Advertisement

ஊரிலும் ஒரு வாரமாக பஸ் வாரததில்  பிரச்சனை உச்சத்தை எட்டியிருந்தது. தயாநிதி ஊருக்குள்ளே கலாட்டாக்கள் வெடித்தது. தயாநிதி ஊர் மக்கள் செல்ல, ஒரு வழியை மட்டும் விட்டு, மற்ற பாதையை நான்கு ஊரும் அடைத்துவிட்டனர்

ஊர் பெரியவர்கள் கூட்டத்திற்கு தயாராகிவிட்டனர். இளவட்டங்கள் சண்டையிட்டு பார்த்தனர். இந்த முறை அவர்கள் பேச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஊர் மக்கள் நலன் தான் முக்கியம் என்றுவிட்டார் தயாநிதி. அவருக்கு அண்ணன் மகன் ரமேஷின் போக்கும் பிடிக்கவில்லை. அதிகமாக போகிறான் என்ற எண்ணம்

ப்ரெசிடெண்ட் உடனே அருணாச்சலமை தேடி கொண்டு வந்துவிட்டார். யுவராஜுக்கு இன்னும் ஒரு நாள் கூட போகட்டும் என்ற எண்ணம் தான். ஆனால் பெரியவர்கள் போதும் என, அடுத்த நாள் கூட்டம் முடிவானது. யுவராஜும் சென்னையில் இருந்து இரவோடு இரவாக கிளம்பி வந்தான்

காலையிலே கூட்டம் பஞ்சாயத்து ஆபிஸில் கூடியது. யுவராஜ், தாத்தா, அப்பாவுடன் சென்று சேர்ந்தான். இந்த முறை முன் எச்சரிக்கையாக போலீஸ், சில அதிகாரிகளும் இருந்தனர். தயாநிதி தானே எழுந்து, “இந்த பிரச்சனையை இதோட முடிச்சுகலாம், தண்ணீர் நீங்க சொன்னபடி இரண்டு பங்கு உங்க எல்லா ஊருக்கும், இரண்டு பங்கு எங்களுக்கு..”  என்றார்

பாக்கி நான்கு ஊர்காரர்களும் அருணாச்சலத்தை பார்க்க, யுவராஜ்  தாத்தாவை பார்த்து கண் காட்டினான். “இது முதல்லே ஒத்துக்கிட்டு போயிருந்தா இவ்வளவு கலாட்டா நடந்திருக்காது, தலைமுறை தலைமுறையா இருக்கிற கட்டுப்பாட்டை பெரிய ஊர்க்காரங்க உடைச்சு பாக்கி நாலு ஊர்காரங்களுக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்காங்க, அதுக்கு அபராதம் வேணுங்கிறது என்னோட கருத்து..” என்றுவிட்டார்

தயாநிதி மருமகனை அந்த முறை முறைத்தார். ‘இவன் வேலை தான் இது..’ அவருக்கு மட்டுமில்லை ரமேஷுக்கு தெரிய, “முடியாது..” என்றான் குரல் உயர்த்தி. “நாங்க தண்ணீருக்கு ஒத்துக்கிட்டதே  பெருசு, இதுல பணம் எல்லாம் கட்டவே முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க..” என்றான்

யுவராஜ் முகம் இறுக, “அபராதம் மட்டுமில்லை.. இவங்க ஊர் பசங்க இதுவரை நடந்த கூட்டத்துல எல்லாம்  பெரியவர்களை மரியாதை இல்லாம பேசி, கலவரத்தை தூண்டிவிட்டிருக்காங்க, அதுக்காக எல்லோரும் நடுச்சபையில நின்னு பொது மன்னிப்பு கேட்கணும்..” என்றான்

‘பொது மன்னிப்பு’  ரமேஷுக்கு  உச்சிக்கு ஏறியது. இவர்களிடம் இறங்கி வர கூடாது என்று ஒரு வாரமாக அவ்வளவு இறுக்கி பிடித்தவன், மன்னிப்பு கேட்பானா..? “பணமே கட்ட முடியாது சொல்றேன், இதுல  மன்னிப்பு  வேறயா..?” எகிறினான்

யுவராஜ் என்னப்பா இது..?” பிரசிடெண்ட் கேட்க

ஆமா ஆமா.. ஒவ்வொரு கூட்டத்திலும் நடந்த அடிதடிக்கு எல்லாம் இவங்க தான் காரணம்.. சபையில வச்சு எல்லார்கிட்டேயும்  மன்னிப்பு கேட்க சொல்லுங்க..” மற்ற ஊர்காரகளும் பிடித்து கொண்டனர்

