Advertisement

அத்தியாயம் 10

 

“அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கலாம்….

ஆறுதல் வார்த்தைகள் தற்கொலையையும் தவிர்க்கலாம்…..

இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கலாம்…..”

கோவிலில் வைத்து சந்தித்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டனர் பின்பு நர்மதாவின் படிப்பு முடியவும் திருமணம் என்று பேசி வைத்துக் கொண்டனர் இதற்கிடையில் இரு குடும்பத்திற்கும் இருந்த மனக்கசப்பு முற்றிலும் நீங்கி நல்ல சூழ்நிலையையும் சந்தோஷத்தை கொடுக்கும் படியே அமைந்திருந்தது….

நந்தினியைப் பற்றி பாராட்டும்படியாக நர்மதாவின் அத்தையும் பேசுவார்….

குடும்பத்த பிரிக்குற பொண்ணுங்கள தான் பார்த்து இருக்கேன்… அண்ணி ஆனால் உங்க வீட்டுக்கு வந்த மருமகள் தங்கம்…. பிரிஞ்சி இருந்த குடும்பத்தையும் சேர்த்து விட்டா பாருங்களேன் என்ற வார்த்தையே அடிக்கடி அவர் வாயிலிருந்து வரும்….

இப்போதெல்லாம் மாறன் அதிகமாக அவளை திட்டுவது இல்லை…. ஒன்று அவளைத் தேட தொடங்கிய தன் மனம் புரிந்ததால்…. இன்னொன்று தன் குடும்பத்தினருக்காக இறங்கி சென்று அவளே பேசியதால்…. அவன் நர்மதாவின் மனதை மட்டும் தான் அறியச் சொன்னான்… ஆனால் அவளோ இறங்கி சென்று சரத்திடமும்., அவன் அம்மாவிடம் பேசி திருமணத்திற்கு நல்லபடியாக ஏற்பாடு செய்ய ஆரம்பித்து வைத்தது… அவன் அதை பெரிய விஷயமாக நினைத்தான்… பேசாத அவர்களிடம் எப்படி பேசுவது திருமணத்தில் எப்படி முடிப்பது யாரை தூது அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்த சூழ் நிலையில் அவளே சென்று பேசியது அவனின் கோபங்களை குறைத்து வைத்தது…..

நர்மதாவின் படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் திருமண வேலைகள் மெதுவாகத் தொடங்கி இருந்தது.. இருந்தாலும் நந்தினி நர்மதாவையும் சரத்தையும் நேரில் வைத்துக்கொண்டே அளவோடு பேசுங்கள் என்று கட்டுப்பாடு வைத்திருந்தாள்… நர்மதா சரத்துடன் வண்டியில் செல்வதை அனுமதிக்க மறுத்துவிட்டாள்…. அது சரி என்றே நர்மதாவின் அப்பாவும் சொல்லி விட்டதால் அவர்கள் இருவரும் வெளியில் செல்வது தடுக்கப்பட்டது… மற்றபடி போனில் பேசுவதும் வீட்டிற்கு வந்து பார்த்து செல்வதும் எப்போதும் போலவே இருந்தது…

ஒரு நாள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நந்தினி நர்மதாவிடம் கேட்டாள்…

என் மேல எதுவும் கோவமா நர்மதா….

ஐயோ ஏன் அண்ணி…. நான் எதுக்கு உங்கமேல கோபப்படணும்…

இல்ல… ரெண்டு பேரையும் வெளியே போக கூடாதுன்னு சொல்லிட்டேன் ன்னு கோபமா இருக்கியோ ன்னு கேட்கிறேன்…

அப்படிலாம் இல்ல அண்ணி… கல்யாணமே எவ்வளவு போராடனுமோ நினைச்சோம்….. ஆனா நீங்க பேசி முடிக்கிற லெவலுக்கு கொண்டு வந்திருக்கீங்க… அப்புறம் என்ன….

