Advertisement

லவ் மேரேஜ் பண்ணினவங்க   கூட கல்யாணத்துக்கு அப்புறம்…. நீ கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருந்த கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட அப்படின்னு சண்டை போடுற சிட்டுவேஷன் தான் இப்போ இருக்கு…. அப்புறம் எப்படி உங்களுக்குள்ள இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் நீங்க லவ் மேரேஜ் ம் கிடையாது… அரேஞ்சிடு மேரேஜ் புரிஞ்சுக்க நாள் ஆகும் ஆனா நீ கல்யாணம் முடிஞ்சு 13 நாள்ல ஊருக்கு போயிட்ட…  அப்புறம் எப்படி…

      லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா அது பிரச்சினையே கிடையாது…..  தங்களுக்குள்ளே இருக்கிற ப்ளஸ் அன்ட் மைனஸ் இரண்டுமே எல்லாருக்கும் இருக்கிற ஒரு விஷயம்…..  ஒரு மைனஸ் மட்டும் எடுத்துக் கொண்டு அதையே பிடித்து தொங்கி கிட்டு,  சண்டை போட்டு பிரச்சினையைத் உருவாக்குவதைவிட மைனஸ் ஸெல்லாம் தூர வைத்துவிட்டு பிளஸ் மட்டும் எடுத்துகிட்டு போனால் நல்லா இருக்கும்….  நாங்க ரெண்டு பேரு அப்படிதான்…  எங்க ரெண்டு பேருக்குமே சில மைனஸ் உண்டு ப்ளஸ் ம்  உண்டு…

         பட் நாங்க அதெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்வது கிடையாது ஏன்னா என் லைப் அவ தான்… அவ லைப்  நான் தான்….  அப்புறம் ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுக்கிறதுல  என்ன வந்துற போகுது…. இப்போ  ஆஃபீஸ் ல பாத்தீங்கன்னா யாருனே தெரியாத ஒருத்தனுக்காக பல்ல காட்டி அவன் என்ன சொன்னாலும் விட்டுக்கொடுத்து போறதில்ல…  சம்பாதிக்கிற பணத்துக்காக யாரோ ஒருத்தனுக்கு விட்டு கொடுத்துப் போகும் போது…. லைப் லாம் கூட வர போற வாழ்க்கைத் துணைக்காக விட்டுக் கொடுக்குறது ல எந்த தப்பும் இல்லைங்க….

      உனக்கு உன் வொய்ப் அ  அவ்வளவு பிடிக்குமா….

       லேசான சிரிப்புடன் அவ தான் என்னோட லைப் ன்னு சொல்லிட்டேன்…  அப்புறம் அவளைப் பிடிக்காமல் யாரை பிடிக்கும்…

       13 நாள் இல்ல எப்படி உன்னை இந்த அளவுக்கு மயக்கி வச்சிருக்கா உன் வொய்ப் அப்படின்னு எனக்கு ஒரு சந்தேகம்…..

      இங்க பாரு இவ்வளவு நேரம் நீயும் ஒழுங்கா கொஸ்டின் கேட்ட நானும் யாரையும் கஷ்டப்படுத்தாத.,  காயப்படுத்தாத விதத்தில் பதில் சொன்னேன்…  மயக்கிட்ட அது இதுன்னு பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் பாத்துக்கோ….  நீ எதை மீன் பண்ணி சொல்றேன்னு தெரியாத அளவுக்கு இங்க யாரும் சின்ன பிள்ளைங்க கிடையாது….  ஆமா நான் மயங்கிப் போய் தான் இருக்கேன்…. ஆனா தெளிவா கேட்டுக்கோ அவளோடு அன்புள்ள மயங்கிப் போய் இருக்கேன் அவள் என் தங்கச்சிக்கு ஒரு நல்ல அண்ணியா இருந்தா…. எங்க அம்மா அப்பாவை பொறுத்தவரை க்கு மருமகளா இல்லாம மகளா இருந்தா….  அதில் மயங்கி போய் இருக்கேன்…. சரியா நீ சொல்ற மீனிங்ல எதுவும் கிடையாது….  நான் இங்க வந்து மூணு நாளாச்சு கல்யாணம் ஆன நாள்ல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் எங்களுக்குள்ள எதுவும் கிடையாது….  போதுமா… நீ எதை மீன் பண்ணி கேட்டியோ அதை தான் நான் சொல்றேன்….

      இத எங்களை நம்ப சொல்றியா….

