“அம்பறாத்தூணியை வில்லேறுழவர்கள் முதுகுப் புறத்தில் கட்டி வைத்திருப்பார்கள். அம்புகளை அதில் வைத்திருப்பார்கள் பகைவர்களை தாக்குவதற்கு அதிலிருந்து அம்பை எடுத்து நாணில் பூட்டுவார்கள். இப்போதும், எப்போதும் நாம் ஒவ்வொருவரும் அம்பறாத்தூணி ஒன்றை நிறைத்து வைத்திருக்கிறோம் , நமது நாக்குதான் அந்த அம்பறாத்தூணி அதிலிருந்து சொல்லம்பை எய்தால் அது எதற்காக எய்யப்பட்டதோ அது நிறைவேறும். மலரைச் சொரிவதும் வார்த்தைதான்., மனிதனை மாய்ப்பதும் வார்த்தைதான்.”
திருமணம் ஆனவர்களுக்கான உபசரிப்பு விருந்து அனைத்திலும் கலந்து கொண்டாலும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவளை வார்த்தைகளால் அடித்தான்….
காயம் படும் போது எல்லாம் மனதை திடப்படுத்திக் கொண்டாள் அவனின் வலிகளை மட்டும் மனதில் கொண்டு..,, நந்தினியின் வீட்டிற்கு மறுவீடு செல்ல அழைக்கும் போது வேண்டும் என்றே….
தப்பா நினைக்காதீங்க.. வர்றோம் ஆனா தங்க முடியாது என்று மறுத்து விட்டான். ஒரே ஊர் என்பதால் சரி என்று சம்மதித்தனர். … .இவளும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை…. அவளுடைய அம்மா நேரடியாகவே இவள் அங்கு சென்றிருக்கும் போது கேட்டு விட்டார். நீ ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே இரண்டு நாள் அம்மா வீட்டில் தங்கலாம் என்று….
இவளோ அவர்களிடமும் வாய் திறக்க மறுத்து விட்டாள் … தாரிணி தான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்ன நந்தினி கல்யாணத்திற்கு பிறகு ஆளே மாறி விட்டாய் என்று … இதை தற்செயலாக கேட்ட இளமாறனுக்கு இது புது தகவல் …
இவ ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள்…. ஒரு வேளை யாரையும் விரும்பியிருப்பாளோ… என்று புதிதாக ஒரு சந்தேகம் கிளம்பியது…
அவனது பார்வையில் யோசனையைக் கண்டவள்…. என்ன என்று சைகையால் கேட்கவும்…. ஒன்னுமில்லை எனும் படியாக தலையாசைத்தான்…
மற்றவர்கள் முன்பு எல்லா புதுமண தம்பதிகளை போல சாதாரணமாக இருந்தாலும் சில சமயங்களில் வார்த்தைகளால் அவள் மட்டும் உணரும் வண்ணம் குத்திக் காட்டுவான்… இன்று ஏனோ அந்த யோசனையான பார்வைக்கு பிறகு அவன் அதிகமாக பேசவில்லை…. அவன் பேசாமல் அமைதியாக இருந்தது இவளுக்கு தான் கஷ்டமாக இருந்தது…
நல்ல தானே இருந்தாங்க ஏன் திடீர்ன்னு அமைதியா இருக்காங்க… என்று யோசிக்கத் தொடங்கினாள்…
யாரும் எதுவும் வார்த்தைகள் விட்டு விட்டார்களோ என்று பயந்தாள்…. ஏற்கனவே தனியாக கிடைத்தால் எல்லாவற்றையும் சொல்லிக் காட்டியே நொந்துப் போற அளவுக்கு பேசுவான்… இன்னைக்கு என்ன விஷயம் என்று தெரியலையே…. என்று பயந்தாள்…
வீட்டிற்கு வந்த பிறகும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக மாடியில் சென்று படுத்து விட்டான்…. மாறனின் அம்மா கேட்டதற்கு தலைவலி என்று சொல்லி விட்டு போய்விட்டான்…. நந்தினியிடம் எதுவும் பேசவில்லை….
என்னமா பேசாம போய்ட்டான் அங்க வச்சு எதும் முகம் காட்டினானா……
இல்ல அத்தை ஒரு பிரச்சனையும் இல்லை… தலைவலியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்……
அவன் சூடா எதுவும் குடிக்கிறானா என்று கேட்டுட்டு வாம்மா….
கீழே உள்ள அவனது அறையில் உடை மாற்றிவிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மாடிக்கு சென்றாள்….
