Advertisement

அத்தியாயம் 37

அந்த வாரக் கடைசியில் ,  “ருசிக்க ரசிக்க” ஷுட்டிங்கில் ரோஜாவைச் சந்திக்க , “போன் செய்ய தயக்கமாக இருந்தது இனியா…. என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் . 

“பின் டாக்ஸி உடனே கிடைத்ததா ?” 

 இனியா மழுப்பலாக “ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா , நல்லபடியாகப் போய்விட்டேன் . அப்புறம் உங்கள் டான்ஸ் ஷோ எவ்வாறு உள்ளது?” என்று பேச்சை மாற்றினாள் .

ரோஜாவும் ஆர்வமாகி , “எனக்கு வளரும் நடிகர் கௌதம் ஜோடி , கௌதம் செம டான்ஸராக இருக்கிறார் . நானும் அவருக்கு இணையாக ஆட , முயன்று கொண்டிருக்கிறேன்…”

“வாழ்த்துக்கள் அக்கா , நிச்சயமாக உங்கள் உழைப்பிற்குக்கேற்ற மரியாதை கிடைக்கும் . நீங்கள் வெற்றி பெறுவீர்கள்….” என்று வாழ்த்தினாள்.

அன்றைய படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்த போதும், அடுத்த வாரத்தில்“ருசிக்க ரசிக்க” வின் கடைசி நாள் படப்பிடிப்பை நினைத்து அனைவருக்கும் வருத்தமே மேலோங்கிருந்து . 

நினைத்தை விட “ருசிக்க ரசிக்க” ஷோ அதிக எபிஷோட்களைக் கடந்துவிட்டதாலும் , அந்த நேரத்தில் தான் டான்ஸ் ஷோ  ஒளிபரப்பாக முடிவு செய்யப்பட்டிருந்தாலும்  , இந்த ஷோவை முடிவுக்குக் கொண்டு வர சேனல் முடிவு செய்திருந்தது.

புதன் மாலை விக்ரம் போன் செய்ய , ஆர்வமுடன் போனை எடுத்தாள் , “டிரைவிங் எப்படி போகிறது”

“சூப்பராக ஓட்டுகிறேன்…” எனப்  பெருமைப் பேசினாள்.

“நிஜமாகவா…?” என்று கேலியோடு கேட்க, 

“உங்கள் காரைக் கொடுங்கள், ஓட்டிக் காண்பிக்கிறேன்…” என அவளும் வம்பு செய்ய ,

“ஏம்மா இந்தக் கொலைவெறி?” என வாரினான் ,  மேலும் “உங்க அப்பா தாங்குவார் , நான் தாங்கமாட்டேன்…” எனச் சிரித்தான்.

“சி சேனல் எம்.டி , சேதாரத்தைப் பற்றி கவலைப்படலாமா?” என அவளும் விடாமல் வம்பு செய்ய ,

“நான் பிஸினஸ் மேன்மா ,  தெரிந்தே சேதாரத்தை ஏற்படுத்த முடியுமா?” என அவனும் தொடர ,

கடுப்பான  இனியா , “தல ரொம்ப ஓவரா செய்கிறீர்கள் ,  என்றாவது ஒரு நாள் உங்கள் காரை ஓட்டாமல் விடமாட்டேன்…” 

கலகலவெனச் சிரித்த விக்ரம்  , “என்ன அடுத்த மங்கம்மா சபதமா?” என ஓட்டினான் .பின் ,”ஷோ முடியப் போகிறதே இனியா , உன் பிளான் என்ன? “

“எனக்கு சூட்டாகும் ஷோவைத் தேர்ந்தெடுக்கத் தான் ஆள் இருக்கிறதே, அப்புறம் என்ன? “என இனியா கெத்தாகச் சொல்ல,

“விட்டால் என்னை உன் மானேஜர் ஆக்கிவிடுவாய் போல….” எனப் பெருமூச்சு விட்டான்.

“என்ன தல?, டிரைவர் வேலையே பார்த்தாச்சு , மானேஜர் வேலையெல்லாம் உங்களுக்கு ஜுஜிபி மேட்டர்….” எனத் திரும்பிக் கலாய்க்க , 

வாய் விட்டுச் சிரித்த விக்ரம் ,”தலயென்று சொன்னதால் தப்பித்தாய் ,இல்லை…..”என இழுக்க , 

அப்போது தான், தான் ஒரு ஃப்ளோவில் சொல்லியதை உணர்ந்து அமைதியானாள்.

இதைப் புரிந்த விக்ரம் ,” தொடர வேண்டும்  என்பதற்காக அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். மேலும் சொல்லியாச்சு இல்லையா?  அதை அப்படியே செய்…” என்று கட்டளையிட்டான் .

