Advertisement

அத்தியாயம் 15

 

“மகிழ்ச்சியான வார்த்தைகள் மன அழுத்தத்தை தவிர்க்கலாம்…

மென்மையான வார்த்தைகள் மகிழ்ச்சியை பெருக்கலாம்….

வாழ்த்துகின்ற வார்த்தைகள் வெறுப்பை விரட்டலாம்….”

கலிஃபோர்னியாவில் வந்து இறங்கும்போது வரவேற்க மாறனின் நண்பன் வந்திருந்தான்….

   ஏற்கனவே வீடியோ கால் மூலமாக அறிமுகம் இருந்ததினால் வீட்டினர் பற்றிய நலம் விசாரிப்புடன்  சாதாரணமாக பேச துவங்கினான்…

வெல்கம்… நந்தினி….

ஹாய் அண்ணா…. நல்லாருக்கீங்களா…

நல்லாயிருக்கோம் மா….  ஜர்னி எப்படி இருந்துச்சு…

ம்ம்ம்… ஓகே ண்ணா….

அப்படி தான் சொல்லுறா… டா.. ரொம்ப டயர்டா பீல் பண்ணுறா….

பார்த்தாலே தெரியுது…. ஜெட்லக் சரியாக எப்படியும் த்ரீ டேஸ் ஸாவது ஆகும்….

சரியாகிரும் ண்ணா….

பரஸ்பர பேச்சுக்களோடு அவர்களுக்கான வீடு வந்து சேர்ந்தனர்…

     அங்குள்ள சூழ்நிலைக்கு அவள் மாற கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. அதுவரை வீட்டையும் அவளையும் பார்த்து கொண்டே தனது அலுவலகத்திற்க்கும் சென்று வந்தான்..

       அதிசயமா இருக்கு காலையிலேயே எந்திரிச்சு வந்துட்ட……

      அய்யோ இங்க இருக்குறதுக்கு செட் ஆகுறதுக்கு ஒன் வீக்கா ஆகி இருக்கு எனக்கு…

       இப்பவும் ஒண்ணும் இல்ல உனக்கு ஓகேன்னா பாரு இல்லாடி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி கோ….

       அதெல்லாம் ஒன்னும் இல்ல…. ஓகேவாகிட்டேன்….  இப்படியே நான் பாத்துப்பேன்… அப்பதான் கொஞ்சம் ரெக்கவர் ஆக முடியும் தூங்கிட்டு இருந்தா  எப்போ சரியாகுறது….

அதுசரி கிச்சன்ல வந்து என்ன பண்ற….

இன்னைக்கு நான் சமைக்கிறேன்…..

பரவால்ல ரெஸ்ட் எடு நான் செய்யறேன்…

நீங்க செய்வீங்க சரி யார் சாப்பிடுவது….

அப்ப இத்தனை நாள் சாப்பிட்டியே….

      அது ஏதோ தூக்க கலக்கத்தில் வேற வழியே இல்லாம சாப்பிட்டேன்…. அதுக்காக இன்னும் அதையே வா சாப்பிட்டு வாங்க நாக்கு செத்துப் போயிடும் நான் சமைக்கிறேன்….

      ஹலோ இத்தனை நாளா  நான் சமைச்சு நானே தான் சாப்பிட்டு இருக்கேன் எனக்கெல்லாம்    நாக்கு உயிரோட தான் இருக்கு…

       உயிரோடு இருக்கும் உயிர்ப்போடு  இருக்கா…அதனால இன்னைக்கு நானே சமைக்கிறேன் என்னென்ன இருக்குன்னு மட்டும் சொல்லுங்க…..

      எல்லாமே இருக்கு நம்ம வந்த மறுநாளே போய் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் நான்வெஜ் மட்டும் ஃப்ரீஸரில் வைத்தது தான் இருக்கும்…. ப்ரஸ் மீட் கிடைக்கிறது கஷ்டம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ….

       நீங்க எத்தனை மணிக்கு கிளம்பனும் சொல்லுங்க….  அதுக்குள்ள நான் ரெடி பண்ணிடுறேன்….. என்று அவள் சமையல் செய்ய தயாராகும் பொது அவள் இடுப்பை கட்டிக்கொண்டு ஒரு வாரம் தூங்கியே நேரத்தை போக்கிட….  நான் வேணா இப்ப லீவு போட வா என்றபடி அவள் காதுக்குள் கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருந்தான்….

      ஆபிஸ் கிளம்புங்க… நான் சமையலை பார்க்கிறேன் என்றபடி அவனை தள்ளி விட்டாள்….