கையை மடக்கி நெற்றிக்கு மேல் வைத்துக் கொண்டு கண்ணை இறுக மூடி படுத்திருந்தான்….. சூடா ஏதாவது குடிக்கறீங்களா…. என்று கேட்டால் பதிலே இல்லை என்றவுடன் அமைதியாக கீழே இறங்கி வந்து விட்டாள்…..
வெகு நேரம் சென்று கீழே இறங்கி வந்தவன்….. அப்போதும் யோசனையோடு யாருடனும் சரியாக பேசாமல் அமர்ந்திருந்தான்…. இரவு உணவு உண்ணும் வேளையிலும் அதிகமாகப் பேசவில்லை…..
நந்தினிக்கு அவனது முகத்தைப் பார்க்கவும் சற்று கலக்கமாக தான் இருந்தது…. இது புயலுக்கு முன் வரும் அமைதியா…. புயலுக்கு பின் வரும் அமைதியா…. என்று தெரியாமல் புயலுக்கு முன் வரும் அமைதி என்றால் அந்த புயல் எப்போது கரையை கடக்கும்…. என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது…. இன்று என்ன பிரச்சினை கிளப்ப போகிறானோ…. என்று சற்று பதட்டத்துடன் தான் இருந்தால்.. அதனால் அவளுக்கும் சரியாக உணவு இறங்கவில்லை…….
இரவு மாடி அறைக்கு சொல்லவே சற்று பதட்டமாக தான் இருந்தது… வார்த்தையாலேயே கொல்வது எப்படி என்பதை அவன் பேச்சில் தான் தெரிந்துக் கொண்டாள்…. கல்லூரி படிக்கும்போது விட்ட சில வார்த்தைகளுக்காக கல்யாணம் முடிந்த இந்த நாள்களுக்குள் அத்தனை வார்த்தைகளைக் கேட்டு விட்டால் பதில் பேச முடியாத சூழ்நிலையால் அமைதி காத்து கொண்டு இருந்தாள்….
எது வந்தாலும் எதிர் கொள்ளும் முடிவோடு அறைக்கு சென்றாள்….. அவன் அமைதியாக கண்ணை மூடி அவனது இடத்தில் படுத்து இருக்கவும்….எப்போதும் போல் கீழே பார்த்தால் இரண்டு போர்வையும் தலையணையும் இருந்தது….
இவள் எப்போதும் போல் இரவு விளக்கு எரிய விட்டு விட்டு விளக்கை அணைத்து படுக்கவும்…..
நந்தினி என்று அமைதியான ஆழ்ந்த குரலில் அழைத்தான்…..
அவள் பதிலே சொல்லாமல் இருக்கவும்…
ஏய் உன்னைத்தான் கூப்பிடுறேன் காது கேக்குதா…. தூங்குற மாதிரி நடிக்காத….
இம்முறை பதிலுக்கு நான் தூங்கலைன்னு தெரியுது இல்ல… அப்ப சொல்லவேண்டியத சொல்லுங்க… எப்படியும் திட்ட போறீங்க….. திட்டுங்க……
உன்கிட்ட சில விஷயங்களைப் பத்தி பேசணும்……
கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எந்தவிதமான பழக்கம் இருந்தாலும் எனக்கு அதைப் பத்தி பிரச்சினை கிடையாது…. கல்யாணத்துக்கப்புறம் இந்த வீட்டோட கௌரவம் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது… என் பெர்மிஷன் இல்லாம நீ வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது……
ம்ம்ம்…. இத நீங்க முத நாளே சொல்லிட்டீங்க….
இப்போ இந்த விஷயத்தை நான்எதுக்காக சொல்றேன்னு உனக்கு தெரியுதா…..
புரியல…..
கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் எனக்கு அதைப் பத்தி பிரச்சனை கிடையாது என்று சொன்னேன்… கல்யாணத்துக்கப்புறம் எந்தவிதமான பழக்கவழக்கம் இருக்கக் கூடாது…. அது எனக்கு முக்கியம் அது தான் மென்ஷன் பண்ணேன்…..
ஆமா…. இதைப் பத்தி எதுக்கு இப்ப பேசுறீங்க….. அது என்ன பழக்க வழக்கம்….
நீ எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லி வெயிட் பண்ண…. கல்யாணம் பிடிக்கலையா இல்ல… வேற எதுவும் விஷயம் இருந்துச்சா இல்ல நீ யாரையாவது விரும்புனீயா… அதுக்காகத்தான் சொன்னேன்….