“ம்….” என்று மட்டும் சொன்னாள்.

பேச்சை மாற்ற எண்ணி , “என்ன கார் வாங்கப் போகிறாய் இனியா?” என வம்பிழுக்க , 

ஃபார்மிற்கு வந்த இனியா , “எங்க தல சம்பளம் ஏத்திக் கொடுத்தால் , என் கனவுக் காரை வாங்கலாம் என நினைக்கிறேன்” .

மீண்டும் சிரித்த விக்ரம் , “எப்படிப் பார்த்தாலும் ஒன்று எனக்கு , இல்லை என் பாக்கெட்டிற்குத் தான் ஆபத்து….”

இப்படியாக சுவீட் நத்திங்ஸ் பேசியபடியே ஒரு மணி நேரத்தைக் கடத்தியிருந்தனர். பின் மனதேயில்லாமல் போனை வைத்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இனியாவை அழைத்து ,”என்ன முடிவு செய்திருக்கிறாய்?“ என மீண்டும் கேட்க ,

“எதைப்பற்றி?” என சாவகசமாகக் கேட்க  , 

“அடுத்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேனே இனியா?”

அப்போது தான் தல சீரியஸாகக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு , “ இப்போது தான் ”ருசிக்க,ரசிக்க” படப்பிடிப்பு முடிந்திருக்கிறது , கொஞ்ச நாள் ஜாலியாக இருக்கலாம்…” என இழுத்தாள் . 

“ம்ம்…, நீ சரி வர மாட்ட., செய்தி வாசிப்பு மற்றும் நெறியாளர் பயிற்சி பட்டறை முகவரி அனுப்புகிறேன், போய் சேர் , பயனுள்ளதாக இருக்கும்….” 

“கொஞ்ச நாள் போகட்டுமே….” என இழுக்க,

“அம்மா தாயே, நீ கமலா ஹாரிஸ், மோடி என்று பெருந்தலைகளைப் பேட்டி கண்ட பின்தான் செட்டில் ஆவேன் என ஏதாவது மங்கம்மா சபதம் செய்து வைத்திருப்பாய் , அப்புறம் என் பாடு திண்டாட்டமாகிவிடும் , உனக்கு நேரம் எல்லாம் கொடுக்க முடியாது , போய் உடனே ஜாயின் செய்”

இனியா , மங்கம்மா சபதத்திலே இருந்ததால் , அடுத்து விக்ரம் பேசியதைக் கவனிக்கவில்லை ,  

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என ஆச்சரியப்பட , 

“இதுக்கு என்ன டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கணும்?, உன் முன் கதைச் சுருக்கமே போதும்…” எனக் கேலி செய்தான் .

“மவனே, நீ கையில் கிடைத்தால் சட்னி தான்….”  என்று காய்ந்தாள் .

“ஹேய்….ஸ்டாப்,ஸ்டாப் , மைண்டு வாய்ஸ் என எல்லாவற்றையும் வெளியே சொல்லி விட்டாய்….” 

“எல்லாம் தெரிந்து தான் சொல்கிறோம்…” எனத் துடுக்காகச் சொன்னபின், “அச்சோ….” என உதடு கடித்தாள்.

“ஆஹாங்…” எனச் சத்தமாகச் சிரித்தான்.

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தவிக்க , கடவுள் போல் காவியா கூப்பிட , “போனை வைக்கிறேன், காவியா கூப்பிடுகிறாள் “ என வேகமாகக் கட் செய்தாள் .

இங்கு விக்ரம் , வயிற்றைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வர  சிரிக்க , உள்ளே வந்த தாத்தா , “என்னடா ராஜா? “

“எல்லாம் உங்கள் பேத்தி பண்ணும் வேலை தான்…” என்று சிரித்தான்.

“என்னடா வெற்றியா?” , என வினவ , 

“கிட்டதட்ட தாத்தா….” 

தாத்தா புரியாமல் புருவத்தைச் சுருக்க ,” இன்னும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை , கூடிய சிக்கிரம் நடந்து விடும் தாத்தா…” என நம்பிக்கையுடன் சொன்னான் .

“சரி, சரி, நடத்து….” என்று தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார்

அத்தியாயம்  38 

சாப்பாட்டு மேஜையில் ,” யாரோடு அக்கா அரட்டை..? என்று காவியா கேட்க , 

“தலகிட்ட தான்” என்றாள்.

கவிதா கார்த்திகேயேனை யோசனையோடு பார்க்க , 

“என்னடா விசயம்?” எனக் கார்த்திகேயன் கேட்க , 

சில கட்டுகளுடன் நடந்த விசயத்தை ஆத்து ஆத்து என ஆத்தினாள் .

