Advertisement

யுவராஜ் கட்டிலில் மகளை படுக்க வைக்க, ஜமுனா மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்கள் அறைக்குள்  நுழைகிறாள். இங்கு வந்து சென்ற போதும் ரூம் பக்கம் வந்ததில்லை. யுவராஜ்க்கும் இதே எண்ணம் தான். மனைவியையே பார்த்திருந்தான். நெஞ்சம் கனத்தது.

யுவராஜ் பார்வையை விலக்கி மகள் பக்கத்தில் அமர்ந்தான். ஜமுனா உடையுடன் ரிப்ரெஷ் செய்து வந்தாள். யுவராஜும்  சுத்தம்  செய்து வேஷ்டியுடன் வந்து படுத்தான். இந்த கட்டில் கொஞ்சம் சிறிய கட்டில் என்பதால், காலை மகள் பக்கம் நீட்ட, மனைவி பாதத்தில் பட்டது. எடுக்க நினைத்து, அப்படியே வைத்து கொண்டான்.

ஜமுனா மூடியிருந்த கண்களை இன்னும் மூடி கொண்டாள். உள்ளே பொங்கியது. கால் அழுத்தமாக மனைவி பாதத்தில். அந்த சிறிய தொடுகை.. அந்த ஸ்பரிசத்திலே சில மணி நேர தூக்கம். தாரணி வந்து கதவு தட்ட, ஜமுனா குடும்பம் குளித்து கிளம்பியது

பூஜை, அன்னதானம், அங்கயே சில மணி நேரங்கள் என்று மதியம் போல தான் வீடு வந்து சேர்ந்தனர்யுவராஜ் தம்பதிக்கு குலதெய்வம் முன்பு குடும்பமாக நின்றது நிறைவை, நம்பிக்கையை தந்தது. வீடு வந்து ஒரு தூக்கம். மாலை பலகாரத்துடன் ஆகாஷ், ஆர்த்தி இருவரும் ஆர்த்தியின் அம்மா வீடு சென்றனர்.  

தயாநிதி, சின்ன மகளுக்கு வரன் வந்திருப்பதாக சொன்னார். யார் என்ன..? என்று பேச, பெரிய மருமகனை மாமனார் கேள்வியாக பார்த்தார்“நான் விசாரிச்சுட்டு சொல்றேன்..”என்ற யுவராஜ்க்கு  வேறு ஒரு எண்ணம். ஆனால் அது எந்தளவு சரியாக வரும் என்று தெரியவில்லை

இரவு உணவு அங்கேயே முடியயுவராஜ் இன்னும் வராத JCB வண்டி பற்றி விசாரித்து கொண்டிருந்தான். “நைட் எல்லாம் வண்டி ஓட்ட வேண்டாம்ப்பா..” என்று கேசவனிடம் சொன்னான்

இல்லப்பா.. மண்ணு இறக்கணும்ன்னு போனது..” என்று போன் பேசியவர், “வண்டி ஏதோ பிரச்சனைன்னு நம்ம தோப்புகிட்ட நின்னுடுச்சாம்..” என்றார்

ம்ப்ச்.. என்ன பண்றானுங்க.. முனியன் உள்ள ஊத்திக்கிட்டு இருப்பான், நான் போய் பார்க்கிறேன்..” என்று கிளம்பினான். ஜமுனா வண்டி கிளம்பிய சத்தத்தில் வெளியே வந்து பார்க்க, கேசவன் தகவல் சொன்னார்

எல்லோரும்  வாசலிலே அமர்ந்து பேசியபடி யுவராஜ்க்காக காத்திருக்க, அவன் வரவே இல்லை. போன் செய்ய, “வண்டிக்காக  நைட் நான் தோப்புலே தங்குறேன்..” என்றுவிட்டான். தயாநிதி குடும்பம் கிளம்ப, ஜீவிதா சித்தியுடன்  போறேன் என்று நின்றாள்

பாப்பா.. நைட் இங்க திரும்பி வரணும்ன்னா வர முடியாது, பார்த்துக்கோ..” ஜமுனா சொல்ல, நான் சித்திக்கிட்டே இருப்பேன்.. என்றாள் மகள் அடமாக. நான் பார்த்துகிறேன்.. தாரணி சொல்ல, ஜெயாவும் இருக்க ஜமுனா தலையாட்டிவிட்டாள்

சரி போ.. ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டது தெரிஞ்சது ஊசி தான்..” ஜமுனா எச்சரிக்க, ஜீவிதா ஜாலியாக குதித்து கொண்டு கிளம்பிவிட்டாள்