       ஒரு வாரம் சமர்த்து பையனாக இருந்தேன் இல்ல…. கிப்ட் எதுவும் கிடையாதா என்று கேட்டான்…..

     புதிதாக தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கியவர்களுக்கு உரிய சந்தோஷம் அவர்களுக்கு கிடைத்தது…. இருவருக்குமான புரிதல் ஏற்கனவே நன்றாக இருந்ததால் இன்னும் சந்தோஷமாகவே அவர்கள் குடும்பம் சென்றது… மாறன் அவ்வப்போது அவளை வெளியே கூட்டிப் போயி கடைகளுக்குச் செல்ல பழகி  இருந்தான் அப்படி ஒரு நாள் தான்…

     ஒழுங்கா டிரைவிங் கத்துக்கோ…. அவசரத்துக்கு எப்பவும் என்னை டிப்பன் பண்ணாத….  நீயே கார் எடுத்துட்டு போயிட்டு வந்துரு…. எனக்கு ஆபீஸ் பக்கத்துல இருக்கறதுனால  நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போவோம்., திரும்ப வரும்போது பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வருவோம்., கார் வீட்டில் சும்மாதான் நிற்கும் நீ எடுத்துட்டு போய் பழகிக்கோ ஒழுங்கா டிரைவிங் கத்துக்க வழியை பாரு…

ஹலோ கலிபோனியா கூட்டிட்டு வந்து என்ன உங்க டிரைவர் ஆக்கலாம்னு பாக்குறீங்களா…, அதெல்லாம் முடியாது முடியாது நானெல்லாம் கத்துக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவள் கட்டாயப்படுத்தி டிரைவிங் பழகி அங்கு உள்ள   ட்ரைனிங் சென்டரில் சேர்த்து முறைப்படி லைசென்ஸ் எடுக்க வைத்தான்… ஆறு மாதத்திற்குள் அவளுக்கு அங்கு உள்ள பழக்கவழக்கங்களும் தனியாக வெளியே செல்லவும் வரவும் பழகி இருந்தான்….

     அலுவலகத்தில் இவளது சமையல் பிரசித்தி இவனது அலுவலக நண்பர்களுக்கு இந்திய உணவுகள் மிகப் பிடிக்கும் அதற்காக எப்போதாவது இந்திய நண்பர்கள் ஏதாவது உணவு செய்து கொண்டு சென்று அங்கு அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்…. அதுபோல நந்தினி செய்து கொடுக்கும் பிரியாணி அங்குள்ள நண்பர்களிடம் பிரசித்தி பெற்றது அப்படி ஒரு முறை பிரியாணி பற்றி பேச வந்தவள் தான் எதிர் வீட்டு சைனா பெண் சூயி ….

     முதலில் நந்தினியோடு பேசத் தொடங்கியவள் அடிக்கடி மாறனைப் பற்றி பேசினாலும் அதில் ஒரு மரியாதை இருப்பதை நந்தினி போகப்போக அறிந்து கொண்டாள்…. அங்கு இருந்த அலுவலக நண்பர்களின் வீடுகளோடு நல்ல பழக்கவழக்கம் அனைவருக்கும் இருந்தது… நந்தினியும் அனைவருடனும் நல்ல நட்புடன் பழகி வந்தால் சூயிக்கு எப்போதும் நந்தினியின் சமையல் மீது ஒரு பிரேமம் உண்டு…  அடிக்கடி அவளிடம் வந்து சமையல் பற்றி கேட்பாள் , அல்லது போனில் தொடர்பு கொண்டு சமையல் செய்யும் முறையை கேட்டுக் கொள்வாள் அப்படி ஒரு முறை கேட்டு கேட்டு அவள் சமையல் செய்ய பழகியதை சற்று பெருமையாகவே நந்தினியிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தாள்….

     பொதுவாக மாறன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் வெளியே வருவது கிடையாது.. அவள் வெளியே வராவிட்டால் யாரும் தேடி வந்து பேசுவதெல்லாம் கிடையாது மாறன் இல்லாத நேரம் இவளும் மாறனின் நண்பனின் மனைவியும் வெளியே நடைப்பயிற்சி செய்வதற்காக பார்க்கிற்கு செல்வார்கள் அப்போதுதான் மற்றவர்களுடன் பழக்கம் அதுபோலவே அந்த சைனா பெண்ணும் பழக்கம்…..

    நந்தினியின் அலைபேசியில் அவள் அன்று அதிக நேரம் பேசியதைக் கண்டு மாறன்தான் கேள்வி கேட்டான்….

