Advertisement

அத்தியாயம் 15

அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு  விக்ரம் வர , செட்டே பரபரப்பானது.

 எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான்.

இனியா மனதிற்குள் ,” தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….” எனப்  பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள் . 

பின் மெதுவாக ஒன்றிரெண்டு பேரே மிச்சமிருக்க , அவன் அருகே சென்று ,“குட் ஈவினிங் ஸார்..” என்றாள். 

“எப்படியும் திருப்பிச் சொல்லமாட்டான்….” என நினைத்துத் திரும்ப , ஆளை அசரடிக்கும் புன்னகையோடு,” குட் ஈவினிங்….” என்றான். 

விக்ரம் திருப்பிச் சொன்ன அதிர்ச்சியில் , அங்கே திகைத்து நிற்க ,  பின்னால் வந்த ரோஜா நகரும்படி , இனியாவின் கையை இடித்தாள் . பின் சுய உணர்வு பெற்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் இனியா நகர , 

அவள் சிரிப்பு இவனுக்கும் தொற்ற , சிரிப்புடன் ரோஜாவைப் பார்க்க , அவள் விக்ரமுடன் பேச்சை வளர்க்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்.

சற்று தூரம் சென்று திரும்பிப் பார்க்க , அவளுக்கு ரோஜாவோடு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது  கண்ணில் பட்டது . அதுவரை மனதிற்குள் பூத்திருந்த இனம்புரியாத உணர்வு சட்டென்று வடிந்தது . ஏதோ கோபம் வந்து ஒட்டிக் கொள்ள , முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.

அவள் மீது பார்வை வைத்தவாறு , ரோஜாவோடு பேசுவது போல் பாவனை செய்து கொண்டுருந்த விக்ரமுக்கு , அவளது பாவனை , முறைப்பு எல்லாம் சிரிப்பைத் தர , விரிந்த புன்னகையோடு , ரோஜாவிடம் விடைபெற்றான்.

நேராக அர்ஜுனிடம் இனியா செல்ல ,  அவள் முறைப்பைப் பார்த்து , “என்ன ?” என்று கேட்க ,

 அவள் கண்ணால் பின்னால் காண்பிக்க , அர்ஜுன் பார்க்க , புன்னகையோடு  விக்ரம் நகர்வதைக் கண்டான்.

“தல சிரித்தால் சூப்பராக இருக்கு இனியா…” எனச் சொல்லி அவளைக் காளியாக்கினான். 

இனியாவின் கோபத்திற்குக் காரணம் புரியாமல் , “என்னாச்சு…?” என்று கேட்க , 

“நம்ம கிட்டதல  சிரித்துப் பேசி நீ பார்த்திருக்கியா?” 

“ஓ…!  அதான் விசயமா ? எனப் புன்னகைத்தவன் , பின் , “இதென்ன கொடுமையா இருக்கு? , அவருக்குப் பிடித்தவருடன் பேசுவார் .” என்று ஆரம்பிக்க ,

“ஜால்ரா…” என்றவாறு நகர்ந்தாள்.

அதற்குள் விக்ரம் அழைக்க , அர்ஜுன் ஓடினான். இன்றைய படப்பிடிப்பு பற்றி விவரங்களைக் கேட்டான் . பின் அங்கு அமர்ந்து படப்பிடிப்பைக் கவனிக்க ஆரம்பித்தான்.

 அன்று டென்ஷன் குக்கான முன்னாள் நாயகி சீதாவுடன் ஜோடி சேர்க்கப்பட்டிருந்தாள் இனியா . தப்பு செய்து செமையாகத் திட்டு வாங்கினாள்.

 “எல்லாம் தலயோட சதி…” எனப் பிரேக்கில் அர்ஜுனிடம் புலம்பினாள்.

“ஆரம்பித்து விட்டாயா?” என அர்ஜுன் சலிக்க , ரோஜாவும் கார்த்திக்கும் அருகில் வந்தனர்.

