Advertisement

அத்தியாயம் 14

“பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடலாம்….

பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்….

பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்….”

மொட்டை மாடியில் விரித்து விட்டு அருகருகே அமர்ந்து கொண்டு அவள் கையோடு கைகோர்த்து கதை பேச தொடங்கினான்…. அவளுக்கோ அவன் ஊருக்கு செல்லும் முன் மாடியில் வைத்து பேசியது நினைவு வந்தது…

அவள் அவனிடம் தன் முதல் கேள்வியை கேட்டாள்…. நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி இதே மாதிரி மாடில வச்சு பேசும் போது கல்யாணம் பண்ணினது தப்புன்னு யோசிக்கிறேன் அப்படின்னு சொன்னீங்க… ஏன் அப்படி சொன்னீங்க….

ம்ம்ம்ம்ம்….. நான் நினைச்சேன் நீ இந்த கொஸ்டீன்ன கண்டிப்பா கேட்ப ன்னு…. உன் மனசுல யோசிட்டே இருந்த இல்ல….

எப்போதாவது அப்படி தோணும் ஏன் இப்படி சொன்னாங்க அப்படின்னு…..

எனக்கு உன் மேல கோபம் இருந்தது என்னமோ உண்மைதான்…. ஆனா உன்ன பாக்கும் போது அந்த கோபம் காணாமல் போய்விடும்… என்னென்னமோ தோணும்…. நான் வேற வீராப்பா உன்ன கூட்டிட்டு போக மாட்டேன் அப்படின்னு சொல்லி விட்டேன்… ஆனா கம்பெனியில் சொன்னா விசா உடனே கிடைக்கும்…. எங்க கம்பெனிக்கு பேமிலி விசா உண்டு…. நானே மண்டைய பிச்சிக்கிற நிலைமையில்தான் இருந்தேன்…. நீ வேணும்னு அடம் பிடிக்கிற மனசை கண்ட்ரோல் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு…. கஷ்டப்பட்டு கோபத்தை ஞாபகத்துக்கு கொண்டு வருவேன்…. ஒரு பக்கம் நர்மதா கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படிங்கற ஒரு கில்டி கான்ஸியஸ் வேற இருந்துச்சு…. அதனாலதான் அப்படி சொன்னேன்…..

இன்னொன்னும் கேட்கணும்….

என்ன கேளு…..

நீங்க கிளம்பற அன்னைக்கு உங்க பிரெண்ட்ஸ் ட்ட தான் சொல்லி கிட்டு இருந்தீங்க… டைவர்ஸ் அது இதுன்னு…..

ஏய்….. அது ஏதோ கோவத்துல சொன்னது மனசுக்குள்ள எனக்கு ஒரு டென்ஷன் உனக்கு என்ன பிடிக்கலையோ அப்படின்னு…. நீ வேற நான் என்ன திட்டினாலும் அமைதியா இருப்ப…. அது தான்…

அது என் மேல தப்பு இருந்துச்சி அதனால உங்க கோபம் குறையனும் அப்படி ன்னு அமைதியா இருப்பேன்….

ஆனா நீ அமைதியா இருக்க இருக்க எனக்கு கூட கொஞ்சம் தான் கோபம் வரும் தெரியுமா… நீ பதில் பேசனும் ன்னு நான் ஆசைப்பட்டேன் ஆனா நீ பேசவே மாட்ட….

எனக்கு பயம் நான் உங்கிட்ட சாரி கேட்டேன்…. நீங்க என்கிட்ட ஒரு ரெஸ்பான்சும் குடுக்கல… எனக்கு அதுவே ஒரு மாதிரி இருந்துச்சு… எனக்கு மொத்தமா ஆம்பளைங்க மேல ஒரு கோபம் ன்னு கூட வையுங்களேன்…. எங்க அப்பா ஒரு விதத்துல மற்றவர்களை மட்டம் தட்டினாங்க அப்படின்னா அண்ணா ஒரு விதத்தில வேற மாதிரி இருந்திருக்கிறான் அப்படிங்கற கோபம்…. அதுக்கப்புறம் நீங்களும் பதிலே சொல்லல அன்னைக்கு திட்டும்போது அவ்வளவு திட்டிட்டு போனீங்க… அதுக்கப்புறம் புரிஞ்சி சாரி கேட்கும்போது ஒரு வார்த்தை சரின்னு சொல்லியிருந்தீங்க ன்னா கூட எனக்கு ஒன்னும் தோணாம இருந்து இருக்கும்….

