Advertisement

கேளாய் பூ மனமே 8

“இப்போதைக்கு வீட்ல சொல்ல வேண்டாம்.. இன்னும் பதினைஞ்சு நாள் போகட்டும்..” யுவராஜ் சொல்ல, ஜமுனாவும் அதை தான் யோசித்திருக்க, சரியென்றுவிட்டாள்

“இனி கொஞ்ச நாள் இப்படி டிராவல் பண்ணவும் வேண்டாம்..” என்றான்

இல்லை மாமா.. இப்படின்னு புரியவும் உங்ககிட்ட வரணும் போலஎன்னமோ கொஞ்சம் பயமா..” என்றாள் மனைவி

எதிர்பார்க்காமல் கிடைத்த செல்வம் அல்லவா..? எனக்கே சந்தோஷத்தையும் மீறி கொஞ்சம் நடுக்கமா தான் இருக்கு, அவளுக்கும் அப்படித்தானே இருக்கும்..’ புரிந்து அணைத்து கொண்டான்

தொடர்ந்த இரண்டு நாள் ஊரிலே இருந்தனர். வீட்டில் சொல்லாமல் இருப்பது ஒரு மாதிரி இருந்தாலும், உறுதியாக தெரிந்த பின் சொல்லி கொள்ளலாம் என்று அவரவர் இடம் கிளம்பிவிட்டனர்

யுவராஜ் மனைவியை தானே பொறுமையாக அழைத்து சென்று கேம்பஸில் விட்டவன், “பத்திரம்.. உடம்பு பார்த்துக்கோ..” என்றான் அவள் கை பிடித்தபடி. தனியே விட்டு செல்ல மனமே இல்லை. ‘அவளின் படிப்பிற்காக..’ மனதை தேற்றி கொண்டு, அணைத்து கிளம்பிவிட்டான்

ஜமுனா எப்போது  பதினைந்து நாள் முடியும் என்று பார்த்திருந்து  தானே கிட் வாங்கி டெஸ்ட் செய்தாள். யுவராஜ் அன்று காலையிலே மனைவியை பார்க்க கிளம்பிவிட்டிருந்தான். டெஸ்டில் அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் குழந்தை தான் என்று உறுதியாகிவிட, ஜமுனா கண்ணில் கண்ணீர் தேங்கிவிட்டது. கணவனுக்கு அழைத்தவள், “மாமா..” என, 

“நான் உன் கேம்பஸ்ல தான் இருக்கேன்.. நேர்ல வா..” வேகமாக இடையிட்டு சொன்னான். ஜமுனா இரவு உடை மாற்றி, கணவன் இருக்கும் இடம் வந்தாள். நடையில் தடுமாற்றம், வெட்கத்தில், பூரிப்பில் சிவந்த முகம், கணவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் திணறி வந்து அருகில் நின்றாள். 

யுவராஜ் மனைவி நிலை புரிந்து கை பிடித்து காருக்கு கூட்டி சென்று அணைத்து கொண்டான். “மெலிஞ்சிட்டடி..” என்றான் அணைப்பிலே. 

“இருக்கும்..” ஜமுனா ஆமோதித்து விலகியவள், “வீட்டுக்கு சொல்லணும் மாமா..” என்றாள். 

“நீ.. நீயே சொல்லு..”  யுவராஜ் தலையை கோதி கொண்டான். ஜமுனாவிற்கு அவன் வெட்கம்  புரிந்து சிரிப்பு. “சிரிக்காதடி..” அவள் உதட்டை பிடித்து ஆழ்ந்த முத்தம் வைத்தான். 

ஜமுனாவே காமாட்சி, ஜெயலக்ஷ்மிக்கு அழைத்து சொல்ல “உண்மையாவா..? உண்மையாவா..?” என்று கேட்டு கேட்டு பூரித்து போயினர். எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி, ஆச்சரியம்.  உடனே இருவரும் யுவராஜ்க்கு தான் அழைத்தனர். 

யுவராஜ் எடுத்து, “நான் ஜமுனாகிட்ட தான்  இருக்கேன்..” என்றான்.  உடனே ஆகாஷ், அருணாச்சலம் தவிர, மொத்த குடும்பமும் சில நிமிடங்களில் கிளம்பியிருந்தனர்.

