Advertisement

அவர்கள் எல்லோருக்கும் ஜெயலக்ஷ்மி குடும்பம் இன்னும் வாரததில், “இன்னும் கொஞ்ச நேரம்..” என்ற அருணாச்சலம் மகன் கேசவனை பார்க்க, அவர் போன் எடுத்து அழைத்தார். அந்த பக்கம் எடுக்கவில்லை. கேசவன் தலை ஆட்ட, யுவராஜ் முகம் இறுக ஆரம்பித்தது

‘ஒரு ஓட்டம் நேர்ல போய் பார்த்திருக்கணும்.. இவளுக்கு இன்னைக்கு இங்க இருக்கனும்ன்னு தெரியாதா..? சாதாரணமா தானே இருந்தா..? நான் தான் எக்ஸாம்க்கு அப்ளை பண்ணாதது பத்தியோ, அவ படிக்கிறதை பத்தியோ பேசவே இல்லையே..? அப்புறமும் என்ன..? ரொம்ப அவ இஷ்டத்துக்கே விடுறோமா..? அப்போ அவகிட்ட எனக்கான மரியாதை இவ்வளவு தானா..? இல்லை இந்த உறவு முடிஞ்சிருச்சுன்னு ஊர் உலகத்துக்கே காட்ட நினைக்கிறாளா..? அது எப்படி விடுவேன்..? என்னை என்ன நினைச்சா இவ..?’ உள்ளே ஜமுனாவை நினைத்து அவ்வளவு கொதித்தது.  

இங்கு பெண்ணின் தாத்தா, “நேரம் போயிருங்களே..? பத்திரிக்கை வாசிச்சுட்டா நல்லா இருக்கும்..” என, அருணாச்சலம் வாசலை பார்க்க, சரியாக ஜெயலக்ஷ்மி குடும்பத்தினர் வந்தனர்

அதோ வந்துட்டாங்க.. நிச்சய பத்திரிக்கை வாசிச்சிடலாம்..” என

ப்பா..” ஜீவிதா பாட்டி கையை விட்டு, அப்பாவிடம் ஓடி வந்தாள். யுவராஜ் மகளை தூக்கி கொள்ள, கண்கள் மனைவியை தீர்க்கமாக பார்த்தது. தலைக்கு குளித்து, ஒரு சில்க் புடவையில் கழுத்து தாலி செயினுடன் வந்திருந்தாள். கைகளில் வளையல் கூட எப்போதும் அணிவது தான். நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே தலைக்கு பூ கூட இல்லை. ‘அவ புருஷன் கடன்காரன், படிக்க வைக்க ஆகாதவன்இப்படி தான் இருப்பா..’ மனது காந்தியது

இங்கு  நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டு மாற்றி கொள்ளப்பட்டது. ஆர்த்தியை சபைக்கு அழைத்து வந்து, உறுதி சேலை கொடுத்தனர். ஜெயலக்ஷ்மி அண்ணி கை பிடித்து, “வர முடியல அண்ணி, எப்படி சமாளிச்சிங்க, என்மேல கஷ்டப்பட்டுக்காதீங்க..” என்று வருத்தபட்டு கொண்டிருந்தார்.

ஜமுனா எப்போதும் போல விருந்தினராய் ஓரமாக நின்றிருக்க, தயாநிதி அருணாச்சலம் பக்கம் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். என்னமோ மூவர் முகமும் சரியில்லாமல் இருந்தது. ஜெயலக்ஷ்மி கண்கள் தடித்திருக்க, அழுதாரோ..? என்று யுவராஜ் மனைவியை பார்க்க, அவள் அங்கிருந்த பூச்சாடியில் பார்வை பதித்து நின்றிருந்தாள்

 

ஆர்த்தி சேலை மாற்றி வரபெண், மாப்பிள்ளையை ஒன்றாக அமர வைத்தனர். வீட்டின் பெரியவர்கள் தம்பதி சகிதமாக சென்று சந்தனம், திருநீறு வைத்து ஆசீர்வாதம் செய்ய,  “தம்பி நீயும் உன் பொண்டாட்டியோட வைப்பா..” என்றார் யுவராஜிடம்  பெண்ணின் பெரியப்பா

