Advertisement

அது.. அதுக்கு என்ன இப்போ..? ஜமுனாவுக்கு இது தலை பிரசவம், எக்ஸாமுக்கும் படிக்கிறா, இங்க இருந்தா சவுகரியமா இருக்கும்..” என்றார்

அங்க மட்டும் உங்க பொண்ணுக்கு என்ன குறைச்சல்..? விதண்டாவாதம்  பண்ணாமல் அனுப்பி வைங்க, அப்புறம் உங்க மருமகனே  நீங்க பண்ணதை கேட்டுவைப்பான்..”  என்றார் ஜெயலக்ஷ்மி

நீ சொல்லி கொடுப்ப சொல்லு..”  தயாநிதி சொன்னவர், “என்னமோ பண்ணி தொலைங்க..” என்று விட்டுவிட்டார்

அதன்படி ஜமுனா ஐந்தாம் மாதம் முதல்லே கணவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். உடன் கணவனை பார்த்து குறும்பான சிரிப்பும். யுவராஜ்க்கு அவள் குறும்பான சிரிப்பு சீண்டிவிட்டது போலானது. ‘அய்யோ பாவம்ன்னு பார்த்தா இவளுக்கு சேட்டையை பாரு..’ மனைவியை கண்ணால் மிரட்டி சுற்றி கொண்டிருந்தான்

ஜீவிதா அவள் வழக்கம் போல இரவு எட்டு மணிக்கே தூங்கிவிட, ஜமுனா மகளை தொட்டிலில் போட, பின்னால் கதவடைக்கும் சத்தம்முதல் இரவில் நடுங்கிய நடுக்கம் இன்றும் அவளிடம். யுவராஜ் மனைவியை ஆழ்ந்து பார்த்து வந்தவன், அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்தபடி  “உன் வேலை தானா இது..? பாட்டிகிட்ட நீதான் பேசுனியா..?” என்றான்.

ஜமுனா அவன் நெஞ்சில் முகம் புதைத்து  கட்டி கொள்ள, “முடியலடி..” என்றவன் விரல்களும், உதடுகளும் அவளில் வேகம் கொண்டது. ஜமுனா அவன் நெருக்கத்தில் தளர்ந்து தடுமாற, மனைவியுடன் கட்டிலில் சரிந்தவன், “சேதாரம் ஆனா எனக்கு தெரியாது.. என்னால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியும்ன்னு தோணலை..” என்றான் கன்னத்தில் மெதுவாக கடித்தபடி

அவனின் தேடல், ஏக்கத்தை கண்டு உருகிய ஜமுனா, “உங்களை யார் இவ்வளவு சீக்கிரம் பாப்பா கொடுக்க சொன்னா..?” என்றாள்

ஏய் இதென்னடி கேள்வி..?” யுவராஜ் சிவந்த முகத்துடன் அவள் உதட்டை முழுங்கி கொண்டான்

நான் உங்களுக்காக தான் கேட்டேன்..” என்றாள் மனைவி

அப்போ உனக்கு நான் வேண்டாமா..?” யுவராஜ் கைகள் மனைவியின் ஆடை விலக்கியபடி கேட்க

என்னை பார்த்தா வேணா போல தெரியுதா..?” என்றாள் அவளை கண்ணால் காட்டி

உன் பேச்சுல எனக்கு தாண்டி வெட்கம் வந்து தொலைக்குது, உனக்கு ரொம்ப கூடி போச்சு..” என்றான் அவள் காதை கடித்தபடி

யாரால எனக்கு கூடி போச்சு..?” ஜமுனா அவனையே குறும்பாக  கேட்க

நீ வாயை திறக்காத, கடிச்சு வச்சிடுவேன்..” என்ற மிரட்டலுடன், அவளை அள்ளி கொள்ள ஆரம்பித்தான். நீண்ட நாட்கள் ஏக்கம் கட்டுப்பாட்டை உடைத்து ஆவேசத்தை கொடுக்க, இருவருக்கும் காதல் காயங்கள் பாரபட்சம் இன்றி கிடைத்தது.

அந்த முறை யுவராஜ் மின்னிய முகத்துடன் சென்னை கிளம்பி செல்ல, அங்கு அவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவன் கனவிலும் எதிர்பார்க்கா வாய்ப்பு. சென்ற வருடம் மும்பை கம்பெனியில் நிரூபித்த அவன் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது

 “கான்டெக்ட்..” தொழிலில் இருப்பவர்களுக்கு தெரியும் இந்த வார்த்தையின் பின்னால் இருக்கும் பவர். நம்முடைய திறமையோடு, ரிபரன்ஸ் என்ற ஒன்று இருந்தால் தொழில் முன்னேற்றம் நிச்சயம். இங்கு பெரிதும் ‘கிவ்வன் டேக் பாலிசி’ தான்

இப்போதும் அப்படியான ஒன்று தான். பேர் சொல்ல கூடிய MNC கம்பெனியில் புதிதாக ஆன்லைன் வர்த்தகம் தொடங்க, அந்த டீமில் யுவராஜூம்  இணைவதற்கான துருப்பு சீட்டு. இவன் பெயரும் லிஸ்டில் இருக்க, அவனுக்கான சாப்ட்வேர் எது என்றும் சொல்லப்பட்டது

