மூன்று வாரம் கடந்திருக்க, ‘ருசிக்க ரசிக்க’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.
சோஷியல் மீடியா முழுவதும் அதில் பங்கு பெற்றவர்களே பேட்டி, கேம் ஷோ என வலம் வந்தனர்.
நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நிறைய சுவாரசியங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் சில வாரங்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டது.
ரோஜாவிற்கும், இனியாவிற்கும் இடையே நட்பு வளர்ந்தது. ரோஜாவும் புதிய டான்ஸ் ஷோவால் பிஸியாக இருந்தாள்.
நடன நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்கு இன்னும் ஒரு மாதம் இருந்த போதும், நடனப் பள்ளியில் பயிற்சி எடுக்கச் சொல்லியிருந்தனர். அவளுக்கு காலை வேளை பயிற்சியில் கழிந்தது.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழால், கடைதிறப்பு விழா, மேடைத் தொகுப்பாளனியாகச் சில நிகழ்ச்சிகள், கேம் ஷோ எனப் படு பிஸியாக இருந்தாள் ரோஜா.
இனியா, “எப்படி அக்கா, இப்படி அசராமல் உழைக்கிறீர்கள்?” என்று கேட்டாள் .
“இதற்குத் தானே ஆசைப்பட்டேன், கிடைக்கும் போது சந்தோஷமாக அனுபவிக்கிறேன்….” எனச் சிரித்தாள்.
மேலும்,“எனக்கு லைம்லைட்டில் இருக்கப் பிடிக்கும். அதே போல் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், உனக்கு?”
“எனக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை அக்கா. நல்ல வீஜே என்று பெயர் எடுக்க வேண்டும். தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும்”
“ஒ…! உன்னுடைய ஐடியா வேறு, என்னுடையது வேறு…” என்று பல எண்ணங்களை இருவரும் பறிமாறிக் கொண்டனர்.
அன்று ஞாயிறு எல்லோரும் ஹாலில் கூடியிருக்க, “எனக்குஉதவித் தேவைப்படுகிறது…” என்று இனியா ஆரம்பித்தாள் .
“எனக்கு நாலைந்து விளம்பர நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. மேலும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இரண்டு, மூன்று மேடை நிகழ்ச்சிக்கு ஆங்கர் செய்யவும் கூப்பிடுகிறார்கள்.”
“வாழ்வு தான் போ, கலக்கிற…. கூடிய விரைவில் நண்டு மார்க் லுங்கிகள், ரூபிணி கடலை எண்ணெய்போன்ற விளம்பரங்களில் உன்னைப் பார்க்கலாம்…” என்று காவியா கேலி செய்ய,
“சும்மா இரு காவியா, நீ சொல் இனியா, என்ன பிரச்சனை…?”
“இல்லை அம்மா, இதில் எதைத் தேர்ந்தெடுப்பது…?” எனக் குழப்பமாக உள்ளது.
“ஓ.கே… முதலில் நான் கேட்பதற்கு வரிசையாகப் பதில் சொல், உனக்குதெளிவு கிடைக்கும்…”
“விளம்பரங்களில் என்ன குழப்பம்?”
“முதலில் நான் விளம்பரம் செய்யும் பொருட்கள், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும். உதாரணமாக நான் நிறத்தை மாற்றும் கிரீம், குளிர்பானங்கள் ஆகியவற்றில் நடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.”
“அடுத்து, நல்ல விளம்பர நிறுவனமா? அவர்கள் சொன்ன மாதிரி எடுப்பார்களா ? நமக்குக் கேமிரா கோணங்கள் தெரியாது, எதுவும் ஆபாசமாக வந்து விடக்கூடாது என்ற பயம் இருக்கிறது.மேலும் சம்பளம் எப்படி நிர்ணயம் செய்வது என்றும் தெரியவில்லை . அப்புறம் ஒப்பந்தங்கள் மாதிரியான சட்ட நுணுக்கங்களில் போதிய அறிவு இல்லை…”
“ஓ…!.சரி, அடுத்து…?”
“சீரியலில் நடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அதில் வரும் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் நல்ல கதையே சொன்னாலும் கூட, அதே மாதிரி கடைசிவரை எடுத்துச் செல்வார்களா என்ற தயக்கம் உள்ளது.
ஆங்கரிங் என் கனவு, அது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பேன், அது எனக்குப் பல அனுபவங்களைத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள் ஏதோ தயக்கம் உள்ளது, என்னவென்று புரிபடவில்லை.…”
“குட், நீயே தெளிவாகத் தான் இருக்கிறாய் இனியா“ என்றார் கார்த்திகேயன்.
