Advertisement

அதில் இருந்து இன்னும் நெருக்கம் கூடியது. பேச்சில் அந்நியோன்யம் அதிகரித்தது. என்ன இருந்தாலும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்பத்தை எடுத்து செல்லும் போது கிடைக்கும் அந்த நெருக்கம், பலம் வேறு தானே..? ஆனால் அந்த நெருக்கம் என்பது அணைப்பை தாண்டி அடுத்த கட்டத்தை எட்டவில்லை.

அந்த வருடத்துக்கான  பள்ளி, கல்லூரி முடிவுக்கு வந்தது. ஜமுனாவிற்கு கவுன்சிலிங் எல்லாம் முடித்து கல்லூரி ஆரம்பித்தது லேட் தானே..? தாரணி மாதவனுடன் சென்னை வந்தாள். ஜீவிதா பள்ளியும் முடிந்துவிட காமாட்சி பேத்தியுடன் ஊருக்கு செல்ல திட்டம். தாராணியும் ஊரில் இருக்க, எல்லாம் சேர்ந்து சமாளித்து விடலாம் நம்பிக்கை. ஜீவிதாவிற்கு ஊருக்கு செல்ல பிடித்திருந்தது. தாரணி மாதவனுடன் அவர்களும் கிளம்ப ஏற்பாடானது.

அந்த இடம் வாங்கியது பற்றி மாதவன் யுவராஜிடம் பேசினான். அவனுக்கு முதலில் இஷ்டமில்லை. ஆனால் தயாநிதி வற்புறுத்தலில், அவனும் பணம் கொடுத்து வாங்கிவிட்டான். தாரணி பேரில் தான் வங்கியிருந்தனர். மூன்று நாட்கள் அங்கு இருந்தனர். பகலில் தாரணி, மாதவன் மட்டும் சென்னையை சுற்ற, இரவில் குடும்பத்தோடு வெளியே சென்றனர்.

வார இறுதி நாளில் கடற்கரை ரிசார்ட் சென்றனர். முதல் மாலை சென்று அடுத்த நாள் மாலை வரை. ஒரு நாள் முழுதாக பீச்சில் ஆட்டம், கேம்ஸ், படம், உணவு, அரட்டை என்று இருந்தனர். ஆகாஷ் தான் தாரணியை கடுப்பேற்றி கொண்டிருந்தான். அடுத்த நாள் மாலை கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். மேலும் இரண்டு நாட்கள் கழித்து ஜீவிதா, காமாட்சியுடன் கிளம்பினர்.

“பாப்பா பத்திரம், யாரையும் ரொம்ப படுத்த கூடாது, தாத்தா பாட்டிங்க பாவம், சேட்டை அதிகம் இருக்க கூடாது, ஐஸ் கிரீம் நோ, கேக் நோ, பாட்டில் ஜுஸ் நோ, அப்புறம்..”

“போதும்டி.. என் பொண்ணு வளர்ந்துட்டா, அவளுக்கு இதெல்லாம் தெரியும்..” என்ற யுவராஜ். “அப்படி தானே பாப்பா..” என்று மகளிடம் உறுதி வாங்கி கொண்டான்.

“நான் குட் கேர்ளா இருப்பேன்ப்பா..” மகள் தலை ஆட்டி சொல்லி கிளம்பினாள். யுவராஜ் பூரிப்புடன் மகள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து அனுப்பி வைத்தான். வீடு பெற்றவர்களுக்கு அமைதியாகி போனது. மகளை அனுப்பியிருக்க கூடாதோ..? பேசியும் கொண்டனர்.

இருவர் மட்டுமே. வேலைகள் எப்போதும் போல. ஆர்த்தி, ஆகாஷ் வந்து சென்றனர். மற்றபடி இரவில் அணைத்து படுப்பது மட்டுமே மாற்றம். ஒரு முத்தம் கூட இல்லை.

