Advertisement

 

அத்தியாயம் 12

 

   “கருணையான வார்த்தைகளை அருட் சூழலை பெருக்கலாம்….

    காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத்  தவிர்க்கலாம்…..

    தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்….”

    காலை எழும்பும் போது… அவன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளுக்கு… இரவு அணைப்பில் தூங்கியது நினைவு வந்தது…. அப்போது கூச்சமாக உணர்ந்தவள்.. இப்போது இருக்கும் நிலை சிரிப்பு தான் வந்தது…. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனை சற்று நேரம் ரசித்து பார்த்தாள்….

        திருமணத்திற்கு பிறகு அவனது முகத்தை நேருக்கு நேர் ரசித்தாள்…. கனவோ என்று சந்தேகம் வந்தது… தூக்கத்திலும் இறுக்கமாக அவளை பிடித்த கை அது கனவில்லை என்பதை அறிவுறுத்தியது…. எப்போதும் போல முழிப்பு வந்ததால் கண்விழித்துப் பின்னும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் மீண்டும் கண்மூடி அவன் அருகாமையை ரசித்து கொண்டாள்…

         சிறிது நேரம் கழித்து  அவன் தூக்கம் கலையாமல் எழுந்தவள்…. குளித்து விட்டு வெளியே வந்தாள்…  வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையானதை கவனிப்பதில் சற்று நேரத்தை போக்கி விட்டு… வீட்டு ஆளாக வந்தவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து கொடுத்து விட்டு அறைக்கு வந்த போதும் மாறனின் தூக்கம் கலையவில்லை…. நேரம் எட்டரையை தாண்டவும்…. கதவை சாத்தி வைத்து விட்டு மெதுவாக அருகில் அமர்ந்து எழுப்பத் தொடங்கினாள்…

     மெதுவாக தோள் தொட்டு  அவனை அசைத்து மணி எட்டரை ஆயிடுச்சு…. எந்திரிங்க என்று சொல்லும்போதே லேசாக கண் திறந்து பார்த்தவன்…. அவள் இடுப்போடு வளைத்துக் கொண்டு அவள் மடியில் தலை வைத்து மறுபடியும் தூக்கத்தை தொடர தொடங்கினான்….

     நர்மதாவை கூட்டிக் கொண்டு வர வேண்டும்…. எழும்புங்க.,  என்று சொல்லி எழுப்ப தொடங்கினாள்…  கொஞ்சநேரம் அப்படியே படுத்து இருக்கேனே….

     இப்படி சொல்லி தான் காலைல எழுந்திருக்கிற வரைக்கும் உங்க கைக்குள் இருந்து இருக்கேன்…. இப்பவும் மா எந்திரிங்க…. கிளம்புங்க….

      ஏய்…. நிஜம்மாவா காலையில் வரைக்கும் உன்னை  விட்டு நகரவே இல்லையா….

      ஐயோடா ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்குரீங்க…. தூக்கத்துல கூட அவ்வளவு இறுக்கமாக பிடித்து வைத்திருங்க… காலையில் எழும்பும் போது உங்க கையிலிருந்து., உங்களை எழுப்பாம  நான் எழுந்து போகவே ஒரு வழியாகி இருக்கேன்… என்று சொல்லவும்… மேலும் இறுக்கிக் கொண்டான்….

      இப்ப எழுந்து குளிச்சுட்டு ரெடியா வாங்க… என்று சொல்லி அவனை கட்டாயப் படுத்தி எழுப்பி விட்டு விட்டு வெளியே போனாள்….

       குளித்து கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு நந்தனியை பற்றிய எண்ணமே  தோன்றியது….

      காயமும் அவள் தான்.,  மருந்தும் அவள் தான்… என்று.,

      அவன் வந்த உடன் காபி எடுக்க நந்தனி உள்ளே சென்றான்…..

     அவன் பின்னேயே  காபிக்காக வந்து கிச்சன் வாசலில்  நிற்கும் போது….

     அவள்  பாடலை ஹம் செய்து கொண்டிருந்தாள்…..