நாட்களுக்கு இறகு முளைத்தது போல வேகமாகவே கடந்து சென்றது.. கல்யாண வேலைகள் ஒவ்வொன்றாக நடந்தாலும் எல்லாவற்றையும் சரிக்கட்ட தேவகியுடன் நந்தினி துணை நின்றாள்… சொந்த அத்தையின் மகனை திருமணம் செய்தாலும் திருமணம் என்று வந்த பின்னே சீர் வரிசைகள் மற்ற பரிவர்த்தனைகளும் சரியாகவே நடந்து கொண்டிருந்தது….

மாறன் அவன் அப்பாவிடம் பேசும்போது

அப்பா பணம் போதுமா இல்ல வேற ஏதும் தேவைப்படுமா என்றான்….

ஏன்டா கல்யாணத்துக்கு அப்புறம் என் பேர்ல தான் பணம் அனுப்புற… அந்த பொண்ணுக்கு அனுப்ப மாட்டேங்குற… பணம் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு அப்ப என்ன போதுமான்னு கேக்கறே.. வேணும்னா நான் உன் பணத்தில் இருந்து எடுத்துக்கறேன்… மத்தபடி அவளுக்கும் சேர்த்து வைத்த பணம் இருக்குடா போதும் நான் பார்த்துக்குறேன் என்றார்….

அதேபோல நந்தினியிடம் பேசும்போது உனக்கு தனியா பணம் அனுப்பி வைக்கவா… ஏன்னா நர்மதா ஏதும் கேட்டால் வாங்கிக் கொடுக்கிறது வசதியா இருக்கும்…. அதுமட்டுமில்லாம அம்மா கூட நீதான் எல்லா இடத்துக்கும் போறேன்னு சொன்னாங்க… கைல ஏதும் தேவைபடும் இல்லையா என்று கல்யாணம் முடிந்து ஆறேழு மாதங்களுக்குப் பிறகு உனக்கு அனுப்பவா என்று முதல்முறையாக கேட்டான்…..

மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் இத்தனை மாதங்கள் தனக்கு ஏதும் தேவைப்படுமா என்று கூட யோசிக்காதவன்… அவன் தங்கையின் திருமணம் கடைகளுக்கு செல்லும்போது தங்கைக்கு வாங்குவதற்காக உனக்கு பணம் அனுப்பவா என்று கேட்கிறான் என்னும் போது சற்று வருத்தமாக இருந்தது. ஆனாலும் அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் பாக்கியநாதனும் தேவகியும் நந்தினியை மருமகளாக நடத்தியதே கிடையாது மகள் போல பார்த்துக் கொண்டனர்.. அவள் கேட்கும் முன்னரே அவளுக்கு தேவையான அனைத்தும் தேவகி வாங்கிக் கொடுத்துவிடுவார்.. அதனாலேயே இது வரை அவளுக்கு கையில் அவன் பணம் அனுப்பாதது அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.. ஆனால் இன்று கேட்டவுடன் சற்று கோபம் வந்தது என்னவோ உண்மை தான்….

சற்று நேரம் பதிலே பேசாமல் இருந்துவிட்டு அவளின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே பதில் அளித்தாள்…

என்னிடம் ஏடிஎம் கார்டு இருக்கு.. வேணும்னா எடுத்துப்பேன்… நீங்க அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றாள் சற்று கோபமாகவே…

அவள் கோபம் அவனுக்கு புதியதாக தெரிந்தது இருந்தாலும் அவளிடம் ஏது பணம் என்ற எண்ணம் முதலில் வந்தது…

உனக்கு ஏது பணம் என்றான்….

கல்யாணத்துக்கு முன்னாடி பெங்களூரில் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.. உங்களுக்கு தெரியுமே…. அந்த பணம் அப்படியே தான் இருந்துச்சு அந்த பணத்தை எங்க வீட்ல யாரும் வாங்கல என்கிட்ட தான் இருந்தது… அந்த பணத்தை யூஸ் பண்ண முடியல அங்கு இருந்த வரைக்கும் ஹாஸ்டல் செலவு எனக்கு தேவையான எக்ஸ்ட்ரா செலவு போக மீதி பணம் அப்படியேதான் இருக்கு மூன்று வருஷமா… வேறெதுவும் சொல்லனுமா… என்றாள் ஒருவித அழுத்தமான குரலுடன் அமைதியாக…..