மொத்த குடும்பமும் யுவராஜை பார்க்க, அவன் யார் மேலும் பார்வையை பாதிக்காமலும், சொன்னதை கேட்காதவன் போலும் நின்றிருந்தான். “ஏய் சும்மா இரப்பா.. அவர் பொண்டாட்டி இப்போ அவரோட இல்லை, இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க..” பக்கத்தில் இருந்தவர் கிசுகிசுத்தார்

அப்படியா..? தம்பி மன்னிச்சுக்கோங்க.. விஷயம் தெரியாம சொல்லிப்புட்டேன்..” என்றார் அவர். அதற்கும் அவன் அமைதியாக இருக்க, மீதம் உள்ளவர்கள் வைத்தனர்

ஜெயலக்ஷ்மி கணவனுடன் சென்று ஆசீர்வாதம் செய்து வர, “நீ போ ஜமுனா..” என்றார் காமாட்சி. ஜமுனா தயங்கி, கணவனை நிமிர்ந்து பார்க்காமல் மனமக்களிடம் சென்றவள், சந்தனம் எடுக்க, பக்கத்தில் யுவராஜ் வந்து நின்றான்

அவள் அவனை பார்க்காமலே உணர்ந்து கொண்டவள்சந்தனம், திருநீறு வைக்காமல் நிற்கயுவராஜ் அவள் கையை இறுக்கமாக பிடித்தான். ‘எல்லார் முன்னாடி இது என்ன..?’ ஜமுனா அவன் பிடியில் இருந்து கையை விலக்க பார்க்க, அவன் இருவர் கையையும் சேர்ந்து சந்தனம் எடுத்தான். தங்கள் முன் அமர்ந்திருந்த மணமக்களை கருத்தில்  கொண்டு அவனுடனே மணமக்களுக்கு சந்தனம், திருநீறு வைத்து முடித்தாள்

அடுத்த நொடி தன் கையை வலுவாக இழுத்துவிட, அவனும் விட்டுவிட்டான். ஆனால் அவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அவள் முன் நின்றவன், பக்கத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து, அவன் உச்சியில், நெற்றியில் அழுத்தமாக வைத்தான்

ஜமுனா கண் மூடி நிற்க, “இன்னும் நீ என் குங்குமத்துக்கு உரிமைபட்டவ தாண்டி..” என்று விலகி செல்ல, ஜமுனா கலங்கிய கண்களை சிமிட்டி நகர்ந்து வந்தாள். ஜெயலக்ஷ்மி மகளை ஆற்றாமையுடன் பார்த்தார்

இன்று அவர்கள் வீட்டில் நடந்தது  அப்பா, அம்மா, மகள் மூவரையும் தளர வைத்திருந்தது. பங்க்ஷன் வீடு என்பதால் மூவரும் முயன்று சாதாரணமாக இருக்க முயன்றாலும், வருடங்களாய் பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்குமா..? ஏதோ நடந்திருக்கு..? நின்று விசாரிக்க முடியாத நிலை

ஜமுனா, ஆர்த்திக்கு இந்த நகை போட்டு விடு..” வைஜெயந்தி அவளிடம் நீட்டஜமுனா எப்படி வாங்குவாள்..? வீட்டின் பெரிய மருமகளாக ஒரு துரும்பை கூட அசைக்காமல், இது மட்டும் எப்படி..? நியாய மனது குத்த, தயங்கி அம்மாவை பார்த்தாள்

அவர் முகம் திருப்பி  கொள்ள, வைஜெயந்தி நீட்டிய கையை மடக்கவில்லை. ‘நீ தான் இந்த வீட்டு பெரிய மருமக.. நீதான் செய்யணும்..’ என்று உறுதியாக நின்றார் வைஜெயந்தி. ‘அண்ணி பரவாயில்லை தேறிட்டாங்க..’ ஜெயலக்ஷ்மி உள்ளுக்குள் ஆசுவாசப்பட்டார்

