Advertisement

அத்தியாயம் 1:

பரபரப்பான காலைப்பொழுது அது. சிறுவர், சிறுமியர் பலர் துள்ளலோடும், சிலர் சோம்பலாகவும் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அலுவலகம் செல்ல வேண்டி மக்கள் கூட்டம் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததனர். வீடுகளிலோ பெண்கள் தங்களின் காலை நேர கடமையை எப்போதும் போல விழிப் பிதுங்கி செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் உலகம் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது எல்லோருக்கும் அவன் ஒருவரைத் தவிர

அந்த சாலையோர டிக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்தான் அவன். தலை கலைந்து, உடைகள் அழுக்காக என பார்க்கவே பரிதாபமாக இருந்தான் அவன். இந்த ஒரு வாரத்தில் அவனது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது

இப்படி ஒரு நிலைமையில் தான் இருப்போம் என இதற்கு முன் அவன் எண்ணியதில்லை. இந்த உலகமே புதிதாக தெரிந்தது அவனுக்கு. கடைசியாக எப்போது உண்டான் என தெரியவில்லை. அதைப்பற்றி கவலைப்பட இங்கு யாருக்கும் நேரமில்லை. வீட்டில் கண்டிப்பாக அறுசுவை விருந்து இருக்கும்

அவனை கடந்து சென்றவர்கள் மெல்லிய குரலில் பேசிச் சென்றது அவனது செவிகளில் விழுந்தது.

பாவம்க்கா இவன்.. பொண்டாட்டி புள்ளய தேடி நாய் மாதிரி அலையுறான். ஆனாலும் அவளுக்கு இவ்ளோ திமிரு இருக்க கூடாது. இவன விட்டுட்டு போய்ட்டா

போகாமா என்ன பண்ணுவா.. இவனுக்குலாம் எதுக்கு கல்யாணம். அது ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா இவன் குடும்பத்துல இருக்க முடியுமா. அதுதான் போடானு போய்ட்டா

என்னக்கா சொல்றீங்க

ஆமாண்டி …. குடும்பமா அது. மருமக பேரன் பேத்தி காணும்னு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை.. கறி வாங்க காலைல கடைக்கு வருது அந்த அம்மா. என்ன பொம்பளயோ

இன்னும் என்ன பேசினார்களோ அவனுக்கு கேட்கவில்லை. இப்போதும் அவனது மனம் தன் வீட்டு ஆட்களை தவறாக எண்ண மறுத்தது. வீடென்றால் சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம் தானே இதற்காக வீட்டை விட்டு போவதா.இங்கே அப்படி என்ன நடந்து விட்டது என எண்ணும் போதே அவனது மனசாட்சி ஒண்ணுமே நடக்கலயாடாஅவ போனதுக்கு காரணமே நீ தான்டா. அவள அடிச்சுருக்க கூடாது. கடைசியா பாத்தா பாரு ஒரு பார்வை இனி ஜென்மத்துக்கும் வர மாட்டேனு. இப்ப என்ன பண்றதுஅவன் எண்ணிய வேளையில் கைபேசி ஒலித்தது. அவளாக இருக்குமோ. அவசர அவசரமாக அதை எடுத்து பார்த்தான் அவனது அக்கா.

ம்ம்சொல்லுஎரிச்சல் அவனது குரலில்

எங்கடா இருக்க

உனக்கு என்ன வேணும். “

சாப்ட வீட்டுக் வாடா. இன்னும் எத்தன நாள் அவள தேடப் போற.அவளா தான போன. திமிரு புடிச்சுவ.அவளுங்காக நீ ஏன்டா அலையுறஆம்புள நீ ஏன் இறங்கி போற. இப்படி பண்ணா அவளுக்கு இன்னும் திமிரு கூடிடும். நா நாளைக்கு ஊருக்கு போறேன். நீ வீட்டுக்கு வாடா. கறி சமைச்சிருக்கோம்.”. 

அக்காதேவயில்லாம என்ன பேச வைக்காத. நீ திங்குறதுனா தின்னு. எனக்கு போன் பண்ணாத. அடுத்த தடவ பேச மாட்டேன்உச்சக்கட்ட எரிச்சலில் கத்தினான் அவன்.

