Advertisement

கேளாய் பூ மனமே 23 PREFINAL 

அவள் மனதில் உள்ள அழுத்தங்களை முன்பு போல வருடங்களாய் மறைத்து வைக்காமல், தன்னிடம் வெளிப்படையாக கேட்டதே யுவராஜுக்கு நிம்மதி தான். அதிலும் அழுகாமல், அவளின் ஆதங்கமாக, கோவமாக வெடித்தது  இன்னுமே பேராறுதல் தான்.  

கோவமோ, ஏமாற்றமோ, ஆதங்கமோ அவரவரின் இடம் சார்ந்ததே. ஜமுனாவின் ஏமாற்றத்தை, வேதனையை சரியாக புரிந்து கொள்ள முடிந்தவனுக்கு, அதற்கான  பதில் ஒரு நாளில் கொடுக்க கூடியதே இல்லை.

விளக்கங்கள்.. அவன் எதையும் மறைத்து செய்யவில்லை. அவனுக்கான நியாயம் என்பதும் மிக வெளிப்படையானதே. புரிந்து கொள்ள கூடியதே

எது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றால் ஆண் பெண் சார்ந்த நுண்ணிய உணர்வுகள். ஜமுனாவின் உணர்வுகள்..! 

தான் படிக்க வைக்காத கோவமே அவளிடம்..’ யுவராஜின் மூன்று வருட எண்ணம் இது தான். அதனாலே படி, படி என்று அவளிடம் சுற்றி திரிந்தான்

என்னோட கோவம் இது தான், வேதனை இது தான், ஏமாற்றம் இது தான்..’ மனைவி சொல்லி அழுகும் வரை அவனுக்கு அதை புரிந்து கொள்ளவே  முடியவில்லை தானே..?  

பிடித்தம் புரிதல் ஆகாது..!

“நீ தோத்துட்டேன்னு உன்னை நீயே போர்ஸ் பண்ணி என்னோட வாழ நினைக்கிற ஜமுனா..? உன்னாலே முடிஞ்சுதா அது..?”

“நான் உன்கிட்ட நெருங்கினா உனக்கு எங்கெங்க சிவக்கும், எங்கெங்கே வேர்க்கும், எங்கெங்கே நடுங்கும்ன்னு எனக்கு தெரியும்டி, என்கிட்ட பேசுற ஜமுனா என் பொண்டாட்டி இல்லை, எனக்கு இவ வேண்டாம். என் பொண்டாட்டி தான் வேணும்..” யுவராஜ் மனைவி முகம் பார்த்து சொல்லி அழுத்தமாக அவளை தன்னுடன் பிணைத்து கொள்ள, 

“உங்களுக்கு என்னை புரிஞ்சும் ஏன் மாமா..?” என்றாள் மனைவி ஆதங்கமாக. 

தன் அணைப்பில் இருக்கும் மனைவியை தட்டி கொடுத்தவன், “எல்லாம் பேசி தீர்த்திட முடியாது ஜமுனா.. நமக்குள்ளே மூச்சடைக்கிற நிலை தான் இப்போ, கூட பணத்தை பத்தின டென்ஷனும் இருக்கு..” என,

உங்க பணம் எடுக்க மாட்டிங்களா..?”

ஜமுனா திரும்ப அது வேண்டாம், இது நம்மளோட லைப், நமக்குள்ள என்ன நடந்தாலும் அதுக்கு கண்டிப்பா இரண்டு பேரும் தான் பொறுப்பாவோம். யோசிச்சு யோசிச்சு  உன்னை நீயே இன்னும் ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத..” என்றபடி அவள் முகம் துடைக்க, ஜீவிதா தூக்கத்தில் புரண்டு பக்கத்தில் அப்பாவை தேடினாள்

யுவராஜ் மகள் கை பிடித்து தட்டி கொடுத்தவன்தங்கள் பேச்சில் மகள் தூக்கம் கலைகிறது புரிய, கணவன், மனைவி இருவரும் அமைதியாகினர். ஜமுனா படுக்க போக, அவளை தன்னுடன் அணைத்து படுத்து கொண்டான் யுவராஜ்