“எங்களுக்கு இந்தத் துறையில் போதிய அனுபவமில்லை. இதில் நாங்கள் உதவ முடியும் எனத் தோன்றவில்லை. நீ ஏன் உன் நண்பர்களிடம் உதவி கேட்கக் கூடாது” என்றார் கவிதா.
“பேசினேன் அம்மா, அவர்கள் டெக்னீஷ்யன்களாக இருப்பதால் முடிந்தவரை உதவுகிறேன் என்கிறார்கள். ஏதாவது விளம்பர நிறுவனத்தைப் பற்றி விவரம் வேண்டும் என்றால், நட்பு வட்டத்தில் கேட்டுச் சொல்கிறேன் என்கிறார்கள்.”
காவியா உள்ளே புகுந்து, “நீ ரோஜாவிடம் உதவி கேட்கலாமே , அவர்கள் இதே துறையில் தானே இருக்கிறார்கள்?”
“அதையும் யோசித்தேன், தொழிலைப் பொருத்தவரை, அவர் பார்வை வேறு என்னுடைய பார்வை வேறு. மேலும் ஒரே துறையில் இருப்பதால் எல்லாவற்றையும் பேச முடியும் என்று தோன்றவில்லை.தேவையில்லாத ஒப்பீடுகள், மனவருத்தங்கள் வர வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.”
கார்த்திகேயன், “சூப்பர்டா குட்டிம்மா, இது தான் வேண்டும். நீ வெற்றி பெற்றபோது கூட எனக்கு இந்த அளவிற்கு மகிழ்ச்சி இல்லை. இனி எனக்கு உன்னைப் பற்றிய கவலையில்லை…” என்று மெச்சினார்.
“போதும், போதும்…” எனக் காவியா பொங்கினாள்.
“சரி, சரி விளையாட்டு போதும், விசயத்திற்கு வாங்க…” என்றார் கவிதா.
“சரி, என்ன பண்ணலாம்?” என யோசிக்க,
அப்போது கார்த்திகேயன், “குட்டிம்மா, ஏன் விக்ரம் ஸாரிடம் உதவி கேட்கக்கூடாது?”
“எப்படிப்பா? அவர் லெவலே வேற…” என இழுத்தாள்.
“இல்லைம்மா, அன்று அவரே உன் நலனில் அக்கறை வைத்து, எந்த உதவி வேண்டுமென்றாலும் கேள் என்றார் இல்லையா?”
“சொன்னார்தான் அப்பா… , அதற்காக, இந்தச் சின்ன விசயத்திற்குப் போய் எப்படிக் கேட்பது?” என்று தயங்க,
“இல்லைடா குட்டிம்மா, அவர், யாரையாவது உதவிக்குக் கை காட்டினால் போதும், நம்பகமான நபர் கிடைத்தால் நிம்மதியாகி விடும்” என்றார் கவிதா.
“அம்மா சொல்வது சரி தான், கேட்டுப் பார்….” என்று கார்த்திகேயனும் சொல்ல,
இருவரும் சொன்னதால், “சரி….” என்றாள் இனியா.
காதல் வைபோகமே…. நாள் – 9(2)
அத்தியாயம் 28
திங்கள் காலை செயலாளருக்குப் போன் செய்து, விக்ரம் ஸாரை சந்திக்க நேரம் கேட்டாள்.
“சரி, ஸாரிடம் பேசிவிட்டுத் தகவல் தெரிவிக்கிறேன்…”
விக்ரம் வந்தவுடன், விசயத்தைத் தெரிவிக்க, சந்தோஷமானான். ஏற்கனவே மூன்று வாரங்களாக இனியாவைப் பார்க்கமுடியல்லையே என ஏங்கியிருந்தான்.
இனியாவே பார்க்க நேரம் கேட்டவுடன், உடனே நேரம் ஒதுக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. பின் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, மதியம் 3 மணிக்கு வரச் சொன்னான்.
இனியா, விக்ரமைப் பார்க்க வர, வழக்கம் போல் கண் எடுக்காமல் குறுகுறுவெனப் பார்த்தான்.
தனியாக இருக்கும் போது தான் இந்தப் பார்வை, மற்ற நேரத்தில் பார்ப்பது கூடத் தெரியாமல் பார்க்கிறான் என்பதைப் புரிந்திருந்தாள் . இது தப்பான பார்வையும் இல்லை என்றும் தெரிந்திருந்தது. ஆனால் அர்த்தம்தான் புரியவில்லை, ‘யோசிப்போம்…’ என ஆறப்போட்டாள்.
அதற்குள் விக்ரம் அருகே வந்து விட, “வணக்கம் ஸார்…”
அவன் இருக்கையைக் காண்பிக்க, அமர்ந்தாள்.
