Advertisement

அத்தியாயம் 11

 

“எழுச்சியான வார்த்தைகள் வெற்றியை தரலாம்….

ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்….

கனிவான வார்த்தைகள் உயிரை காக்கலாம்….”

       தம்பி என்று அவசரமாக கதவை தட்டும் சத்தம் கேட்கவும்…  மயக்கத்தில் இருந்த இருவரும் மீண்டு வந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெட்கம் கலந்த சிரிப்புடன் நகர்ந்து நின்றனர்….

   அவள் அவசரமாக கதவை திறக்க நகரவும் நந்தினி என்றபடி கையை பிடித்து இழுத்து நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து கலைந்து நெற்றியில் கிடந்த முடியை ஒதுக்கி விட்டு போய் கதவை திற இப்ப வந்துடறேன் என்றபடி உடை மாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டான்….

         உடை மாற்றாமல் இருந்ததால் வேகமாக சென்று கதவை மட்டும் திறந்தாள்..  என்ன அத்தை என்று கேட்டபடி.,

         என்னடா நந்தினி டிரஸ் கூட மாத்தலையா என்று சாதாரணமாக விசாரித்தாலும் தேவகியின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது…..

        இப்பதான் அத்தை., ரூமுக்கு வந்தேன்… என்ன விஷயம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்றாள்…..

     அதற்குள் மாறனும் வந்துவிடவே….

     என்னம்மா என்ன விஷயம் என்றான்…

     டேய் அங்க நர்மதா வீட்டுல ஏதோ பிரச்சனையாம்  சரண்யாவுக்கும், நர்மதா விற்கும் சண்டையாம் உங்க அத்தையும் உங்க அக்காவும் போன் பண்ணி சொன்னாங்க அங்க போகணும் வா என்றபடி நின்றார்…..

     என்னம்மா இது., இப்போ போய் சண்டை போட்டுட்டு இருக்கா ன்னு சொல்றாங்க.,

     தெரியல டா அப்பா கிளம்பிகிட்டு இருக்காரு நீ வா போலாம் என்றபடியே நின்றார்…. அவருடைய பதட்டம் அறிந்தவளாய் நந்தினி தண்ணீர் எடுத்து குடிக்க வைத்து ஒன்றுமில்ல அத்தை நாம  போலாம் வாங்க என்றாள்…

      அதற்குள் வீட்டில் இருந்த மற்ற உறவினர்களும் எழுந்து விட மற்றவர்களை வீட்டில் வைத்து விட்டு அவர்கள் நால்வர் மட்டும் அங்கு சென்றனர்….

     மணி இரவு பதினொன்றை தொட்டு இருக்க…   இரு பெண்களும் கோப முகத்துடனும் இருந்தனர்….

        இவர்கள் போய் சேர்த்தவுடன்சரண்யா சத்தமாக பேச தொடங்கினாள்…. இந்த பிரச்சனையை  உடனே சொல்லிட்டீங்களா  எதுக்கு இங்க வந்தாங்க என்று கேட்டாள்…..

     நர்மதாவின் அத்தை சரண்யாவை சத்தம் போட்டார்… நீ வாய மூடு எல்லா பிரச்சனையும் உன்னால்தான்….  வந்தோமா….  போனமான்னு  இருக்கணும் அத வுட்டுட்டு தேவையில்லாத வேலை பாத்துட்டு இருக்கே…. அதுதான் அவர்களை வரச் சொன்னேன்… அவங்க வீட்டு பொண்ணு வந்த உடனே நீ பிரச்சினையை ஆரம்பித்து இருக்க…. பொண்ணு மாதிரியா இருக்க உன் புத்தி ஏன் இப்படி மாறுச்சி என்றார் கோபத்துடன்….

      அதுவரை அமைதியாக இருந்த சரண்யாவின் கணவன்.,  உங்க பொண்ண பத்தி குறை சொல்ல கூடாது ன்னு தான் இவ்ளோ நாள் சொல்லல இப்ப புரியுதா இவ எங்க வீட்லயும் இப்படித்தான் நடந்துக்கிறா….  அவ  இஷ்டம் இல்லாமல் ஏதாவது ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அதை பெரிசாக்கி அது ஒரு பெரிய பிரச்சினையாகி உண்டு இல்லை ன்னு… ஆக்கிருவா…..   நான் சொல்ல முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன் நீங்க சொல்லிட்டீங்க அவ்வளவு தான்…. குழந்தை இருக்கும் ஒரே காரணம் தான்… உங்க பொண்ண கண்ட்ரோல் பண்ணவே முடியலை…. நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் எங்க வீட்டிலேயும் என் தங்கச்சி கிட்ட இப்படிதான் நடந்துக் கொண்டாள்…..

