Advertisement

“அது வேற இது வேற, என் பொண்ணு வீட்ல சொத்து வாங்குறதுக்கு பணம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா..? ஏன் அவளுக்கும் தானே அது சொத்து, இல்லன்னு சொல்வீங்களா..?”

“அதுக்கு நீங்க தனியா வாங்கி கொடுக்கணும்..”

“வாங்கி கொடுக்கிறது மட்டுமில்லை, சேர்த்து வச்சிருக்கிறதும் என் பொண்ணுங்களுக்கு தான்..”

“சரி அப்போ இதை விடுங்க, அவங்க எப்படியோ வாங்கிட்டு போகட்டும்..”

“அப்படி எப்படி விட்ற முடியும்..?”

“மாமா.. இது நான் மட்டுமே வாங்குற சொத்து இல்லை, ஆகாஷும் இருக்கான், இப்போ நீங்க ஜமுனாக்காக பணம் கொடுத்தா, ஆர்த்தி, ஆகாஷ் பத்தி நாம யோசிக்கணும் இல்லை.. இது பின்னாடி எப்படி போகும்ன்னு உங்களுக்கு தெரியாதா..?” யுவராஜ் இழுத்து பிடித்த பொறுமையுடன் சொன்னான். இது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சொல்ல வைக்கிறார் மனிதர். 

அதே போல் தான், “ஆகாஷ்க்கு என்ன, அவனும் என் மாப்பிள்ளை தான்..? இல்லைனா ஆகாஷ் மாமியார் வீட்லயும் பொண்ணுக்கு கொடுக்கட்டும்.. நான் அதுக்காக பார்த்து என் பொண்ணு, மாப்பிள்ளைக்கு செய்ய கூடாதுன்னா எப்படி..?” என்றார் மனிதர். இவரோட நிச்சயம் முடியாது, புரிந்து போனது. 

“நீங்க பணத்தை எடுத்துட்டு போங்க மாமா,  நான் இந்த வாரம் ஊருக்கு வரேன்.. பேசிக்கலாம்..” என்றான் மருமகன். 

“இங்க அங்கன்னு எதுக்கு யுவராஜ்..? வீட்டுக்குள்ள வந்தது இங்கேயே இருக்கட்டும்..”  தயாநிதி கொண்டு வந்த பணத்தை வைத்துவிட்டு தான் சென்றார்.

கல்லூரி முடிந்து வந்த ஜமுனாவிற்கு  அம்மா மூலம் விஷயம் தெரிய, கணவன் முகத்தை தான் பார்த்தாள். “என்ன என் முகத்துல..?” என்றான் கணவன். 

“நீங்க கொஞ்சூன்டு பாவம் தான் மாமா..” என்றாள் பெண். யுவராஜ் சிரித்துவிட்டான். 

“உன் அப்பாக்கு சொல்லுடி, சமயங்கள்ல ரொம்ப படுத்துறார்..” என்றான். 

“அவர்கிட்ட உங்களாலே பேச முடியல, நான் என்ன பண்ண..?” என்றாள் மனைவி. 

“ஹேய் கேடி.. அவர் வீட்ல இருந்துகிட்டே மூணு வருஷம் கமுக்கமா வீட்டு செலவு எல்லாம் பார்த்திருக்க, உன்னால அவர்கிட்ட பேச முடியாதா..?”  

“அது கோவம், அந்த வார்த்தை பேசுவாரானு, இது உங்களுக்குள்ளதுப்பா..”

“புருஷனுக்கு கொஞ்சமாவது சப்போர்ட் பண்ணனும்ன்னு தோணுதாடி உனக்கு..? பணத்தை வீட்ல வச்சுட்டு போயிருக்கார் மனுஷன்..”

“கண்டிப்பா  அந்த பணத்துக்கு எதாவது யோசிச்சிருப்பீங்க,  நான் என்ன பேசி பல்ப் வாங்கட்டும்..” மனைவி சொல்ல யுவராஜ் முகத்தில் ஒரு சிரிப்பு. “அப்போ ஏதோ பிளான் போட்டீங்க, என்ன அது..?” ஜமுனா கேட்க, 

“சொல்ல மாட்டேன்டி, நீ தான் எனக்காக பேச மாட்டேன் சொல்லிட்ட இல்லை, உன்னை அவரை சேர்த்து பார்த்துகிறேன்..” என்றுவிட, ஆகாஷ், ஆர்த்தி வந்தனர். 

