Advertisement

அத்தியாயம் 13

“தன்மையான வார்த்தைகள் மனச் சலிப்பை நீக்கலாம்….

நன்றியான வார்த்தைகள் உதவிகளை ஈர்க்கலாம்….

நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தளர்த்தலாம்….”

அன்று அதிகாலை அழகாய் விடிந்தது…. அன்றைய விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது….  அழைக்கப்பட்ட உறவினர் அனைவரும் வந்திருந்தனர்…  காலை உணவிற்குப் பின்னர் நர்மதாவின்   கணவன் வீட்டினர் அதாவது அத்தை குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்…  சரண்யாவும் அவள் கணவரும் வந்திருந்தனர்….

       சரண்யாவின் முகம் ஏதோ யோசனையில் இருந்தது….  வந்தவர்களை வாங்க என்று அழைத்ததோடு நந்தினி சற்று தள்ளியே நின்று கொண்டாள்…. ஏற்கனவே சரண்யா எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கொண்டு இருக்கிறாள் என்பதால் இவளும் சற்று ஒதுங்கி நின்று கொண்டாள்…

     அன்று சரண்யாவின் வீட்டில் வைத்து நடந்த விஷயத்தை பற்றி யாரும் எதுவும் பேசவில்லை….  அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அதைப்பற்றி எதுவும் பேசிக் கொள்ளவில்லை…. சற்று நேரம் கழித்து சரண்யாவின் கணவர்தான் நந்தினியை தேடி வந்து உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னார்….  நந்தினியும் மாறனிடம் சொல்லிவிட்டு சரண்யாவின் கணவரிடம் பேச சென்றாள்…

சொல்லுங்க ஏதோ பேசணும் சொன்னீங்க… நீங்க சொன்ன மாதிரி நேத்து பேசிப் பார்த்தேன்..  கொஞ்சம் ஓகே வாக இருந்தாலும் அவ மனசுல ஏதோ குழப்பிக்கிறா…  கொஞ்சம் டென்ஷன் ஆகவும் தெரியுதா..  அதனால நேற்று ஈவினிங் டாக்டர் கிட்டயேயும் கூட்டிட்டு போயிட்டு வந்துட்டோம்…  டாக்டர் பிரச்சனை இல்லை ன்னு சொல்லியிருக்காங்க… நல்ல தூங்கனும் ன்னு சொன்னாங்க…  சரியான தூக்கம் இல்லாதது தான் லேடிஸ்க்கு டிப்ரஷன்  க்கான காரணம்.,  அதனால நல்லா தூங்கி எந்திரிச்சா போதும் ஒரளவுக்கு சரியாயிடும் ன்னு சொல்லி இருக்காங்க….

      ஜென்ஸ் எல்லாம் தங்களுக்கு வர்ற பிரச்சனைகளை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க…. ஆனா பொண்ணுங்க மனசுல போட்டு குழப்பிக் கொள்ளுறதே  வேலையாக வைத்து இருக்காங்க…. இதுவா அதுவா என்று குழம்பி குழப்பி டிப்ரஷனுக்கு போயிருக்காங்க….  அப்படின்னு டாக்டர் சொன்னாங்க….  இவ இப்போ என்ன யோசிக்கிறா ன்னு  புரியல…  ஆனா  காலையில் கிளம்பும் போது மாறன் கிட்டயும் உங்க கிட்டயும் தனியா பேசணும் சொன்னா…   அத்தைக்கும் மாமாவுக்கும் கொஞ்சம் பயம் தான் இவ பேசுறேன்னு சொல்லி ஏதும் பிரச்சினை இழுத்திடுவாளோ, அப்படின்னு நினைக்கிறாங்க…

        ஆனா இவளோ பேசியே ஆகணும் பிடிவாதத்தோடு வந்து இருக்கா… என்ன பண்றதுன்னு தெரியல… அதுதான் உங்க கிட்ட முதலிலேயே சொல்லி வைக்கிறேன்….   என்னால இதுக்கு மேல அவள  காம்ப்ரமைஸ் பண்ண முடியல….  அவ உங்க கிட்ட என்ன கேட்க விரும்புறா அப்படிங்கறது கூட எனக்கு தெரியல….

      சரி அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் அவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன் அவங்க பாத்துப்பாங்க…..

      அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எந்த பதிலும் இருந்திடக்கூடாது அப்படிங்கிற ஒரு பயம்தான்….  மத்தபடி வேற ஒன்னும் இல்ல நீங்க பேசி பார்த்த வரைக்கும் ஏதாவது வித்தியாசம் கண்டுபிடிக்க முடிஞ்சிச்சா…

     இல்ல ஒரே நாள்ல அன்பை புரிய வைக்க முடியாது இல்லையா…. ஜென்ட்ஸ் பொருத்தவரைக்கும் இதுதாங்க ஒரு பெரிய பிரச்சனை,  மனசுல எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் நாங்க வெளியே காட்ட மாட்டோம்… பொம்பளைங்க அந்த அன்பு வெளியே காட்டணும் எதிர்பார்க்கிறீங்க…  அங்கதான் குடும்பத்துக்குள்ள பிரச்சினை வருது…..

          சரி தான் நீங்க சொல்றது சரி ன்னு வெச்சிக்குவோம்.. ஜென்ஸ் மனசுக்குள்ளே இவ்ளோ அன்பு வச்சிருக்கோம் ன்னு சொல்றீங்க… வெளிய காட்டாத அன்பு  எதுக்குமே பிரயோஜனம் இல்லைங்க….

அது உங்களுக்கு புரியலையா  நான் அவங்களை தப்பு சொல்ல மாட்டேன்… ஒரு மனைவியா அவங்க உங்க கிட்ட இருந்து அன்பை மட்டும் தான் எதிர்பார்த்து இருக்காங்க…

        எந்த ஒரு மனைவியும் தன் கணவன் கிட்ட எதிர்பார்க்கிற ஒரே விஷயம் அன்பு மட்டும்தான்…  எந்த ஒரு சராசரி மனைவிக்கும் தன் கணவன் தன்னை தாங்கணும்., தன் கிட்ட அன்பா இருக்கணும் அப்படின்னு எதிர்பார்க்கிறது… யதார்த்தமான  ஒரு விஷயம்., பொண்ணுங்கள பொருத்த வரை பிறந்த வீட்ல ராணி மாதிரி வாழ்ந்து இருப்பாங்க… ஹஸ்பென்ட் வீட்டுக்கு போகும்போது   அவங்க ராணி மாதிரி நடத்தாட்டிலும் பரவால்ல…  ஒரு  சக மனுஷியாக  நடத்தணும்…பொண்ணுங்களுக்கு அடிமை மாதிரி இருக்கிறது பிடிக்கவே பிடிக்காது….  அன்பா சொல்லிப் பாருங்க கண்டிப்பா கேட்பாங்க…

       நானா இருந்தாலும் அது தாங்க…  அடிமைத்தனத்தை  யாரும் ஏத்துக்கிறதும் இல்ல…  நடந்துக்கிறதுமில்லை…  அன்புக்கு மட்டும் தாங்க அடிபணிவோம் அதுதான் லேடிஸ் ஓட மென்டாலிட்டி…. சரி நான் அவங்க கிட்ட சொல்றேன்… அவங்க என்ன கேட்கிறாங்க என்று தெரியல அதுக்கு தகுந்த போல பேசிக்கலாம்…  போகலாம் என்றபடி சரண்யாவின் கணவரிடம் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றாள்….

      நேராக மாறனை தேடிச் சென்றவள்… அவன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு.,  கொஞ்சம் வாங்களேன் உங்க கிட்ட பேசணும் என்று அழைத்தாள்…

     மாறனின் நண்பர்களோ  கொஞ்சம் என்றால் கையை மட்டும்  அனுப்பினால் போதுமா என்றனர்…

    இவளோ அண்ணா இது கடி ஜோக்ஸ் சொல்ற நேரம் இல்ல கொஞ்சம் பேசணும் என்றாள்…

      என்ன என்றபடி வந்த மாறனிடம் சரண்யாவின் கணவனிடம் பேசிய விவரங்கள் அனைத்தையும் சொன்னாள்…

    சரி பாத்துக்கலாம் இன்னைக்கு ஏதும் பிரச்சனை இழுக்காமல் இருந்தால் சரி..  அவ பேச ஆரம்பிக்கும் போது நீ என் பக்கத்தில் வந்து நின்னுடு ரெண்டு பேரும் மாத்தி எதுவும் பேசிறக்கூடாது புரியுதா…

     சரி என்று நந்தினி சொன்னதுடன் இருவரும் நகர்ந்து விட்டனர்… மதிய விருந்துக்கு ஏற்பாட்டை கவனிக்க…  மதிய விருந்து மறுவீட்டிற்கான கலகலப்புடன் அசைவ உணவுடன் அமர்க்களமாக விருந்தும் முடிந்தது….  முக்கியமான உறவினர்களைத் தவிர மற்றவர்கள் கிளம்பவும் வீடே அமைதியாக இருந்தது….  சரண்யா பேசவேண்டும் என்று சொன்னது சரண்யாவின் அம்மாவின் மூலமாகவே வீட்டிலுள்ளவர்களிடம் தெரியப் படுத்தப் பட்டிருந்தது….  வீட்டின் ஹாலில் அனைவரும் கூடி இருந்தனர்…  மாறனின் நண்பர்கள் கிளம்பவா என்று கேட்கவும் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இல்லை பேசாம உட்காருங்க….

