Advertisement

“தம்பி. இன்னிக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. உனக்கு நல்லா பொருந்தி வருது. போட்டோ கூட குடுத்துருக்காங்க. உனக்கு பிடிச்சிருக்கா பார்த்து சொல்லுப்பா” வெங்கடேசன் தன் இளைய மகனிடம் கேட்டார்.

இன்று வெள்ளி இரவு, அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்று,  கிருபாகரனும், காவ்யாவும் அவர்களின் அண்ணன் ரகுவின் குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு அங்கேயே சாப்பிட்டும் முடித்து இரவு நேரம் கழித்தே அனைவரும் வந்து சேர்ந்தனர். பெரியவர்கள் செல்லவில்லை.

இதற்கு  இடையில் தரகர் வந்து பெண்ணின் ஜாதகம் கொடுத்து சென்றிருக்க, அவர்கள் தூங்க போகும் முன் விஷயத்தை காதில்  போட்டார்.

தந்தையை ஒரு பார்வை பார்த்தவன், வேகமாக சென்றான். அவனுக்கு இருபத்தி எட்டு வயது ஆகிறது. நல்ல வேலையில் இருக்கிறான். மிக அதிக சம்பளத்தில் பெரிய இடத்தில் வேலை பார்க்கிறான்.

அவன் தங்கை காவ்யா இப்பொழுது முதுகலை இறுதி ஆண்டு படிக்கிறாள். அவள் முடித்ததும் அவளுக்கு முதலில் திருமணம் முடிக்கலாம். அதன் பிறகு தான் செய்து கொள்வதாக காலையில் தான் கூறியிருந்தான்.

ஆனால் வெங்கடேசனுக்கு, நல்ல இடமாக வந்தால் இவனுக்கே முதலில் முடிக்கலாம். பெண்ணுக்கு ஒரு வருடம் விட்டு முடிக்கலாம் என்று எண்ணம். அதனால் பொறுமையாக பெண் தேடலாம் என்று தரகரின் காதில் போட்டு வைத்தார். அவர் இன்றே வருவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

அப்பா கூறியதை மகன் கண்டுகொள்ளாமல் மேலே செல்ல பார்க்க,

“சூப்பர் மாமா. பொண்ணு பெயர் என்ன?” என்று மூத்த மருமகள் வித்யா கேட்டுக்கொண்டே போட்டோவை கையில் எடுத்தாள். காவ்யாவும் அவளுடன் ஒட்டிக்கொண்டு ஆவலுடன் பார்த்தாள்.

பெண் பார்க்க மிகவும் குழந்தை தனமான முகத்துடன் மிகவும் அழகாக இருந்தாள். கண்கள் பெரிதாக குறும்புத்தனத்துடன் இருந்தது.

“கிருத்திகா” என்றார் வெங்கடேசன்.

அத்தனை பெரும் அசையாமல் நின்றனர். மாடி ஏறி கொண்டிருந்தவனும் நின்றான்.

“கிருத்திகா கிருபாகரன்”

“பேரு செம பொருத்தம் இல்ல அண்ணி” காவ்யா கூறினாள்.

அனைவரும் கிருபாகரனை பார்க்க, அவன் இறங்கி வந்து அண்ணியின் கையில் இருக்கும் போட்டோவை பார்வை இட்டான். உலகம் மறந்து வச்ச கண் வாங்காமல் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ உள் மனம் இவள் தான் என்று அடித்துக் கூறியது.

“உனக்கு பிடிச்சிருந்தா இந்த சண்டே

பொண்ணு பார்க்க போகலாம்” என்று தயங்கி கூறினார் வெங்கடேசன்.

“போகலாம்”

ஒற்றை வார்த்தையில் சம்மதம் கூறிவிட்டு போட்டோவையும் எடுத்துக்கொண்டு சென்றான்.

“அண்ணி. அண்ணன் விழுந்துட்டான்னு நினைக்கிறேன்”

“எனக்கும் அப்படி தான் தோணுது”

“டேய். நான் இன்னும் பார்க்கலடா” என்று அண்ணன்காரன் கத்தினான்.

அவன் கண்டுகொள்ளாமல் படி ஏறினான்.

“உள்ள இன்னும் ரெண்டு மூணு போட்டோ இருக்கு. அத பார்த்துக்கோங்க” என்று வித்யா கொடுத்தாள்.

பெரியவன் அந்த போட்டோவை பார்க்க, படி ஏறிக்கொண்டிருந்தவன் வேகமாக இறங்கி வந்து அதையும் அண்ணனின் கைகளில் இருந்து பிடுங்கிக்கொண்டு சென்றான். அத்தனை பேரும் நமுட்டு சிரிப்போடு பார்க்க, அவனின் தாய் தமிழரசி மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த ஞாயிறு காலையில் அனைவரும் பெண் பார்க்க சென்றனர். புடவை கட்டி வந்து நின்றாள். புதிதாக காட்டுகிறாள் போலும். மிகவும் அசௌகரியமாக நின்று வணங்கினாள்.