ஆனா வீட்ல கல்யாணம் பேசினா… அவ்வளவு கோபம் வரும் எனக்கு… ஏன்னு தெரியலை… அதுக்கப்புறம் தான் பெங்களூரில் இருந்து வருவதே கிடையாது அப்பா உங்க கூட மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டு கூட என்ன பொய் சொல்லி தான் வர வச்சாங்க….. வந்து நீங்க தான் மாப்பிள்ளையும் தெரிஞ்சதுக்கு அப்புறம் எனக்கும் சரின்னு தோணுச்சு…. கண்டிப்பா வேற மாதிரி இருந்தா நிப்பாடி இருப்பேன் கல்யாணத்தை…

அப்பவே பிடிக்குமா உனக்கு….

தெரியல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்திருக்கலாம் ஆனால் கல்யாணம் முடிஞ்சு ஒரு நாளு நாள்ல பீல் பண்ணேன் உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு அப்படின்னு…..

அதை சொல்லி இருக்கலாம்ல….

நீங்க தான் ஏற்கனவே திட்டிட்டே இருப்பீங்க…. இத வேற சொன்னா அப்புறம் வேற ஏதாவது சொல்லிக் காட்டிடீங்கன்னா…. அதனாலதான் சொல்லல….

பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே அவள் மடியில் சாய்ந்து கொண்டான் கொஞ்ச நேரம் படுத்துகிறேன்… என்ற அனுமதி குரலுடன் அவளிடம் கல்லூரிகளில் நடந்தது… வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கதை என ஒவ்வொன்றாக பேசத்தொடங்கினான்.. அவளும் அவன் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டும் கிண்டல் செய்து கொண்டும் அவன் தலைமுடியில் விரல் விட்டு கலைத்துக் கொண்டிருந்தாள்….

சற்று நேரத்தில் அவன் பேச்சு மாறி வேறு பேச்சு மாறவும்…. அவன் வாயில் விரல் வைத்து தடுத்தாள்… ரொம்ப டையர்டா இருக்கீங்க… தூங்க போங்க என்றாள் சிரிப்புடன்….

ஏய் நீ என்ன தூங்க வைக்கிறதில்லையே இருக்க… தினமும் இப்படியே சொல்ற….

இன்னும் உங்கள் கடமையை நீங்க முழுசா முடிக்கல…. அப்புறமா ஊருக்கு போனதுக்கு அப்புறம் என்று மட்டும் சொன்னாள்….

ம்ம்ம்… நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான் என்றான்….

சிரித்துக்கொண்டே பேசாமல் தூங்குங்க… என்றதோடு அவன் தோளில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்…

ஊருக்கு கிளம்புவதற்கு நான்கு நாள் முன்பு வரை வேலை அதிகமாக இருந்தது அனைத்தையும் சரி செய்து நர்மதா விற்கு தேவையானவற்றைச் செய்து அனுப்பிவிட்டு… நந்தினி உடன் அழைத்துச் செல்வதால் அவளுக்கு தேவையானவற்றை வாங்கி பேக் செய்வதிலும்., வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவதிலும் சரியாக இருந்தது… கலிபோனியாவில் தனிக்குடித்தனம் தொடங்க இருப்பதால் மசாலா வகைகளை தேவகி தயார் செய்து கொண்டிருந்தார்…

நந்தினி வீட்டிற்கு ஒரு நாள் சென்று இருந்து விட்டு வரவேண்டும் என்பதை வீட்டில் தெரிவித்தான்… அவர்களும் சந்தோசமா போயிட்டு இருந்துட்டு வாங்க என்று அனுப்பி வைத்தனர்….

