“இல்லை இனியா, இந்த இடத்திற்கு வர, எத்தனைக் கதவுகளைத் தட்டியிருப்பேன் தெரியுமா ? அதுமட்டுமல்ல, எத்தனை அசிங்கங்களை, அவமானங்களைத் தாண்டி வந்திருப்பேன் தெரியுமா? எளிதாக வாய்ப்பை விட முடியவில்லை…” என ஆதங்கப்பட்டாள்.
“அம்மா, அப்பாவிடம் பேசுங்கள் அக்கா. நல்ல முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்…” எனப் பெரியவர்களின் உதவியை நாடச் சொன்னாள்.
“என் வீட…., உன் வீடு மாதிரி கிடையாது இனியா. எந்த முடிவு என்றாலும் நானே தான் எடுக்க வேண்டும்.”
மேலும், “ நாங்கள் லோயர் மிடில் கிளாஸ், பணமும் பிரதானம் தான். அவர்கள் எனக்கு உதவி செய்யும் நிலையில் இல்லை. நான் தான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பை விட தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்…”
“முப்பது வயதை நெருங்குகிறேன். இதற்கு மேல் பொறுமையாகச் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது. அதனால் இந்தச் சீரியலில் வரும் நல்ல பேமண்டைக் கொண்டு, அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணம் என ஒரு செட்டில்மெண்ட் முடித்து விடலாம் எனப் பார்க்கிறேன்.
அதற்கு பிறகு, பணத்திற்குப் பின்னால் ஓடாமல், குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, நல்ல வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொண்டு செய்யலாம் என யோசிக்கிறேன்”
“ஓ….! , அப்போ பரத்திடம் பேசிப் புரிய வையுங்கள் அக்கா, இதற்குப் பின்னால் நீங்கள் யோசித்துள்ள குடும்ப வாழ்வு பற்றிப் பொறுமையாகத் தெளிவு படுத்துங்கள் அக்கா”
“எதுவானாலும் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் முக்கியம்… , நன்றாக யோசித்து முடிவு எடுங்கள்.”
“ம்ம்…. சரி இனியா, யோசிக்கிறேன். சீரியஸ் பேச்சு போதும். வா சாப்பிடலாம்….”
இனியாவும் இதற்கு மேல் அவர்கள் பிரைவசியில் தலையிடக் கூடாது என, வேறு கதைகள் பேசியபடி சாப்பிட்டார்கள்.
பின் கிளம்பும் போது, “எல்லை தாண்டி இருந்தால் ஸாரி அக்கா, அப்புறம் என்ன உதவியென்றாலும் கேளுங்கள், முடிந்த வரை செய்கிறேன்”
“சரிங்க , பெரிய மனுசி….” என ரோஜா சிரித்தாள்.
அத்தியாயம் 54
மறுநாள் விக்ரமிடம் பேசும்பொழுது, லேசாக ரோஜாவின் விசயத்தைச் சொல்லி வருத்தப்பட்டாள்.
பின் தமிழ் வகுப்பைப் பற்றிக் கேட்டு, அங்கு நடந்த விசயங்களைப் பிடுங்கி, அவளைக் கேலி செய்து, மூடை மாற்றினான் விக்ரம்.
நாட்கள் ஓட…
‘கல்யாண வைபோகமே’ படப்பிடிப்பு, அடுத்த வாரத்தில் தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டது.
விக்ரமால்சொன்னபடி, அந்த வாரமும் வர முடியாமல், வேலைப்பளு அழுத்தியது.
இனியாவிற்கு வேலை குறைவாகவே இருந்ததால், விக்ரமை எதிர்பார்த்து மிகவும் சோர்ந்து போனாள்.
இதற்கிடையில் ஒரு நாள் ரோஜா போன் செய்து, “தனக்கு இன்னும் 10 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம்” என அறிவித்தாள்.
“ஒன்றும் புரியாமல், என்ன விசயம்? எப்படி அக்கா?”
“ஒன்றும் இல்லை இனியா, பரத்திடம் பேசினேன், இன்செக்யூரிட்டயை உணர்வதாகக் கூறினார். மேலும் அவருக்கு என் மீது அதிக காதல் என்றும், அதனால் என்னிடம் யாராவது ஷோசியிலாகப் பழகும் போது கோபம் வந்து விடுகிறது…” என்றும் விளக்கினார்.
“அதான், நிச்சயம் செய்து விட்டால், பரத்தோட இன்செக்யூரிட்டி பயம் போய்விடும். மேலும் பொஸசிவ்னெஸ் தானே காதலுக்கு அழகு….” என விளக்கம் கொடுத்தாள்.
இனியாவால் ரோஜாவின் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. ‘அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் இந்த இன்செக்யுரிட்டி போன்ற பிரச்சனைகள் எழாது என நம்பினாள். மேலும் பொஸசிவ்னெஸ் டார்ச்சர் ஆக இருக்கக்கூடாது. அது பாதுகாப்பாய் உணர வைக்க வேண்டும்’ என நினைத்தாள்.