      என்ன என்னை குறை சொல்லிட்டு நீ அந்த பொண்ணு கூட அவ்வளவு நேரம் பேசுற எனவும்…

    ஐயோ பாவம் உங்களை பலநாள் கேள்வி கேட்காம வச்சிருந்தேன் கேள்வி கேட்க வைத்து விடாதீர்கள்…. நீங்க மட்டும் விழுந்து விழுந்து பேசுறீங்க நான் பேசினா தப்பா….

      அவ பேசுற ஓட்டை இங்கிலீஷ் யாருக்குமே புரியாது சிரிப்புதான் வரும் நீ எப்படி அவ கூட பேசுற அது தான் கேட்டேன்….

        எப்படி பேசினா என்ன…  உங்களுக்கு இப்ப நா அவ கூட என்ன பேசுறேன்னு தெரியுமா அது தானே உங்களுக்கு முக்கியம்…..

      ம்ம்ம்… என்றபடி அவன் தோளை குலுக்கவும்…..

      மம்….. இவளும் மனதிற்குள் நக்கலாக சிரித்துக்கொண்டே இன்னிக்கு இருக்கு மவனே…. நீ என்ற தொலைஞ்ச என்றபடி நினைத்துக்கொண்டு அவ உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் கேட்டு கேட்டு சமைத்து வைத்து இருக்கா….  போய் சாப்பிட்டுட்டு வாங்க….

ஏன் நீ சமைக்கலையா…..

ம்ம்ம்… பாயாசம் வைக்கலாமா ன்னு யோசிக்கேன்….

ஏன் இந்த கொலவெறி…..

அவன் வெளியே சென்று நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வரும் முன் அன்றைக்கான சமையல் மெனுவை முடித்து டைனிங் டேபிளில் எடுத்து மூடி வைத்திருந்தால்.., ஹாட் பாக்ஸில் வைத்து மூடி இருந்ததால் வாசனை தெரியவில்லை இவன் நிதானமாக கேட்கவும்…..

    நான் இன்னைக்கு சமைக்க ல போங்க எதிர் வீட்ல தான் இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு போய் சாப்பிட்டுட்டு வாங்க…….

     ஏன் அவ சும்மா பேசுவதை வச்சுட்டு நீ தப்பா எடுத்து இன்னமும் பிரச்சினை கிரியேட் பண்ற மாதிரி இருக்கு…. அவளுக்கு ஏற்கனவே இந்தியா பாய்பிரண்ட் ஒரு பையன் இருக்கான் நீ வேற அவன் கிட்ட பேசுவதற்காக என்கிட்ட லாங்குவேஜ் கத்துக்கணும் ன்னு அப்பப்போ பேசி பார்ப்பா…. அய்யோ நீ பிரச்சினை இழுத்துட்டீயா….

     இல்லையே உங்களுக்கு பிரியாணி பிடிக்கும் ன்னு அவளுக்கு தெரிஞ்சு பிரியாணி பத்தின டீடெயில்ஸ் கேட்டா இன்னைக்கு அவ வீட்டில குரோக்கடைல் பிரியாணி… கரப்பான்பூச்சி ஃப்ரை… பாம்பு 65….  வேற என்ன எல்லாமோ வெரைட்டி சொன்னாலே…. என்று யோசனையோடு..ம்ஹா  அவங்க ஊர் சாப்பாடு நிறைய ஐட்டம் போய் சாப்பிட்டுட்டு வாங்க…. குரோக்கடைல் பிரியாணி வேண்டாமா……

     அடிப்பாவி எத்தனை நாளா பழிவாங்கணும் நெனச்சிருந்த என்றபடி குமட்டுவது போல அவளிடம் செய்து காட்டிக் கொண்டிருந்தான்…..

       ஐய தெரியுது நீங்க என்னென்ன சாப்பிடுவீங்க ன்னு…. எனக்கு தெரியும் சும்மா சொல்லக்கூடாது….  நீங்க  ஏன் இந்த பொண்ணு கிட்ட பேசுறீங்க ன்னு கேட்டு இருக்கேனா… ஆனா இப்ப நா பேசுவதை மட்டும் கேக்குறீங்க…. உங்க கிட்டயே பாய்பிரண்ட் இருக்க விஷயத்தை சொன்னவ….. என்கிட்ட பாய்பிரண்ட் இருக்க விஷயத்தை சொல்லி இருக்க மாட்டாளா பெரிய இவரு ன்னு நினைப்பு… போங்க போய் வேலையை பாருங்க……

     ஏய் வீக் எண்ட்  நல்ல புட் கிடைக்கும்னு ஃப்ரெண்ட்ஸோட போய் அரட்டை அடிச்சிட்டு விளையாடிட்டு வந்தா சாப்பாடு தர மாட்டியா…..