“என்ன?” என்று விசாரிக்க , 

“என் அப்பா அம்மாவிடம் கூட இப்படி திட்டு வாங்கியதில்லை….” என மீண்டும் குமுற ,

 “டேக் இட் ஈஸி  , இட்ஸ் ஜஸ்ட் அ  ஃபன்..” என்று கார்த்திக் தோளைத் தடவ , இனியா நெளிந்தாள்

இவர்களின் பேச்சைத் தூரத்தில் இருந்து கவனித்த விக்ரம் , 

அவர்கள் அருகே வந்து , “ ஏதாவது பிரச்சனையா…..?” என்று விசாரிக்க ,

“ஒன்றும் இல்லை….” என்றவாறு அர்ஜுன் அருகே வந்தாள்  இனியா .

அவளை ஓர் பார்வை பார்த்து விட்டு , “தென் , ஓ.கே . என்ஜாய் யுர் பிரேக் கய்ஸ்…”என்றான் விக்ரம் .

அனைவரும் நகர , “ஒரு நிமிடம் அர்ஜுன்…”என  அழைக்க , கூடவே இனியாவும் நின்றாள் , 

இதைக் கணக்கிட்டுத்தான் அர்ஜுனை அழைத்திருந்தான் விக்ரம் . 

 ரோஜா தயங்கி நிற்க , நீங்கள் போங்கள் , நான் அர்ஜுனுடன் வருகிறேன்…” என்றாள் இனியா .

“ஓ.கே.” என்று கார்த்திக்குடன்  ரோஜா கிளம்பினாள் .

அர்ஜுன் என்னவென்று விக்ரமைப் பார்க்க ,  “உன் சிஷ்யைக்கிட்ட என்ன பிரச்சனை எனக் கேள்…” என்றான்

“என்னடா? என்று அர்ஜுன் கேட்க , 

 இனியா தயங்கிவாறு மௌனமாய் நின்றாள்.

கடுப்பான விக்ரம் , “சொல்கிறாயா? இல்லையா ?” எனக் காய்ந்தான்

இனியா முறைத்தவாறு , “கார்த்திக் என்னோடு தோளில் தட்டினான் இல்லையா? ஐ டோன்ட் ஃபீல் ஹிஸ் டச் கம்ஃபர்டபிள்…” என்றாள்.

“ஏதோ சரியில்லை என்பதைக் கவனித்துத்தானே வந்தேன்…, ஏன் சொல்லவில்லை?”எனக் கோபப்பட்டான் விக்ரம் .

உடனே இனியாவும் , “ நான் ஒன்றும் சின்ன குழந்தையல்ல , நானே  சமாளித்துக் கொள்வேன் ஸார்…”

அதற்கு உடனே விக்ரம் ,” அதான் நீ மேனேஜ் செய்த லட்சணத்தைத்தான் பார்த்தேனே , அர்ஜுன் பின்னாடி ஒளிந்தாய்…” 

“ஆமாம் இனியா , ஸார் சொல்வது தான் சரி , நீ தைரியமாகக் கையாண்டிருக்க வேண்டும் “ என வழக்கம் போல் விக்ரமிற்கு ஆமாம் சாமி போட்டான்

“சான்ஸ் கிடைக்கிறப்ப , இந்த மாதிரி ஆளுங்களை  வெளிப் படுத்திவிட வேண்டும் இனியா .  அப்போது தான்  பின்னாடி இந்த மாதிரி வேறு பெண்கள் கிட்ட நடக்க பயப்படுவான், புரியுதா?. என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்  விக்ரம் .

விக்ரம் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் , அரை மனதாகத் தலையாட்டினாள்.

இனியாவை கூர்ந்து பார்த்து விட்டு “ஒ.கே. எனக்கு நான் கிளம்புகிறேன்…” என்று தன் கம்பீர நடையுடன் நகர்ந்தான் விக்ரம் .

ஆர்ஜுன் ஏதோ பேச வர , இனியா கை எடுத்து கும்பிட்டு , “மூச்… வேண்டிய அளவு கேட்டாச்சு , வேண்டாம் அழுதுவிடுவேன்..” என வடிவேல் பாணியில் செய்தாள் .