தாத்தா.. நான் உங்க பேரன்கிட்ட போறேன்..”  ஜமுனா சொல்ல, இப்போவா..? மொத்த குடும்பமும் பார்த்தது. வேண்டாம்.. வைஜெயந்தி மறுக்க

போகட்டும் விடும்மா.. யுவராஜ் தான் இருக்கானே..” அருணாச்சலம் சொல்லிவிட்டவர், தயாநிதியிடம் அங்கு விட சொன்னார். ஜமுனா அப்பா காரில் அங்கு சென்று இறங்கினாள்

யுவராஜ் கேட்டிலே வண்டியை பார்த்து கொண்டிருந்தவன், மனைவி வரவும், “இந்த நேரத்தில எதுக்கு வந்த..?” என்றான்

ப்பா.. பை.. நான் சித்தி கூட போறேன்..” காரில் இருந்து மகள் கத்தி கிளம்பிவிட்டாள். டிரைவரும், முனியனும் அப்போது தான் கிளம்பியிருக்க,  “வா வீட்டுக்கு போலாம்..” என்றான் கணவன்

இங்கேயே இருக்கலாம் மாமா..” என்று ஷெட்டுக்கு நடந்தாள் மனைவி. என்ன பண்றா..? யுவராஜ் கேட் பூட்டி, ஷெட்டுக்குள் லாக் செய்தான்.

ஜமுனா யுவராஜை பார்த்து நின்றிருக்க, “இப்போ என்ன இங்க..?” என்றான். அவள் முகம் அவ்வளவு அமைதியாக இருக்க, சண்டை போட வந்திருக்காளா..? திரும்ப என்னை விட்டு போயிடுவாளா..? பல கேள்விகள்

மனைவியோ, “எனக்கு உங்களை கட்டி பிடிச்சு அழணும் மாமா..”  என்றாள்யுவராஜ் அதிர்ந்து தான் விட்டான். இதை அவன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை

என்.. என்னடி..” யுவராஜ் கேட்க, ஜமுனா அவனை பார்த்தபடி வந்தவள் அப்படியே அவனை அணைத்து நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். யுவராஜ் சிலையாக நிற்க, கொஞ்சம் கொஞ்சமாக அவன் நெஞ்சில் ஈரம் பட ஆரம்பித்தது. ஜமுனாவின் அழுகையின் சத்தமும் கூட, யுவராஜ் தொண்டை அடைத்தது

நிமிடங்கள் செல்ல அவன் கண்களும் கலங்க, மனைவியை அணைத்து கொண்டவன், “அன்னைக்கு நான் சொன்ன வார்த்தைக்கு அழறியாடி, இனி அப்படி சொல்லவே மாட்டேன், அது ஏதோ அப்போ கோவம், நீ இவ்வளவு அழாத..” என்றான்

ஜமுனாவின் கண்ணீர் நிற்காமல் வழிய, மனைவியை விலக்க பார்த்தான். ம்ஹூம்.. ஜமுனா இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டு அழுகை. “போதும்டி.. இப்படி அழுற, இனி நான் எதுவும் பேசவே மாட்டேன், கோவப்பட மாட்டேன், நீ அழுகையை நிறுத்து..” யுவராஜ் சொல்லி பார்த்தவன், அவள் அழுகை குறையாததில் வேடிக்கை பார்க்கும் இயலாமையில் நின்றுவிட்டான்

“எனக்கு.. எனக்கு இப்படி உங்க.. உங்ககிட்ட அழுகணும்ன்னு மூணு வருஷமா..” மேலும் சொல்ல முடியாமல் தேம்பி நிறுத்தினாள்

தண்ணீர் குடிடி..” யுவராஜ் அவளை விலக்கஜமுனா நிமிடம் சென்றே விலகினாள். முகம் அப்படி சிவந்து, உதடுகள் அழுகையில் துடித்து கொண்டிருந்தது. யுவராஜ் தண்ணீர் எடுத்து கொடுக்க, ஜமுனா தொண்டை உலர்ந்திருக்க வாங்கி குடித்தாள்

யுவராஜ் பாட்டிலை வாங்கி வைக்க, ஜமுனா மீண்டும் அவனை அணைத்து கொண்டாள். அழுகை குறைந்திருந்தது. மெல்லிய விசும்பல்  மட்டுமே. யுவராஜ் அவள் தலையை வருடி விட, “மூணு வருஷமா எங்க அழுதுட்டா வைராக்கியத்தை விட்டு உங்ககிட்ட வந்திடுவேனோன்னு பயம் மாமா, ரொம்ப அழவே மாட்டேன், அப்படியும் அழுகை வந்துட்டா, கண்ட்ரோல் பண்ணிடுவேன், தொண்டை வலிக்கும், நெஞ்சு அடைக்கும்..” என்று சிறு பிள்ளையாய் தேம்ப, கணவன் கண்களில் கண்ணீர் தேங்கியது