அதிகாரிகள் இதென்ன புது பூதம் என்று பேச்சு வார்த்தை நடத்த, யுவராஜ் இறங்கி வரவே இல்லை. ரமேஷோ மன்னிப்பு கேட்கவே முடியாது என்று நின்றான். “அப்படி அவங்க மன்னிப்பு கேட்கலைன்னா நாங்க நாலு ஊரும் சேர்ந்து அவங்க எல்லார் மேலயும் கேஸ் கொடுப்போம்..” என்றுவிட்டான் யுவராஜ்

“கேஸா..?” அதில் சிலர் ஜெர்க் ஆகினார். வேலையில் இருப்பவர்கள் ஆயிற்றே. “மன்னிப்பு கேட்டுடலாம்ப்பா..” என்று ரமேஷிடம் சொன்னார்கள். போலீசும்நாங்க கேஸ் எடுக்க ரெடியா இருக்கோம், எப்போ பாரு இவங்களால எங்களுக்கு தலை வலி தான்..” என்றனர்

வந்திருந்த அதிகாரிகளும்மன்னிப்பு கேட்டு முடிச்சு விடுங்க..” என, தயாநிதி வேறு வழி இல்லாமல், “கேட்டுடு ரமேஷ்..”  என்றார்

சொந்த ஊரும், உடன் இருந்த ஆட்களும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்க, ரமேஷும் வேறு வழி இல்லாமல், எல்லார் முன்பும் கை குவித்து, மன்னிப்பு வேண்டினான்

அபராதம்..” யுவராஜ் விடாமல் கேட்க

கட்டுறோம்..” என்றுவிட்டார் தயாநிதி

ரமேஷ்க்கு யுவராஜ் மேல் அப்படி ஒரு பகை உண்டானது. குரோதமாக பார்த்து நிற்க, அவன் நேரம் ஜமுனா கார் வந்தது. ஜமுனா அவசர கேஸ்க்காக மருத்துவமனை கிளம்பி வந்தவள், கூட்டத்தை கடக்க தடுமாறினாள்

வழி முழுக்க பைக் ஒழுங்கில்லாமல் நின்றிருக்க, யுவராஜ் பார்த்துவிட்டவன்,  “பைக்கை ஓரங்கட்டி கார் போக வழிவிடுங்க..” என்றான் சத்தமாக.

எங்களுக்கு தெரியும்.. நிக்கிறது  எங்க ஊர் கார்..” என்றான் ரமேஷ் வன்மமாக. கூட்டம் முடிந்திருந்ததால் ஆட்கள் கலைந்து அங்கங்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். தயாநிதி அபராத தொகை பற்றி நான்கு ஊர் கவுண்டர்களிடம் பேசி கொண்டிருக்க, இங்கு ரமேஷ் அவன் வேலையை காட்டினான்

டேய் ஜமுனா கார் தான் அது, கொஞ்ச நேரம் வெய்ட் பண்ண சொல்லு..” என்றான் ரமேஷ் சத்தமாக.

‘மடையன் அவ ஏதோ எமர்ஜென்சி கேஸுக்கு கிளம்பி வந்திருக்கா, அது புரியாம..’ யுவராஜ் பல்லை கடித்தவன், அவன் ஊர் ஆட்களிடம் பைக்குகளை நகர்த்த சொல்ல

அதான் வேண்டாம்னு சொல்றோம் இல்லை. எங்க ஊர் பொண்ணுக்கு என்ன பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நீங்க எல்லாம் உங்க வேலையை பாருங்க..” என்றான் ரமேஷ் எடுக்க விடாமல்

“லூசாடா நீ..?” யுவராஜ் கேட்க, ஜமுனா ஹார்ன் அடித்தாள். “எவனும் எங்க ஊர்க்காரங்க பைக்கை தொட கூடாது..” ரமேஷ் வழி மறைத்து நிற்க

டேய் அவனை விலகிட்டு போங்கடா..” என்றான் யுவராஜ் அதட்டலாக. அவனின் ஊர் இளைஞர்களும் ரமேஷை ஒதுக்கி தள்ளி செல்ல, ஹார்ன் சத்தத்தில் ஓரமாக டீ குடித்து கொண்டிருந்த போலீசும் வந்துவிட்டனர்

தயாநிதி மகள் கார் ஹார்னில் திரும்பி பார்க்க, போலீஸ் பைக்குகளை நகத்தி வழிவிட ஜமுனா சென்றுவிட்டாள். அவர் திரும்ப பேச ஆரம்பித்துவிட, ரமேஷ் ஆணவம் தோற்று கொண்டிருப்பதில் அடி வாங்க, “என்னமோ பொண்டாட்டியோட சேர்ந்து வாழுற மாதிரி இந்த பதை பதைக்கிற, என் தங்கச்சி தான் உன்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு எங்ககிட்டே வந்துட்டாளே..? உனக்கென்னடா அவ மேல அக்கறை..?” என்றான் வன்மமாக