நந்தினி வீட்டிற்கு மாறனே போன் செய்து ஒருநாள் அங்கு இருக்க வருவதாக கூறினான்…

நந்தினியை அழைத்துப் போவது தெரியும் அதனால் வேறு எதுவும் வேண்டுமா என்று அவர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்…. அவன்தான் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்….

காலை உணவிற்குப் பின் நந்தினியின் வீட்டிற்கு சென்றனர்…. அவர்கள் வீட்டில் வரவேற்பு சிறப்பாக இருந்தது…

மாறனும் மிகவும் சந்தோஷமாகவே அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்… நந்தினியின் அப்பாவும் அண்ணனும் அவனை கவனிப்பதில் எந்தவித குறையும் வைக்கவில்லை….

மதிய உணவிற்குப் பின் அனைவரும் சற்று ஓய்வெடுக்க அறைக்கு சென்றபின் நந்தினி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்….

பாடல் ஒளிபரப்பும் சேனல் ஓடிக்கொண்டிருந்தது சற்று நேரம் பாடலிலும் சற்று நேரம் கவனம் சிதறுவதிலும் அவளுக்கு நேரம் போய்க்கொண்டிருந்தது….

சற்று நேரத்தில் அவளைக் காணவில்லை என்று ஹாலிற்கு வந்தவன் இவள் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு இங்கே உட்கார்ந்துட்ட என்றபடி அருகில் வந்து அமர்ந்து தோளில் கை போட்டுக் கொண்டான்… கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் சற்று நேரத்தில் ஒரு டீ போட்டு கொடேன் என்று கேட்டான்….

சரி என்று… டீ போட கிச்சனுக்குள் நுழையவும் பின்னாடியே வந்து அவளைக் கட்டிக் கொண்டு டீ போட நான் ஹெல்ப் பண்ணவா என்று கேட்டபடி அவள் தோளில் முகம் வைத்து நின்றான்…

அன்னைக்கு காபி கலக்கும் போது பாட்டு பாடிட கலந்த…. அதே மாதிரி இப்போ ஒரு பாட்டு பாடு என்றான்….

நீங்க எப்ப கேட்டீங்க…

அது கேட்டேன்… நீ இப்ப பாடு….

அதுதான் கேட்டுட்டீங்க இல்ல…. அப்புறம் என்ன…. இப்ப நீங்க படுங்க நான் கேட்கிறேன்….

உனக்குள் தொடங்கி

உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து

ரசித்திடத்தானேஎந்தன்

நாட்கள் விடிகிறதே….

அடுத்த வரி அவன் பாடும் அவன் வாயை மூடி சத்தமா பாடாதீங்க எல்லாருக்கும் கேட்கும் என்று கூறினாள்….

ஹா ஹா…. கேட்டா பதில் சொல்லு….

என்னன்னு….

பாட்டு கிளாஸ் நடந்துச்சுன்னு சொல்லு….

நீங்க முதல்ல தள்ளி நில்லுங்க…. என்னைய ஒழுங்கா டீ போட விடுங்க… இப்ப எல்லாரும் எந்திரிச்சு வந்துருவாங்க நான் ஒரேடியா சேர்த்து போடுறேன்….

நான் எங்க மாமனார் ட்ட நல்ல பிள்ளைன்னு பேரு வாங்கி இருக்கேன்… கேட்டு பாரு…

இப்ப ஏன் திடீர்னு இந்த பேச்சு….

எனக்கு ஏதாவது ஸ்பெஷலா தருவேன்னு தான்….

நீங்க இப்படியே நல்ல பிள்ளை நல்ல பிள்ளைன்னு சொல்லிட்டு இல்லாத வேலையெல்லாம் பாக்குறீங்க….

