Advertisement

அத்தியாயம் 34

தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி  , வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள்.

கண்னை மூடியதும் , விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது . படக்கெனக் கண்ணைத் திறந்தாள் , தூக்கம் வருமெனத் தோன்றவில்லை . உருண்டு கொண்டே இருந்து , காவியாவின் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்று பால்கனிக்குச் சென்றாள்.

இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள் . விக்ரம் பேசியதை வைத்து , தன்னைத் தப்பாக நினைக்கவில்லை என்பது மனதிற்கு இதமாக இருந்தது .

தான் எப்படி அப்படிச் செய்தோம் என்பது அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது . இனியாவின் இயல்பே இது இல்லை .  இவள் இருக்கும் துறையில் இதெல்லாம் சகஜமமென்றாலும் , சாதாரணமாக  இனியா யாரையும் தொட்டுப் பேசும் ரகம் இல்லை. கிட்டதட்ட ஒரு வருட நட்பிற்குப் பிறகு தான் அர்ஜுன் , வசந்த் , அனுவோடு சகஜமாக விளையாடுகிறாள் . மற்றபடி எல்லோரையும் ஒரு எல்லையில் நிறுத்தி விடுவாள் .

விக்ரமை சேனலில் பல முறை சந்தித்திருந்தாலும், சில சமயங்களில் விக்ரமின் காந்தப் பார்வையைக் கவனித்திருந்தாலும் , நன்றாகப் பேசுவதென்னமோ  ஒரு நாலைந்து முறையாகத்தான் . 

“பின் எப்படி அவனிடம் நெருக்கத்தை , பாதுகாப்பை உணர்கிறேன்” என்று புரியாது குழம்பினாள் . 

ஒருவேளை , “அவன் என் மீது செலுத்தும் காந்தப் பார்வை , நெருக்கத்தை உணர வைக்கிறதோ…” என்று சரியான பாதையில் சிந்தித்தாள் . 

ஆனாலும் நாமாக , விக்ரமின் பார்வைக்கு அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கிறோமோ எனவும் தடுமாறினாள். எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள் .

பின் “ இனி விக்ரமைக் கவனிப்போம் . அப்புறம் முடிவு செய்யலாம் என நினைத்தாள் . பின் அவளே , “தேவையில்லாத பிரச்சனை எதற்கு அவனிடமிருந்து தள்ளி நிற்போம்” எனவும் சிந்தித்தாள் .  

உடனே அவள் மூளையே “ தள்ளியும் இருப்பாய்  , அவனைக் கவனிக்கவும் செய்வாய் , இது உனக்கே முரணாக இல்லை…? என்று கேலி செய்தது . 

இனியா  நொந்து போனாள் .

“எதையும் யோசிக்க வேண்டாம், நடப்பதை வைத்து முடிவு செய்வோம்…” எனப் படுக்கச் சென்றாள்.

காரில்  விக்ரம் “தான் பேசியது சரிதான் இல்லையெனில் தேவையில்லாமல் தன்னைத் தப்பாக நினைப்பானோ என்று தவிப்பாள் .  என்னையும் தவிர்க்க முயலுவாள் . நல்ல வேளை ரிஃப்ளெக்ஸ் ஆக்க்ஷன் என ஏதோ கதை சொல்லி , அவள் மனதைத் திருப்பி விட்டோம்…” என நிம்மதியானான்.

ஆனால் விக்ரமோ சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான் . இன்னும் அவள் தொட்ட இடம் குறுகுறுத்தது . 

அவனுக்கே இந்த உணர்வு புதிதாய் இருந்தது , பிடித்தும் இருந்தது . 

பருவவயதுப் பையன் போல் மனம் துள்ளியது . தன் தலையைக் கோதியவாறு சிரித்தான் . 

இனியா தன்னை நெருக்கமாக  நினைத்ததால் மட்டுமே , இது நிகழ்ந்தது  என்பது புரிந்தது . ஆனால் இதை அவள் சரியாகச் சிந்திக்க வேண்டும் என்ற கவலை வந்தது.