சரி தான் போடா. ரொம்ப பண்றான். சாப்டாம இருக்கானேனுகால் பண்ணா என்னய கத்துறான். அவ தான்இவன் இப்படி மாத்தி வச்சுருக்கா. முன்னாடிலாம் அக்கா அக்கானுஎம்மேல அவ்வளவு பாசம் வச்சிருந்தான். என்னைக்கு கல்யாணம் ஆச்சோஅதற்கு மேலும் என்ன சொல்லியிருப்பாளோ அழைப்பை துண்டித்து விட்டான்

மனம் அவளையே சுத்தி வந்தது. அவளுக்காக அவன் செய்தது ஏராளம். அவளை தான் உயிராய் எண்ணினான். அவளுக்காக தன்னுடைய குடும்பத்தில் இருந்த அத்தனை பேரோடும் பல முறை சண்டையிட்டுள்ளான். ஆனால் அவளோ அவனை துரும்பு போல தூக்கி எறிந்து விட்டாள். நினைக்கையிலே கோபமும், கண்ணீரும் வந்தது.

அன்றைய தினம் அவன் வாழ்வில் வராமலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். எங்கு தேடியும் அவளை காணவில்லைஒரு மனம் அவளை தேடி அலைய சொல்கிறது. மற்றொரு மனமோ வேண்டாம் அவளைத் தேடி செல்லாதே என்கிறது.வீட்டிற்கு சென்றுமூன்றுநாட்களாகிறது. இன்றேனும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என எண்ணியவன் வீட்டிற்கு வந்தான்.

அவன் உள்ளே நுழைகயிலே கறிக் குழம்பின் வாசம் ஆளைத் தூக்கியது. அவனைக் காணவில்லை என்றோ அவனது மனைவி, பிள்ளைகளை காணவில்லை என்றோ யாரும் தேடவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அவனது குடும்பத்தை பற்றி சிறு அறிமுகம்

குமரன்:

அந்த குடும்பத்தின் தலைவர். அந்த காலத்தில் அரசு அதிகாரி. அதனால் பணத்திற்கு பஞ்சம் இல்லைஅன்பான குடும்ப தலைவர் அவர். அந்த காலத்திலே நாற்பது ஆயிரம் சம்பளம் வாங்கியவர்.மொத்த சம்பளத்தையும் அவருடைய மனைவியிடம் தான் கொடுப்பார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மனைவியின் சில குணங்கள் அவருக்கு வெறுப்பாகி குடிக்கு அடிமையாகிவிட்டார். இப்போது அவருக்கு பென்ஷன் வருகிறது அதனை வைத்து கொண்டு அவரது வாழ்க்கையை கௌரவமாக நடத்தி கொண்டு இருக்கும் மனிதர்

மலர்:குமரனின் மனைவி. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். இவரும் அது போல தான். சரியான பணத்தாசை பிடித்த பெண்மணி. சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியை தீவிரமாக கடை பிடிப்பவர். யாருக்கு என்ன நடந்தாலும் சுத்தத்தை பற்றியே சிந்திப்பவர். மகன்களை விட மகளின் மீது பற்று கொண்டவர். மருமகள் என்றால் வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரி என நினைப்பவர். சம்மந்தி வீட்டிலிருந்து எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவு பிடுங்கி கொள்வார். பெண் வீட்டார் என்றால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமைகள் என எண்ணுபவர். பணம் மட்டுமே பிரதானம்.மொத்தத்தில் தன்னை தவிர வேற யாருக்கும் நன்மையை நினைக்காதவர்.

சிவா:மூத்த பிள்ளை. யாரோடும் அதிகம் பேச மாட்டான். சரியாக படிக்காத காரணத்தினால் ட்ராவல் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்கிறான்.கூட்டு குடும்பமாய் வாழும் வீட்டில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு மீதம் உள்ளதை சேமிப்பவன்தம்பியிடமும் , தங்கையிடமும் தான் கஷ்ட படுவதாக சொல்லி பணம் வாங்கி கொள்பவன். இவனும் யாருக்கு என்ன நடந்தாலும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டான். அவ்வளவு கஞ்சன் இல்லை இல்லை சேமிப்பாளன்.