என்ட்ட நீ சொல்லவே இல்ல….

நீங்க இதுவரைக்கும் பண விஷயம் பற்றி கேட்டது இல்லையே….

ஒஒஒ… என்றான் ஒருவித அமைதியான குரலுடன்….

அதன் பிறகு ஒருமுறை பேசும்போது திருமணத்திற்கு 2 நாள் முன்பு தான் வருவேன் என்று சொன்னான்…

என் கல்யாணத்துக்கு லீவ் கிடைச்சா மாதிரிதான் இப்போவும் கிடைச்சிருக்கு 2நாள் முன்னாடி வருவேன் 13 நாள் இருப்பது போல உடனே கிளம்பிறுவேன். தவிர சென்னையில் கொஞ்சம் வேலை இருக்கு., அதனால நான் போக வேண்டியிருக்கும் என்று மட்டும் வீட்டினருக்கு தெரிவித்தான்…

பாக்கியநாதனும் தேவகியும் தான் பேசிக்கொண்டனர்… இந்த தடவை வந்துவிட்டு போகும் போதாவது நந்தினியை கூட்டிக் கொண்டு போவது போல வருவானா என்று.. அவனிடம் எதுவும் பேச முடியவில்லையே என்று பாக்கியநாதன் வருத்தப்பட்டார்…

திருமணத்திற்கு பத்து நாள் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு தேவையான பட்டு நகை எடுப்பதற்காக மாறனின் குடும்பத்தினரும், அவர்களின் அத்தை குடும்பத்தினரும் கிளம்பி சென்றனர்… சரத்தின் தங்கையான சரண்யாவும் வந்திருந்தாள்., அன்றுதான் முதல் முதலாக சரண்யாவும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….. நந்தினி சாதாரணமாக பேச முயற்சித்தாலும் சரண்யா பேசவிருப்படாதது போலவே இருந்ததால் நந்தினியும் ஒதுங்கி நின்று கொண்டாள்….

பட்டுச்சேலை எடுக்க தொடங்கும் போதே சரண்யா விற்கும் நர்மதா விற்கும் வாக்குவாதம் தொடங்கியது…

நர்மதா அவளுக்குப் பிடித்தது போல டிசைனில் கான்ட்ராஸ்ட் கலர் பார்டர் வரும்படி பட்டு தேர்ந்தெடுத்திருந்தாள்…

அதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையை தொடங்கினாள்…

திருமணத்திற்கு அரக்கு நிறம் மட்டுமே எடுக்க வேண்டும் என்று ஆரம்பித்து வைத்தாள்… என் கல்யாணத்திற்கு எல்லாம் அரக்கு கலர் தான் எடுத்தார்கள்., மற்ற கலர் எல்லாம் கல்யாணத்திற்கு எடுக்கக் கூடாது என்று பெரிய மனுஷி தோரணையில் பேசத் தொடங்கினாள்…

எனக்கு தான புடவை எடுக்குறாங்க அப்ப எனக்கு புடிச்ச கலர் ல தான் எடுக்கணும் என்று நர்மதா பதிலுக்கு பேச., நந்தினி தான் அவளை பேசாம இரு என்ன கலர் எடுக்கிறார்களோ எடுக்கட்டும் விடு என்று சொன்னாள்….

நர்மதா அவளுக்கு பிடித்த கலரை காட்டி ரொம்ப பிடிச்சு இருக்கு என்று கண் கலங்க சொல்லவும்… அந்த இடத்தில் வைத்து எதுவும் சொல்ல முடியாமல் பாக்கியநாதனும் தேவகியும் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் நர்மதாவையே அதட்டினர்….

மற்றவர்களை சேலை எடுக்க அந்த பக்கமாக அனுப்பிவிட்டு நந்தினி, நர்மதா ஆசைப்பட்ட புடவையை தனியே பில் போட அனுப்பி வைத்தாள்., யாரும் அறியாத வண்ணம்….