இப்போ அவசரமா எனக்கு கல்யாணம் பண்ணனுமா. இன்னும் நான் ஜாப்ல கூட சேரல. கொஞ்சம் நாள் விடலாம்ல. இரண்டு நாட்களாக மல்லுக்கு நிற்கிறாள்.

எம்சிஏ முடித்திருக்கிறாள். வேலையும் கிடைத்துவிட்டது. இன்னும் சேரவில்லை. அதற்குள் மாப்பிளையை அவளின் அப்பா கண்டுபிடித்துவிட்டார்.

மாப்பிள்ளையை யாரும் இன்னும் பார்க்கவில்லை. நேரடியாக வருகின்றனர்  என்றுவிட்டார்.

அவள் கையில் காபி கொடுத்து அனைவருக்கும் கொடுக்க கூற, புடவை தடுக்க தடுமாறிக்கொண்டே தட்டை கையில் வாங்கிக்கொண்டு திரும்பினாள்.

அவளின் அவஸ்தையை அனைவரும் என்ன இது என்று யோசனையில் பார்த்து   இருந்தனர்.

“காவ்யா, நீ போய் வாங்கி எல்லாருக்கும் குடு. அவங்க கீழ போட்டுடுவாங்க போல” கணீர் குரலில் க்ருபா தான் கூறினான்.

அந்த குரலில் அவனை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தாள்.

அவன் கண்கள் மட்டும் அவளை பார்த்து சிரித்தது. வாய் எப்பொழுதும் போல் உம்ம் என்று தான் இருந்தது. இப்படி ஒரு ஆண்மையான தோற்றத்தையும் அடிபணிய வைக்கும் கணீர் குரலையும் எதிர் பார்க்கவில்லை அவள். காவ்யா எழுந்து அவள் அருகில் வந்தும் கூட கிருத்திகா அவனையே பார்க்க, கண்களால் தங்கையிடம் கொடுக்க கூறினான்.

அவளும் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டாள். முகம் இப்பொழுது அவளுக்கு தெளிவாக இருந்தது. புடவை அவஸ்தையாக இல்லை. மனதைத் தான் ஒருவன் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டானே.

என்ன வாய்ஸ் என்ன ஒரு கண்ணு. எப்படி குறும்பா பார்க்கிறான் என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“என் பையன்கிட்ட பேசணுமாமா?” வெங்கடேசன் கேட்டார்.

அவள் அதிர்ந்து பார்த்தாள்.

அவள் பயப்படுகிறாள் என்று க்ருபா புரிந்துகொண்டான்.

“எனக்கு பேச ஒன்னும் இல்லப்பா. எனக்குப் பொண்ண பிடிச்சிருக்கு. அவங்களுக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டுக்கோங்க”

அட பாவி. கோர்த்து விடறானே என்று அவனை பார்த்தாள். அவன் இவளை நமுட்டு சிரிப்புடன் பார்த்தான். இப்பொழுது அவளுக்கு தைரியம் வந்தது.

“நீ சொல்லும்மா” என்று வெங்கடேசன்  மறுபடியும் கேட்டார்.

“எனக்கு பேசணும் மாமா” என்று கூறி அவள் இப்பொழுது வாய்க்குள் சிரித்துக்கொண்டு குனிந்து நின்றாள்.

அவள் வீட்டினர் அனைவருக்கும் அதிர்ச்சி. நேரில் பேசி அவனிடமே திருமணம் வேண்டாம் என்றுவிடுவாளோ என்று.

“ஏய் என்னடி அதிகப்ரசங்கித்தனம் பண்ற” என்று தாய் மெதுவாக அதட்டினார்.

“எனக்கு பேச ஒன்னும் இல்லைங்க.” என்று கூறி அவன் படிப்பு வேலை என்று அவனை பற்றி அனைத்த்தும் கூறினான். “இவ்வளோ தான். நீங்க யோசிக்காம என்ன நினைக்கிறிங்கன்னு தைரியமா சொல்லுங்க. உன்ன புடிக்கல போடான்னு கூட சொல்லுங்க” என்று அவளிடம் நேரடியாக கேட்டான்.

இதற்கு மேல் அவளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவளுக்கும் அவனை பிடித்து விட்டதே. அதை எப்படி வாய் திறந்து கூறுவாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பிடிச்சிருக்கா என்று பார்வையிலேயே கேட்டான்.

முகம்  சிவந்து நின்றாள். அதுவே கூறியது அவளின் மனதை.

“அண்ணி சூப்பர். இப்படி முகம் சிவக்குது உங்களுக்கு. எங்களுக்கு உங்க சம்மதம் கிடைச்சிருச்சு” என்று காவ்யா உற்சாகமாக கூறினாள்.