நாட்கள் செல்ல செல்ல ஜமுனாவிற்கு அந்த அணைப்பும் எப்படியோ இருந்தது. தள்ளி படுத்துவிடுவாள். யுவராஜ் முதல் சில நாட்கள் பார்த்தவன், “ஏண்டி..?” என்றான்.

“நான் என்ன உங்களுக்கு பொம்மையா..?” ஜமுனா உர்ரென்று கேட்டாள். யுவராஜ் கண்கள் மின்னியது. மனைவியின் மன காயங்கள் ஆறி வருகிறது. என்னை தேடுகிறாள் பெண்..!

“இல்லை தான்.. தள்ளியே படுத்துக்கோ..” என்றுவிட்டான். அதில் இன்னும் கடுப்பாகி போனாள் மனைவி.

இயல்பாக தொடுவது கூட அதன்பின் பஞ்சமாகி போனது. உடைமாற்ற, கதவை புதிதாக லாக் செய்தாள். அவள் கிளம்ப சென்றாலே அவன் ரூம் பக்கம் போக மாட்டான். ஆனாலும் கோபத்தை காட்ட இப்படி, புரிந்த யுவராஜ்க்கு சிரிப்புடன் ஏக்கமும் கூடி கொண்டே போனது.

மகள் இல்லா வீட்டில் புது தம்பதிகள் போல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். ஜமுனா மாற்றம் இயல்பானதா..? எனக்காக பார்க்கிறாளா..? இல்லை என்னை ஏற்க ஆரம்பித்துவிட்டாளா..? யுவராஜ் இழுத்து பிடித்த பொறுமையுடன் மனைவியை பார்த்திருந்தான். அவள் பார்க்கும் நேரமெல்லாம் நொடித்து சென்றாள். இழுத்து பிடித்து அவளை ஒரு வழி செய்யும் வேகம்.

ஒருநாள் அவசரமாக கிளம்பி வெளியே வந்தவள், எதிரில் வந்த கணவனுடன் நன்றாக  ஒரு மோதல். ஹப்பா.. ஜமுனா வலிக்கு கிறுகிறுத்து கணவனை பார்க்க, அவனோ கண்கள் மின்ன தலை கோதி விலகி சென்றான். முதலில் புரியா  பெண்ணுக்கு சில நிமிடங்கள் சென்று புரிய, ‘இவரை..’ என்று வெட்கத்துடன் பல்லை கடித்து கொண்டாள்.

இரவில் அவன் அணைப்புக்கு இழுக்க, முறுக்கி கொண்டாள். மனைவி தன்னை கண்டுகொண்டாள் என்று புரிய, புது மாப்பிளை போன்ற உல்லாசம். “இப்போ என்னன்ற..?” என்றான்.

“ஒன்னுமே இல்லை.. அமைதியா படுங்க..” என்றாள் மனைவி.

“இல்லை ஏதோ இருக்கு.. என்ன சொல்லு..” என்றான் வம்பாக.

“உங்களுக்கு அப்படி தோணினா நீங்க சொல்லுங்க, எனக்கு எதுவும் இல்லை தான்..” என்றாள் மனைவி.

“அதெப்படி எதுவும் இல்லாம போகும், எனக்கு இருக்கே..” என்றான் கணவன் சீண்டலாக.

“இருக்கா.. ரொம்ப ஆச்சரியம் தான்..” ஜமுனா அதிசயித்தாள்.

“ஒய்.. என்ன கிண்டல் பண்றியா..?” விடாமல் இழுத்து தன் மேல் போட்டு கொண்டான்.

“ச்சே ச்சே.. நான் என்ன கிண்டல் பண்ண போறேன்..” மனைவி உதடு சுளித்தாள்.