“டின்னர்  நானே எடுத்துட்டு வந்துட்டேன்க்கா..” என்றாள் ஆர்த்தி. ஜமுனாவிற்கு நல்ல பசி. யுவராஜ் ஸ்னேக்ஸ் வாங்கி வைத்திருக்க, அதனுடன் ஆர்த்தி உணவையும் வைத்து எல்லாரும் இரவு உணவை முடித்தனர். 

“இதுக்காகவே இனி கிழவியை நான் வம்பிழுக்க கூடாது..” ஆகாஷ் மனைவி உணவை உச்சு கொட்டி சாப்பிட்ட படி சொன்னான். 

“அப்போவும் நீங்க கத்துக்கலை தானே, நான் தான் பாட்டிகிட்ட கத்துக்கிட்டேன்..” என்றாள் ஆர்த்தி. 

“நேத்து நான் செஞ்சு கொடுத்த பொங்கல்.. அது என்ன கணக்கு..? பாப்பா நீ சொல்லுடா, சித்தப்பா பொங்கல் சூப்பர் தானே..?” என்று அண்ணன் மகளிடம் கேட்க, 

அவளோ “சித்தி சட்னி சூப்பர்..” என்றாள். 

“நீயுமாடா.. அது சரி தாய்குலங்கள் சேர்ந்தா எங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது தான்..” ஆகாஷ் நொடிக்க, பேச்சு அரட்டைக்கு சென்றது. ஊருக்கு போவதை பற்றி பேசி அவர்கள் கிளம்பினர்.

அதன்படி எல்லோரும் வார இறுதிக்கு ஊர் கிளம்பினர். மறுநாள் இவர்களை பார்க்க வந்த தயாநிதி பணத்தை திரும்ப எடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்க, “சரி.. விடுங்க..” என்றுவிட்டான் மருமகன்

குப்புசாமியிடம் நேரில் சென்று எப்போ ரெஜிஸ்ட்ரேஷன்.. பணம் ரெடி..?” என்று பேசி வந்தனர் ஆண்கள்

ஆகாஷ் மனைவியுடன்  மாமியார் வீடு சென்றான். தாரணியும் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்க, யுவராஜ், ஜமுனா அவர்களை சென்று பார்த்தனர். அப்படியே ஒன்றாக தயாநிதி வீடு சென்றனர்

ஜெயலக்ஷ்மி மருமகனிடம் பணம் பற்றி கேட்டார். யுவராஜ் அவன் நினைப்பதை சொல்ல, “அப்படி தான் செய்.. இவருக்கு  நம்மால புரிய வைக்க முடியாது, பொண்ணும் அவர் பணத்துல படிக்கலை, நீங்களும் வாங்க மாட்டேங்கிறீங்கன்னு கோவம்..” என்றார் ஜெயலக்ஷ்மி

அங்கேயே இரவு உணவு முடிக்க, ஜீவிதா பாட்டி வீட்டிலே தங்கிவிட்டாள். தாரணி, மாதவனும்கூட.   யுவராஜ் தம்பதியை  தங்க சொல்லி கேட்க, அவன் மறுத்து மனைவியுடன் கிளம்பிவிட்டான். நேரம் ஆகிவிட்டிருந்தது

பெரியவர்கள் இவர்கள் வரவும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு தூங்க சென்றனர். “நாங்க கதவு பூட்டிக்கிறோம்..” யுவராஜ் சொல்லி, மனைவியுடன் களத்திற்கு வந்தான்

வெள்ளாமை எதுவும் இல்லாததில், முனியன் காவலுக்கு இல்லை. வண்டிகள் மட்டும் நிற்க, மெயின் கேட்டை பூட்டி கொண்டான். களத்தின் விளக்குகளையும் அணைத்து, மனைவியிடம் சென்றான்

ஜமுனா அவனை பார்த்தபடி JCB மேல் சாய்ந்து நின்றிருந்தாள். இவன் அவளை உரசி பக்கத்தில் நின்றான். சில்லென்ற காற்று, இரவு நேரம், அவ்வளவு அமைதி. தங்கள் வீடு, ஊர்.. முகம் எப்போதும் விட மலர்வாக இருந்தது.