பின் ,”  நீங்களும் ஆரம்பிக்காதீர்கள் பாஸ் , பசிக்குது… வாங்க சாப்பிடப் போகலாம் “ என்றவாறு முன்னே நடக்க , 

ஓர் உருவத்தின் மீது மோதுவது போல் போய் , பின் சமாளித்து நின்றாள் . பின் நிமர்ந்து பார்க்க ,

அங்கு அக்னிப் பார்வையுடன் விக்ரம் நிற்க , ஒர் அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்..

அர்ஜுனிடம்  ஏதோ  பேச  வந்திருந்திருந்த  விக்ரம் ,  இனியாவின் விளையாட்டுதனத்தைக் கண்டு , அவள் மீது ஓரு கோபப்  பார்வையைச்  செலுத்திவிட்டு , சில விவரங்களை அர்ஜுனிடம் பேசி விட்டு நகர்ந்தான்.

“ஹா…ஹா… !” என்று அர்ஜுனின் சிரிப்புச் சத்தம் கேட்க , 

இனியா திரும்பிப் பார்க்க,” எப்படிமா  இப்படி வாண்ட்டடா வண்டியில ஏறுகிறாய்?” எனக் கேலி செய்தான்.

“எல்லாம் என் நேரம் …., கடுப்பைக் கிளப்பாமல் வாங்க, பசிக்குது…. “ என முன்னே நடந்தாள்.

இப்போது இனியா எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அர்ஜுன் , “சமயம் பார்த்து  இதைப் பற்றி பேசுவோம் …“என முடிவு செய்து அவளோடு நடந்தான்.

“வழக்கமில்லாத வழக்கமாக நாம் கொஞ்சம் ஓவராக ரியாக்ட் செய்து விட்டோமோ ? இந்த மாதிரி நிகழ்வுகள் பலவற்றைக் கடந்து போயிருக்கோமே , அப்போதெல்லாம்  இப்படி நடந்து கொள்ளவில்லையே “எனத் தனக்குள்ளேயே  சிந்தனை செய்தபடி விக்ரம் காரை ஓட்டினான்

பிரேக்கிற்குப் பின் மீதிக்காட்சிகள் படமாக்கப்பட்டன . 

அப்போது  சீதா ,  “சாரிம்மா , கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன் “  எனக் கூற , 

பின் அங்கு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது

கார்த்திக்கின் மீது அர்ஜுன் பார்வையை வைக்க  , “தேவையில்லாமல் தேரை இழுத்து விடக்கூடாது”  என்று அவனும் கவனமாகவே இருந்தான். நல்லபடியாகப் படப்பிடிப்பும் முடிந்தது .

அடுத்த படப்பிடிப்பு தேதியும் ,  போட்டிக்கான சமையல் பொருளும் அறிவிக்கப்பட்டது . 

படப்பிடிப்பு  முடிந்து கிளம்பும் பொழுது டீம் செட் ஆன திருப்தியும் , சந்தோஷமும் அனைவருக்கும் இருந்தது.

அர்ஜூன் எபிஸோட்டை ரெடி செய்து விட்டு  , ரஷ்யை விக்ரமிடம் போட்டுக் காட்ட , விக்ரமிற்கு முழு திருப்தி.

ஷோ ஆரம்பித்தது முதல் விக்ரம்  , இனியாவையே பார்க்க ,

“பருப்புகளில் இத்தனை வகையா…?” என இனியா வாயை பிளக்க , 

பின்” வதக்க , தாளிக்க , பொறிக்க…. “என எதற்கும் வித்தியாசம் தெரியாமல், மாற்றி மாற்றிச் செய்து சீதாவிடம் வாங்கிக் கட்டியிருந்தாள்.

திருதிருவென முழிப்பதும் , அசடு வழிவதும் , பாவமாக முகத்தை வைப்பதும் என அதகளப்படுத்தியிருந்தாள் .

“ஸார், நீங்கள் இனியாவைத் தேர்ந்தெடுத்த போது கூட இவ்வளவு நன்றாக வரும் என்று நினைக்கவில்லை. யுர் சாய்ஸ் இஸ் பெஸ்ட்…” எனப் பாராட்டினான் .

சின்ன புன்னகையோடு விக்ரம் அதை ஏற்றுக் கொண்டான் .   என்னோடைய தேர்வை விட , இந்த நிகழ்ச்சியில் உங்கள் உழைப்பு அசாதாரணமானது அர்ஜுன் .