     சரண்யா பேச்சை தொடங்கும் முன் சரண்யாவின் கணவன் தொடங்கினான்….  ஏதோ பேசணும் சொன்னியே என்ன சொல்லு என்று ஆரம்பித்து வைத்தான்….

     சரண்யா… மாறனையும் நந்தினியும் நோக்கி கேள்விகளை வைக்கத் தொடங்கினாள்….  கேள்வி கேட்கத் தொடங்கும் முன் மாறனின் ஒற்றைப் பார்வையில் நந்தினி அவன் அருகில் வந்து நின்றாள்….

       இருவருக்கும் அன்றைய அலைச்சலின் களைப்பு முகத்தில் தெளிவாக தெரிந்தது..  சொல்லு ஏதோ பேசணும் சொன்னியாமே என்ன விஷயம்  எதுவா இருந்தாலும் பேசி தெளிவுபடுத்திக்கோ…  உன்னை நீயே குழப்பிக்காதே கேளு…. என்றான் மாறன்…

        நீயும் உன் பொண்டாட்டியும் லவ் மேரேஜா என்று முதல் கேள்வியை அவர்களை நோக்கி வைக்கவும் மற்றவர்களுக்கு  அது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது…..

      ஆனால் மாறனும் நந்தினியும் அமைதியாகவே இருந்தனர்…..   மாறன் நிதானமாக பதில் சொன்னான்..  கண்டிப்பா இல்ல இது பியூர்லி அரேஞ்ச் மேரேஜ்…

      ஆனா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி தெரியல… அரேஞ்ச் மேரேஜ் பண்ணா இப்படியா இருப்பாங்க..

       அப்போதும் மாறன்தான் பதில் சொல்லத் தொடங்கினான் ஏன் இருக்க மாட்டாங்க…. கல்யாணத்துக்கப்புறம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு காதல் பண்றவங்க இல்லையா… நாங்க அந்த கேட்டகிரி… என்றான்…

     பணம்தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்தது ன்னு சொல்ல முடியாது இல்லையா….  அவளும் வசதியான வீட்டுப் பொண்ணு….  நீயும் இப்ப நல்ல யர்ன்  பண்ற….   பொதுவா காதல் இல்லாட்டி பணம் தான் ஈர்ப்பு க்கு காரணமா இருக்கும்…உங்களுக்கு காதலும் இல்ல அப்ப பணமும் இல்லனா எப்படி…

      அங்க தான்மா பொண்ணுங்க எல்லாமே தப்பா புரிஞ்சிருக்கிறீங்க பணம் சம்பாதிச்சு போட்டா தான் அன்பாய் இருக்க முடியும் பணத்தை வைத்து மட்டும் தான்  முடிவு ன்னு நினைச்சா அது  எவ்வளவு பெரிய பிளண்டர் மிஸ்டேக் தெரியுமா…  இந்த ஊர்ல பாதி குடும்பம் தெருவுலதான் நிக்கணும்…. ஏன்னா நம்ம நாடு ஏழை நாடு….

        அன்பு என்கிறது மனசுல இருந்து வரணும்….  அதை பணத்தை வச்சு இல்ல… அழகை வைத்து வருவது கிடையாது… ஏன்னா நீ அடுத்து அதைதான் கேட்ப… உன் வொய்ப் அழகா இருக்கா  அதுனால யா அப்படிம்ப….

        உண்மைய சொல்லனும்னா எங்களுக்குள்ள இருக்குற அண்டர்ஸ்டாண்டிங் தான் காரணம்…  எந்த இடத்திலேயும் என்னால அவள விட்டுக்கொடுக்க முடியாது அதே மாதிரிதான் அவளும்…  அதனால கூட எங்களுக்குள்ள அன்பு அதிகமாக இருக்கலாம்…  மே பி கல்யாணம் முடிஞ்ச உடனே நாங்க அதிகநாள் பிரிஞ்சி இருந்துட்டோம்…. அந்த பிரிவு கூட எங்களுக்குள்ள அன்ப அதிகப் படுத்தி இருக்கலாம்….

Advertisement