Advertisement

கேளாய் பூ  மனமே 12

அந்த மதிய வேளையில், வழக்கத்தை விட வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மழை வருவதற்கான அறிகுறி போல. தேங்காய் தோப்பில் ஆட்கள் மரத்தில் ஏறி  காய்களை  பறித்து கொண்டிருக்க, பெண்கள் அதை ஓரிடத்தில் குவித்து வைத்தனர். டிராக்டர் வரவும் தேங்காய்கள் களத்திற்கு சென்றுவிடும்

மணி பார்க்க அது இரண்டு என்றது. “சாப்பிட்டு வேலை பாருங்க முனியா..” யுவராஜ் ஷெட்டில் இருந்து குரல் கொடுத்தான்

படுத்திருந்தவனுக்கு கை பழையபடி திரும்ப வீங்கியிருந்தது. ஊர் கூட்டம் முடிந்து நேரே இங்கு வந்து படுத்தவன் தான், வீட்டில் இருந்து வந்த யார் போனையும் எடுக்கவில்லை. தயாநிதி கூட இரண்டு முறை அழைத்துவிட்டார். யாரிடமும் பேச முடியும் என்று தோன்றவில்லை

கூட்டத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவன் காலையில் சாப்பிடவில்லை. இப்போது மதிய உணவுக்கும் வராமல் இருக்க, வைஜெயந்தி விடாமல் அழைத்து கொண்டு இருந்தார். ரமேஷ் பேசியது.. மகன் எப்படி இருக்கிறான் என்ற கவலை வேறு

யுவராஜ் தாத்தாவிற்கு அழைத்தவன்,  “நானே வீட்டுக்கு வரேன், கொஞ்ச நேரம் என்னை விடுங்க..” என்றுவிட்டான்

ஜெயலக்ஷ்மி மருமகனுக்கு அழைத்து பார்த்தவர், மகள் போன் செய்யவும் கூட்டத்தில் ரமேஷ் பேசியதை சொன்னவர், “கோவத்துல நேரா ஷெட்டுக்கு போயிட்டானாம், காலையில இருந்து சாப்பிடலன்னு அண்ணி புலம்பிட்டு இருக்காங்க, உங்க அப்பாக்கே ரமேஷ் பேசியது அவ்வளவு கோவம், கிறுக்கு தனமா இரண்டாவது கல்யாணம்ன்னு எல்லாம் பேசி வச்சிருக்கான், யுவராஜ் அடிச்சு, பிரச்சனை ஆகிடுச்சு, ஏற்கனவே அடிபட்ட கை வேற..” என்று புலம்ப, ஜமுனா எல்லாம் கேட்டு வைத்துவிட்டாள்

“யாரோ என்னவோ பேசினதுக்கு இவருக்கு எதுக்கு இவ்வளவு கோவம்..? இரண்டாவது கல்யாணம் சொன்னா அடிச்சிடுவாரா..?”  ஜமுனா மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்

கணவனுக்கு தேவையான மெடிசின், பெல்ட்டுடன்மகளுக்கு பள்ளி விடும் நேரம் கூட்டி கொண்டு நேரே ஷெட்டிற்கு சென்றாள். தோப்பிற்கு முன் பெரிய கேட் இருக்க, காரை அங்கேயே நிறுத்திவிட்டவள், “அப்பாகிட்ட போ.. அம்மா வரேன்..” என்று மகளை இறக்கிவிட்டாள்

ஜீவிதாவிற்கு அந்த இடம் அவ்வளவு பிடிக்கும் என்பதால் உற்சாகமாகப்பா..” என்று கத்தி கொண்டே ஓடினாள்

படுத்திருந்த யுவராஜ்க்கு மகள் அழைப்பு கேட்கவும் வேகமாக எழுந்து வந்தவன், ஓடி வரும் மகளிடம், “பாப்பா.. மெதுவா விழுந்திடுவ..” மகள் வேகத்தில் குரல் கொடுத்து, பாதி வழியில் எதிர்கொண்டு ஒரு கையால் தூக்கி கொண்டவன்  சாலையில் நிற்கும் மனைவி காரை பார்த்தான்

ஒரு கையால ஸ்ட்ரெய்ன் பண்ண கூடாது சொன்னா கேட்கிறதில்லை..’ ஜமுனா தலையாட்டி காரை கிளப்பி கொண்டு சென்றாள்

ஜீவிதா அப்பா கழுத்தை கட்டி கொண்டு முத்தம் வைக்க, யுவராஜ் முகம் நீண்ட நேரத்துக்கு பிறகு இறுக்கத்தை தளர்த்தியது. மகளுடன் ஷெட்டுக்கு நடக்க, வழியில் குவித்து வைத்திருந்த தேங்காய்களை  பார்த்து, “ப்பா.. தண்ணீர்.. தண்ணீர்..” ஜீவிதா இளநீர் கேட்டாள்