 அனைவருக்கும் துணிகள் எடுத்த பிறகு சரண்யா நர்மதா தேர்ந்தெடுத்த சேலையை தேடினாள்… அங்கு பணிபுரியும் பெண்ணிடம் அந்த சேலையைப் பற்றி விசாரித்தாள்… அந்த பணிபுரியும் பெண் ஏதோ சொல்லத் தொடங்கும் முன் நந்தினி அவசரமாக பின்புறமிருந்து சைகை காட்டவும் அந்தப் பெண் அந்த சேலையை மற்றொருவர் வாங்கி சென்று விட்டதாக கூறி விட்டார்…. அப்போது தேவகிக்கு சற்று பயம் வந்தது சரண்யா தன் பெண்ணின் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை கிளப்புவாளோ என்று….

அதன் பிறகும் திருமணம் வரையிலும் சரண்யா அவள் இஷ்டப்படியே எல்லாவற்றையும் செய்யும் படி நடந்து கொண்டாள்…

திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக வருவேன் என்று சொன்ன மாறன் விமானம் தாமதம் காரணமாக திருமணத்திற்கு முதல் நாள் அதிகாலை வந்து சேர்ந்தான்…

வீடு முழுக்க உறவினர் குழுமி இருந்ததால் மாறனும் நந்தினியும் தனியே பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கவில்லை… வந்தவுடன் கல்யாண வேலைகள் அவனை இழுத்துக் கொள்ள நந்தினியை சுற்றி உறவு கூட்டம் எப்பொழுதும் இருந்தது… நர்மதாவுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து நந்தினி செய்து கொண்டிருக்க இருவருக்கான பேசும் பொழுதுகள் கூட கிடைக்கவில்லை…..

இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவரை கண்ணுக்குள் நிரப்பிக் கொள்வதிலேயே இருந்தனர்….

“விழிகளுக்குள் நிரப்பிக்கொள்ள

எத்தனை போராட்டம்….

உயிர் கலந்த உறவே

இதயம் நிரப்பிட

விழி வழி நுழைந்திடு….”

தனியே மாறனுடன் பேச முடியாவிட்டாலும் அவனுடைய அலைச்சலையும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு., அவ்வப்போது அவனுக்கு தேவையானவற்றை நந்தினி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்… இதை தேவகி பார்த்துக்கொண்டிருந்தாலும் திருமண நேரம் என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை….. திருமணமாகி 13 நாட்களில் போனவன் ஒன்பது மாதம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான் ஆனால் இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை., அவ்வப்போது ஒரு பார்வை பரிமாற்றம் மட்டுமே இருந்தது….

ஒன்பது மாதம் கழித்து வந்ததால் அவனுக்கு காலநிலை மாற்றம் சரி வரவில்லை… தூக்கமின்மை அலைச்சல் எல்லாம் சேர்ந்து அவன் சோர்வாகவே தெரிந்தான்…..

நர்மதா விற்கு திருமண நாளும் அழகாகவே விடிந்தது…. திருமண மேடையில் நந்தினியோடு சேர்ந்து நிற்கும் போதுதான், அவள் அருகில் இருக்கும் நேரமே மாறனுக்கு கிடைத்தது…. மற்ற சடங்குகள் மாப்பிள்ளை வீட்டார் செய்ய வேண்டியது இருந்ததால் சரண்யாவும் அவள் கணவனும் செய்தனர்… மாறன் இது தான் நல்ல சமயம் என்று நந்தினியின் அருகிலேயே இருந்து கொண்டான்….

நர்மதா வின் கழுத்தில் சரத் மாங்கல்யம் அணிவிக்கும் போது பூத்தூவி வாழ்த்தி விட்டு நந்தினியின் விரலோடு விரல் கோர்த்து இறுக்கிக்கொண்டான் மாறன்….

