Advertisement

அத்தியாயம் 50

ஞாயிறு காலை போன் போட்ட விக்ரம் , “ஜில்லு, நேற்றிரவு இரவு தூங்கவே இல்லை தெரியுமா? இன்னும் முகம் கூட கழுவவில்லை…” என வம்பு செய்தான்.

நீங்கள் முகம்தான் கழுவவில்லை , நான் பல்லே விலக்கவில்லை தெரியுமா?” எனத் துடுக்காக இனியா பதில் கொடுக்க ,

கடுப்பான விக்ரம் , “உனக்கு ரொமான்ஸுக்கு அர்த்தம் தெரியுமா ஜில்லு….?” எனக் கேட்க ,

இனியா சிரித்தபடி குறும்பாக ,“ நாங்கள் எல்லாம் செயல் வீரர்கள், ஸாம்பில் போதாதா?” எனக் கெத்துக் காட்ட ,

நீ கோடு போட்டால் நாங்கள் ரோடே போட்டோமல்லவா?” எனப் பெரியதாகச் சிரித்தான்

பின் ,“ஆனாலும் இனியா, நீ அதிரடி தான்…” எனக் கேலி செய்ய

விக்ரம்…” எனச் சிணுங்கினாள். இப்படிச் சிறிது நேரம் ஒருவரை மாற்றி ஒருவர் வம்பு செய்து , கேலி பேசிவிட்டு , போனை வைத்தனர்.

செவ்வாயன்று செல்லமே ஷூட்டிங்கில் , அனு இனியாவிடம்,” நீ கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டியில் ரசபாசமாகிவிட்டது…..” 

என்னாச்சு அனு?” எனப் பரபரக்க ,

ஆட்டம் , பாட்டமாகப் பார்ட்டி போய்க் கொண்டிருந்தது.  டிஜே , ரோஜா கௌதம்  இனணந்து ஆடிய பாடல் ஒன்றைப் போட , அனைவரும் நேயர் விருப்பமாக , அவர்களை ஆடச் சொன்னார்கள் .

ரோஜாவும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள் . ஆனால் அனைவரும் கட்டாயப்படுத்த , வேறு வழியில்லாது ஆடினாள்

இதில் கோபம் அடைந்த பரத் , பாருக்குச் சென்று விட்டான்

ச்சே…. , என்ன அனு…?” என இனியா வருத்தப்பட ,

சிறிது நேரத்தில் அனைவரையும் சமாளித்து , ரோஜா அவனைத் தேடிச் சென்றால் , என்ன நடந்ததோ தெரியவில்லை , காரசார விவாதமாகி , ரோஜாவை விட்டு விட்டு பரத் சென்று விட்டான்

மிகுந்த தர்மசங்கடத்துடன் ரோஜா ஹோட்டல் கேப்பில் சென்றதைப் பார்க்க மிகவும் கஷ்டமாகிவிட்டது . எல்லோருக்கும் பார்ட்டி மூடே போய்விட்டது என வருந்தினாள்

மேலும் உனக்கு என்ன பிரச்சனை என்ற விவரம் தெரியுமா இனியா…?” என அனு கேட்டாள்.

நானும் பல முறை கேட்டிருக்கிறேன் அனு… , ஒன்றும் இல்லை , காதலர்களுக்கிடையே வரும் சாதாரண பிரச்சனை எனச் சொல்லிச் சமாளிப்பார்கள் , அதற்கு மேல் அவர்களது பிரைவசிக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது என ஒதுங்கி விடுவேன்

ஆனால் இந்த தடவை விடக்கூடாது , கட்டாயமாகப் பேச வேண்டும்…” என நினைத்துக் கொண்டாள்.

மேலும் அந்த வார இறுதியில் , விருது வழங்கும் விழா ஒளிபரப்பாகியது. இனியாவிற்கு நிறைய நண்பர்களிடமும் எதிர்பாராத இடங்களிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன . நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு , வாய்ப்புகளும் வந்தன. அனைத்தையும் ராம்குமாருக்கு டைரக்ட் செய்து விட்டு , நிம்மதியானாள் .