மேலும் இவனுடைய உயர்ந்த இடமே  , தன் காதலுக்குத் பெரிய தடைக்கல்லாக இருக்கும் என்று புரிந்தது . 

“இந்தத் தடையைக் கடக்க தான்தான் முதலில் அடிகள் எடுத்து வைக்க வேண்டும்” என முடிவு செய்தான்.

இனியா தன்னை நோக்கி வருகிறாள் என்பதே அவனைப் பறக்க வைத்தது . வீட்டில் காரைப் பார்க் செய்தவன் , இரண்டு இரண்டு படிகளாகத் தாண்டி அவன் அறைக்குச் சென்றான் . 

பின் தன்னை சுத்தம் செய்து கொண்டு , சந்தோஷமாக  தூங்கினான் .( கொசுறாக கனவில் இனியா வருவாள் ) என நம்பினான் .

அத்தியாயம் 35

ஞாயிறு காலை வழக்கம் போல் உணவிற்குப் பிறகு அனைவரும் ஹாலில் கூடினர் . 

தனக்கும் விக்ரமிற்கும்  இடையில் நடந்ததைத் தவிர்த்து , அனைத்தையும் விளக்கினாள்.

“விக்ரம் ஸார் வந்தார் , இல்லையென்றால் உன்பாடு திண்டாட்டமாகியிருக்கும்.….” என்று கவிதா வருந்த,

“ஸாரோடு உதவி சரியான தருணத்தில் கிடைத்தது என்பது உண்மை தான், ஆனாலும் இது கிடைக்கவில்லையென்றாலும் சமாளித்திருப்பேன் அம்மா. “

“எப்படி?”

“ ஹோட்டலில் காத்திருந்து பாதுகாப்பாகக் ஹோட்டல் காரில் வந்திருப்பேன் . வாட்ஸ் அப்பில் கார் நம்பர் மற்றும் லைவ் லொகேஷனை உங்களுக்குச் ஷேர் செய்திருப்பேன்…” என்று தெளிவாகப் பேசினாள் .

 “இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் பிறகு எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்…” என்று சிரித்தாள்.

“ஓ.கே.டா குட்டிம்மா , இருந்தாலும் இப்படி ரிஸ்க் எடுக்காதே , முடிந்தவரை சேர்ந்தே கிளம்பிவிடுங்கள்” என்றார் கவிதா .

“சரிம்மா , கவனமாக இருக்கிறேன்…” என்று சமாதானப்படுத்தினாள் . 

“குட்டித் தூக்கம் போட்டு வருகிறேன்…” எனத் தன் அறைக்குச் சென்றாள்.

ஒரு மணிவாக்கில் விக்ரமிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது . “ஆர்  யூ ஃப்ரீ?  அழைக்கட்டுமா….?”

அப்போது தான் தூங்கி எழுந்து போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் . 

இவளே அழைத்தாள் .

எதிர் முனையில் , “என்ன செய்கிறாய்  இனியா? , அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?” 

“ஒன்றுமில்லை ஸார், இரவு அப்படியே படுத்துவிட்டேன், காலையில் தான் எல்லோரிடமும் விவரத்தைச் சொன்னேன்”

“ஒ.கே…. ஏதாவது பிராப்ளம் என்றால் நான் உன் பெற்றோரிடம் பேசலாம்” என்று தான் போன் செய்தேன் .

“நன்றி ஸார், நோ இஷ்யூஸ், என் பெற்றோர் புரிந்து கொள்வார்கள்…” என்று பெருமிதத்தோடு சொன்னாள்.

“பல விசயங்களில் நீ சொன்னதை வைத்து நான் புரிந்து கொண்டேன் , இருந்தாலும்….” என இழுத்தான்.

