Advertisement

போலீசுக்கு தகவல் கொடுயா..” என்று ஒருபக்கம் சத்தம் வர, தயாநிதி அவர் ஆட்களை கட்டுப்படுத்தாமல் நின்றிருந்தார்

யுவராஜ் என்னப்பா..?” கேசவன் மகனை கேட்க

பார்த்துக்கலாம் விடுங்கப்பா..” என்றான் அவன் நிதானமாக. அவன் பார்வை தயாநிதியை தான் துளைத்து கொண்டிருக்க, அவர் இவன் பக்கமே திரும்பவில்லை

இங்கு அருணாச்சலம் பக்கம் செங்கல்  ஒன்று பறந்து வர, கவனித்து கொண்டே இருந்த யுவராஜ் சட்டென அவரை மறைத்து நிற்க, அவன் தோளில் பலமாக விழுந்ததுநல்ல வலி

முகம் சுருக்க, “என்ன ஆச்சுப்பா..?” என்று அருணாச்சலமும், கேசவனும் அவனை கவனிக்க, போலீஸ் சைரன் சத்தத்துடன் மூன்று பைக்குகள் வந்து நின்றதுடன், பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் லத்தியால் வைத்தியம் நடந்தது

பாய்ந்து பாய்ந்து மற்றவர்களை அடித்து கொண்டிருந்தவர்கள், போலீஸ் அடியில் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடி, ஒளிந்தனர். “ஐயோ, அம்மா..” என்ற சத்தம் அங்கு உட்ச கட்டத்தில் எதிரொலிக்க, “எங்களையாடா *** பசங்க கேட்டஎன்று தாயாநிதி பங்காளியின்  வேஷ்டியை ஒருவன் உருவி கையோடு எடுத்து கொண்டு  ஓடிவிட்டான்.  

டேய் என் வேட்டி வேட்டி..”  என்று அவர் கத்தி கொண்டே பின்னாலே பட்டாபட்டியுடன் ஓட

பப்லிக்ல என்னடா டிரெஸ் இது..?” என்று  போலீசால் அவரின் பின் பக்கம்  பழுத்துவிட்டது

சார் சார்..” என்று அவர் அலற

போடுங்க சார், இன்னும் நல்லா போடுங்க சார், அப்படியே அந்த பட்டாபட்டியும் உருவி விடுங்க சார்..” என்று அக்கம் பக்கம் இருந்து குரல்கள் பாய்ந்து வந்தது

சார் சார் நான் மயக்கமாயிட்டேன்.. என்னை வுட்டுடுங்க சார்..” என்று மல்லாக்க படுத்தேவிட, “போய்த்தொலை..” என்று மற்றவனிடம் சென்றார் போலீஸ்

இங்கு ப்ரெசிடெண்ட், “இது ரொம்ப தப்பு தயாநிதி.. உங்க ஊர்க்காரங்க ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இதை தான் பண்றாங்க..” என்று கடுப்புடன் பேசி கொண்டிருக்க, போலீஸ் எல்லோரையும் அடக்கி ஓரிடத்தில் சேர்த்திருந்தனர்

கிழிந்த சட்டைகளும், மண்ணில் புரண்ட கோலத்துடன் முகத்தை தொடைத்து தயாநிதி பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்த யுவராஜ், “பெரிய ஊரே தவிர, அங்கு ஊர்கட்டுப்பாடு ஒன்னும் இல்லை போல..” என்றுவிட்டான்

தயாநிதி அவனை நேருக்கு நேர் முறைக்க, “தம்பி என்ன இது..?” என்றார் கேசவன் சங்கடத்துடன்

உண்மையை தானே சொன்னேன்ப்பா, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிட முடியாது, குரல் உயர்த்தி பேசுறவன் எல்லாம் தலைவன் ஆகிட முடியாது, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது தான் நம்ம கிராமங்கள், இதை தான் செய்யணும், இப்படி தான் செய்யணும், இதை மாத்த இங்க எந்த கொம்பனுங்களுக்கும் இடமில்லை..” என்று அழுத்தமாக பேச

நாங்க மாத்தி காட்டிட்டா..?” ரமேஷ் திமிராக கேட்டான். யுவராஜிடம் ஒரு கேலியான சிரிப்பு. அவ்வளவு தான்

“டேய் என்ன..?” என்று ரமேஷ் அவன் சிரிப்பில் கொதிக்க

ரமேஷ்..” என்று தயாநிதி அதட்டலிட்டார்

இது சரி வராது, இதோட மூணாவது பஞ்சாயத்து, இனி பேசி பிரயோஜனமில்லை, எங்களால என்ன செய்ய முடியுமோ நாங்க பார்த்துகிறோம்..” அருணாச்சலம் துண்டை உதறி சொல்ல