திருமணத்திற்குப் பிறகான உரிமையான தொடுகையாக இருந்தது அது.. திருமணத்திற்குப் பிறகு போட்டோஷூட்டில் அவர்கள் சொன்னபடி அவளருகே இருந்ததும் தொட்டதும் போக., முதல் முதலாக அவனாக அவள் கையைப் பிடித்தது இது , என்பதால் அவள் சற்று நேரம் தன் கைவிரல்களோடு இருக்கி கொண்ட அவன் கையை மட்டுமே பார்த்திருந்தாள்….

பிறகும் அவளுக்கான வேலைகளை மற்றவர்கள் சொல்ல., பெண் வீட்டை சேர்ந்தவளாக பொறுப்பாக எடுத்து செய்ய தொடங்கவும் மாறனும் அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்…..

மாறனின் நண்பர்கள் தான்…..

என்னடா…. குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்திகிட்டு இருக்க என்ன விஷயம் என்று கிண்டலாக கேட்டு கொண்டு இருந்தனர்….

மாறன் சிரித்துக்கொண்டே., வந்ததிலிருந்து அவ கிட்ட பேசவே இல்ல… பேசுறதுக்கு டைம் இல்ல இனியாவது டைம் கிடைக்குமான்னு தெரியலை….

டேய்… ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையா…. தங்கச்சிய கொண்டு போய் அவ மாப்பிள்ளை வீட்ல விட்டுட்டு வந்து உன் வொய்ப் ட்ட கதை பேசு… என்றனர்…

அவனும் சிரித்துக்கொண்டே அவள் போகுமிடமெல்லாம் பார்வையை சுற்ற விட்டுக்கொண்டிருந்தான்….

அப்போதுதான் நண்பர்களில் ஒருவன் இந்த தடவையாவது அந்த பொண்ண கூட்டிட்டு போயிருவீயா… விஸா ப்ராஸஸ் முடிஞ்சிச்சா… டிக்கெட் ரெடி ஆயிடுமா… கூட்டிட்டு போறியா என்ன முடிவு பண்ணி இருக்க… என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டிருந்தான்….

ரெடியா இருக்கு…. கண்டிப்பா இந்த தடவை போகும்போது அவள கூட்டிட்டு தான் போறேன் போதுமா….

அப்பாடா ஒரு வழியா முடிவுக்கு வந்தான் டா என்றான் மற்றொருவன்….

விச்சு அதற்கு மேலே போயி…. ஆனா இந்த தடவை கூட்டிட்டு போவான்னு அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்…. அந்த பொண்ண இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான் டா…. அதுதான் விஷயம் இப்பவே பின்னாடி சுத்திட்டு இருக்கான்…. திரும்பி வரும்போது எப்படி இருக்கான்னு தெரியாது….

அப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தானே தவிர மறுத்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை……

வந்தவர்களை வரவேற்று சிறப்பாக திருமணத்தை நடத்தினர்… யாரும் ஒரு குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு திருமணம் நடந்தது….

மாலை நேரத்திற்கு மேல் நர்மதா விற்கு கொடுக்க வேண்டிய சீதனங்களோடு அவளை கொண்டு சரத்தின் வீட்டில் விட்டு விட்டு வந்தனர்….

அனைவரும் வியக்கும் வண்ணமே அவளுக்கு அனைத்தும் செய்யப்பட்டது…. நர்மதாவும் சந்தோஷமாகவே சரத்தின் வீட்டில் காலடி எடுத்து வைத்து மருமகளாக வந்தாள்….

நர்மதாவிற்கு துணையாக அக்கா முறையில் உள்ள ஒன்றுவிட்ட பெரியப்பா மகளை வைத்து விட்டு அனைவரும் வீட்டிற்கு வந்துவிட்டனர்….

வீட்டிற்கு வந்த பிறகு அனைவரும் களைப்புடன் இருக்க அனைவருக்கும் இரவு உணவு வெளியில் இருந்து வர வைக்கப்பட்டது… உணவு முடிந்தவுடன் எல்லோரும் கிடைக்கும் இடங்களில் படுக்கவும்… அப்போதுதான் மாறனுடன் பேசும் சந்தர்ப்பம் நந்தினிக்கு கிடைத்தது…

அறைக்கு செல்லும்முன் கிச்சனை மட்டும் சரி செய்து விட்டு பாலை சூடு செய்து எடுத்துக்கொண்டு போவதற்கு தயார் செய்து கொண்டிருக்கும்போது நந்தினியை தேடி மாறன் கிச்சனில் வந்து நின்றான்….