“என்ன விசயம்?” என்பது போலப் பார்த்தான்.
“கண்ணாலே பேசுவானே…” என மனதில் சலித்துக் கொண்டாள்.
“ஒரு சின்ன உதவி ஸார். அதற்குத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்…”
‘மேலே சொல்..’ என்பது போல் பார்க்க,
“ எனக்குச் சில விளம்பரங்களில், சீரியலில் நடிக்கவும், சில மேடை நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராகவும் பணியாற்ற அழைப்பு வந்துள்ளது”
“வாழ்த்துக்கள் இனியா, இதில் என்ன குழப்பம்?”
இனியா, தன் அம்மா அப்பாவிடம் நடத்திய அதே பொழிப்புரையை இங்கேயும் அரங்கேற்ற,
விக்ரம் அவள் அபிநயங்களை ரசித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் இதில் என்ன உதவி செய்ய வேண்டும் இனியா?”
“ஸார், நீங்கள் இதைக் கவனிப்பதற்கு, நல்ல நபரைக் கைகாட்டினால் போதும், முடியுமா ஸார்? பிளீஸ்…”
“ம்ம்….” என்று சிறிது நேரம் யோசித்தவன், “இரண்டு நாளில் சொல்கிறேன். உன் போன் நம்பர் தா. நானே தொடர்பு கொள்கிறேன். இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்”
“ஏன் ஸார்…?”
“இந்தச் சேனலில் இருக்கும் அத்தனை ஆர்டிஸ்ட்டுகளுக்கும், நான் மேனேஜர்ஏற்பாடு பண்ண முடியாது, புரியுதா?”
“ஓ,கே.ஸார், ஆனால் அர்ஜுன், அனு, வசந்திடம் மட்டும் சொல்கிறேன். அவர்களிடம் மறைத்தால் நல்லா இருக்காது…” எனக் கெஞ்சினாள்.
“ம்ம்… ஆனால் அவர்கள் இந்த விசயத்தை வெளியே சொல்லாமல் பார்த்துக்கோ… , விளையாட்டுத்தனமாய் இருக்காதே, இது தேவையில்லாத பிரச்சனைகளையைக் கொடுக்கும்…” என்று கண்டிப்புடன் சொன்னான்.
“ஓ.கே. ஸார், நான் கிளம்புகிறேன்”
அவளை அனுப்ப மனமே இல்லாமல், “சரி…” என்றான்.
இந்த வாய்ப்பை அளித்த மாமியார், மாமனாருக்கு மனதில் நன்றி தெரிவித்தான். அடுத்த செய்ய வேண்டிய விசயங்களை யோசித்து, சிலபல போன்களைச் செய்தான்.
வீட்டுக்கு வந்த இனியா, அம்மாவிடம் விவரம் சொன்னாள்.
இரவு படுக்கையில் தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தாள். கடுப்பான காவியா, “ஒழுங்காகக் கண்ணை மூடித் தூங்கு…” என்று கத்த,
வசந்த் அதிர்ச்சியில் சிலையானான். “நிஜமாகவே ஸார் கிட்ட போய் கேட்டாயா? தைரியம்தான் போ…”
“அம்மா, அப்பா தான் கேட்கச் சொன்னார்கள், நல்ல வேளை உன்னிடம் பேசவில்லை…, நானும் பயந்து கேட்காமல் இருந்திருப்பேன்…”
“ஸார் என்ன சொன்னார்?”
“இரண்டு நாளில் சொல்கிறேன் என்றிருக்கிறார். மேலும் இதை ஒலிபரப்பு செய்யாதே, நான் சேனலில் இருக்கும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு மேனேஜர் தேட முடியாது என்று எச்சரித்துள்ளார்….”
இதை கேட்ட வசந்த், “எங்களிடம் சொல்லி விட்டாயே…”
“ ஸாரிடம் உங்க மூன்று பேருக்கு மட்டும் தனி அனுமதி வாங்கியுள்ளேன். கவனமாக இருங்கள், உளறி வைத்தீர்கள் என்றால் நான் முடிந்தேன்…” என்று பதைபதைத்தாள்.
வேகமாக அனுவும், வசந்த்தும் இனியாவின் தோளில் கை போட்டபடி, “என் ஃபிரெண்ட போல யார் மச்சான் ?” என்று பாட, அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.
அர்ஜுன் விவரம் கேட்க மீண்டும் மறு ஒலிபரப்பு நடந்தது.
அர்ஜுன் வழக்கம் போல், “கவலையை விடு இனியா , ஸார் எல்லாம் பார்த்துக் கொள்வார்…” என்று புகழ் பாட, மற்றவர்கள் சிரித்தனர்.