சனிக்கிழமை , விக்ரமிற்கு வேலை இருப்பதால் , ஞாயிறு அவுட்டிங் என முடிவு செய்யப்பட்டது , மேலும் விக்ரம் பாதியிலே வந்து அழைக்க ,”முதலில் முன்னேற்றம் அப்புறம் தான் மற்றது எல்லாம்…” என்றுதலஅறிவுறுத்தி இருக்கிறார் , அதனால் நான் வரமாட்டேன்பா எனப் பிகு செய்தாள்.

வந்தால் உனக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கிறது….” என ஆசை காட்டினான் விக்ரம்.

இனியாவும் காரில் ஏறியவுடன்,” என்ன சஸ்பென்ஸ்?” என நச்சரிக்க

உஷ்….” என்றபடி வேகம் எடுத்தான் . திருவான்மியூர் தாண்டியவுடன் , காரை நிப்பாட்டி , “நீ ஓட்டு ஜில்லு…” என்றான் .  

அவள் ஆவென்று பார்க்க , “இறங்கு , இறங்கு….” என அவசரப்படுத்தினான்

இனியாவும் இறங்கி , டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.

பின் அவனைப் பார்த்து  , “விக்ரம் ஜி , கான்பிடண்ட் , லாக் கரோ…” எனக் கேட்க

எல்லாம் கான்பிடண்ட் தான் . ஓட்டு….. , ரொம்ப நாளாக நான் நல்லா கற்றுக்கொண்டேன் , சூப்பராக ஓட்டுவேன் எனச் சொல்லிக் கொண்டிருக்காயே….. பார்ப்போம்….” என உசுப்பேற்றினான்

சில விவரங்களை கேட்டு விட்டு இனியாவும் காரை எடுத்தாள் . முதன்முறை என்பதால் மிகவும் கவனமாக மெதுவாக ஓட்டினாள்.

சிறிது நேரத்தில் இனியா….” என்று அழைக்க , விக்ரம் தன்னைப் பாராட்டப் போகிறான் என ஆவலோடு,

என்ன விக்ரம் …..?” ள்என்று கேட்க

நடந்து போகிறவர்கள் கூட நம்மை முந்திச் செல்கிறார்கள் என ஓட்டினான்.

இனியா கடுப்பாகி , “பாவமே , நம்மை நம்பிக் கொடுத்திருக்கிறாரே , சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்கலாம் என நினைத்தேன் , விதி யாரை விட்டது?” என வேகம் எடுத்தாள்

நல்ல தூரம் ஓட்டிய பிறகு அவனைக் கெத்தாக பார்க்க , ஒரு மெச்சுதல் பார்வையைப் பரிசாக்கினான் .

கொஞ்ச நேரத்தில் அவன் காரை வாங்கிக் கொள்ளஎன்ன சஸ்பென்ஸ்?” என இனியா கேட்க

அவளை முறைத்தபடி ,”ஒரு கோடி ரூபாய் காரையே உன்னை நம்பிக் கொடுத்திருக்கிறேன் , இதை விட வேறு என்ன வேண்டும்?” எனத் திருப்பி கேட்டான் .

….!” என்றவாறு சிரித்தாள்.

பின் , இனியாவை பார்த்து ,” எங்கே என் பரிசு?” எனத் தூண்டில் போட்டான் .

அவள் புரியாமல் பார்க்க , “உன் முயற்சிக்குத் துனண நின்றிருக்கிறேன் அல்லவா?” எனக் கன்னம் காட்டினான் .

ஆஹா…! என்னடா அக்கறை?” என்று பார்த்தால் , இப்போது தானே தெரியுது , தலயோட பிளான்…” எனக் குறும்பாகச் சிரித்தாள்

பின் ,”இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன் , எனக்கே கொடுக்க தோன்றும் போது தான்….” எனச் சிலுப்பிக் கொண்டாள் .

இதெல்லாம் போங்கு…. உன் காரியம் யாவிலும் துணையிருப்பான் உன் காதலன் எனப் புரூப் பண்ண, மண்டைய உடைத்து இந்த ஐடியாவைக் கண்டு பிடித்ததிருக்கிறேன் , அதனால் கட்டாயம் பரிசு வேண்டும்….” என அடம்பிடித்தான் .