ஏய்… பொண்டாட்டி எவ்வளவு நேரம்டி டைமை வேஸ்ட் பண்ணுவ சீக்கிரம் ரூமிற்கு வா உன் கிட்ட பேசணும்….

திரும்பி வினோதமாக அவனைப் பார்த்தவள்…. எதற்காக இவ்வளவு அவசரம் என்று புரியாமல் முழித்தாள்…. அது மட்டுமில்லாமல்., அவனை நீங்க போய் தூங்குங்க நேத்துல இருந்து நீங்க சரியா ரெஸ்ட் எடுக்கலை… பேசுறதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் போங்க என்று கட்டாயப்படுத்தி பாலை குடிக்க வைத்து அனுப்பினாள்…..

அவனோ அவளை முறைத்துவிட்டு அட அறிவுஜீவி என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே சென்றான்…..

கிச்சன் வாசலில் நின்று வேண்டுமென்றே சத்தமாக நந்தினி சீக்கிரம் வா என்று மட்டும் சொன்னான்…..

இவன் ஒருத்தன் திட்டினா ஒரேடியா திட்டுவான்…. பின்னாடி சுத்துனா எல்லாரும் பாக்குற மாதிரி சுத்துவான் மானத்தை வாங்குறாங்க சாமி என்று நினைத்துக் கொண்டே.. எல்லா அறைகளிலும் நைட்லேம்ப் போட்டு வைத்துவிட்டு அறைக்கு சென்றாள்….

அன்று திருமண மண்டபத்தில் வைத்து இவள் தோழிகளும் சரி… அவனுடைய நண்பர்களின் மனைவிகளும் சரி…. நந்தினியின் வீட்டு ஆட்களும் சரி… கேட்காதவர்களை கிடையாது., மாறன் இவள் பின்னே சுற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி அதுவே பாதி இவளுக்கு வெட்கமாக இருந்தது…..

யோசித்துக்கொண்டே அறைக்கு சென்றவள்., கதவை தாழ்  இடும் போதே, பின்னிருந்து இறுக்கி அணைத்து இருந்தான் மாறன்,…

ஷ்ஷ்… என்ன பண்றீங்க….

இது கூட தெரியாத தத்தியா நீ… கட்டிப் பிடிச்சி இருக்கேன்… வந்ததிலிருந்து உன் கூட பேச கூட முடியல…. நானும் தனியா பார்ப்போம் பேசலாம் பார்த்தால் முடியவே இல்லை…. எனக்கு உன் கூட பேசணும் என்றபடி அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி பேசிக் கொண்டிருந்தான்….

ம்ம்ம்…. பேசலாம்…. நான் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்…. கசகசன்னு இருக்கு நீங்களும் டிரஸ் சேன்ஜ் பண்ணுங்க முதல்ல என்றபடி அவனை விட்டு தள்ளி நிற்க முயலவும் விடாமல் இழுத்து பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்…..

அவன் விட மறுக்கிறான் என்று தெரிந்த பின்பு எனக்கு கால் வலிக்கிறது என்று சொல்லிப் பார்த்தாள்……

அவனும் விடாமல்…. அன்றுதான் அவள் முகத்தை பார்ப்பது போல ஆழமான பார்வையுடன் தன்னுடைய முதல் இதழ் முத்தத்தை ஆழமாக பதித்தான்……

“மனம் எல்லைகளை மட்டுமே பார்க்கும்… அன்பிற்கு மட்டுமே எல்லைகளை கடக்கும் ரகசிய பாதை தெரியும்… அன்பு என்பது வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை அது நம்முள் சுரந்து., ஆன்மாவில் கரைந்து., அன்பாகவே நம்மை மாற்றி நம்மிலிருந்து ததும்பி வழிந்து வெளியெங்கும் பரவுகிறது…”

 

 

Advertisement