கிருத்திகா வீட்டினருக்கும் மகிழ்ச்சி. என்ன செய்வாளோ என்று பதட்டத்துடன் தான் நின்றனர். இப்பொழுது அவர்களுக்கு நிம்மதி ஆனது.

இரு பக்கமும் சம்மதம் கிடைத்ததும் அடுத்து பேச தொடங்கினர்.

பெண்ணுக்கு ஐம்பது பவுன் போட்டு சீர் வரிசை கொடுத்துவிடுகிறோம் என்று கூறினார் கிருத்திகாவின் பெற்றோர்.

மூத்த மருமகள் என்பது  பவுன் நகை, ஒரு பிளாட், சீர் வரிசை என்று வந்தாள். சின்னவனும் நல்ல வேலையில் இருக்கிறான். நீங்க இன்னும் அதிகமாவே என் பையனுக்கு செய்யலாம் என்றார் தமிழரசி.

க்ருபா வீட்டில் மற்ற அனைவரும்  அதிர்ந்தனர். இதைப்பற்றி மற்ற யாருக்கும் எந்த எதிர் பார்ப்பும் இல்லை. அம்மா திடீர் என்று ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை. ஆனால் சபையில் அவரை விட்டுக்கொடுக்க முடியாமல் அனைவரும் பல்லை கடித்துக்கொண்டு  அமைதியாக இருந்தனர். வித்யாவுக்குமே இந்த பேச்சு இனிக்கவில்லை.

“எங்களுக்கு இன்னும் அடுத்து ஒரு பெண் இருக்கிறாள். பையனும் படிக்கிறான். இதுக்கும் மேலன்னா எங்களுக்கு ரொம்ப கஷ்டம்மா” என்று தன்மையாகவே கூறினார் அவளின் தந்தை.

“அவ்ளோ கஷ்டப்படுறவங்க ஏன் பெரிய இடத்துல பொண்ணு எடுக்கறீங்க?” என்று கூறி அவர் திடீர் என்று பெரிய இடமாகிவிட்டார்.

ஏன் என்றால், இந்த பெண் தனக்கு பிடிக்கிறதா என்று யாரும் அவரிடம் கேட்கவில்லை. மேலும் ஒரு மாதம் முன்பு முடிந்த அவரின் நாத்தனார் பையனுக்கு அவ்வளவு நகை மற்றும் சீர் செய்து பெண் கொடுத்து இருந்தனர். அவனை விட நன்றாக படித்து அவனை விட பெரிதா வேலையில் இருக்கும் தன் பையனுக்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதை விட, பெரிய பையனை விடவும் சின்னவன்  அதிக சம்பளம்  என்று பெற்ற  பிள்ளைகளையே பணத்தால் அளந்தார்.

அவரின் கேள்வியில் வெங்கடேசனும் க்ருபாவும் எழுந்துவிட்டனர்.

“எங்களை மன்னிச்சிடுங்க சார். உங்க பொண்ணுக்கு நீங்க இன்னும் கொஞ்சம் நல்ல மாப்பிள்ளையை பாருங்க” என்று கூறி தன் மனைவியை பார்வையால் எரித்துவிட்டு   வெளியில் சென்றுவிட்டார். க்ருபாவும் பின்னாலேயே சென்றுவிட்டான்.

ஒருவரின் வீடு தேடி போய் அவர்களையே அவமதிப்பதா என்று அவருக்கு கடும் கோபம்.

காரில் அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசவில்லை.

மூத்தவனின் பிள்ளைகள் இரண்டும் பசிக்கிறது என்று கூற சிறிது தூரத்திலேயே ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றனர்.

சாப்பிடும்பொழுது காவ்யா வாய் திறந்தாள்.

“அண்ணி சூப்பரா இருந்தாங்க. அண்ணனுக்கு செம மேட்சா இருந்துருப்பாங்க. ஏன்மா இப்படி பேசிட்டிங்க?” மனது கேட்காமல் கேட்டுவிட்டாள்.

அவருக்கு இன்னும் தான் பெரிய இடம் என்ற மமதை நீங்கவில்லை போலும். எதோ பெரிய தத்துவத்தை கூறுவது போல

“பெரியவன் சின்னவன் வாங்கற சம்பளத்துல பாதி தான் வாங்குறான். அவனுக்கே உன் அண்ணி வீட்டுல எவ்ளோ செஞ்சாங்க. அப்போ சின்னவனுக்கு அதைவிடவும் பெருசா செய்யணுமில்ல”

வீட்டினர் அனைவரும்  இன்னும் அதிர்ந்தனர். பெரியவன் கவர்மெண்ட் வேலையில் இருப்பவன். சின்னவன் ஐடி துறையில் இருப்பவன். சம்பளத்தில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அரசு வேலையில் சலுகைகளும் பாதுகாப்பும் அதிகம். அதனாலேயே அவன் அந்த வேலையில் தொடர்வது.