அந்த மாதிரி எதுவும் இல்லை இருந்திருந்தால் நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்…. நீங்க என்னைய சந்தேகப் படுறீங்களா… என்றாள் சற்று கோபத்தோடு……
யாரையாவது விரும்புறீயா ன்னு தானே கேட்டேன்…. அதுக்கு இவ்வளவு கோவம் வருது உனக்கு…. கோபப்படுற குணம் உனக்கு இன்னும் இருக்கா…. நானும் போயிருச்சோ ன்னு நினைச்சேன் பரவாயில்ல… உண்மையான குணம் வெளியே வருது….
இப்ப எதுக்கு இதை பற்றி கேட்டீங்க… அதுதான் நானும் கேட்டேன் உங்களுக்கு சந்தேகம் இருக்கான்னு கேட்டேன்…
அப்படித்தான் ன்னு நீ சொன்னின்னா… நானும் அமெரிக்கால ஏதாவது செட் பண்ணலாம் இல்ல அதுக்குத்தான்….. என்றான் கிண்டலாக….
சட்டென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தவள்…. அவனைப் பார்த்து திரும்பி அமர்ந்தாள்….
அப்படி ஏதாவது இருந்துச்சு கொன்னே போட்டுடுவேன்…. அப்படியே அமைதியா நீங்க திட்டுறது எல்லாம் வாங்கிட்டு உட்கார்ந்து இருக்குற மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன்….. நீங்க பேசுறதெல்லாம் கேட்டுட்டு அமைதியா இருந்தா…. என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது…. சரி நான் காலேஜ் படிக்கும் போது ஏதோ வார்த்தை விட்டுட்டேன்…. அந்த கோபத்திலே நீங்க திட்டறீங்க…. ன்னு நான் நீங்க திட்டுறதெல்லாம் வாங்கிட்டு இருக்கேன்…. ஆனா அதுக்காக அப்படியே இருப்பேன்னு நினைக்காதீங்க…. வேற ஏதாவது கேள்விப்பட்டேன்….. அப்புறம் தான் இருக்கு உங்களுக்கு என்றால் கோபத்தோடு பல்லைக் கடித்தபடி…..
ஏய் நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்….
சொல்லுவீங்க….. சொல்லுவீங்க…… சுரக்காய்க்கு உப்பு இல்ல ன்னு…. பேச்சுக்குக் கூட இந்த மாதிரி பேச்சு வரக்கூடாது…..
ரொம்ப நாளைக்கு அப்புறம் நீ கோபப்பட்டு பார்த்து இருக்கேன்…..
ஓய்…. என்ன இன்னைக்கு பேசவிட்டு வேடிக்கை பார்க்குறேன் பாக்குறியா…. பதிலுக்குப் பதில் பேசிட்டு இருக்க…..
நீங்கதான் பேச வைக்கிறீங்க இவ்வளவு நாள் நீங்க என்ன சொன்னாலும் அதற்கு பேசவா செஞ்சேன்…..
நான் ஒரு விஷயம் சொன்னது உனக்கு அவ்வளவு கோபம் வருது….. நீ என்னை என்ன சொன்ன காலேஜ்ல வச்சு…. என்னைய சொந்தம் சொல்லிக்கவே வெட்கமா இருக்கு…. சொந்தம் ன்னு சொல்ல கூடாதுன்னு சொன்ன இல்ல… இப்ப என்ன சொல்லுவ நான் உனக்கு சொந்தமில்லையா…. இல்லன்னு இப்ப சொல்லு…. போய் சொல்றீயா…
“நீ தான் கணவன்
என்று முடிவு செய்யும்
முன்னே…. உன்னை மட்டுமே
சொந்தம் என்று
உறவுகளை உதறி
தனித்து இருந்தவள் நான்…..
என்று புரிந்து கொள்வாய்
என்று எனக்குத் தெரியவில்லை
எனக்கு நீ மட்டுமே சொந்தம்
மற்ற உறவுகள் யாரும் இல்லை
நீ ஏற்றுக் கொண்டால்
உன் சொந்தத்தோடு வாழ்வேன்
இல்லையேல் ….
உன் மூச்சுக் காற்றின் சுவாசத்தை
சுவாசித்துக்கொண்டு
உன்னை மட்டுமே சொந்தம்
என்று சொல்லிக் கொண்டு
உனக்காக காத்திருப்பேன்……”
பதில் இன்றி அமைதியாக இருக்கவும்… என்ன பதில் சொல்ல மாட்டீங்க… இவ்வளவு நேரம் அந்த வாய் பேசின….
