Advertisement

அத்தியாயம் 16

 

“வாழ்வுக்கான நேசத்தையும் வெளிச்சத்தையும் வளர்ச்சிக்கான விதைகளையும் நம்மிடமே வைத்துக் கொண்டு பாசத்தை தேடி பள்ளங்களிலும் வெளிச்சத்தைத் தேடி வீதிகளிலும் விடியலைத் தேடி பாலைவனங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறோம்…”

சில மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் இணைக்க மேலும் வாழ்வில் நெருக்கம் உண்டாக நந்தினி கர்ப்பமாய் இருந்தாள்…

கர்ப்பத்தின் தொடக்கங்களில் அவளின் சிறு சிறு கஷ்டங்களை கூட மாறனின் அன்பு மட்டுமே தாங்க வைத்தது…..

      மருத்துவமனை பரிசோதனைகளுக்கும் சரி…. வீட்டிலும் சரி மாறன் கவனிப்பு அதிகமாக இருந்தது…..

    அங்குள்ள சில மாற்றங்கள் காரணமாக யாரையும் வரவைக்கும் சூழ்நிலை இல்லை… எனவே பிரசவ நேரமும் எப்படி சமாளிப்பது என்று வீட்டில் பெரியவர்கள் வருத்தப்பட்டனர்…. நந்தினியை இங்கு அழைத்து வர முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்….. மாறன் நந்தினியை அனுப்ப மறுத்து விட்டான் ஏழாவது மாதத்தில் இருந்தே வீட்டினர் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர் முடியாது என்று மறுத்து விட்டான்…..

     இரு வீட்டினரும் மாறனிடம் எதுவும் சொல்ல முடியாமல் நந்தினி இடமே சொல்லிக் கொண்டிருந்தனர்… சில விஷயங்களை அவர்களின் தொணதொணப்பு தாங்க முடியாமல் அன்று மாறனிடம் பேசலாம் என்று நினைத்திருந்தால் நந்தினி….

     மாலை அலுவலகம் முடிந்து மாறன் வீட்டிற்கு வந்தவுடன் அவனோடு சேர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தாள் அப்போது…

      நந்தி இன்னைக்கு என்ன வேலை எல்லாம் செஞ்ச சொல்லு….

      எல்லா வேலையும் செய்தேன்…. வாக்கிங் போனேன்…. முதல்ல இந்த நந்தி சொல்றதை விடுங்க.. ஒன்னு முழுசா பேர் சொல்லிக் கூப்பிடுங்க….  இல்ல வேற ஏதாவது நிக் நேம் வைச்சுக்கோங்க நந்தி சொல்லாதீங்க…

    சரி… இன்னும் ஒரு நேம் கண்டுபிடிக்கலாம்… ஆமா ஏன் ஒரு மாதிரி இருக்குற வீட்டுக்கு பேசினியா…. இரண்டு  வீட்லையும் ஏதாவது சொல்லி உன்னை குழப்பிவிட்டு இருப்பாங்களே….

    அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்சம் பயமா இருக்கு அவ்வளவுதான்…

     நான் இருக்கேன்ல எதுக்கு பயப்படுற இங்க எல்லாம்  மேக்சிமம் நார்மல் டெலிவரி தான்…. அதுக்கு தான் உன்னையும் வேலை செய்ய சொல்கிறேன்…..  இதே  இது இந்தியாவில் இருந்தால் நிச்சயம் நானே பயந்து இருப்பேன் ஏன்னா அங்க எல்லாம் நார்மல் டெலிவரிக்கு விடவே மாட்டாங்க சிசேரியனில் கொண்டு விட்டுருவாங்க….

     இல்ல ரெண்டு வீட்டிலேயும் சொல்றாங்க பெரியவங்க யாரும் இல்லாமல் எப்படி பார்த்துப்பீங்க அப்படின்னு கேக்குறாங்க…. அப்புறம் ஏதோ  மருந்தெல்லாம் சாப்பிடணுமாம்., அதெல்லாம் வேற சொன்னாங்க…..