        ஒரே பொண்ணு ன்னு செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்…. அது இப்படி ஆயிடுச்சே மன்னிச்சுக்கோங்க மாப்பிள்ளை என்று சரத்தின் அப்பா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்….

           அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தேவகியும் என்ன பிரச்சனை என்று கேட்கவும்., நர்மதா கண்கலங்கியவாறு சொல்லத் தொடங்கினாள்.,

     இங்கு சரத் வீட்டுக்கு வந்த பிறகு நர்மதா அவளுக்கான துணிகள் அனைத்தையும் அவளுக்கு என்று கொடுக்கப்பட்டிருந்தால் பீரோவில் அடுக்கி வைத்திருந்தாள்…. பிறகு இரவு உணவிற்காக அனைவரும் சாப்பிட சென்று விட்டு  வந்தவுடன் சடங்கு சம்பிரதாயத்திற்காக அவளை தயார் செய்து., அதன் பின்பு அவளை அறைக்கு அனுப்பும் போது தான் அவளுக்கு தெரியும்..,  திருமணத்திற்கான சேலை எடுக்கும்போது அவள் ஆசைப்பட்டு எடுத்த புடவையின் முந்தானையை தனியாக வெட்டி எடுத்து வைத்து இருந்தது…. அதை பார்த்த உடன் கோபப்பட்டு கேட்கவும் சரண்யாவும் நான் தான் வெட்டினேன் என்று பிரச்சினையை தொடங்கியிருக்கிறாள்….

      இவள் எப்படி  ரூமுக்கு வந்து என் பீரோவை திறந்தாள்…. அதுமட்டுமில்லாமல் என்னுடைய துணிகளை இவள் எதற்கு எடுத்தாள்  என்று நர்மதா பேச தொடங்கினாள்…

        அனைவரும் இருக்கும்போதே சரண்யா பதிலுக்கு கத்தத் தொடங்கினாள்…. இது எங்க அம்மா வீடு… நான் அப்படித்தான் செய்வேன்… அந்த புடவைய உனக்கு எப்படி ஒழித்து மறைத்து எடுத்து தருவாங்க அதனால்தான் அந்த சேலையை வெட்டினேன் என்று கத்தினாள்…..

      அதை நான் ஆசைப்பட்டு செலக்ட் பண்ண புடவை….. ஒழிச்சி மறைச்சு எல்லாம் எடுக்கல….  நான் அந்த சேலையை புடிச்சிருக்குன்னு சொன்னேன் அதனால எங்க அண்ணி எடுத்து கொடுத்தாங்க…

      ஷ்ஷ்…. நர்மதா… என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி இதுக்கு போய் சத்தம் போட்டுட்டு இருக்க… அந்த சாரி நான் சரி பண்ணி வாங்கி தரேன் கொடு என்று நந்தினி நர்மதாவை சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்……

      நந்தினி பேச தொடங்கவும்…. அவளும் உடனே சேலை விஷயத்தை விட்டுவிட்டு நந்தினிக்கு தாவினாள்….

       ஓஹோ எல்லாம் உன் ட்ரெயினிங் தானா….. எப்படி வீட்டில் உள்ள எல்லாரையும் கைக்குள் போடனும் ன்னு சொல்லி கொடுத்திருக்கிறயா…. புருசன எப்படி பின்னாடியே சுத்திகிட்டு இருக்க வைக்கிறது ன்னு சொல்லிக் கொடுத்துட்டீயா…. வேற என்ன எல்லாம் சொல்லிக் கொடுத்த…. என்றால் மரியாதை இல்லாமல்…..

      இந்த பாருங்க சரண்யா…. நீங்க தேவை இல்லாம பேசுறீங்க… முதல்ல இப்போ இந்த நேரத்துல இது தேவையில்லாத விஷயம்….

      அப்போ இப்போ உன் நாத்தனார அனுப்பி எங்க அண்ணனை மயக்கணும் ன்னு சொல்றீயா…..