“உன் நெனப்பு

நெஞ்சு குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வழிதான்

சுகமா சுகமா

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே

காலம் தோரும்

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான் உறவா வரணும்

மறுபடி உனக்கென பிறந்திடும்

வரம் நான் பெறனும்”

அவள் முதுகு காட்டி நின்றபடி பாலைசூடு செய்து காபி கலந்து கொண்டு இருந்ததால் அவன் நின்றதை கவனிக்க வில்லை….  அவள் பாட்டை கேட்டவன் சத்தமின்றி திரும்பிச் சென்று ஹாலில் பேசிக் கொண்டு இருந்த வீட்டினருடன் அமர்ந்து கொண்டான்….

        விரும்புவதை விட விரும்பப்படுவது சுகம் என்று உணர்ந்தான்…..

         அவள் கொடுத்த காபியை வாங்கி அருந்திவிட்டு…. அவளைப் பற்றிய நினைவுகளோடு இருந்தான்…. மற்றவர்கள் பேசுவதில் அவன் கவனம் செல்லவில்லை… அப்போதுதான் மாறனின் அப்பா அவன் கவனமின்றி இருப்பதை கண்டு அவனைத் தோளில் தட்டி என்னடா சொல்றது புரியுதா என்று கேட்டார்……

      ம்ஹா…. என்னப்பா சொன்னீங்க என்று கேட்டான்…..

      என்னடா இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கோம்….. நீ என்ன யோசிச்சிட்டு இருக்க….

    அது ஒன்னும் இல்லப்பா ஆபீஸ்ல இருந்து மெசேஜ் வந்திருந்தது…. அதைப்பற்றி என்று பேச்சை மாற்றி  விட்டான்….

     எதுவும் பிரச்சனையா டா….

     அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா…. நீங்க விஷயத்தை சொல்லுங்க…..

     ச்சே….. டீன் ஏஜ் பசங்க மாதிரி…. என்ன  இது என்று யோசித்துக் கொண்டிருந்தான்…

     மீண்டும் பெரியவர்கள் பேச தொடங்கவும்…. அவன் கவனத்தை அங்கே திருப்பினான்….

     நர்மதாவை யார் சென்று மறுவீடு அழைத்து வருவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்…. பெரியவர்கள் நீ போறியா என்று மாறனிடம்  கேட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அவன் எந்த நினைவும் இல்லாமல் நந்தினியின் ஞாபகத்தில் அமர்ந்திருந்தது…. திரும்பவும் அதை பற்றி சொல்லவும்…..

     அவனோ தான் போவதில்லை என்றும் ஒன்று விட்ட  பெரியப்பா மகளையும்… அவள் கணவனையும் சென்று அழைத்து வரச் சொன்னான்….

     ஏன் என்று மற்றவர்கள் கேட்க…..

      சரண்யாவை காரணம் சொல்லிக் கொண்டிருந்தான்….. நான் போறதுனால மறுபடி பிரச்சினை வந்துவிடக் கூடாது.. நீங்க யாராவது போயிட்டு வாங்க என்றான்…..

     சரிடா… அவங்க போகட்டும் கூட நந்தினியும் போயிட்டு வரட்டும் என்று சொல்லும்போது.,  நந்தினி காலை உணவை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்…

       நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது…. அவ  நந்தினிய மரியாதை இல்லாம பேசுவா…. என்னோட வொய்ப் மரியாதை எனக்கு முக்கியம்….. இல்ல வேண்டாம் நந்தினி அங்கு போக வேண்டாம் என்பதோடு முடித்துக் கொண்டான்… நான் வேணும்னா நர்மதா க்கு போன் பண்ணி சொல்லிடுறேன்….

       நந்தினியோ தேவகியை பார்க்க…. தேவகியும் மாறன் சொல்வதுதான் சரி என்று கூறினார்……

      நர்மதாவிடம் பேசிய மாறன் அழைக்கவரும் அக்காவுடன் கிளம்பி வரும்படி கூறினார்…  நாங்கள் வரவில்லை வந்தால் பிரச்சினை வரும் என்று  தான் சொல்றேன் என்றான்….  சரி என்று அவளும் ஒத்துக் கொண்டதாக வீட்டில் கூறி கொண்டிருந்தான்….

       நர்மதா வந்த பிறகு அனைத்தும் சந்தோஷமாகவே சென்றது…. அவள் மகிழ்ச்சியாக இருப்பது போலவே தெரிந்தது பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்….