    ஏய்….  பயன்படாத என் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் வீக் அங்கிருந்து கிளம்பி வர்றான்….  அவன் மெடிசன் எல்லாம் வாங்கிட்டு வந்துருவான்….  அந்த மெடிசன் எப்படி சமைக்கலாம் குறிப்பு எழுதி அனுப்பச் சொல்லி இருக்கேன்….  அப்புறம் எதுக்கு பயப்படுற நான் பார்த்துகிறேன் என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு….

      உங்க மேல நம்பிக்கை இல்லாமல்தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேனா என்ன கேள்வி இது…..

     சரி பகல் என்ன  பண்ண சொல்லு., குட்டி என்ன பண்ணாங்க., இன்னைக்கு மூவ்மெண்ட்ஸ் எப்படி இருந்துச்சு….

     பயங்கர சேட்டை பிடித்த குழந்தையா இருக்குமோ…

     உன்னை மாதிரியா…

     நான் என்ன சேட்டை பண்ணனேன் ன்னு சொல்லுங்க….

    அது நீ அடுத்து  பண்ணும்போது சொல்லி காட்டுறேன்….

    சற்று நேரம் பிற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு சமையலுக்கு அவள் எழுந்து செல்லவும் கூடவே மாறனும் எழுந்து சென்று உதவினான்….. அவளை மற்ற நேரங்களில் எல்லா வேலையும் செய்ய வைத்தாலும் பல நேரங்களில் மாறன் கூட இருந்து வேலை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான் அவளை அதிகமாக கஷ்டப்பட விடாமல்….

     ஏழாவது மாத முடிவிற்குள் அவனது நண்பன் பிரசவ நேர மருந்துகள் மற்றும் வளைகாப்பிற்கு உண்டான வளையல்கள் வாங்கி வர அங்கு உள்ள நண்பர்கள் குழு சேர்ந்து நந்தினிக்கு சிறப்பாக வளைகாப்பு செய்தது அதை போட்டோவும் வீடியோவும் எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான் மாறன்….

     பங்ஷன் முடிந்த  அன்றைய இரவு அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு அவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று கூறினாள்….

     என்னடா திடீர்னு சொல்லு என்றான்…..

     அம்மா மாதிரி கவனிச்சுக்கிற அப்பாவை தாயுமானவன் சொல்லுவாங்க….

    ம்ம்… ஆமா….

    ஒரு மனைவிக்கு எல்லாமுமாக  மாறி போற கணவனை என்ன சொல்லுவாங்க என்று கேட்டாள்….

    ஒரு மனைவியால கணவனுக்கு எல்லாமுமாய் இருக்க முடியும் அம்மாவா,  அப்பாவா,  தோழியா, குழந்தையா, பாதுகாப்பாக கடைசி வரை கூட வர்ற உற்ற துணையாய் இப்படி எல்லாமுமா இருக்கும்போது….. ஏன் கணவனால இருக்க முடியாது இருக்கலாம் அதுதான் வாழ்க்கை துணை ங்கிறது….

     இளா நீ எனக்கு எல்லாம் ஆனவன்…. எல்லாமும் ஆனவன்… ஐ லவ் யூ…

     லவ் யூ டூ…. என்ற மாறன் வேறு ஏதும் சொல்லாமல் அவள் உச்சியில் முத்தம் பதித்து நெஞ்சோடு அணைத்துகொண்டான்…

பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க நந்தினி மனதிற்குள் பயந்தாலும் மாறன் முன் எதையும் காட்டுவதில்லை….  தைரியமாகவே இருந்தாள் வீட்டில் இருந்து போன் செய்பவர்களுக்கு தைரியமாகவே பதில் சொன்னாள்….  ஆனால் ஒரு பெண்ணாக அவள் மனதிற்குள் இருந்த பயம் அவள் மட்டுமே அறிந்திருந்தாள்…..