“நல்ல ஐடியா…” எனக் கவிதா சொல்ல, 

“சரியான ரிங் மாஸ்டர் தான் போ…” எனக் காவியா கேலி செய்தாள் 

அந்த வாரத்திலே போய் வொர்க்ஸாப்பில் சேர்ந்தாள். அவளுக்கு அந்த வொர்க்ஸாப் பிடித்தும் இருந்தது. திங்கள் இரவு ஏழு மணிக்கு விக்ரமை அழைத்தாள் . 

சொல் இனியா” என்று பரபரப்பாகப் பேசினான்.

இனியா விவரத்தைச் சொல்ல,

” குட் இனியா , நான் டெல்லியில் ஒரு மீட்டிங்கிற்குச் சென்று கொண்டிருக்கேன் , நான் ஃபிரியா ஆனவுடன் கால் செய்கிறேன்….” எனப் போனை வைத்தான் .

“பிரைம் மினிஸ்டரைச் சந்திக்கப் போவது போல் ஒரே பில்டப்தான் போ, அடுத்த தடவை ரெஸ்பான்ஸ் எதிர்பார்ப்பேன் எனச் சொல்லட்டும், வைத்துக் கொள்கிறேன்….” என ஆசையாகப் பேசப் போன் செய்து விட்டு, பேச முடியவில்லை என்ற கடுப்பில் சரமாரியாக விக்ரமை மனதில் திட்டிக் கொண்டிருந்தாள் .

மேலும் இரண்டு நாட்கள் போக , “ருசிக்க ரசிக்க” படப்பிடிப்பு முடிவடைந்ததால் , வெட்டி ஆபிஸராக இருந்த அர்ஜுன் ”செல்லமே” படப்பிடிப்பிற்கு வந்து அனுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தான் . 

அப்போது அர்ஜுன், “விக்ரம் ஸாரைப் பார்த்து நாலைந்து நாளாகிவிட்டது எனப் புலம்ப ,

“அவர் தான் டெல்லி போயிருக்காரே….” என இனியா உளறினாள் .

“உனக்கு எப்படித் தெரியும் இனியா?,  செயலாளருக்குக் கூடத் தெரியவில்லையே , திடீர் பிளான் , ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை என்றாளே….” என அர்ஜுன் கேட்க .

“இனியா மாட்டிக்கொண்டாய் போல, சமாளி சமாளி…”என மூளை அறிவுறுத்த , 

“எல்லாம் ஒரு கெஸ் தான் பாஸ், போன தடவை அங்கேதானே சென்றார், அதை வைத்துச் சொன்னேன்…” எனச் சமாளித்தாள்.

அதற்குள் வசந்த் உள்ளே புகுந்து , ”முதலில் ஸார்கிட்ட பேசி ஏதாவதொரு ஷோ உனக்கு அஸைன் பண்ண வேண்டும் , உன் ஜொள்ளு தாங்க முடியவில்லை” என ராகம் பாட , இடமே கலகலப்பாகியது .

இப்போது ”ருசிக்க, ரசிக்க” படப்பிடிப்பு முடிந்தால் , இனியும் ரோஜாவும் போனில் பேசிக் கொண்டனர் .

அன்று இரவு , இனியா ரோஜாவை அழைத்துப் பேச . ரோஜாவும் அவளுடைய புதிய டான்ஸ் நிகழ்ச்சியைப் பற்றி உற்சாகமாகப் பேச ,நேரம் போவது தெரியாமல் கதை அளந்து கொண்டனர் .

மேலும் இரண்டு நாட்கள் செல்ல , விக்ரமின் போனை எதிர்பார்த்து ஏங்கியிருந்தாள் .

மறுநாள் வசந்த் , “இந்த வார இறுதியில் யாருக்கும் ஷுட்டிங் இல்லாததால் எங்காவது வெளியே போகலாமா?” எனக் கேட்க , 

இனியா அப்போது  தன்னுடைய வொர்கஷாப் பற்றி கூற , 

“ஏன் முன்னமே சொல்லவில்லை?” எப்படி, எப்போ?“எனக் கேட்க , 

‘ஒரு நண்பன் மூலம் போன வாரம் தான் ஜாயின் செய்தேன் , மேலும் இரண்டு,மூன்று வாரம் சென்ற பிறகு கெத்துக் காட்டலாம் என நினைத்தேன்…” என்று சொல்லி சமாளித்தாள்.

