Advertisement

ஜமுனா அதிர்ந்து பயத்துடன் கணவனை தான்  வேகமாக பார்த்தாள். அவளை தொடர்ந்து மொத்த பேருமே யுவராஜை அச்சத்துடன் பார்க்க, யுவராஜிடம் சிறிதும் அசைவில்லை. கண் இமைகள் கூட சிமிட்டாமல் தயாநிதி மேல் படிந்திருந்தது. தயாநிதிக்கும் என்னமோ தொண்டை உருண்டது

இளைஞனான ஆகாஷ் துடித்த உடலுடன் அண்ணனை பார்த்தான். அவனிடம் அசைவில்லை எனவும், “நெட் ஒர்க் பிரச்சனையா..?”  என்றான் முணுமுணுப்பாக

ஹப்பாடா.. கேட்டிருக்காது..’ என்று மொத்த குடும்பமும் ஆசுவாசம் கொள்ள, ஜமுனா மட்டும் கணவனின் காதுகள் சிவந்திருப்பதில் தொண்டை குழியை நனைத்தாள். தயாநிதி துண்டை எடுத்து முகத்தை ஒற்றி கொள்ள, யுவராஜ் வெடித்தான்.

கையாலாகாதவன்னு தெரிஞ்சு போச்சு இல்லை.. என்ன பண்ணலாம் இருக்கீங்க..” என்றான் மாமனாரிடம் வார்த்தைகளை அனலில் வாட்டி. தயாநிதி திரும்ப வேர்த்துவிட்ட முகத்தை துடைக்க கூட இல்லாமல், மருமகனை பார்க்க, மற்றவர்களுக்கும் அடுத்து என்ன ஆகுமோ என்று கலவரம் உண்டானது

யுவராஜ் நான் உன்னை..” தயாநிதி பேச வர, யுவராஜ் அங்கு அவனின் போனை தூக்கி அடித்தான். அவனுக்கு தெரியும் அவர் அந்த வார்த்தையை சொன்னது கேசவனை பார்த்து தான் என்று. அவனை சொன்னாலே விட மாட்டான், அவன் அப்பாவை..? கொதித்த இரத்தத்தின் வெப்பம் குறையவில்லை

உடனே மீண்டும் லேப் வழியே வீடியோ கால் வந்தவன், உறைந்திருந்த குடும்பத்தினரை சிறிதும் கண்டு கொள்ளாமல், “சொல்லுங்க.. கையாலாகாதவன்னு தெரிஞ்சு போச்சு இல்லை, என்ன பண்ணலாம்  இருக்கீங்க..?” என்றான் கத்தலாக

இவர் விட மாட்டார்..’ புரிந்த ஜமுன அந்த இடத்தில் இருக்க முடியாமல், இறுகிய தொண்டை குழி வலியுடன் எழுந்து உள்ளே போக இரண்டடி எடுத்து வைக்க

ஏய் நில்லுடி..” என்றான் கணவன். அப்படி ஒரு அதட்டல். “உன்னை வச்சு உன்னால தானே உங்க அப்பா பேச்சு, நகராத, உன் அப்பா பதில் தெரிய வரைக்கும் ஒரு அடி எடுத்து வைக்க கூடாது..” என்றான் மிரட்டலுடன்

ஜமுனா கலங்கும் கண்களை உள்ளங்கை புண்ணாக்கி தடுத்து நிறுத்தினாள். அவள்  அப்பாவிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்காமல், அதிர்ந்து, தவித்து, கோபத்துடன் தான் உள்ளே செல்ல போனாள்

அருணாச்சலத்துக்கும் மருமகன் சொல் மகனை நோக்கி தான் என்பது புரிந்தது. வேதனையுடன் மகளை பார்த்தார். ஜெயலக்ஷ்மியும் அப்படி தான் இருந்தார். இவர்கள் மூவருக்கும் புரிந்தது பாக்கி இருப்பவருக்கு புரியாமல் போனது நல்லதே.. அருணாச்சலம் தன்னை சமாளித்து கொண்டவர், “யுவராஜ் விடுப்பா..” என்றார் பேரனிடம்.

அவன் விடுவேனா என்று மாமனாரையே பார்த்திருக்க, “அது.. அது யுவராஜ்.. நான் நான்..” என்று மேலும் சொல்ல முடியாமல் நிறுத்தினார். யாரை சொன்னால் என்ன..? 