யுவராஜ் முகம் இறுக, “தம்பி.. இது தப்பு.. ஊர் பிரச்சனையில சொந்த விஷயத்தை பேச கூடாது..” உடன் இருந்த பெரியவர் அதட்டினார்

ஏன் பேசினா என்ன..? நான் தான் பெரிய இவன்னு விறைப்பா திரியற சண்டியருக்கு பொண்டாட்டியை வச்சு பொழப்பு நடத்த முடியல தானே..?”  என்றான் விடாமல். யுவராஜ்க்கு பொறுமையை இழுத்து பிடிக்க வேண்டியிருந்தது

தம்பி.. திரும்ப திரும்ப தப்பு பண்ற நீ..?” பெரியவர் எச்சரிக்க, அங்கு கூட்டம் சேர ஆரம்பித்தது. தயாநிதி, அருணாச்சலம் கேசவன் பார்வையும் இந்த பக்கம் வந்தது. “ரமேஷ் ஏதோ வம்பிழுக்கிறான் போல..” அருணாச்சலம் சொல்ல, தயாநிதி பணத்தை வைத்துவிட்டு அங்கு விரைந்தார்

ரமேஷோ, “யோவ் பெருசு நான்  நியாயம் தானே கேட்டுட்டு இருக்கேன், இவன் எதுக்கு எங்க ஊர் பொண்ணுக்கு உதவி பன்றான்..? அவ தான் இவன் வேணாம்ன்னு வந்துட்டா இல்லை, தொலைஞ்சதுன்னு நாங்களும் அவளுக்கு இரண்டாவது கல்யா..”

ஆஅஹ்ஹா..” அப்படி ஒரு குத்து மூக்கிலே. ரத்தம் நிற்காமல் வழிய, ரமேஷ் ஆங்காரத்துடன் யுவராஜ் சட்டையை பிடிக்க போக, திரும்ப பேசிய வாய்க்கு ஒரு குத்து. “தம்பி தம்பி விடுப்பா..” உடன் இருந்த பெரியவர் யுவராஜ் கையை பிடிக்க

“உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்டா, என்னையே அடிச்சுட்ட இல்லை..” என்று ரமேஷ் யுவராஜ் மேல் பாய, யுவராஜ் காலால் உதைத்து கீழே தள்ளிவன், பெல்ட்டை கழட்டி வீசிவிட்டான்

சில நொடியில் நடந்துவிட்ட செயலில், திரும்ப ஒரு கலவர மேகம். “எங்க ஊர்க்காரன் மேலயா  கை வைக்கிறயா..?” என்று ரமேஷின் ஆட்கள் யுவராஜ் மேல் பாய

எவண்டா அது என் மாப்பிள்ளை மேல கை வைக்கிறது..?” தயாநிதி வேஷ்டியை ஏற்றி கட்டி கொண்டு அவர் ஆட்கள் மேல் கொந்தளித்துவிட்டார்.

பெரியப்பா என்னை அடிச்சிருக்கான் அவன்..?” ரமேஷ் எகிற, அவன் ஆட்களும்இவன் மட்டும் அடிதடி பண்ணலாமா..?” என்று கத்த ஆரம்பித்துவிட்டனர்

யுவராஜ்க்கோ  அடிபட்ட கைக்கு திரும்ப சேதாரம். மொத்தமாக ஒரு கூட்டம் அவன் மேல் விழுந்தால் என்ன ஆகும்..?

“ரமேஷ் மேல் தான் தப்பு.. ஊர் பிரச்சனைக்கு சொந்த விஷயத்தை இழுத்து அதிகமா பேசிட்டான்..” பெரியவர் அடித்து பேசினார்

தயாநிதி,  ரமேஷ் பேசியிருந்தது கேட்டு இன்னும் கொதித்துவிட்டார். “என் பொண்ணு, மாப்பிள்ளை வாழ்க்கைய பத்தி பேச நீங்க யாருடா..? சொந்த பங்காளிங்கன்னு பார்க்க மாட்டேன், ஒவ்வொருத்தனையும் தொலைச்சு கட்டிடுவேன், முக்கியமா நீ கொஞ்ச நாளைக்கு என் முன்னாடி  வந்துடாத, அண்ணன் மகன் எல்லாம் பார்க்க மாட்டேன்..” என்று ரமேஷை எச்சரித்து பணம் கட்டி சென்றார்

யுவராஜ் வீட்டிற்கு செல்லாமல் நேரே ஷெட்டிற்கு சென்றுவிட்டான். வேலை முடிந்து அம்மாவிற்கு போன் செய்த ஜமுனாவிற்கு விஷயம் சொல்லபட்டது

Advertisement