 இது எதுவும் தெரியாமல் பெரிய ஆள் போல பேசிக்கொண்டிருந்தார்.

“அத்த. எனக்கு உங்க பையனோட சம்பளம் என்னிக்குமே ஒரு விஷயமா இருந்தது இல்ல. அப்படி உங்களுக்கு அவர் வாங்கற சம்பளம் கம்மியா தெரிஞ்சதுன்னா, நாங்க வேணா தனியா போயிடறோம்” வித்யா அவள் கோபத்தை காட்டினாள்.

மூத்த மகன் முகம் கசங்கி அமர்ந்து இருந்தான். வெங்கடேசன், இன்னும் எங்களுக்கு என்ன வைத்திருக்கிறாய் என்று பார்த்தார்.

யாருக்கும் உணவு இறங்கவில்லை. தமிழரசியும் பிள்ளைகளும் மட்டும் உண்டனர்.

பிறகு திரும்பவும் பயணத்தை தொடர்ந்தனர்.

க்ருபாவிற்கு கிருத்திகா தான் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தாள்.

அவனால் ஐந்து நிமிடத்திற்கும் மேல் வண்டி ஓட்ட இயலவில்லை.

வழியில் அமைதியாக இருந்த ஒரு கோவிலில் சென்று காரை நிறுத்திவிட்டான். எல்லோருமே இறங்கிவிட்டனர். கோவில் வாசலில் இரு பெரிய மரமும் அதன் அடியில் ஒரு மேடையும் போடப்பட்டு இருந்தது. கூட்டம் கொஞ்சம் கம்மியாக தான் இருந்தது.

கோவில் உள்ளே கூட செல்லாமல் எல்லோரும் வெளியில் அமர்ந்துவிட்டனர். தமிழரசி மட்டும் உள்ளே போய் சாமி பார்க்கிறேன் என்று சென்றார்.

வெங்கடேசன் அவரை வெறுப்புடன் பார்க்க பிள்ளைகள் அனைவரும் வருத்தமாக பார்த்தனர்.

அப்பொழுது ஒரு ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு கிருத்திகா தன் தம்பியுடன் வந்தாள்.

அவளை மரத்தின் அடியில் அமர்ந்து அனைவரும் பார்த்தனர். க்ருபாகரனுக்கு இதயம் நின்று துடித்தது. வீட்டில் புடவையில் தரிசனம் கொடுத்தவள் இப்பொழுது ஒரு பாவாடை சட்டையில் வந்து இருந்தாள். மூச்சு விடவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திக்கொண்டிருக்க அவள் தம்பி இவர்களை பார்த்துவிட்டான்.

அவன் அக்காவை அழைத்து இவர்களை காட்ட இவள் அனைவரையும் பார்த்தவள் க்ருபாவை ஒரு நொடி அதிகமாக பாத்தாள்.

அவளின் கண்ணில் நீர் சேர துவங்கியது. உடனே பார்வையை திருப்பிக்கொண்டு தம்பியை இழுத்துக்கொண்டு கோவில் உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் கண் கலங்கியதையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் அதை மறைத்ததகையும் க்ருபா பார்த்துவிட்டான். அவன் மனது தவிக்க தொடங்கியது. இப்படியே விட்டு சென்றால் அழுது கரைந்துவிடுவாள் என்று தோன்றியது.

உடனே அவள் பின்னாலேயே சென்றான்.

“கிருத்தி நில்லு”

அவள் நிற்காமல்  செல்ல அவள் தம்பி நின்றான்.

“நான் உன் அக்கா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசணும்”

அவன் அங்கே இருந்த பிள்ளையார் சந்நிதியின் வாசல் படியில் அமர்ந்துகொண்டான். வீட்டில் எல்லோருமே சோகத்தில் தான் இருக்கின்றனர். வந்து சில நிமிடங்களில் அவள் மனதையும் கலைத்து சென்றுவிட்டான். அவளுக்கு இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. அதனாலேயே கோவிலுக்கு வந்திருந்தாள். கல்லூரி படிக்கும் தம்பிக்கு நிலவரம் புரிந்தது. அவனுக்கும் இந்த மாமாவை பிடித்தது. எதாவது நல்லது நடந்தால் சரி என்று அமர்ந்துவிட்டான்.

இங்கு அவள் பின்னே  சென்றவன் அவள் முன்பு சென்று நின்று அவளை நகரவிடாமல் நிறுத்தினான்.

“போங்க. போயிட்டு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி வாங்க. அதுக்குள்ளே நானே உங்க அம்மா கேட்டது எல்லாம் சம்பாரிச்சிடுவேன். நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு நானே உங்கள மாப்பிள்ளை கேட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன். சரியா?” என்று கோபமாக கேட்டாள்.