குடிக்கலாம் பாப்பா..” என்ற  யுவராஜ்  சட்டையை கழற்றி, வேஷ்டிவெள்ளை பனியனில் இருந்தவன், டவல் எடுத்து தன்னை சுற்றி கொண்டுமகளின் ஷூ, ஷாக்ஸை கழற்றியவன்பம்ப் செட்டிற்கு தூக்கி சென்றான்

முனியன் மோட்டார் போட்டு விட, ஒரு கையால் மகளின் முகம், கை கால் கழுவி துடைத்து தூக்கி கொண்டான். வழியில் ஆட்கள் ஜீவிதாவிடம், “அப்பாவை பார்க்க வந்தியா கண்ணு..” என்று பேச்சு கொடுக்க

ஆமா.. ஆமா..” என்று இன்னும் அப்பா கழுத்தை கட்டி கொண்டாள்  மகள். யுவராஜ் முகத்தில் தாராள மலர்வு. “முனியா இளநீர்..” யுவராஜ் குரல் கொடுக்க, வெட்டிய காய்களுடன் வந்தான்

ஷெட்டிற்கு வெளியே சேர் போட்டு மகளை அமர வைத்தவன், இளநீரை டம்ளரில் மாத்தி குடிக்க கொடுத்தான். ஜீவிதாவிற்கு அதில் வழுக்கை தேங்காயும் பிடிக்கும் என்பதால் அதையும் எடுத்து கொடுக்க, சப்பு கொட்டி சாப்பிட்டாள்

இன்னொன்னு வெட்டவா பாப்பா..?” யுவராஜ் மகள் வாய் துடைத்து கேட்க

ம்ஹூம்.. போதும்ப்பா..” என்று முடி முகத்தில் மோத தலையை ஆட்டினாள். மகள் தலையில் பூ இல்லாததில், “முனியா ஷெட்டுக்கு பின்னாடி மல்லி இருக்கு பாரு, கொஞ்சம் தங்கச்சியை பறிச்சு கட்டி கொடுக்க சொல்லு..” என்றவன், மகளுடன் திரும்ப ஷெட்டுக்கு வந்தான்.

“ப்பா.. ப்பா.. டிவி..” ஜீவிதா கேட்க


பார்க்கலாம் பாப்பா.. அதுக்கு முன்ன தேங்காய் லோட் ஏத்தி அனுப்பணும், அப்பாக்கு பாப்பா ஹெல்ப் பண்ணுவியா..?” என்றான்

ஓஹ்.. பண்ணுவேனே..” என்றாள் மகள் உடனே மழலை குரலில். யுவராஜ் போன் எடுத்து டிராக்டரை வர சொல்லி மகளுடன் வெளியே வந்தான்

காய் இறக்கினது போதும், மழை வர மாதிரி இருக்கு, லோட் ஏத்திடலாம்..” என்றான் யுவராஜ். ஆட்களும் மரத்தில் இருந்து இறங்கி காய்களை சேகரித்து வைக்க, ஜீவிதாவும் அங்கங்கு இருந்து காய்களை ஒன்று ஒன்றாக எடுத்து வந்து போட்டாள். யுவராஜ் மகளை தடுக்கவில்லை

அப்படியே உங்க அப்பா மாதிரி கண்ணு நீ, அவனும் இப்படித்தான் பள்ளி கூடம் விட்டு வந்ததும் அவங்க தாத்தாவோட தோப்புக்கு வந்திடுவான், தண்ணீர் மடக்குறேன்னு துணி பூரா சேறு பண்ணிட்டு தான் வீட்டுக்கு போவான்..” வயதில் மூத்தவர்  ஒருவர் சொல்ல, ஜீவிதா இன்னும் ஜோராக தேங்காய்களை எடுத்தாள். அதில் தந்தைக்கு கண்கள் பூத்தது.  