இனியாவிற்கு தலயின் அக்கறை பிடித்திருந்தது. மனதில் சிலிர்த்துப் போனாள் , பின் ” தேங்க யூ சோ மச் ஸார்” என்றாள் ஆத்மார்த்தமாக  .

“ஓ.கே அப்புறம் என்னாச்சு ?”

“எது ஸார்?” 

“ டிரைவிங் ஸ்கூல்…” 

“ஸார், என் சபதம்…” எனப் பேச, 

உன் மங்கம்மா சபதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு ,  ஒழுங்காக பிராக்டிக்கலா யோசி , பார்ட்டிகளை இந்தத் துறையில் தவிர்க்க முடியாது , செல்ப் டிரைவிங் என்றால் பிரச்சனை இல்லை” 

“ம்ம்…..  வேற ஒன்றும் இல்லையே ,  போனை வைக்கிறேன் ஸார்….” எனப் பழைய துடுக்குத்தனத்தோடு கேட்டாள் .

இனியா இயல்புக்கு வந்து விட்டால் என்பதை உணர்ந்தான் . அதை வளர்க்க , “ஓ.கே….  இனியா , எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , இதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு போனை வைத்து விடு” 

“என்ன ஸார்? “

“ நீ உன் நண்பர்களிடம், வீட்டில் என்னை எப்படிச் சொல்வாய்?” என்று கேட்டான். 

“என்னடா தல , எதுக்கோ கொக்கி போடுது…, உஷராகிக்கோ இனியா….  “  என தனக்குத் தானே  சொல்லிக் கொண்டாள் .

“எது? என்ன ஸார் ?” என்று புரியாதவள் போல் கேட்க ,  

“என்னை எப்படி அழைப்பாய்?” என்று கேட்டேன். 

“விக்ரம் ஸார், எம்.டி…. “என்று சொன்னாள்.

“ஓ…! அப்படியா? , சரி விடு, நான் அர்ஜுனிடம் கேட்டுக் கொள்கிறேன்.”

“ஐயோ…! பாஸிடம் போனால் , டப்பா டான்ஸ் ஆடிவிடும் . அதற்கு நாமே சொல்வது பெட்டர்…” என நினைத்து ,

“ஸார், தப்பாக நினைக்கக் கூடாது…” என இழுக்க, 

“முதலில் சொல் இனியா , அப்புறம் பார்க்கலாம்” 

‘தல’ என்றாள்.

“என்ன?” என்று மீண்டும் வேண்டுமென்றே விக்ரம் கேட்க ,

“தல” ஸார் 

“ஏன்? “

“நீங்கள் தானே நம் சேனல் எம்.டி. அதான்…” என்று சமாளித்தாள்.

“அது மட்டும் தானா?”  

“ஆமாம் ஸார்…” எனப் படபடத்தாள் .

“சரி, பின்னாடி பார்த்துக் கொள்ளலாம்…” என நினைத்தவன். “ஒ.கே…..இனி நீ என்னிடம் தனியாகப் பேசும் பொழுது உன் செல்லப் பெயரில் அழைத்தாலும் சரி இல்லை , விக்ரம் என அழைத்தாலும் சரி , இனி ஸார் வேண்டாம்” 

“ஸார்… “என, 

அதை இடைமறித்து,”நோ  இனியா , யோசி… ” என்றான் . பின் போனை வைத்தான் .

காவியா  சாப்பிடக் கூப்பிட , அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது , “அதனால் ஐந்து  நிமிடம் , ரெஃப்ரஷ் செய்து விட்டு வருகிறேன்” என்று குளியலையில் புகுந்து கொண்டாள் .

குளியலறையில் , ஒன்றும் புரியாமல் நேரம் போவது தெரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தாள் .

திரும்பவும் காவியா கூப்பிட  , இனியா  வெளியே  வந்தாள் .