இது ரொம்ப தப்புண்ணா உங்ககிட்ட இருந்து நாங்க இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கலை..” அம்மாவாக வைஜெயந்தி தாங்கிக்கொள்ள முடியாமல் பேசினார். காமாட்சியும் மருமகனை அப்படி தான் பார்த்தார். ஆண்களிடம் என்றால் பேசிவிடலாம். வீட்டு பெண்களிடம் என்ன பேச..? உதவிக்காக மனைவியை பார்க்க, ஜெயலக்ஷ்மி எல்லோருக்கும் மேல் இருந்தார்

போச்சு.. எல்லோரையும் கவனிச்சு இவளை விட்டுட்டேன். கண்டிப்பா நான் யாரை சொன்னேன்னு இவளுக்கு தெரிஞ்சிருக்கும்..’ கணவனாக நொந்து போனார் மனிதர்

தாத்தா.. என்னோட ப்ராஜெக்ட் அப்ரூவ் ஆகிடுச்சு, பாதி பணம் இன்னும் இரன்டு நாள்ல  ரீலீஸ் பண்ணிடுவாங்க, உங்க அக்கவுண்ட்ல போடுறேன், நிலத்தை மீட்டுடுங்க, குறையறதுக்கு ஆகாஷ்.. உன் சேலரி மேல லோன் போட ஏற்பாடு பண்ணு..” என்றான் தம்பியிடம்ஆகாஷ் பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் ஆகியிருந்தது

ரொம்ப சந்தோசம் யுவராஜ், உன் உழைப்பு வீண் போகலை..” அருணாச்சலம் மகிழ்ச்சியுடன் சொன்னார். வீட்டினருக்கும் அவன் வெற்றி சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கியது

ஆனால் ஜெயித்தவனுக்கோ அந்த மகிழ்ச்சி என்பதும் சிறிதும் இல்லை. எப்படிப்பட்ட வெற்றியையும் ஒன்றும் இல்லாமல் ஆக்க மனைவியால் முடியும்.. யுவராஜ் மனதில் அந்த நொடி அதை தான் நினைத்தான். அவன் மனைவியோ, தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாத கணவனை வெறித்து பார்த்திருந்தாள்

அருணாச்சலம் உடனே யோசித்து, “தம்பி.. அந்த பணத்துல ஜமுனா படிக்க..” என்று வேகமாக சொல்ல வர

வேண்டாம் தாத்தா.. அவளுக்கு அவங்க அப்பா இருக்கார் படிக்க வைக்க.. நான் யார்..?” என்றுவிட்டான். அதில் ஜமுனா முகம் சூடாக, தயாநிதி சங்கடமாக உணர்ந்தார்

இது தப்பு யுவராஜ்..?” கேசவன் சொல்ல

ப்பா.. ப்ளீஸ்.. எனக்காக நீங்க எதுவும் பேசாதீங்க..” என்றான் சிவந்துவிட்ட கண்களுடன். என்னால் அவர் இத்தனை வயதிற்கு இந்த வார்த்தை கேட்பதா..? அதுவும் வீட்டு மாப்பிள்ளையிடம். கேசவன் மகன் கேட்கவும் அமைதியாகிவிட்டார்

அருணாச்சலம், தான் பேச வேண்டியது உணர்ந்து, “மாப்பிள்ளை கேட்கிறதுல தப்பில்லை யுவராஜ், ஜமுனா கஷ்டப்பட்டு படிச்சிருக்கு..” என

நான் எப்போ தப்புன்னு சொன்னேன் தாத்தா, அவர் படிக்க வைக்கட்டும்ன்னு தான் நானும் சொல்லிட்டேன், நாம தான் கையாலாகாதவங்க தான் அவருக்கும், அவர் பொண்ணுக்கும் நல்லா தெரியுமே, கூட்டிட்டு போய் படிக்க வைச்சு கொண்டு வந்து விடட்டும்..” என்று முடித்துவிட்டான்

‘அப்போ என்னை போக சொல்றார் இவர்..? போறேன்..’ தயாநிதி கூப்பிடவும், ஜமுனா மறுக்காமல் அம்மாவுடன் கிளம்பிவிட்டாள்

அவள் மனதில் அப்பா படிக்க வைத்தால் படிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது தான். ஆனால் தந்தையின் அந்த ஒரு வார்த்தை. அதை நிச்சயம் அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அவளுக்கும் யுவராஜ்க்கும் ஆயிரம் கோவம் இருந்தாலும் இது வேறல்லவா..? எப்படி இப்படி ஒரு வார்த்தை..? 

அவரை மட்டும் இல்லை எனக்கும் இது தாக்கும்னு  அப்பாக்கு புரியாதா..? இனி இவர் பணத்தில் நான் படிப்பதாய் இல்லை. போகட்டும்.. என்னால எனக்கு செய்து கொள்ள முடியும், யாரும் எனக்கு செய்ய தேவையில்லை..’ அந்த நொடி உறுதியாக முடிவெடுத்தாள் பெண்

அதை இன்னும் உறுதியாக்க, அன்றிரவு ஜெயலக்ஷ்மி மருமனிடம் பேசுவதை கேட்டாள். மகள் ஜீவிதா எப்போதும் போல எட்டு மணிக்கு தூங்கிவிட, அவளை தாரணி பொறுப்பில் விட்டு கிட்சன் வந்தாள். இரவுக்கு மகளுக்கு பால் வேண்டுமே