ஜமுனா அத்தையின் மாமியார் தோரணையில் மறுக்க முடியாமல்  வாங்கியவள், அதில் இருந்த ஆரத்தை மணமகளுக்கு அணிவித்தாள். ஆகாஷ் அண்ணி ஒதுங்கியிருந்ததில் ஆதங்கபட்டு கொண்டிருந்தவன், இதில் அவளை பார்த்து மலர்ந்து சிரித்தான். யுவராஜ் மகளை கையில் பிடித்தபடி பந்துலுக்கு சென்றான். இங்கு சடங்கு எல்லாம் முடியவும், மணமகள் வீட்டினருக்கு பந்தி ஆரம்பித்தனர்

வைஜெயந்தி எல்லோரையும் உணவுக்கு அனுப்பி வைக்க, தேவையானதை எடுத்து கொடுக்க என்று தடுமாற, ஜமுனா அதற்கு மேல் ஒதுங்கி நிற்க முடியாமல் மாமியாருடன் சேர்ந்து கொண்டாள். மணமக்களுக்கு, நெருங்கிய உறவு பெண்களுக்கு, வயதானவர்களுக்கு வீட்டுக்குள்ளே இலை போட்டு பரிமாறும் பொறுப்பை தானே இயல்பாய் தன் கையில் எடுத்து கொள்ள,  வைஜெயந்தி, காமாட்சிக்கு அவள் மேல் இருந்த சிறு  மனத்தாங்கலும் மறைந்து போனது

ஜமுனாவிற்கும்  ஆரம்பிக்கும் வரை இருந்த தயக்கம் அதன் பின் இல்லை. எல்லோரையும் கவனித்து, உரிமையாய் நடமாடி, தேவையானதை சுழன்று செய்து, உறவுகளை கவனித்து  என்று சில நிமிடங்களில் அந்த வீட்டின் பெரிய மருமகளாய் தன்னை நிலைநாட்டினாள்.  

இங்கு பந்தியில், மணமகள் வீட்டினர் சாப்பிட்டு முடிக்கவும்ஊர் மக்களுக்கு, உறவுகளுக்கு பந்தி நடக்க, யுவராஜால் அங்கிருந்து அசைய முடியவில்லை. மகள் பசிக்கு அவனே ஓரிடத்தில் இலை போட்டு உண்ண வைத்திருக்க, அவள் தூக்கத்திற்கு தள்ளாடினாள்

ஆகாஷ் உன் அண்ணியை வர சொல்லு..” என்றான் யுவராஜ் மகளை தோள் மேல் தட்டி கொடுத்து கொண்டே. ஆகாஷ் உள்ளே சென்று ஜமுனாவை அழைத்து வர, “தூங்கிட்டா..” என்று அவளிடம் கொடுக்க, ஜமுனா மகளை காமாட்சி அறையில் படுக்க வைத்தாள்

சில கிலோமீட்டர் தொலைவு தான் மணமகள் வீடு என்பதால், பொறுமையாக உணவு முடித்து கிளம்பினர். ஜமுனா  எல்லோருக்கும் தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள். உறவுக்காரர்கள் தொடங்கி மணமகள் வீட்டினர் வரை, இவர்களை கவனித்துஅப்போ இவங்க பிரிஞ்சு எல்லாம் இல்லையா..?’ என்ற முணுமுணுப்புடன் கிளம்பி சென்றனர்

தயாநிதியும் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானார். “தாரணி தான் இல்லை..” வைஜெயந்தி குறைப்பட்டார். தாரணி கோயம்பத்தூரில் ME படித்து கொண்டிருக்கிறாள்

அவளும் அங்க பங்கஷனுக்கு வர முடியலன்னு புலம்பிட்டு தான் இருக்கா..” என்ற ஜெயலக்ஷ்மி மகள், பேத்தியுடன் கிளம்பினார். பந்திக்கு இன்னும் ஆட்கள் சிறிது சிறிதாக வந்த வண்ணம் இருக்க, யுவராஜ் கிளம்பிய மனைவி, மகளை நோக்கி வந்தான்

தயாநிதி மருமகனிடம் தலையசைத்து மனைவியுடன் முன்னால் செல்ல, “பாப்பாவை கொடு..” என்று தான் வாங்கி கொண்டவன், “என்னடி பிரச்சனை..? நீ, மாமா, அத்தை யார் முகமும் சரியில்லை..”  என்றான் மனைவியிடம்