நான் உண்மையிலேயே நல்ல பிள்ளையா இருக்கப் போய்தான்., நீ நல்ல பிள்ளையா இருக்க…

ஷ்ஷ்…. போதும் ஏதாவது ஏடாகூடமா பேசி வைக்காதீங்க…

கேலியும் கிண்டலுமாக அங்கு பேச்சு ஓடிக் கொண்டிருக்க… ஹாலில்

ஏய்… உன் ட்ட டீ கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு… நீ என்ன உட்கார்ந்து இருக்க… நான் போய் மாப்பிள்ளைக்கு டீ டைம் வர்றதுக்குள்ள ஏதாவது வாங்கிட்டு வர்றேன்… அவர் என்ன சாப்பிடுவாரு ன்னு நந்தினி கிட்ட கேளு… போ போய் டீ எடுத்துட்டு வா….

சத்தம் போடாதீங்க…. நீங்க இப்ப ஏதாவது வாங்கிட்டு வாங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு டீ போட்டு வைக்கேன்….

ஏன்….

கிச்சன்ல உங்க தங்கச்சி டீ போட போயிருக்கா…. மாப்பிளையும் கூட போயிருக்காரு… இப்ப நான் உள்ள போகனுமா….

அவள் சொன்னது உள்வாங்க சற்று நேரம் ஆனாலும்.. பின் தனக்கு தானே சிரித்துக் கொண்டு., நீ உள்ளே போயிறாத நான் வெளியே போய் ஸ்னக்ஸ் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்….

அஞ்சு நிமிஷத்துல போடவேண்டியது… உங்களால் எவ்வளவு நேரம் ஆகுது பாருங்க..

நான் வேணும் ன்னா இன்னொரு பாட்டு பாட வா… நந்தினி என்றபடி அவள் காதோரம் கிசுகிசுப்பாக பேசவும்….

அடுப்பை அணைத்துவிட்டு அவன் புறமாக திரும்பி நின்றவள்… அவன் கழுத்தை வளைத்துப் பிடித்து கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து ரூமுக்கு போய் கனவு காணுங்க…. டீ யோடு வர்றேன்… என்றாள்…

அவனோ ஒரு பெருமூச்சோடு உன்னுடைய முதல் முத்தம் என்று கணக்கு செல்லத் தொடங்கினான்….

அறைக்கு செல்ல திரும்பியவன் வாசல் வரை வந்து விட்டு… மறுபடியும் அவள் அருகே வந்து நின்றான்….

என்ன மறுபடியும் வந்துட்டீங்க….

உங்க அண்ணி ஹாலில் உட்கார்ந்து இருக்காங்க… ஏதாவது நினைக்க போறாங்க…

அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க நீங்க போங்க நான் வர்றேன்…. என்று சொல்லிவிட்டு அவள் டீ போட்டு ரெடி செய்யவும் அவனும் ஹாலில் போய் அமர்ந்தான்… கண்டு கொள்ளாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்பது போல அமர்ந்திருந்தான்…. அதற்குள் நந்தினியின் அண்ணனும் சிற்றுண்டியுடன் வந்துவிட மாலை நேரம் குடும்பத்தினருடன் கழிந்தது….

அன்று அங்கே இருந்து விட்டு., மறுநாள் மாறனின் வீடு செல்வதாக இருந்தது…..

இரவு உணவும் வகைவகையாக நந்தினியின் வீட்டினர் ஏற்பாடு செய்திருந்தனர்….

அன்றைய இரவு நந்தினி வீட்டில் பால்கனியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது….

மாமனார் வீட்டில் கவனிப்பு இப்படி இருக்குன்னு தெரிஞ்சா கூட ஒரு வாரம் இருக்கலாம் இல்ல என்று கேட்டான்…

மிதக்கிறது ல கப்பலையும் பறக்குறது ல ஏரோப்ளேன் யும் தவிர எல்லாத்தையும் சாப்பிட வேண்டியது…..