அத்தியாயம் 36

சாப்பாட்டு மேஜையில் , விக்ரம் தன்னை அழைத்து, “எதுவும் பிரச்சனை இல்லையே ,  உங்களிடம் பேசட்டுமா என்று கேட்டார்…” என்று சொல்ல ,

“எல்லாவற்றையும் தெளிவாக யோசிக்கிறார், செயல்படுகிறார், பக்குவமான பிள்ளை…” என அர்ஜுனே தோற்று விடும் அளவிற்குப் பாராட்டுப் பத்திரம் படித்தார் கவிதா .

“அதனால்தான் இந்த வயதில் இந்த உயர்ந்த இடத்தில் இருக்க முடிகிறது…” எனத் தன் பங்குக்குக்  கார்த்திகேயனும் சொல்ல , 

இனியா காண்டானாள்.

“போதும், தாங்க முடியவில்லை” என்றாள்.

“ குட்டிம்மா…” எனக் கவிதா முறைக்க , 

“சரி, சரி…” என்று சரண்டரானாள் . 

 “நம்ம ஏரியாவில் எது நல்ல டிரைவிங் ஸ்கூல் அப்பா, நான் சேர வேண்டும் அப்பா “ 

உடனே காவியா , “என்னக்கா , என்ன கார் வாங்கப் போகிறாய்?” 

“கொழுப்பா…?” , என முறைக்க , 

“இல்லை…., போன வருடம் அப்பா கற்றுக் கொள்ள சொன்ன போது  , ஏதோ சபதக்கதை சொன்னாயே , அதான் கேட்டேன் “ என வம்பு செய்ய ,

கவிதா பார்க்க ,” மீண்டும் தல சொன்னதை , மறு ஒளிபரப்புச் செய்ய , 

“மங்கம்மா சபதம் “என்ற வார்த்தையைப் பிடித்து காவியா ஓட்ட, அங்கு ஒரு யுத்தத்திற்கு தயாரானாள்  இனியா .

மீண்டும் கவிதா , “விக்ரம் சரியான யோசனை சொல்லியிருக்கிறார்” என்று பாராட்ட , 

“அம்ம்மா….” என அழுத்த , 

“சரி, சரி விடு “, எனக் கவிதா சமாதானப் புறா பறக்க விட்டார்.

“சரிடா, மாலை போகலாம்” என்று கார்த்திகேயன் அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார்.

இனியா படுக்கையில் விழ , மனதில் ஏதேதோ சிந்தனை ஓடியது . பின் தனக்குத்தானே, “ எதையும் யோசிக்க வேண்டாம்… தல எப்படி நடக்கிறார் எனப் பார்த்து முடிவு செய்வோம்…” என நினைத்தாள். 

அவள் மனசாட்சி , “உனக்கு இந்த நெருக்கம் , உரிமையெல்லாம் பிடித்திருக்கிறது தானே? அப்புறம் என்னமோ தலயை ஃபாலோ செய்யலாம் என முடிவு செய்கிறாய்…” என்று கேலி செய்தது , 

“உஷ்…” என அதை அடக்கினாள்.

செவ்வாயன்று மெஸேஜ் , போன் , கார்  பேச்சைத் தவிர்த்து , தல டிராப் செய்ததை மட்டும் நண்பர்களிடம் சொல்ல , எல்லோரும் “ஆ…” என்று பார்த்தனர் .

“ஸாரி இனியா…” என வசந்த் வருத்தபட ,

“விடு, நீ என்ன வேண்டுமெனவா செய்தாய்? சூழ்நிலை …. , ஃபிரீயா விடு மச்சி…’  என்று ஆறுதல் சொன்னாள் .

“எப்பவும் தல சூப்பர் தான் …” என அர்ஜுன் புகழ் பாட

ஆர்ஜுனை ஓட்டும் வசந்த் கூட , “தல சூப்பர்தான்…” என  ஒத்துக் கொண்டான் .

 “;அத்தனைப் பேரையும் கவிழ்கிறான் “ என நினைத்தாள் இனியா . பின் அதில் நீயும் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது எனச் சிரித்தாள் .