“ஆகாஷுக்கு அப்பா பணம் கொடுத்தது தெரியும் போல..” என்றாள் ஜமுனா

அம்மா சொல்லியிருப்பாங்க..” யுவராஜ் சொன்னான்

தப்பா எடுத்துப்பாரா..?” ஜமுனா கேட்க

நாம அவனுக்கு என்னென்ன பணம்ன்னு சொல்லி தான் நிலத்துக்கு கட்டுறோம், அப்படி தோணினா கேட்பான், சொல்லிக்கலாம்.. இரண்டு மருமகள் இருக்கிற வீட்ல இப்படி நடக்கிறது சகஜம் தான். அம்மா வீட்டு ஆளுங்க உள்ளே நுழையும் போது அவங்களுக்குள்ள எந்த காம்பேக்ஸும் வந்திட கூடாது. முக்கியமா பணம் விஷயத்துல தான் உடையும். எல்லார் வீட்டு பைனான்ஷியல் ஸ்டேட்டஸ் ஒரே மாதிரி இருக்காது இல்லை..” என்றான்

உண்மை தான்.. அப்பா சீக்கிரம் புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்..” என்றவள், “கடைசில அந்த பணம் தான் எடுத்திருக்கீங்க இல்லை..” என்றாள்.  

இப்போ என்ன உன் அக்கவுண்ட்ல இருக்க பணத்தை அவசரம்ன்னா தர மாட்டியா என்ன..?” என்றான் கணவன்

நீங்க எடுத்தா சரி..” ஜமுனா உதடு சுளிக்க, யுவராஜ் கண்கள் அவள் உதட்டில் அழுத்தமாக பதிந்து விலகியது. மனைவிக்கும் அவன் தவிப்பு புரிந்திருக்க வேண்டும்

ஏன் மாமா இப்படி..? நம்மால நடந்ததை கடந்து வரவே முடியாதே..?..” ஜமுனா மறுகவே செய்தாள்

ஏன் முடியாது..?” யுவராஜ் அவள் கை பிடித்து இழுக்க, அவன் நெஞ்சோடு மோதி நின்றாள்.

“முதல்ல இப்படி மறுக்கிறதை நிறுத்துடி, தப்பு.. தோத்து போயிடுறது ஆகாது..” என்றான் அழுத்தமாக.

“நீ இப்படி பேசும் போது தான் நான் ரொம்ப தோத்து போயிட்டதா இருக்கு.. நாம அப்படியா இருக்கோம்ன்னு ரொம்ப அழுத்துது..” என்றான் அவள் கை பிடித்து இறுக்கமாக.

“நான் எனக்காக தான் உன்னை அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தப்பா என்ன..?” யுவரஜிடம் ஒரு கோவம். ஜமுனா அவனை பார்த்து நிற்க, “என்னடி தப்புனு சொல்றியா..?” அவள் கன்னம் பிடித்து கேட்டான். 

“விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ தான் என் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் சின்ன பேச்சு கூட இல்லாம விலகி இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..?”

“உங்களை இருக்க சொல்லி நான் சொல்லலையே..?”

“நீ சொல்லலை தான், ஆனா படிக்கிற பொண்ணு, அதுவும் ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுன்னு நான் தான் விலகி இருந்தேன், ஆனா என்னோட அந்த கட்டுப்பாடு தான் நம்ம கல்யாணத்து காரணம்..” என்றான். 

‘அதெப்படி..?’ ஜமுனா விழிக்க, 

“ஏதாவது ஒரு நேரம் நமக்காக வாழணும்ன்னு தோணாதா..?  அத்தனை வருஷம் உனக்காக பார்த்து தள்ளி நின்ன எனக்கு இன்னும் ஒரு நாலஞ்சு வருஷம் அப்படியே இருன்னு சொன்னா முடியுமா..? கண்டிப்பா முடியாதுன்னு தோணிடிச்சு, கல்யாணம் வைங்கன்னு ஒரேடியா நின்னு பண்ணிக்கிட்டேன், நல்லா சந்தோஷமா வாழ்ந்தேன், ஆனா என் நேரம் பணம் என்னை போட்டு அமுத்திடுச்சு..” 

“வீட்டுக்கு தலைமகனா அன்னைக்கு நான் எங்க பரம்பரை சொத்தை காப்பாத்தலைன்னா, துப்பில்லா புருஷன்னு பேர் வாங்கினதுக்கு பதில் துப்பில்லாத மகன்னு பேர் வங்கியிருப்பேன்..”

அப்போ என்னமோ என் பொண்டாட்டி என் பேச்சை கேட்பான்ற எண்ணம். எனக்குள்ள அந்த புருஷன் அதிகாரம் இருந்திருக்கலாம், மத்தபடி நான் வீட்ல கூட  அந்த ப்ராஜெக்ட் வச்சு எடுத்த ரிஸ்க் பத்தி சொல்லலை. தாத்தாக்கு கொஞ்சம் தெரியும். ஏன் எல்லோரையும் பயப்படுத்தனும்ன்னு நினைச்சேன், ஆனா உன்கிட்ட உட்கார்ந்து பேசியிருக்கணும், புரிய வைச்சிருக்கணும்னு இப்போ இப்போ தோணுது..”