       நர்மதா உடன் பெரியம்மா மகளும் தேவகியும் தனியே அழைத்து சென்று பேசினர்…  அதன்பிறகு சாதாரணமாக இருந்தார்., அது வரை அவர்களின் மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது….

    நந்தினி அதிகமான தலையீடு இல்லாமல் மற்ற வேலைகளை இழுத்துப் போட்டு தன்னை அதற்குள் மூழ்கடித்துக் கொண்டாள்…

   பின்பு நர்மதா நந்தினியிடமிருந்து அண்ணி பேசவேண்டுமே என்றால்…

    கொஞ்சம் இருக்கியா நர்மதா… ஹெல்ப் க்கு ஆள் வந்திருக்காங்க அதோட எல்லாத்தையும் கொஞ்சம் கிளீன் பண்ணிட்டு வந்திடுறேன்….  ஏன்னா கல்யாணத்திற்காக 3 நாளுக்கு முன்பு இருந்து வீடு உண்டு., இல்லை., என்றாகிவிட்டது. இப்பவும் க்ளீன் பண்ணாம இருந்தா நல்லா இருக்காது….. வெயிட் பண்ணுறீயா… என்றாள்.

     ஒன்னும் அவசரம் இல்ல அண்ணி நானும் வேணா வரவா என்றாள்….

     நீ ஒன்னும் செய்ய வேண்டாம்… நான் பார்த்துகிறேன் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு நான் வந்துடுறேன்…..

     ஓரளவு ஆட்களை வைத்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்து வேலைகளை எல்லாம் முடித்த பின்னர் நர்மதாவுடன் பின்புறத் தோட்டத்தில் அமர்ந்து பேசத் தொடங்கினாள்….

     சொல்லுடா… ஏதோ பேசணும் என்று சொன்னியே…..

    காலையில அந்த அண்ணன் கூப்பிட்டு பேசினாங்க அண்ணி…. இன்னைக்கி சரண்யா ட்ட பேசி பாக்குறேன் சொல்லியிருக்காங்க…. பேசிட்டு நாளைக்கு இங்க ஏதோ பங்க்ஷனாமே வருவாங்களாம் அப்ப சொல்லுறேன்..  அப்படின்னு சொன்னாங்க….

      ஒஒஒ.. சரி டா….

     அத்தைக்கு தான் ஒரே வருத்தம்…. சரத்  கண்டுக்கவே இல்ல அவ குணம் இப்படி இருக்கும் னு நினைக்கல அப்படின்னு மட்டும் தான் சொன்னாங்க….. என்றாள்..

    எல்லாம் போகப்போக சரியாகிவிடும்… நீ சண்டை போட்டதாக இருக்கக் கூடாது… சரண்யா பேசினால் கூட நீ  வார்த்தையை விட்டு விடாதே….  ஏன்னா சொந்தம் என்பது சண்டை போட்ட உடனே முடிஞ்சு போற ஒரு விஷயம் கிடையாது… நீ பேசாம இருந்தா கூட நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கணும்… அதுக்காகவாவது அதிகம் பேசாம இருக்க கற்றுக்கோ…..

     அதற்காக அவள் மட்டமாக பேசினால் நான் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா…..

     நீ என்ன  சின்னப் புள்ளை மாதிரி பேசுற அடுத்தவங்க செய்றாங்க அப்படிங்கிறதுக் காக அந்த தப்பயே நம்மளும் செய்யணுமா..

     அண்ணி…

     புரிஞ்சி நடந்துக்க…. சரத் மட்டும் போதும் ன்னு நினைக்கிறீயா என்ன….

    அப்படி எல்லாம் இல்ல அண்ணி….

    அப்புறம் என்ன பேச்ச விடு., விட்டுக் கொடுத்துப் போக கத்துக்கோ…. அப்ப தான் சொந்தம் நிலைக்கும்… எதுவா இருந்தாலும் இங்குள்ள விஷயத்தை அங்கு சொல்லாத…  அங்குள்ள விஷயத்தை இங்க சொல்லாத… ரெண்டு குடும்பமும் முக்கியம்., அதற்காக உனக்கு ஒரு கஷ்டம்னா சொல்லாம இருந்திராத அதை எப்படின்னாலும் அம்மா அப்பா ட்ட அல்லது உங்க  அண்ணா ட்ட  சொல்லிவிடு.., முதல் கோணல் முற்றும் கோணல் ன்னு ஆகிறக் கூடாது பாத்துக்கோ….