“திருத்த முடியாது டி…, உன்னைத் திருத்தவே முடியாது…” எனக் கார்த்தி ஸ்டைலில் வசந்த் பேச,
அர்ஜுன் அசடு வழிய, அந்த இடமே கலகலத்தது.
படப்பிடிப்பின் போது அழைத்தால், சில நிமிடமே பேச முடியுமென்பதைக் கணக்கிட்டு, புதன் இரவு ஏழு மணிக்கு இனியாவை அழைத்தான் விக்ரம்.
அப்போது இனியா, காவியாவிடம் வம்பளந்து கொண்டு டிவியில் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கைபேசி ஒலி எழுப்பவும், ஏதோ புது நம்பர் என நினைத்தவாறு, பாதி கவனத்தை டிவியில் வைத்தபடி “ஹலோ…” என்றாள்
“நான் விக்ரம் பேசுகிறேன்…”
அதற்கு இனியா, “ஓ.கே. சொல்லுங்க, என்ன வேண்டும்?” எனக் கேட்க,
கடுப்பான விக்ரம், “ ஹலோ…, நான் விக்ரம் பேசுகிறேன்…” என மீண்டும் கூறினான்.
“நல்லா கேட்குதுங்க, நீங்க யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?”
“ம்ம்…, நான் உன் சேனல் எம்.டி….” எனக் கெத்தாக உரைக்க,
“ஸார், ஸாரி ஸார்…” என அதுவரை சோபாவில் காலாட்டிக் கொண்டு படுத்திருந்தவள், எழுந்து அட்டென்ஷனுக்கு மாறினாள்.
இதைக் கண்ட காவியா, “அக்கா, ஜனகனமன பாடவில்லையே…. ஏன் இப்படி நிற்கிறாய்?”
“ஆம்…” எனத் தலையாட்டியவாறு, தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
இனியா போனைச் சரியாக மூடாததால், உரையாடல் அனைத்தையும் விக்ரம் கேட்டான். தன் போனை எதிர்பார்த்து இல்லை என நினைத்த போது துளிர் விட்ட கோபம், அவள் தன்னை அஜித்தாக நினைத்து, தல எனச் செல்லப் பெயர் வைத்து அழைத்ததைக் கேட்டுக் குளிர்ந்தான்.
“ஸார், சொல்லுங்க?” என்று பரபரக்க,
“நாளை நம்ம சேனல் சாலையில் இருக்கும் காபி ஷாப்பிற்கு, மாலை ஆறு மணிக்குச் செல். அங்கு ராம்குமார் என்பவர் காத்திருப்பார். அவரிடம் உன்னுடைய கொள்கை, கோட்பாடு என நிறைய வைத்திருக்கிறாயே, அதைத் தெளிவாகச் சொல்லி விடு. பின்பு அவர் பார்த்துக் கொள்வார்…”
“ஓ.கே. ஸார், தேங்க யூ ஷோ ம்ச் ஸார்….”
மேலும், “இது இலவச சேவை அல்ல , அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து விடு”
“ஓ.கே. ஸார், போனை வைக்கவா?” என்று அவசரப்பட்டாள்.
அவளுடன் பேச்சை நீட்டிக்கும் பொருட்டு, “என்ன ஓரேடியாக நல்ல பிள்ளையாக இருக்கிறாயே…, நம்ப முடியவில்லையே….” எனச் சீண்டினான்.
அவன் சீண்டல் வேலை செய்ய, “ஸார், இந்த இனியா தேவையில்லாமல் வம்பு செய்ய மாட்டாள். அதே நேரம் வந்த சண்டையையும் விடமாட்டாள்…” என்று வசனம் பேச,
“அதான் எனக்குத் தெரியுமே…” எனக் கிண்டல் செய்ய,
“ஸார்…” எனச் சிணுங்கியபடி, “ நீங்கள் எனக்கு உதவி செய்கிறீர்கள், அப்போ நல்ல பிள்ளையாகத் தானே இருக்க வேண்டும், வேறு வழியில்லையே…?” எனத் தன் இயல்பான துடுக்குத்தனத்துடன் பேச,
“ஹா…ஹா…! இது தான் இனியா…” என்று சிரித்தான்.
அவன் சிரிப்பு ஏதோ செய்ய, அப்படியே அவன் சிரித்த முகமும் மனக்கண்ணில் தோன்ற, தனக்குள் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்தாள்.
அதற்குள் தான் பேசுவதில் கவனம் இல்லை என்பதை உணர்ந்த விக்ரம், “ இனியா.. இனியா…” எனத் திரும்பத்திரும்பக் கூப்பிட,