அந்த கம்பெனியில் முக்கியமான சாப்ட்வேர் எல்லாவற்றுக்கும்  அவர்கள் டீம் இருக்க, சிலவற்றுக்கு மட்டும் இப்படி அவுட்சோர்ஸிங் கொடுத்தனர். இனி அவன் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் அந்த சாப்ட்வேரை அவர்கள் முன் பிரசண்ட் செய்ய  வேண்டும். அவர்களுக்கு இவன் வேலையில்  திருப்தி இருந்தால் நிச்சயம் எடுத்து கொள்வர். அங்கு எந்தவிதமான பாலிடிக்ஸும் இல்லை. அவரவர் திறமை தான் பேசும்

அந்த வகையில் யுவராஜ்க்கு அவன் திறமை மேல் எப்போதும் முழு நம்பிக்கை உண்டு. இல்லையென்றால் அவன் தனியே ஆபிஸ் ஆரம்பித்திருக்கும் தைரியம் வாய்த்திருக்காது. தன்னை நம்பாதவன் எங்கும்எப்போதும் ஜெயிப்பதில்லை. நமக்கு தெரியும் நம்மால் என்ன முடியும், என்ன முடியாது என்று. யுவராஜ்க்கு தெரியும் அவனால் நிச்சயம் இது முடியும் என்று

அதற்கான ஆயத்த பணிகளை நொடியும் தாமதிக்காமல் ஆரம்பித்தான். வீட்டினருக்கும், ஜமுனாவிற்கும் ஒரு வாய்ப்பு என்று மட்டும் சொன்னான். அதில் இருக்கும் அழுத்தத்தை சொல்லவில்லை. பணம்  பயன்பாட்டையும் சொல்லவில்லை

ஆம்  நிலத்தை மீட்க சேர்த்து வைத்திருந்த பணத்தையும், ஜமுனா MD படிப்பதற்காக தனியே எடுத்து வைத்திருந்த பணத்தையும் இதில் போட்டான். உடன் ஒரு டீம் ஆட்களும் புதிதாக எடுத்து கொண்டான். மிகப்பெரிய கம்பெனி என்பதால் அவர்களின் இடையூறு இல்லாத, பாதுகாப்புமிக்க சாப்டவேர் முதன்மை அத்தியாவசியம். அதற்கான இவன் குறிக்கோளும் பணத்தை கரைக்க ஆரம்பித்தது

இது ஒருவகையில் முதலீடு தான். செலக்ட் ஆகிவிட்டால் நிச்சயம் மூன்று மடங்காக மீட்டு விடலாம். முழு நம்பிக்கை கொண்டு பணத்தை பற்றிய கவலை இல்லாமல் இதில் உழைக்க ஆரம்பித்தான். அங்கு ஜமுனாவும் நெருங்கி வரும் அவளின் எக்ஸாமிற்காக இரவு பகல் பாராமல் படித்து கொண்டிருந்தாள்

யுவராஜ்க்கு அவள் இந்த முறை எக்ஸாம் எழுதுவதில் விருப்பமில்லை. சீட் கிடைத்தால் அவளின் அத்தியாவசிய செலவிற்கே பணம் கொடுக்கும் நிலையில்  அவன் இல்ல. மனைவி போன் பேசும் போதுஅடுத்த முறை எழுதிக்காலம்.. பணம் பிரச்சனை..” என்றான்

ஜமுனாவிற்கு அவ்வளவு அதிர்ச்சி. ஒரு வருடம் இதற்காக படித்து கொண்டிருக்கிறாள். அடுத்த வாரம் எக்ஸாம் எனும் நிலையில் இப்போது வந்து வெகு சாதரணமாக, வேண்டாம் சொல்கிறார். கோவம், ஆதங்கம். விட்டுவிட முடியாதே..? கனவு குறிக்கோள் ஆயிற்றே! “நான் எழுதுறேன் மாமா.. பார்த்துக்கலாம்..” என்று முடித்துவிட்டாள்

பார்த்துக்கலாம்ன்னா.. என்ன இருக்க பார்க்க..? இதென்ன சொல்றதை புரிஞ்சுக்காம..’ அவனும் அங்கு தொற்றி கொண்ட கோவத்தில் அவள் எக்ஸாம் எழுதுவது பற்றி விட்டுவிட்டான். அவனுக்கு அவன் வேலை அழுத்தம். பயம்.

ஜமுனாவிற்கு அவன் செயலில் வருத்தம் இருந்தாலும், நல்லபடியாக  எக்ஸாம் எழுதி முடித்தாள். யுவராஜ் அவனின் வேலை முடியும் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்க ஊருக்கு வர முடியாமல் போனது. மனைவி, மகளுக்கான தேடல் அதிகம் இருக்கும் நேரங்களில் விடியோ காலில் பேசுவான். அப்போதும் கணவன் மனைவிக்குள் ஒரு எச்சரிக்கையான கோடு. இருவரும் அதை கடக்க நினைக்கவில்லை

ஒருவழியாக யுவராஜ் வேலைகள் முடிவுக்கு வர, அவன்,  அவனுடைய டீம் ஆட்களுடன் UK செல்லும் நாள் வந்தது. அங்கு தான் அவர்களின் ஹெட் ஆபிஸ் இருந்தது. ஜமுனாவின் ரிசல்ட்டும் வந்துவிட, அவள் கோவத்தை மறந்து கணவனுக்கு அழைத்து சொல்ல, அவன் “ஊருக்கு வந்து பேசுறேன்..” என்று வைத்தான். 