சாய்: சிவாவின் மனைவி. மூத்த மருமகள். ஊமை குசும்பி. எல்லாரிடமும் அமைதியாக இருப்பதாய் போல நடிப்பவள். கணவனின் சம்பளம் மொத்தத்தையும் வாங்கி சேமிப்புகளாக மாற்றுபவள். ஆனால் மற்றவரிடம் கஷ்ட படுகிறோம் என்று சொல்லுவாள். சுருக்கமாக சொன்னால் உள்ளே விஷமும் வெளியே தேனும் உள்ள பிறவி. இவர்களுக்கு இரு மகன்கள். இந்து வயதில் ஒன்று ஒரு வயதில் ஒன்று

 ரம்யா: மலரின் ஆசை மகள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி இவளுக்குத்தான். கல்யாணமாகி தன் கணவருடன் வாழ்ந்தாலும் பிறந்த வீட்டின் தன் அதிகாரத்தை விடாமல் நிலை நாட்டுபவள். தம்பியும் அண்ணனும் இவள் சொல்வதையே வேத வாக்காக நினைப்பவர்கள். அதனால் தாயின் மூலமும் தம்பிகளின் மூலமும் வீட்டிற்கு வந்த மருமகள்களை அடிமை போல நடத்துவாள்.

பரிதி: வீட்டின் கடைக்குட்டி. பிடிவாதத்தின் மொத்த உருவம். தான் நினைத்ததை மட்டுமே செய்பவன். யாருக்கும் அடங்கி போக மாட்டான். அந்த வீட்டில் பணத்தை மதியாத ஒரே ஜீவன். நன்கு படித்து நல்ல வேளையில் கை நிறைய சம்பளம் வாங்குபவன். தாய்,தந்தை, தமக்கை, தமையன் என எல்லாருக்கும் செய்பவன். அவர்கள் மீது உயிரையே வைத்திருப்பவன். ஆனால் யாரிடமும் காட்டியதில்லை.வேலை செய்த இடத்தில் உடன் வேலை செய்த மகிழினியை பல இன்னல்கள் கடந்து திருமணம் செய்தவன். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இது தான் குமரன் குடும்பத்தினரின் அறிமுகம். போகப்போக இவர்களை பற்றி பார்க்கலாம்.

தற்போது பரிதி தான் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை தெருத் தெருவாக தேடிக் கொண்டிருப்பவன். வீட்டில் நுழைந்தவன் தனது அறைக்கு சென்றான். அவனை அங்கிருந்த அனைவருமே பார்த்தனர் ஆனால் யாரும் அவனிடம் சென்றுஉணவருந்த அழைக்கவில்லை .

மலருக்கு அவன் மீது அதீத கோபமிருந்தது. அவனும்மகிழினி வீட்டை விட்டு சென்ற பிறகு அவரோடு பெரிய சண்டையை நடத்தியிருந்தான் அதனால் அவரும் அவனை கண்டு கொள்ளவில்லை. அவனது அறையில் அவனவளது பொருட்கள் ஏதுமில்லை. அவளுடைய வாசம் எங்கும் நிறைந்திருப்பது போல ஒரு பிரம்மை அவனுக்குள் தோன்றியது. வீடுமுழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தாலும் தனித்திருப்பது போல ஒரு தோற்றம் அவனுக்குள்.

இதே அறையில் அவளோடு ஊடல் கொண்ட நினைவுகள் மேலுழும்பின. சண்டையின் முடிவில் அவள்தான் மன்னிப்பு கேட்பாள். தவறுயார் மீது இருந்தாலும். என்ன சண்டை நடந்தாலும் அவளிடமிருந்து வரும் முதல் வார்த்தை சாப்பிட வாங்க என்பது தான்பல முறை அவனே கேட்டுள்ளான். ” சாப்பாட்டை தவிர உனக்கு வேற ஒன்னும் தெரியாத. சண்டையில கூட சோறு சோறுனு சொல்ற. ” அவளுடைய பதிலோஎனக்கு எப்போதுமே நீங்க பசியா இருக்க கூடாது. என்ன எப்போ வேணா திட்டலாம் இப்போ சாப்பிட வாங்கஎன்பது தான். இவன்சாப்பிட மறுக்கும் நேரங்களில் காலில் விழுந்து கூட சாப்பிட வைப்பாள். இன்றோ சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. சாப்பிட வைக்க அவள் இல்லை.

அவன் வீட்டினர் யாரும் அவனை சாப்பிட சொல்லவில்லை. அவன் சற்று முன் பேசிய பேச்சில் ரம்யாவும் கோபத்தில் இருந்தாள். அவர்கள்மட்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. கோபம் முழுவதும் அவள்மீது தான்

அவளுக்கு என்ன குறை இந்த வீட்டில் மகாராணி போல தாங்கிய தன்னையும், தன்வீட்டினரையும் தூக்கி எறிந்து சென்று விட்டாள் இனி அவளை நினையாதே மனமே என்று அவளையே எண்ணி கொண்டிருந்தான்.