“அவ்வளவு செஞ்சும் ஏன் என்னையவே கட்டிக்கணும். வேற நல்ல பையன் பாத்துக்கலாமில்ல” அவன் சிரிப்புடன் கேட்டான்.

“அத ரெண்டு  மணி நேரத்துக்கு  முன்னாடி என் மனச கலைக்கிறதுக்கும் முன்னாடி கேட்டுருக்கணும். நீங்க கண்டிப்பா வெயிட் பண்ணனும். வேற பொண்ணு ஏதும் பாத்திங்க கொன்னுடுவேன்”.

“ எனக்கு கொஞ்சம் டைம் குடு. நான் இத சரி பண்றேன். ரெண்டு வருஷம் எல்லாம் வேண்டாம். உங்க அப்பா ஒரு பவுன் கூட போட வேண்டாம். நம்ம கல்யாணம் நடக்கும். என்மேல நம்பிக்கை வச்சு கொஞ்சம் வெயிட் பண்றியா ப்ளீஸ்?”

அவள் அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தாள்.

“அம்மாடி. சிரிச்சிட்டியா? எப்போவும் இப்டியே இருடா. எல்லாம் நான் பாத்துக்குறேன். இந்த சிரிப்பும் உன்ன விட்டு போகாம உன்ன நான் நல்லா பார்த்துக்குவேன். சரியா?”

“சரி” என்று தலை ஆட்டினாள்.

“நீ பவுன் எல்லாம் கொண்டு வரவேண்டாம். வரும்போது உங்க வீட்ல இருக்க பாவாடை சட்டை எல்லாம் கொண்டுவந்துரு.” என்று அவளை மேல் இருந்து கீழ் வரை ரசித்துப் பார்த்துக்கொண்டே கூறிறான்.

அவன் பார்வையில் முகம் சிவந்தவள் “ உங்களுக்கு இந்த டிரஸ் அவ்ளோ பிடிச்சிருந்தா பேசாம முஹூர்த்தத்துக்கு கூட புடவைக்கு பதிலா பாவாடை சட்டை போட்டுக்குறேன்” என்று கிண்டல் அடித்தாள்.

“நீ ஃபர்ஸ்ட் நைட்டுக்கு கூட பாவாடை சட்டைல வா. ஐ வில் பி வெரி ஹாப்பி” என்று கண் அடித்தான்.

அவளுக்கு மொத்த உடலும் சிவந்தது.

“எங்க வந்து என்ன பேசுறீங்க. போங்க. நான் சாமி கும்பிட போறேன்” என்று கூறி இடத்தை காலி செய்தாள்.

அவனும் “டேக் கேர் டா” என்று கூறி கிளம்ப

“ஆனால் கண்டிப்பா நானும் சம்பாரிச்சு நூறு பவுன் நகை வாங்குவேன். அந்த நூறு பவுனையும் உங்க அம்மாவுக்கு தான் போடுவேன். சொல்லுங்க உங்க அம்மாகிட்ட” என்று போகும் போதும் கடுப்படித்தாள்.

அவன் சிரித்துவிட்டு மேலும் சிறிது பேசிவிட்டு விடை பெற்று சென்றுவிட்டான்.

உள்ளே சென்றவன் வெளியில் வரும்பொழுது வாய் எல்லாம் பல்லாக வந்தான். அவன் மகிழ்ச்சியை பார்த்து வீட்டினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த பெண் தான் அடுத்த மருமகள் என்று அனைவரும் புரிந்துகொண்டனர்.

சிறிது நேரம் கழித்தே தமிழரசி வெளியில் வந்தார். அவருக்கு இப்பொழுது நடந்த எதுவும் தெரியவில்லை. அவர் வெளியில் வந்தபொழுது பார்த்தது அனைவரும் சிரித்து  பேசிக்கொண்டிருந்ததை தான்.

“அவ நூறு பவுன் வாங்குவாளாம். அத்தனையும் நம்ம அம்மாவுக்கு  தான் வாங்கி போடுவாளாம்” என்று கூறி சிரித்தான்.

“இது நல்ல ஐடியா” என்று காவ்யா கூறினாள். அவளும் ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். இப்பொழுது எல்லோரும் கலகலவென்று பேசிக்கொண்டே வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் தமிழரசியிடம் பேசவில்லை. அதை அவரும் உணரவில்லை. எல்லோரும் நார்மல் ஆகிவிட்டனர் என்று நினைத்துக்கொண்டார்.

அன்று மாலை அனைவரும் காபி அருந்திக்கொண்டுருக்கும்பொழுது, காவ்யா அவள் அம்மாவின் முன்பு சென்று நின்று தான் போட்டிருக்கும் அனைத்து நகைககையும் கழட்டினாள். செயின் வளையல் தோடு மூக்குத்தி கொலுசு என்று அனைத்தும் கழட்டி தாயிடம் கொடுத்துவிட்டாள்.