பொறுங்கய்யா.. பேசுவோம்..” என்றார் ப்ரெசிடெண்ட்

அதான் அவர் பார்த்துகிறேன் சொல்லிட்டார் இல்லை, விடுங்க என்ன செய்றார் பார்ப்போம்..” என்றான் தயாநிதியின் பங்காளி

யுவராஜ் புருவங்கள் இடுங்க, “அருணாச்சலம் அய்யா சொல்றது சரி, இனி நாங்க நாலு ஊரா, நீங்க ஒரு ஊரான்னு பார்த்துக்கலாம்..” மற்ற ஊர்காரர்களும் சொல்லிவிட்டனர்

ப்ரெசிடெண்டுக்கு தலை இடியாக இருக்க, அவர் சமாதானம் செல்லுபடியாகவில்லை. அன்றைய பஞ்சாயத்தும் முடிவு எட்டாமல் முடிந்துவிட, கூட்டம் கலைந்தது

தயாநிதி கிளம்புமுன்னர் அருணாச்சலம், கேசவனிடம் வந்தவர், “வரேன் மாமா, வரேன் மச்சான்..” என்று மாமனார் அருணாச்சலத்திடமும், மச்சான் கேசவனிடமும் விடைபெற்றார். 

யுவராஜ் அவரை பார்த்தே நிற்க, தயாநிதி அவனை முறைத்து சென்றார். “தம்பி அவர்  ஊர் பிரச்சனையை விட்டு, எங்ககிட்ட முறையா சொல்லிட்டு போறார் இல்லை, நீயும் மருமகனா அவருக்கு சொல்லியிருக்கணும்..” என்றார் கேசவன் மகனிடம். 

யுவராஜ் அதற்கு பதில் சொல்லாமல், வீங்க ஆரம்பிக்கும் தோளை பார்த்தவன், தாத்தா, அப்பாவை கிளம்ப சொல்லிவிட்டான். ப்ரெசிடெண்ட் அவனிடம் நின்று பேச, சில நிமிடங்களுக்கு மேல் சட்டை இறுக்காமாகிவிட்டது

இனியும் தாங்காது என்று புரிய, அவரிடம் விடைபெற்று, பைக் எடுக்க, வலி அதிகரித்தது. இருக்கும் நிலையில் திருப்பத்தூர் வரை செல்ல முடியாது என்பது புரிந்து போக, பைக்கை ஊர்ப்பக்கம் திருப்பியவன், ஒரு வீட்டிற்குள் நுழைந்தான்

அந்த வீட்டின்  முன் பக்கம் முழுதும் ஆட்கள் நிறைந்திருக்க, யுவராஜ் பைக் சத்தத்தில் எல்லோரும் திரும்பி பார்த்தனர். பேச்சு சத்தம் முழுதும் அடங்க, பார்வை மொத்தமும் இவன் மேலே

இவன் யாரையும் சட்டை செய்யாமல்நின்றிருந்த ஒருவரை இடித்து பைக்கை நிறுத்தி இறங்கினான். “மாப்பிள்ளை.. காலு காலு..” என்று இந்த பக்கம் நின்றிருந்தவர் கத்த

ஸ்டேண்ட் தானே.. பைக்கை நகர்த்தி காலை எடு மாமோய்..” என்றவன், கூட்டத்திற்கு இடையில் நுழைந்து வீட்டிற்குள் செல்ல,  

இவனுக்கு இருக்கிற தைரியத்தை பாரு..’ ரமேஷ் உள்ளுக்குள் பொறுமியவன், “என்ன ஆனாலும் இதை இப்படியே விடக்கூடாது சித்தப்பா, இவ்வளவு ஆனதுக்கு அப்புறம் அந்த ஒரு பங்கு தண்ணியும் அவங்களுக்கு கிடையாது, என்ன பு*ங்குறாங்களோ பு*ங்கட்டும்..” என்றான் கத்தலாக

வீட்டிற்குள் நுழைந்த யுவராஜிற்கு  மட்டுமில்லாமல், வீட்டினுள் இருந்த அனைவருக்கும் ரமேஷ் பேசியது கேட்கத்தான் செய்தது. “வா.. வாப்பா..” ஜெயலஷ்மி அவனை திணறி வரவேற்க

ம்ம்..” என்றவன் பார்வை வீட்டை  அலச

ஜமுனா மேல இருக்கா..” என்றார் ஜெயலக்ஷ்மி

மேலேறியவன் மூடியிருந்த கதவை திறந்து உள்ளே சென்றான். அறையிருட்டில் பெட்டில் படுத்திருந்த உருவம் தெரிய, இறுக்கும் தன் ஷர்ட்டை கழட்ட கையை அசைக்க வலி கூடியது. ஸ்ஸ்..” என்றான்