     டாக்டர் சொன்ன தேதிக்கு இரண்டு நாள் முன்னதாகவே நந்தினிக்கு வலி எடுக்க மாறன் அவனுடைய நண்பனின் உதவியுடன் ஹாஸ்பிட்டலில் நந்தினியை சேர்த்தான்….

     மருத்துவமனையில் நந்தினி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் மாறன் கூட இருக்க அனுமதிக்கப்பட்டான்… அவளுடைய பிரசவத்தின்போது மாறன் உடனே கூடவே இருந்தான் நந்தினியை கொஞ்சம் கஷ்டப்படுத்தி மாறனை மனதிற்குள் அழ வைத்து அவனுடைய மகன் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்க சுகமாக பிறந்து வந்தான்….

    நார்மல் டெலிவரி என்பதால் மறுநாளே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்…. வீட்டிற்கு வந்த பிறகு நந்தினியும் குழந்தையும் மாறன் கவனித்துக்கொண்ட விதத்தில் நந்தினியே ஒரு நிமிடம் சரண்யாவின் பொறாமை பற்றி சற்று நினைவு கூறும் நிலைக்கு வந்து விட்டாள்…..  இப்படி கவனிக்கும் கணவன் கிடைத்தால் எந்தப் பெண்ணும் கணவனுக்கு அடிமையாக இருக்க  சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாள் என்று தோன்றத் தொடங்கியது….  இப்படி இவன் கவனிப்பதை பார்த்தால் மற்ற பெண்கள் பொறாமைப்பட கூடும் என்றே தோன்றியது….

       அவள் உடல் நலம் சற்று தேறியபின் நந்தினியே அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்…  ஆனாலும் பல நேரங்களில் மாறன் வேலைகளை பகிர்ந்து கொண்டான்.,  குழந்தை வந்தவுடன் அவர்களது நெருக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை தினமும் குழந்தையை பற்றி பேசவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது…. இரு வீட்டில் உள்ளவர்களும் போட்டோவை பார்த்து கொண்டே எப்போது வருவீர்கள் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்…. குழந்தைக்கு ஒரு வயதாகும் முன் சரியாக வருவதாக மாறன் அறிவித்திருந்தான்…. அதன்படியே குழந்தையின் ஒன்பதாவது மாதம் அங்கிருந்து இந்தியா கிளம்புவதாக இருவரும் முடிவு செய்து கொண்டனர்…. அப்போதுதான் அங்கு நர்மதாவும் கர்ப்பமாக இருந்தால் இவர்கள் செல்லும் நேரம் அவளுக்கு 9 மாதமாக இருக்கும்…. இவர்கள் வந்த பிறகுதான் வளை காப்பு போடவேண்டும் என்று நர்மதா சொல்லி விட்டாள் எல்லோரும் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்க மறுத்து விட்டாள்….

    கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்தே  இருவரும் இந்தியா செல்கின்றனர் குழந்தையை எடுத்துக்கொண்டு….

     இவர்கள் இந்தியா சென்ற உடன் குழந்தைக்கு கொஞ்சம் அங்குள்ள நேரம் ஒத்துவராததால் கொஞ்சம் கஷ்டப்படுத்தினான்….  அதே அளவு நந்தினியும் கொஞ்சம் கஷ்டப்பட்டாள்… மாறன் மட்டுமே சாதாரணமாக இருந்தான் நர்மதாவின் வளைகாப்பு அன்று சரத்தின் வீட்டில் வைத்து வளைகாப்பு விமர்சையாக நடந்தது அப்போது சரண்யாவும் அவள் கணவனும் வந்திருந்தனர்… சரண்யா சாதாரணமாக பேசினாலும் மாறனுக்கும் நந்தினிக்கும் தான் சற்று எச்சரிக்கையுடன் இருந்தனர்…. மாறனின் மகன் அவனை விட்டு எங்கும் நகராமல்., கூட்டத்தைப் பார்த்தவுடன் பயந்து போய்  கழுத்தைக் கட்டிக்கொண்டு அங்கு இங்கு அசையாமல் இருந்து கொண்டதால்  மாறன் ஒரு இடத்தில் அமர வேண்டியதாகி விட்டது…. மாறனின் நண்பர்களும் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க நந்தினி தான் எப்போதும் போல் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள்…  குழந்தை பசிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் நந்தினியை தேடவே இல்லை…..