“இந்தங்கம்மா” என்று கொடுத்தாள்.

“ஏண்டி இப்படி  எல்லாம் கழட்டி  குடுக்குற” என்று கேட்டார்.

“நீங்க தான் இதுக்கு ஆசைபட்டிங்கம்மா. இதுக்காகத் தான் ஒரு பொண்ண வேணாம்னு சொல்லிட்டு வந்திங்க. அண்ணனுக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சும் அவங்கள அவமானப்படுத்திட்டு வந்துருக்கீங்க. எல்லாம் இந்த தங்கத்துக்காக தானே. அதான் நீங்களே வச்சு போட்டு அழகு பாத்துக்கோங்க”

வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

பெண் இப்படி செய்ததும் வெங்கடேசனும் அவர் போட்டிருந்த செயின் மோதிரம் எல்லாம் கழட்டி மனைவியின் முன் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்து மூத்தவன், இளையவன்  இரண்டு பேருமே அதையே செய்தனர்.

வித்யாவும் தாலி தவிர அனைத்தும் கழட்டி அவரிடம் வைத்துவிட்டு சென்றுவிட்டாள். அவளுக்கும் தன் கணவனை இழிவாக  பேசியதில் கோபம்.

எல்லோருக்கும் மறை கலந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார். எல்லாம் நகைககையும் எடுத்து பீரோவில் பாத்திரப்படுத்தினார்.

ஆனால் அதன் பிறகு யாரும் தன்னிடம் பேசுவதில்லை என்பதை தாமதமாக உணர்ந்தார். ஒரு வாரம் பொறுத்தார். இரண்டு வாரம் பொறுத்தார். அதன் பிறகு ஒரு நாள் அனைவரின் முன்பும் அழுதுவிட்டார்.

“ உங்க எல்லாருக்கும் அந்த பொண்ணு தான் வரணும்னா அவளையே முடிக்கலாம்” என்று கூறினார்.

“நீ தான் அவங்களை அவமானப் படுத்திவிட்டாயே. அவங்க எப்படி இனிமேல் நமக்கு பொண்ணு குடுப்பாங்க”

வெங்கடேசன் கேட்டார்.

“நீங்க போன் போடுங்க. நானே இத பேசி  முடிக்கிறேன்” என்று கூறி போனிலேயே மன்னிப்பு கேட்டு பெண் கேட்டார்.

அவர்களும் அடுத்து என்ன செய்வது என்று அறியாது தானே முழித்துக்கொண்டிருந்தனர். இவர்களே திரும்ப கேட்கவும் ஒத்துக்கொண்டனர்.

இதோ நல்ல முறையில் திருமணம் முடிந்தது. ஒரு பவுன் கூட போடக் கூடாது என்று க்ருபா பிடிவாதமாக நின்றுவிட்டான்.

அதனால் அவளும் எதுவும் போட்டு வரவில்லை.

வீட்டிற்கு வரும் முன்பே தன்னை  தன் குடும்பத்திடம்  இருந்து பிரித்துவிட்டாளே இவள் என்று தமிழரசிக்கு உள்ளுக்குள் ஒரு கோவம் இருக்க தான் செய்தது.

அதிலும் ஒரு போட்டு தங்கம் இல்லாமல் வந்து நிற்கிறாள். அவன் கட்டிய தாலி மட்டுமே அணிந்து இருந்தாள்.

மனம் முடித்து வீட்டிற்கு வந்து வீட்டில் செய்யும் முறைகளை செய்து, இரவும் சாப்பிட்டுவிட்டு தான் கிருத்திகா வீட்டினர் கிளம்பினர்.

அன்று இரவு வித்யா அவளை அலங்கரித்து கிருபாவின்  அறையில்   விட்டுச்சென்றாள்.

உள்ளே வந்தவளை வைத்த கண் வங்காமல் பார்த்தான். அவள் பாட்டுக்கு வந்தவள் பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் அவள் கையை பிடிக்க வர வாகாக நகர்ந்துகொண்டாள்.

“எவ்ளோ நேரம்னு பாக்குறேண்டி”

“எவ்ளோ நேரம் இல்லங்க சார். எவ்ளோ நாள் எவ்ளோ மாசம்னு பாருங்க” என்றாள் நக்கலாக.

“ஒய் சோ?”

“உங்க  அம்மாவுக்கு  நான் நூறு பவுன் போட்டுட்டு அதுக்கு அப்புறம் தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.” என்றாள்.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”

“இல்லனா நான் மறந்து போய்டுவேன். அதான்” என்று கூறி வாய்க்குள் சிரித்துக்கொண்டாள்.

அவன் சென்று கட்டிலில் சம்மணங்கால் போட்டு அமர்ந்து நீ பேசு என்பது போல் பார்த்தான்.