அவன் சத்தத்தில் தூங்கி கொண்டிருந்த ஜமுனாவிற்கு சட்டென விழிப்பு வர, கண் திறந்து பார்த்து மூடியவள், யாரென புரிந்து வேகமாக எழுந்தமர்ந்தாள். அவன் பட்டனை முழுதும் விடுவித்திருக்க, “என்.. என்ன பண்றீங்க..?” என்று கண் தேய்த்து கேட்டவளுக்கு, கீழே உள்ளே ஊர்க்கார்கள் பேச்சு சத்தம் கேட்க, பஞ்சாயத்து நாள் என்பது நினைவில் வந்தது

எழுந்து ஜன்னலை திறந்து கீழே பார்த்தவள், “எதுக்கு வந்தீங்க..? எல்லாம் கீழே இருக்கும் போது இதென்ன..?” என்று கேட்க, அடிபட்ட கையை அசைக்க முடியாமல், இறுக்கும் ஷர்ட்டினை என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்த யுவராஜ் நிமிர்ந்து அவளை பார்த்தான்

அப்போது தான் அவளுக்கு அவன் வீங்கிய கையும், அசைக்க முடியாமல் அவன் வலியில் வேர்த்திருப்பதும் புரிந்தது. யுவராஜ் கழட்டிய பட்டனை ஒரு கையால் போட முயன்று கொண்டே திரும்பி வாசலுக்கு நடந்தான்

ஏங்க.. ஏங்க..” என்று அவள் பின்னால் ஓடிவந்து வழிமறைத்தவள், “கை.. கைக்கு என்ன ஆச்சு..?” என்று அவன் தோளை தொட, யுவராஜ் அவள் கையை தட்டிவிட்டான்

சரி நான் தொடல.. இங்க உட்காருங்க..” என்று சேர் எடுத்து போட்டு அமர வைத்தவள், ஸிஸர் எடுத்து, அவன் ஷர்ட்டினை கட் செய்து விடுவித்தாள்

எப்படி ஆச்சு..?” என்று கேட்டவள், தன்னுடனே எப்போது இருக்கும் மெடிக்கல் கிட் எடுத்து, வலிக்கு மெடிசன் கொடுத்தாள். யுவராஜ் மறுக்காமல் வாங்க, ஜமுனா தண்ணீர் பாட்டில் எடுத்து அவனிடம் கொடுக்க வந்தவள், தானே அவன் உதட்டுக்கு அருகில் கொண்டு சென்றாள். யுவராஜ் முகம் திருப்ப, அழுத்தமாக கன்னம் பிடித்து வாய்க்கருகில் பாட்டிலை வைக்க, அவளை பார்த்து கொண்டே தண்ணீர் குடித்து, மாத்திரையை முழுங்கினான்

பிராக்ச்சர் மாதிரி இல்லை, எதுக்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்திடலாம்..” என

அதெல்லாம் வேண்டாம்..” என்றவன், எழுந்து சென்று அவள் பெட்டில் படுத்தான்.  

இருக்கா இல்லையான்னு டாக்டர் நான் தான் சொல்லணும்..” ஜமுனா அவன் பக்கம் சென்று சொல்ல, யுவராஜ் அவள் கை பிடித்து இழுத்தான்

அச்சோ வெய்ட்..” என்று பதறி அவன் மேல் விழாமல் கை ஊன்றி பேலன்ஸ் செய்தவள், “மேல விழுந்தா என்ன ஆகும்..?” என்றாள் நிமிர்ந்து நின்று

அவனோ மீண்டும் அவள் கை பிடித்திழுக்க, அவனுக்கு என்ன வேண்டும் என்று புரிந்து கொண்டவள், அப்படியே நிற்க, யுவராஜ் இப்போது வலித்த கையை சட்டை செய்யாமல் அவளை பிடித்திழுக்க முயன்றான்

ஜமுனா மூடி திறந்த கண்களுடன்,  கணவன் இழுப்புக்கு ஏற்ப அவன் பக்கத்தில் அமர, அடுத்த நொடி அவன் தலை அவள் மடிக்கு வந்தது. அதனுடன் அவன் முகம் அவள் வயிற்று பக்கம் திரும்ப, கைகள் எதையோ தேட, ஜமுனா உதடு கடித்து, கழுத்தில் இருந்த தாலி கொடியை வெளியே எடுத்துவிட்டாள்

கண் மூடி கொண்ட  யுவராஜ் விரல் மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த மாங்கல்யத்தை வருடி கொண்டேஅதன் மஞ்சள் வாசனையை இழுத்து சுவாசித்தவன் அதன் மேலே முகம் வைத்து  கொண்டான்

இவர் என்னை பிரிய விடமாட்டார்.. என்னை பலவீனமாக்குகிறார்..” ஜமுனா இயலாமையில், ஆதங்கத்தில், ஆற்றாமையில் அமர்ந்திருக்க, அவள் மடியில் அழுத்தமாக அவன்.

Advertisement