கொஞ்ச நேரம் பிகு செய்து விட்டு , அவன் கன்னம் நோக்கித் திரும்ப , சட்டென்று தன் உதட்டால் அவள் இதழ்களை மூடினான்.

சற்று நேரத்தில் அவளை விடுவித்தவன் , தலையை கோதியபடி , கண்ணடித்துச் சிரித்தான்.

பொய்க் கோபம் கொண்டு , இனியா அவனை அடிக்க , அங்கே இனிமையான காதல் விளையாட்டு அரங்கேறியது.

அத்தியாயம் 51

அந்த வார ரிவ்யூ மீட்டிங்கிற்கு , அனைத்து நிகழ்ச்சியின் இயக்குனர்கள் , துணை இயக்குனர்கள் என அனைவரும் கூடியிருந்தனர் . அந்த வார டி.ஆர்.பி எந்த நிகழ்ச்சிகளுக்குக் கூடியது., எவற்றிற்குக் குறைந்திருந்ததுஅது ஏன்? என்றும் அலசப்பட்டது

அப்போது ,”உங்களுடைய கான்ஸப்ட் ரெடியாகிவிட்டதா அர்ஜுன்?” என விக்ரம் கேட்க,

உடனே அர்ஜுன் , “ சின்ன ரீவைண்ட ஷோ மாதிரி யோசித்திருக்கிறேன். சின்னதிரை , சினிமா பிரபலங்களுடைய கல்யாணம் , கல்யாண நாள் , அதில் நடந்த அலப்பறைகள் , களேபரங்கள் பற்றிப் பேசலாம் என யோசித்திருக்கிறேன்….” என விளக்கினான்

சுற்றுகளைச் சுவாரசியமாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கா?” என விக்ரம் கேட்க ,

யெஸ் ஸார் , இரண்டு மூன்று ஐடியாக்கள் இருக்கு , மேலும் நிகழ்ச்சியின் ரெஸ்பான்ஸை வைத்து , மாற்றியோ அல்லது மெருகேற்றிக் கொள்ளலாம் ஸார்

…!, எஃஸ்ப்ளைன் அர்ஜுன் ….”

முதல் சுற்று

காதல் கல்யாணம் என்றால் , அவர்களின் காதலைப் பற்றி பேசி ஈஸ் செய்வது… . முடிவு செய்யபட்ட திருமணம் என்றால் எப்படி , எங்கே முடிவானது, என்ன எதிர்பார்ப்பு….. எனப் பேசலாம் .

இரண்டாவது சுற்று

கம்ஃபர்டபிலிட்டி பார்க்கலாம் .

மூன்றாவது சுற்று

போட்டோ செஷ்சன் இல்லை நண்பர்களைப் பேசச் சொல்லாம்.

நான்காவது சுற்று

எதாவது டாஸ்க் கொடுக்கலாம்.” என விளக்கினான்.

பிரபலங்கள் இதைப் பற்றி பேச வருவார்களா?” என விக்ரம் சந்தேகம் எழுப்ப

முதலில் சின்னத்திரை பிரபலங்களிடம் இருந்து ஆரம்பிப்போம் , நிகழ்ச்சியின் வெற்றி , மற்றவர்களையும் வர வரவழைக்கும்…,” என உறுதி அளித்தான் .

இந்த நிகழ்ச்சியில் ஆங்கரின் பங்கு மிக முக்கியமானது .அழகாக பங்கேற்பாளர்களிடம் பேசி விசயத்தை வாங்க வேண்டும் மற்றும் அவர்களை கம்ஃபர்டபல் ஜோனிலும் வைக்க வேண்டும் , நீங்கள் யாரை யோசித்து வைத்துள்ளீர்கள்?” என விக்ரம் கேட்டான்.

இனியா தான் பெஸ்ட் சாயஸ் எனத் தோன்றுகிறது 

ஏன்?” என விக்ரம் கேட்க

அவள் குறும்பு சிரிப்பு, கலகலப் பேச்சு , பங்கேற்பாளர்களுக்கு ஒரு கம்ஃபர்ட் ஜோனைத் தரும்….” என அர்ஜுன் அடித்துப் பேசினான்.