மொத்தம்  எட்டு கேமிரா , முதல் ஆறு கேமிராக்கள் பங்கேற்பாளர்களுடன் , அவர்கள் மேஜையில் , மற்றொன்று பொருட்கள் இருக்கும் இடத்தில் , மற்றொன்று நீதிபதிகளிடம் என்று அழகாகப் பிரித்து வைத்து ,

கிட்டதட்ட ஒவ்வொரு கேமிராவிலும் எட்டு மணி நேர  பதிவுகள் , அவை அனைத்தையும் பார்த்து , அதில் பெஸ்ட் மொமன்டஸைத் தேர்ந்தெடுத்து , அதைச் சரியாகக் கோர்த்து , ரசிக்கும்படியாக , ஒரு மணி நேர நிகழ்ச்சியாகச் சுருக்கி ,  சுவராஸ்யமாக வழங்கியுள்ளீர்கள் . 

“ஐ லவ்இட் , குட் ஜாப் அர்ஜுன்…”

இது நாம் டிஸ்கஷனில் பல கட்டமாக பேசி முடிவு செய்து தானே ஸார் …

பேப்பரில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து விடலாம் அர்ஜீன் , அதைச் சரியாக நிகழ்த்த வேண்டுமே..? , அது எவ்வளவு பெரிய சேலன்ஜ் என்று எனக்கு நன்றாகத் தெரியும், வெரி குட்…” என்று மனமாற பாராட்டினான்.

எனக்கு முழு திருப்தி அர்ஜுன் , அடுத்த எபிஸோடுகளை ஆரம்பித்து விடுங்கள் .

அர்ஜுன் வானில் பறந்தான் .

அத்தியாயம் 16

விக்ரம் புதிய சேனல் வேலை  தொடர்பாக , பெங்களூர் மற்றும் டெல்லி சென்றிருந்தான் 

அடுத்த எபிஸோட்டில் இனியா ரோஜாவோடு ஜோடி சேர ,  ஒரு நல்ல நட்பு தொடங்கியது . ரோஜா சிரித்த முகத்தோடு , கேலியோடு இனியாவை அழகாக வழி நடத்தினாள் .

இனியாவும் உற்சாகமாக எல்லா வேலைகளையும் செய்தாள் . தப்பு செய்யும் பொழுது  , தன்னையறியாமல் கண் சிமிட்டுவது , நாக்கைத் துருத்துவது எனப் பல சேட்டைகள் செய்திருந்தாள் . 

அது ஒரு குழந்தைகளிடம் இருக்கும் கியூட்னஸைக் கொடுத்திருந்தது .

 நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது , அது ஒரு அழகைத் தந்திருந்தது..

மீண்டும் கிரியேடிவ் கெட் என்ற முறையில் டெல்லியில் இருந்த  அவனுக்கு ரஷ் அனுப்பப்பட்டது . ரஷ்ஷைப் பார்த்த பின் அவனால் வெகு நேரம் சிரிப்பை அடக்க முடியவில்லை . இந்த எபிஸோட் மிகவும் நன்றாக வந்திருப்பதாகத் தோன்றியது.

பலமுறை இனியா வரும் காட்சிகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தான் .  இனியாவைப் பார்த்த பின் ஒரு துள்ளல் மனநிலைக்கு மாறினான் .

விக்ரம் அன்று காலை பிராட்காஸ்ட் மந்தரியைச் சந்தித்திருந்தான் .

அந்நேரம் அவன் தாத்தா , அது குறித்து பேச அழைக்க , “எஸ் தாத்தா….” எனத் துள்ளளோடு பேச ஆரம்பித்தான்.

“என்னடா போன காரியம் வெற்றியோ ? சந்தோஷமாக இருக்கிறாய்….” என வினவ , 

“நோ தாத்தா , டெல்லி என்றாள் சும்மாவா ? லாபி நடந்து கொண்டிருக்கிறது என்றான் .

“பின்ன எப்படிடா ஹேப்பி மூடு?” எனத் தாத்தா இழுக்க ,

“தாத்தா எங்களோடு புது நிகழ்ச்சி ஒன்று நன்றாக வந்திருக்கிறது , அதனால்தான் இந்த ஹேப்பி மூடு…” என்று சிரித்தான்.