ஒன்னும் இல்லை..” ஜமுனா முணுமுணுக்க

இங்கேயே  இரு.. நான் கொண்டு போய் விடுறேன்..” என்றான்

இல்.. இல்லை.. பாப்பா தூக்கம்.. நான் அப்பாவோட போறேன்..” என்றாள் மனைவி

உன்னை என்னை என் கூடவேவா இருக்க சொன்னேன், கொஞ்ச நேரம் தானே..?” என்றான் கணவன்

இல்லை.. நீங்க பாருங்க, உங்களுக்கு வேலை இருக்கும்..” ஜமுனா கிளம்புவதிலே  இருக்க, மனைவியை முறைத்தவனுக்கு, சுற்றி ஆட்களை வைத்து என்ன செய்ய முடியும்..? மனைவியுடன் காருக்கு வந்தவன், ஜமுனா பின்னால் திறந்து அமர, மனைவி மடியில் மகளை கொடுக்க, கார் கிளம்பியது

என்னமோ அவனுக்கு மனது இடறியது. நின்று ஆராய நேரமில்லை. இரவு நெடு நேரம் சென்றே எல்லாம் முடிவுக்கு வர, பெட்டில் விழுந்தவனுக்கு அப்படி ஒரு தூக்கம். அடுத்த நாள் காலை எழுந்ததும் மனைவியை பார்த்து பேச நினைத்தவன், அவள் இப்போது மருத்துவமனையில் இருப்பாள் என்பதால் டவுன் கிளம்பி சென்றான்

அவன் அக்கவுண்ட் வைத்திருக்கும், பேங்க் மேனேஜரை சந்திக்க சென்றான். அவன் யுவராஜின் நண்பனும் கூட. சென்னையில் சொந்தமாக இடம் வாங்கி ஆபிஸ் வைக்கும் திட்டம். அது சம்மந்தமாக பேச செல்ல, இருவரும் முதல் சில நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு, தான் வந்த வேலையை பற்றி சொல்லி ஐடியா கேட்டான்

அவன் நண்பன் சிரித்தவன், “என்னடா புருஷனும், பொண்டாட்டியும் லோன் வாங்கியே எல்லாம் பண்ணனும் முடிவு பண்ணிட்டிங்களா..?” என்றான் அவன்

ஜமுனாவா..?” யுவராஜ் புரியாமல் கேட்க

ஆமா.. நேத்து மதியம் பேங்குக்கு வந்தவங்க, அசிஸ்ட்டண்ட் மேனேஜர்கிட்ட லோன் பத்தி எப்படி என்னன்னு விசாரிச்சுட்டு போனாங்க, நான் அவங்கள பார்த்து பேச வரத்துக்குள்ள கிளம்பிட்டாங்க, கேட்டு தெரிஞ்சுகிட்டேன்..” என்றான்

லோன்.. அவளுக்கு எதுக்கு..?’ யுவராஜ் கண்களை சுருக்க

என்னடா உனக்கு தெரியாதா, MD படிக்க, என்டிரன்ஸ் எக்ஸாம் கூட க்ளியர் பண்ணிட்டாங்களாமே, கவுன்சலிங் மட்டும் தான் பாக்கி, லோன் தேவைப்படும்ன்னு கேட்டாங்களாம்..” என்றான்

யுவராஜ் முகம் நொடியில் அப்படி இறுகி போனது

“எனக்கு என்ன புரியலைன்னா அவங்க பேங்க் பேலன்ஸ் அவ்வளவு இருக்கு, அதுலே அவங்க தாராளமா படிக்கலாம், இது தவிர அவங்க சேவிங்ஸ் பிக்ஸ்ட் டெபாசிட் வேற இருக்கு, அப்புறம் ஏன் லோன்னு தெரியல..” என்று மேலும் சொல்ல, யுவராஜ் புருவம் தீவிரமாக சுருங்கியது

அவளோட அக்கவுண்ட் டிடையில்ஸ் கொஞ்சம் காட்டு..” என்றான்

ஏன்டா..” என்றவன், ஜமுனாவின் கணவன் என்பதால் மறுக்காமல் சிஸ்டத்தில் ஓப்பன் செய்து காட்ட, பார்த்த  யுவராஜ் கண்கள் சிவந்து போனது

என்னை மொத்தமா முடிச்சுட்டா..?’

Advertisement