     இதைப் பற்றி எப்படி பேசுவது எனக்கு தெரியல ஆனா வேற வழி இல்ல பேசித்தான் ஆகணும்….  அந்த காலத்திலிருந்து கெடுத்து வச்சிருக்காங்க உங்க எல்லாத்தையும்….  அந்த ஒரு விஷயத்தை வச்சிதான் ஆம்பளைங்கள கைக்குள்ள போடமுடியும் சொல்லிக்கொடுத்து கெடுத்திருக்காங்க….  வெளியே வேலைக்கு போயிட்டு வர்ற ஆம்பள வீட்டுக்கு வந்தவுடனே வைப் ஓட அன்பான முகத்தை தான் எதிர்பார்ப்பான்…  அந்த சிரிச்ச முகத்தில தன்னோட சோர்வை எல்லாம் விரட்டணும் பார்ப்பான்…..  அன்புக்கு முன்னாடி மற்ற எல்லாமே சாதாரணம்….  லைப் ல எதையோ நினைச்சுக்கிட்டு மற்றதெல்லாம் விட்ராதீங்க….

         ஆம்பளைங்களுக்கு நினைப்பு எப்படின்னா தான் சம்பாதிக்கிற பணத்தில் தான் பொம்பளைங்க தனக்கு அடிமையாக இருப்பாங்கன்னு… பொண்ணுங்களுக்கு நினைப்பு எப்படின்னா அந்த மாதிரி விஷயத்தில்தான் ஆம்பளைங்க கைக்குள்ள இருப்பாங்கன்னு… உடல் சார்ந்த ஈர்ப்பு என்கிறது நார்மலா அந்த கொஞ்ச நாளைக்கு இருக்கிற ஒரு சாதாரண ஒரு விஷயம்…  அன்பு ங்கிறது மனசு சார்ந்த விஷயம் ங்க அதை மட்டும் கொஞ்சம் யோசித்து பாருங்களேன் லைப் லாங் சந்தோஷமா இருக்கும்….

     அவன் சொன்னதைக் கேட்ட அத்தனை பேருக்கும் அவ்வளவு அதிர்ச்சி தங்களுக்குள் ஒன்றுமில்லை என்று சொன்னதைக் கேட்டு….  ஆனால் மாறனோ அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து அவளது உச்சந்தலையில் கன்னம் பதித்து நின்றான்….

       என்னடா சொல்ற இது வாழ்க்கைப் பிரச்சனை…

   அப்பா போன முறை அவள என்னோட கூட்டிட்டு போக முடியாத சிட்டுவேஷன்…. அதனால எங்க வாழ்க்கையை மெதுவா ஆரம்பிக்கலாம் ன்னு முடிவு பண்ணியிருந்தோம்…

எங்களை பொருத்தவரைக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது…  இந்த முறை அவளை நான் கூட்டிட்டு போறேன்….

        அவனை அவள் நிமிர்ந்து பார்க்க… ம்ம்ம்ம் என்றபடி தலையை ஆட்டினான்….

       அவன் நண்பர்களை தவிர யாருக்கும் இதை பற்றி தெரியப்படுத்தாத நிலையில் அவன் சொன்னது..  அனைவருக்கும் ஆனந்த செய்தியாகவே இருந்தது….

     ரொம்ப சந்தோஷம் தான்… நல்லபடியா உங்க லைப் இருந்தா… எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்….

          இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்தாலும் சரண்யா அங்கு யோசனையோடு இருந்தால் அதை பார்த்தவுடன் அடுத்ததாக என்ன கேள்வி கேட்க போகிறாளோ… என்று அனைவரும் யோசித்தனர்..

  அதற்கேற்றார்போல் அத்தை உங்க கிட்ட ஒரு கேள்வி என்று மாறனின் அம்மாவிடம் கேள்விக் கணையை திருப்பினாள்….

       சரி உங்க பிள்ளைதான் சொல்றான் விட்டுக்கொடுத்து போறோம்…  அதனால சந்தோஷமா இருக்கோம் ன்னு… ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம் ன்னு….. உங்களுக்கு ஏன் மாமியார்  கெத்து காட்டணும் ன்னு தோன்றவில்லையா….  நீங்களும் அவளைத்  தாங்குறீங்க…..

     அவர் என்ன பதில் சொல்லப் போகிறாரோ… என்று அனைவரும் அவர் முகத்தை பார்க்க அவரோ ஒற்றை வார்த்தையில் முடித்தார்… மருமகளை மகளா நெனச்சா எந்த பிரச்சினையும் கிடையாது….  எங்களை பொருத்தவரை அவ மருமகள் கிடையாது மகள் மாதிரி என்று சொல்லிவிட்டு துணைக்கு பாக்கியநாதனை வேறு அழைத்தார்….  என்ன நர்மதாப்பா நான் சொல்றது சரிதானே என்றார்….

        அவரும் சிரித்தபடி தலையாட்டினார்….

       அதேநேரம் சரண்யாவின் அம்மாவும் பேசத் தொடங்கினார்…  இங்கே பாரு சரண்யா உன்னை நீ  குழப்பிக்காம இருந்தாலே வாழ்க்கை தானே சரியாயிடும்…  அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து இப்படியா அப்படியா ன்னு  எல்லாம் யோசிக்காத…. முதல்ல அடுத்தவங்க வாழ்க்கையை ஆராய்ச்சி பண்றத விடு….