என் மேல தப்பு இல்ல அதனால பதிலுக்கு பதில் பேசினேன்….. இப்ப என் மேல தப்பு இருக்கு அதனால அமைதியா இருக்கேன்….
தப்ப புரிஞ்சுகிட்ட போல….
தப்பு பண்ணுனா தண்டனை உண்டு என்று தெரிஞ்சுகிட்டேன் உங்க மூலமா…
அதன் பிறகு அவனும் அவளும் அவர்களது நினைவுகளை அசை போடத் தொடங்கி அமைதியாகி விட்டனர்…..
அன்று சொந்தம் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது…. என்று நினைத்தவள் தான். இன்று அவன் மட்டுமே சொந்தம் என்ற நினைப்போடு அவன் பேசும் வார்த்தைகளை எல்லாம் பதில் பேசாமல் வாங்கிக் கொள்கிறாள்….
கடைசி நாளாக அவளை திட்டும் போது அவன் அண்ணனை பற்றிய விஷயங்களை எடுத்து சொன்னதிலிருந்து அவள் வீட்டில் யாருடனும் அதிகம் பேசமாட்டாள்….. வேறு வழியின்றி போனால் பதில் மட்டுமே சொல்வாள்…. அதற்காகவே படிப்பு முடிந்ததும் காம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டாள்… நான்கு வருடங்களாக பெங்களூரில்தான் இருந்தாள்….
பெங்களூரில் இருந்து ஒரு முறை லீவுக்கு வீட்டிற்கு வந்த போது… அவளுடைய தந்தை இவனைப் பற்றி ஏதோ பேச தொடங்கவும்…. பதிலுக்கு சண்டைக்குப் போய் விட்டாள்…. நம்ம வீட்ல தப்ப வைத்துக் கொண்டு… அடுத்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறை சொல்லக்கூடாது…. நம்ம வீட்ல இருக்கிற பிரச்சனையை சரி பண்ண பாருங்க… என்று பேச அப்போது தான் இவளுக்கு விஷயங்கள் தெரியும் என்பதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்…. அதன் பிறகு அவளுடைய அண்ணன் கொஞ்சம் திருந்த தொடங்கினான்…. அதன் பிறகு தான் அவனுக்கு திருமணமும் நடந்தது…..
இளமாறனுக்கோ இவளை கடைசியாக திட்டிவிட்டு வந்த நாளன்று…. அவள் கண் கலங்கி நின்ற தோற்றம் கண்ணுக்குள்ளே இருந்தது….. ஆனால் அவளிடமிருந்து வந்த மெயில் , மெசேஜ், எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை அப்போது இல்லை….
கல்யாணம் ஆன நாளிலிருந்து அவளை திட்டும் போதெல்லாம் இவள் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்…. கிடைத்த வாய்ப்பை விடாமல் திட்டி தீர்த்தான்…. அவனுடைய கோபம் குறைய வேண்டும் என்பதற்காகவே அவளுக்கு அமெரிக்காவிற்கு விசா வாங்காமல் இருந்தான்…. இன்று பதிலுக்கு பதில் பேசி கேட்கவும் தினமும் இவளை இது போல சீண்டினால் என்ன என்று யோசனை தோன்றியது……
ஏனோ அவள் பதிலுக்கு பதில் பேசியது அவனுக்கு கோபத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக மனதிற்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை கொடுத்தது…. அந்த நிம்மதியோடு சிரித்த முகமாகவே கண்மூடித் தூங்கினான்…..
கல்லூரியில் அவன் மற்ற பெண்களிடம் பேசியது அவளுக்கு ஏன் கோபத்தை கொடுத்தது என்று இப்போது அவள் உணர்ந்தாள்….. அப்போதே எனக்கு அவனை அவ்வளவு பிடித்து இருந்ததா…. என்று மனதிற்குள் இப்போது கேட்டுக் கொண்டாள்….. ஏன் அப்போ அவனைப் பார்த்ததும் கோபம் வந்தது ஏன் அப்படி பேசினேன்… என்று தன்னைத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பத்துடனே தூங்கிப் போனாள்….
“எந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும். அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம். மௌனம் பரம ஆனந்தம், ஏனெனில் பிரியமற்ற வார்த்தைகள் உயிர்குடிக்கும் அம்புகள்.”