      தேவை இல்லாம பேசினா…. பனீஸ்மென்ட் உண்டு…. இன்னைக்கு ஒரு நாள் விரதம்  இருங்க…..

      சைனா பெண்ணை பொருத்தவரை வந்த இரண்டு வாரத்திலேயே தெரிந்து கொண்டாள்…..

அது மாறனுக்கு தெரியாது இவள் என்றாவது பிரச்சினை செய்வாளோ என்று யோசித்துக் கொண்டே இருப்பான்.. அவளிடம் பேசும்போது இவனுக்கு சற்று பயமாகவே இருக்கும்….  தப்பாக நினைத்து விடக் கூடாது என்று ஆனால் அவள் புரிந்து கொண்டாள்….. அவளுக்குத் தெரியும் எனத்  தெரிந்தபோது மனதிற்குள் மெல்லிய சாரல் அடிப்பது போல உணர்ந்தான்…..

        ஒருமுறை நர்மதாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சரத்தின் அம்மா பேச விரும்புவதாக சொல்லி நர்மதா போனை கொடுத்தாள் அப்போது அவர் பேசும்போது நல விசாரிப்புகளுக்கு பிறகு சரண்யாவை பற்றி பேசினார்… அவள் நன்றாக இருப்பதாகவும் இப்போது மாறி வருவதாகவும் கூறினார்….

       அவர் போனை வைத்த பிறகு மாறன் அலுவலகம் சென்று தனியே இருந்த போது ஊருக்கு கிளம்பும் முன் சரத் நந்தினியிடம் கூறிய விஷயங்களை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

        அனைவரிடமும் சொல்லி கொள்வதற்காக நர்மதா வீட்டிற்கு சென்றபோது சரண்யா அவள் கணவனோடு கணவன் வீட்டிற்கு சென்றிருந்தாள். அந்த சமயத்தில்தான் சரத் நந்தினியோடு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது நந்தினி கொஞ்சம் பேசலாமா என்று கேட்க….

       என்ன அண்ணா இது.,  என்ன பேசணும் சொல்லுங்க…. இத போயி கேட்டுட்டு  இருக்கீங்க…..

   நீ சரண்யா பேசுனத வச்சு தப்பா எதுவும் யோசிக்காத மா…..  அவ அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி ஆராய்ச்சி பண்ற மாதிரி பேசுறது ரொம்ப தப்புன்னு எல்லாருக்கும் தெரியும்….  காரணம் என்ன அப்படிங்கிறது எனக்கும் அம்மாவுக்கும் புரியுது…. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது இது அவ மாப்பிள்ளைக்கு தெரியக் கூடாது என்கிறதால தான் நாங்க வாயே திறக்கல..

அவளுக்கு மாறன் அத்தான் உன் மேல அன்பா இருக்கிறது அவளுக்கு உள்ளே சின்ன பொறாமையே தூண்டி இருக்கு…. ஏன்னா அவ மாறன கல்யாணம் பண்ணனும்னு ஆசை பட்டா…..  இத வச்சி கல்யாணம் பேசும்போதுதான் அத்தான் முடியாதுன்னு சொல்லிட்டாரு அந்த விதத்தில் அவளுக்கு ரொம்ப கோபம் அவளுக்கு மனசுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருச்சு…..  எந்த விதத்தில் குறைவு தான் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு…. எனக்கு கண்டிப்பா பாரின் மாப்பிள்ளை தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சா… அவன் என்னைய கல்யாணம் பண்ணா டி என்ன….  எனக்கு ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் நான் கல்யாணம் முடிச்சு ஃபாரின் போகணும்…..  அப்படிங்கிற எண்ணம் மனசுல இருந்துச்சு அவளுக்கு…..

        அதுக்கப்புறம் தான் இந்த சண்டையில்  அம்மா இன்னும்  கண்டுபிடிச்சாங்க…. அத்தான்  உங்க மேல பாசமா இருக்கிறது அவளுக்கு இன்னும் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு பண்ணிடுச்சு….அவ மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி., நந்தினி அழகா இருக்கிறா  அதனால தாங்குறான்…. வசதியான பொண்ணு அதுதானா…. ஒருவேளை லவ் பண்ணி இருப்பானோ…. அந்த மாதிரிலாம் யோசிக்க ஆரம்பிச்சு இருக்கா…. இது தற்செயலாக ஒருநாள் அம்மா சத்தம் போட்டு கேட்கும் போது சொன்னா ….    அவ ஹஸ்பண்ட் நல்லவரா இருக்காரு ஆனா அவ வந்து அடுத்தவங்கள கம்பேர் பண்ணி இந்த மாதிரி நமக்கு ஏன் நம்ம ஹஸ்பண்ட் செய்யல அப்படிங்கற ஒரு எண்ணத்தில் தான் இவ்வளவு கேள்வி கேட்டு இவ்வளவு பிரச்சினை பண்ணது சோ இத தப்பா எடுத்துக்காத மா….