ஜமுனாவிற்கு அவள் மனதின் அழுத்தத்தை கணவனிடம் கொட்டிவிட, அமைதி தான். அதனுடன், ‘இந்த ஏமாற்றதோடு உன்னால என்கூட வாழ முடிஞ்சுதா..?’ கணவனின் கேள்வி அவளை தொட்டிருந்தது. என்னை புரிந்து கொண்டிருக்கிறார்

அவள் இருவரின் நெருக்கங்களை பற்றி பேசினாலும் உள்ளுக்குள் திக் திக் தான். கணவன் நெருங்கினால் மறுக்க போவதில்லை. ஆனால்..? ம்ஹ்ம் இந்த கேள்விக்குறி இன்னுமே அவர்களிடையே உள்ளதே..! இருவரும் அவரவர் எண்ணங்களுடன் தூங்கி போயினர்

விடியல் எப்போதும் போல அவர்களின் நாளை துவக்கியது. யுவராஜுக்கு பணத்தை பற்றிய தேவைக்கு இன்னும் முடிவு கிட்டவில்லை. ஜமுனா சொல்வது போல அவளிடம் இருக்கும் அந்த பணம் முழுக்க முழுக்க அவனின் பணம் தான்

ஆனால் தன் பணத்தை எடுக்க கூடாது என்ற மனைவியின் வைராக்கியமோ என்னமோ அவனுக்கும் அந்த பணத்தை தொட முடியாது. அது அவளுக்காக மட்டுமே அவன் கொடுக்கவில்லையே. மகள்.. அவர்களின் மகளுக்காகவும் தானே கொடுத்தான்

பள்ளி சேர்க்க போகிறாள் என்று சொன்ன போது ஒரு வருடத்திற்கும் சேர்த்து அன்றே அனுப்பி வைத்தானே..? அதில் அவன் மகள் படிக்கவில்லை தானே..? இப்போது அந்த பணத்தை எடுத்து நான் நிலம் வாங்குவதா..? ஜமுனா பணம், அவன் பணம் வேறில்லை தான். யார் பணத்தில் மகள் படித்தாலும் ஒன்று தான். ஆனால் தன் பணத்தை தள்ளி வைக்கும் மனைவி, அதை தான் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஆகாஷ், அருணாச்சலம் இருவரும் அவன் பதிலுக்காக காத்திருந்தனர். “நகை தானே இருக்கே, எடுத்துக்கோ தம்பி, எதுக்கு இந்த பாடு..?” காமாட்சி பேரனிடம் கேட்கவே செய்தார். அவன் முடிவாக மறுத்துவிட்டான்

இதுக்கு இல்லாம வேறெதுக்கு நகை..? உங்க அப்பாக்கு இருக்கிற சொத்து போதாததுமா..?” ஊருக்கு வந்திருந்த காமாட்சி மகள் ஜெயலக்ஷ்மியிடம் புலம்பி தள்ளினார்

இந்த வார இறுதிக்கு யுவராஜ் குடும்பம் ஊருக்கு வருவதாக இருக்க, காமாட்சி இரண்டு நாள் முன்னதாக வந்துவிட்டார். நம்பிக்கையான ட்ரவைர் மூலம் அனுப்பி வைத்திருந்தான் யுவராஜ். இவர்கள் ஓரிரு நாளிலே கிளம்பிவிடுவர். அவர் ஊரில் சேர்ந்து இருக்கவே இப்படி.

ஜெயலக்ஷ்மி அம்மாவை பார்க்க வந்திருக்க, “உங்க அப்பா  நிலத்தை பத்தி பிள்ளைங்ககிட்ட சொல்லி, அவங்களை வாங்க வச்சு அந்த பாடு படுத்துறார், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, தெரிய  வேண்டாமா..? கிழவனுக்கு என்னஎன் பேரப்பசங்க தானே முழிக்கிறாங்க..” என்று கணவரை காய்ந்து கொண்டிருக்க, வீட்டுக்குள் வந்த தயாநிதி இதை கேட்டு கொண்டே வர, காமாட்சி மருமகன் வரவும் பேச்சை நிறுத்தி அவரை வரவேற்று, உபசரித்தார்