“அக்கா, நம் துறையில் பழகுவதைத் தவிர்க்க முடியாதே…” எனச் சந்தேகம் எழுப்பினாள்.
“நீ சொல்வது சரி தான். இத்துறைக்கு வர, நான் பட்ட கஷ்டம், என்ஆசை, பணத்தேவை, கல்யாணத்திற்குப் பின்னர் என் வாழ்க்கைக்கான யோசனைகள் பற்றி விளாவரியாகப் பரத்திடம் பேசிவிட்டேன்… அவரும் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டு விட்டார்” எனச் சந்தோஷமாகச் சொன்னாள்.
பரத் பேச்சில் நிறைய முரண்கள் இருப்பதை உணர்ந்தாள் இனியா. ஆனால் ரோஜாவின் நம்பிக்கையை உடைக்க வேண்டாம், குழப்ப வேண்டாம் என முடிவு செய்தாள்.
“ ஓ.கே. அக்கா, எல்லாம் செட்டில் ஆகிவிட்டதல்லவா? ரொம்ப சந்தோஷம். எப்போது கல்யாணம்? என்ன பிளான்?” என அடுத்த கட்ட விசயத்திற்குத் தாவினாள்.
“ஒரு வருடம் கழித்து என யோசித்து உள்ளோம், அதற்குள் எல்லாம் செட்டில் செய்து விடலாம் என நம்பிக்கை இருக்கிறது….” என உற்சாகமாகச் சொன்னாள்.
அப்புறம் இனியா, ” திடீரென்று முடிவு பண்ணியதால், நிறைய பேரைக் கூப்பிடவில்லை, நெருங்கிய வட்டத்தை மட்டும் தான் அழைத்துள்ளோம். நீ கண்டிப்பாக வர வேண்டும்…” என வலியுறுத்தி விட்டுப் போனை வைத்தாள்.
ஏதோ நெருடிய போதும், “இது சரி வருமா? என யோசனை வந்த போதும்,
“அடுத்தவர் வாழ்க்கையில் ரொம்ப மூக்கை நுழைக்கக் கூடாது” என முடிவு செய்து, “நல்லதே நடக்கட்டும்….” என நினைத்துக் கொண்டாள்.
தமிழ் வாத்தியார் சில புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருக்க, அதைப் படிப்பதிலும், சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பும் வர, இந்த வாரம் சற்று பிஸியானாள்.
அந்த வார இறுதியில் விக்ரம் வர, ஒரு லாங் டிரைவ் கிளம்பினர்.
சற்று ஆள் ஆரவமற்ற பிரைவேட் பீச் சென்றவுடன், காரை நிறுத்தி விட்டு, வேகமாக இனியாவைக் கட்டிக் கொண்டு, முத்தமழை பொழிந்தான்.
இனியாவிற்கும் கிட்டத்தட்ட ஒரு மாதப் பிரிவுக்குப் பின், இந்த அணைப்பு தேவையாக இருந்தது.
முதலில் சுதாரித்த விக்ரம், சற்று விலகி அவளைப் பார்க்க, அவளும் நெகிழ்ந்து இருப்பதை உணர்ந்து, அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“ஐ மிஸ்டு யூ ஜில்லு…. உன்னைப் பார்க்கணும், இப்படி உன்னைக் கைக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டும்” என ஏங்கினேன்.
மீண்டும், “ஐ மிஸ்டு யூ….” என ஆழ்ந்த முத்திரையை இதழில் பதித்தான்.
இனியா அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் காரில் அமைதியே நிலவியது.
முதலில் பேச ஆரம்பித்த இனியா, “நானும் பிரிவுழல்கினேன்…”
அவன் புரியாமல் முழிக்க, “மிஸ் யூ தான், தமிழில் சொன்னேன்” எனக் கண்ணடிக்க,
“ஓ….!” எனச் சிரித்தபடி, “எல்லாம் தமிழ் வகுப்பின் உபயம் தானே…” எனக் காலரைத் தூக்கினான்.
இனியாதலையாட்டிய படி, “இவ்வளவு நீண்டஇடைவெளியெல்லாம் வேண்டாம் விக்ரம், அலைச்சல் பார்க்காமல், ஒரு நாள் கிடைத்தால் கூட வந்து விடுங்கள்…” எனக் கையை அழுத்தினாள்.
“ம்ம்… நானும் அதைத்தான் நினைத்தேன்…” என முடியை ஒதுக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
இப்பொழுது இனியா, அவனை வாகாகக் கட்டிக் கொண்டாள்.
ஞாபகம் வந்தவனா, “இனியா ஏதோ பேச வேண்டும் என்றாயே….?”