“அவங்க வரதுக்குள்ள நாம போய் டாக்டரை பார்த்துட்டு, சாப்பிட்டு வரலாம்..” என, ஜமுனா சென்று கிளம்பி வந்தாள். மருத்துவரும் குழந்தையை உறுதி செய்துவிட, அடுத்த நிமிடங்கள் முழுதும் அவர்கள் வசம். மகிழ்ச்சி, நிறைவு மின்ன ஆனந்ததுடன் ஒருவர் முகம் ஒருவர்  பார்த்து பேசி, சாப்பிட்டு முடித்தனர்

இவர்கள் குடும்பங்களும் வந்துவிட, இன்னும் சந்தோசம் இரட்டிப்பானது. பர்மிஷன் கேட்டு வெளியே சென்றவர்கள், யுவராஜ் நண்பன் ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். ஒரு ரூம் எடுத்து, அங்கேயே அந்த நாள் முழுதும்

யுவராஜ்க்கு அவளை ஹாஸ்டலில் விட அவ்வளவு யோசனை. ‘இப்போவே மெலிஞ்சிருக்கா..’ நினைத்து கொண்டே இருந்தவன், அருணாசலத்திடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு, “பாட்டி.. இங்க தனியா வீடு எடுத்திடலாமா..?” என்றான்

நாங்களும் அதை பத்தி பேசணும்ன்னு  நினைச்சோம் யுவராஜ், தனி வீடு எடுத்து நான் ஜமுனாவோட இங்கேயே இருந்துகிறேன்..” என்றார் காமாட்சி. வரும் வழியில் பேசியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. தயாநிதி முகம் பார்த்தான் கேள்வியாக. அவரும், “ஆள் மாத்தி கூட இருக்கட்டும், இன்னும் ஒரு அஞ்சு மாசம் தானே..” என்றார்.

ஜமுனா  முகத்தில் மலர்வு. அவளுக்கும் வீட்டு ஆட்கள் உடன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்க தானே செய்யும். முடிவாகவும் உடனே தெரிந்தவர்கள் மூலம் கேம்பஸ் அருகிலே வீடு பார்த்துஒரு வாரத்திலே ஜமுனா ஹாஸ்டல் காலி செய்து குடியும் வந்துவிட்டனர்

ஜெயலக்ஷ்மி முதல் வாரம் மகளுடன் இருந்தார். அங்கு வீட்டில் தாரணி இருக்க, காமாட்சியிடம் பொறுப்பை கொடுத்து கிளம்பிவிட்டார். வைஜெயந்தியும் நேரம் கிடைக்கும் போது, கணவருடன் வந்து பார்த்து சென்றார். யுவராஜ் வார இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்று இல்லாமல், வேலை குறைவாக இருக்கும் நாட்களில் மனைவியை தேடி வந்துவிடுவான்

முதல் சில நாட்கள் சாதாரணமாக இருந்த ஜமுனாவிற்கு, தொடர்ந்த நாட்களில் தலை சுத்தல், வாமிட் என்று படுத்திவிட்டது. சாப்பிட முடியாமல் தவித்து போனாள். காமாட்சி அவளுக்கு ஏற்ற விதத்தில் பக்குவமாக உணவு  கொடுத்து பார்த்து கொள்ள, ஓரளவிற்கு இருந்தாள்

யுவராஜ்க்கு மனைவி படும் பாடு வருத்தத்தை கொடுக்க, முடிந்தவரை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி பார்த்து கொண்டான். டியூட்டி செல்லும் நேரம் தவிர மீதி நேரம் சோர்ந்தே படுத்திருந்தவள், ஐந்து மாதம் ஆரம்பிக்கும் போது தெளிந்துவிட்டாள். அவளின் அவுஸ் சர்ஜனும் கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்துவிட, ஜமுனா ஜாகை ஊருக்கு மாறியது

இதில் மிகவும் நொந்தது யுவராஜ் தான். ‘எப்போதடா அவுஸ் சர்ஜன் முடிப்பாள் ஒன்றாக இருக்கலாம்..’  என்ற கனவு கண் முன்னே கலைந்து போக வருத்தம் தான். ‘பாப்பாக்காக தானே..’ என்று தன்னை தானே தேற்றி கொள்ள, ஜமுனாவிற்கு கணவன் ஏக்கம் புரியாமல் போகுமா..?

கணவனிடம் அவனின் தேடலுக்கான விடுதலையை கொடுக்க, யுவராஜ் அவளில் தொலைந்து தான் போனான். ஒரு மாதத்திலே பிள்ளை, சில மாதம் தடா. இப்போது தான் திரும்ப மனைவியின் நெருக்கம் எனும் போது, அவன் நாட்டமும் அதிகம் தான். பாப்பாக்காக என்று வேகத்தை குறைத்து நேரத்தை நீட்டித்து மனைவியை படுத்தினான் கள்வன். ஜமுனா அவன் சேட்டையில் திணறி, சோர்ந்து போனாலும், மிளிரவே செய்தாள் பெண்