தயாநிதி அப்போது எதுவும் கேட்டு கொள்ளாமல், மனைவியுடன் கிளம்பிவிட்டவர், மறுநாள் பேங்க் சென்று  பணபெட்டியுடன் மாமனார் முன் நின்றுவிட்டார்

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்திருந்த அருணாச்சலம், கேசவன் திகைத்து நிற்க, “தாரணி கல்யாண பணம் இருபது லட்சம் மாமா, நிலம் வாங்க சரிக்கட்டுங்க..” என்றார் தயாநிதி

மாப்.. மாப்பிள்ளை.. யுவராஜ் தான் முடிவெடுக்கணும், அவன் ரெடி பண்ணிட்டு இருக்கான்..” அருணாச்சலம் சொல்ல

நீங்க உங்க பேரன்கிட்ட சொல்லுங்க, நிலம் வாங்க நான் கொடுத்தா என்ன..?” என்றார் மனிதர்

இதென்ன அடுத்த பூகம்பமா..?’ மொத்த குடும்பமும் திணற,  ஜெயலக்ஷ்மிக்கு அழைத்துவிட்டார்  வைஜெயந்தி. யுவராஜ் விஷயத்தில் யாரும் முடிவெடுக்க முடியாதே..? 

எந்த செயல், எந்த பேச்சு மற்றவரை காயப்படுத்தும், தாக்கும் என்று தெரியாதவரா தயாநிதி..? என் பொண்ணுக்கு நான் செய்வேன், யார் என்னை என்ன கேட்கிறது வீம்பு வம்பு. ஜெயா ஒருவரின் வண்டியில் வேகமாக வந்துவிட்டவர், “என்னங்க இது..?” என்றார் கணவரிடம்

“என் பொண்ணு, மாப்பிள்ளைக்கு சொத்து வாங்க நான் கொடுக்கிறேன், என்ன இதுல..?” என்றார் அவர் விடைத்து

அதான் யுவராஜ் பார்த்துகிறானே..? அவன் ரெடி பண்ணிடுவான்..?” ஜெயா பொறுமையாக சொல்ல

அதான் ரெடி பண்ண முடியலையாமே..? அத்தை நேத்து தானே புலம்பிட்டு இருந்தாங்க..” என்றார் தயாநிதி

எல்லோரும் காமாட்சியை பார்க்க, அவர் விழித்து நின்றார். அருணாச்சலம் மனைவியை அப்படி ஒரு முறை. நேற்று வரை கணவரை வருத்து கொண்டிருந்த காமாட்சி இப்போது கணவன் பக்கமே திரும்பவில்லை. மருமகனை தான், ‘அடப்பாவி மனுசா..?’ என்று பார்த்திருந்தார். ‘என் பொண்ணுகிட்ட என் ஆத்தாமையை புலம்பினது ஒரு குத்தமாயா..?’ நொந்து போனார் மாமியார்.

“நான் யுவராஜ்கிட்ட கேட்கிறேன் மாப்பிள்ளை..” கேசவன் ஒருபக்கம் அவனுக்கு போன் செய்து கொண்டிருந்தார். யுவராஜ் அப்போது தான் ஒரு மீட்டிங் முடித்து ஆபிஸ் வந்து சேர்ந்தான். 

காமாட்சி இல்லை  என்பதால், மகளை அழைக்க செல்வதற்குள் இவன் வெளி வேலைகளை முடித்து விடுவான். பள்ளி முடிந்து மகளை வீட்டுக்கு கூட்டி சென்றுவிடுபவன், வீட்டில் இருந்தபடியே மற்ற வேலைகளை பார்ப்பான். இப்போதும் அப்படி தான் சென்று வந்தவன், கேசவனின் மூன்றுக்கு மேலான மிஸ்ட் கால் பார்த்து, உடனே அவருக்கு அழைத்துவிட்டான். 

“தம்பி..” என்று கேசவன் தள்ளி வந்து தயாநிதி பணம் பற்றி சொன்னார். யுவராஜ் நெற்றியை நீவிவிட்டு கொண்டான். வெயிலில் அலைந்து பசியில் வந்திருக்க, இது வேறா என்றிருந்தது அவனுக்கு

“இப்போ நான் என்ன பண்ணனும் சொல்றீங்க..?” அப்பாவிடம் கேட்டான் மகன். கேசவன் முழித்தார். 