அங்கு ஜெயலக்ஷ்மி போனில், “இதுக்கு தான் நான் உன்கிட்ட முதல்லே சொன்னேன் யுவராஜ், என் பேச்சை கேட்கலை நீ..?” என்று அடுப்பில் இருக்கும் பாலை பார்த்து பேசி கொண்டிருந்தார்

ஜமுனா அவர் பேசுவது புரியாமல் நின்றுவிட, “இப்போ இந்த கல்யாணம் வேண்டாம், இரண்டு வருஷம் கழிச்சே வச்சுக்கலாம் அவ்வளவு சொன்னேன் கேட்டியா..? முடியாது, இப்போவே வைங்கன்னு பண்ணிகிட்டு.. இப்போ பாரு..” என்று கேட்டு கொண்டிருக்க, ஜமுனா கண் விரித்தாள்

அப்போ ஜாதகம் பார்த்து உடனே கல்யாணம் இல்லையா..? ஆறு மாசம் கழிச்சு வச்சுக்கலாம் அம்மாகிட்ட நான் அவ்வளவு கெஞ்சினேனே..? மாமா வீட்டுக்கு வந்தப்போ கூட எனக்காக தான் பேச வந்திருப்பார்ன்னு சந்தோஷப்பட்டேனே, கடைசில..’

ஜமுனா ஆசைப்பட்ட படி MD படிச்சு முடிச்சு, அப்புறம் கல்யாணம் வைச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா..? நான் சொன்னதுக்கு நான் படிக்க வச்சிக்கிறேன் சொல்லிட்டு இப்போ முடியாதுன்னு சொன்னா நான் பார்த்திட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா..” ஜெயலக்ஷ்மி கோவமாக கேட்டு கொண்டே, பால் கொதிக்கவும் கப் எடுக்க திரும்ப, மகள்

ஜமுனா..” என்றார்.  

கேட்டுட்டாளா..?” யுவராஜ் அந்த பக்கம்

என்னம்மா இது..?” ஜமுனா சீறலாக கேட்டாள். “என்கிட்ட ஜாதகம்ன்னு சொல்லிட்டு உன் அண்ணன் மகன் கேட்டாங்கன்னு உடனே கல்யாணம் செஞ்சு  வச்சிருக்க, அப்போ உனக்கு என்னை விட அவர் தான் முக்கியமா..?” என்றாள்.

ஜமுனா ஜாதகத்துல சொன்னது உண்மை, மூணு மாசத்துல வைக்கலன்னா அடுத்த நாலைஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் நடக்காது சொல்லிட்டாங்க, அதான்..” 

அதுக்கு உடனே என்னை உன் அண்ணன் மகன்கிட்ட துரத்திவிட்டாச்சு, என்னோட ஆசை தெரிஞ்சும் நீயும் உன் அண்ணன் மகனும் சேர்ந்து அதுல மண்ணை கொட்டிட்டிங்க, இப்போ நடக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் நீங்க இரண்டு பேர் மட்டும் தான் காரணம், உங்களால தான் இவ்வளுவும்..”

ஜமுனா அவன் நீ வேணும்ன்னு தான்..”

ம்மா.. ப்ளீஸ்.. எதுவும் பேசாதீங்க, எனக்காக யோசிக்காத அவரும் சரிநீங்களும் சரி எனக்காக தான்னு சொல்லாதீங்க, அதுக்கான ரைட்ஸ் உங்களுக்கு கிடையாது, இனி உங்ககிட்ட பேசுறது வேஸ்ட், முடிஞ்சது, போங்க..” என்றாள்

என்ன முடிஞ்சதாம் அவளுக்கு..? எனக்கு ரைட்ஸ் இல்லையாமா..? என்ன தைரியம் அவளுக்கு..?” யுவராஜ் அந்த பக்கம் கத்தியது, ஜமுனாவிற்கும் கேட்டது

இப்போ என்னாங்கிறார் உங்க அண்ணன் மகன்..? என்ன ரைட்ஸ் இருக்காம் இவருக்கு..? அப்போ இருந்து இப்போ வரை ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசாத இவர் என்னை கேள்வி கேட்கவே முடியாது, பண்றதையும் பண்ணிட்டு எப்படி இவரால என்கிட்ட கத்த முடியுது..? அவ்வளவு இடம் நான் தான் கொடுத்து வச்சிருக்கேன்னு தெரியுது, இனி ஒன்னும் கிடையாது, என் படிப்பையும், என் பொண்ணையும் நான் பார்த்துகிறேன், போங்க..” ஜமுனா வருடங்கள் கடந்தும் அவள் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாள். 

சமாளிக்க கூடிய அளவில் ஆரம்பித்தது இப்படி முடியும் என்று யுவராஜும் எதிர்பார்க்கவில்லை.  

Advertisement