       இல்லன்னா எனக்கு அன்னைக்கு இந்த விஷயம் புரிஞ்சிடுச்சு…. ஆனா இத நான் சொல்லக் கூடாது என்கிறதால தான் நான் சொல்லல….. மே பி அவங்களுக்கு இளா வை ரொம்ப புடிச்சி இருந்திருக்கலாம்….. கல்யாணம் பண்ணிக்கணும்னு சின்ன வயசுல இருந்து ஒரு எண்ணம் மனசுல இருந்து இருக்கும்….. தான் கல்யாணம் பண்ணி இருந்தா நம்ம லைப் இப்படி இருந்திருக்குமோ மிஸ் பண்ணிட்டோமே அப்படிங்கிற ஒரு பீல் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கு….  அது தப்புனு சொல்ல முடியாது இல்லையா….  இது  பெரியவங்க பண்ற தப்புனா சின்ன வயசிலேயே இவனுக்கு இவ அப்படின்னு பேசி வைக்கிறது ரொம்ப தப்பு அதனாலதான் சின்ன வயசுல பிள்ளைங்க மனசுல அந்த எண்ணம்….  அது வந்து பின்னாடி இந்த மாதிரி சில விஷயங்களை கொண்டு வந்துவிட்டது…  வேற ஒன்னும் இல்ல….

       எனக்கு புரிஞ்சதும்மா அதனாலதான் நான் எதுவும் பேசல….. இதற்கு இடையில  என் தங்கச்சி அப்படிங்கிற முறையில் அவளை நான் விட்டுக் கொடுக்கவும் முடியாது….  அதே நேரத்தில் அவ பன்றத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது…. அவளுக்கு அட்வைஸ் பண்ணி இருக்கு  டாக்டர் கிட்ட பேசி இருக்கா…. உங்ககிட்ட பேசி இருக்கா இனிமேலாவது  அவ ஹஸ்பண்ட் டை புரிஞ்சுட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்புறேன்…..  கண்டிப்பா நல்லா இருக்கும்னு நம்புவோம் என்ன பண்ணறது அவளோட மனநிலை அப்படி மாறிடுச்சு…..  தப்பு பெரியவங்க மேல தான்…..நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்க மா…..

        கண்டிப்பா….  ஆனா அவங்க கிட்டே ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க….  கண்டிப்பா நெக்ஸ்ட் வரும்போது பார்க்கலாம் ஆனா அதுக்குள்ள அவங்க லைப் ல நல்லா இருப்பாங்க என்று நம்புவோம் பார்த்துக்கோங்க….  நர்மதாவை நல்லா பார்த்துக்கோங்க….  இத்தனையும் தனியாக தான் பேசினர்….

      காலம் கடப்பது தெரியாமல் கடந்து கொண்டிருந்தது….

      ஏழு மாதம் கடந்த நிலையில் யார் பேசினாலும் ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்கத் தொடங்கினர்… திருமணம் முடிந்து ஒன்றேகால் ஆண்டு நிறைவுற்று விட்டது… இவளும் சிரித்து பேசியே சமாளித்து விட்டு போனை வைத்து விடுவாள்…  அப்படி ஒரு முறை மாறனின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு பேசி விட்டு போனை வைக்கும் போது மாறன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் என்ன விஷயம் என்று கேட்கவும் தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னாள்….

     நான் தான் சொன்னேன் இல்ல… கொஞ்ச நாளுக்கு நம்ம இரண்டு பேருக்கும் நடுவிலே யாரும் வேண்டாம்…. அது நம்ம குழந்தையா இருந்தாலும்….

    குழந்தை என்பது தம்பதியரின் பிணைப்பா… பிரிப்பா……

“நம்பிக்கையுடன் நடந்தால் கடலும் வழிவிட்டு வாழ்த்தும்….

இறுக்கத்துடன் தட்டினால் பசுமையும் சருகாகும்….

நேசத்துடன் பார்த்தால் கல்லும் நெகிழ்ந்துருகும்….”

Advertisement