        தயவு செய்து இப்படி பேசாதீங்க…  ரொம்ப அசிங்கமா பேசுறீங்க…  நீங்க கல்யாணமான அன்னைக்கே ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் குடும்பத்தில் உள்ளவங்க நடந்துப்பாங்களா….   நீங்களும் இன்னொரு வீட்டுக்கு கல்யாணமாகி போனவங்கதான் ஏன் இப்படி பேசுறீங்க என்றால் சாதாரணமாக…..

        நந்தினி பொறுமையாய் பேசிக் கொண்டு இருப்பதனால் அனைவரும் அமைதியாக இருந்தனர்…. சரண்யாவின் கணவனும் சரண்யாவை வாயை மூடும் படி சொல்லிக் கொண்டிருந்தான்…..

      ஓஹோ…. அப்போ என்ன நீ வேற வீட்டுக்கு போனவ ன்னு  சொல்ற அப்படித்தானே என்று ஏக வசனத்தில் பேச்சை தொடங்கினாள்….

     அவள் பிரச்சினை செய்வதற்கென்று பேசுகிறாள் என்று தெரிந்தவுடன்., நந்தினி பேச்சை நிறுத்திவிட்டு நர்மதாவிற்க்கு அறிவுரை சொல்லத் தொடங்கினாள்….

      நர்மதா சொன்னா கேப்பீயா இல்லையா…

      என்ன அண்ணி…..

    ரூம்மிற்கு போ….. அந்தக் கட் ஆன சாரியை எடுத்து தா…. உனக்கு நான் வெளியே கொடுத்து சரி செய்து தருகிறேன் என்றாள்…..

     அத்தோடு விட்டிருந்தால் பிரச்சினை அதோடு முடிந்து இருக்கும்…, சரண்யா மேலும் பேச தொடங்கினாள்…..

       ஏன் நீ 13 நாட்ள  உன் புருஷனை கைக்குள்ள வச்சிருக்க இல்ல…. அதே மாதிரி உன் நாத்தனாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறீயா என்று பேச தொடங்கினாள்…

       இம்முறை தேவகி பேசத்தொடங்கினாள் இங்க பார் சரண்யா நான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தேன்… நீ சேலையை வெட்டி இருக்க., சரி இருந்தாலும் நீ என் நாத்தனார் மக அதனால நான் அமைதியா இருக்கேன்., ஆனா அதே மாதிரி என் மருமகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்…. தேவையில்லாமல் பேசாதே என்று அவள் இரண்டு தடவை சொல்லிட்டா…. திரும்பத் திரும்ப அதையே பேசிடிருக்க படிச்ச புள்ளை மாதிரியா  இருக்க நீனு…..

      உங்களுக்கு உங்க மகன் அவ பின்னாடி சுத்துறது  இப்ப தெரியாது நாளைக்கு உங்களை பார்க்காமல் விடுவாம் இல்ல அப்ப தான் தெரியும் என்று சம்பந்தமே இல்லாமல் பேச தொடங்கினாள்….

     ஏம்மா என்ன பேசிகிட்டு இருக்க… சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க வாய மூடிட்டு போ… வந்த அன்னைக்கே வீட்டுக்கு வந்த வாழ வந்த பிள்ளையை வாழவிடாமல் சண்டை போட்டு  இருக்க என்ன பொண்ணு மா நீ  என்று சரத் ன் அப்பா வழி குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவர் பேச தொடங்கவும்…….

      தாத்தா…  நீங்க சும்மா இருங்க சரியான வெக்கங்கெட்ட குடும்பத்துல போய் பெண்ணடுத்து இருக்காங்க….

     மற்றவர்கள் பேசும்போது இம்முறை நர்மதா கத்தத் தொடங்கினாள்….யாரை பார்த்து வெட்கம் கெட்ட குடும்பம் ன்னு சொல்லுற…..

     நர்மதா பேசிக்கொண்டிருக்கும் போதே மாறன் பேசத்தொடங்கினான்… நர்மதா வாயை மூடு காரணமே இல்லாம பிரச்சினையை இழுத்து விட்டு இருக்கா அவ கொஞ்ச நட்டு கழண்ட கேஸ் ன்னு நினைக்கிறேன் நீ போ முதல்ல…. இங்கே நிற்காதே…..