“ஓ….! , அப்ப சரி  , ஏதாவது உதவி வேண்டுமா? “

“ நோ தாத்தா நான் பார்த்துக்கிறேன்.”

“ஓ.கே ….”என்று போனை வைத்தார்  

மகனும் ,மருமகளும் பிஸியாக இருப்பதால் பேரனைக் கவனிப்பதைத் தன் பொறுப்பாக்கிக் கொண்டார்.

அர்ஜுனை அழைத்துப் பாராட்டினான் . பின்  இனியாவை நினைத்தவாறு  புன்னகையோடு  உறங்கினான்.

அத்தியாயம் 17

ஹாலில் அனைவரும் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது….

“இரவு படப்பிடிப்பு எப்படி இருக்கு இனியாம்மா…?” என்று கார்த்திகேயன் கேட்க ,

“பயம் ஒன்றும் வேண்டாம் அப்பா , ஒன்றும் பிரச்சனை இல்லை , நன்றாகப் போகிறது “

“இப்போது தான் நிம்மதி இனியா  “ என்றார் .

“சமையல் நிகழ்ச்சி  எப்படி போகிறது ? எனக் கவிதா  கேட்க ,

உடனே இனியா ,  “அம்மா அதை ஏன் கேட்கிறீர்கள்..?” என அழாத குறையாக ஆரம்பித்து, “சீதாம்மா என்னைத் திட்டின திட்டு இருக்குதே …. கண்ணில் இரத்தம் வராத குறை…” என ஆதங்கப்பட , 

அங்கு சிரிப்பு கிளம்பியது

அதைக் கண்டு கடுப்பான இனியா ,  “நீங்கள் எல்லாம் என்ன மேக்? பொண்ணு திட்டு வாங்கிடுச்சேன் வருத்தப்படாமல் சிரிக்கிறீர்கள்…” எனச் செல்ல கோபத்துடன் கையில் இருந்த குஷனை காவியா மீது எறிந்தாள்.

உடனே காவியா , “நாங்கள் செய்ய முடியாததை ஒரு ஜீவன் செய்தது எனக் கேட்டால் சந்தோஷம் வராத “ எனக் கூறியபடி தன் மீது வந்த அடுத்த குஷனைச் சரியாகக் கேட்ச் செய்தாள்.

மீண்டும் சிரிப்பு அலை தோன்றியது .

 உடனே  இனியா ,அனைவரையும் கோபமாகப் பார்த்து , “ நான் இந்தச் சபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்….” என்று கூறியபடி நடக்க ,  இனியாவின் கையைப் பிடித்து கார்த்திகேயன் அமரவைத்தார்.

பின் அம்மன்றத்தின் சபாநாயகராக இருந்து , “போதும் , இந்த விசயத்திற்கான நேரம் முடிந்தது  என்று காவியா பக்கம் பார்வையைத் திருப்ப ,

“மீ , எஸ்கேப்…” என்று அவள் நகர , இனியா அவளை இழுத்து உட்கார வைத்தாள்.

“உன் செமஸ்டர் மார்க் என்னாச்சு காவியா?”

“இந்த வாரத்தில் வரும் என நினைக்கிறேன்ப்பா….” 

“ஓ.கே.  ,,என்றுவிட்டு ,   வேறு கதைகள் பேசினர் . பின் , சபை கலைந்தது.

அடுத்த எபிஸோட்டில் இனியா பாடகருடன் ஜோடி சேர , அதுவும் கலைகட்டியது , அவர் பாடியவாறு சமைக்க , இவளை ராகங்களில் கேள்வி கேட்க , பாடச் சொல்லி டார்ச்சர் செய்ய , 

பின் இவள் பாடி , செட்டே விழுந்து அடித்து ஓடி என அனைவரும் நல்ல கம்ஃபர்ட் ஜோனில் இருந்தனர்.

வார நாட்களில் ‘செல்லமே’ ஷுட்டிங் , வார இறுதி இரவுகளில் சமையல் நிகழ்ச்சி என நேரம் இறக்கை கட்டி பறந்தது. 

தொடரும்……

Advertisement