“நான் என்ன தம்பி பண்ணட்டும்..?” மகனிடம் கேட்டார் தந்தை. 

யுவராஜ் மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், “மாமாகிட்ட போய்  போனை ஸ்பீக்கர்ல போடுங்க..” என்றான். 

கேசவன் மகன் சொன்னதை செய்தவர், “யுவராஜ்..” என்றார் தயாநிதியிடம். ‘பேசட்டும் எனக்கென்ன..?’ தயாநிதி விறைப்பாய் இருந்தார். 

“மாமா.. நான் பணம் ரெடி பண்ணிட்டேன்..” என்றான் யுவராஜ் அந்த பக்கம். 

“ரெடி ஆனா என்ன..? லோனுக்கு வாங்கினதை கொடுத்துடுங்க, அது எதுக்கு தேவையில்லாத வட்டி..?” என்றார் மாமனார். 

“அப்படி எல்லாம் எடுத்தவுடனே பணத்தை கட்ட முடியாது மாமா.. ஆறு மாசம் போகட்டும்..” என்றான் பொறுமையாக. 

“சரி.. அப்போ மத்த இடத்தில ரெடி பண்ண பணத்தை இதை வச்சு செட்டில் பண்ணிடுங்க..” என்றார் விடாமல். 

“மாமா.. லோன் ஒன்னு மட்டும் தான் கடனா வாங்கினது. மீதி எல்லாம் நம்மகிட்ட இருந்தது தான்..” என்றான். 

“அதெப்படி நேத்து கூட அத்தை பணம் கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தாங்க, இன்னைக்கு ஒருநாள்ல எல்லாம் செட்டில் ஆகிடுச்சா..? ஏன் நான் என் பொண்ணு, மாப்பிள்ளைக்கு கொடுத்தா என்ன..? நான் என்ன ஆகாதவனா..? அப்போ நான் சம்பாதிக்கிறது எல்லாம் யாருக்கு..? என்ன மாமா நீங்க சொல்லுங்க உங்க பேரனுக்கு, எப்போவும் நான் என்ன பண்ணாலும் எதிராவே  நிக்கிறார்,  இந்த முறை நான் பின் வாங்கிறதா இல்லை, மகளுக்கு, மருமகனுக்கு மாமனார் கொடுக்கிறது  அப்படியொன்னும் ஊர் உலகத்துல நடக்காதது இல்லைன்னு எடுத்து சொல்லுங்க..” மாமனார் குதித்தார். 

“இப்போ நீங்க வீட்டு மாப்பிள்ளையா வந்திருக்கீங்களா..? என் மாமனாரா வந்திருக்கீங்களா..?”  யுவராஜ் நிதானமாய் கேட்டான். 

“ஏன் யாரா வந்தா என்ன..?” மாமனார் உர்ரென்று கேட்டார். 

“வீட்டு மாப்பிள்ளையான்னா நீங்க உங்க மாமனார்கிட்டே பேசிக்கோங்க, பணத்தை கொடுத்துகோங்க, என்னவும் பண்ணுங்க. இல்லை  என் மாமனார்ன்னா என்கிட்ட பேசுங்க, நாம பேசலாம்..” என்றான் மருமகன். 

“உனக்கு மாமனாரா இருந்தாலும், நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையும் கூட, அப்படியெல்லாம் நான் எதையும் விடறதா இல்லை, இப்போ கொண்டு வந்த பணத்துக்கு என்ன வழி சொல்லுங்க..?” என்றார் மாமனார். 

யுவராஜ் அந்த பக்கம் அமைதியாகி போக, “உங்களுக்கு ஒரு  நியாயம் எங்க அண்ணன் மகனுக்கு ஒரு நியாயமா..?” ஜெயலக்ஷ்மி கேட்டார். 

“ஏன் நான் என்ன பண்ணேன்..?” தயாநிதி வேகமாக கேட்டார். 

“முன்ன ஒரு முறை நமக்கு  கஷ்டம் வந்தப்போ என் அண்ணா உங்ககிட்ட பணம் பத்தி கேட்டதுக்கு வாங்கினீங்களா என்ன..?” என்றார் ஜெயா. 

Advertisement