      இவ்வளவு பிரச்சனை நடக்கும்போதும் சரத் அமைதியாகவே இருந்தான்…. ஆனால் அவனது பார்வை ஒரு ஆராய்ச்சியுடன் இருந்தது……

      மாறன் சத்தம் போட்டவுடன் நர்மதா அமைதியாக.,  சரண்யா மீண்டும் தொடங்கினாள்…

       யாரைப் பார்த்து நட்டு கழண்ட கேஸ் என்ன சொல்லுத….. உன்ன மாதிரி நினைச்சியா இன்னைக்கு கல்யாண மண்டபமே பார்க்க பொண்டாடி பின்னாடி சுத்திகிட்டு திரிஞ்ச  இல்ல…. என்ற கேள்வியோடு மேற்கொண்டு பேசத் தொடங்கும் முன்., மாறன் குறுக்கிட்டு பேசத் தொடங்கினான்….

       உனக்கு கன்ஃபார்மா தெரியுமா.,  மண்டபத்தில் எல்லாரும் பார்த்தார்களா., ஏன் கேட்கிறேன் ன்னா…. அது பைத்தியக்காரத்தனம் யாரும் சொல்ல மாட்டாங்க…. வெட்கம் கெட்ட தனம் ன்னு சொல்ல மாட்டாங்க… ஏன்னா நான் சுத்தினது என் பொண்டாட்டி பின்னாடி தான்…  அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி சுத்தினா தான்  தப்பு…..

       13 நாட்ள சுத்த வைச்சுட்டா ன்னு…. பெருமையா பேசுவாங்களா….  இல்ல வசதியான வீட்டுப் பொண்ண எடுத்துட்டு அவ பின்னாடி தாங்கிட்டு அலையுதா ன்னு  பேசுவாங்களா என்றாள்…..

       சற்று நேரம் அமைதியாக இருந்த மாறன்…. நிதானமாக அழுத்தமான குரலுடன் யார் எப்படி நினைத்தாலும் எனக்கு அதை பத்தி கவலை கிடையாது…. உன் வேலையே பாத்துட்டு போ…. என் வீட்டு விஷயத்தில் தலையிட  உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தா…..

      ஏன் சொல்ல மாட்டே இதே மாதிரி நாளைக்கு உன் தங்கச்சி எங்க அண்ணன மயக்கி கொண்டு போயிட்டா ன்னா…..

    மாறன் பேச தொடங்கவும்…. சரத் அவனே அமைதிப்படுத்திவிட்டு அவன் பேச தொடங்கினான்….  அந்த மாதிரி நர்மதா என்னை மயக்கினா சந்தோஷமா மயங்கி பின்னாடி போவேன்.., நீ சொல்ற மாதிரி தப்பான விதத்துல  மயங்கிபோய் இருக்கலை  உண்மையான அன்பு…. அது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது… அசிங்கமா மட்டும் தான் தெரியும்…. உன்னை எல்லாம் கூடப் பிறந்தவ  சொல்றதுக்கே வெக்கமா இருக்கு என்ன பேச ன்னு அமைதியா இருந்தேன்… சேலையை கட் பண்ண அப்பவே உன்னை நாலு அரை விட்டு இருக்கணும்…  தப்பு பண்ணிட்டேன்….  சரி இப்பவும்   கூட பிறந்தவா நாம விட்டு கொடுக்க  கூடாதுன்னு பார்த்து விட்டா ஓவரா பேசுற….

இத்தோட நிறுத்திக்கோ…. இனி பேசினா உனக்கு இருக்கு பாத்துக்கோ….

       சரண்யாவின் கணவர் அவனைத் தொடர்ந்து பேசத் தொடங்கினார்…. நான் இந்த முறை அவளை இங்கே விட்டு செல்வதாக தான் இருந்தது அவ கொஞ்சம் சரி இல்லாத மாதிரி இருக்கு…. நீங்க டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் அவளுக்கு ட்ரீட்மெண்ட் பாருங்க….  எப்ப பாத்தாலும் சண்டை தான்…. நானும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா போறது….. சரி ஆனதுக்கப்புறம்  நான் கூட்டிட்டு போறேன் என்று அவன் பேசினான்….

       என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்க என்று அதிர்ச்சியாக சரண்யாவின் தந்தை கேட்க….