இந்த மண்ணுக்காக நான் பட்ட கஷ்டம், பொண்டாட்டி பிரிஞ்சு, ஊர்ல பேச்சு கேட்டு..’ எங்கோ பட்ட காயங்களுக்கு மகளும், மண்ணும் மருந்தாகி போயினர்தாத்தா, அப்பாக்காக பார்த்து அவர்கள் பிள்ளைகள் அதில் உரிமையாக வலம் வர, காயங்களிலும் சுகம் உண்டு என்று உணர்ந்தான் தந்தை எனும் விவசாயி


போதும் பாப்பா.. அவங்க எடுத்துப்பாங்க, கை வலிக்கும்..” யுவராஜ் மகளை கூப்பிட்டு கொண்டான். “ப்பா.. சறுக்கு..” ஜீவிதா ஏற்றி கட்டியிருந்த பெரிய வரப்பை கேட்டாள்

லோட் ஏற்ற டிராக்டர் வந்துவிட, “போ பாப்பா.. கொஞ்ச நேரம் தான்.. கை, கால் சிராய்ச்சிக்காத..” என்று அனுப்பினான். ஜீவிதா ஜாலியாக வரப்பில் இருந்து சறுக்கு போல சறுக்க ஆரம்பித்துவிட்டாள். யுவராஜ் மகள் மீது ஒரு கண் வைத்து கொண்டே லோட் ஏற்றி முடித்து, ஆட்களை அனுப்பி வைத்து வந்தான்

அதற்குள் இங்கு ஜீவிதா உடை முழுக்க மண் தான். “பாப்பா.. அவ்வளவுதான் விளையாட்டு முடிஞ்சது..” யுவராஜ் மகளிடம் சொல்ல

ப்பா.. ஒன் டைம்..” என்று மகள் மீண்டும் விளையாட, இருமுறை விட்டவன், அடுத்து மகளை ஒற்றை கையில் தூக்கி கொண்டான். “பாரு எல்லாம் மண்ணு.. டிரஸ்கு என்ன பண்ண பாப்பா..?” யுவராஜ் மகளை கேட்டு கொண்டே திரும்ப மகளை சுத்தம் செய்து ஷெட்டிற்கு தூக்கி வந்தான்

ஆட்கள் எல்லாம் கிளம்பியிருக்க, மகள் உடைய கழற்றி, அவன் டவலை மகளுக்கு சுற்றி உட்கார வைத்தான். ‘அம்மாக்கு போன் பண்ணி டிரஸ் கொடுத்துவிட சொல்லணும்..’ போன் எடுக்க, ஜமுனா கார் சத்தம். யுவராஜ் போனை வைக்க, ஜமுனா பேக்குடன் உள்ளே வந்தாள்

நினைச்சேன்டி.. இப்படி தான் இருப்பேன்னு..” ஜமுனா மகள் தலையில் குட்டி, கொண்டு வந்த பேக்கை வைத்தாள்

ப்பா..” மகள் அப்பாவை பார்த்து சிணுங்க, அவன் மகளுக்கு மேல் மனைவி மேல் இருப்பவன் ஆயிற்றே. அவள் முகம் கூட பார்க்காமல், மொபைலுடன் அமர்ந்துவிட்டான்

என்ன அப்பா..” ஜமுனா மகளை எழுப்பி நிற்க வைத்து பிராக் அணிவித்தவள், டவலை கொடியில் விரித்து போட்டாள். வீட்டிற்கு சென்று தலைக்கு குளித்து வந்திருக்கா.. அவள் விரித்து விட்ட கூந்தலின் ஷேம்பு வாசனை அவ்வளவு கோவத்திலும் கணவனை உணர வைத்தது

பூ இருக்கா..?” ஜமுனா டேபிள் மேல் இருந்த பூ எடுத்தாள். முனியன் மனைவி கட்டி வைத்து சென்ற பூவை அம்மா, மகள் இருவரும் வைத்து கொண்டனர்.

“பசிக்கலையாடி உனக்கு..?” ஜமுனா மகளை கேட்டபடி, கொண்டு வந்திருந்த உணவு கூடையை பிரித்தாள்

ஜீவிதா அப்பா மடியில் அமர்ந்து கொண்டு, “தண்ணீ குடிச்சேன்..” என, அப்பன்காரன் மகளை வாகாக அமர வைத்து தன்னோடு சேர்த்து பிடித்தான்

அதானே பார்த்தேன்.. தண்ணீ மட்டுமா, வழுக்கை தேங்காயுமா..?” சிறிய கிண்ணத்தில் மகளுக்கான உணவை எடுத்து வந்தவள் அவர்கள் முன் நின்றபடி மகளுக்கு ஊட்டினாள். ஜீவிதா நான்கு வாய்க்கு மேல் போதும் என்றாள்

இன்னும் ஒரு வாய் மட்டும்.. இதான் கடைசி.. அவ்வளவு தான் முடிஞ்சு..” என்றபடியே ஜமுனா ஓரளவு உணவு கிண்ணத்தை காலி செய்தவள்மகளுக்கு குடிக்க தண்ணீர் குடித்து, முந்தானையில் வாய் துடைத்தாள். அதில் முந்தானை கணவன் முகத்திலும் பட, கணவன் உர்ரென்று முகம் திருப்பினான்

Advertisement