ஆமா நீ ஏன் கொறிச்சி கொறிச்சி சாப்பிடுற எலி மாதிரி….

எனக்கும் சேத்து நீங்களே சாப்பிடுங்க…. நமக்கு முடியாது ப்பா…..

காலை சற்று தாமதமாகவே கண்விழித்தாள்… கண் விழிக்கும் நேரத்திலும் அவனுடைய கை அணைப்பில் இருந்தாள்….

அவனுடைய தூக்கம் கலையாமல் எழுந்து கொள்ள முயற்சிக்கும் போது.., அவனுடைய இறுகிய அணைப்பு அவன் தூங்கவில்லை என்பதை சொல்லியது…. அதுக்குள்ள எழும்பிட்டீங்க….

இல்ல நேத்து நைட்டு நடந்தது கனவா இல்லை நிஜமா என்று ஒரு சந்தேகம் அதனால தான் தூங்க முடியாமல் எந்திரிச்சிட்டேன்….

ச்சீ…. என்றபடி அவன் நெஞ்சிலே அழுத்தமாக முகத்தைப் பதித்துக் கொண்டாள்….

அவனோ சிரித்துக் கொண்டே என் முகத்தை பார்த்து பேசேன் என்றான்….

அவ்வளவு நாள் வராத வெட்கம் அனைத்தும் அன்று மொத்தமாய் வந்து சேர்ந்தது….

குடும்ப வாழ்க்கைக்குள் முதல் முதலாக அடி எடுத்து வைத்தனர்… மறுநாள் கிளம்ப வேண்டும் என்ற சூழ்நிலையில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கோயிலுக்கு சென்று வந்தனர்….

நந்தினி நர்மதாவிடம் தினமும் வீட்டிற்கு போய் ஒருமுறை பார்த்துவிட்டு வா… அம்மா அப்பாவைப் பார்த்துக் கொள்… என்று பலமுறை சொல்லி விட்டு கிளம்பினாள்… அதுபோல தன் அண்ணியிடமும் அடிக்கடி இங்கு வந்து பார்த்துக் கொள்ளுங்கள் அத்தையும் மாமாவும் தனியாக இருப்பார்கள்…. என்று சொல்லிவிட்டு வந்தாள்  இதை கேள்விப்பட்ட தேவகி மருமகளை மகள் போல் என்று சொன்னது பொய் இல்லை அவள் மகளாகவே தான் இருந்திருக்கிறாள் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்….

அதுபோல மாறனின் நண்பர்களிடமும் பலமுறை சொன்னாள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று… இதைக்கேள்விப்பட்ட மாறன் சிரித்துக்கொண்டே தினமும் நீ வீடியோ கால் ல பார்க்கலாம் வா என்று சொல்லிவிட்டு…. விட்டா என்ன கிளம்பு என்று சொல்லி இருப்ப போல… உங்க அத்தையும் மாமாவும் விட மனசு இல்லையா தாயே இவ்வளவு நாள் அவங்க கூட தானே இருந்த இப்பவாது என்கூட கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருந்தான்… எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்….

கலிபோர்னியா காதலை கூட்டுமா…. குறைக்குமா….

“குடும்பம் தான் ஒரு மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது மற்றவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது சிறந்த குடும்பம் ஒரு மனிதனை சிறந்தவனாக மாற்றும்”

“விதி ஒரு கதவை மூடும் போது நம்பிக்கை எப்போதும் இன்னொரு கதவை திறக்கிறது” என்கிறார் கோப் மேயர்

“ஒரு மனிதன் தனக்கு வேண்டியதையெல்லாம் தேடி உலகம் முழுவதும் பயணிப்பான் ஆனால் திரும்பி வந்தால் இல்லத்திலேயே அவையெல்லாம் இருக்க காண்பான் ” என்கிறார் -ஜார்ஜ் மூர்

“இல்லம் என்பது இனிமை – இனிமை மட்டுமே ” என்கிறார் -சார்லஸ் சுவெய்ன்

Advertisement