     எங்க வீட்ல இதே மாதிரி ரெண்டு மூணு தடவை பிரச்சினை பண்ணிட்டா நானும் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்திற்காக  அவங்க கிட்ட விட்டுக்கொடுக்காமல் பாத்துட்டு வரேன்…

இந்த கல்யாணமான பொண்ணுங்களுக்கு எல்லாம் ஹஸ்பண்ட் வீட்டைப் பார்த்தா பிடிக்காதாம்….. ஒருவேளை இவளும் அப்படித்தானோ நினைச்சு விட்டுக் கொடுத்து போனேன்….. இப்பதான் தெரியுது இவ எப்பவுமே இப்படித்தான்….. எல்லார்கிட்டயும் இப்படித்தான் ன்னு….. சரி பண்ணி அனுப்புங்க……. இதே  இது உங்க வீட்டுக்கு வந்த மருமகள் இப்படி இருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க என்று மட்டும் யோசிங்க…….. நானும் ரெண்டரை வருஷம் ஆகுது விட்டுக் கொடுத்து தான் போறேன்… ஆனா அதுக்கும் ஒரு அளவு இருக்கு இல்ல.. இதுவே கொஞ்சம் நாட்ள எனக்கு வெறுப்பா மாறிவிடக்கூடாது…… அதனாலதான் சொல்றேன் என்று சொல்லி விட்டு அமைதியானான்…

       அதே நேரம் சரண்யா திரும்பவும் கத்தத் தொடங்கினாள்… என்ன பாத்து ட்ரீட்மெண்ட் எடுக்க சொல்றியா…. என்ன பாத்தா உனக்கு பைத்தியமா தெரியுதா….  உன் வீட்டுக்கு அடிமையா வரணும் நினைக்கிறாயா… பேசிக் கொண்டிருக்கும் போதே சரண்யாவின் அம்மா அவளை அடித்துவிட்டார்…..

    உன்ன ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன் நினைக்கேன்… நீ இப்படி இருப்ப ன்னு…..  நான் நினைக்கவே இல்ல ஒழுங்கு மரியாதையா நாளைக்கு என்கூட வர்ற இல்லன்னா உனக்கு இருக்கு….

   அப்ப நீயே என்ன பைத்தியம் ன்னு சொல்றியா மா……

     நீ பைத்தியமா இல்லையான்னு டாக்டர் சொல்லட்டும்…. நீ என்கூட வா என்றதோடு பேச்சை நிறுத்தி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு நின்றார் சரண்யாவின் அம்மா……

    நர்மதாவின் வீட்டாரும் சரி… வீட்டில் இருந்த மற்றவர்களும் சரி…  சரிமா விடு இத பெரிய பிரச்சினையாக மாத்தாதே என்று பேசிக் கொண்டிருந்தனர்….

    சரண்யாவை அவளது அறைக்கு அழைத்துக்கொண்டு சென்ற பிறகு….

நர்மதா வையும் அவளது அறைக்குப் போகச் சொல்லிவிட்டு….. அந்த கிழிந்தசேலையை எடுத்துக்கொண்டு மாறன் வீட்டினர் கிளம்பும் முன் நந்தினி சரண்யாவின் கணவனிடம் பேச வேண்டுமென்றாள்….

     கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே உங்களுக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா ரெண்டு பேரும் ஃப்ரீயா பேசுவீங்களா…. அவங்க மனசுல உள்ளதெல்லாம் உங்க கிட்ட சொல்லி இருக்காங்களா…. சொல்லுவாங்களா…

     இல்ல கல்யாணம் முடிஞ்ச புதுசில கொஞ்சம் கொஞ்சம் பேசுவா… நடக்கிறது எல்லாம் சொல்லுவா ஆனா அதுக்கப்புறம்  சொன்னது இல்ல…. எனக்கு கொஞ்சம் ஒர்க் பிஸி அதனால நானும் அதுக்கப்புறம் கேட்டுகிட்டது இல்ல…. அவளும் குழந்தை வந்ததுக்கப்புறம் குழந்தையோட ரொம்ப பிசியா ஆயிட்டா….

       சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க அவங்கள எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போயிட்டு வாங்க….

கொஞ்ச நேரம் அவங்க கிட்ட தனியா பேசுங்க., அவங்க மனசுல உள்ளதை எல்லாம் சொல்ல வைங்க.,நீங்க நினைச்சா முடியும்….

   அவங்ககிட்ட யாரும் அன்பாய் இல்லையோன்னு அவங்களுக்கு ஒரு பயம் வந்து இருக்கு… அதனால தான் அவங்க மத்தவங்களோட லைஃப் அ நோட் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க..