ஓகே….. , நீங்க இவ்வளவு கான்பிடன்ட்டா இருக்கும் போது,எனக்கு ஒ.கே.. தான் , இந்த நிகழ்ச்சியை நாம் செய்யலாம் .”

டீமைப் பொறுத்தவரை, யாரெல்லாம் உங்கள் தேர்வு?”

இனிமேல் தான் ஸார் முடிவு செய்ய வேண்டும்…..” என்றான் அர்ஜுன்

.கே. , ஏற்கனவே போன மீட்டிங்கில் நாம் டிஸ்கஸ் செய்த மாதிரி செல்லமே ஒரு வருடத்தைத் தாண்டி விட்டதால் சின்ன பிரேக் விடலாம் . அனுவும் , இனியாவும் , அவங்க டீமும் ஃப்ரீதான் , அதனால் அப்படியே உங்கள் டீமில் ஜாயின் பண்ணிக்கட்டும்

மற்றொரு இயக்குனர் , “அந்த நேரத்தில் என்ன பிளான் பண்ணலாம் ஸார்….?” என்று கேட்க

அடுத்து மார்கழி மாதம் வருவதால் , மார்கழி மஹா உற்சவம் என்ற பெயரில் பஜன் , கச்சேரி , நாட்டியம் ஆகியவற்றைக் கவர் செய்து ஒளிபரப்பலாம் , அதைக் கதிர் பார்க்கட்டும்….” என முடித்தான் .

அனைவரும் கலைய ,”ஒரு நிமிடம் அர்ஜுன் …” என நிறுத்தி வைத்தான் 

பின் மெதுவாக,” என்ன அர்ஜுன் ஹாப்பியா? , ஒரு நன்றி கிடையாதா…..?” 

அர்ஜுன் திகைத்துப் பார்க்க , “அனு இப்ப உங்க டீம்…..” எனச் சிரித்தான்.

….! , ஸார் , தேங்கு யூ , தேங்கு யூ…..” எனப் பலமுறை சொல்லி அசடு வழிந்தான்

அத்தியாயம் 52

பின் வேகமாக செல்லமே செட்டிற்கு வந்து , “நாம் அனைவரும் ஒரே டீமாகப் போகிறோம்….” என்ற சந்தோஷமான விசயத்தைப் பகிர்ந்தான் அர்ஜுன் .

எல்லோரும் குஷியாக , பின்னர் வந்த இனியாவிடம் நான் சொன்னேன் தானே…. , தல செய்வதைத் தான் சொல்வார், சொல்வதைத் தான் செய்வார் என்று பெருமை பேசி , இப்ப பார் நாமெல்லாம் ஒரே டீம்….” என்று புகழ்ந்து தள்ளினான்

ஐய்யோ…..!” என அனைவரும் ஒரே நேரத்தில் சொல்ல , அந்த இடத்தில் சிரிப்பலை பரவியது .

அன்று இரவு , “என்ன இனியா, ஹாப்பியா?” என விக்ரம் கொக்கி போட ,

நான் ஹாப்பியோ இல்லையோ , எங்க பாஸைக் கையில் பிடிக்க முடியவில்லை , அது மட்டுமா இனிமே நீங்க தான் என் பாஸோட குலதெய்வம்…..” எனச் சிரித்தாள்

பின்,”என்ன விக்ரம் திடீர் கரிசனம்….? என இனியா வம்பிழுக்க

இப்போதுதானே, பிரிந்திருக்கும் கஷ்டம் புரிந்திருக்கிறது ஜில்லு….” என ஆதங்கப்பட,

ஹாஹா…. , இனி நம் சேனலில் பல ஜோடி புறாக்களுக்கு வாழ்வு தான்….” எனக் கலகலத்தாள். பின் சற்று வேறு விசயங்களைப் பேசினர்.