“ஓ.கே….” என்று அவளுடய பயிற்சி பட்டறை  முடியும் நேரத்தைக் கணக்கில் கொண்டு , ஞாயிறு மதியம் பிரபல மாலில் சந்தித்து , படத்திற்குப் போகலாம் என முடிவுசெய்தனர்

டெல்லியில் தன் வேலைகளை முடித்துவிட்டு , ஞாயிறு மதியம் சென்னை வந்த விக்ரம் . மாலையே ஆசையோடு இனியாவை அழைக்க, அவள் சினிமா பார்ப்பதற்காக , கைபேசியை சைலண்ட் மோடில் வைத்திருக்க , இவன் அடைப்பை எடுக்காமல் போக…. ,

விக்ரம் மிகவும் சோர்ந்தான் . வெகு நேரம் திரும்பி அழைப்பாள் எனக் காத்திருந்து கண் அசந்தான்

இனியா , படம் முடிந்து , டின்னர் முடித்து வீட்டுக்கு வந்த பின் , போனை எடுக்க , தலயின் அழைப்பைப் பார்த்தாள் . 

போன் போட கைகள் பரபரத்தன .பின் நேரம் ஆனதால் , அழைக்கத் தயங்கி , நாளை இரவு அழைப்பதாக ஓர் பதிவை தட்டி விட்டு உறங்கினாள்.

அத்தியாயம் 39

காலையில் பதிவைப் பார்த்தவுடன் , உடனே கூப்பிட பரபரத்தான் , நேரம் தோதாக இல்லை என்பதை உணர்ந்து , அமைதியாக அலுவலகம் கிளம்பினான்.

இயல்பாக விக்ரம் சேனலுக்குள் நுழைந்து விட்டால் , அலுவலக வேலையை மட்டுமே பார்ப்பான் , ஆனால் இன்று பத்து  நிமிட பிரேக் கிடைத்தவுடன் , இனியாவை அழைத்தான்.

போனை எடுத்த இனியா பதட்டமாக , “என்னாச்சு விக்ரம்?” என்று கேட்க ,

புரியாமல் விக்ரம் , “ஏன்? என்னாச்சு?” என மீண்டும் கேட்க , 

“இல்லை… இந்நேரம்….” என இழுக்க ,

“ஓ…! உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா? உடனே பேச வேண்டும் எனத் தோன்றியது , நேரத்தை யோசிக்கவில்லை , பிரேக் கிடைத்தவுடன் அழைத்தேன்….”

“யார் மிஸ் பண்ணச் சொன்னது? எவ்வளவு ஆசையாகப் பயிற்சிபட்டறைப் பற்றி பேசப் போன் செய்தேன் தெரியுமா? ஏதோ பிரதமரைப் பார்க்கப் போவது போல் பந்தா, உடனே போனை வைத்து விட்டீர்கள்….” எனப் புகார் வாசித்தாள் ,

உடனே சிரித்தபடி ,”நெஞ்சமாகவே பிரதமரைத் தான் சந்தித்தேன் இனியா”  

“ஆமாம், ஆமாம் பிபிசியில் சொன்னாங்க…” எனக் கிண்டல் அடித்தாள். 

“சரி விடு, பயிற்சிபட்டறை எப்படி இருக்கு” என வேறு பேச்சுக்கு மாறினான்.

“அப்படி வாங்க வழிக்கு.…” என்றபடி அவள் பயிற்சி பட்டறைப் பற்றிய பொழிப்புரையை ஆரம்பித்தாள். 

அவள் பேசுவதில் விசயத்தைப் பிடித்து வம்பு செய்தான். இப்படியே நேரம் போவது தெரியாமல் பேச , 

செயலாளர் இரண்டு முறை வந்து அடுத்த அப்பாயிண்ட்மெண்ட்டை ஞாபகப்படுத்தினாள். 

பின் மனமே இல்லாமல் போனை வைத்தான்.

இனியா போனை வைத்து விட்டு யோசிக்கும் பொழுது , தங்கள் பேச்சுக்களில் தயக்கங்கள் மறைந்து, இயல்பாகிப் போனதை உணர்ந்தாள். கேலியும், கிண்டல்களும் சகஜமாகிவிட்டதைப் புரிந்து கொண்டாள் .

 தங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்தாள். இந்த உணர்வும் மிகவும் பிடித்திருந்தது .

விக்ரமும் தன் விருப்பத்தைக் காட்டுவதாகத்தான் தோன்றியது . இல்லையென்றால் மிஸ் செய்கிறேன் என்ற வார்த்தையெல்லாம் வராது என்பதைப் புரிந்தேயிருந்தாள் .

ஆனாலும் “இது சரியா? தவறா?” என்ற உணர்வுப் போராட்டத்தில் இருந்தாள் . பின் ஒருவழியாக , “ரொம்ப யோசிக்க வேண்டாம் . பின்னால் வருவதைப் பின்னர் பார்த்து கொள்ளலாம்….” என முடிவு செய்தாள் .

தொடரும்…..

Advertisement