யுவராஜ் கண்கள் உதட்டில் பதிய, “இன்னொரு முறை சுளியேன்..” என்றான் குரல் கரகரக்க. ஹான்.. ஜமுனா அவன் குரல் மாற்றத்தை கண்டு கொண்டாள். சட்டென தைரியம் எல்லாம் எங்கோ ஓடிவிட, விலக பார்த்தாள். முடியவில்லை. அவன் கண்கள் அவள் உதட்டில் தான் அச்சடித்திருந்தது.

கணவன் பார்வை.. ஜமுனா மேலுதட்டில் சட்டென வேர்க்க, இதய துடிப்பு அதிகரித்தது. காதோரம் சூடானது. உடலில் லேசான நடுக்கம். அவனின்  மனைவி இது தான். என் பொண்டாட்டி என் நெருக்கத்தில் இப்படி தான். உணர்ந்த யுவராஜ் அடுத்த நொடி அவள் உதடுகளை பிடித்து கொண்டான். மெல்ல எல்லாம் இல்லை. வன்மையாக, தீவிரமான முத்தம்.

அவன் கைகள் மனைவியை இன்னும் தன்னுடன் இறுக்க, உதடுகளோ இடைப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கூடி நலம் விசாரித்து கொண்டது. தங்கள் தேடலை விடாமல் வெளிப்படுத்தியது. பிரிவுக்கு கோவத்தை காட்டி வலிக்க வைத்தது. அதுவே மருந்தையும் கொடுத்தது.

யார் உதடு என்று உணரும் நிலை இல்லா மறுத்து போகும் அளவு ஒரு முத்தம். ஜமுனா  உடல் எங்கும் நடுக்கம் கண்டது.  அவன் சொல்லும் போது இப்படி என்று நினைக்கவில்லை. முத்தத்துக்கே சோர்ந்து மூச்சு வாங்கினாள். யுவராஜிடமோ இன்னும் இன்னும் தேடல் தான். கன்னம், காது, மூக்கு என்று முத்தமிட்டு கடித்து சுவைத்தான்.

இன்று இந்த நெருக்கம் அவர்களே எதிர்பாராதது. ஆனால் நெருங்கிவிட்ட பிறகு, விலக முடியுமா..? தீ தான் பற்றி கொண்டதே..! அணைக்காமல் அணையாது. அதிலும் மூன்று வருடமாக கனன்று கொண்டே இருந்த  தீ  அதன் இடம் சேர்ந்து பரவ ஆரம்பித்த பிறகு, எப்படி குளிரும். அது அவன் மனைவி கையில் தான் உள்ளது.

யுவராஜ் கைகள் அவள் உடலை வளைக்க, “என்னால இனியும் முடியாதுடி..” என்றான் தாபமாக. ஜமுனா, அவன் நெஞ்சிலே மறைந்து கொள்ள, “பதில் சொல்லுடி..” என்றான் கணவன் முகம் நிமிர்த்தி.

“மாமா..” ஜமுனா அவன் முகத்தோடு முகம் ஒட்டி கொள்ள, திரும்ப உதடுகளை தனக்குள் இழுத்து கொண்டான். கைகள் உடலில் பாய்ந்தது. முதல் இரவில் இல்லா வேகம் கணவனிடம். மாமா.. ஜமுனா தடுக்க பார்க்க, கட்டுப்பாடே இல்லை. அவனின் ஏக்கத்தின் அளவு புரிய, பெண் விட்டுவிட்டாள்.

புதிதாக உணரும் துடிப்பு வேகம். இருவர் உடலும் காயம் கண்டது. வலி கண்டது. மருந்தும் இட்டு கொண்டது. கண்களை மூட விடா ஒரு இரவு. யுவராஜ் இத்தனை வருட கட்டுப்பாடுகளுக்கும் சேர்த்து மனைவியை தன்னுள் நிரப்பி கொண்டான்.

ஊடல் வேண்டாம்

ஓடல்கள் வேண்டாம்

ஓசையோடு நாதம் போல

உயிரிலே உயிரிலே கலந்து விடு..!!

Advertisement