“வாங்க, பீச்சில் நடந்து கொண்டே பேசலாம்…”
“சரி…” என்றவாறு இருவரும் நடக்க,
“நாம் பழக ஆரம்பித்து. கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. இன்னும் வீட்டில் சொல்லாமல் இருப்பது, ரொம்பக் குற்ற உணர்ச்சியாக உள்ளது . எப்போது, எப்படிச்சொல்லலாம் விக்ரம்?” எனத் தன் கவலையை வெளிபடுத்தினாள்.
அவன் யோசனையோடு பார்க்க, “அவர்கள் என்னுடைய நடவடிக்கைகளை வைத்து ஏற்கனவே புரிந்து வைத்திருப்பார்கள் . நானே சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். இன்னும் தாமதப்படுத்துவது நன்றாக இருக்காது..”
விக்ரம் அமைதியாக இருப்பதைக் கண்டு கடுப்பானவள், “என்ன, என்னைக் கலட்டி விடும் ஐடியாவில் இருக்கிறீர்களா?” எனக் காய ,
வாயிலே ஒரு போடு போட்டான் விக்ரம்.
“இன்னொரு தடவை இந்த மாதிரி பேசு, அப்புறம் பொது இடம் என்று கூடப் பார்க்க மாட்டேன்… வேறு மாதிரி வாயை மூடுவேன்…” எனக் கோபப்பட்டான்.
“ஐ ஆம் வெய்டிங்…..” எனக் கண்ணடித்தபடி ஓட,
அவளைத் துரத்திப் பிடிக்க முயல, அவளை இழுக்க, அவள் தப்பிக்க பார்க்க… என இருவரும் மணலில் விழ, காதல் விளையாட்டுகள் நடந்தன.
“இனியா உன்னை……”என நன்றாக விசிராந்தையாக அமர்ந்தான். பின் ஏதேதோ ஸுவிட் நத்திங்ஸ் பேசிச் சிரித்தார்கள்.
பின், “இனியா நீ சொல்வது நன்றாகப் புரிகிறது. ஆனால் நான் இப்போது இருக்கிற சூழ்நிலையில், இரண்டு, மூணு மாதத்திற்கு முடியாது…”
நான் இன்னும் இரண்டு நாளில் டெல்லி போக வேண்டும். எப்படியும் ஒரு வாரமாகி விடும் என நினைக்கிறேன். பின், மீண்டும் ஹைதராபாத், பெங்களூர் என நீண்ட ஷெடியூல் உள்ளது.
மேலும் அம்மா, அப்பாவின் ஷெடியூல் வேறு தெரிய வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும். பின் உங்கள் வீட்டில் வந்து பேச வேண்டும். மேலும் நம் எதிர்கால பிளான்களையும் டிஸ்கஸ் செய்ய வேண்டும்…. என நீண்ட ப்ராசஸ் இருக்கிறது இனியா. இப்போது இருக்கும் ஹெக்டிக் செடியூல், அதற்கு இடம் தராது, அதான் யோசிக்கிறேன்….” எனத் தன் நிலையை விளக்கினான்.
அவனுடைய நீண்ட உரையைக் கேட்டு, இனியா மலைத்துப் போனாள். ஏன் பயந்து கூட போனாள். அவளின் முக பாவனை பார்த்தவன்,
“இனியா…” எனத் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான்.
கண்களில் மிரட்சியோடு, “அம்மா, அப்பாவிடம் பேச வேண்டும் என்றால் கூட செடியூல் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் மிகவும் பயமாக உள்ளது. உங்கள் வாழ்க்கை முறை பற்றி நினைத்தால் பதட்டமாக உள்ளது…” எனச் சொல்லிப் பாவமாகப் பார்த்தாள்.
தோளை மேலும் இறுக்கி அணைத்தபடி, “இனியா, என் வாழ்க்கை சம்பந்தமான விசயம் என்பதால் பார்த்துப் பக்குவமாகப் பேச வேண்டும் என நினைக்கிறேன். மற்றபடி எல்லாம் ஒரே வாழ்க்கை முறை தான், கண்டதையும் யோசிக்காதே” எனத் தேற்றினான்.
“இரண்டு, மூன்று மாதம் பொறுத்துக் கொள். நிச்சயமாகப் பேசி விடலாம்…” என உறுதி அளித்தான்.
சற்று மனக்கலக்கத்தோடு, “ சரி…” என்று சொல்ல,
அதைப் பார்த்தவுடன், விக்ரமும் சோர்ந்தான்.
கிளம்பும் போது, “கவலைப்படாதே, வேறு வழி இருக்கிறதா…? என யோசிக்கிறேன்.”
முதன் முறையாக விக்ரமைப் பார்த்து விட்டுக் கிளம்பும் போது நிச்சயமின்மை, பதட்டம், பரிதவிப்பு எனப் பல உணர்வுகளில் ஆட்பட்டாள்.