    அப்படி எல்லாம் இல்லைங்க…. அவ கேக்குற எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன்… அவளை நல்லபடியா தான் பாத்துட்டு இருக்கேன் அவளுக்கு இதுவரைக்கும் எந்த குறையும் வைத்ததில்லை…

   இந்த இடத்தில் தாங்க எல்லா ஆம்பளைங்களும் தப்பு பண்றீங்க… பொண்ணுங்களுக்கு வாங்கிக் கொடுக்கறதுல தான் மனசு நிறையும் நினைக்கிறேங்க  பாத்தீங்களா…  அன்புள தான் மனசு நிறையும் அவங்க மனச நிறைய வைப்பதற்கான வழிய பாருங்க…

     ஒரு ரெண்டு நாள் வெளியேகூட்டிட்டு போயிட்டு வாங்க… அதுக்குள்ள இங்க   உள்ளவங்களையும் புரியவைத்து மனசளவுல ரெடி பண்ணி விடுவோம்…  ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனீங்கன்னா இன்னும் ரொம்ப மனசளவுல நொந்து போயிடுவாங்க….  மருந்து நம்ம கையில தான் இருக்கு டாக்டர் கொடுக்குறதுல இல்லை… என் மனசுல பட்டதை சொல்லிட்டேன் முயற்சி பண்ணி பாருங்க இதுல சரியாகலை ன்னா நீங்க சொன்னபடி  கூட்டிட்டு போலாம்….. ஏதாவது தப்பா சொல்லி இருந்தா சாரி…

         இல்ல சரி தான் நீங்க சொல்ற மாதிரி முயற்சி பண்ணி பார்க்கலாம்….  ரொம்ப தேங்க்ஸ் ……

       பேச்சை முடித்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று விட்டு மாறன் வீட்டினர் வீட்டிற்கு வரும்போது ஒரு மணியைத் தாண்டியிருந்தது…..

      வந்த உடன் நந்தினி தேவகியிடம் சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்…

மாறன் வெளியே பேசிவிட்டு உள்ளே வருவதற்குள்  நந்தினி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்…

       அந்நேரத்திலும் குளித்து இரவு உடைக்கு மாறி வெளியே வரும்போது அறையில் மாறன் ஏதோ யோசனையில் இருந்தான்… அறைக்குள் வந்தவள் கண்ணுக்கு முதலில் யோசனையான அவனின் முகம்தான் தெரிந்தது….

     என்ன ஆச்சு… ரெப்பிரஷ் ஆகுங்க…. சூடா ஏதாவது குடிக்கிறீங்களா.., என்றாள்..

     பால் கொண்டு வா…. நான் குளித்து விட்டு வர்றேன்… என்றான்

     அவன் குளித்து விட்டு வரவும் சூடான பாலுடன் வந்து சேர்ந்தாள்…

      நர்மதா சம்மாளித்து விடுவாளா… முதல் நாளே பிரச்சனை… கொஞ்சம் டென்ஷனா இருக்கு….

    நாளைக்கு நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்…

    ம்ம் குடித்த கப்பை வைக்க அவள் போக போகும் போது… நான் போய் வைச்சுட்டு அம்மா அப்பா தூங்கிட்டாங்களா ன்னு பார்த்துட்டு வர்றேன்… என்ற படி வெளியே சென்றான்…

      அவன் வருவதற்குள்… எப்போதும் போல கீழே விரித்து படுத்து விட்டாள்….

    சற்று நேரம் கழித்து வந்தவன்… கதவை தாழ் போட்டு விளக்கை அணைத்து விட்டு… எதுவும் பேசாமல்  அவளை ஒட்டிய படி அவளருகில் படுத்து இறுக அணைத்து கொண்டான்…. அவள் உடம்பில் ஒரு நடுக்கம் வந்ததை அவனும் உணர்ந்தான்…

      சற்று நேரம் அமைதியாக இருந்தவள்…. நீங்க ரெஸ்ட் எடுங்க… வந்ததிலிருந்து சரியா தூங்கலை… எனவும்….

     சும்மா தான்… ஒண்ணும் பண்ண மாட்டேன்… நல்ல புள்ளையா இருப்பேன்… இப்படியே இருக்கேன்… கொஞ்சம் டென்ஷன் ஃப்ரீயா பீல் பண்ணுவேன்… என்று கேட்கவும்…..

          ம்ம்ம்…. என்றபடி  அவன் அணைப்பில் அடங்கியிருந்தாள்….

“உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே….!”

“இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.”

“அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.”

 

Advertisement