ஜமுனாவிற்கு ஏமாற்றத்துடன்,  கலக்கமும். படிக்க முடியாதோ..? அவள் கலக்கம் சரி என்பது போல ஊருக்கு வந்த யுவராஜ், “இந்த வருஷம் முடியாது ஜமுனா..” என்றான் உறுதியாக. 

அவன் உறுதியில் இவரை  ஒத்துக்கொள்ள வைக்க முடியாதோ அச்சம் நெஞ்சை கவ்வியது. “ஒரு வருஷம் இதுக்காக கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன் மாமா, இப்போ வந்து முடியாது சொன்னா எப்படி..? என்றாள் கெஞ்சலாகவே. 

“நான் எக்ஸாம் எழுத போகுமுன்னே உனக்கு சொன்னேன் ஜமுனா..” யுவராஜ் அழுத்தமாக சொல்ல

“அடுத்த வாரம் எக்ஸாம் வச்சுட்டு சொன்னா என்னால எப்படி மாமா விடமுடியும்..? உங்களுக்கு தெரியும் இல்லை என்னோட கனவு இது, டச் விட்டு போச்சுன்னா திரும்ப படிக்க எனக்கு கஷ்டமா இருக்கும், இப்போ என்ன நமக்கு பணம் தானே  பிரச்சனை,  அப்பாகிட்ட  நான்..” 

“நோ.. இதை மனசுல வச்சுக்கிட்டு தான் எக்ஸாம் எழுதினியா ஜமுனா..” யுவராஜ் கோவம் அவன் தாடை இறுக்கத்தில் தெரிந்தது.

“மாமா கடனா வாங்கி..” 

“எத்தனை இடத்துல என்னை கடன்பட சொல்ற, இந்த ஒரு வருஷம் போகட்டும், அடுத்த வருஷம் படிக்கலாம்..” 

“மாமா.. ப்ளீஸ் மாமா, ரொம்ப எபார்ட் போட்டிருக்கேன், என்னோட கட் ஆப்க்கு நான் கேட்கிற ஸ்பெஷலிலேஷன் கிடைக்கும், மிஸ் பண்ண முடியாது..”

“ஜமுனா இப்போ இருக்கிற  நிலையில யாராவது ஒருத்தரை தான் பார்க்க முடியும், விட்டுடு, உன்னோடது அடுத்த வருஷம்தான்..” முடிவாக சொன்னான். 

ஜமுனா கோபத்துடன் அவள் கண்களில் கண்ணீரும் இறங்க, “இதுக்கு தான் நான் முதல்லே உன்னை எக்ஸாம் எழுதாத சொன்னேன், நீ எக்ஸாம் எழுதிட்டு வந்து இப்போ என்னை கார்னர் பண்ற, பிரஷர் கொடுக்கிற, உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை..”

“உங்க கனவு, உழைப்பு  மாதிரி தானே என்னதும் மாமா..”  ஜமுனா நிதானமாக கேட்க, 

“இப்போ என்ன நான் சுயநலமா இருக்கேன்னு சொல்றியா..?” என்றான் யுவராஜ் பொங்கிவிட்ட கோபத்துடன். 

ஜமுனா பார்வையில் ஆம் என்று அழுத்தமாக காட்டியவள், “நீங்க என் மாமாவே இல்லை..” என்றாள் நேருக்கு நேர் வார்த்தைகளுக்கு அழுத்த கொடுத்து. அவளின் குரலில் தெரிந்த விலகல், கணவனுக்கு தாங்கவே முடியவில்லை.

முதல் முறை மனைவி அவனிடம் இப்படி பேசுகிறாள். அவளின் விலகலை  ஏற்று கொள்ள முடியாமல் அவளை இழுத்து அணைத்து, ஆழ்ந்து, ஆவேசமாக, முத்தமிட்டவன், “இனி உன் வாய்ல என்னை இப்படி சொன்ன பார்த்துக்கோ..?” என்று கன்னம் பிடித்து அழுத்தி மிரட்டினான். அவன்  நெஞ்சை அழுத்தியது. 

அவனின் மிகப்பெரிய பலவீனம் இவள். அவ்வளவு பிரச்சனையிலும் இவள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று தான் இந்த அவசர திருமணமே. இவளானால் படிப்பிற்காக என்னை தள்ளி வைக்க பார்க்கிறாளா..? இருவருக்கும்  கோவம் இருந்த இடத்தில் பரிதவிப்பும், வலியும். முதல் முறை பெரிதான விரிசல் அங்கு விழ ஆரம்பித்தது.

Advertisement