“எங்க வீட்டை கேவலமா பேசினாங்க. இன்னும் அவங்களுக்குள்ள கோபம் இருக்கு தான். நான் இப்போ அவங்களுக்கு பிடிக்காத மருமகள் தான். அப்படி இருக்க நான் எப்படி அவங்க பையன எடுத்துக்க முடியும்” என்று கூறி இன்னும் பக்கம் பக்கமாக டைலாக் பேசினாள்.

பேசிக்கொண்டே மாற்று உடை எடுத்துக்கொண்டு  பாத்ரூம் சென்று மாற்றிவிட்டு வந்தாள்.

வெளியில் வந்தவளை இமைக்க மறந்து பார்த்தான். அவள் மாற்றி வந்தது ஒரு பாவாடை சட்டையில். இவனை சீண்டவே அப்படி தைத்திருப்பாள் போலும். சிக் என்று உடம்பை பிடித்து இருந்தது. அனைத்து வளைவுகளும் அவனை பித்தாக்கியது.

வெளியில் வந்தும்  இன்னும்    பேசிக்கொண்டே அவள் புடவையை மடித்து வைத்தாள். அவள் கையை தூக்கி இறக்கும்பொழுது எல்லாம் அவளின் இடை பளீரிட்டது.

அவள் புடவையை காபிபோர்டில் வைக்க செல்ல கீழே ஒரு ஊக்கு விழுந்தது. அதை எடுக்க அவன்  முன்பு குனிய, பார்த்தவன் உடனே எழுந்தான்.

அவள் ஊக்கை எடுத்துக்கொண்டு புடவையை வைக்க திரும்ப அவள் அப்படியே வேகமாக  அலமாரியினுள்  சென்று ஒட்டிக்கொண்டாள். அவள் என்னவென்று உணரும் முன்பு முதுகு பக்கம் முத்தமழை பொழிந்துகொண்டிருந்தான்.

பின்னால் இருந்து இறுக்கி கட்டி அணைத்து டாப்பை தூக்கி கைகளை இடுப்பில் தவழவிட்டான்.

“இப்படி ஒரு ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு என்ன தள்ளி இருக்க சொல்லுவியா. இப்போ பேசுடி என்று கூறி உதடுகளை சிறை எடுத்தான்”

கைகள் இடுப்போடு நிற்காமல் முழு சுதந்தரம் வேண்டி அவள் உடல் எங்கும் அலைந்தது.

அவன் கைகளுக்கு தடை போட முயன்றாள். ஆனால் அவள் உடல் அவள் பேச்சை கேட்காமல் இப்பொழுது அவன் பேச்சை கேட்டது. தடுத்து பார்த்தவள் பிறகு முடியாமல் துவண்டாள். அவளை தூக்கி சென்று கட்டிலில் விட்டு அவள் மீது படர்ந்து அதன்பிறகு அவளை அப்படி ஒரு வேகத்தில் கொள்ளை கொண்டான்.

அவனை மிகவும் சீண்டிவிட்டோம் என்பது  புரிந்தது. ஆனாலும் அவள் உடல் தான் அவனிடம் இழைகிறதே. என்ன செய்வாள்.

விடியும் வரை அவளை ஒரு போட்டு கூட கண்மூட விடவில்லை. விடியலில் அவளே அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போதும் என்று பாவமாக கூறினாள். அதன் பிறகே அடங்கினான்.

“பாவாடை சட்டை எல்லாம் இந்த ரூமுக்குள்ள தான். வெளில சுடிதார் போடு. இல்லனா சேலை கட்டு” என்று கூறி அவளை பார்வையால்  மேய்ந்தான்.

அவள் தன்னை ஒரு போர்வை எடுத்து போர்த்திக்கொண்டு “இன்னும் ஷார்ட் ஸ்கர்ட் ஷார்ட் டாப்ஸ் எல்லாம் வச்சிருக்கனே. அது எல்லாம்?” வேண்டும் என்றே கேட்டாள்.

“எல்லா டாப்ஸ்லயும் முன்னாடி லோ கேட் வச்சி தச்சுருக்கியா?” என்று கண் அடித்து கேட்டான்.

அவள் குப்பென சிவந்தாள். மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தாள்.

அவனும் கண்டுகொண்டான்.

“என்னோட வேகத்தை தாங்க முடியும்னா போடு” என்று கூறினான்.

வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது. அவளும் வேலைக்குச் செல்ல தொடங்கினாள். மூன்று மாதங்களுக்கு பிறகு ஐந்து பவுனில் ஒரு நெக்லஸ் எடுத்து வந்து மாமியாரிடம் கொடுத்தாள்.

“இந்தாங்க அத்தை. இத உங்களுக்காக வாங்கினேன்” என்று  கூறி அவரின் முன்பு வைத்துச் சென்றுவிட்டாள். இன்னும் அவள் தங்கம்  போடுவதில்லை.