      உன் வாழ்க்கை பற்றி மட்டும் யோசி….

       அவள் அமைதியாக இருக்கவும்…..

       அதேநேரம் மாறன் மறுபடியும் பேசினான்….  அஞ்சு விரலும் ஒன்றுபோல இருப்பதில்லை….  அது மாதிரி தான் எல்லார் வாழ்க்கையும் ஒன்று போல இருக்காது நமக்கு கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமா வாழ கற்றுக் கொள்ளனும்… அவ்வளவுதான்…

     இந்த சினிமாவையும் சீரியலையும் பார்த்து கெட்டுப்போறத விடுங்க… முதல்ல அதுல இருக்க மாதிரி எல்லாம் லைஃப் இருக்காது… அதெல்லாம் சும்மா கதைக்கு வேணா நல்லா இருக்கும்… ஒரு ரெண்டு நாள் அந்த மாதிரி  வாழ்ந்து பாருங்க.. ச்சீ  ன்னு போய்ரும்…

        சண்டை இல்லாத வீடும் கிடையாது… பிரச்சினை இல்லாத வீடும் கிடையாது…. எல்லாரும் வீட்டிலே இருக்கிறது தான்…  சின்ன சின்ன சண்டைகளும்…. சின்ன சின்ன கோபங்களும்… எங்களுக்குள்ளேயும் உண்டு., நாங்க அதைப் பெருசா எடுத்துக்கிறது  கிடையாது…

விட்டுக் கொடுத்து வாழனும் முடிவு பண்ணின அப்புறம்., எவ்வளவு அப்படின்னு அளவு வைக்கக்கூடாது முழுசா விட்டுக் கொடுத்தரனும்…

            வாழ்க்கை எவ்வளவு நாள் நமக்கு கொடுத்து இருக்குன்னு நமக்கு தெரியாது ஆனால் வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் நம்மளோட கோல்டன் மொமண்ட்ஸ் அ இருக்கணும்….

        இனி அவ என்ன கேள்வி கேட்டாலும் அன்ஸர் பண்ண கூடாது என்று முடிவோடு மாறன்…   நந்தினி சூடா டீ போட்டுக் கொண்டு வா என்றதோடு  அவன் நண்பர்களோடு தோட்டத்து பக்கம் போய் விட்டான்….

     வீட்டில் அனைவருக்கும் டீ வேண்டும் என்பதால் வீட்டில் இருந்த மற்ற பெண்களும்  சேர்ந்து டீ தயாரித்தனர் மொத்தமாக நிறைய போட வேண்டியது இருந்ததால்….

     அதன் பிறகும் சரண்யா சற்று யோசனையோடு இருந்தவள் வீட்டிற்கு   தன் கணவனோடு முதல் ஆளாக கிளம்பி விட்டாள்….  அன்றைய இரவு உணவு முடிந்த பின்பு நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினரோடு கிளம்பி விட சில முக்கிய உறவினர் தவிர மற்றவர்களும் கிளம்பினர்….

     மாறனும் எவ்வளவு சோர்வாக இருந்த போதிலும் நந்தினி மொட்டை மாடிக்கு போவோம்…. நம்ம நிறைய பேச வேண்டியது இருக்கு என்று அழைத்தான்….

        வீட்டிலிருந்த ஒன்றுவிட்ட அக்காவின் கணவர் தான் ஏண்டா மொட்டை மாடி என்று  கேட்க…. இல்லத்தான் எங்களுக்கு நிறைய பேச வேண்டியது இருக்கு… அதனால் தான்…  நாங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்கிட்டேதே கிடையாது….   அதனால்தான் என்றபடி மாறன் முன்னே செல்ல., சற்று நேரம் கழித்து நந்தினியும் மொட்டை மாடிக்கு சென்றாள்…..

    “இனிது இனிது வாழ்க்கை இனிது”

“வாழ்வில் ஏற்படும் விபத்துக்களால் நாம் நிலை குலைவதில்லை… அவ் விபத்துக்களை அசைப்போடுவதால் மட்டுமே நிலை குலைகிறோம்” என மனவியல் அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.

   அதுபோல தான்

“வாழ்க்கையில் ஏற்படும் துயரங்கள் நம்மை வீழ்த்துவது இல்லை.. துயரங்களை நினைத்து நினைத்து நம்மை நாமே வீழ்த்தி கொள்கிறோம்”சோகமும் மகிழ்ச்சியும் ஒட்டுவாரொட்டிகள் சோகத்தை புதைத்துவிட்டு அதன் நினைவுக்காக மகிழ்ச்சியை அதன் மீது நட்டு வைப்போம்…”

Advertisement