ம்மா.. அந்த திமிரு பிடிச்சவ திரும்பி வருவாளாமா. வந்தா அவள நீ வீட்டுக்குள்ள விட கூடாதுமா. தெருவுலயேவச்சிஅசிங்கப் படுத்தி அனுப்பிடனும். அவள மறுபடியும் இங்க விடக்கூடாது

ஆமாண்டி ரம்யா. விடுவனா அவள. கொஞ்ச நஞ்சமா ஆடுனா. அதான் அவன விட்டே வெளியே தொரத்த வச்சேன். இனிமே இவன்கிட்டேர்ந்து அவள பிரிச்சிடனும். “

இவன் சம்மதிப்பானா அம்மா“. 

சம்மதிக்க வைக்கணும். ஏதோ அவ மூலமா கொஞ்சம் பணம் வருதுனும், செலவு மிஞ்சமாகுதுனு நினச்சா நம்ம தலைல ஏறி உட்கார நினைக்குறா. பாப்போம் அவளா ? நாமானு?”

அது விடுமா. இன்னைக்கு நா ஊருக்கு போறேன். போக முன்னாடி அந்த கடையில இருந்த டிரஸ்ஸை வாங்கணும்மா. உன்கிட்ட காசு இருந்தா குடுமா

என் கிட்ட ஏதுடி காசு. பரிதி கிட்ட கேக்கணும்டி

அவன் எப்படிமா தருவான்“. 

ஏன் தராமதேதி பத்து ஆச்சு. இன்னும் ஒரு ரூபாய் கூட தரல. கூட்டு குடும்பத்துல ஆயிரம் செலவு இருக்கும். காசு இல்லாம எப்படி இருக்குறது. அவன் கிட்ட கேக்குறேன் இரு

ஏன்டா இப்படி சாப்டாம திரிஞ்சா மட்டும் போனவ திரும்பி வரவா போறா. ஆரம்பத்துலயே அவள அடக்கி வைக்காம அவ இஷ்டத்துக்கு விட்டுட்டு இப்ப வருத்தப்பட்டா. ஒத்தப் பொண்ணுனு ஆசயா வளத்த என் பொண்ண கண்ணு முன்னாடியே அடிச்சிட்டா அவ. அதோட என்னையும் கேவலமா பேசினா. அப்பக் கூட நாங்க ஒண்ணும் சொல்லலயே. உனக்காக தான் அமைதியா இருந்தோம். இப்பக் கூட அவ வந்தா நாங்க ஒன்னும் சொல்லல. நாங்க தான ஆகாதவங்க உன்ன மட்டும் பாத்துகிட்டா போதும். நாங்க அது தான ஆசப்பட்டோம். நாங்க பாத்து வஞ்சப் பொண்ணா இருந்தா எங்களமதிச்சுஎன சொல்லிக் கொண்டே போனவர்கண்ணாடி  உடையும் சப்தத்தில் அதிர்ந்து அவனைப் பார்த்தார்.

நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா. என்ன வேணும் உனக்கு இப்ப. “

மாசம் பொறந்து பத்து நாள் ஆச்சு. பெரியவன் மளிக ஜாமன் வாங்கி குடுத்துட்டான். அப்பா கரண்ட் பில் கட்டிட்டாரு. மத்த செலவுக்கு காசு வேணும்ல. அக்கா ஊருக்கு போகுதேனு நீ தான் எதுவும் வாங்கி குடுக்கல. இந்த மாச காச குடுத்தா நா அதுக்கும் அது புள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கி தருவேன். செலவுக்கும் வச்சுப்பேன். நீ என்ன எங்களுக்கா தர நீ சாப்டுறதுக்கும் தங்குறதுக்கும் தானபரிதியைப் பற்றியோ அவனின் மனதை பற்றியோ அவருக்கு துளி கூட கவலையில்லை.

பரிதிக்கு எரிச்சலாக இருந்தது. முன்பொரு நாள் மகிழினி பேசியது அவன் நினைவில் வந்தது

உங்க அம்மாக்கு என்ன நடந்தாலும் மாசம் ஆச்சுன்னா கையில காச குடுத்துடனும். இல்லனா அவ்ளோ தான். நா இவங்க மாதிரி யாரையும் பாத்தது இல்ல“. உண்மையிலே தனது அம்மா அப்படி தானா. இல்லையில்லை அவங்க என்ன பண்ணுவாங்க கூட்டு குடும்பத்துல நிறைய செலவு இருக்க தான செய்யும். மனதோடு பேசிக் கொண்டவன் தாயின் கரங்களில் பணத்தை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

உண்மையில் யார் நல்லவர்???

Advertisement