யுவராஜ் சென்னை கிளம்பிவிடும் நாட்களில் ஜமுனா மும்முரமாக அவள் ஆசைப்படி என்டிரன்ஸ் படிக்க செய்தாள். வீட்டிலும் அவளுக்கு பெரிதாக வேலை இல்லை. வைஜெயந்தி, காமாட்சி, ஜெயலக்ஷ்மி என்று அவளை பார்த்துக்கொள்ள, ஜமுனா படிப்பில் கவனத்தை அதிகம் வைத்தாள்

ஏழாம் மாதம் ஜமுனா வளைகாப்பு நடைபெற்று அம்மா வீடு கிளம்பினாள். யுவராஜ் தானே மனைவியை அழைத்து சென்று அம்மா வீட்டில் விட்டவன், மறுநாள் அங்கிருந்து சென்னை கிளம்பினான். மனைவி பிரசவ  நேரம் வேலைகள் மிச்சம் வைத்து கொள்ள கூடாது என்பதால், கைவசம் இருந்த வேலைகளை முடித்து வைத்தான்

தினம் தினம் இருக்கும் வேலைகள், புதிதான கம்பெனிகள் என்று எல்லாம் சமாளித்து, பிரசவ நாளுக்கு முன் வீடு வந்து சேர்ந்தான். ஜமுனாவிற்கு மேலும் இரண்டு நாட்கள் தள்ளியே பிரசவ வலி வர, அவர்கள் டியூ தினத்திலே அவள் கேம்பஸ்க்கு சென்றுவிட்டனர்

விடியற்காலை போல அவர்கள் ஆசைப்படி சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறக்க, காமாட்சியை முதலில் வாங்க வைத்தான். அவர் கையிலே மகளை பார்த்து சிலிர்த்து நின்றிருந்தான் தந்தை. கையில் தூக்க தைரியம் வரவில்லை. ஜமுனா இயல்பாக மகளை தானே பார்த்துக்கொண்டாள்

ஜெயலக்ஷ்மி மகளுடன் ஹாஸ்பிடலில் இருக்க, யுவராஜ் நண்பன் ஹோட்டலில் தங்கி கொண்டவன், மூன்றாம் நாள் மனைவி, மகளுடன் ஊர் வந்து சேர்ந்தான். அந்த மாதமே குழந்தைக்குஜீவிதா” என்று பெயரிட்டு பெரிதான விழா நடத்தி, விருந்தது வைக்காத குறைய தீர்த்து கொண்டார் தயாநிதி

என் ஆசையை செய்துவிட்டேன் பாருங்க..’ என்று மாமியார், மருமகன் மேல் பார்வை வேறு. இருவரும் மற்றவரை பார்த்து தலையாட்டி கொண்டனர்.

ஜீவிதாவிற்கு நான்கு மாதம் முடிந்துவிட, அவளை கையிலே தூக்கி கொண்டு சுத்தினான் தந்தை. விடுமுறை தினம் எல்லாம் மகளுடன் தான். கைக்குழந்தையாக இருந்த போது பயத்தில் எந்தளவு விலகியிருந்தானோ, இப்போது அதை விட அதிகமாக மகளுடன் இருந்தான்

கூடவே மனைவி மேல் பார்வையும்  வித்தியாசமாக படிந்தது. பிள்ளை பெற்று வனப்பில் மிளிர்ந்த மனைவியை தள்ளி இருப்பது பெரும் அவஸ்த்தையாக இருந்தது. மனைவி அருகில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவன் நெருக்கம் கூடியது. இடித்து கொண்டு அமர்வது, கை பிடித்து கொள்வது, தனியே சிக்கினால் முத்தத்தால் திணற வைப்பது என்று அவன் ஏக்கம் மனைவிக்கு புரிய, ஐந்தாம் மாதம் கணவன் வீடு கிளம்ப முடிவெடுத்தாள் பெண்

மறைமுகமாக பாட்டியிடம் இது பற்றி பேச, அவரும் வீட்டில் எல்லோரும் இருக்கும் நேரம் பார்த்து, “ஜமுனாவை அஞ்சு மாசத்துக்கு கூட்டிட்டு போலாம்..” என்றார்

யுவராஜ் மனைவியைஉனக்கு ஓகேவா..?’ என்று பார்க்க,  அவள் கண்ணடித்து வைத்தாள். இவ வேலை தானோ இது..? சந்தேகம் கொள்ள

இங்கு தயாநிதிஅதெல்லாம் முடியாது, ஏழு மாசத்துக்கு அனுப்புறோம்..” என்றார்

யுவராஜ் தன் அத்தையை பார்க்க, அவர் கணவனிடம் ஏதோ கேட்பது போல குனிந்து, “நாம எல்லாம் இதை பத்தி பேசவே கூடாதுங்க..” என்றார். தயாநிதி கள்ள முழி முழித்தார். அவர் மூன்று மாதத்திற்கே அழைத்து வந்தவராயிற்றே

Advertisement