   அது மாறனின் பழக்கம் பகல் முழுவதும் நந்தினியே குழந்தையை பார்த்துக் கொண்டிருப்பதால் மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க அவனைப் பார்த்துக் கொள்வது போல் வைத்துக் கொள்வான்…. அதனால் அதே பழக்கத்திற்கு அவனிடம் இருந்து கொண்டான்….

      இரண்டு வீட்டினரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி இருந்தான் மாறனின் மகன்…

     நாட்கள் மகிழ்ச்சியுடன் நகர நர்மதாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது…. அவளுடைய மகன் பிறந்து 3 மாதங்கள் கழிந்த பின்னரே இவர்கள் ஊருக்கு  செல்வதாக இருந்ததால் அவள் மகன் பிறந்த விசேஷத்தை சிறப்பாக செய்தனர்….

     அதே நேரம் மூன்று மாதம் கழிந்து நந்தினி மாறனின் மகன் முதல் பிறந்தநாளை இந்தியாவில் வைத்து பெரியவர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் கொண்டாடிவிட்டு அவனிற்கு நந்தினியின் அண்ணன் மடியில் வைத்து மொட்டை போட்டு விட்டு இவர்கள் அமெரிக்கா கிளம்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டது….  இரண்டரை வருடம் கழித்து வந்ததால் மூன்று மாதம் தங்கும்படி மாறனுக்கும் விடுமுறை கிடைத்தது….  வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக வருகிறோம் என்று பேசிக்கொண்டனர்…. சரண்யாவும் சற்று மாறி இருப்பது தெரிந்தது….

    கிளம்புவதற்கு நான்கு நாட்கள் முன்பு நந்தினி வீட்டுக்கு அழைத்து சென்றான்….

இம்முறை அங்கு இரண்டு நாள் தங்கி வந்தனர்…. ஏர்போர்ட்டில் வைத்து ஒரு வாரமாவது மாமனார் வீட்டுல விருந்து கொண்டாடனும் ன்னு… நினைக்கேன் முடியலையே… என்றான். அவன் சொல்ல வருவது புரிந்தாலும்….

       ஏன் வீட்டுல சாப்பிடாத மாதிரி பேசாதீங்க….

       மாமனார் வீட்டில் கவனிப்பு ஸ்பெஷலா இருக்கும் இல்லை… என்று கண்சிமிட்டி கூறவும்….  அவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள்….

அனைவர் வீட்டிலும் மகிழ்ச்சியும் நிறைவும் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்….

“கோபத்துடன் கையாண்டால் பனியும் நெருப்பாகும்….

   நட்புடன் நடந்தால் புலியும் கைகுலுக்கும்….

    பயத்துடன் ஓடினால் புழுவும் வாளெடுக்கும்….”

           “நம் பிறந்த நாள் தொட்டு நம் இறப்பிற்கான கவுண்டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுவிட்டது…

      வாழ்க்கை வாழ்வதற்கே வாழும் நாட்களை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்வோம் நம் வருங்கால சந்ததியருக்கு அன்பையும் நேசத்தையும் விட்டுச் செல்வோம்…..”

     “உயிர்வரை கொல்லக்கூடியது வார்த்தைகளே…   வார்த்தைகளை பார்த்து  உபயோகியுங்கள்…. உறவுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்….”

Advertisement