நீயும் தானே நைட்டும் பகலும் படிச்ச, ஒரு வருஷம் உழைச்ச, நான் அதுக்கு மரியாதை கொடுத்திருக்கணும், நல்லா படிக்கிற பொண்ணு தானே, அடுத்த முறை எழுதட்டும்னு தோணினது நிஜம். இல்லன்னு சொல்லலை, ஆனா அதுவே உன்னை இவ்வளவு பாதிக்கும்ன்னு எனக்கு தெரியாத விஷயம். பணம் கஷ்டம்ன்னா அடுத்து வேற பேச்சு நம்ம வீட்ல இருந்தது இல்லை..”

ஆனா இங்க பணம் மட்டுமே விஷயம் இல்லை. என்கிட்ட உனக்கான எதிர்பார்ப்பு, நம்பிக்கை, அதை நிச்சயம்  நான் உடைச்சிருக்க கூடாது, ஒத்துகிறேன், எனக்கு புரியாத விஷயங்கள் இது, புரிய வை. அதுக்காக தோத்துட்டேன் சொல்லாத, அது உனக்கு மட்டுமில்லை எனக்கும் தண்டனை தான்..”

வாழ்க்கையில் தோற்கிற அளவு இது இல்லை. ஒரு புரிதலின்மை. முதிர்ச்சியின்மை. கல்யாண வாழ்க்கையில ஒவ்வொரு சம்பமும் புது புது அர்த்தம் தான். இன்னைக்கு தோன்றது நாளைக்கு வேறயா தான் தெரியும். ஒருத்தரை அதிகமா புரிச்சுகிட்டா கூட, ஒரு கட்டத்துல வெறுத்து போயிடும். சுவாரசியம் இருக்காது..” 

நமக்குள்ள இருக்க விருப்பம் புரிதலை கொடுக்காதுடி, அது வேற, அதுக்கு நிறைய மெனக்கெடனும், காயம் வாங்கணும், வலிக்கனும், விழுகணும். உடனே தோத்துட்டேன்னு ஓடிட கூடாது, நின்னுட கூடாது, அந்த காயத்துக்கு மருந்து தேடி எழுந்து நிற்கிறதுல தான் இருக்கு கல்யாண வாழ்க்கை வெற்றி..”

“சும்மா இல்லடி ஐம்பது, அறுபது  வருஷம் ஒன்னா வாழணும்பிள்ளைங்க கடந்து நமக்காகவும்  வாழணும். நானும், நீயும் அவ்வளவு சீக்கிரம் கிவ் அப் பண்ற ஆளுங்களா என்ன..? என்னனு பார்த்துட வேணாமா..? நமக்குள்ள வெற்றி தோல்வி வந்தா எல்லாம் முடிஞ்சது..” 

நமக்குள்ள எல்லாத்தையும்  போட்டு அழுத்துகிட்டே நீ பொண்டாட்டியா மூவ் பண்றதுக்காக நானும் மூவ் பண்ணா அது நிச்சயம் நிறைவான வாழ்க்கையா இருக்காது. நீ சொன்னது தான் விருப்பம் எப்போ வெறுமையா மாறும்னு நமக்கே தெரியாது. தாம்பத்தியம் எல்லா ஊடலுக்கு தீர்வில்லைடி, அது இன்னும் உடைச்சு விட்டுடும்..”

என்னை நீ விருப்பத்தோடு தான் ஏத்துக்கணும். தாங்கணும், நான் என்னையே கட்டுப்படுத்தாத தேடலோட தான் உன்கிட்ட வரணும், என்னோட வேகம், தாபம், கெஞ்சல், கொஞ்சல் எல்லாம் உன்கிட்ட மட்டும் தான். வெளியே ஆம்பிளைடான்னு முறுக்கி விட்டுட்டு திரியற மீசை  உன் காலுல தான் உரசி நிக்குது. இவ்வளவு தான் காதல், கல்யாணம் எல்லாம்..” 

“நீ என்னை ஜெயிச்சு என்னையும் ஜெயிக்க வைடி.. அது தான் எல்லாம்..” என்றான் மனைவி நெற்றி முட்டி.

Advertisement