தமிழரசி இப்பொழுது மாறிவிட்டார். காவ்யா இன்னும் பிடிவாதத்தில் இருக்கிறாள். நானும் இந்த வீட்டுல இருந்து ஒரு போட்டு நகை போட்டு போக மாட்டேன். அந்த மாதிரி எனக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கப்பா என்று கூறிவிட்டாள்.

தமிழரசி பெண்ணுக்காக அவ்வளவு நகை சேர்த்து வைத்திருக்கிறார். பெண்ணின் பிடிவாதம் அவரின் தவறுகளை உணர்த்தியது.

எல்லோரையும் அவர்களின் நகைகளை போட சொல்லி  கெஞ்சினார். அவர் திருந்திவிட்டார் என்று உணர்ந்து மற்றவர்கள் போட்டுக்கொண்டனர். ஆனால் காவ்யா மட்டும் இன்னும் முரண்டு பிடித்தாள்.

அவளுக்கு திருமணம் ஆனது. அவள் கேட்டதுபோலவே ஒரு பையனை கொண்டுவந்து நிறுத்தினார் வெங்கடேசன். மகிழ்ச்சியாக மணந்துகொண்டாள்.

மறுவீடு செல்லும்போதும் தமிழரசி அவளிடம் கெஞ்சினாள் நகைகளை எடுத்துக்கொள்ள கூறி.

“நீங்க இன்னும் ஒரு விஷயம் புரிஞ்சிக்கலம்மா. நம்மளோட  சந்தோசம் பணத்துலயோ நகைலையோ இல்ல. நம்மகூட இருக்க மனுசங்ககிட்ட தான் இருக்கு. நான் என் புருஷன் கூட சந்தோசமா இருக்கேன். அவரை விட எனக்கு இந்த தங்கம் எல்லாம் சந்தோசம் கொடுக்காது. நீங்க எனக்காக ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சா நாம எல்லாரும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்னு மனசார கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க” என்று  கூறிவிட்டு சென்றாள்.

தமிழரசியின் கண் திறந்தது. இந்த நகை சீர்வரிசைக்காக மனிதர்களை கீழே இறக்கியது தவறு என்று புரிந்துகொண்டார்.

ஆனால் மாமியாருக்குப் நகை வாங்குவதை கிருத்திகா தொடர்ந்து செய்ய, தமிழரசி க்ருபாவிடம் கத்தினார்.

“ஒழுங்கா அவளை நகை போட சொல்லு. இல்ல நீயாச்சும் அவளுக்கு வாங்கி  போடு.” என்று கூறினார். அவள் ரூமில் இருந்து அவர் கத்துவது கேட்டது.

இவள் ஏன் இன்னும் தன் அம்மாவின் மேல் இப்படி கோபத்தை காட்டுகிறாள் என்று அவனுக்கு கோபம் வந்தது. கோபமாக உள்ளே வந்தவன் பனியாக குளிர்ந்து நின்றான். உடனே அறையின் கதவை சாத்தினான்.

அவள் ஒரு ஸ்டூலை போட்டு அதன் மீது ஏறி நின்று பரண் மேல் ஏதோ வைத்துக்கொண்டிருந்தாள்.

ஒரு குட்டி டாப்சும் தொடை வரை இருக்கும் ஷார்ட் ஸ்கர்ட்டும்  போட்டிருந்தாள். மொத்தத்தில் நல்ல தரிசனம்.

அவளிடம் சென்றவன் ஒரு வார்த்தை பேசாமல் அவளை தூக்கினான். கட்டிலில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

“சோ. இது தான் டெக்னிக்கா என் கோபத்தை குறைக்க?”

அவள் பிடிபட்ட பார்வை பார்த்தாள்.

அவன் கைகள் அவள் உடலை அளக்க, பார்வை அவள் கண்களை கவ்வி நின்றது.

“இனிமேல் அம்மாக்கு நகை வாங்க கூடாது”

“ம்ம்ம்”

“நான் உனக்கு நகை வாங்குவேன். அத இனிமேல் போட்டுக்கணும்.”

“ம்ம்ம்ம்ம்”

“அம்மாவுக்கு மரியாதை குடுக்கணும்”

“சரி”

அவ்ளோ தான். இப்போ போய் ஒழுங்கா ஒரு சுடிதார் போட்டு கீழ வா. போ என்று அவளை எழுந்து நிற்க வைத்து முதுகில் கை வைத்து தள்ளினான்.

அவ்வளவவு தானா என்று பார்க்க அவன் வாய்க்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.

அவளின் டெக்னிக்கை அவளிடமே பயன்படுத்திவிட்டான்.

“நான் பண்ணது எனக்கேவா?” என்று கூறி அவன்மேல் பாய்ந்தாள்.

(சுபம்)

Advertisement