அப்புறம் , ‘செல்லமே முடிந்து விட்டது  அடுத்த பிராஜெக்ட் ஆரம்பிக்க , எப்படியும் ஒரு மாதமாகும் என்ன செய்ய போகிறாய்?” எனக் கேட்டான் 

அதற்கெல்லாம் தான் நாங்க ஆளு வைத்திருக்கோமே… ,அவர் சொல்வார்….” எனக் கெத்துக் காட்டினாள்

ஆஹா….. தப்புப் பண்ணிட்டேனோ? , காரியம் யாவிலும் கை கொடுப்பேன் எனச் சொல்லி , முத்திரையை வாங்கியிருக்கலாம் . மிஸ் செய்து விட்டாயே விக்ரம்….” எனப் புலம்ப

சும்மா சீன் போடாதிங்க , என்னவோ வரைமுறையை ஃபாலோ பண்ணுகிற மாதிரி…..” எனச் சினுங்க , விக்ரம் சத்தமாகச் சிரித்தான்.

சரி, சரி , என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்?” என ஆர்வமுடன் கேட்டாள் .

ஒரு தமிழ் வாத்தியார் முகவரி அனுப்புகிறேன் , வாரம் 3 வகுப்பு இருக்குமென நினைக்கிறேன் , உச்சரிப்பை மெருகேற்றி கொள் . அதே மாதிரி நிறைய புத்தகங்கள் சொல்வார் , அதைப் படித்து நிறைய தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொள் , தொகுத்து அளிக்கும் போது, புது வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்என ஐடியா கொடுத்தான் .

கல்யாணமே வைபோகமே ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு வகுப்பின் நேரத்தை மாற்றி கொள்ளலாம்….” 

சரியான ரீங் மாஸ்டர் நீங்க….” எனக் கோபிக்க , “

ஓபாமா , மோடியைப் பேட்டி எடுக்க வேண்டும் என ஆசையிருந்தால் மட்டும் போதாது , உழைப்பு , உழைப்பு வேண்டும்மா….” எனக் கிண்டல் அடித்தான்.

சரி , சரி, போகிறேன் தல….” எனப் பவ்யமாகச் சொல்லிப் போனை வைத்தாள்.

இனியாவும் தமிழ் வகுப்பிற்குப் போக ஆரம்பித்தாள். வகுப்பில் சேர்ந்த பின் நிறைய விசயங்களைக் கற்று கொண்டாள் . அவர் சொல்கிற புத்தகங்களை வாசித்தாள் .

பொன்னியன் செல்வன் வாசித்து விட்டு , அவனுடன் அதைப் பற்றி அலசினாள் . ‘ஆழிப் பேரலை (சுனாமி )என்ற வார்த்தை அதில் குறிப்பிட்டு இருப்பதைக் கண்டு வியந்தாள் .

 சாண்டில்யனின் கடல்புறாவை விக்ரம் சிபாரிசு செய்ய

அதை வாசித்து விட்டு , “சூப்பராக இருந்தது…”, என்று பாராட்டினாள் . “முக்கியமாக கடல் புறா கப்பல் மீது காதாலாகி விட்டது…” என்று மெய்சிலிர்த்தாள் .

சரி , கதையின் நாயகன் இளையபல்லவன் பற்றி என்ன நினைக்கிறாய்?” 

அவன் கப்பலோட்டியாக மாறிய விதம் , உழைப்பு, அறிவு , அவன் போர் தந்திரம் , வாவ்…! , செம ஹிரோயிஸம் இல்ல?” எனப் புகழ் பாடினாள் .

முக்கியமான விசயத்தை விட்டு விட்டாயே ஜில்லு….” எனத் தூண்டில் போட

எதைச் சொல்கிறீர்கள்?” என அவன் உள்குத்து தெரியாமல் கேட்டாள்  ,

காதல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஜில்லு… , காஞ்சனா தேவி , மஞ்சள் அழகி…” எனச் சிலாகித்து சொல்ல,

இப்போதுதானே பூனைக்குட்டி வெளியே வருகிறது…?” எனச் சிரித்தாள் .

இதென்ன வம்பாகிவிட்டது….? , காதல்ரசத்தை விடுத்து, சாண்டில்யனைச் சிலாகிக்க முடியுமா?” எனப் பாயிண்டைப் பிடித்தான் .

இவ்வாறாகக் காதல் பொழுதுகள் போனில் இனிமையாகச் சென்றது.

தொடரும் …….

Advertisement