       புரியுது அண்ணி பார்த்து நடந்துப்பேன்…

      நல்ல மருமகளா பேர் வாங்கு., அதுதான் உங்க அம்மா அப்பாவுக்கு பெருமையான விஷயம்…. வெளி  இடங்கள்ள  பொண்ண கொடுத்துட்டு பிரச்சனை வருகிறது., சாதாரணமா இருக்கு இப்ப எல்லாம்… ஆனால் சொந்தத்தில் பொண்ண குடுத்துட்டு கெட்ட பேர் வாங்கறது ரொம்ப அசிங்கம் பாத்துக்கோ., எல்லாம் உன் கையில தான் இருக்கு, இது நீ ஆசைப்பட்ட வாழ்க்கை நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டும்….

      கண்டிப்பா அண்ணி….

      பிடிக்காத விஷயங்களை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுட்டு.  மனசுல போட்டு குழப்பாதே எந்த ஒரு விஷயமும் மனநிறைவோடு செஞ்சா தான் நல்லா இருக்கும்.  அது மாதிரிதான் வாழ்க்கையும் மனசு நிறைய சந்தோஷத்தையும் அன்பையும் மட்டும் வச்சுக்கோ நிச்சயமா லைஃப் நல்லா இருக்கும்…

     சில சமயங்கள்ல காரணமே இல்லாம சிலரை வெறுப்போம்…. இந்த மாதிரி நேரத்துல உன் மனசை கண்ட்ரோல் பண்ண கத்துக்கனும்… எல்லோரும் எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான்…. நீ கொடுக்கறது தான் உனக்கு திரும்ப  கிடைக்கும் அதனால அன்பை மட்டும் கொடு…. அன்பை மட்டும் வாங்கிக்கோ…… வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்…..

      புரியுது அண்ணி நானும் சரண்யா என்கிட்ட அன்பா இருக்கணும் தான் எதிர்பார்க்கிறேன்… ஆனா அவ தான் கோபப்படுறா….

           நீ திரும்பத் திரும்ப அன்பு மட்டும் கொடுக்கும் போது அந்த கோபம் எத்தனை நாளைக்கு இருக்கும் ஒருநாள் அதுவும் காணாமல் போகும்  இல்ல…. அதுக்காக உன்ன அடிமையாய் இருக்க சொல்லல… அன்பா இரு….

         தேங்க்ஸ் அண்ணி….

          சற்று நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போதே சரத் நர்மதாவை தேடி வரவும்…. நந்தினி எழுந்து உள்ளே போனாள்….

         மாறனோ… மறுநாள் விருந்திற்க்கான ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தான்… பெரியவர்களின் மேற்பார்வையில்… யார் யாரை விருந்திற்கு அழைக்க வேண்டும் என்று மாறனின் அப்பா  மற்றவர்களிடம் ஆலோசித்து கொண்டிருந்தார்….

         மறுநாள் விருந்திற்காக முதல் நாள் இரவு மாறனின் நண்பர்களும் வந்து சேர்ந்தனர்… அவர்களின் மனைவிகள் காலையில் வருவதாகவும் தாங்கள் மட்டும் மாறனிடம் பேச வேண்டியது இருப்பதால் இரவு வந்ததாகவும் சொல்லிக்கொண்டு இருந்தனர்…. பின்பு அனைவரும் இரவு உணவிற்கு பின்பு மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர்….

      நண்பர்களோடு பேசப்போகும் முன் நந்தினியிடம் வந்து நின்றான் மாறன்…

      என்ன வேணும்….. உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க போங்க… இங்க என்ன பண்றீங்க….

     நான் உன் கூட இருக்கணும்னு நினைச்சேன்… பட் திடீர்னு ப்ர்ண்ட்ஸ் வந்துட்டாங்க…. போகட்டுமா என்று கேட்கவும்….

    உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று அவள் கேட்கவும்…. புரியாத ஒரு பார்வை பார்த்தான்….