இனியாவும் டிரைவிங் வகுப்பில் சேர்ந்து விட்டாள். “தலக்குச் சேர்ந்ததைச் சொல்வோம்” என நினனக்க, பின் ஓவராக அட்வான்டேஜ் எடுப்பது மாதிரி தோன்றுமோ? என்று போன் செய்யாமல் விட்டாள் .

இரண்டு நாட்களுக்குப் பிறகு , மாலையில் விக்ரம் இனியாவிற்கு போன் செய்தான் .

“சொல்லுங்க ஸார் “ 

“ம்ம்… , டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டாயா இனியா?” 

“ஆச்சு , போய்க் கொண்டிருக்கிறேன்”

“ஏன் சொல்லவில்லை இனியா?  எப்பவுமே ஒரு வேலை சொன்னால் , அதற்கான ரெஸ்பான்ஸை  எதிர்பார்ப்பேன்”  என்று வலியுறுத்தினான் ,

“இல்லை…  இந்தச் சின்ன விசயத்திற்காக உங்களை தொந்தரவு  செய்வதா  என யோசித்தேன் . அதான்…”

“ஓ. கே…  இனிமேல் யோசிக்காதே , உடனே சொல்லி விட

“சரி, செய்கிறேன்” என்று ஒத்துக்கொண்டாள்.

“அப்புறம், உன் நண்பர் வட்டத்தில் என்ன சொன்னார்கள்?” எனப் பேச்சை வளர்த்தான் .

 “எல்லோரும் பிளாட் , உங்களை ஆஹா ,ஓஹோ எனவும் , நல்லவர் , வல்லவர் எனவும்…  என்னைக்  காப்பற்ற வந்த ஸ்பைடர்மேன் நீங்கள் தான்” என்ற அளவிற்குக் கொண்டாடுகிறார்கள்  .  

“அப்போ நீ? “

“நான் மட்டும் என்ன விதிவிலக்கா? “

“தேங்கு யூ தேங்க யூ…. “என ரஜினி ஸ்டைலில் சொல்லிச் சிரித்தான். 

“தல இப்படி கூடப் பேசுமா?” என அசந்து போனாள்.

“அப்புறம்…?” அவளுக்கு புரியவில்லை , அமைதி காக்க , 

“இனியா…” என்று விக்ரம் கூப்பிட, 

“புரியவில்லை…’

“இப்பத்தானே சொன்னேன், ரெஸ்பான்ஸ் எதிர்பார்ப்பேன்…” என வார்த்தைகளைக் கோர்த்தான்.

விக்ரம் சொல்வதைப் புரிந்து கொண்டவள் , “அதைத்தானே செய்கிறோம்…” 

“அதைச் சரியாகச் செய்ய வேண்டுமே…..”என்று அவனும் கொக்கி போட ,

“முயற்சி திருவினையாக்கும்….” என்றாள் இனியா .

“ஹா…ஹா…. , இதெல்லாம் ஓவர் தெரியுமா? முயற்சி எல்லாம் பெரிய வார்த்தை தெரியுமா?” என்று கேலி செய்து சிரித்தான் .

“எங்களுக்குத் தானே தெரியும், சொல்ல முயன்றால் காத்துத்தான் வருது…” எனச் சிணுங்கினாள் இனியா.

“பக்கத்தில் இருந்து, இந்த அழகைப் பார்க்க முடியவில்லையே…” என நினைத்தபடி விக்ரம் சிரிக்க, 

“சிரிக்காதீங்க  , என் கஷ்டம் எனக்கு , அதான் முதல் முயற்சியாகச் ஸாரை விட்டுள்ளேன்…” 

“ஓ.கே…  ஆல் தி பெஸ்ட் ,  சிக்கிரமே எதிர்பார்க்கிறேன்..” என்று போனை வைத்தான்.

இருவரிடமும் ஒரு நெருக்கம் உருவாகுவதை உணர்ந்தாள் . 

தொடரும்….

Advertisement