அப்படியென்ன என்கிட்ட வர கூடாதுன்னு, என்னை வெறுத்துட்டியா..?” கமறிய குரலில் கேட்டான்

நீங்க தானே என்னை போக சொன்னீங்க..? நான் எப்படி உங்ககிட்ட வருவேன்..?” என்றாள் பெண்

நான் எப்போடி சொன்னேன்..?” யுவராஜ்  அவளை விலக்க பார்க்க

ம்ஹூம்.. என்னால உங்களை பார்த்து சில விஷயங்களை பேச முடியாது மாமா..” என்றவள், “அப்பா படிக்க கேட்டதுக்கு, கூட்டிட்டு போங்க சொன்னீங்க இல்லை..” என்றாள்

உனக்குமே அப்போ உன் அப்பா படிக்க வைச்சா படிக்கலாம் தானே இருந்த..?” யுவராஜ் புரியாமல் கேட்டான்

ஆமா தான்.. ஆனா அவர் நம்மளை அந்த வார்த்தை கேட்டதுக்கு அப்புறம் நான் எப்படி அவர் பணத்துல படிப்பேன் மாமா..?” என்றாள் மனைவி

அது எனக்கு அப்போ தெரியாது இல்லைடி..” 

என்கிட்ட பேசியிருந்தா தெரிஞ்சிருக்கும் மாமா, நான் என்ன உங்களுக்கு அவ்வளவு ஆகாதவளா, ஒரு வார்த்தை என்கிட்ட கேட்கிறதுல என்ன மாமா..? அப்பாகிட்ட  நீங்க அப்படி சொல்லாம இருந்திருந்தா நான் நம்ம வீட்ல இருந்தே வேலை பார்த்து படிச்சிருப்பேன் இல்லை..” 

அப்போவும் நீ பணத்துல பிடிச்சிருக்க மாட்டியா..?”

மாட்டேன் மாமா..” ஜமுனா மிக  உறுதியாக தலையசைத்தாள்

உங்களோட உழைப்பு, உங்களோட கனவு முக்கியமா இருந்த இடத்துல என்னது பின்னாடி போயிருச்சு இல்லை, என்கிட்ட எடுத்ததும் இப்போ நீ படிக்க முடியாது சொன்ன நீங்க, இதுக்கு என்ன வழின்னு ஏன் கேட்காம போனீங்க..? நாம ஏன் அதை உட்கார்ந்து பேசல, என் நகை இருந்துச்சே மாமா, அப்படி உங்களுக்கு அது பிடிக்கலை, வேற எந்த வழியும் இல்லைன்னா, நானே நிச்சயமா உங்களுக்காக சப்போர்ட் பண்ணியிருப்பேன் மாமா, என்மேல உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா..?”

நீங்க எனக்கு அந்த இடத்தில  முக்கியத்துவம் கொடுக்கல, நம்பலைநீங்களே முடிவெடுத்திட்டீங்க, உங்ககிட்ட எனக்கான இடம் இவ்வளவு தானா, எனக்காக, என் உழைப்புக்காக, கனவுக்காக நீங்க யோசிக்காதது எனக்கு எவ்வளவு ஏமாற்றத்தை கொடுக்குது தெரியுமா..? வலிக்குது மாமாஹஸ்பண்ட் வேலைக்கு, லட்சியத்துக்கு வைப் சப்போர்ட் பண்ற மாதிரி, நீங்க ஏன் இல்லை..”

இதுவே எனக்கு MBBS இல்லாம போயிருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன்..? இந்த ஏமாற்றத்தோட, உங்க மேல வருத்தத்தோட, நீங்க எப்போ படிக்க வைப்பீங்கன்னு பார்த்துட்டு, கேட்டுட்டு ஒரு வெறுமையான வாழ்க்கையை தானே உங்களோட வாழ்ந்திருப்பேன், உங்களுக்கு  எப்படியோ எனக்கு அப்படி ஒரு வாழ்க்கையை உங்களோட வாழவே  முடியாது மாமா..”