      எல்லோரும் கிண்டல் பண்ற மாதிரி நடக்காதீங்க…. போங்க முதல்ல…. என்னதான் தப்பா நினைப்பாங்க… யோசிக்க மாட்டீங்களா….

     கொஞ்சம் வந்து எங்களுக்கு தேவையான பில்லோஸ்., பெட்ஸிட் ., எடுத்துகொடுத்துட்டு போ…. என்கவும்….

     அவள் எடுத்து கொடுக்கவும்… மாறனின் நண்பர்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்… மாறன் அறையில் இருக்க நந்தனி அவனிடம் போய்., நீங்க கேட்டது எல்லாம் எடுத்துக் கொடுத்தாச்சி…. அந்த அண்ணாஸ் எல்லாம் மாடிக்கு போயாச்சு., நீங்க மாடிக்கு போகும் போது தண்ணி எடுத்து வச்சிருக்கேன்., அதை எடுத்துட்டு போங்க… என்கவும்….

     ம்ம்ம்… சரி என்ற படி அறையின் கதவு வரை வந்தவன்…. கதவை அடைத்து விட்டு அவள் எதிர்பார்க்காத நேரம் இழுத்து அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்…. அதன் பிறகும் கன்னத்தில் இருந்து உதட்டை எடுக்காமலே… நாளைக்கு விருந்து முடிந்த பிறகு உன்ட்ட பேசணும்…. நாம நாளைக்கு மொட்டை மாடிக்கு போயிருவோம் என்றான்…

   அவளால் பதில் பேச முடியாமல் தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவித்தாள்… மீசையின் குறுகுறுப்பு அவன் விலகிய பிறகும் கன்னத்தில் கோலம் போட்டு கொண்டிருந்தது….. அவளை நினைத்து சிரித்துக் கொண்டாள்….

     மாடியில் நண்பர்களுக்கு உண்டான கலகலப்பான பேச்சோடு நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது….

     அவளை அழைத்து செல்லும் முன் அவளுடைய வீட்டில் ஒரு நாள் தங்கும் படி கூட்டிப் போகவேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்…. இன்று தான் அதை உணர்ந்து கொண்டதாக கூறினான்….

       ஏன் என்று கேட்ட நண்பர்களிடம்…. திருமணம் முடிந்து தாய் வீட்டுக்கு வரும் பெண்ணின் சந்தோஷம் என்பது அந்த பெண் வீட்டின் மொத்த மகிழ்ச்சி என்பதை புரிந்து கொண்டதாக கூறினான்….

     அது சந்தோஷமா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்…. நந்தினி சந்தோஷமா இருக்களா…. எங்க உன் மனசு தொட்டு சொல்லு….

      தப்புதாண்டா….  ஆனால் இனிமேல் கண்டிப்பா சந்தோஷமா இருப்பா…. நான் சந்தோஷமா பார்த்துக்கிறேன்….

     இத நம்ப சொல்றியா….

     அவ சந்தோஷத்துக்கு…. நான் கேரண்டி ன்னு  எழுதி தரணுமா…. இத….

       லூசா டா நீ…..  நீங்க சந்தோஷமா இருந்தீங்கன்னா அதை விட எங்களுக்கு என்ன வேணும்…..  அவளை சந்தோஷமா பாத்துக்கோ….  அதுலதான் உன் சந்தோஷம் இருக்கு….

     அதன்பிறகு திருமணத்தன்று  நர்மதா வீட்டில் நடந்த பிரச்சினைகளை பேசிக்கொண்டிருந்துவிட்டு….  நண்பர்கள் சேர்ந்தால் விடியும் நேரத்தில் தான் உறக்கம் என்பதை புரிய வைத்தனர்…..

    விடியல் என்ன வைத்து இருக்கிறது என்று யாருக்கு தெரியும்…..

“என்னுடைய சூழலை நானே உருவாக்குகிறேனே தவிர., என்னை எந்தச் சூழலும் உருவாக்குவது இல்லை” என நெப்போலியன் உறுதியாக கூறினார்…

நாம் வாழும் சூழலை படைக்கும்திறன் நமக்கு இருக்கும் போது விதியை நாம் குறை கூறக்கூடாது….

“விதியை குறை கூறாதே., உன்னை நீயே குறைகூறு” என்கிறார்   எமில் கூவே…..

Advertisement