர்…. என்றபடி போனை வைத்தாள்…. அதன்பிறகும் சற்று யோசனையோடு தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள்…. அங்கு அவனோ நண்பர்களுக்கு போன் செய்து நந்தினியிடம் பேசிய விபரத்தை சொல்லி விட்டு போனை வைத்தான்…. ஏனோ இப்போது நந்தினியை விட்டுப் போவது மனதிற்கு என்னவோ போல் தோன்றியது…. அடுத்த முறை எப்படியாவது நந்தினியை கூட்டிட்டு போக வேண்டும் என்று நினைத்து கொண்டான்…. திருமணத்திற்கு முன் உள்ள விஷயங்களை அசைபோட துவங்கவும் அவனுக்கான ஃப்ளைட் ற்க்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது…..
“விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும் . மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.”