எனக்கு ஒரு நிமிஷம் பொண்டாட்டியா இருந்தாலும் முழு மனசோட  இருக்கணும், நினைச்ச நேரம் சிரிச்சு, காரணமே இல்லாம அழுதிட்டு, குடும்பத்துக்காகன்னு எல்லாம் பொறுத்துகிட்டு, விருப்பம் எப்போ வெறுமையா மாறுதுன்னு கூட தெரியாம..  அது கொடுமை மாமா, அனுபவிச்சா தவிர யாருக்கும் புரியாது, எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம்..” நெஞ்சிலே சொன்ன மனைவி வார்த்தைகள் கணவன் நெஞ்சை சுட்டது

உண்மையை சொல்ல போனால் எனக்கு இந்த வருஷமும், MD படிக்க பணம் போதாதுன்னு தான் அப்ளை பண்ணாமலே இருந்தேன், ஆனா அன்னைக்கு பஞ்சாயத்துல ரமேஷ் அண்ணா பேசிட்டார்ன்னு நீங்க பட்ட வருத்தம், எனக்கு அது பிடிக்கலை மாமா. என் மாமாவை யார் அப்படி பேசுறதுன்னு தான் அன்னைக்கு நைட் அப்ளை பண்ணி எழுதி கிளியர் பண்ணேன்..”

அதையும் உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை மாமாரிசல்ட் வந்ததும் லோன்க்கு விசாரிச்சுட்டு சொல்லலாம்ன்னா, அது எப்படி எப்படியோ முடிஞ்சு போச்சு, அதுக்காக என்கிட்ட அவ்வளவு விலகி போறீங்க..? நான் என்ன உங்க பார்வையில அவ்வளவு தானா..?”

“மூணாவது மனுஷங்க சொன்னா எப்படி இருக்கும்ன்னு எனக்கும் புரியும் மாமா, உங்களை விட்டு வந்ததில  இருந்து இப்படி தான் நான் உங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிறேன், நீங்க சொன்னீங்க இல்லை உங்க வெற்றியை அனுபவிக்க முடியலன்னுநீங்க என்கிட்ட அந்த வெற்றியை பத்தோடு பதினொன்னா சொன்னப்போ எனக்கு உங்களை விட அதிகமா வலிச்சது மாமா..” 

ஆசைப்பட்ட படிப்பு படிக்க போறேன், உங்களோட இருக்க போறேன். பாப்பா, நீங்க, நான் குடும்பமா வாழ போறோம், எல்லாம் யோசிச்சு தான் சென்னை வந்தேன், என் படிப்பால ஆரம்பிச்சது அதனாலே முடிஞ்சுடும் நினைச்சா, அவ்வளவு பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க, மூணு வருஷத்துக்கு முன்னாடி எந்த பணம் நமக்குள்ள வந்துச்சோ, அதுக்கே நான் திரும்ப உங்ககிட்ட வந்து நிக்க முடியுமா..?”

எனக்கு உங்க காசு, என் காசு எல்லாம் இல்லை, இன்னும் சொல்ல போனால் என் பணத்துலே நான் காலத்துக்கும் வாழ போறதில்லை. அட்லீஸ்ட் எனக்குள்ள இந்த வருத்தம், ஏமாற்றம் எல்லாம் குறையற வரை மட்டும் தான் நினைச்சேன், எனக்கு உங்ககிட்ட இருந்து கிடைக்காத ஒன்னு கிடைக்காததாவே இருந்துட்டு போகட்டும் மாமா, அதுவும் கொஞ்ச நாளைக்கு தான், அது வரைக்கும் என்கிட்ட இப்படி வார்த்தையை எல்லாம் சொல்லாதீங்க, நீங்க சொன்ன வார்த்தையில என்னமோ நானே பொண..”

ஜமுனா..” யுவராஜ் அதிர்ந்து அதட்டலுடன் மனைவியை விலக்கி அவள் வாயை அடைத்தான்.

அவன் கையை விலக்கியவள், “உங்ககிட்ட இதை எல்லாம் நான் பேசுவேன்னு நினைச்சதே இல்லை மாமா, என் மாமாக்கு என்னை புரிய வைக்கணுமான்னு ஒரு அகம்பாவம், திமிர், என்னை அவருக்கு தெரியாதா..?  இப்போ என்னை புரியலன்னாலும், அப்புறம் புரிஞ்சுப்பார்ன்ற அவ்வளவு நம்பிக்கை, ம்ப்ச்.. என்னமோ இந்த முறையும் நான் தோத்துட்டேன் மாமா..”

உங்ககிட்ட என்னை புரிய வைச்சுட்டு இருக்கேன், விளக்கம் கொடுத்துட்டு இருக்கேன், அழுதுட்டு இருக்கேன், எனக்கே பிடிக்கலை, விடுங்க.. இனி அப்படி ஒரு வார்த்தையை என் முன்னாடி சொல்லாதீங்க மாமா, நான் அங்க உடைஞ்சு தான் இப்படி..”  திரும்ப அணைத்து கொண்டாள் பெண்.

Advertisement